Saturday, May 18, 2024

    Yaali

      அத்தியாயம் – 63   வசுந்தரா பேசியதற்கு அரை கவனமாக, “சரிங்க தோழி வசுந்தரா.” என்றாளே ஒழிய, வன்னி அவளை சரியாக பார்க்கவும் இல்லை.   பின் 11 மகரர்களும் தியானத்தில் ஆழ்ந்ததும் அங்கிருந்த காவலர்களுள் சிலரை, தியானத்தில் உள்ள மகரர்களின் மந்திரகல்லில் ஆன்மீக ஆற்றல தீர்ந்தால் வேறு கல்லை மாற்ற அறிவுறுத்தினாள்.   ஆனால் அதுவரையும் கூட வசுந்தரா திரும்பி வரவில்லை....
    அத்தியாயம் – 6 யாளிகள், ஈரேழு உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில் வாழும் (Mythological Creature) உயிரினங்கள். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு யாளிகள் வேற்று கிரக வாசிகள் (Aliens). மனிதர்கள் பூமியில் வாழ்வதுப் போல, யாளிகள் யாளி(மஹர்) உலகத்தில் வசிக்கிறார்கள். ஆனால் யாளிகளுக்கு உள்ளார்ந்த ஆன்மீக சக்தி உண்டு(Spiritual Energy). யாளிகளால் அவற்றின் பூர்வீக உருவத்திலும் இருக்க முடியும் மனித உருவதிற்கு மாற்றமடையவும்(shape shifting) முடியும். முழு சக்தியை உபயோகிக்க வேண்டுமென்றால் மட்டுமே யாளிகள்...
    அத்தியாயம் - 54 வன்னி அவளை அறிமுகம் செய்துக் கொள்ளும் முன்னே பேரரசர் பேச ஆரம்பித்தார். “பரி அரசின் இராஜகுரு சந்திரர் ஏன் வரவில்லை? ” என்று முகவாயில் கையை வைத்து கேட்டார். கௌரி சந்திரரை பற்றி கேட்டதும், “பேரரசே! பரி அரசின் இராஜகுரு சந்திரர் பேரரசருக்கென்று பரிசளிக்க ஒரு விஷேஷமான மூலிகையை தயாரித்துக் கொண்டிருந்தார்....
    அத்தியாயம் - 55 வன்னி சாரங்கனிடம் பேரரசரின் அறையில் நடந்ததை சொல்லிக்கொண்டு வந்தாள். சாரங்கன் அவள் சொல்வதற்கு, “ம்ம்...” என்று சொல்லிக் கொண்டு அவளை கைகளில் ஏந்தி அறைக்கு வந்து சேர்ந்தான். வன்னி ஒரு பெருமூச்சுவிட்டு, “இளவரசர் சாரங்கன். நல்ல வேளை. பேரரசரின் செயலால், நான் அத்தனை பேர் முன்னிலையில் என் சக்கர நிலை சொல்ல வேண்டிய...
    Yaali is completely going to be Fiction story. It is an imaginary story based on mythological creature. If anyone wonders what is Yaali. Please find the below image. It is our Mythological creature. You can see them...
    அத்தியாயம் - 3 அதன்பிறகு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானத்தில் அவந்திகா, கார்திக் இருவரும் ஒரு வரிசையிலும், ரோஷனும் பாவனாவும் ஒரு வரிசையிலும் மற்ற மூவரும் மற்றொரு வரிசையிலும் அமர்ந்திருந்தனர். அவந்திகா சாளர(Window) இருக்கையிலும் அவள் அருகில் கார்திக்கும் அமர்ந்தனர். அவந்திகாவின் சிந்தனை இன்னமும் நடப்புக்கு வரவில்லை. அதனால் பாவனா அவள் அருகில் இல்லை என்பதும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
    அத்தியாயம் - 50 வன்னியின் குரல் கேட்டதும், எங்கு எதிரில் இருக்கும் வைத்தியர் இளவரசியிடம் உண்மையைச் சொல்லிவிடுவாரோ என்று முகம் வெளுத்தவன், மிரண்டு அந்த வைத்தியரைப் பார்த்தான் நந்தன். அவன் கவலையை உணர்ந்த கௌரி பெருமூச்சுவிட்டு, “நீ நாளை இங்கிருந்து கிளம்புவதாகச் சொன்னதால், நான் இளவரசியிடம் உன்னைப் பற்றி எதுவும் இப்போது சொல்லமாட்டேன். கவலைபடாதே!” என்று நந்தனை பார்த்துச் சொன்னாள். பின் நந்தன் முன்பு தரையில் எழுதியதை சுத்த சக்கரம்மூலம்...
    அத்தியாயம் - 65   அங்கிருந்து 5 நாழிகைக்குள் நம்மால் மூன்றாம் மலையின் மாணிக்கபுள்ளிக்குச் செல்ல இயலும். இப்போது கிளம்பினால் நிச்சயம் நள்ளிரவிற்குள் அங்குச் சென்றுவிடமுடியும்.” என்றான் நந்தன்.   வன்னி அவன் சொன்னதை கவனித்த போதும், அவளுள் இருந்த கேள்வியை மறக்காமல், தலை தாழ்த்தி, “ஏன் என்னுடன் வர நினைக்கிறீங்க?” என்று உதடுகளை பற்களால் கடித்து கேட்டாள்.   நந்தன், “…”   வன்னி...
    அத்தியாயம் - 45 சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1) ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை. எந்தப் பதிலும் வராததால் திரும்பி அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் மேகன் அறையில் இல்லாததை...
    அத்தியாயம் - 46 425 வருடங்களுக்கு முன்பு… பரி அரசின் அரசவையில் அனைவரும் அடுத்த வரவிருப்பது குட்டி ராணியா அல்லது குட்டி ராஜாவா என்ற சலசலப்பில் இருந்தனர். ஆன்ம பிணைப்பு ஏற்பட்டு 600 வருடங்களுக்குப் பிறகு பரி அரசின் ராணி நண்மலர் கருவுற்று இன்று பிரசவ வலியில் இருந்தாள். பிரதான அரண்மனையில் உள்ள அனைவரும் பதட்டமுடன் குழந்தை பிறந்துவிட்டது என்ற தகவலுக்காகக் காத்திருந்தனர். மனித யாளிகளை போலல்லாமல் மற்ற யாளிகளால் பிரசவ...
    அத்தியாயம் - 13 தரையில் கிடந்த ஓட்டுரை நோக்கி ஓடியவண்ணம், “கொடி… எச்சரிக்கையாக இரு. எந்த நேரத்திலும் சண்டைக்குத் தயாராக இரு" என்று தன் கையோடு ஒட்டியிருந்த கொடியிடம் சொன்னாள் அவந்திகா. அவந்திகாவின் குரலைக் கேட்டதும் 'பல வருடங்களுக்குப் பிறகு உடற்பயிற்சிப் போலச் சண்டையிடப் போகிறோம்' என்று கொடி உற்சாகத்துடன் அவந்திகாவின் கையிலிருந்து ஒரு சுற்று வெளியில் வந்து அவந்திகாவின் ஓட்டத்தினால் ஏற்பட்ட காற்றோட்டம் தன் மீது...
    அத்தியாயம் -14 தன் கண்மீது அமர்ந்த பட்டாம்பூச்சியின் செய்கையில் உடல் சிலிர்த்து நின்றிருந்தப் போது அவள் அறையின் கதவு தட்டும் சப்தம் கேட்டது. அந்தச் சப்தம் அடங்கும் முன்னே அந்தப் பட்டாம்பூச்சியும் மெதுவாகப் பறந்து திறந்திருந்த சாளரத்தின்(window) வழியாக வெளியில் சென்றுவிட்டது. அது போவதையே பார்த்திருந்தவளின் கவனம் மீண்டும் தட்டப்பட்ட கதவை நோக்கித் திரும்பியது. உடனே எச்சரிக்கை உணர்வுக் கொண்டவளாக, தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தாள்...
    Author Note : https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/ முன்னுரை: குதிரையாளியின் வம்சத்தில் இளவரசியாகப் பிறந்து வளர்ந்த வன்னியின் ஆன்மா தவிர்க்க முடியாத காரணத்தினால் அதன் உடலை விட்டுப் பிரிந்தது. யாளி உலத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாததாலும் அவளது ஆயுட்காலம் முடியாததாலும் அவளது ஆன்மா அங்கிருந்து மனித உலகம் வந்துவிட்டது. மனித உலகில் இலக்கற்று சுற்றிக் கொண்டிருந்த அந்த ஆன்மா, வாழ்வதற்கான ஆசை இல்லாததால் ஆயுட்காலம் முடியும் வரை...
    அத்தியாயம் - 42 பின் சரி என்பது போலத் தலையசைத்து, விந்தியாவின் குத்தூசியை எடுத்தாள் அவந்திகா. விந்தியாவும் கண் விழித்தாள். கண் விழித்த விந்தியா அங்கிருப்பவர்கள் அனைவரையும் கோபமுடன் மாறி மாறிப் பார்த்து, எழுந்து அமர்ந்து, “என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீகள். என்ன கேட்டாலும் நான் உங்களிடம் நான் எதுவும் சொல்லத் தயாரில்லை.” என்று கத்தினாள். அவளது கோபத்தை விக்கித்து பார்த்த வினோதா ஒரு நொடி நடுங்கி, "அக்கா…" என்று கண்கலங்கினாள். வினோதாவின் குரலில் ஒரு நொடி விந்தியா...
    அத்தியாயம் - 32 பின் மதியும் முகிலனும் சாதாரண மனித யாளிகள் போல இயல்பான ஆடைகளுக்கு மாறி, அவர்களின் ஆன்மீக ஆற்றலைத் தளர்த்தி, 25 தோற்ற வயதிலிருந்து, 50 தோற்ற வயதிற்கு இருவரும் மாறினர். நந்தன் வெள்ளை நிற பட்டு வேஷ்டி சட்டைக்கு மாறினான். எல்லோரும் அடுத்த இரண்டு நாள் நடக்க விருக்கும் நாடகத்திற்கு தயாராகி நின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அனைவரும் திருப்தியுற்றனர். இவ்வாறாக அந்த அறையிலிருந்த...
    அத்தியாயம் - 17 அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான். அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர்....
    அத்தியாயம் - 12 செல்வமும் அவந்திகாவும் முன் தினம் முடிவெடுத்ததுப் போல் அடுத்த நாள் அந்தக் காட்டுக்குள் தானூர்தியில் வந்தனர். தானூர்தியிலிருந்து இறங்கிய அவந்திகா “அப்பா… நீங்க இங்கேயே இருங்க. நான் சென்று விரைவில் திரும்புகிறேன்.” என்றாள். “அ… அவந்திமா...நானும் வருகிறேனே மா. ஒருவருக்கு இருவராகச் சென்றால் பாதுகாப்புதானே" என்று 'எங்கு விட்டு செல்லமாட்டேன் என்று நேற்று வீட்டில் சொல்லிவிட்டு, இங்கு வந்து ஆன்மாவாக மாறிவிடுவாளோ தன் மகள்' என்று பயத்திலே தயங்கி...
    அத்தியாயம் - 37 முகிலன் மதியிடம் கண்ணசைக்க மதி, “ஒரு நிமிடம். நான் உன்னை அந்த அறைக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்று விந்தியாவுடன் சென்றாள். மதி விந்தியாவுடன் அந்த அறையை விட்டுச் சென்றபிறகு, ஆரம்பம் முதல் கடைசி வரை முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நின்ற நந்தனை பார்த்து முகிலன், “பவளன், நீ முன்பு சொன்ன அந்த மனித யாளி பெண் இவள்தானா?” என்று கேட்டான். அதற்குப் பதிலேதும்...
    அத்தியாம் - 18 வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது. அது, கலைத்திருந்த அவந்திகாவின் உடல் முழுதும் பரவப் பரவ அவளையும் அறியாமல் இதமாக உணர கண்கள் மூடி, “ம்ம்...” என்று முனங்கினாள். முன்பு...
    அத்தியாயம் - 56 வன்னியும் அவளுடன் இரு காவலர்களும் இருந்த பாதுகாப்பு சக்கரம் பொத்தென்று வெள்ளை புல்வெளி போல் இருந்த சரிவான பனி மலையில் விழுந்தது. அவர்கள் விழுந்த அதிர்வில் நிலைபட்டிருந்த பனிமலை, இளகி அவர்கள் மூவரையும் சரிய விட்டது. இடமாற்றும் சக்கரத்தினுள் இருக்கும் போதே உருவாக்கிவிட்டதால் அந்த பாதுகாப்பு சக்கரம் அத ஆன்மீக ஆற்றல் கொண்ட...
    error: Content is protected !!