யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 64

770

அத்தியாயம் – 64

 

வன்னி அவனிடம் கேள்வி கேட்கும் முன்னே அவன் மயங்கி, உறங்கியும் விட்டான். வன்னி ஓடிச் சென்று அவன் தரையில் விழாமல் பிடித்துக் கொண்டாள்.

 

ஆட்டுக்குட்டியாக மாறியதால் முன்பு தோன்றிய மரியாதை மறந்து, “மகர குட்டி, என்ன ஆனது.!” என்று பதறியபடி, அந்த ஆட்டின் கழுத்து வளைவில் தன் ஆட்காட்டி மற்றும் நடுவிரலை வைத்து அவன் நாடிப் பார்த்தாள்.

 

யாரென்றே தெரியாத போதும், நந்தன் மீது இனம் புரியாத நெருக்கத்தை வன்னி உணர்ந்து ஆச்சரியமுற்றாள்.

 

நாடியை தொட்டதும், ‘மனிதயாளி, பரியாளி , மாதங்க யாளி மற்றும் மகர யாளி என நான்கு வகை இரத்தமும் இவன் உடலில் இருக்கிறதே!’ என்று அறிந்ததும் அதிர்ந்து விழி விரித்தாள்.

 

தொடர்ந்து அவன் வயதை அறிய அவன் எலும்பை ஆராய்ந்தவள், ‘இராஜகுரு, இரு கலப்பின இரத்தம் உடையவர்களுக்கே சில எலும்புகள் சேதமுற்று பலமற்று இருப்பர் என்று சொல்லியிருந்தார்.

 

ஆனால் இவன் கலப்பின யாளியாக இருந்துக் கொண்டு, அதுவும் நான்கு வகை இரத்தம் கொண்டு எப்படி எந்த எலும்பிலும் எந்தவித சேதமும் இல்லாமல் ஆரோகியமாக இருக்கிறான்.

 

இருவகை கலப்பின யாளிகளே அதிக பட்சம் 100 வருடம்தான் உயிர் வாழ்வர். அதுவும் எலும்பு மாற்ற வலிகள் அதிகம் இருப்பதால், பல வயது முதிருமுன்னே, வலி தாங்காமல் உயிர் மாய்த்துக் கொள்வர்.

 

இவனோ 4 வகை கலப்பின யாளி, அப்படியென்றால் கடந்த கால கணிப்பின் படி, இவன் 20 வயதை தாண்டுவதும் கடினம். ஆனால் இவனோ 18 எலும்பு வயதுடன் ஆரோகியமாக இருக்கிறானே! எப்படி இது சாத்தியம்?’ என்று அதியித்தாள் வன்னி.

 

அனிச்சை செயலாக தன் கையிலிருக்கும் ஆட்டுகுட்டியை பார்த்தாள், “மகர குட்டி அப்படி என்ன மருந்து உட்கொண்டு இப்படி எந்தவித பாதகமும் இல்லாமல் இருக்கிறாய்.” என்று கொஞ்சியபடி கேட்டாள்.

 

ஆனால் மயங்கி இருந்த நந்தன் என்ன பதில் தரவியலும். வன்னி பெருமூச்சு விட்டு விழி மூடி மூர்ச்சையாகி இருந்த நந்தனை பார்த்து பெருமூச்சுவிட்டாள்.

 

அவள் யோசனையில் இருக்கும் போதே, கையிலிருந்த ஆட்டுக் குட்டியின் கழுத்து நாடி வழக்கத்துக்கு மாறாக படபடவென துடிப்பதை உணர்ந்து,  புரியாமல் ஆட்டுக்குட்டியின் இரு கைகளையும் தன் கைகளில் பற்றி, அவனது முகத்தை அவளது முகத்திற்கு முன் திருப்பினாள்.

 

சில முறை இமை மூடி திறந்து விழித்தவள், என்ன தோன்றியதோ! தன் நெற்றியை ஆட்டு குட்டியின் நெற்றியில் வைத்து, கண் மூடி தன் ஆன்மீக ஆற்றலைச் அவனுள் செலுத்தினாள்.

 

அதுவும் மாயம் போல நந்தனின் உடலில் சக்தியை சேர்த்தது. ஓரிரு நிமிடத்திலே தன்னுள் சக்தியை உணர்ந்த நந்தன், அவனது நீல நிற விழிகளை மெதுவாக திறந்தான்.

 

அப்படி திறந்தவன், ஒரு நொடி ஆச்சரியமுடன், “இளவரசி!! 0_0” என்று விழி விரித்து பேச முயன்றான். ஆனால் அவன்தான் ஆட்டுக் குட்டியின் உருவில் இருக்கிறானே! பேச முடியாமல், பதட்டமுடன் மனித யாளி உருவிற்கு மாறினான்.

 

அப்படி மாறியவுடன்தான், முன்பை விடவும் அதிக நெருக்கமுடன் வன்னியுடன் இருப்பதாக உணர்ந்தான். தன் கைகளை இறுக பற்றியிருந்த வன்னியின் கைகளிலிருந்து தன் கைகளை பிரிக்க எண்ணி, நெளிய ஆரம்பித்தான்.

 

வன்னியும், கையில் அகப்பட்டிருந்த சின்ன சிறு ஆட்டு குட்டியின் கையின் அளவு பெரியதானதை உணர்ந்து விழி விரித்தாள். அப்படி பார்த்தவளின் கண்ணெதிரே தெரிந்தெல்லாம், ஆச்சரியமுடன் விரிந்திருந்த நீல விழிகளும், அழகிய ஆண் முகமும்தான்.

 

உடனே வன்னி தன் முகத்தை சற்று தள்ளி, அவனது கைகளை விட்டு, கன்னத்தைப் பற்றி குதுகலத்துடன் , “ஆ… மகர குட்டி கண் விழித்துவிட்டாயா?” என்று கேட்டு கிளுக்கி சிரித்தாள்.

 

வன்னி பரியாளி என்றதால் அவளுக்கு நந்தனுடனான நெருக்கத்தில் எந்த பேதமும் தெரியவில்லை. ஆனால் பாவம் மனித யாளியின் இரத்தம் நந்தனின் உடலில் இருப்பதால் வன்னியின் ஒவ்வொரு தொடுகையும் அவனுள் உடல் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

 

அவன் பேச கூட சக்தியற்று தொண்டை வரண்டு போக, எச்சில் விழுங்கி, வாயை மூடி மூடி திறந்தான் நந்தன். தாகத்திற்கு தவிப்பவன் போல, அவனது தாகம் வன்னியின் உதடின் மூலம்தான் தீரும் என்பது போல, அவனையும் அறியாமல் அவனது விழிகள் வன்னியின் உதடுகளை பார்த்து மீண்டது.

 

இதை எதையும் அறியாத வன்னி, சிரிப்புடனே, “நான் பயந்தே போய்விட்டேன். தங்களுக்கு என்ன ஆனது. தங்களின் நாடி பார்த்தப் போதும் கூட என்னால் எதுவும் அறிய முடியவில்லை. கலப்பின யாளியான தங்களை எப்படி மகர அரசு விராட்டு மலைக்குள் அனுமதித்தனர்.” என்று கேட்டாள்.

 

வன்னி பேசிய போது அவளது மூச்சு காற்று, நந்தனின் உதடுகள் மீது விழுந்து மீண்டது. இதற்கு மேலும் முடியாது என்று, “இ…இளவரசி. நா…நான்…” என்று தன் கன்னத்தை பற்றியிருந்த வன்னியின் கையை ஒவ்வொரு விரல்களாக பிரித்து அவளது கைகளிலிருந்து தன் முகத்தை விடுவித்துக் கொண்டான்.

 

வன்னிக்கு அவனது செயலில் ஏதும் பேதமாக தெரியவில்லை. ஆனால் அவள் கவனம் முழுதும், நந்தன் இளவரசி என்று அழைத்ததில் இருக்க, “நான் இளவரசி! என்று எப்படி தங்களுக்கு தெரியும்.” என்று கேட்டு, அவனிலிருந்து தள்ளி நின்று அவனை ஆராயும் பார்வையுடன் கேட்டாள்.

 

வன்னியின் இந்த செயலில் நந்தன் மென்னகையிட்டான். அவள்முன் அவன் ஒரு கால் முட்டியிட்டு மற்றொரு கால் குத்திட்டு, நெஞ்சில் தன் வலது கை வைத்து தலை தாழ்த்தி,

 

“இளவரசி என்னிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனது பெயர் நந்தன். நான் ஒரு கலப்பின யாளி. நான் என்னுடைய பரி உருவத்திற்கு முதல் முறை மாறிய போது, நான் பரியரசில் இருந்தேன்.

 

அதுதான் என் உடலில் மனிதயாளி உருவிற்கு பிறகு உருவான முதல் உருவம். அப்போது, நான் புரியாமல் குழம்பி துன்புற்றிருந்த போது, தாங்கள் எனக்கு உதவினீர்கள். அதனால் எனக்கு தங்களை நன்றாக நினைவிருக்கிறது.” என்று விளக்கம் அளித்தான்.

 

இதை கேட்ட வன்னி முழுதும் தெளிவடையாமல் சந்தேகமாக அவனை குறுகுறுவென்று பார்த்தாள். நந்தன் தலை தாழ்த்தி இருந்த போதும், வன்னியின் குறுகுறுப்பை உணர்ந்தான்.

 

அதனோடு வன்னிக்கு தன்னை நினைவில்லாததற்கு வானதிதான் காரணமாக இருக்க கூடும் என்று நந்தன் நன்கு அறிவான். அதனால் வன்னி மேலும் எதுவும் கேட்கும் முன்னே,

 

“இளவரசி பலருக்கு பல சமயங்களில் தாங்கள் உதவியிருப்பதால், என்னை போன்ற ஒருவனை நினைவில் வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால் அதை யோசித்து, தாங்கள் சிரதைக் கொள்ள வேண்டாம்.” என்று விளக்கம் அளித்தான்.

 

நந்தன் இவ்வளவு சொன்ன பிறகு வன்னிக்கும் அப்படிதான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. கூடவே, ‘கலப்பின யாளியாக இருக்கும் இவனால் 4 சக்கர நிலையில் உள்ள என்னை எதுவும் செய்துவிட முடியாது.’ என்ற நம்பிக்கை இருக்க, “ம்ம்…சரி தங்களை நம்புகிறேன்.” என்று தலை அசைத்தாள்.

 

எங்கு தன் மீது நம்பிக்கையின்றி, இளவரசி தன்னை விரட்டி விடுவாரோ என்று வன்னி பதில் சொல்லும் வரை, அச்சத்தில் தனது இடது கையை முஷ்டியாக்கி, தலை தாழ்த்திருந்த நந்தன், வன்னியின் பதிலில் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

 

நொடியில் அவனது இடது கையின் இறுக்கம் தளர்ந்தது. வன்னியை நிமிர்ந்து பார்த்து பலீரென்ற புன்னகைத்து, “நன்றி இளவரசி. “ என்றான் நந்தன்.  வன்னி அவனது புன்னகையில் இதயம் படபடக்க ஒரு நொடி , விழி விரித்து பார்த்தாள்.

 

பின் என்ன தோன்றியதோ, “ஹா…ஹா…” என்று சிரித்து, “நந்தன் தங்களின் சிரிப்பு அழகாக இருக்கிறது. ஆமாம் அது இருக்கட்டும், கலப்பின யாளியான தாங்கள் எப்படி இங்கு வந்தாய்.

 

அதனோடு த… தங்களின்…” என்று ஏதோ சொல்ல வந்தவள் முகம் சிவந்து, “நந்தன் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் மயங்கிய போது, தங்களின் உடல் நிலை அறிய தங்கள் அனுமதி இன்று தங்களின் நாடியை ஆராய்ந்து பார்த்தேன்.” என்று ஓர கண்ணில் அவனை பார்த்தாள்.

 

அதை கேட்ட நந்தன் சின்ன சிரிப்பை உதிர்த்து, “கவலை வேண்டாம் இளவரசி! என்னை பற்றி எதை அறியவும் இளவரசிக்கு முழு உரிமை உண்டு. ^_^ “ என்று சற்று நிறுத்தி,

 

“அதனோடு, தாங்கள் என்னுடைய இளவரசி என்பதால்தான் என் நாடியில் தங்களின் ஆன்மீக விளிப்பு நுழைந்தது. நான் அனுமதி அளிக்கவில்லை என்றால்,

 

வேறு யாராலும், என்னுள் மற்ற இரத்த வகை இருப்பதை அறிய முடியாது. அதனால்தான் மகர காவலர்களால் நான் கலப்பின யாளி என்று அறிய முடியவில்லை.“ என்று விளக்கம் தந்தான்.

 

வன்னி ஆச்சரியமுடன் குழப்பமாக அவனை பார்த்தாள். ‘பேரரசர் எனக்கு என் ஆன்மீக சக்தி நிலையை மறைக்க மருந்தளித்தது போல் நந்தனும் ஏதாவது உட்கொண்டானோ!’ என்று சந்தேகமுற்றாள்.

 

அவளது பார்வையில் அவளது கேள்வி உணர்ந்து, “இளவரசி, கலப்பின யாளியாக இருந்த போதும், நான் ஆரோகியமாக இருப்பதற்கான காரணம், என் கழுத்தில் இருக்கும் இந்த பலிங்கு கல்தான்.

 

இதுவே நான் என் கலப்பின இரத்தததை மறைக்கவும் உதவியது. இதை எனது குரு கொடுத்தார். இதை அணிந்து, நான் தொடர்ந்து தவம் செய்து வந்தால், ஓரிரு பத்து வருடங்களில் என்னாலும் ஆன்மீக இதய வேர் உருவாக்க முடியும்.

 

இந்த கல் ஆன்மீக ஆற்றலை சூழலிலிருந்து உறிஞ்சி, என்னுள் சேர்க்க வினையூக்கியாக இருக்கிறது. ஆனால் என் மனம் நிலைக் கொள்ளாமல் படப்படக்கும் போது, என்னால் இதனை கட்டு படுத்த முடிவதில்லை.

 

அதனால், என் மனித உடலில் அதிக நேரம் இருக்க முடியாது. இப்போது என் உடல் மகர யாளியின் உருவ வளர்ச்சியில் இருக்கிறது. முன்பு தங்களை கண்டதும் மகிழ்ச்சியில் என் மனம் படப்படப்புற்றேன்.

 

இதனால் என்னால் என் மனித யாளி உருவத்தில் இருக்க முடியவில்லை. கட்டுக்குள் வராமல், நான் என் மகர உருவான ஆட்டு குட்டியின் உருவிற்கு மாறிவிட்டேன்.

 

இப்போது மனம் இயல்பாகியதால், என்னால் மனித உருவிற்கு மாற முடிகிறது. இருந்த போதும், என்னால் இன்னும் மற்ற யாளி உருவத்தில் இருந்துக் கொண்டு பேச முடியவில்லை.

 

நான் என் ஆன்மீக இதய வேர் உருவாக்கி முதல் சக்கர நிலை அடைந்ததும் என்னால் மகர உருவிலும், மாதங்க உருவிலும், பரி உருவிலும் இருந்துக் கொண்டு பேச இயலும் என்று என் குரு சொல்லியிருக்கிறார்.” என்று நீண்ட நெடிய விளக்கம்தான்.

 

வன்னி அதனை கேட்டு கண்ணில் மின்னல் வெட்ட, “தங்களின் குரு மருத்துவம் அறிந்தவரா? இந்த பளிங்கு கல்லில் எப்படி கலப்பின யாளிகளின் நிலையை குணப்படுத்த இயலும். ஆச்சரியமாக இருக்கிறதே!.” என்று கேட்டாள்.

 

நந்தன், “ஆமாம் என் குரு மருத்துவம் அறிந்தவர் மட்டுமல்ல, இன்னும் பல விஷேசங்கள் அறிந்தவர். 3000 வருடமாக தவத்தில் இருந்தவர், 9 வருடத்திற்கு முன்புதான் வெளி உலகம் வந்தார்.

 

அப்போது என்னை ஒரு வீதியில் கண்டு, என்னை சீடனாக ஏற்று எனக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். ஓரளவுக்கு அவரின் திறமை நான் அறிந்த போதும், அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.” என்று ஏதோ யோசித்தவிதம் சொன்னான்.

 

அமைதியாக கேட்டிருந்த வன்னி,  அந்த பளிங்கு கல் குறித்து நந்தனின் குருவிடம் கேட்க வேண்டும் என்ற ஆர்வமுடன், “நந்தன் என்னை தங்களின் குருவிடம் அறிமுக படுத்துகிறீர்காளா? நான் அவரிடம் மருத்துவம் குறித்து நிறைய கேட்க வேண்டும்.” என்றாள்.

 

நந்தன் லேசாக அசடு வழிய, “நிச்சயம் இளவரசி. ஆனால் அதற்கு முன் என் குருவிற்கு தங்களை சந்திக்க விருப்பமா என்று அறிந்து நான் சொல்கிறேன். ஏனென்றால் அவருக்கு தன் அடையாளத்தை வெளிப்படுத்த விருப்பமில்லை.

 

நான் இன்னமும், சாதரண மனிதயாளி போல உணவுண்டு வாழ வேண்டும் என்ற நிலை இருப்பதாலே இன்னமும் மனிதயாளிகள் இருக்கும் இடத்தில் என்னுடன் அவர் தங்கியிருக்கிறோம்.

 

இல்லையென்றால், என் குரு, என்னை எப்போதோ நம் உலகில் யாரும் எளிதில் அறிய முடியாத ஏதாவது ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றிருப்பார். அதனால் அவரின் விருப்பதிற்கு மதிப்பளிப்பது, சீடனாகிய என் கடமை. இளவரசி என் சங்கடத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.” என்றான்.

 

இதை கேட்ட வன்னி, முகம் சோர்ந்து, “ஓ… புரிகிறது. தங்களின் குருவிடம் அனுமதி பெற்ற பின் என்னிடம் வாங்க.” என்று தன் கைக்காப்பிலிருந்து, வெள்ளியினால் ஆன நாணையத்தை  அவனிடம் தந்தாள்.

 

“இது என்னுடைய இராஜ முத்திரை. இதை காண்பித்தால், பரி அரண்மனையின் காவலர்கள், தங்களை என்னிடம் அழைத்து வருவர்.  தங்களின் குரு அனுமதித்ததும்,  எனக்கு தகவல் கொடுங்க. நான் தங்களை வந்து சந்திக்கிறேன்.” என்றாள்.

 

நந்தன் வியந்து, வன்னியின் குட்டி உருவம் பொதித்த அந்த வெள்ளி நாணயத்தை பெற்றுக் கொண்டான். அதனை ஒரு கையால் பற்றி மறு கை விரலால் வருடி, பின் தன் இடுப்பிலிருந்த மந்திர பையில் வைத்துக் கொண்டான்.

 

பின் நிமிர்ந்து, “நிச்சயம் இளவரசி!”. ஆனால் நந்தன் வன்னியை சந்தித்ததை, வானதியிடம் சொல்லும் எண்ணமுடன் இல்லை.

 

‘வானதிக்கு ஏனோ தன் இளவரசியை பிடிக்க வில்லை.’ என்பது, முன்பு நடந்த நிகழ்வுகளில், நந்தன் உணர்ந்த ஒன்று. அதனால், முடிந்த அளவு இளவரசி குறித்து எதுவும் வானதியிடம் சொல்ல கூடாது என்று நந்தன் முன்பே முடிவெடுத்திருந்தான்.

 

இருந்தபோதும், ஆர்வமுடன் தன் முன் பேசிக் கொண்டிருக்கும் வன்னியிடம் அது குறித்து பேசாமல், பேச்சை மாற்றினான் நந்தன்.

 

“நான் விராட்டு மலைக்கு கடந்த 3 வருடமாக ஒவ்வொரு ஆறு மாத்திற்கு ஒருமுறை வருவேன். அதனால் இந்த மலை தொடரில் எல்லா இடங்களும் எனக்கு தெரியும்.

 

தாங்கள் விராட்டு மலைக்கு வந்திருப்பதன் காரணம் அறிந்தால், என்னால் முடிந்த உதவியை தங்களுக்கு செய்ய நான் விழைகிறேன்.” என்று தலை நிமிராமல் சொன்னான்.

 

வன்னிக்கு அப்போதுதான் அவள் இங்கு வந்திருப்பதன் நோக்கம் நினைவுக்கு வந்தது. “ஓ… ஆமாம். எனக்கு உதவி வேண்டும்தான்.” என்று நந்தனின் அருகில் சென்றாள்.

 

தன் கைக்காப்பிலிருந்து வரைப்படத்தை எடுத்து, நந்தனிடம் அந்த வரை படத்தை காட்ட, அவனுக்கு நிகராக அவன் எதிரில் அவளும் முட்டி போட்டு அமர முயன்றாள்.

 

அவள் என்ன செய்ய இருக்கிறாள் என்பதை உணர்ந்த நந்தன் சட்டென முட்டி போட்டிருப்பதிலிருந்து எழுந்து வன்னியை பொற் சிலை போல கைகளில் ஏந்தி அருகில் இருந்த கல் திட்டில் அமர வைத்தான்.

 

நந்தன் அப்படி தன்னை இரு கைகளில் ஏந்த கூடும் என்று உணராத வன்னி அன்னிச்சை செயலாக அவனது கழுத்து வளைவை கைகளால் பற்றிக் கொண்டாள். வியப்புடன், “நந்தன் ?_?” என்று கேள்வியாக அவனை பார்த்தாள்.

 

நந்தன் மென்னகையுடன் அவளை பார்த்து, “தாங்கள் இந்த கல் மீது அமர்ந்து பேசுங்கள். நான் இங்கிருந்து கேட்கிறேன். முட்டி போட்டால் தங்களுக்கு கால்கள் வலிக்கும்.” என்றான்.

 

“ம்ம்?” என்று, ‘என் குரு எனக்கு தினம் தினம் தரும் புல்லாங்குழல் பயிற்சிகளையும், வில் பயிற்சிகளையும் , உடல் பயிற்சிகளையும் இந்த மகர குட்டி பார்த்தால், வாய் வலிக்கும், கை வலிக்கும்,

 

உடல் வலிக்கும் என்று என்னை எதுவும் செய்யவிடாது போலிருக்கே -_-. சாதாரண முட்டி இடுவதற்கு இப்படி அலட்ட வேண்டுமா?’ என்று நினைத்து, உடனே கிளுக்கி சிரித்தாள் வன்னி.

 

ஆனால் அதனை வாய் விட்டு சொல்லாமல், “அப்போது தாங்களும் என் அருகில் அமருங்கள்.” என்று அந்த அகன்ற கல்லில் சற்று தள்ளி அவனுக்கு இடம் விட்டு அமர்ந்தாள் வன்னி.

 

நந்தன் அவளையும் அவனுக்காக அவள் விட்டிருந்த இடத்தையும் பார்த்து, சின்ன சிரிப்பை உதிர்த்தான். “சரி. ^_^” என்று வன்னியின் அருகில் அமர்ந்தான்.

 

வன்னி அதற்கு மேலும் தேவையற்று வளவளக்காமல் நேரடையாக நந்தனிடம் பேசினாள். “நந்தன் இந்த வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு இன்று நள்ளிரவுக்குள் நான் போக வேண்டும். அதற்கு ஏதேனும் எளியான பாதை இருக்கிறதா?” என்று கேட்டாள்.

 

நந்தன், வன்னியிடமிருந்து வரைபடத்தை வாங்கி, அதில் குறிப்பிட்ட இடத்தை நோட்டமிட்டான். பின் நெற்றி சுருங்கி, “இளவரசி, இந்த இடத்திற்கு தாங்கள் ஏன் போக வேண்டும்.” என்று கேட்டான்.

 

வன்னி , ‘நந்தனிடம் உண்மையை சொல்லலாமா? வேண்டாமா?’ என்று யோசித்தாள். வழி கேட்ட போதும், நந்தனை தன்னுடன் அழைத்து செல்லும் எண்ணமுடன் வன்னி இல்லை.

 

‘போகும் இடத்தில் என்ன ஆபத்திருக்குமோ, எந்த சக்தியும் இல்லாத நந்தனை அங்கு அழைத்துச் சென்று என்ன செய்வது? அதனோடு, மகர இளவரசர் துருவன் சொன்னபடி, மூன்று சக்கர நிலையாவது அடைந்தவர்களால் மட்டுமே அந்த மூன்றாம் மலைக்குச் செல்ல முடியும்.

 

இதை மறந்து நான் அவசியமில்லாமல் சக்தியற்ற நந்தனிடம் வழி கேட்கிறேனே! அவனுக்கு முதல் மலையில் என்றால் வழி தெரிந்திருக்கும். மூன்றாம் மலையில்?’ என்று காலம் கடந்து யோசித்து தன் தலையில் தட்டிக் கொண்டாள் வன்னி.

 

வன்னியின் முகத்தையே அதுவரை பார்த்திருந்த நந்தன்  அவள் சங்கடத்தை உணர்ந்து, “ஏன் கேட்டேன் என்றால், அது மூன்றாவது மலையில் இருந்தாலும், எல்லாராலும் தாங்கள் வரைபடத்தில் காண்பித்த இத்திற்கு போக முடியாது.” என்று முகவாயில் கையை முஷ்டியாக்கி பேசினான்.

 

வன்னி ஆச்சரியமாக, “மூன்று சக்கர ஆன்மீக சக்தி நிலை உடையவர்களாலுமா?” என்று கேட்டாள்.

 

நந்தன், ஆமாம் என்பது போல் தலையாட்டினான். வன்னி விழி விரித்து, ஒரு நொடி விக்கித்து போனாள். “-_-. அந்த கனவு சக்கர குரல்காரன், என்ன நினைத்து என்னை அங்கு வரச் சொன்னான்.” என்று வாய் விட்டே முனுமுனுத்தாள்.

 

நந்தன் வன்னியின் வார்த்தையில் வேறு ஒன்றை உணர்ந்து அவளை திரும்பி பார்த்தான். வன்னியும் அவனை திரும்பி பார்த்தாள். வன்னி வெளிப்படியாக பேசிவிட்டதில் பெரிதாக எச்சரிக்கை அடையவில்லை.

 

மனதுள் இவனை நம்பலாம் என்ற உணர்வு ஏனோ வர பெருமூச்சுவிட்டு, “நான் அங்கு ஒருவரை காப்பாற்ற செல்ல வேண்டும். ஏன் அங்கு மூன்று சக்கரம் ஏற்கனவே அடைந்த என்னாலும் போக முடியாது?” என்று கேட்டாள் உண்மையை மறையாமல்.

 

நந்தனின் முகம் வன்னி உண்மையை சொன்னதும் மலர்ந்தது. பின் வெகு தீவிரமாகி, “இளவரசி, ஆட்சேபனை இல்லையென்றால், யாரை காக்க தாங்கள் அங்கு செல்கிறீர்கள் என்று நான் அறியலாமா?” என்றான்

 

வன்னி ஒரு நொடி தயங்கி பின், “நந்தன், அது… மாதங்க படை தளபதி கரணியன் அங்கிருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்து. அவரைக் காப்பாற்ற நான் அங்கு செல்ல வேண்டும்.” என்று உதடு பிதுக்கி சோர்ந்தாள்.

 

வன்னி தன்னிடம் உண்மையை மறையாமல் சொன்னதில் பெருமிதமாக உணர்ந்து, “இளவரசி தாங்கள் அந்த இடத்திற்கு போக முடியாமல் இருக்கலாம். ஆனால் என்னால் அங்கு போக இயலும்.

 

அதனால் படை தளபதியின் உருவத்தை என்னுள் கனவு சக்கரத்தை ஏற்படுத்தி காண்பித்தால் நான் அவரை காப்பாற்றி அழைத்து வர முயல்கிறேன்.” என்றான் புன்னகைத்தான்.

 

வன்னி, “?_?”.

 

நந்தன் வன்னியின் கேள்வியான முகத்தை பார்த்து சின்ன சிரிப்பை உதிர்த்து, “இளவரசி இந்த புள்ளி குறிப்பிட்ட அந்த இடத்தை சுற்றி கிட்டத்தட்ட மூன்று காத தூர சுற்றளவுக்குள் கலப்பின யாளியாலும், வெள்ளி எலும்புள்ள யாளிகளாலும் மட்டுமே செல்ல இயலும்.

 

இதை முதல் முறை விராட்டு மலைக்கு தவம் புரிய வந்த போது எனது குரு எனக்கு குறிப்பிட்டார். இந்த இடம் மட்டுமல்ல, ஒவ்வொரு மலையிலும், இது போல ஒரு புள்ளி இருக்கும்.

 

முதல் மலையில், ஒரு காத சுற்றளவும், இரண்டாவது மலையில் இரு காத சுற்றளவும், என ஏழு மலையிலும் இது போன்ற ஒரு இடம் இருக்கிறது. இதனை மலைமாணிக்கபுள்ளி என்று முன்பு அழைத்தனராம்.

 

என்னால் இங்கு , இங்கு, இங்கு, என ஏழு மலையிலும், இந்த குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சென்று வர இயலும்.” என்று வரைபடத்தில் இன்னும் சில இடங்களை குறிப்பிட்டு விளக்கினான் நந்தன்.

 

தொடர்ந்து, “என்னிடம் ஆன்மீக இதய வேர் இல்லையென்றாலும், கலப்பின இரத்தம் இருப்பதால், என்னால் எந்த வித தடங்களுமின்றி, இவ்விடங்களுக்கு செல்ல இயலும்.” என்று பெருமிதமுடன் சொன்னான்.

 

வன்னி அவன் சொன்னதை கேட்தும் முதலில் ஆச்சரியமும், பின் அவன் வெள்ளி எலும்பு என்றதும், அச்சமும் அடைந்தாள். அவளையும் அறியாமல் அவள் நெற்றியில் வியர்வை துளிர்த்து.

 

‘ஆம் நந்தனுக்கு , நான் வெள்ளி எலும்புடையவள் என்று தெரியாது. அதனால்தான் எனக்கு உதவ முன் வந்திருக்கிறான்.’ என்று நினைத்தாள் வன்னி.

 

ஆனால் பாவம் நந்தனுக்கு வன்னி வெள்ளி எலும்புடையவள் என்று மாதங்க பனி மலையில் இருக்கும் போதே வானதி மூலம் தெரியும் என்று தெரியாது. வன்னி தன்னை கண்டு பயந்து விடகூடாது என்று உணர்ந்ததாலே தன்னால் மட்டும் செல்ல இயலும் என்று முன்பு சொன்னான்.

 

வன்னி எதுவும் பேசாமல் இன்னும் ஏதோ யோசனையில் இருப்பதை உணர்ந்த நந்தன், அவன் உண்மை அறிந்தவன் போல் காட்டிக் கொள்ளாமல், “இளவரசி?” என்று விளித்தான்.

 

வன்னி, “ம்ம்!?” என்று திரும்பி அவனை பார்த்தாள். பின் மனதுள் பலதும் கணக்கிட்டு, “நந்தன் தாங்கள் எனக்கு எப்படி அங்கு விரைவில் செல்வதென்று மட்டும் சொல்லுங்க. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றாள் முகத்தில் சிறுப்பிள்ளை தனம் மறைந்து.

 

நந்தன் வன்னியில் தெரிந்த மாற்றதை கண்டுக் கொண்டான். இருந்தும் வெளியிப்படையாக அவளிடம் எதுவும் கேட்காமல், “இளவரசி, எது எப்படி இருந்தாலும், தாங்கள் விராட்டு மலையில் இருந்து பாதுகாப்பாக வெளியே செல்லும் வரை நான் தங்களுடன்தான் இருப்பேன்.” என்றான் தீர்க்கமாக.

 

வன்னி அவனை விச்சித்திரமாக பார்த்தாள். அவனை வர வேண்டாம் என்று மறுக்க தோன்றிய போதும், ஏனோ அவனது அருகாமை அவளுள் இதத்தை தந்தது. இருந்தும் அவள் ஏன் என்று அறிய விழைந்து பேசுமுன்னே நந்தன் தொடர்ந்து பேசினான்.

 

“இளவரசி, இங்கிருந்து  6  காத தூரத்தில் முதல் மலையின் மாணிக்க புள்ளி இருக்கிறது. அங்கிருந்து அடுத்த மலையின் மாணிக்கப் புள்ளிக்குச் செல்லவென்று இயற்கையால் உருவான இடமாற்றும் சக்கரம் (teleporting array) இருக்கிறது.

 

அங்கிருந்து 5 நாழிகைக்குள் நம்மால் மூன்றாம் மலையின் மாணிக்கபுள்ளிக்குச் செல்ல இயலும். இப்போது கிளம்பினால் நிச்சயம் நள்ளிரவிற்குள் அங்குச் சென்றுவிடமுடியும்.” என்றான் நந்தன்.

 

Author Note:

Author: திருட்டு பூனை 400 வருடத்திற்கு முன்னாடியே அதனோட திருட்டு வேலையை செய்திருக்கி போல.

நந்தன்: Finally, என்னோட இளவரசியை ரொம்ப மாசம் கழிச்சு பாத்துட்டேன். ^_^.

நந்தன் : ஏய் Author, என்ன side charactor போல use பன்னதை நான் கவனிக்கலனு மட்டும் நினைக்காத. flash back முடியட்டும். என் power வந்ததும், கனவு சக்கரம் போட்டு உன்னை torture பன்றேனா இல்லாயானு பாரு.

Author: ஹா…ஹா… ஹீ.ஹீ >_<. ( Hero இதை கவனிக்கலனு நினைச்சேனே! வச்சி செஞ்சிருவானோ! அப்படினா இன்னும் கொஞ்ச நாளுக்கு flashback -ஏ ஓட்டுவோம்.)