Saturday, June 1, 2024

    மோனகீதம்

    *17* அமுதன். மூன்று முறை குழந்தையின் காதில் பெயரை உச்சரிக்க, தூக்கத்தை மாறி மாறி கலைக்கும் பெரியவர்கள் மீது கோபம் கொண்ட சின்னவன் உதடு பிதுக்கி அழுதான். வேகமாக மனைவி மகனை நெருங்கிய அருண் குழந்தை கையை பிடித்து வருட, இன்னும் சத்தத்தை கூட்டினான் சின்னவன். “பேர் வச்சாச்சே, போய் பால் கொடு. அமைதி ஆகிடுவான்.” என்று மகளை...
    “ஆப்ரேஷன் பண்ண உடம்புடி, இப்படி அழக்கூடாது. தையல் பிரிஞ்சிடும்.” என்று அவர் கனிவாய் சொல்ல, வேகமாய் முகத்தை துடைத்தவள்,  “இல்லை, நான் அழல. அத்தானுக்கு அப்புறம் என்னை புரிஞ்சிக்க யாருமே இல்லைனு நினைச்சேன் ஆனா அவங்க என்னை நல்லா புரிஞ்சி வச்சிருக்காங்க அம்மா.” என்று நிறைவாய் கூற, மகளின் முகத்தில் வழிந்த கூந்தலை ஒதுக்கி விட்டவர், “நானும்...
    என்னாச்சு என்று அருண் யோசித்து நிற்க, மீண்டும் மெளனம். சற்று நேரத்திற்கெல்லாம் வேந்தனுடன் சரளா வந்துவிட, பேரனை கொஞ்சிவிட்டே மகளிடம் நலம் விசாரித்தார் சரளா. “ம்மா, இன்னைக்கு நைட் வேற யாராவது தங்க ஏற்பாடு பண்ண முடியுமா?”  “ஏன் கல்பனா?” “அத்தைக்கு இங்க இருக்க விருப்பம் இல்லை, காலையிலேயே கிளம்பி போயிட்டாங்க.”  “ஏன் என்னாச்சு?” வேந்தன் கேள்வியாய் பார்க்க, சரளாவுக்கு...
    *16* விழித்திருந்த குழந்தையுடன் விளையாடிபடி இருந்த அருணின் அருகாமையில் நிம்மதியாய் உறங்கிய கல்பனா சட்டென கண் விழித்து அரவம் வந்த திசை நோக்கி  திரும்ப, அமைதியாய் இருந்த குழந்தை நொடி நேரத்தில் அடித்தொண்டையில் இருந்து சத்தம் எழுப்பியதில் அதிர்ந்து விழித்தான் அருண். “இப்போதான் சமத்தா இருந்தான்,” வியப்பும் பதட்டமுமாய் சொன்னவன் குழந்தையை அவளிடம் கொடுக்க, கதவை திறந்துகொண்டு...
    சற்று முன் நடந்தது இதுதான்… இரவு உணவை முடித்துவிட்டு சேகருடன் மருத்துவமனை வந்தார் தேவி. அப்போதுதான் வேலை முடித்து தம்பி மனைவி மகனை பார்க்க வந்திருந்தான் சேகர். குழந்தைக்கான உடுப்பு வாங்கி வந்திருந்தான் கையோடு. தேவியின் உதவியுடன் சிகா மகனை கையில் ஏந்திய சேகர், தம்பி சாயலில் இருக்கும் குழந்தையை மகிழ்வுடன் பார்த்து கொஞ்சினான். “சிகா ஜாடை...
    *15*  பூந்துவாலையில் சுற்றியிருந்த வெண்பஞ்சு தேகத்தை பார்க்க பார்க்க திகட்டவில்லை அருணுக்கு. குடும்பத்தினர் வரவும் குழந்தை அனைவர் கரத்திலும் மாறி மாறி வலம் வந்து இறுதியாய் பெற்றவளிடம் சென்று சேர, தேம்பலுடன் குழந்தையை இறுக்கிக்கொண்டாள் கல்பனா. அவள் காதலின் சின்னம் அவள் கரத்தினில். இவனை இப்படி கையில் ஏந்துவதற்குள் எத்தனை போராட்டம். எத்தனை இடர்களை சந்தித்திருப்பாள், இன்று...
    “இதை நான் நிறையா முறை சொல்லியிருக்கேன், ஒருத்தரை மனசார விரும்பி அவங்க திரும்ப நமக்கு கிடைக்கவே மாட்டாங்கன்னு தெரியும் போது வர விரக்தி வாழ்க்கையை வெறுக்க வச்சிரும். அது என்னை சார்ந்தவங்க யாருக்கும் வேணாம்னு தான் சொல்லுவேன். உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ தயங்காம முடிவு எடுங்க. என் சப்போர்ட் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.” “நாம...
    *14* காயத்ரி வளைகாப்புக்கு நாள் குறித்து இடமும் பார்த்து முடிவு செய்தாகிற்று என்ற தகவல் அன்று அவள் வீட்டிற்கு செல்லவும் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் காயத்ரியை கல்பனா ஏறிட, அவள் முகத்தை தூக்கி வைத்து நின்றாள். புருவம் உயர்த்தி என்னவென்பது போல் கல்பனா பார்க்க, இடவலமாய் அசைந்தது காயத்ரியின் தலை.  அம்மாவுக்கும் அவளுக்கும் ஏதாவது சண்டையாய் இருக்கும் என்று...
    “கடை திறந்ததும் இவ்ளோ வேலை இருக்கா?” மலைப்பாய் அவள் கேட்க, மெலிதாய் சிரித்தவன், “இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு.” என்றவாறே தீப்பெட்டி எடுத்து அவளிடம் நீட்டினான். நொடியில் அவளுக்கு புரிந்து போனது. கடையின் ஒரு பக்க சுவரில் இரண்டு சுவாமி படங்கள் இருக்க, அதில் ஒரு விளக்கும் இருக்கும். எப்போதும் அவள் வரும் நேரம் சுவாமி...
    *13* “எதுக்கு இங்க வந்திருக்கோம்? யாருக்கு என்ன ஆச்சு?” குழப்ப ரேகைகள் அவள் முகத்தினில் படிய, அவளை கலவரப்படுத்த விரும்பாதவன், “நீங்க ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க. மனசுல இருக்குற குழப்பத்தை இறக்கி வச்சா தெளிவு கிடைக்கும். டாக்டர் கிட்ட பேசி பாருங்க.” என்ற அருணை விழி விரித்து பார்த்தாள் கல்பனா. அவர்கள் வர வேண்டிய இடமும் வந்துவிட, அங்கிருந்த...
    பின்னோடே வழியனுப்ப வந்த சுசீலா அன்னை கையை இறுகப் பிடித்து நிறுத்தி, “என்னமா இப்படி பேசிட்ட?” “பின்ன உன்னை மாதிரி யோசிச்சிட்டே இருந்தா ஆச்சா? ஒழுங்கா பொழைக்க கத்துக்கோ. அந்த பொண்ணு எவ்வளவு நாள் இப்படியே இங்கேயே இருக்க முடியும்?” “இருந்தாலும் நீ இப்படி ஒடச்சி பேசியிருக்க கூடாது.” “கூறுகெட்டவளே, நான் பேசாம வேற யார் பேசுவா? கடைசி...
    *12* மூன்றாம் மாதம் முடிவடைந்த நிலையில் மசக்கை சற்று மட்டுப்பட்டு உடல் தெம்பாக உணர்ந்தது. ஆனால் மனமோ ஆறாத காயமாய் ஓரத்தில் எரிந்து கொண்டிருந்தது. சிகாவின் இழப்பு பூதாகரமாய் தெரியவில்லை என்றாலும் செய்யும் செயல்கள் யாவிலும் அவன் இல்லாக்குறை உணர்ந்தாள்.  குழந்தை வளர வளர அவள் எதிர்கொள்ளும் உபாதைகள் அதை மீகி குழந்தையை உணரும் போது வெளிப்படும்...
    “வாழ்த்துக்கள்.” என்று புன்னகை முகமாய் வரவேற்றான் அருண். நேற்றைக்கு முந்திய தினம் வேலைக்கு சேர்ந்து நேற்றே விடுப்பு எடுத்ததில் சங்கடம் கல்பனாவுக்கு. அதுவும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பினாள். இருந்த மனநிலையில் அழைத்து விடுப்பு சொல்லவெல்லாம்  தோன்றவில்லை. “சாரிங்க, நேத்தி ஹாஸ்பிடல் போயிட்டோம், லீவ் போட வேண்டிய சூழ்நிலை. இனி கரெக்டா வந்துடுறேன்.” “பரவாயில்லைங்க. சிகாவே திரும்ப கிடைச்சிருக்கான். அவன்...
    *11* இனிப்புகள் பரிமாறி கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியை இருகுடும்பமும் அத்தனை உவப்பாய் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிர்ச்சி, அறியாமை, கலக்கம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் கல்பனா கருவுற்றிருக்கிறாள் என்றதும். காயத்ரி விஷயத்தை வீட்டில் பகிர, கபிலன் தேவிக்கு அழைத்து சொன்னார். உடனே சேகரையும் சுசீயையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவருக்கு கல்பனா என்ன நினைப்பில் இருக்கிறாள், எங்கு தங்க விரும்புகிறாள்,...
    காலை அவன் சொல்லி சென்ற டீ கடை இரண்டாவதாய் தெரிந்தது. அங்கே சென்றவள் தனக்கென்று பன் மற்றும் டீ வாங்கிக்கொள்ள, “இனிமே ஏதாவது வேணும்னா உங்க கடை வாசல்லேந்து வாசுனு குரல் கொடுங்க, நானே எடுத்துட்டு வரேன்.” என்று புன்னகை முகமாய் அவன் சொல்ல, சரியென்று தலையாட்டினாள் கல்பனா. “அப்புறம் தினம் டீ, பன்னுக்கு காசு கொடுக்க...
    *10* “அந்த அரிசி கடையில வேலை பார்த்தா காலத்தை ஓட்ட முடியாதுனு சிகாவே வேற இடத்துக்கு மாறுனான். நீ திரும்ப அங்கேயே போக போறேன்னு நிக்குற.” எதிர்ப்புக் குரல் இரு குடும்பத்திலிருந்தும் வந்தது. அவளே கூட அருண் கடையிலிருந்து வேலையை மாற்றிக்கொள்ளும்படி சிகாவிடம் சொல்லி இருக்கிறாள் தான் ஆனால் இன்று அவள் எண்ணம் வேறு. அலைந்து திரிந்து வேலை...
    “நீ பட்டதெல்லாம் போதும்டி, நடந்த எல்லாத்தையும் மறந்துடு. அப்பாவை நல்ல இடமா பாக்க சொல்றேன், வேற கல்யாணம் கட்டிக்க. என் கண் குளிர நீ சந்தோஷமா வாழ்றதை பார்த்துட்டு கண் மூடிடுறேன்.” “ம்மா!” அழுத்தமாய், அமைதியாய் அதே சமயம் ஆக்ரோஷமான அழைப்பு.  “கஷ்டமா தான் இருக்கும். ஆனா நாளைக்கு நீ மட்டும் தனியா நிப்படி. புருஷன் இருந்தாதான்...
    *9* தன் மடியில் படுத்திருக்கும் மகளின் தலையை வருடியபடி இருந்தார் சரளா. காயத்ரி இருவருக்கும் டீ எடுத்து வந்து கொடுக்க, அதை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை இருவரும். “கல்ப்ஸ், டீ குடிடி.” காயத்ரி உசுப்ப,  “அத்தானும் இப்பிடித்தான் கூப்பிடுவாங்க காயு.” எனும்போதே உடைந்தது கல்பனாவின் குரல். வலியும் நடுக்கமுமாய் மனம் சிகாமணியின் நினைவுகளில் திண்டாடியது.  வேந்தன் மனைவியை அழுத்தமாய் பார்த்து...
    “என்கிட்ட தான் கடைசியா பேசினான். உங்களை எல்லாம் பாத்துக்க சொல்லிட்டு கண் மூடினான். அப்போ அவன் கண்ல பயம் தெரில,  எல்லாத்தையும் நான் பொறுப்பா பாத்து சரி பண்ணிடுவேன்னு நம்பிக்கை தெரிஞ்சுச்சு. என்னையும் உங்கள்ல ஒருத்தனா சேர்த்துக்கோங்க. அவன் இடத்தை கண்டிப்பா என்னால நிரப்ப முடியாது. ஆனா என் வாழ்க்கையில இருக்கிற வெற்றிடத்தை உங்களால...
    *8* மடிந்ததின் வலியை அனுபவித்தவன் அதையெல்லாம் தாண்டி முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தவன் மூச்சை முடக்கியிருந்தது அந்த விபத்து. எல்லாம் முடிந்தது என்று நினைக்கையிலேயே அருணின் கை நடுங்க, அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து சிகாவிடமிருந்து அருணை பிரித்து தனியாக அமர வைத்தனர்.  தன் உடல் முழுதும் ஈஷியிருந்த சிகாவின் இரத்தம் அருணின்...
    error: Content is protected !!