யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ!! – 65.1

1780

அத்தியாயம் – 65

 

அங்கிருந்து 5 நாழிகைக்குள் நம்மால் மூன்றாம் மலையின் மாணிக்கபுள்ளிக்குச் செல்ல இயலும். இப்போது கிளம்பினால் நிச்சயம் நள்ளிரவிற்குள் அங்குச் சென்றுவிடமுடியும்.” என்றான் நந்தன்.

 

வன்னி அவன் சொன்னதை கவனித்த போதும், அவளுள் இருந்த கேள்வியை மறக்காமல், தலை தாழ்த்தி, “ஏன் என்னுடன் வர நினைக்கிறீங்க?” என்று உதடுகளை பற்களால் கடித்து கேட்டாள்.

 

நந்தன், “…”

 

வன்னி நிமிர்ந்து நந்தனை பார்த்தாள். இருவரும் எதுவும் பேசாமல் சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நந்தன் அவனை கட்டுக்குள் கொள்ள முடியாமல், தன் கையை உயர்த்தி வன்னியின் தலையை இதமாக வருடினான்.

 

“இளவரசி. தங்கள் மனம் நான் அறிவேன். என்னை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம். தங்களுடன் வந்தால் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று தானே பயபடுகிறீர்கள். ஆனால் அதற்கு அவசியமில்லை.

 

ஒவ்வொரு மலையின் மாணிக்கப் புள்ளியும் (Jade point) எனக்கு நன்கு தெரியும். நான் தங்களுடன் வந்தால், என்னால் என்னை மட்டுமல்ல, தங்களையும் பாதுகாக்க முடியும்.

 

அங்கே ஆபத்திருக்க வாய்ப்பிருக்குமோ இல்லையோ என்னால் தங்களை தனியாக அங்கு அனுப்ப இயலாது.” என்று திடமான குரலில் சொல்லி மென்னகைத்தான்..

 

வன்னி அவளது மான் விழி விரித்து நந்தனது விழிகளை பார்த்தாள். நந்தனின் புன்னகையை பார்த்தோ என்னமோ, அவளது உதடுகளும் தளர்ந்து சிறிய புன்னகையாக விரிந்தது.

 

தன் தலை மீதிருக்கும் அவனது கையை எடுத்து, “சரி நந்தன். போகலாம்.” என்று கிளுக்கி சிரித்து எழுந்து நின்றாள். நந்தனும் அவளுடன் எழுந்து நின்று அவளை பார்த்து சின்னச் சிரிப்பை உதிர்த்தான்.

 

இருவரும் அந்த குகையில் வாயிலை அடைந்தனர். இருண்டு விட்டிருந்த போதும், இருவரும் யாளிகள் என்பதால் இரவில் தெளிவாக பார்க்க முடிந்தது. வெளியில் இன்னமும் மழை தூரல் போட்டுக் கொண்டிருந்தது.

 

“நந்தன் நாம் பாதுகாப்பு சக்கரத்தையும், பறக்கும் சக்கரத்தையும் கொண்டு முதல் மலையில் உள்ள மாணிக்கப் புள்ளிக்குச் சென்று விடலாம். மழை நிற்கும் வரை காத்திருந்தால் காலத் தாமதமாகிவிடும்.” என்றாள்.

 

நந்தன், “இளவரசி சொல்வது போல் செய்வோம்.” என்றான் மென்னகையுடன்.

 

“ம்ம்…” என்ற வன்னி கண்கள் மூடி மந்திரம் சொல்லி வெள்ளை நிற ஒளி புள்ளிகளாக வட்ட வடிவ பறக்கும் சக்கரத்தை தன் காலின் கீழ் உருவாக்கினாள்.

 

பின் நந்தனிடம் திரும்பி, “நந்தன். என் அருகில் வந்து நில்லுங்க. நான் தங்களை பறக்கும் சக்கரத்திலிருந்து கீழே விழுந்துவிடாமல் பிடித்துக் கொள்கிறேன்.” என்றாள்.

 

அவளது வார்தையில் நந்தன் ஒரு நொடி ஸ்தம்பித்து, பின் இயல்பாகி வன்னியின் அருகில் வந்து நின்றான்.

 

தன்னை விடவும் அரை அடிக்கும் மேலாக உயரமாக இருந்த நந்தனின் இடை பற்றிக் கொள்ள நினைத்தவள், அது அவள் கைக்குள் அடங்காமல் போக, அவனை நிமிர்ந்து பார்த்து முகம் சுழித்தாள்.

 

‘இவ்வளவு உயரமாக இருந்தால், மகர குட்டி நீதான் என்னை பற்றிக் கொள்ள வேண்டி இருக்கும்.’ என்று முனுமுனுத்து அவனை பார்த்து முறைத்தாள் “@_@”.

 

நந்தனுக்கு அவளது அதிருப்தி புரிய சின்ன சிரிப்பை உதிர்த்து, வன்னியின் பின் வந்து, அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டு, “இளவரசி. தாங்களது பக்காவாட்டில் இருந்து பறந்தால் எனக்கு பயமாக இருக்கும் போல் இருக்கிறது.

 

நான் இப்படி பின்னிருந்து தங்களை பற்றிக் கொள்ளட்டுமா? எனக்கு உயரமென்றால் மிகவும் பயம். இப்படி தங்களை பிடித்துக் கொண்டால் எனக்கு தைரியமாக இருக்கும்.’(1) என்று பொய்யாக பயம் இருப்பது போல் நடித்தான்.

 

பாவம் வன்னிக்கு னந்தனின் நடிப்பு புரியாமல், “ஓ… பயபடாதே மகர குட்டி. நான் பத்திரமாக தங்களை அழைத்துச் செல்கிறேன். என்னை விடாமல் இறுக பற்றிக் கொள்.” என்றாள்.

 

நந்தன், “^_^”.

 

வன்னி அவர்கள் இருவரை சுற்றி பாதுகாப்பு சக்கரத்தை உருவாக்கி அங்கிருந்து பறக்க ஆரம்பித்தாள்.

 

நந்தனும் அவள் சொன்னதற்கு ஏற்ப வன்னியின் இடையை இறுக பற்றிக் கொண்டான். வன்னியின் மனம் புரிந்து, நந்தனாகதான் அவளை அணைக்க யோசித்து அப்படி செய்தான்.

 

ஆனால், அப்போதுதான் பருவம் அடைந்திருக்கும் நந்தன், அவனுக்கு மிகவும் பிடித்த இளவரசியை அணைத்ததிருப்பதால் ஏற்படும் இதயம் படபடப்பை மறந்து போனான். அவனையும் அறியாமல் அவனது காது மடல் லேசாக சிவந்து.

 

கண்கள் மூடி வன்னியின் தலை மீது தன் முகவாயை லேசாக வைத்து மெய் மறந்தான். இதை எதையும் உணராத வன்னி , நந்தன் முன்பு சொன்ன திசையில் பறந்தாள்.

 

ஓரிரு நிமிடத்தில்,“நந்தன் நாம் பறக்கும் பாதை சரிதானே! முதல் மலையின் மாணிக்கப்புள்ளிக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது.” என்று கேட்டாள். வன்னியின் குர்ல கேட்ட பிறகுதான் கனவிலிருந்து மீண்டவன் போல திடுக்கிட்டு விழித்தான் நந்தன்.

 

வன்னியை இறுக பற்றியிருந்த கையை அவசரமாக தளர்த்தி, “இ…இளவரசி. அந்த மரத்தின் அருகில் இடப்புரம் திரும்பி, நேராக ஒரு காத தூரம் பறந்தால் முதல் மாணிக்கப்புள்ளியை அடைந்து விடுவோம்.” என்றான்.

 

“ம்ம்.. சரி.” என்றவள் நந்தன் தன்னை விடுவது போல் உணர, “நந்தன் என்னை இறுக பற்றிக் கொள்ளுங்க. விழுந்து விடாதீங்க.” என்று லேசாக விலகிய அவனது கைகளை தன் வயிற்றின் மீது வைத்து மேலும் இறுக்க பற்றிக் கொண்டாள்.

 

நந்தன், “-_-“. (2)

 

நந்தனை அதிக நேரம் தவிக்க விடாமல், அந்த குட்டி பயணம் விரைவிலே முடிந்தது. வன்னி மெதுவாக பறக்கும் சக்கரத்தை தரை இறக்கினாள். பின் நந்தனை திரும்பி பார்த்தாள்.

 

நந்தன், “இளவரசி, என் கையை பற்றிக் கொள்ளுங்கள்.” என்று வன்னியை நோக்கி கையை நீட்டினான். வன்னியும், “ம்ம்…” என்று அவனது கையை பற்றினாள்.

 

நந்தன் அதிகம் பேசாமல் முன்னோக்கி நடந்தான். சில அடிகள் நடந்த பிறகு மழை தூரல் இருந்த இடம் நொடியில் மாறியது. இரு நிலவுகள் பிறை நிலவாக தெரிய, வானம் மேகங்கள் அதிகமில்லாமல் தெளிவாக தெரிந்தது.

 

வன்னி, “ஒரு காத தூரத்திற்கு, மந்திர பூட்டு சக்கரமும்(Locking Array) பாதுகாப்பு சக்கரமும்(Defense Array) போட்டிருப்பர் போலவே!” என்று வியந்து வானை ஒரு முறை பார்த்தாள்.

 

நந்தன், “இது என்ன சக்கரம் என்று எனக்கு தெரியாது இளவரசி. ஆனால் இந்த ணிக்க புள்ளி இருக்கும் இடத்தின் சூழ் நிலை, எப்போதுமே வெளியில் இருக்கும் இடத்திற்கு மாறு பட்டதாக இருக்கும்.” என்று சொல்லியவிதமாக மேலும் நடந்தான்.

 

வன்னி, “ஓ…0_0”. என்றாள்.

 

சில மரங்களையும், புதர்களையும் கடந்த பிறகு, வன்னியை எதிர்பாராத விதமாக தன் இரு கைகளிலும் ஏந்தி, எதிரில் ஆழம் தெரியாத கிணற்று பள்ளம் போல் தெரிந்த இடத்தில் தாவி குதித்தான்.

 

வன்னி என்ன ஏது என்று உணருமுன்னே அவர்களை சுற்றி இருள் கவ்வியது. வன்னி அன்னிச்சை செயலாக, நந்தனின் கழுத்து வளைவில் மாலையாக தன் கைகளை போட்டுக் கொண்டு, “நந்தன்?” என்று கேள்வியாக புரியாமல் கேட்டாள்.

 

“இளவரசி, ஷ்…” என்று கீசு கீசு குரலில் அவளது காதருகில் சொல்லி, அவளது முகத்தை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். மேலும் பேச எண்ணிய வன்னியின் உதடுகள் நந்தனின் மார்பு சட்டையால் மூடிக் கொண்டது.

 

வன்னியும் நந்தன் அமைதியாக இருக்க சொல்வதற்கு காரணம் இருக்கும் என்று எண்ணி அமைதியானாள். சில நொடிகள் போல் தோன்றிய அந்த இருள் பயணம் இரு நாழிகையில் முடிந்தது.

 

மீண்டும் நந்தன் வன்னியை தரை இறக்கிய போது, அவர்கள் ஒரு சிறிய மண் குன்றின் மேல் நின்றிருந்தனர். “இளவரசி, இரண்டாம் மலைக்கு வந்துவிட்டோம்.” என்று மெல்லிய குரலில் சொன்னான்.

 

வன்னி திரும்பி நந்தனை பார்த்து, “@_@” முறைத்தாள். “நந்தன் என்ன செய்ய போகிறீர்கள் என்று என்னிடம் முதலிலே சொல்லுங்க. திடீரென்று என்னை தூக்கிக் கொண்டு குழியில் குதித்தால் நான் என்ன நினைப்பது?” என்று உதடு பிதுக்கி சொன்னாள்.

 

“இளவரசி, நாம் மூன்றாம் மலையின் மாணிக்கப்புள்ளி போன பிறகு, நான் விளக்கம் சொல்கிறேன். அதுவரை தாங்கள் என்னை முழுதும் நம்ப வேண்டும். நாம் பறக்கும் சக்கரத்தில் வரும் போதே சிலவற்றை சொல்ல நினைத்தேன்.

 

ஆனால் ஏதோ கவன சிதறலில் மறந்துவிட்டேன். ஆனால் நான் என் இளவரசிக்கு சங்கடம் தரும்படியான சூழலுக்கு, தெரிந்தே அழைத்துச் செல்ல மாட்டேன். அதனோடு நான் சொல்லும் வரை எதுவும் பேச வேண்டாம்.” என்று மென்னகையிட்டான்.

 

வன்னி அவனது பதிலில், லேசான கோபமுடன் சில நொடி முறைத்து பார்த்தாள். ஆனால் அவளையும் அறியாமல் வசியம் போல் நந்தனின் புன்னகை மெதுவாக அவளது உதடுகளில் தொற்றி மலர, “சரி. நம்புகிறேன்” என்றாள்.

 

அதே சமயம் மனதுள், ‘எப்படிதான் இப்படி மென்னகையிட்டு மென்னகையிட்டு என்னையும் அறியாமல் என்னை புன்னகைக்க வைக்கிறதோ இந்த மகர குட்டி. ஆனால் எனக்கும் இந்த மகர குட்டியை மிகவும் பிடித்திருக்கிறது.’ என்று நினைத்து கிளுக்கி சிரித்தாள்.

 

நந்தன் வன்னியின் எண்ணம் அறியாமல், அவளது கிளுக்கிய சிரிப்பில் அவள் இயல்பானதை உணர்ந்து பெருமூச்சுவிட்டான். பின் மீண்டும் வன்னியின் கைப்பற்றி அந்த காரிருளில், மெதுவாக அந்த மண் குவியலின் உச்சியிலிருந்து கீழிறங்கி வந்தான்.

 

முன்பு போல் தீர்க்கமாக ஓரிடத்தை நோக்கி செல்லாமல் நந்தன், சில முறை போன இடத்திற்கே மீண்டும் மீண்டும் நடந்து சென்றான். அதை பார்த்த வன்னி, இடமாற்றும் சக்கரத்தை மறந்தவன் போல் தேடுவதாக உணர்ந்தாள்.

 

இருந்தும் எதுவும் பேசினாள் இல்லை. ஓரிரு நிமிடம் போல் இரண்டு நாழிகைகள் அந்த இரண்டாம் மலைமாணிக்க புள்ளியின் இரண்டு காத தூரத்தில் அலைந்து திரிந்தனர்.

 

கடைசியாக ஓரிடத்தில் நந்தனின் நடையின் வேகம் குறைந்தது. வன்னியிடம் திரும்பி அவளை பார்த்து, அவள் உதடின் மீது அவனது விரலை வைத்து, “ஷ்…” என்று சைகை செய்தான்.

 

வன்னி வியந்து அவனை விழித்தாள். பின் சரி என்பது போல் தலையசைத்தாள். அவள் தலையசைப்பதற்கு முன்பே நந்தன் அவளை கைகளில் ஏந்தி, சாதாரண புல் தரை போல் இருந்த இடத்தில் எம்பி குதித்தான்.

 

‘என்ன செய்கிறது இந்த மகர குட்டி. பள்ளத்தில் குதிப்பது போல் தரையிலே குதிக்கிறதே!’ என்று வன்னி யோசிக்கும் முன் அவர்களை சுற்றி காரிருள் சூழ்ந்தது.

 

நந்தன் வன்னியை தன் மார்போடு அணைத்து கொண்டான்.  அவன் நெஞ்சிற்கு அருகில் அவள் காது இருக்க, அவனது இதயம் பல மடங்கு வேகமாக துடிப்பதை அவள் செவிகள் கேட்டது.

 

‘எதனால் நந்தன் இப்படி பயபடுகிறான்.? ஏன் அவனது இதயம் இப்படி துடிக்கிறது?’ என்று அவளுமே திகிலடைந்தாள். சுமார் மூன்று நாழிகை கழிந்த பிறகு, மூன்றாம் மலையின் மாணிக்க புள்ளியை இருவரும் அடைந்தனர்.

 

வன்னியை தரையில் இறக்கிய நந்தன், “இளவரசி நாம் மூன்றாம் மலையின் மாணிக்க புள்ளிக்கு வந்துவிட்டோம். “ என்றான். இரண்டாம் மலையை போல இப்போதும் ஒரு மண் குவியலின் மீதுதான் நின்றிருந்தனர்.

 

வன்னி வானை பார்த்து என்ன நேரம் என்று கணித்தாள். பின், “நல்ல வேளை நல்லிரவிற்குள் வந்துவிட்டோம்.” என்று பெருமூச்சுவிட்டாள்.

 

பின் நந்தனிடம் திரும்பி, “நன்றி நந்தன். தாங்கள் இல்லை என்றால், இன்றைக்குள் நான் எப்படி இங்கு வந்திருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை.” என்றாள்.

 

நந்தன் எதுவும் பேசுமுன்னே சட்டென நினைவு வந்தவளாக, அவனை குறுகுறுவென “@_@” பார்த்து முறைத்தாள். அவனை பேசவிடாமல்

 

தொடர்ந்து, “இப்போது சொல்லுங்க. ஏன் முன்பு என்னை பேச வேண்டாம் என்றீர்கள். அதனோடு, என்னை தூக்கிக் கொண்டுதான் இடமாற்றும் சக்கரத்தில் செல்ல வேண்டிய அவசியமென்ன?” என்று நேரடையாக கேட்டாள் வன்னி.

 

நந்தன் வன்னியின் மான் விழியை பார்த்து சின்ன சிரிப்பை உதிர்த்தான். பின் “இளவரசி. அந்த இயற்கையால் ஆன இடமாற்றும் சக்கரத்திற்கு ஆன்மீக விளிப்புணர்வு (Spritual Conscious) இருக்கிறது.

 

நாம் சத்தமிட்டால் அது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறிவிடும். நாம் தனி தனியே அதில் செல்ல நினைத்தால், ஒருவர் இடமாற்று சக்கரத்தை பயன்படுத்தியதும், அதன் இருப்பிடம் மாணிக்க புள்ளி பரப்பின் மறு முனைக்கு நகர்ந்துவிடும்.

 

அதனால்தான் அதை பார்த்தும் தங்களை தூக்கிக் கொண்டு நொடியும் தாமதிக்காமல் இடமாற்றும் சக்கரத்தில் நுழைந்துவிட்டேன்.

 

அதனோடு, சில சமயங்களில் இடமாற்றும் சக்கரத்தில் பயணிக்கும் போது நாம் பேசினால், நாம் அங்கிருப்பதை அது உணர்ந்து, மீண்டும் நம்மை ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு விட்டுவிடும்.

 

நல்லவேளையாக நாம் ஓரிரு வார்த்தைகள் பேசிய போதும், இடமாற்றும் சக்கரம் எந்த உபாதையும் தராமல், நம்மை இரண்டாம் மலைக்கு கொணர்ந்துவிட்டது.

 

ஆனால் தங்களிடம் சில வார்த்தைகள் நான் சொல்ல வேண்டிருந்தால், தநாம் சில நிமிடம் இரண்டாம் மலையில் பேசினாம். என்னதான் நாம் மெதுவாக பேசினாலும், அது நாம் அங்கு வந்திருப்பதை அறிந்துக் கொண்டு விட்டது.

 

அதனால் கிட்டத்தட்ட பல முறை அதன் இடத்தை மாற்றி நம்மை அலைய விட்டுவிட்டது. நல்ல வேளையாக நான் அதன் நகரும் வரிசையை (sequence) உணர்ந்து, சரியான தருணத்தில் இடமாற்றும் சக்கரத்தில் நுழைந்துவிட்டேன்.

 

அதனால்தான் தங்களிடம் முழு விளக்கம் தர இயலவில்லை.” என்று நீண்ட நெடிய விளக்கம் தந்தான்.

 

வன்னி , “0_0”.

 

வன்னியின் விரிந்த விழிகளை பார்த்து வன்னியின் தலையை லேசாக வருடினான். வன்னியின் வியப்பு புரிந்த போதும், மேலும் அதுகுறித்து பேசாமல்,  பேச்சை மாற்றுபவன் போல, “இளவரசி எனக்கு பசிக்கிறது. நாம் சப்பிட்டு பின் பயணிப்போமா?” என்று கேட்டான்.

 

வன்னிக்கு அப்போதுதான் நந்தன் இன்னும் உணவுண்ணும் யாளி என்பது நினைவு வந்தது. “சரி நந்தன். சாப்பிடலாம்.” என்றவள் சற்று நிறுத்தி, “இனி என்னிடம் சொல்லாமல் இப்படி செய்யாதீர்கள்.

 

என்ன இருந்தும் தாங்கள் இன்னும் முதல் சக்கரமும் அடையாத பலமற்ற கலப்பின யாளி. முன்பே என்னிடம் சொல்லியிருந்தால், தங்களுக்கு பதிலாக, நான் தங்களை தூக்கிக் கொண்டு இடமாற்றும் சக்கரத்தில் குதித்திருப்பேன்.” என்றாள்.

 

நந்தன் அவளது பதிலில் ஸ்தமித்து நின்றான். அவன் அப்படி நின்றிருக்கும் போதே, அவனது தோள்பட்டையை ஒன்றன் பின் ஒன்றாக தொட்டு ஆன்மீக ஆற்றலை அவன் தோள்களில் மெதுவாக செலுத்தினாள் வன்னி.

 

வன்னியை வெகு நேரம் தூக்கிய வண்ணம் இருந்ததால் வலித்து இறுகி பிடித்திருந்த தோள் தசைகள் வன்னியின் தொடுகையிலும், இதமான ஆன்மீக ஆற்றலிலும், லேசாக இளகி, இதமானது.

 

நந்தன் எதுவும் பேசாமல் பெருமூச்சுவிட்டான். பின் இருவரும் அந்த மண் குற்றிலிருந்து கீழிறங்கி, ஒரு மரத்தடியிலிருந்த , புல் தரையில் அமர்ந்தனர். நந்தன் வைத்திருந்த மர வள்ளி கிழங்கையும், வேர்கடலையையும் உண்டனர்.

 

பிறகு வரை படத்தை எடுத்து இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று வன்னி ஆராய்ந்தவள் எச்சரிக்கையானாள். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே அதில் குறிப்பிட்டிருந்த இடத்தில்தான் அமர்ந்து உணவுண்டுக் கொண்டிருந்தனர்.

 

எச்சரிக்கையுடன், தன் கைக்காப்பிலிருந்து புல்லாங்குழலை எடுத்து வாயில் வைத்தாள். ஆனால் அதற்குள் அவளை சுற்றி காரிருள் சூழ்ந்தது. வன்னி என்ன நிகழ்ந்தது என்று, பெரிதாக எதுவும் யோசிக்க வேண்டியதில்லை.

 

அவளை கனவு சக்கரத்திற்குள் அந்த முக்காடு மனிதன் இழுத்துவிட்டிருந்தான்.   வன்னி நேரடையாக, “நீ சொன்னபடி நான் இந்த வரை படத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து வந்துவிட்டேன். எங்கே படைதளபதி?” என்று கேட்டாள்.

 

முக்காடு மனிதன், “ஹா…ஹா…ஹா… பொறுமை பொறுமை. பரி இளவரசிக்கு இப்படி ஒரு விசுவாசி கிடைப்பான் என்று நான் எண்ணவில்லை. எப்படி கண்டு பிடித்தாய் இந்த கலப்பின யாளியை!” என்றவனின் குரல் வழக்கத்திற்கு மாறாக, விளையாட்டு தன்மை மறைந்து, இறுகி ஒலித்தது.

 

Author Note:

(1) – திருட்டு பூனை அதன் வேலையை ஆரம்பித்துவிட்டது.

(2) – ஹா ஹா திருட்டு தனம் பன்ன இப்படிதான் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

நந்தன்: Shut up Author.