Raaja Bavani
இராஜ பவனி 18
விடிந்தால் தனஞ்செயன்.. அனுபமா திருமணம். ஊரில் பாடல்கள் , சீரியல் லைட், வாழை மர தோரணங்கள் என்று கல்யாண களை கட்டியிருந்தது. பெரிய ஊர் என்பதால் ஆங்காங்கு பாடல்கள் ஒலித்தது.
குருமூர்த்தி இருக்கும் இடத்தில் சாமி பாடல் என்றால், அன்பழகன் இருக்கும் இடத்தில் பழைய பாடல்கள். அதை தவிர்த்து மற்ற இடங்களில் குத்து...
“ஆனாலும் உனக்கும், அந்த அன்பழகனுக்கும் எவ்வளவு ஏத்தம் பாரு, நான்.. நான் வந்து அவன் வீடேறி பொண்ணு கேட்கணும்ன்னு என்கிட்ட எதிர்பார்க்கிறீங்க..?” காந்தினார் மனிதர்.
“அவரோட சொந்த பந்தங்களுக்காக அவர் பார்க்கிறார், அங்க யாரும் ஒத்துக்கல..” என்றான் மகன்.
“எப்படி ஒத்துக்குவாங்க, எல்லாம் முறை தெரிஞ்சவங்க, அவங்கவங்க இனத்துக்கு கட்டுப்பட்டவங்க, உங்களை மாதிரியா..?” அவர் பொரிந்தார். தனா ...
இராஜ பவனி 17
குகன் வாய் மேல் கை வைத்து அமர்ந்திருக்க, வீட்டில் அமைதிக்கெல்லாம் அமைதி. பெண்கள் மூவரும் மற்றவர் முகம் பார்க்க, தனா முகம் பார்க்க என்று இருந்தனர். தனா கண்களோ குகனை கொலை வெறியுடன் முறைத்து கொண்டிருந்தது.
குகன் முகத்திலோ அடக்கப்பட்ட சிரிப்பு. எப்போது வேண்டுமானலும் வெடித்து சிரித்து விடுவேன் என்று தன்னை தானே...
“என் உழைப்புக்கு சம்பளம் கொடுக்கட்டும், அதோடு இவருக்கு நான் ஏன் சும்மா உழைக்க வேண்டும்..?” என்ற கோவமும் உள்ளுக்குள். இவ்வளவு என்று கேட்டே வாங்கினான்.
ஆனாலும் உள்ளுக்குள் அடுத்து என்ன என்று ஓட தான் செய்தது. குருமூர்த்தியிடமே இருக்கும் எண்ணமில்லை. சில காலம் பொறுத்தவன், கையில் கொஞ்சம் பணம் சேர்த்து, வைதேகியின் நகை, கூட லோன்...
இராஜ பவனி 16
“என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன், வந்துட்ட..” குகன் கிண்டலாக சொல்லி சிரிக்க,
“போய் வேலையை பாரு, போடா..” அவன் தோள் தட்டிய தனா, கடை வாசலில் தலை கோதி நின்றான். கண்கள் ரோட்டையே பார்க்க, முகம் தாராளமாக மலர்ந்திருந்தது.
சில நொடிகள் கடக்க, பொறுக்கவில்லை காதலனுக்கு, “இன்னும் என்ன பண்றா..?” நேரம் பார்த்தான். தூரத்தில்...
“ஏன் இங்கன்னா உருப்படியா போய் சேர மாட்டோம்ன்னு பயமா..?” அவன் சீண்டினான்.
அதை புரிந்து கொண்ட தனா, “ஏன் கேட்டுக்கு வெளியேன்னா உனக்கு பயமா..? இல்லை தானே, அப்போ வெளியே போய் இரு, நான் இவர்கிட்ட பேசிட்டு வரேன்..” என்றான்.
“என்னடா விட்டா பேசிட்டே போற..? உன் அப்பன் என்ன பெரிய இவனா..? அந்த ஆள் மகன்...
இராஜ பவனி 15
“குகன்.. கடைக்கு கிளம்பாத, வீட்லே இரு, நாங்க இப்போ வரோம்..” தனா போன் செய்து சொன்னவன், வைதேகியிடம் வந்தான்.
அவர் மிகவும் கலவரத்துடன் மகனை பார்த்திருந்தார். “ம்மா.. ஏன் இவ்வளவு பயம்..?” அவர் கை பிடித்து கொண்ட மகன் கேட்டான்.
“பயப்படாம எப்படி இருக்க தனா..? இந்த விஷயம் உங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு...
“ஆமா.. நீங்க தானே இப்போ கேட்டீங்க உங்க தம்பி தானே எங்களுக்கு அப்பான்னு, அப்போ எங்களுக்கு கொடுக்கிறது அவர் கடமை தானே, சட்டமும் அது தான் தெரியும் இல்லை, ஆஹ்.. இதை பத்தி உங்களுக்கு போய் சொல்றேன் பாருங்க, அந்த காலத்திலே என் தாத்தாகிட்ட சண்டை போட்டு சொத்து வாங்கிட்டு போனவங்க தானே நீங்க..?”
“என்னடா...
இராஜ பவனி 14
“இன்னும் என்னம்மா பண்றீங்க..? டைம் ஆச்சு..” தனா அவசரப்படுத்த,
வைதேகி “நானும் வரணுமா தனா..?” கேட்டு நின்றார்.
“வராம..? இங்க என்ன செய்ய போறீங்க..? கிளம்புங்க, கிளம்புங்க..” என்றான் மகன்.
“இல்லை தனா, கடையில வந்து நான் என்ன பண்ண..? எனக்கு என்ன தெரியும்..?” அவர் தயங்கினார்.
“நான் மட்டும் எல்லாம் தெரிஞ்சா அவ்வளவு பெரிய...
“டேய் என் தகுதியை பத்தி பேசுற ஆம்பிளையாடா நீ..? உன் ஒழுக்கம் கொடி கட்டி பறக்குது.. ஊருக்கு நடுவுல என்..”
“ஆமா.. ஆமா.. இவர் பார்வையில நான் ஒழுக்கம் இல்லாதவன் தான், எனக்கான பொண்ணை நான் தேடிகிட்டவன் தான், இவர் மரியாதையை ஊர் நடுவுல கெடுத்தவன் தான், ஆனா என் தங்கச்சி அப்படி இல்லை தானே,...
இராஜ பவனி 13
அன்றிரவு குகனின் வீட்டில் வைதேகி தடதடக்கும் இதயத்தை மறைத்தபடி, மகளுக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். இத்தனை நாள் சாரு திருமணம் நல்லபடியாக முடிந்தால் போதும் என்றிருந்தவருக்கு இப்போது கணவனை நினைத்து பயம்.
“எனக்கு போதும்மா..” சாரு மறுக்க, வைதேகி விடாமல், மூன்று இட்லிகளை ஊட்டி எழுந்தார்.
“ம்மா.. கிளம்புறீங்களா..? இங்கேயே இருங்கம்மா..” மகள் அம்மா ...
தனாவிற்கோ அவர் எதற்கு அங்கு சென்றிருக்கார் என்று தெரியுமே..? இப்போது அண்ணனாக அவன் என்ன செய்ய வேண்டும்..? போக தான் வேண்டும், இவர்கள் எல்லாம் ஊர் பெரியவர்கள். இவர்கள் சொல் மீறி செய்ய முடியாது, செய்தால் இவர்கள் இவனுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஊருடன் ஒத்து தான் வாழ வேண்டும். “போறேன்..” என்றுவிட்டான்.
“தனா தங்கமான பிள்ளைப்பா,...
இராஜ பவனி 12
“குகன்.. நீ எதுக்கு இங்க இருக்க..? வீட்டுக்கு போ..” பந்தி கவனித்து கொண்டிருந்தவனை விரட்டினான் தனா.
“நீ தனியா என்ன பண்ணுவ..? நான் இங்க கவனிச்சுக்கிறேன், நீ வேற வேலையை பாரு..” குகன் சொன்னவன், யாரோ சாம்பார் கேட்கவும் பரிமாற சென்றான்.
“ம்ப்ச்.. குகன், என்னை கோவப்படுத்த கூடாது, நீ கிளம்பு, நான் இங்க...
“ஓஹ்.. இப்படி தான் அண்ணா அவங்களை பத்தி தெரிஞ்சுகிறானா..?” சாரு கேட்க,
“ம்ம்.. போன வருஷம் அனு அவங்க அம்மாகிட்ட வாங்கின அடி, பொண்ணு பார்க்க ஆரம்பிச்சது, அனு உறுதியா நின்னது, அவங்க அப்பா அறைஞ்சுது, அனு அவர்கிட்ட கல்யாணமே வேணாம்ன்னு கையேந்தி அழுததுன்னு எல்லாம் சொன்னாங்க, கேட்க கேட்க எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு,...
இராஜ பவனி 11
“இது எல்லாம் நல்லாவா இருக்கு..? என் தம்பி மானத்தை வாங்கிறதுக்கென கங்கணம் கட்டிட்டு இருக்கானா உன் மகன்..?” இரவு மணி பத்தை நெருங்கியிருக்க, குருமூர்த்தியின் அக்கா பேச்சி குரலுயர்த்தி கொண்டிருந்தார்.
வைதேகி அவரை கலக்கத்துடன் பார்த்திருக்க, தனா, குகன், சாரு ஓரிடத்தில் இருந்தனர். குருமூர்த்தி இன்னும் வீடு வரவில்லை. மறுநாள் தேரிற்கான ஏற்பாட்டில்...
“ம்மா.. நான் சாருகிட்ட பேசிட்டேன், அவளுக்கு ஓகே தான், குகன் பத்தி எனக்கு தெரியும், அவனும் தானா வந்து சம்மதம் சொல்வான் பாருங்க..” என்றான் தனா நிச்சயமாக. சாருவிடம் குகன் உரிமை எடுத்து பேசுவதிலே தனா கண்டுகொண்டான்.
“என்னடி இது..? இப்போத்தானே அப்படி எதுவும் இல்லை சொன்ன..” வைதேகி மகளிடம் கேட்டார்.
“நீங்களே கட்டி வச்சா ஏன்...
இராஜ பவனி 10
“என்னத்தை பேசுறீங்க..? இதுக்கும், அதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு..? இப்படி எல்லாம் வார்த்தைகளை விடாதீங்க..” குகன் கோபத்துடன் வைதேகியிடம் பேச, அவருக்கும் பேசிவிட்ட வார்த்தைகள் புரிந்தது.
மகனை பார்க்க, அவன் மிகவும் வேதனையுடன் அமர்ந்திருந்தான். அண்ணனை அப்படி பார்த்த சாருவிற்கு அழுகை ஒருபக்கம், கோவம் ஒரு பக்கம் என்று வைதேகி, குகனை முறைத்தவள்,
“இப்போ...
“என்ன சாரு மூக்குல புகை வருது..? பீடி, தம்மு ஏதும் அடிச்சியா..? மாமாக்கு சொல்லட்டா..?” குகனின் வாய் கிண்டலாக கேட்க, மனமோ தனா திருமணத்திற்கு மறுத்ததை சொல்லிவிட்டானோ என்று யோசித்தது.
சாருவோ, “நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை மாமா..” என்றாள்.
“சொல்லிட்டானா ராஸ்கல்..” குகன் தனாவை அர்ச்சித்தான்.
“இப்போ எதுக்கு என் அண்ணாவை திட்டுறீங்க..? நீங்க தானே...
இராஜ பவனி 9
“என்னடி செய்ற..? எதிர்ல வண்டி வருது, நீ எனக்கென்னன்னு தலையை வெளியே விடுற.. அப்படி என்ன பார்க்கணும் உனக்கு..?” சித்ரா பதட்டமாகி தங்கையை திட்ட, அனுவிற்கோ கண்ணில் அடைத்து நிற்கும் கண்ணீரை சமாளிக்க முடியவில்லை.
“அனு.. உன்னை தான் கேட்கிறேன்..” சித்ரா அவளின் கை பிடித்து கேட்க, கார் ஹோட்டல் முன் நின்றது....
“இது தான் சிறுபிள்ளை பேச்சு குகன், பொண்ணு எடுக்கிறவங்க இதை எல்லாம் பார்க்க தான் செய்வாங்க, எந்த காலத்திலும் எவ்வளவு படிச்சாலும் உலகம் வானத்துல மிதந்தாலும் நம்ம ஆளுங்க மாப்பிள்ளை, பொண்ணு பார்க்கிறது அவங்கவங்க சாதியில தான் பார்ப்பாங்க..”
“அவங்க பார்த்தா சரிம்மா, அதுக்காக அந்த வீட்டு பையனும் அப்படி இருக்கனும்ன்னா எப்படி..?”
“குகன் இந்த விஷயம்...