8

 

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது??”

 

“எனக்கு அண்ணனா தான் தெரியுது”

 

“அய்யோ காலங்காத்தால என் உயிரை வாங்குறாலே” என்று வாய்விட்டு புலம்பினான் அவன்.

 

“அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு தானே”

 

“அதுக்கென்ன இப்போ”

 

“உங்க வைப் பேரு பாரதி தானே”

 

“அதெப்படி உனக்கு தெரியும்”

 

“பேஸ்புக்ல தான் பேமிலி போட்டோ போட்டு இருக்கீங்களே”

 

“தெரியாம போட்டுட்டேன்”

 

“அதுக்கு அப்புறம் கவலைப்படுங்க. உங்க வைப் யாருன்னு தெரியுமா”

 

“அவன் என் பொண்டாட்டின்னு எனக்கு நல்லா தெரியும்”

 

“அண்ணா, உங்க காமெடி சென்ஸ்க்கு அளவே இல்லாம போய்டுச்சு”

 

“என்னது இது காமெடியா… சரி நீயே சொல்லு அவ யாரு”

 

“உங்க வைப்” என்று அவள் பதில் சொல்ல கொலைவெறியானான் அவன்.

 

“ஹா ஹா என்னண்ணா கடுப்பாகிட்டீங்களா… அவங்க ஸ்கூல்ல என்னோட சீனியர்”

“என்கிட்ட சொல்லாமலே உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பேஸ்புக் பார்த்ததும் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து அவங்க அக்செப்ட் பண்ணி அவங்ககிட்ட பேசவும் செஞ்சிட்டேனே” என்று அவள் குஷியாக சொல்ல ‘யாத்தே இது வேறயா’ என்று அவன் தலையில் கை வைத்துவிட்டான்.

 

“சரிம்மா என் வைப் உன்னோட சீனியர் அதுக்கென்ன இப்போ”

 

“ஒண்ணுமில்லை அவங்ககிட்ட நான் அவரை விரும்பறேன்னு சொல்லிட்டேன்”

 

‘ஓவர் நைட்ல என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கா… ஆமா இவ நைட் தூங்கினாளா இல்லையா??’ என்ற தலையாய சந்தேகம் எழுந்தது அவனுக்கு.

 

அருகில் இருந்த கட்டிலில் இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தான்.

 

‘அவனை எழுப்பறதைவிட்டு என்னை எழுப்பி இவ படுத்துறாளே. கடவுளே இதுக்கு ஒரு எண்டு கார்டு போடுப்பா’

 

“என்னன்னா என்கிட்ட இருந்து விடுதலை வேணும்ன்னு வேண்டுதல் வைக்கறீங்களா என்ன”

 

‘அடியாத்தி மனசுல நினைக்கிறதை எல்லாம் சொல்றா. இவளும் நம்மளை போல வடிவேல் பேனா இருப்பா போல. அதான் கண்டுப்பிடிக்கிறா’

 

“அதெல்லாம் இல்லைம்மா இப்போ உனக்கு என்ன வேணும்”

 

“உங்க பிரண்ட் கூட பேசணும்… அப்புறம் அங்க கெஸ்ட் ஹவுஸ் போகணும்”

“கெஸ்ட் அவுஸ்க்கு உங்க பிரண்ட்ஸ் கூட போக வேண்டியது தானே…”

 

“அண்ணா லூசு மாதிரி கேட்காதீங்க… கெஸ்ட் ஹவுஸ் போகணும்ன்னு சொல்லி அவரை கூட்டிட்டு வாங்க… அங்க வைச்சு நான் பேசிக்கறேன்…”

 

“என்னது லூசா”

 

“சாரிண்ணா சாரிண்ணா ப்ளீஸ் அண்ணா…”

 

‘ஒவ்வொரு வார்த்தைக்கும் அண்ணா போடுறாளே… ஆண்டவா நான் உன்னை கேட்டனா எனக்கு தங்கச்சி இல்லை ஒரு தங்கச்சி கொடுன்னு. இப்படி நீயா நான் கேட்காததை கொடுத்து என்னை படுத்துறியே நியாயமா உனக்கு’

 

“அண்ணா…”

 

“நான் வேணும்ன்னா உனக்கு துணையா வரலாம். அவன் கேட்க மாட்டானா நாம எதுக்கு கூட போகணும் அவங்களுக்கு வேணும்ன்னா அவங்களே போகட்டும்ன்னு”

 

“நீங்க கேளுங்க அவர் வர்றேன்னு தான் சொல்வார்”

 

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றே??”

 

“நீங்க கேளுங்க அவர் சரின்னு சொன்னதும் சொல்லுங்க என்னன்னு சொல்றேன். இப்போ கொஞ்ச நேரம் நீங்க படுத்து தூங்குங்க பாவம் நைட் எல்லாம் வேலை பார்த்து இருக்கீங்க…”

 

“நீங்க பேசிட்டு இருந்தா அவருக்கு தொந்திரவா இருக்கும். போனை வைச்சுட்டு போய் தூங்கற வேலையை பாருங்க” என்று அவள் சொல்லவும் ‘இது எனக்கு தேவை தான்’ என்று தலையில் அடித்துக் கொண்டான் அவன்.

அவளிடம் பேசிவிட்டு உறங்கியவன் தான் விதுரன் எழுப்பும் வரை உறங்கிக் கொண்டிருந்தான். “சைலேஷ் எழுந்திரு…”

 

“இப்போ தானேடா தூங்கினோம் அதுக்குள்ளே எழுப்பறே??”

 

“மணி மூன்றை ஆச்சுடா அகைன் ஒரு தடவை போய் எல்லாம் பார்த்திட்டு நைட் ரிப்போர்ட் பண்ணிட்டு நாம ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்”

 

“சரிடா” என்றவன் எழுந்து குளித்து கிளம்பி வந்தான்.

 

“மச்சி போற வழியில ஒரு சின்ன வேலை இருக்கே…”

 

“என்ன வேலை??”

 

“கெஸ்ட் ஹவுஸ் போகணுமே”

 

“யாரோட கெஸ்ட் ஹவுஸ்??”

 

“இதழினி தங்கியிருந்தால்ல அங்க தான்…”

 

“அங்க எதுக்கு நாம போகணும்??”

 

“அவ திங்க்ஸ் ஏதோ எடுக்கணுமாம் அதான் நம்மளை கூப்பிட்டா”

 

“அவ கூட இருக்கவங்களை கூட்டிட்டு போக வேண்டியது தானே… நம்மளை என்ன அவளுக்கு ஊழியம் பண்ணுறவங்கன்னு நினைச்சிட்டாலா அவ… எவ்வளவு திமிர் அவளுக்கு” என்று அவன் வசைப்பாடினான்.

 

‘அவ என்னவோ இவனை கூப்பிட்டா உடனே வருவான்னு சொன்னா. இவன் அவளை கழுவி கழுவி ஊத்துறான்… எதுக்கும் அவ சொன்னதை சொல்லி பார்ப்போம்’ என்ற யோசனையோடு பேச ஆரம்பித்தான்.

“மச்சி உன்னை கூப்பிட்டா நீ வருவேன்னு அவ ரொம்ப உறுதியா சொன்னா. நீ என்னடான்னா திட்டுறே??”

 

“அப்படின்னு அவ சொன்னாளா?? போன் போடு போடுறா அவளுக்கு நல்லா திட்டிவிடுறேன் அவளை… போடு…” என்றவன் பே என்று விழித்து நின்ற சைலேஷிடம் இருந்து போனை பிடுங்கி அவள் எண்ணுக்கு அழைத்தான்.

 

“ஹலோ எப்படி இருக்கீங்க??” என்று விதுரன் பேசுவதற்கு முன்பே அவள் பேச்சை ஆரம்பித்திருந்தாள்.

 

“நான் விதுரன் பேசறேன்”

 

“தெரியும் உங்ககிட்ட தானே கேட்டேன்” என்று அவள் சொல்ல அவன் போனை சற்றுத்தள்ளி வைத்து பின் தன் நண்பனிடம் திரும்பி “டேய் என்னை அவ கூட பேசவைக்க தான் நீ அப்படி சொன்னியா??”

 

‘இது என்னடா வம்பா போச்சு’ என்று பாவமாய் பார்த்தான் சைலேஷ்.

 

“சொல்லுடா எதுக்கு இப்படி பாவக்காவ முழுங்கின மாதிரி முழிக்கிற”

 

‘என்னது பாவக்காவா எங்க இருந்து இவன் இப்படி யோசிக்கறான், இவனும் காமெடி சேனல் ரொம்ப பாக்குறான் போல’ என்று தான் ஓடியது அவனுக்கு.

 

“டேய் நான் எதுவும் பண்ணலைடா அவ சொன்னதை தான் நான் சொன்னேன். அவளுக்கு பேசணும்ன்னா உன் நம்பருக்கு கூப்பிட போறா… நீ என் போன்ல இருந்து தானே பண்ணே, அது எப்படி அவளுக்கு தெரியும்”

 

“தெரிஞ்சு தான் பேசறேன்னு சொல்றாளே”

 

“அப்படியா சொன்னா”

 

“நொப்படி தான் சொன்னா”

 

எதிர்முனையிலோ இதழினி “ஹலோ… ஹலோ” என்று கத்திக் கொண்டிருந்தாள் தனியே.

 

ஒரு வழியாய் அது விதுரனின் காதை எட்டிவிட “ஹலோ” என்றிருந்தான்.

 

“எதுக்கு அண்ணாவை திட்டுறீங்க?? நான் அவங்ககிட்ட சொன்னதை தான் அவங்க உங்ககிட்ட சொல்லியிருக்காங்க. நீங்க அதைக்கேட்டு திட்டுறதுக்கு எனக்கு கால் பண்ணுவீங்கன்னு தெரியும்”

 

“அதனால தான் நான் உங்ககிட்ட தெரியும்ன்னு சொன்னேன்” என்று அவள் விளக்கினாள்.

 

“எங்களைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது??”

 

“எதுக்கு அப்படி கேட்கறீங்க??”

 

“நாங்க வேலை வெட்டி இல்லாம சுத்திட்டு இருக்கறதா உங்க நினைப்பா??”

 

“நான் அப்படிச் சொல்லலைங்க”

 

“அப்போ எதுக்கு எங்களை உங்க கூட கெஸ்ட் ஹவுஸ்க்கு வரச்சொன்னீங்க??”

 

“இல்லை உங்க வாக்கிடாக்கி”

 

“என்ன வாக்கிடாக்கியா??” என்றவன் அப்போது தான் அதை தேட ஆரம்பித்தான்.

 

‘காட் அதை எப்படி மறந்தேன்?? அவ்வளவு மறதியா விதுரா உனக்கு… எப்படி மறந்தேன், எப்படி இவ்வளவு நேரம் அதை தேடாம இருந்தேன்னு தெரியலையே எனக்கு’

 

“உங்ககிட்ட இருக்கா இப்போ அது??”

 

“இல்லை”

 

“என்ன??”

 

“ஆமா என்கிட்ட இல்லை… அங்க கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கு”

 

“கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கா??”

 

“காலையில என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் அங்க இருக்கற திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு வரப்போனாங்க. நாளைக்கு காலையில நாங்க எல்லாரும் ஊருக்கு கிளம்பறோம்”

 

“கதை சொல்லாம விஷயத்தை நேரா சொல்றீங்களா நீங்க??”

 

“உங்களோட வாக்கிடாக்கி என்னோட ரூம்ல தான் சார்ஜ் போட்டிருந்தீங்க. நைட் பவர் சேவ் பண்ணணும்ன்னு எங்க ரூமுக்கும் ஹாலுக்கு ஒரு பேன் லைட் மட்டும் தானே போட்டிருந்தீங்க”

 

அவனுக்கு இப்போது தான் ஞாபகம் வந்தது தான் ஏன் அதை மறந்தோம் என்று. அன்றைய இரவு பவரை சேவ் செய்வதற்காக அவன் தான் அப்படி செய்திருந்தான்.

 

மழையில் நனைந்திருந்ததால் சிறிது நேரம் அவன் வாக்கிடாக்கியை தனி தனியாக பிரித்து காய வைத்து அதன் பின் தான் சார்ஜ் ஏற்றி இருந்தான். கொஞ்சம் ஏறியதும் தான் சைலேஷுக்கு அழைத்து பேசி இருந்தான்.

 

அதற்கு பின் அவளிடம் கேட்டு அவளின் பவர் பேங்கில் தான் சார்ஜ் போட அதுவும் சார்ஜ் இறங்கி போயிருந்ததால் இதழினி அவளின் லேப்டாப்பில் சார்ஜ் போட்டு விட்டிருந்தாள்.

“நான் காலையில அதை எடுத்து தனியா ஒரு கவர்ல போட்டு வைச்சிருந்தேன் கிளம்பும் போது ஞாபகமா எடுத்து வைக்கணும்ன்னு. நீங்க அவசரப்படுத்தவும் அதை எடுக்க மறந்திட்டேன்”

 

“உங்க பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி விட்டிருக்கலாம்ல அவங்க எடுத்து வந்திருப்பாங்கல்ல”

 

“நான் அவங்ககிட்ட என்னோட திங்க்ஸ் எல்லாம் ரெடியா தான் பேக் பண்ணி வைச்சிருக்கேன் அப்படியே எடுத்திட்டு வாங்கன்னு சொன்னேன். பேக் பக்கத்துல தான் அந்த கவர் வைச்சிருந்தேன்”

 

“அவங்க அதை கவனிக்காம அங்கவே விட்டுட்டு வந்திட்டாங்க. அதை எடுக்கத்தான் போகணும், நானே போய்டுவேன், ஆனா எனக்கு சரியா வழி தெரியாது. அதான் உங்களை கேட்கலாம்ன்னு…”

 

“என் பிரண்ட்ஸ் எல்லாம் எங்க லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணிட்டு வந்து ரூம்ல போட்டிட்டு வீட்டுக்கு எதாச்சும் வாங்கப் போறோம்ன்னு கிளம்பிட்டாங்க. நான் அவங்ககூட போகலை”


“காலையில சைலேஷ் அண்ணாக்கு போன் பண்ணேன். அவர் தூக்க கலக்கத்துல இருந்ததால டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு விட்டுட்டேன்…”

 

“அறிவிருக்கா உங்களுக்கு இந்த விஷயத்தை எனக்கு தானே சொல்லியிருக்கணும் நீங்க… அவன்கிட்டயாச்சும் இது தான் விஷயம்ன்னு சொல்லியிருக்கணுமா இல்லையா”

 

“நீங்க தான் பொறுப்பில்லாம இருக்கீங்கன்னா உங்க கூட சேர்ந்த பாவத்துக்கு என்னையும் அப்படியாக்கிட்டீங்க” என்று போனிலேயே கத்த அழுகை வந்தது அவளுக்கு.


“சாரி நான் வேணும்ன்னு செய்யலை… நானும் பார்த்தேன் நீங்க நைட் எல்லாம் வேலை செஞ்சதை. அதான் தூங்கட்டுமேன்னு”

 

“போனை வைச்சுடுங்க இன்னும் ஏதாச்சும் திட்டிடப் போறேன். இன்னும் பத்து நிமிஷத்துல நாங்க அங்க வர்றோம் ரெடியா இருங்க” என்றுவிட்டு அவனே போனை வைத்துவிட்டான்.

 

“எதுக்குடா அந்த பொண்ணை திட்டுற நீ??”

 

“பின்ன கதை சொல்லிட்டு இருக்கா அவ… நான் நேத்து வேலையில அதை சுத்தமா மறந்திட்டேன். நல்ல வேலை வாக்கிடாக்கிக்கு நேத்து வேலை இல்லாம போச்சு. விஷ்ணுக்கு விஷயம் தெரிஞ்சா என்னாகும்…”

 

“சீக்கிரம் கிளம்பு அங்க போயிட்டு வந்திடுவோம்” என்றவன் சொன்னது போலவே அடுத்த பத்து நிமிடத்தில் அங்கிருந்தான்.

 

இதழினி ஹோட்டலை விட்டு வெளியே வந்து அவர்களுக்காக காத்திருந்தாள். வண்டியை நிறுத்தியவன் “சீக்கிரம் ஏறுங்க” என்று சொல்ல அவள் சைலேஷை பார்த்தாள்.

 

‘இந்த புள்ள இப்போ எதுக்கு என்னை பார்க்குது’ என்று யோசனையாக அவளைப் பார்த்தான் சைலேஷ்.

 

“என்னங்க நான் சொன்னது உங்க காதுல விழலையா?? வண்டியில ஏறுங்க டைம் ஆச்சு எங்களுக்கு…” என்று விதுரன் மீண்டும் சொல்லவும் தான் வண்டியில் ஏறினாள்.

 

‘எப்போ பார்த்தாலும் உர்ருன்னு மூஞ்சியை வைச்சிருக்காரு. கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்…’

 

‘ஏன் இதழ் இவர் இப்படியே இருந்தா உன் நிலைமை ரொம்ப மோசமா இருக்கும் போலயே?? ஆமா இவரு ரொமான்ஸ் பார்வை பார்த்தா எப்படி இருக்கும்??’

‘நிஜத்துல நடக்குமான்னு தெரியலை சும்மா கற்பனை பண்ணி பார்ப்போம்…’ என்றவள் யோசனைக்குள் தாவினாள்.

 

இதோ அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டனர். சைலேஷ் அவர்களிடம் “நீங்க போய் எடுத்திட்டு வாங்க. நான் எதுக்கு??” என்றுவிட இருவரும் உள்ளே சென்றனர்.

 

“சுந்தரி அக்காகிட்ட தான் சாவி இருக்கும். நான் போய் வாங்கிட்டு வந்திடறேன்” என்றுவிட்டு பின்னால் சென்றவள் சில நொடிகளில் திரும்பி வந்து கதவை திறந்தாள்.

 

அவள் தங்கியிருந்த அறைக்கு சென்றவளின் பின்னேயே வந்திருந்தான் விதுரன். அவள் கட்டிலில் தலையணை அருகில் இருந்த அந்த கவரை எடுத்துக்கொண்டு திரும்பும் முன் விதுரன் அவளை பின்னிருந்து அணைத்திருந்தான்.

 

‘அச்சோ இவர் என்ன இப்படியெல்லாம் பண்ணுறார். இவருக்கு இதெல்லாம் கூட தெரியுமா’ என்று அவள் மனதிற்குள் ஓட உடலில் நடுக்கம் வந்தது அவன் அணைப்பினால். அவளின் தோள் வளைவில் அவன் உதடுகளை அழுந்தப் பதிக்க வெளிப்படையாகவே பதட்டம் அதிகரித்தது அவளுக்கு.

 

அவன் இதழ்கள் மெல்ல மெல்ல மேலேற அவளை மெதுவாய் தன்புறம் திருப்பியவனின் அதரம் அவள் கன்னத்தில் பதிந்து மெல்ல நகர்ந்து தன் இணையுடன் கூடியது.

 

இதழினி கண்களை இறுக்கி மூடிக்கொள்ள அவன் கரங்களோ அவள் இடையில் இருந்தது மேலேறி அத்துமீறிக் கொண்டிருந்தது. அவன் மெல்ல அவள் ஆடைகளின் இறுக்கம் தளர்த்த அவளுக்கு மூச்சு முட்டியது அவன் செயலில். “அச்சோ போதும் விடுங்க” என்று அவள் வாய்விட்டு சொல்லியிருந்தாள்