“நான் இதை எல்லாம் என் பசங்ககிட்ட சொன்னதில்லை அனு, சொன்னா என்ன நினைப்பாங்கன்னு யோசனை, உன்கிட்ட சொல்லணும் போல இருந்துச்சு..” என்று பழைய நினைவுகளை அசைபோட, அனு அவருக்கான நேரம் கொடுத்து அமைதியாக இருந்தாள்.
சிறிது நேரம் அப்படியே இருந்தனர். வைதேகி தானே எப்போதும் போல தெளிந்து எழுந்தவர், “நேரம்ஆச்சு, தேர்முடியறநேரம், நைட்டுக்குஎதாவதுசெய்யலாம்..” என, அனுவும்கிட்சன்சென்றாள்.