Chathriya Vendhan
சத்ரிய வேந்தன் - 23 – ஆலமர மண்டபம்
சந்திர நாட்டின் அரசபையில் வீற்றிருந்த மந்திர பெருமக்களும், உயர் அதிகாரிகளும், தலைமை குருவும் மிகுந்த கலக்கத்தோடு இருந்தனர். நேற்றைய முன்தினம் தான் பட்டாபிஷேகம் முடிந்திருந்தது, அதற்குள்ளாக மன்னரின் நிலை தெரியவில்லை எனில் கலங்காமல் யாரால் இருக்க முடியும்.
'நாடு எங்கே சதிகாரர்களின் கைக்கு போய்விடுமோ? இல்லை நாட்டினை...
சத்ரிய வேந்தன் - 21 – உதவிக்கரம்
பகல் பொழுதினில் விழிகளால் உணர முடியா விண்மீன்களையும், நிலவையும் இரவு புலர்ந்ததும் உணர முடிதல் போன்று, இத்தனை நேரமும் சமுத்திராவின் கூடவே இருந்தபொழுது உணர முடியா ஒரு இனம்புரியா உணர்வை, பிரிவு நெருங்குகையில் ரூபனரின் மனம் உணர்ந்து கொண்டு தவித்தது.
ஏனோ சமுத்திராவுடன் இருக்கும் இந்த நேரம் நீள...
சத்ரிய வேந்தன் - 04 – பெண் மயில்
விருந்தினர் மாளிகையில் அனைத்து விருந்தினர்களுக்கும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலவகை இனிப்பு வகைகள், நவதானிய உணவு வகைகள், பலவகையான பழ வகைகள் என்று அறுசுவையாக விருந்து படைக்கப்பட்டிருந்தது.
"என்ன அண்ணா யாரையோ தேடுகிறீர்கள் போல..." என்ற சமுத்திராவின் குரலில், அவள் புறம் தீட்சண்யர் தமது பார்வையை...
சத்ரிய வேந்தன் - 7 – யுத்த களம்
ரூபனர் தமது படை வீரர்களுக்கு வில் எய்தும் பயிற்சி, வாள் வீச்சு என அனைத்து பயிற்சிகளையும் நுணுக்கமாக கற்றுக் கொடுத்திருந்தார். வீரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியினை மிகுந்த ஈடுபாட்டோடு கற்றுக் கொண்டு அவர்களின் தரத்தை நன்கு முன்னேற்றியிருந்தனர்.
ரூபனர், விஜயபுரி நகரத்தின் படை வீரர்களை, தான் எண்ணியதை...
சத்ரிய வேந்தன் - 24 – பகைமை படையினர்
சந்திர நாட்டின் மேற்கு பகுதியில் சில மலைக்குன்றுகள் இருந்தது. நாடு முழுவதும் விவசாயம் செழித்திருக்க, பல வயல்களையும் வரப்புகளையும் தாண்டி, புதர்கள் அடர்ந்த பகுதிகளைத் தாண்டி மலைக்குன்றுகள் இருந்தது.
பொதுவாக அந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சந்திர நாட்டு மக்கள் வயல் வரப்புகளைத்...
சத்ரிய வேந்தன் - 5 – மற்போர்
கிழக்கு முகம் சிவக்க தொடங்கும் முன்பு, அரண்மனை எங்கும் சூழ்ந்த இருட்டினில் ஆங்காங்கே எரியும் தீபங்கள் அழகாய் சுடர்விட, அரண்மனையே பொன்னிறத்தில் பேரழகாக ஜொலித்தது.
அரண்மனையின் பின்புறத்தில் சில மாளிகைகளைக் கடந்து இருக்கும் குதிரை இலாயத்திலிருந்து, செறிந்த பிடரி மயிரினை உடைய நான்கு வலிமையான குதிரைகளை, அழைத்துக் கொண்டு...
சத்ரிய வேந்தன் - 26 – அரண்மனை சீரமைப்பு
உற்றவன் நீயே
உணரா பொழுது,
நீ உணரும் முன்பு
பிறரிடம் என்ன சொல்வேன்?
உன் விழிகளால்
என் உயிர் பருகுகின்றாய்…
உன் மென்னகையால்
வசியம் செய்தாய்…
நடமாடும் பதுமையானேன்!
உன் நினைவுகளினால்…
அந்தி மாலை வேளையில் நள்ளிருள்நாறி மலர்கள் மலர்ந்து மனம் வீசி, அந்த தோட்டம் முழுவதும் இதமான நறுமணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. இளவரசி சமுத்திர தேவிகை நள்ளிருள்நாறி மரத்தின் கீழே அமர்ந்தவாறு அந்த மலர்களை கைகளில் ஏந்தியபடி அமர்ந்திருந்தாள். இளம் பச்சை வர்ணத்தில் நீளமான காம்புகளுடன், மிக...
சத்ரிய வேந்தன் - 30 – ரூபனர் வருகை
என் விழி அரும்புகளை
முழுவதுமாய் மலரச் செய்கிறது
உன் திருமுகம்…
மலர்ந்த விழிகளை
மீண்டும் அரும்பச் செய்கிறது
உன் பார்வை...
மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதருக்கும், வேங்கை நாட்டின் இளவரசி தோகையினிக்கும் திருமண ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வந்தது. திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட மருத சக்ரவர்த்தி வீரேந்திர மருதருக்கு முழு திருப்தியாக இருந்தது.
வீரேந்திர மருதர் தீட்சண்யருடனும், முதன் மந்திரியாருடனும் திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். முதன் மந்திரியார்தான்...
சத்ரிய வேந்தன் - 11 – கனா கண்டேன்
இன்றைய அதிகாலை சொப்பணம்
என் பிணி தீர்க்கும் மருந்தாய்...
உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்...
என் விழி தேடும் வரமாய்...
நிலவின் ஆக்கிரமிப்பு முடியப்போகும் பின்னிரவு நேரத்தினில், செவ்விதழ்கள் இளமுறுவல் புரிய, ஏதோ ஒரு இனிய சொப்பணத்தில் தன்னையே மறந்து லயித்திருந்தாள் தோகையினி.
அவள் மெய் மறந்து உறங்கி, பல நாட்கள் ஆனது. இன்று அவளுடைய மெய் மட்டுமின்றி, உலகத்தையும் மறந்த உறக்க நிலையை அடைந்திருந்தாள். அவளுடைய...
சத்ரிய வேந்தன் - 6 – ஜீவசுடர் நதி
மருத தேசத்தின் கீழே இயங்கும், மேற்கு மலைத்தொடர்களை ஒட்டியுள்ள, மன்னர் வேலவர் ஆளும் விஜயபுரி நாட்டினை வளம் கொழிக்க செய்து கொண்டிருந்தது, அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்திருந்த மலைத்தொடர்களில் இருந்து பாயும் ஜீவசுடர் நதி.
ஜீவசுடர் நதி, என்றுமே தன் ஜீவனை இழக்காமல் ஓடும் அதியற்புதமான...
சத்ரிய வேந்தன் - 18 – சிவவனம்
எதிலிருந்தோ தப்பிப்பதாய்
மனம் எண்ணுகிறது…
விதி உன்னை நோக்கி
என்னை பயணிக்க வைப்பதை
என்று உணரும்…
மருத தேசத்து அந்தப்புர மாளிகையில் உணவருந்தி முடித்துவிட்டு, வானத்து நிலவையே வெறித்து பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் மருத தேசத்து இளவரசி சமுத்திர தேவிகை. நிலவின் ஒளி பூமகள் மேனியில் பட்டு, அவள் வதனத்தை மேலும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது.
“என்ன இளவரசி! சரியாக உணவருந்தவில்லை. கொண்டு வந்த பாலையும்...
சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன்
மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள், ஆங்காங்கே கிடைத்த மரக்கிளைகளை கொண்டு நெருப்பு மூட்டியிருந்தனர்.
ஆற்றங்கரையின் அருகினில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் இரண்டு கூடாரங்களை நடுநாயகமாக அமைத்து, அதனை...
சத்ரிய வேந்தன் - 19 – காட்டாறு
கரைபுரண்டு ஓடும் காட்டாறு
கன்னியவளை அழைத்துச் செல்வது…
கானகம் நடுவினுலும்
துணை நிற்கும்
வீரனைக் காட்டிடவே...
சிவவனம் மிகவும் அடர்ந்த வனம். அந்த வனத்தின் உட்பகுதிகள் பெரும்பாலும் மனிதக் கால்தடம் படாத பகுதிகளே ஆகும். ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், பலவகை செடி கொடிகள், ஆபத்தான விலங்குகள், இதுவரை கண்டிராத பறவை இனங்கள், சூரிய ஒளியை உள்ளே அனுமதிக்காத அளவு அடர்ந்து வளர்ந்த மரங்கள் என...
சத்ரிய வேந்தன் - 27 – எதிர்பாரா வரம்
இரவு வேளைகளில் நிலவொளி நீ…
அதிகாலையின் இளங்கதிர்கள் நீ…
நீரோட்டத்தில் வென்நுரைகள் நீ…
தோட்டம்தனில் வண்ண மலர்கள் நீ…
என் வாழ்வில் யாவுமாய் நீ…
அதிகாலை சூரியன் கிழக்கில் உதித்திருக்க, தமது குதிரையில் மருத தேசம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரூபன சத்ரியர், வலதுபுறம் ஓடிய ஆற்றின் சலசலப்பில் தனது கவனத்தை பதிக்க, அதன் அழகில் குதிரையின் வேகத்தை குறைத்தார்.
ஆற்று நீர் கொலுசொலிகளின் கீதங்களை ஒன்றிணைத்தது போல சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்க, அதிகாலை...
சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள்
மாதவமோ! யாகமோ!
பிரார்த்தனைகளோ! வேண்டுதல்களோ!
என்ன செய்தேன் நினைவில்லை…
எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை…
இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்...
அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக் கொண்டிருந்தாள் சமுத்திர தேவிகை.
சமுத்திராவைக் காண இளவரசி தோகையினியும், அவருடன் சேயோனின் மனைவி வருணதேவியும் விருந்தினர் அறைக்கு வந்தனர். அதிகாலை ஆதவனின்...
சத்ரிய வேந்தன் - 17 – பட்டாபிஷேக விழா
முரசொலி விண்ணை முட்ட …
மக்கள் மனதின் மகிழ்வு
முகத்தில் பிரதிபலிக்க …
வண்ண வண்ண மலர்களாலும்,
மஞ்சள் வண்ண அட்சதையாலும்,
சபையோர்கள் வாழ்த்த…
சத்ரிய வம்ச
மூதாதையர்களின் ஆசியோடும் …
சந்திர நாட்டினை
ஆண்ட மன்னர்களின் ஆசியோடும் …
அதர்மத்தை அழித்து …
தர்மத்தை நிலைநாட்டும் …
சிறந்த தலைவனாய்
பார் போற்றும் வேந்தனாய் …
முடி சூடுவாய் மாவீரனே!
சந்திர நாடு தமது துயர் களைந்து, துளிர்த்து எழும் தருணமாய் அமைந்தது ரூபனரின் பட்டாபிஷேக விழா. சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்திரின் இழப்பு ஈடு செய்ய இயலாத பெரும் துயரம்தான். இருப்பினும் அவர் இரண்டு ஆண்டுகளாக படுக்கையில் பட்ட துயரத்தினை எண்ணிப்பார்க்கையில், மன்னரின் இழப்பினை...
சத்ரிய வேந்தன் - 13 – வீராதி வீரன்
உன் பாவங்களை
மன்னரும், மற்றவர்களும்
அறியாமல் செய்வதால்
நீ தப்பிக்கொள்ளலாம்
என எண்ணினாயா?
கடவுள் காணா
பிழையா???
உன்னை வதம் செய்ய…
உன் பாவக்கணக்கைத்
தீர்க்க…
உன் கர்வத்தை
தவிடு பொடியாக்க…
உன்னை நோக்கி
ஆயுதம் எரிந்துவிட்டான்…
நீ அழியும்
காலம் வெகு
தொலைவில் இல்லை…
இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள் கூட தீண்டிடாத ஆழ்ந்த உறக்கம் கொண்டவருக்கு முகமும், உள்ளமும் மிகுந்த மலர்ச்சியாய் இருந்தது. அதே புத்துணர்வோடு அந்த நாளினைத் தொடங்கினான்.
அவர்...
சத்ரிய வேந்தன் - 28 – மருத கோட்டை
ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது.
அவனைக் கொல்லும் அளவு அன்றைய மற்போர் சென்றுவிட்டதற்கு ரூபனர் ஒருபொழுதும் வருந்தியதில்லை. அதிலும், அவனைப் பற்றிய விவரங்களும், உண்மையும் தெரிந்தபிறகு வருத்தம் கொள்வதற்கு எந்த...
சத்ரிய வேந்தன் - 8 – பிரயாணம்
மாலை மங்கும் வேளை, ஆதவன் தனது பொன்னிறக் கதிர்களை செந்நிறமாக்கி, கீழ்வானத்தின் மீதும் அந்த செம்மை நிறத்தினை தெளித்து, அந்த பொழுதினை மிகவும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தான். வேங்கை நாட்டின் அரண்மனையில் அமைந்திருந்த மலர் தோட்டத்தின் மலர்கள் எல்லாம் அந்த பொன்மாலைப் பொழுதினில் மலர்ந்து மனம் வீசிக் கொண்டிருந்தது.
இத்தனை...
சத்ரிய வேந்தன் - 10 – வீரம் போற்றல்
விஜயபுரி நகரம், எத்தனை இன்னல்களைக் கடந்தாலும் தன் எழிலில் சற்றும் குறைவின்றி அன்றலர்ந்த மலர் போன்று இருந்தது. வெள்ள பாதிப்புகளும், ஆறு மாத காலமாக போருக்காக காத்திருந்து நடைபெற்ற கடும் போரும், அந்த போரின் தாக்கங்களும் கண்களுக்கு புலப்படாத அளவு, ஒரு வித மாயையை அந்த...