Advertisement

அத்தியாயம் – 62

துருவனின் அருகில் நின்றிருந்த வன்னி, “வணக்கம் வசுந்தரா.” என்று புன்னகைத்தாள். துருவனிடமிருந்து பதில் வராமலிருக்க, வன்னி அவனை பார்த்தாள். வைத்த கண் அகலாமல் அறைக்கு புதிதாக வந்த வசுந்தராவை அவன் பார்த்திருந்தான்.

 

வன்னி புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். ஆனால் துருவன், வன்னியின் பார்வை உணரவில்லை போலும். அவனது மனதுள், ‘வசுவின் சக்கர நிலை மூன்றிலிருந்து, 2 சக்கரமாக குறைந்தது தவிர மற்றபடி அவளுக்கு எந்தவித பாதகமும் நிகழவில்லை!’ என்று முனுமுனுத்தான்.

 

அதை தொடர்ந்து அவனையும் அறியாமல் நிம்மதி பெருமூச்சுற்றான். வசுந்தராவிற்கு எதுவும் இல்லை என்பது அறிந்ததும்தான், துருவனுக்கு முன்பு வசுந்தரா தன்னிடம் இயல்பாக பேசாமல் ஓடி ஒழிந்தது நினைவு வந்து.

 

உடனே அவன் முகம் கருக்க அவளிடம் பேச பிடிக்காதவன் போல உதடை பிதுக்கினான். தன் முகமனுக்கு காத்திருக்கிறாள் என்பதும் மறந்து அவளை கேள்வியுடனும் கோபமுடனும் பார்த்தான் துருவன்.

 

வெகு நேரமாக, வணங்கி சிரம் தாழ்த்தி துருவனின் அனுமதிக்காக காத்திருந்த வசுந்தரா, பதில் வணக்கம் தராமல் இருந்த துருவனை லேசாக சிரம் உயர்த்தி பார்த்தாள்.

 

அப்படி பார்த்தவள் அவனது பார்வையில் தெரிந்த கோபத்தில் அவள் வயிற்றில் இனம் புரியாத குளிர்பரவுவதை உணர்ந்தாள் வசுந்தரா. அவன் கோபத்தின் காரணம் தெரிந்த போதும், ‘எல்லாம் என் சீடர் தோழரின் நல்லதற்கே! அதை ஒருநாள் அவர் புரிந்துக் கொள்வார்.’ என்று தன்னை சமாதனம் செய்துக் கொண்டாள்.

 

துருவனின் நிலை கண்டும் காணதது போல மீண்டும் சிரம் தாழ்த்தி அவன் பதிலுக்கா காத்திருந்தாள். இந்த செயலை பார்த்த துருவன், ‘என்ன திமிர்! என் கோபம் கண்டும் எதுவும் அறியா சிறுப்பெள்ளைப் போல நிற்கிறாள்.’ என்று, “ம்கும்…” அவளுக்கு பதில் வணக்கம் சொல்லாமல் முகம் திருப்பிக் கொண்டான்.

 

வசுந்தரா மற்றும் துருவனின் செயலை துரு துருவென பார்த்திருந்த சிறுப்பிள்ளையான வன்னி, “?_?” ‘என்ன நடக்கிறது?’ என்று குழம்பி கேள்வியாக , “இளவரசர் துருவன்?” என்று விழித்தாள்.

 

வன்னியின் குரல் கேட்டதும்தான் அவள் அருகில் இருப்பதும் அவர்களை சுற்றி இன்னும் பல மகர தோழர்கள் இருப்பதும் அவனுக்கு நினைவு வந்து போல. வன்னியை திரும்பி பார்த்து அசடு வலிவது போல ஒரு புன்னகையை உதிர்த்தான்.

 

பின் தன் முகத்தை மாற்றிக் கொண்டு, “வணக்கம் மகர தோழி வசுந்தரா. மற்றவர்களுடன் சேர்ந்து அமருங்கள்.” என்று வசுந்தராவின் முகமும் பார்க்காமல் சொன்னான்.

 

வசுந்தரா, துருவனின் குரலில் தெரிந்த அதிருப்தியையும், வழக்கமாக அவன் அழைக்கும், ‘சீடர் தோழி வசு!’ என்ற அழைப்பும், மாறியிருக்க, வசுந்தராவின் மனதில் நெருடியது. இருந்தும், “நன்றி இளவரசே!” என்று அமைதியாக இருக்கையில் அமர்ந்தாள்.

 

எவ்வளவு கட்டு படுத்தியும் அவளையும் அறியாமல் அவளது ஓர விழி துருவனை பார்த்து மீண்டது. அதே போல் துருவனும் வசுந்தரா அவள் இருக்கையில் அமரும் வரை துருவனின் விழிகள் அவளை விட்டு மீளவில்லை.

 

அவர்களை மாறி மாறி பார்த்திருந்த பருவம் இன்னும் தாண்டா வன்னியின் தலை மீது, “?_?”. அவளது விழிகள், “@_@”

 

வன்னி விழி மூடாமல் ஆர்வமுடன் தன்னையும், வசுந்தராவையும் மாற்றி மாற்றி குறுகுறுப்புடன் (curiosity) பார்த்திருப்பதை பார்த்த துருவனின் இதழ் விரிந்தது.

 

“ம்க்கும்.” என்று ஒரு சின்ன கனைப்புடன், அவன் சின்ன சிரிப்பை உதிர்த்து வன்னியின் தலையை பாசமுடன் வருடினான் துருவன். வன்னி துருவனை திரும்பி பார்த்து கிளுக்கி சிரித்தாள். வன்னி யார் என்று வசுந்தராவை பற்றி துருவனிடம் விசாரிக்க எண்ணி வாய் திறந்தாள்.

 

ஆனால் அதற்குள் சோதனை எலியா என்று வசுந்தரா வருமுன் கேட்ட மகரர், அவர் இருக்கையிலிருந்து எழுந்து, வசுந்தராவை பார்த்து, “மகரதோழி வசுந்தரா! சோதனை எலியாக, எப்படி நம்மை இருக்க சொல்கிறீர்கள்.

 

ஏற்கனவே என் சக்கரம் முதல் நிலைக்கு குறைந்துவிட்டது. இன்னும் ஓரிரு வருடத்திற்குள் என் இதயவேரும் முழுதும் அழிந்தால், என்னால் உயிருடனும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

 

அப்படி இருக்க பரி அரசு மருத்துவத்தில் சிறந்தது என்ற போதும், சிறுபெண்ணாக வந்திருக்கும், குழந்தை மனமும் மாறாமல் புன்னகைக்கும் இந்த பரிதூதுவரை எப்படி நம்புவது?” என்று மீண்டும் கேட்டான்.

 

அவரது கேள்வியில், வன்னியின் சிறுப்பிள்ளை தனமான புன்னகை மறைந்தது. கேள்வியாக கேட்டவரை விழி விரித்து, “0_0.” பார்த்தாள். அவரது கேள்வியில் துருவனின் முகமும் கருத்தது. இருந்தும் மகர தோழரின் ஆதாங்கம் அவனுக்கும் புரியாமல் இல்லை.

 

அதே சமயம் வன்னியின் திறமை பற்றியும் துருவன் அறிந்த ஒன்று. அதனால் வன்னியின் திறமையை எடுத்துச் சொல்லி அவர்களின் பயம் போக்க முன் வந்தான்.

 

ஆனால் அதற்கு முன்னே வசுந்தரா, “மகர தோழரே! பரி தூதுவரின் மருந்தை உட்கொள்வதை விடுத்து, தங்களின் உயிர் காக்கவென்று, வேறு வழி எதுவும் தற்போது உங்களிடம் இருக்கிறதா?” என்றாள் குரலில் இளக்கம் குறையாமல்.

 

வசுந்தராவின் கேள்வியில், ‘வேறு வழியில்லை.’ என்ற உண்மை உணர்ந்த அந்த மகரர் வாயடைத்து போனார். அவர் மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து அதிருப்தியிலிருந்த மற்றவர்களும் சிரம் தாழ்த்தினர்.

 

இருந்தும் ஆற்றாமையுடன் லேசாக குரல் கம்ம, ஏதோ கதை சொல்பவர் போல, தலை தாழ்த்தி, “என் தந்தை, இன்று என்னைவிடவும் இளமையான தோற்ற வயதில் இருக்கிறார்.

 

என் பெற்றோர் மட்டுமல்ல. இவர், இவர், இவர்…” என்று இன்னும் சிலரையும் காண்பித்து, “இவர்களின் பெற்றோர்களும் இளமையுடன் இருக்கிறார்கள். இன்றோ நாளையோ என்று இருக்கும் எங்களை பார்த்து அவர்கள் மனம் எப்படி இருக்கும்?

மனிதயாளிகளை போல என் பெற்றோர்களை நான் பிறவி கடன் என்று செல்வம் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற போதும், எந்த பெற்றோர் தனக்கு முன் தன் மக்கள் இறப்பதை பார்த்து இயல்பாக இருக்க முடியும்?!” என்றவரின் குரல் உடைந்து அலறியது.

 

அந்த மகரரின் வார்த்தைகள், பெற்றோரே இல்லாத, இல்லை இல்லை பெற்றோர் யாரென்றே தெரியாத வசுந்தராவை துளியும் பாதிக்கவில்லை. தன் முன் தன்னை விடவும் பெரியவரான மகரர் ஒருவர், கலங்கி அழுவதை வெறித்து பார்த்தாள்.

 

அவர் ஒருவர் மட்டுமல்லாமல், அவரை போன்ற சூழலில் இருந்த மற்ற மகரர்களின் முகமும் வாடி இரத்த பசையற்று இருந்தது. சில நொடிகள் அந்த அறையில் அமைதி நிழவியது. துருவனும் ஆருதலாக பேசாமல் வசுந்தராவை ஊடுறுவும் பார்வை பார்த்தான்.

 

சில நிமிடங்கள் கலக்கமுடன் தன் எதிரில் இருந்த மகரர்களை பார்த்த வசுந்தரா, என்ன தோன்றியதோ ஒரு பெருமூச்சுவிட்டு, தலை தாழ்த்தினாள். பின் முகம் உயர்த்தி அவர்களை பார்த்து, “மகர தோழர்களே!

 

பரி அரசிலிருந்து, நம் அரசுக்கு திறமையற்றவரையா, ஆட்கொல்லி பிணி தீர்க்க அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அப்படி யோசித்தால் தாங்கள் அனைவரும் இப்படி மனம் உடைந்திருக்க மாட்டீர்கள்.” என்று அவர் மனம் வேறு விதத்தில் சிந்திக்க வழிக்காட்டினாள்.

 

வன்னிக்கும் இவர்களிடம் எப்படி பேசுவதென்று தெரியவில்லை. ‘என் பெற்றோர்களுக்கு தன் மீது பாசம் இருப்பது தெரியும். இருந்த போதும், ஒருவேளை அவர்களுக்கு முன் நான் இறக்கக் கூடிய நிலை ஏற்படுமானால் அவர்கள் எப்படி அதனை ஏற்பர்’ என்று அவளுள் ஒரு கேள்வி உண்டானது.

 

அதே சமயம் அதுவரை, ‘வசுந்தரா எப்படி இந்த சூழலை கையாள்கிறாள்!’ என்ற ஆர்வத்தில் அவளை அமைதியாக பார்த்திருந்த துருவன்,  தன் தொண்டையை செறுமி பேசலானான்.

 

“மகரர் தோழர்களே! உங்களின் வேதனை புரிகிறது. ஆனால் பரி தூதுவர் வன்னிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது நம் கடமை. குறைந்த பட்சம் உங்களின் பிணி தன்மை அறியவாவது அவருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.

எனக்கு பரி தூதுவர் மீது நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. அதனால்… தாங்கள் இப்படி கலங்க வேண்டாம். விடியலே இல்லை என்றவிதத்தில் இருந்த நமக்கு ஒரு புள்ளியாகவெனினும் ஒளி தெரியும் போது, அதனையும் கைக்கொண்டு மறைத்துக் கொள்வது அறிவீனம் அல்லவா.” என்றான்.

 

இப்படி மாறி மாறி வசுந்தராவும், துருவனும் பேசியதை கேட்டதும், அறையிலிருந்தவர்கள் ஒருவாறு சமாதனம் அடைந்தனர். பின்,அனைவரும் ஒருசேர, “தாங்கள் சொல்வதும் சரிதான் இளவரசே! இவ்வளவு நாட்களில் நம்பிக்கை இன்மை அதிகரித்ததில் நாங்க இப்படி நடந்துக் கொண்டுவிட்டோம்.

 

பரி தூதுவர் வன்னியும், எங்களை மன்னிக்க வேண்டும். எங்களின் பிணி நிலையை அறிந்து எங்களுக்கு உதவ வந்திருக்கும் தங்களிடம் நாங்க இப்படி நம்பிக்கையற்று பேசியிருக்க கூடாது.” என்றனர்.

 

வன்னி அவளை அழைத்து மன்னிப்பு கேட்டதில், உடனே முன்பு சோர்ந்த முகம் மாறி லேசான புன்னகடையுடன், “பரவாயில்லை மகரர்களே! எனக்கு தங்களின் கவலையும் வேதனையும் ஒழுங்காக தெரியவில்லை.  ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.

 

பரி அரசிற்கு 15 வருடத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட நோய் கிருமி மாதிரியும், தங்களின் உடலில் தற்போதுள்ள கிருமி மாதிரியும் ஒன்றென்றால் என் மருந்தால் 100% குணப்படுத்த முடியும்.” என்று தீர்க்கமான குரலில் நம்பிக்கை தந்தாள்.

 

வன்னியின் குழந்தையும், குமரியுமாக பேசிய வன்னியின் தெளிந்த பேச்சில், அறையில் உள்ள அனைவருமே, அசந்து போயினர். அப்படி அவர்கள் வியந்து பார்த்திருக்கும் போதே வன்னி, “இளவரசே! என் பரிசோதனையை துவங்க தங்களின் அனுமதி வேண்டும்!” என்று கேட்டாள்.

 

துருவனுக்கு வன்னியின் செயலால் இனம்புரியாத பெருமிதம் உண்டானது. “பரி தூதுவருக்கு என் அனுமதிகள்.” என்றான். அவன் சொல்லி முடிக்குமுன்னே கிளுக்கிச் சிரித்த வன்னி, ஆர்வமுடன் துள்ளி குதித்துக் கொண்டு அந்த அறையின் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த மகர தோழியின் அருகில் சென்றாள்.

 

துருவன் என்ன சொல்வதென்று புரியாமல் வன்னியை பார்த்து புன்னகைத்து செல்லம் பாராட்டும் பார்வையுடன், மறுப்பதுப் போல தலையசைத்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தான்.

அறையிலிருந்த அனைவரும், “!!!”.

 

ஒரு நொடி, விராங்கனை போல பேசியதும், மறுநொடி குழந்தை போல கிளுக்கி சிரித்ததும்,  பின் விடலைப் பெண் போல துள்ளி குதித்ததும், பார்த்த அறையில் உள்ளவர்களுக்கு வன்னியின் மீது என்னவென்று கணிக்க முடியாத விந்தையை ஏற்படுத்தியதை அவள் உணரவில்லை.

 

காரியமே நோக்காக, வன்னி, “மகர தோழியே! தங்களின் நாடியை பார்க்க வேண்டும். தங்களையின் கை மணிக்கட்டை தொடவும், தங்களின் இதய வேர் வரை என் ஆன்மீக விளிப்பை(spritual consciousness) செலுத்தவும், தங்களின் அனுமதி வேண்டும்.” என்று கேட்டாள்.

 

என்ன ஏதென்று முழுதும் உணருமுன்னே, எதிர் பாராமல் தன் அருகில் அழகிய பொண்வண்டு போல ரிங்கரித்து, தன்னிடம் அனுமதி கேட்டு நின்ற, வன்னியைப் பார்த்ததும், அந்த மகர தோழி ஒரு நொடி என்னவென்று புரியாமல் பேந்த பேந்த விழித்தாள்.

 

அருகிலிருந்த மற்றொரு மகரர், “தோழி வீராலி, தங்களின் கையை நீட்டுங்கள். என்ன யோசனை?” என்று உந்துதல் தரவே அவள் சுய நினைவு வந்தாள்.

 

வன்னி கேட்டதை உணர்ந்து, “அ… ச…சரி பரி தூதுவரே!” என்று தன் கையை நீட்டினார் அந்த மகர தோழி.

 

இதனை பார்த்த துருவனின் இதழ்கள் மேலும் விரிந்தது. ‘நிச்சயம் இவளை போல ஒரு தங்கை வேண்டும். தந்தைதாயிடம் என் ஏக்கத்தை உடனே சொல்ல வேண்டும்.’ என்று ஏக்க பெருமூச்சு விட்டு , வன்னியை பார்த்தான்.

 

அப்போது வசுந்தராவும் வன்னியை பார்த்தாள். அதனை தொடர்ந்து அவளையும் அறியாமல் துருவனையும் பார்த்தாள். அறைக்கு வந்திலிருந்து அவ்வப்போது துருவனை பார்த்த வசுந்தரா, பல நாட்களுக்குப் பிறகு கண்ட துருவனின் புன்னகையில் சில நொடி மெய் மறந்தாள்.

 

துருவன் அவள் பார்வை உணர்ந்து வசுந்தராவின்புரம் திரும்ப, சட்டென அவள் முகத்தை வேறுபுரம் திருப்பிக் கொண்டாள். அவளது மாற்றத்தை கண்டு அவன் முகம் கருத்தது.  சில நொடி அவளை கேள்வியாக பார்த்தான்.

 

பின் காணதவன் போல, சேவகர்களிடம் திரும்பி சில அரசு அறிக்கைகளையும், மேற்பார்வை இடவேண்டிய ஆவணங்களையும் அந்த அறைக்கே கொணர்ந்து வரச் சொல்லி அங்கேயே அமர்ந்து அவற்றை சரி பார்க்க ஆரம்பித்தான்.

 

வன்னியும் ஒவ்வொருவரின் நாடிப் பிடித்து அவர்களின் நிலை குறித்து ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.

 

சில நாழிகைகளுக்குப்(1) பின்…

 

11 மகர யாளிகளையும் பரிசோதித்துவிட்டிருந்த வன்னி அவளையும் அறியாமல், “நல்ல வேளை, ஒருவருக்கும் நோய் கிருமியில் மாற்றமில்லை. இன்னும் தோழி வசுந்தராவையும் பரிசோதித்துவிட்டால்…” என்று முனுமுனுத்து, எதையோ யோசிப்பவள் போல கிளுக்கி சிரித்தாள்.

 

பின் தொடர்ந்து, “இன்றே இவர்களுக்கு மருந்தளித்துவிட்டு, நாளை முகிலனையும் மதியை பார்க்க போய்விடலாம்.” என்று சத்தமிட்டு சொல்லி சிரித்துக் கொண்டு வசுந்தராவிடம் சென்றாள்.

 

இதை கேட்ட அறையில் உள்ள அனைவரும், “0_0”.

 

வன்னியின் வார்த்தைகள் துருவனின் செவியிலும் விழுந்தது. துருவன், ‘பரி இளவரசி வன்னி, தன் சிநேகிதர்கள் மீதுள்ள அன்பை காண்பித்து, அவளறியாமல், தான் இளவரசி என்பதை எல்லோருக்கும் சொல்லிவிடுவார் போல.

 

இப்படி வெகுளியாக இருப்பதால்தானோ என்னமோ! பரி அரசு வன்னியை பொத்தி பாதுகாக்கிறது. அதற்கு மேலும், இந்த இரு நிழற்காவலர்கள், ஒரு நொடிக் கூட வன்னியை தன் விழி மறைவிலிருந்து அகல விடவில்லை.’ என்று நினைத்தான்.

 

இருந்தும் வன்னியை காண்பித்துக் கொடுக்காமல், தன் அறிக்கை மேற்பார்வையில் கவனமாக இருப்பது போல் தலையை நிமிர்த்தாமல் உதட்டில் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

 

கூடவே, ‘கடைசியாக வசுக்கு மட்டும்தான் பரிசோதிக்க வேண்டும்.’ என்று வன்னி சொன்னது மனதில் பதிய, வசுந்தராவிடம் தன் கவனத்தைச் செலுத்தினான்.

 

வன்னி வசுந்தராவை பார்த்து, “தோழி வசுந்தரா. தங்களின் கையை தாருங்கள்.” என்று கேட்டாள். ஆனால் வசுந்தரா தன் இரு கைகளையும் பிசைந்த வண்ணம் வன்னியை நிமிர்ந்து பார்த்தாளே தவிர, தன் கரத்தை வன்னியிடம் தரவில்லை.

 

வன்னி, “?_? மகர தோழர் வசுந்தரா?” என்று மீண்டும் கேள்வியாக விளித்தாள்.

 

வசுந்தரா, “அ..அங்…பரி தூதுவரே!. அ…அது…” என்று தடுமாறினாள். கூடவே ஓர கண்ணில் அந்த அறையின் அடுத்த மூலையில் அமர்ந்திருந்த துருவனை பார்த்தாள்.

 

துருவன் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிக் கொண்டதும், “பரி தூதுவரே! எ…எனக்கு. என்… என் இதய வேர் பார்க்க, என்னால் தங்களை, அனுமதிக்க முடியாது.” என்றாள் மெல்லிய குரலில்.

 

சாதாரணமாக என்றால் வசுந்தராவின் வார்த்தை யாருக்கும் கேட்டிருக்காது. ஆனால் அவர்களின் பேச்சை கவனிக்கும் சக்கரம் மூலம் கவனிதிருந்த துருவனுக்கு அவளது மறுப்பு நன்றாக கேட்டது.

 

வசுந்தராவின் மறுப்பை எதிர்பாராத துருவனுக்கு லேசான அதிர்ச்சி ஏற்பட்து. அவனையும் அறியாமல் அவன் பற்றியிருந்த எழுதுகோள் ஒரு நொடி நின்று, மீண்டும் எழுத ஆரம்பித்து. அதே சமயம் அவனது, தலை நிமிரவில்லை.

 

வன்னி வசுவின் வார்த்தையில், ஒரு நொடி ஆச்சரியமுடன் விழி விரித்து அவளை பார்த்தாள். ‘உயிர் கொல்லி பிணியுடன் இருக்கும் வசுந்தரா, இதயவேர் காண என்னை அனுமதிக்க ஏன் இப்படி தயங்க வேண்டும்.?

அப்படி, இவரின் இதய வேர் நுணுக்கம் அறிந்து, நான் என்ன இவரை கொல்லவா போகிறேன்! பிணி தீர்க்க மருந்துடன் வந்திருக்கும் என் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லையா?’ என்று நினைத்த வன்னியின் முகம் சுருங்கியது.

 

சிறுப்பிள்ளை வன்னியின் முகம் வாடுவதை பார்த்து வசுந்தராவின் மனமும் வருந்தியது. அதற்கு மேல், ‘துருவன் முன் தன் இரகசியம் வெளிப்பட்டு விடுமோ!’ என்ற அச்சம் மேலோங்க,

 

அவசரமாக, “தூதுவரே! தவறாக என்ன வேண்டாம். விராட்டு மலைச் சென்று வந்ததிலிருந்து என்னாலுமே என் இதய வேர்க்குள் போக முடியவில்லை. அதனால்தான்…” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

 

வன்னி புரியாமல் வசுந்தராவை பார்த்தாள். வன்னி எதுவும் கேட்கும் முன்னே, “எனக்கு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. என்னால் என் இதய வேர் இரத்தத்தை எடுத்து தரவியலும். அதனை கொண்டு பொறுமையாக பரி சோதித்து என்னை குணப்படுத்தினால் போதும்.” என்றாள் வசுந்தரா.

 

இவ்வளவு கூறிய பிறகு வன்னியும் அவளை வற்புறுத்தவில்லை. “சரி தோழி! பிணி தீர்ப்பதின் அவசரம் கருதியும், நான் அதிக நேரம் மகர அரசில் இருக்க முடியாது என்ற சூழல் கருதியும்தான் நான் இரத்த பரிசோதனையின்றி, நேரடையாக இதய வேர் பரிசோதனைச் செய்தேன்.

 

இரத்த பரிசோதனை மூலிகைகள் மூலம் செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை தங்களின் பரிசோதனையின் தீர்வு வர, எனக்கு மகர அரசில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமானால், தாங்கள் பரி அரசுக்கு வந்து மருந்துப் பெற்று செல்ல நேரிடும். பரவாயில்லையா?” என்று கேட்டாள் வன்னி.

 

ஒருவழியாக வன்னி தன்னை வற்புறுத்தாதை எண்ணி வசுந்தரா பெருமூச்சுவிட்டாள். “பரவாயில்லை தூதுவரே! என் இதய வேரால் தங்களுக்கு ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டுவிடுமோ என்றுதான் அஞ்சி அவ்வாறு சொன்னேன்.” என்றாள்.

 

வன்னி, வசுந்தராவின் விளக்கத்தில் அவள் நல்மனம் உணர்ந்து, முகம் மலர்ந்து, “கவலை வேண்டாம் தோழி. எனக்கு புரிகிறது. எப்படியும் என் சீடர் தோழர்களை காண நான் சில நாட்கள் வெளியில் செல்வேன்.

 

அதற்குள் முடிவு தெரிந்தால் நான் மருந்து தந்துவிட்டு போகிறேன். ஆனால் தங்களின் உடலில் இருக்கும் கிருமியின் நிலை மாறியிருந்தால், நான் மீண்டும் வேறு மருந்துதான் கண்டுப்பிடிக்க நேரும்.

 

அப்படி நேர்ந்தால், என்னால் இங்கிருந்து மருந்து கண்டறிய காலம் இருக்காது. பரி அரசுக்கு சென்று, அங்குதான் மருந்து கண்டுப்பிடிக்க நேரிடம். அதனால்தான் யோசித்தேன்.” என்று தன்னிலை விளக்கம் தந்தாள் வன்னி.

 

பிறகு அவளே, “அப்படி நிகழ வாய்ப்பிருக்காது. மற்ற அனைவரின் நோய் கிருமியிலும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் தங்களுக்கும் மாற்று கிருமி இருக்காது.” என்று கிளுக்கிச் சிரித்தாள்.

 

வன்னியின் புன்னகையில் வசுந்தராவின் மனமும் லேசானது. உண்மை அவளுக்கு தெரிந்த போதும், சிறுப்பெண்ணின் நம்பிக்கையை உடைக்க விரும்பாமல், “ஆமாம். அப்படிதான் இருக்க வேண்டும் தூதுவரே!” என்று புன்னகைத்தாள்.

 

அப்போது சரியாக முகம் உயர்த்தி வன்னியை பார்த்த துருவன், வசுந்தராவையும் பார்த்தான். வசுந்தரா அவன் பார்ப்பதை உணர்ந்ததும், அவள் விரிந்த இதழ், மூடி, புன்னகை மறைந்தது.

 

இந்த மாறுதலை உணராத வன்னி, துள்ளி குதித்துக் கொண்டு துருவனிடம் பரிசோதனை முடிவுகளை சொல்ல ஆரம்பித்தாள். ஏற்கனவே வசுந்தராவும் வன்னியும் பேசியதை கேட்டதால் வன்னியிடம் அவசியமற்று எந்த கேள்வியையும் துருவன் கேட்கவில்லை.

 

இரத்த பரிசோதனை செய்ய, கண்ணாடி குப்பிகளையும், மூலிகைகளையும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டான் துருவன். வன்னி கேட்பதையெல்லம் தர ஆணையிட்டுவிட்டு, தனக்கு வேறு வேலை இருப்பதால், சில நாழிகைகள் கழித்து வருவதாக சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

 

துருவன் தன்னிடம் விளக்கம் கேட்க கூடுமென்று அதற்கு பதில் யோசித்து வைத்திருந்த வசுந்தரா ஏமாந்துதான் போனால் போலும். துருவன் அவளை கண்டுக் கொள்ளாதது மட்டுமல்லாமல், அங்கிருந்தும் சென்றுவிட்டான்.

 

அவன் கிளம்பியதை நினைத்து நிம்மதியடைவதா அல்லது துருவனுக்கு தன் மீது இனி அக்கறையில்லை என்று வருந்துவதா? என்று வசுந்தராவிற்கு புரியவில்லை. ஏக்கமாக அவன் சென்ற திக்கையே சில நொடிகள் பார்த்தாள்.

 

வசுந்தரா மருந்து உட்கொள்ளாதால் வன்னிக்கு உதவியாக அவளுடனே இருந்தாள்.  வன்னியின் வேண்டுக்கோள்படி மின்னல் வேகத்தில் 11 மகரர்களுக்கு தனித்தனி அறைகள்  ஒதுக்கப்பட்டது.

 

ஒவ்வொரு மகரர்கள் கையிலும் 5 சக்கர அளவேனும் கொண்ட சேமிக்கப்பட்ட மந்திரமாணிக்க கல்(2) கொடுக்கப்பட்டது. ‘என்ன நாம் குணமடைய போகிறோமா?’ என்று ஆச்சரிய படக்கூட நேரம் அளிக்காமல் வன்னி, ஒவ்வொரு மகரர்களையும், விரட்டு விரட்டு என விரட்டி மருந்தையும் உட்க்கொள்ள வைத்தாள்.

 

பின் அவர்களின் உடலில் ஆன்மீக விளிப்பை செலுத்தி, ஆன்மீக இதய வேரில் ஏற்பட்டிருந்த பாதிப்பு குணமாகிறதா என்று பரிசோதிக்க ஆரம்பித்தாள்.

 

வன்னி பரிசோதிக்கும் முன்பே மருந்து உட்கொண்ட 11 நபர்களும் அவர்களின் இதயவேரில் மாற்றத்தை உணர்ந்தனர். செயலற்று பல நாட்கள் இருந்த இதய வேர், அப்போது மெதுவாக அவர்கள் கையிலிருக்கும் மந்திரகல்லிருந்து ஆன்மீக ஆற்றலை உறிஞ்சுவதை ஆச்சரியமுடன் உணர்ந்தனர்.

 

சிலர் , ‘நான் உயிர் வாழ போகிறேன்!’ என்ற உண்மை உணர்ந்து, ஆனந்த மிகுதியில் கண் கலங்கினர். ஒருவர் தவறாமல், வன்னிக்கு நன்றி கூறினர்.

 

முதலில் சோதனை எலியா என்று கேட்ட மகர், சிறுப்பெண் என்று வன்னியை சந்தேகித்து கேட்டதையும் மறந்து, வன்னியின் முன் மண்டியிட்டு, “பரி தூதுவரே! தங்களால் குணமான இந்த உடலும் உயிரும் தங்களுக்கே!

 

தாங்கள் எந்த நேரத்தில் எந்த உதவி கேட்டாலும் சிரம் மீது அதைக்கொண்டு நிறைவேற்றுவேன். இது உறுதி. நன்றி தூதுவரே!”  என்று மனம் நெகிழ்ந்து சொன்னர்.

 

இதனை கேட்ட வன்னிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கிளுக்கி சிரித்து, “தாங்கள் குணமடைவதே, தாங்கள் எனக்கு செய்யும் கைமாறு. கவலையில்லாமல், தங்களின் தியானத்தை தொடங்குகள். 3-7 நாட்களில் தங்களின் இதய வேர் புற்று முழுதும் குணமடைந்துவிடும்.”  என்று சொன்னாள்.

 

வன்னியின் புன்னகையை பார்த்தவாரே, “உத்தரவு தூதுவரே!” என்று கண்ணீருடனே புன்னகைத்து, அந்த மகரர் தியானத்தில் ஆழ்ந்தார்.

 

இவ்வாறு மூன்று மகரர்கள் தியானத்தில் ஆழ்ந்திவிட்டப் அந்த நேரத்தில், வசுந்தராவின் மனதுள் ஒரு நெருடல் உண்டானது. யாரோ வன்னியை நோட்டமிடுவது போன்ற உள்ளுணர்வு வசுந்தராவுள் ஏற்பட ஆரம்பித்து.

 

‘இந்த உணர்வு’ என்று யோசித்த வசுந்தரா, உடனே முகம் வியர்த்தாள். ‘இ…இது அந்த  விராட்டு மலையில் உணர்ந்த அதே உணர்வு.! இதெப்படி இங்கு வந்தது’ என்று அதிர்ச்சியுற்றாள்.

 

மனதுள் படப்படப்புடன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்த வசுந்தராவின் விழிகள் ஓரிடத்தில் பட்டு மின்னலிட்டு மீண்டது. நொடியும் தாமதிக்காமல், “பரி தூதுவரே! நான் ஒருவேலையாக வெளியில் செல்ல வேண்டும்.

 

ஓரிரு நாழிகையில் வருகிறேன். அதுவரை எது வேண்டுமென்றாலும் அருகில் இருக்கும் சேவகியிடம் கேளுங்கள்.” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

 

வன்னி, நாளை முகிலனையும் மதியையும் பார்க்கும் ஆர்வத்தில் இருந்ததால், வசுந்த்ராவிடம் தெரிந்த மாற்றத்தை கவனிக்கவில்லை. வசுந்தரா பேசியதற்கு அரை கவனமாக, “சரிங்க தோழி வசுந்தரா.” என்றாளே ஒழிய அவளை சரியாக பார்க்கவும் இல்லை.

Author Note:

(1) : 24நிமிடங்கள் = 1 நாழிகை

(2)

Advertisement