Chathriya Vendhan
சத்ரிய வேந்தன் - 27 – எதிர்பாரா வரம்
இரவு வேளைகளில் நிலவொளி நீ…
அதிகாலையின் இளங்கதிர்கள் நீ…
நீரோட்டத்தில் வென்நுரைகள் நீ…
தோட்டம்தனில் வண்ண மலர்கள் நீ…
என் வாழ்வில் யாவுமாய் நீ…
அதிகாலை சூரியன் கிழக்கில் உதித்திருக்க, தமது குதிரையில் மருத தேசம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரூபன சத்ரியர், வலதுபுறம் ஓடிய ஆற்றின் சலசலப்பில் தனது கவனத்தை பதிக்க, அதன் அழகில் குதிரையின் வேகத்தை குறைத்தார்.
ஆற்று நீர் கொலுசொலிகளின் கீதங்களை ஒன்றிணைத்தது போல சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்க, அதிகாலை...
சத்ரிய வேந்தன் - 03 தாமரைக்குளம்
மருத கோட்டையின் நடுவினில் கம்பீரமாய் வீற்றிருந்தது மருத தேசத்தின் அரண்மனை. அரண்மனையின் முன்வாயிலில் இருந்து பார்ப்பவருக்கே அதன் பிரமாண்டம் வாயை பிளக்க வைப்பதாக இருக்கும். பலவகை மாட மாளிகைகள், பிரமாண்டமாய் வீற்றிருக்கும் அரசவை அரண்மனை, ஆங்காங்கே அமைந்திருந்த தோட்டங்கள் என பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பினில் ஆழ்த்திவிடும்.
மருத தேசத்து அரச...
சத்ரிய வேந்தன் - 18 – சிவவனம்
எதிலிருந்தோ தப்பிப்பதாய்
மனம் எண்ணுகிறது…
விதி உன்னை நோக்கி
என்னை பயணிக்க வைப்பதை
என்று உணரும்…
மருத தேசத்து அந்தப்புர மாளிகையில் உணவருந்தி முடித்துவிட்டு, வானத்து நிலவையே வெறித்து பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் மருத தேசத்து இளவரசி சமுத்திர தேவிகை. நிலவின் ஒளி பூமகள் மேனியில் பட்டு, அவள் வதனத்தை மேலும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது.
“என்ன இளவரசி! சரியாக உணவருந்தவில்லை. கொண்டு வந்த பாலையும்...
சத்ரிய வேந்தன் - 7 – யுத்த களம்
ரூபனர் தமது படை வீரர்களுக்கு வில் எய்தும் பயிற்சி, வாள் வீச்சு என அனைத்து பயிற்சிகளையும் நுணுக்கமாக கற்றுக் கொடுத்திருந்தார். வீரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியினை மிகுந்த ஈடுபாட்டோடு கற்றுக் கொண்டு அவர்களின் தரத்தை நன்கு முன்னேற்றியிருந்தனர்.
ரூபனர், விஜயபுரி நகரத்தின் படை வீரர்களை, தான் எண்ணியதை...
சத்ரிய வேந்தன் - 12 – கரடு மலை
எத்தனை பாவங்கள்
செய்தால் என்ன?
உனக்கென இழப்பு
வரும் பொழுது,
நீயும் வருந்த
வேண்டும் அன்றோ!
உன் இழப்புகளின்
வலியே உனக்கு
சாதாரணமாய்
தோன்றுகிறதென்றால்…
நீ பிறருக்கு
இழைத்த அநீதிகளின்
அளவு???
தமது உடல்நிலை ஏற்கனவே தேறி வந்த நிலையில், மார்பில் ஏற்பட்ட காயங்களுக்கான சிகிச்சை மட்டுமே சில நாட்களாக ரூபன சத்ரியர் எடுத்து வந்தார். புதிதாக மருத தேசத்திலிருந்து வந்த வைத்திய குழுக்களின்...
சத்ரிய வேந்தன் - 13 – வீராதி வீரன்
உன் பாவங்களை
மன்னரும், மற்றவர்களும்
அறியாமல் செய்வதால்
நீ தப்பிக்கொள்ளலாம்
என எண்ணினாயா?
கடவுள் காணா
பிழையா???
உன்னை வதம் செய்ய…
உன் பாவக்கணக்கைத்
தீர்க்க…
உன் கர்வத்தை
தவிடு பொடியாக்க…
உன்னை நோக்கி
ஆயுதம் எரிந்துவிட்டான்…
நீ அழியும்
காலம் வெகு
தொலைவில் இல்லை…
இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள் கூட தீண்டிடாத ஆழ்ந்த உறக்கம் கொண்டவருக்கு முகமும், உள்ளமும் மிகுந்த மலர்ச்சியாய் இருந்தது. அதே புத்துணர்வோடு அந்த நாளினைத் தொடங்கினான்.
அவர்...
சத்ரிய வேந்தன் - 04 – பெண் மயில்
விருந்தினர் மாளிகையில் அனைத்து விருந்தினர்களுக்கும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலவகை இனிப்பு வகைகள், நவதானிய உணவு வகைகள், பலவகையான பழ வகைகள் என்று அறுசுவையாக விருந்து படைக்கப்பட்டிருந்தது.
"என்ன அண்ணா யாரையோ தேடுகிறீர்கள் போல..." என்ற சமுத்திராவின் குரலில், அவள் புறம் தீட்சண்யர் தமது பார்வையை...
சத்ரிய வேந்தன் - 8 – பசலை நோய்
நின்னைச் சரணடைய தவம் புரிந்தேன்...
உன் பார்வையில் விழும் பொழுதை
நான் ரசித்தேன்...
பசலை நோய் கொண்டு வாடவிட்டாய்...
உன் நினைவுகளால் நிதமும் மூழ்கடித்தாய்...
தலைவா...
நின்னைச் சரணடைய தவம் புரிந்தேன்...
வேங்கை நாட்டின், பிரதான அரண்மனையில், வீணையை மடியினில் ஏந்தி அதனை மீட்டியபடி, தமது சிப்பி இமைகளை மூடியபடி சோகம் இழையோடிய குரலில் தோகையினி பாடிக்கொண்டிருந்தாள். பொன்னில் வெள்ளியை குழைத்து செய்த நிறத்தினில் மிளிரும் தோகையினி, பசலை நோயின் (தலைவனின் பிரிவாற்றாமை) தாக்கத்தால், தமது மேனியின் நிறம்...
சத்ரிய வேந்தன் - 23 – ஆலமர மண்டபம்
சந்திர நாட்டின் அரசபையில் வீற்றிருந்த மந்திர பெருமக்களும், உயர் அதிகாரிகளும், தலைமை குருவும் மிகுந்த கலக்கத்தோடு இருந்தனர். நேற்றைய முன்தினம் தான் பட்டாபிஷேகம் முடிந்திருந்தது, அதற்குள்ளாக மன்னரின் நிலை தெரியவில்லை எனில் கலங்காமல் யாரால் இருக்க முடியும்.
'நாடு எங்கே சதிகாரர்களின் கைக்கு போய்விடுமோ? இல்லை நாட்டினை...
சத்ரிய வேந்தன் - 29 – திருமண ஏற்பாடுகள்
உன் மதிமுகம் பார்த்தால்,
எனது இமைகள்
வேலைநிறுத்தம் செய்வதன்
காரணம் அறிவாயோ?
ரூபனரின் விழிகள் சமுத்திராவை எதிர்நோக்கி காத்திருந்தது. அவரின் மனம் தீட்சண்யரும் அவரது தாயாரும் பேசிக் கொண்டிருப்பதையே கவனித்துக் கொண்டிருந்தது.
‘ஏன் இன்று விரைவாக வந்துவிட்டாள்? வழக்கத்தை விடவும் அமைதியாகவும், பொலிவாகவும் இருப்பதற்கான காரணம் என்ன? கடந்த சில நாட்களாக முகமலர்ச்சி குறைவாக இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்?...
சத்ரிய வேந்தன் - 30 – ரூபனர் வருகை
என் விழி அரும்புகளை
முழுவதுமாய் மலரச் செய்கிறது
உன் திருமுகம்…
மலர்ந்த விழிகளை
மீண்டும் அரும்பச் செய்கிறது
உன் பார்வை...
மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதருக்கும், வேங்கை நாட்டின் இளவரசி தோகையினிக்கும் திருமண ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வந்தது. திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட மருத சக்ரவர்த்தி வீரேந்திர மருதருக்கு முழு திருப்தியாக இருந்தது.
வீரேந்திர மருதர் தீட்சண்யருடனும், முதன் மந்திரியாருடனும் திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். முதன் மந்திரியார்தான்...
சத்ரிய வேந்தன் - 16 – சத்ரிய வீரன்
சந்திர நாடு மிகவும் பழமையான, பாரம்பரியம் நிறைந்த நாடு. தென்னாற்றங்கரையோரம் கோட்டையை அமைத்து பல தலைமுறைகளாக ஆண்டு வந்தனர் சந்திர நாட்டின் மூதாதையர்கள். இதுவரை சந்ததி இல்லை என்ற நிலையே வந்திடாத நாட்டிற்கு, அருள் வேந்தருக்கு வாரிசுகள் இன்றி போகவே, இப்பொழுது இப்படி ஒரு இக்கட்டான...
சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன்
மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள், ஆங்காங்கே கிடைத்த மரக்கிளைகளை கொண்டு நெருப்பு மூட்டியிருந்தனர்.
ஆற்றங்கரையின் அருகினில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் இரண்டு கூடாரங்களை நடுநாயகமாக அமைத்து, அதனை...
சத்ரிய வேந்தன் - 14 – வெகுமதி
உன் வீரம் வான்புகழ்
அடையட்டும்…
உன் திறமையும்,
விடாமுயற்சியும்,
பொறுமையும்
உன்னை சிறந்த
தலைவனாக செதுக்க
இறைவனின் அருளும்,
ஆசியும்
என்றும் உனக்கே…
தீட்சண்ய மருதர் வேங்கை நாட்டிலிருந்து புறப்பட்டு, சந்திர நாடு நோக்கி தமது பிரயாணத்தை தொடங்கினார். மருத சக்கரவர்த்தி வீரேந்திரரின் முன்னேற்பாட்டின்படி ஒவ்வொரு நாட்டைக் கடக்கும் பொழுதிலும் அந்தந்த நாட்டின் வீரர்கள் சிலர், தீட்சண்யருடன் இணைந்து அவர்கள் நாட்டின் எல்லை வரை பயணித்தனர்.
ஏற்கனவே தங்கை சமுத்திர தேவிகையுடனும், மருத...
சத்ரிய வேந்தன் - 02 வைகாசி திருவிழா
விடியலில் மலர்ந்த மலர்களைப் போல
ஒளி வீசும் மக்களின் முகங்கள்...
தெளிந்த நீரோடையினைப் போல
நல்லுள்ளம் கொண்ட அமைச்சர்கள்...
கொலுசொலியின் கீதம் போல
சலசலத்தபடி ஓடும் வற்றாத ஜீவ நதிகள்...
பச்சை பட்டாடை உடுத்தியதைப்போல
நிறைந்திருந்த வயல்வெளிகளும், தோட்டங்களும்...
இதுவன்றோ நற்சான்று...
மருத தேசத்தின் வளத்திற்கும்,
வீரேந்திர மருதர் ஆட்சியின் சிறப்புக்கும்...
மருத தேசத்தின் கிழக்கு வாயிலிலும், வடக்கு வாயிலிலும் இருந்த கோட்டைக்கதவுகள் திசைக்கு மூன்றாக, மொத்தம் ஆறு இடங்களில் திறந்து வைக்கப் பட்டிருந்தது. ஆறு கோட்டைக்கதவுகளும் விண்ணை முட்டும் உயரத்துடனும், ஒரே நேரத்தில் அந்த வாயிலின் வழியாக முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் நுழைய ஏதுவான அகலத்துடனும் மிகவும் பிரமாண்டமாக இருந்தது.
அதிலும்...
சத்ரிய வேந்தன் - 10 – வீரம் போற்றல்
விஜயபுரி நகரம், எத்தனை இன்னல்களைக் கடந்தாலும் தன் எழிலில் சற்றும் குறைவின்றி அன்றலர்ந்த மலர் போன்று இருந்தது. வெள்ள பாதிப்புகளும், ஆறு மாத காலமாக போருக்காக காத்திருந்து நடைபெற்ற கடும் போரும், அந்த போரின் தாக்கங்களும் கண்களுக்கு புலப்படாத அளவு, ஒரு வித மாயையை அந்த...
சத்ரிய வேந்தன் - 01 விஜயபுரி வீரன்
உனது வாள் பேசும் மொழி...
உனது விழி வழி கசியும் தீர்க்கம்...
உனது மௌனத்தில் மறைந்திருக்கும் மேன்மை...
புது வரலாறு படைக்கும் வீரனே!!!
ஏகாந்தமான மாலை மங்கிய வேளையில், விஜயபுரி நகரத்து கோட்டை, தீஞ்ஜுவாலைகளால் சுடர் விட்டுக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் துணையுடன் இருளை விரட்டத் தொடங்கியிருந்தது. பௌர்ணமியை நெருங்கிய நிலவின் வெண்ணிற ஒளியும்,...
சத்ரிய வேந்தன் - 6 – ஜீவசுடர் நதி
மருத தேசத்தின் கீழே இயங்கும், மேற்கு மலைத்தொடர்களை ஒட்டியுள்ள, மன்னர் வேலவர் ஆளும் விஜயபுரி நாட்டினை வளம் கொழிக்க செய்து கொண்டிருந்தது, அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்திருந்த மலைத்தொடர்களில் இருந்து பாயும் ஜீவசுடர் நதி.
ஜீவசுடர் நதி, என்றுமே தன் ஜீவனை இழக்காமல் ஓடும் அதியற்புதமான...
சத்ரிய வேந்தன் - 5 – மற்போர்
கிழக்கு முகம் சிவக்க தொடங்கும் முன்பு, அரண்மனை எங்கும் சூழ்ந்த இருட்டினில் ஆங்காங்கே எரியும் தீபங்கள் அழகாய் சுடர்விட, அரண்மனையே பொன்னிறத்தில் பேரழகாக ஜொலித்தது.
அரண்மனையின் பின்புறத்தில் சில மாளிகைகளைக் கடந்து இருக்கும் குதிரை இலாயத்திலிருந்து, செறிந்த பிடரி மயிரினை உடைய நான்கு வலிமையான குதிரைகளை, அழைத்துக் கொண்டு...
சத்ரிய வேந்தன் - 8 – பிரயாணம்
மாலை மங்கும் வேளை, ஆதவன் தனது பொன்னிறக் கதிர்களை செந்நிறமாக்கி, கீழ்வானத்தின் மீதும் அந்த செம்மை நிறத்தினை தெளித்து, அந்த பொழுதினை மிகவும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தான். வேங்கை நாட்டின் அரண்மனையில் அமைந்திருந்த மலர் தோட்டத்தின் மலர்கள் எல்லாம் அந்த பொன்மாலைப் பொழுதினில் மலர்ந்து மனம் வீசிக் கொண்டிருந்தது.
இத்தனை...