காதல் நெஞ்சில் பூகம்பம்
மகள் முகத்தில் இருந்த உற்சாகம் உடனே வற்றி விட அதை எப்படி அந்த தாயால் காண முடியும்? “சும்மா சொன்னேன் டா? உன்னை மாப்பிளை கூட அனுப்ப தான் பலகாரம் எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன். இங்க பாரு”, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்தது.
“மாப்பிள்ளை கூட போறது சரி தான். ஆனா சீக்கிரம் எங்களை...
அத்தியாயம் 18
மீண்டு செல்ல வழி
இல்லாமல் சிறை பட்டு
விட்டேன் உந்தன் காதலால்!!!
எப்போதும் சரவணன் கிளம்பி வெளியே சென்ற பின்னர் தான் வெண்மதி உடை மாற்றுவாள் என்பதால் இன்றும் தன்னுடைய ஹேன்ட்பேகை வைத்து விட்டு சமையல் அறைக்குள் சென்று இருவருக்கும் காபியை டம்ப்ளரில் ஊற்றினாள். பின் இருவருக்கும் ஒரு தட்டில் வடையை எடுத்து வைத்தாள். அப்போது அவளை...
சிறிது தூரம் சென்றதும் “நைட் நல்லா தூங்குனியா மதி?”, என்று கேட்டான் சரவணன்.
“நீங்க பேசுற வரைக்கும் தூக்கம் வரலை. அப்புறம் நல்லா தூங்கினேன்”, என்று உண்மையை அவள் அப்படியே சொல்ல “எனக்கும் தான். ஆனால் காலைல நீ இல்லாம ரூம் நல்லாவே இல்லை”, என்றான்.
பள்ளி முன்பு வண்டியை நிறுத்தியவன் அவளைப் பார்த்தான். அவன் பின்னால்...
அத்தியாயம் 17
பார்த்தவுடன் பற்றிக் கொள்வதும்
காதல் தான், பார்க்க முடியாமல்
தவிப்பதும் காதல் தான்!!!
மகள் மற்றும் மருமகன் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்ட குற்றாலம் “நாங்களே இன்னைக்கு வெண்மதியை இங்க கூட்டிட்டு வரணும்னு தான் நினைச்சோம் மாப்பிள்ளை. அதுக்குள்ள நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க? அவ மட்டும் இங்க இருக்கட்டும். நீங்க மட்டும் போய்ட்டு வாங்க”, என்று மீண்டும்...
அறைக்குள் சென்ற வெண்மதியோ விம்மி விம்மி அழுதாள். அவர்கள் சொன்னது சரி தானே என்று தான் தோன்றியது. முதலில் நிர்மல் இறந்தது, அதற்கு பிறகு சரவணனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது, அனைத்துக்கும் அவள் தான் காரணம் என்று முடிவு கட்டிக் கொண்டாள்.
ஆறுதல் சொல்ல யாருமில்லாத தனிமை ஒரு அழுத்ததைக் கொடுக்க அதை கண்ணீரால் கரைக்க முயன்றாள்....
“சரி டி”, என்று கிளம்ப ஆரம்பித்தாள் வெண்மதி. பூர்ணிமா மருந்து சீட்டை தேடி எடுத்துக் கொண்டு கீழே வந்தவள் கணவனிடம் விஷயத்தைச் சொல்ல அவனுக்கு நண்பனை நினைத்து தலை வேதனையாக இருந்தது.
வெண்மதி கிளம்பி வெளியே வர எப்போதுமே அவளைப் பார்த்து ரசிக்கும் சரவணன் அன்று அவள் புறம் திரும்பவே இல்லை. அவன் பார்த்த காட்சி...
அத்தியாயம் 16
மூச்சை நிறுத்திச் செல்,
இல்லையென்றால் என் தாகம்
தணித்துச் செல் பெண்ணே!!!
“ஒரு நிமிஷம் இரு மதி”, என்று சொன்னவன் அவளது ஒரு காலைத் தூக்கி அவன் மடியில் வைத்துக் கொள்ள அதிர்ந்து போனவள் “ஏன் இப்படி பண்ணுறீங்க?”, என்று காலை உருவிக் கொண்டு அவன் அருகே அமர்ந்தாள்.
“காலை நீட்டு மதி”
“எதுக்கு இப்படி பண்ணுறீங்க? முதல்ல நீங்க...
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் படுத்து விட அவன் மீண்டும் எழுந்து விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டான். அவனுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்றால் எதற்காக இந்த விலகல் என்று குழம்பிப் போனவளுக்கு அவனிடம் போர்வை கேட்க வேண்டும் என்றும் நினைவில் இல்லை. தன்னுடைய பேகில் இருந்து போர்வையை எடுக்க வேண்டும் என்றும்...
அத்தியாயம் 15
புதுமலராய் அவளும்
நுண் வண்டாய் நானும்
காதலாய் தேனும்!!!
வெண்மதி அமைதியாக வரவும் “மதி”, என்று அழைத்தான் சரவணன்.
மதி என்று உருகிய குரலில் அவன் அழைத்ததும் “ஆன்”, என்ற படி அவனைப் பார்த்தாள்.
“நாம இப்ப பாத்தோமே, அவர் யாருன்னு உனக்கு தெரியுமா?”, என்று சரவணன் கேட்டதும் “தெரியும்”, என்று சொல்லி அவனையே அதிர வைத்தாள் வெண்மதி.
“தெரியுமா?”, என்று...
அவள் தயங்கி வாசலில் நிற்பதைப் பார்த்த சரவணன் “ஏய் மதி, வா வா, முதல் முறையா என்னோட ரூமுக்கு வந்திருக்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் முதலா என்னோட ரூமுக்கு வர என்னோட பொண்டாட்டியை வருக வருக என வரவேற்கிறேன்”, என்று சிறு சிரிப்புடன் வரவேற்க அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது. அவள்...
“ஆமா வெண்மதி, உன் மனசுல எந்த சங்கடமும் வேண்டாம், தயக்கமும் வேண்டாம். நீ எடுத்துருக்குற முடிவு சரியானது தான். மனசுல எந்த சஞ்சலமும் இல்லாம உன் வாழ்க்கையை ஆரம்பி. எங்க ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு இருக்கும் டா”, என்றார் சுந்தர்.
அவர்களின் பெருந்தன்மையைக் கண்டு முதன் முதலாக நிர்மலை நினைத்து ஏங்கி ஏங்கி அழுதாள் வெண்மதி....
“என்னது நண்பனா? இவன் என் கிட்ட நடந்துக்கிட்டது எனக்கு பிடிக்கலையா?”, என்று திகைத்து நின்றாள் வெண்மதி.
வெளியே சென்ற சரவணன் “எனக்கு வெண்மதியை ரொம்ப பிடிச்சிருக்கு. சீக்கிரம் எங்க கல்யாணத்தை வைங்க”, என்று வெற்றிவேலிடம் சொல்ல அனைவரும் சந்தோஷப் பட்டார்கள்.
அதற்கு பின் அனைவரும் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்க சங்கடமான முக பாவத்துடன் அங்கே வந்தாள்...
அத்தியாயம் 14
உயிர் வரை தாக்கத்தை
ஏற்படுத்துமோ உந்தன் வாசனை?!!!
வெண்மதியைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் பார்வையில் இருந்த உணர்வுக்கு என்ன அர்த்தம் புரிய வில்லை. அவள் உதடுகள் அவனிடம் எதுவோ பேச துடித்தது.
அவள் பார்வையில் இருந்த ஏக்கத்தைக் கண்டவனுக்கு அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அந்த துடிக்கும் இதழ்களை முத்தமிட்டு அதன் துடிப்பை...
அப்போது அவன் கண்களும் அந்த பேப்பரில் நிலைக்க அதை விரித்துப் பார்த்தவன் ஆனந்தமாக அதிர்ந்து போனான். தான் எந்த அளவுக்கு அவள் மனதில் பதிந்திருந்தால் இப்படி தன்னை வரைந்திருப்பாள் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது .
கண்களில் கண்ணீரும் உதட்டில் உறைந்த புன்னகையுமாக அவன் அதைப் பார்க்க பூர்ணிமாவும் சந்தோஷமாக அவனைப் பார்த்தாள்.
அப்போது தான் தங்கை...
அத்தியாயம் 13
நெஞ்செங்கும் நுண் பூகம்பத்தை
உணர்ந்தேன் உந்தன் அருகில்!!!
அவனை அப்படிப் பார்க்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது. என்னால தான் இவனுக்கு இப்படி ஆச்சோ என்று அவள் உள் மனம் பயம் கொண்டது. கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. மெதுவாக அவன் முகம் நோக்கி குனிந்தவள் அவனுடைய நெற்றியில் தன்னுடைய இதழைப் பதித்தாள்.
இதற்கு மேல் இங்கே இருந்தால் ஏங்கி...
மூவருமே உயிருக்கு போராடிக் கொண்டிருக்க வெளியே இருந்தவர்களின் நெஞ்சம் திக் திக்கென்று தான் அடித்தது. பூர்ணிமா வேறு அழுத படி இருக்க “சரவணனுக்கும் வெண்மதிக்கும் ஒண்ணும் ஆகாது பூர்ணி. உன் வயித்துல குழந்தை இருக்கு டா. இப்ப நீ அழக் கூடாது”, என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த செந்தில் கண்களும் கலங்கித் தான்...
“தென்கலம் பஸ் அப்பவே போயிருச்சே சார்?”, என்றான் சரவணன்.
“போச்சா? பாப்பா இன்னைக்கு லேட்டா தான் ஸ்கூல்க்கு போவா போல? சரி நீ எங்கப்பா கிளம்பிட்ட?”
“டவுனுக்கு போறேன் சார்”
“அப்படின்னா வெண்மதியை ஸ்கூல்ல இறக்கி விட்டுறியாப்பா?”, என்று அவர் கேட்டதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் வெண்மதி. அவனுக்கும் அதிர்ச்சி தான். அது மட்டுமில்லாமல் அவள் அதிர்ச்சியை வேறு...
அத்தியாயம் 12
வலி தரும் வார்த்தைகளை
வீசிச் செல்வது ஏனடி சகியே?!!!
விசாலத்துக்கும் அதிர்ச்சி தான். ஆனால் அது ஆனந்த அதிர்ச்சி. அவர்களின் மகள் வாழ்க்கையில் விடிவுகாலம் வந்து விட்டதா? இருவர் முகமும் மலர்ந்து போனது.
“ரெண்டு பேரும் வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை இழந்துட்டு நிக்குறாங்க. ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. கல்யாணம் ரெண்டாவதுன்னாலும் உங்க பொண்ணும் மாப்பிள்ளை...
வீட்டுக்கு சென்ற மூர்த்தி முதலில் வெற்றிவேலிடம் பேசுவோம் என்று எண்ணி அவரை போனில் அழைத்தார்.
“சொல்லுங்க மச்சான்”, என்றார் வெற்றிவேல்.
“ஒரு விஷயம் பேசணும் மாப்பிள்ளை. ஆனா ஒரு தடவை செஞ்ச தப்பால அதை உரிமையா பேச முடியலை”
“நடந்ததுல நீங்க என்ன செய்வீங்க மச்சான்? எல்லாம் விதி. எங்க யாருக்கும் உங்க மேல எந்த வருத்தமும் கோபமும்...
அத்தியாயம் 11
எந்தன் விழித்திரையில்
நீ விழும் நேரமே
எந்தன் வசந்த காலம்!!!
அவன் உள்ளே சென்றதும் “உக்காரு பா. வீட்டம்மா ஊருக்கு போயிருக்கா. உனக்கு டீ போடவா?”, என்று கேட்டார்.
“அதெல்லாம் வேண்டாம்”, என்று சொன்னவனின் கண்களில் விழுந்தது ஆனந்தின் புகைப்படம்.
மாலை போட்டு பொட்டு வைத்து ஊதுபத்தி ஏற்றி வைக்கப் பட்டிருந்தது. அந்த புகைப்படத்துக்குள் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தான். சரவணனை...