Thursday, May 16, 2024

    Kalainthu Pogum Megame

    “என்ன சீனி சொல்ற? வாசுவுக்கு என்ன? எல்லாரையும் என்ன சொல்ல சொல்ற? பொடி வச்சு பேசாதப்பா. வெளிப்படையா சொல்லு”, என்றார் ஒரு பெரியவர்.  “சொல்றேன் சித்தப்பா, நான் இப்ப இந்த விஷயம் பேசக் கூடாது தான். ஆனா எனக்கு வேற வழி தெரியலை. ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும்னு தான்...
    அத்தியாயம் 4 நாம் இருவரின் கண்கள் உறங்கும் போது கூட காதலென்னும் கருமேகம் விழித்து தான் இருக்கிறது!!! அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையில் ஒதுங்கி அழுது கொண்டிருக்க ஊர் பெரியவர்கள் சாமி கும்பிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். அன்று முழுவதும் யாரும் ஒரு வாய் உணவை கூட உண்ண வில்லை.  சரண்யா குழந்தைகளை பார்த்துக் கொண்டாள். கோதை அனைவருக்கும் டீ போடும் வேலை...
    “சொல்லு மா, என்ன செய்யணும்?” “எனக்கு ஏதாவது ஆயிட்டா.....” “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது” “ஒரு வேளை ஏதாவது ஆயிட்டா, என்னோட மகனுக்காக நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கணும் அத்தான்” “பிரேமா”, என்று அவன் அவளை அதட்ட “என்னை திட்டாதீங்க அத்தான். என்னால எத்தனை நாள் உங்க கூட இருக்க முடியும்னு தெரியலை. அப்படி இருக்கும் போது நீங்க திட்டினா எனக்கு...
    அத்தியாயம் 3 உன்னில் என்னைத் தொலைத்த தருணங்கள் அனைத்தும் கலைந்து போன மேகங்களாகின!!! “என்ன இவன் இப்படி சொல்றான்? அப்புறம் அத்தை எதுக்கு அவ ஊருக்கு போயிருக்கான்னு சொன்னாங்க?”, என்று எண்ணிய வாசு “அவளுக்கு காச்சல் வந்ததுன்னு சொன்னாங்க டா. அதான் அப்படி இருக்கா போல? நிஜமாவே இன்னைக்கு காலைல அவளை நீ  பாத்தியா டா?”, என்று அவனிடம் போட்டு வாங்கினான்.  “நான்...
    அடுத்த நாள் காலையில் இருந்து பிரேமாவிடம் இருந்த கூச்சம் விடை பெற்றுச் சென்றிருந்தது. விடை பெற்றுச் செல்ல வைத்த பெருமை வாசுவைச் சேரும். அது அவனுக்கும் திருப்தியாக இருந்தது. இருவரும் நன்கு பேச ஆரம்பித்தார்கள்.  திருமணத்திற்கு வராதவர்கள் இன்று வீடு தேடி வந்து மணமக்களைப் பார்த்து விட்டு மொய் கொடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் வாசுவுக்கு...
    அத்தியாயம் 2 வலி கொடுத்த நீயே என் இதயத்துக்கு வலிமையாகவும் மாறியது விந்தை தான்!!! பகலவன் தன்னுடைய செங்கதிர்களை இந்த பூவுலகில் பரப்பி அழகாக உதயமானான். வாசு வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். காலை எட்டு மணிக்கு தான் முகூர்த்தம் என்பதால் பெண்ணும் மாப்பிள்ளையும் நிதானமாக கிளம்பினார்கள்.  முதலில் வாசுதேவனை மண்டபத்துக்கு அழைத்து சென்று மண மேடையில் அமர வைத்தார்கள். அவன்...
    இரவு ஒன்பது மணி.... ‘வாசுதேவன் வெட்ஸ் பிரேமா’ என்ற பெயர் பலகை நியான் விளக்குகளால் ஒளி பெற்று மின்னியது. விடிந்தால் திருமண முகூர்த்தம் என்பதால் வீட்டருகே இருந்த திருமண மண்டபத்தில் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. வாசு வீட்டிலும் சீரியல் விளக்குகள் மின்னின.  மகனுக்கு திருமணம் என்னும் போது பல வேலைகள் சீனிவாசனுக்கு குமிந்திருந்தன. ஆனால்...
    அத்தியாயம் 1 நான் உன்னிடம் சொல்லாத வார்த்தைகள் அனைத்தும் கலைந்து போன மேகங்களாகும்!!! திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் அமைந்திருந்த பூஞ்சோலை என்ற கிராமம். பெயருக்கு ஏற்றார் போல பூத்துக் குலுங்கும் சோலை தான் அந்த கிராமம். பல வகையான பழ மரங்களும், மூலிகை மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன.  விவசாயம் அங்கே செழித்திருந்தது. வயலில் வேலை செய்யும் போது அடிக்கடி வரும் குற்றாலச்...
    error: Content is protected !!