அவரேகெடுத்துகொள்ள, மகன்பெருமூச்சுடன்தங்கையிடம்சென்றான். சாருஇவனைபார்த்ததும்முகம்திருப்பிகொள்ள, அவள் தலை பிடித்து தன்னை பார்க்க செய்தவன், “எவ்வளவு நேரம் சாப்பிடுவ..? மத்தவங்களுக்கும் வேணும், கிளம்பு..” என்றான் கிண்டலாக.
சாரு அண்ணனை முறைத்தவள், “என் கல்யாணம் நான் சாப்பிடுவேன், எனக்கு மிஞ்சி தான் மத்தவங்களுக்கு..” என்றாள் உர்ரென்று. அதில் தனா சிரித்துவிட, பார்த்த வைதேகிக்கு கண்கள் கலங்கி தான் போனது. எவ்வளவு பிரச்சனை, பேச்சுகளுக்கு இடையில் இந்த கல்யாணம் நாளை நடக்கவிருக்கிறது.
போதும் போதும் எனுமளவு குருமூர்த்தி ஆடி, மகன் அவரை கிட்டத்தட்ட அடக்கி தான் இந்த திருமணம். அதுவும் மிகவும் குறுகிய நேரத்தில். இரண்டு வாரத்திலே முகூர்த்தம் வைத்தாகிவிட்டது. தனா தான் அதில் உறுதியாக இருந்தான். ஒரு மாசமாவது போகட்டும்.. வைதேகி மகனிடம் கேட்டு பார்த்தார். ம்ஹூம்.. தனா ஏற்கவில்லை.
“என்கிட்ட இப்போ கல்யாணம் பண்ற அளவு பணம் இல்லைடா..” குகன் எப்போதும் போல தயங்காமல் தன் நிலைய நண்பனிடம் சொன்னான்.
“உன்கிட்ட எவ்வளவு இருக்கோ, அவ்வளவு செலவு பண்ணா போதும்..” என்றுவிட்டான் தனாவும்.
“அப்போ கல்யாணம் கோவில்ல சிம்பிளா தான் வைக்க முடியும், தாலி, முகூர்த்த புடவை, பத்திரிக்கை, சாப்பாடுன்னு இதுக்கே லட்சம் கிட்ட ஆகிடும்.. உனக்கு தெரியும் இல்லை கல்யாண செலவு நாங்க தான்னு, நீ பணம் ஏதும் கொடுக்கிறேன்னு சொல்ல மாட்ட தானே..?” குகன் நண்பனை உறுத்து பார்த்து கேட்டான்.
“பார்றா.. நான் ஏண்டா உனக்கு கொடுக்கணும்..? நிச்சயம் மட்டும் தான் எங்களுது, கல்யாணம் நீங்க தான், என்ன பொண்ணு வீட்ல இருந்து பணம் கறக்கலாம்ன்னு பார்க்கிறீங்களா..?” தனா அவனை கிண்டலடித்தான்.
“அப்போ நீங்க மாப்பிள்ளைக்கு சீரா எதுவும் கொடுக்க மாட்டிங்களாடா..? ச்சே.. இது தெரியாம வந்து மாட்டிகிட்டேனே..” குகன் சிரிப்புடன் சலித்தான்.
“உனக்கு என்ன வேணுமோ எல்லாம் என் தங்கச்சி கொடுப்பா, வாங்கிக்கோங்க மாப்பிள்ளை..” தனா திருப்பி கொடுக்க, அந்த நேரமே கல்யாண வேலை, கலாட்டா ஆரம்பமாகின.
இரண்டு வாரம் மின்னலாக ஓடி மறைய, இதோ இன்று மாப்பிள்ளை, பெண்ணை மனையில் உட்கார வைத்து, தனா வீட்டிலே நிச்சய பத்திரிக்கை வசித்து, பந்தி நடந்து கொண்டிருக்கிறது. நாளை விடியற்காலையில் கோவிலில் வைத்து திருமணம்.
எந்தளவு சிம்பிளாக செய்ய நினைத்தாலும், குகனின் பக்க உறவுகள், தனா உறவுகள், வைதேகி உறவுகள் என்று கூட்டம் அலைமோத தான் செய்தது. உணவிற்கு வரை தனா கணக்கு பார்க்க கூடாது, மற்றதில் குறைத்து கொள்ளலாம் என்றுவிட்டான். அதுவும் இருவீட்டிலும் முதல் திருமணம் ஆயிற்றே. போதாதற்கு மாப்பிள்ளை, பெண் உள்ளூர் வேறு.
ஊரே இங்கு தான் இருந்தது. அன்பழகன் குடும்பம், குருமூர்த்தி, அவரின் அக்கா பேச்சி தவிர.அதிலும் அன்பழகனுக்கு தனா நேரே அவரின் மில்லுக்கு சென்று பத்திரிக்கை வைத்தான். வீட்டிற்கு செல்லும் நேரம் வரும். இப்போது மில்லுக்கு தான் சென்றான்.
அவர் இவனை எதிர்பார்க்காமல் முகம் திருப்பினாலும், ஊர்காரனாய் வேறு வழி இல்லாமல் வாங்கி கொண்டார். தனாவும் அந்த நேரத்தில் எதுவும் பேசாமல், “எல்லாம் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க..” என்ற அழைப்புடன் வந்துவிட்டான். அவர் வரவில்லை. வரமாட்டார் என்று தெரியுமே..?
ஆனாலும் தனாவிற்கு அனுவை நினைத்து ஏக்கம் தான். அண்ணியா அவ இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து ஏங்கி தான் போனான். ஆனால் சூழ்நிலை அவளை நினைத்து ஏங்கி கொண்டிருக்க விடவில்லை. சூழ்நிலை என்பதை விட குருமூர்த்தி விடவில்லை எனலாம்.
ஒரே மகளின் நிச்சய பத்திரிக்கை வாசிக்க ஊரே அவரின் வீட்டில் திரண்டிருக்க, அவரோ சரியாக அந்த நேரம் அக்கா பேச்சியுடன் தோட்ட வீட்டிற்கு கிளம்பிவிட்டார். அவருக்கு மகன் வந்து அவரிடம் கெஞ்ச வேண்டும் என்ற வெறி. அவர் மகள் தான் சாரு, அவளின் திருமணம் தான் இது என்று நினைக்கும் நிலையில் எல்லாம் அவர் இல்லை.
அவருக்கு தேவை தனா மட்டும் தான். அவனின் சரணாகதி தான். அன்று வீட்டில் வைத்து மகன் பேசிய பேச்சு.. அவரையே அடங்கி நிற்க வைத்துவிட்டானே. நான் தான் இந்த வீட்ல, எனக்கு பொறந்தவன் என்னை ஓரக்கட்டுவானா, விடுவேனா.. ஆங்காரத்துடன் தோட்ட வீட்டில் மகன் வந்து காலில் விழ காத்திருந்தார்.
“வருவான்க்கா.. நான் இல்லாம நடந்திடுமா, வந்து என் கால்ல விழுவான் பாருங்க..” பேச்சியிடம் கொக்கரித்து கொண்டிருந்தார் நல்லவர்.
அதற்கேற்றாற் போல, அங்கு வீட்டில், பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடி, தனாவிடம், “என்ன இருந்தாலும் அவர் தான் பொண்ணுக்கு அப்பா, அவர் இல்லாமல் எப்படி..? தனா நீ ஒரு வார்த்தை உங்க அப்பாவை கூப்பிடுப்பா.. அவர் குணம் தான் தெரிஞ்ச விஷயம் ஆச்சே..”
“மகன் நீ தான் விட்டு கொடுத்து போகணும், அப்பா ஸ்தானத்துல இருந்து தங்கச்சி கல்யாணத்தை எடுத்து நடத்துற, இதுல என்ன ஆகிட போகுது, உன்னை பெத்தவன் தானே, அந்த மரியாதையை கொடுப்பா, போப்பா.. போய் கூப்பிட்டு வாப்பா.. போ தனா..” என்று ஆளாளுக்கு அவனை நெருக்கினர்.