இராஜ பவனி 15

“குகன்.. கடைக்கு கிளம்பாத, வீட்லே இரு, நாங்க இப்போ வரோம்..” தனா போன் செய்து சொன்னவன், வைதேகியிடம் வந்தான்

அவர்  மிகவும் கலவரத்துடன் மகனை பார்த்திருந்தார். “ம்மா.. ஏன் இவ்வளவு பயம்..?” அவர் கை பிடித்து கொண்ட மகன் கேட்டான்.

“பயப்படாம எப்படி இருக்க தனா..? இந்த விஷயம் உங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்..” என்றார் நடுக்கத்துடன்

இன்னும் நீங்க அவருக்கு பயப்படுறதை விடலையாம்மா..?” மகன் ஆற்றாமையுடன் கேட்டான்

வைதேகி மகன் கேள்வியை கசப்புடன் ஒதுக்கி வைத்தவர், “அங்க தனியாவா போற..?” கேட்டார்

எங்க..? ஓஹ் அனு அப்பாவை பார்க்கவா..? அங்க தனியா போன தான் சரியா வரும்..” என்றான்

தனியா எல்லாம் வேண்டாம் தனா, நீ உங்க மாமா, பெரியப்பா யாரையாவது கூட்டிட்டு போ..” என்றார் பதட்டத்துடன். அன்பழகன் கூட்டமும் பெரிது. மகன் செல்லும் விஷயமும் பிரச்சனைக்குரியதே என்ற கலக்கம் வைதேகிக்கு.

புரிந்த மகன், “ம்மா.. முதல் விஷயம் எனக்கு தனியா தான் அவர்கிட்ட பேசணும், இரண்டாவது நீங்க சொன்னவங்க என்னோட வருவாங்கன்னு நினைக்கிறீங்களா..?” கேட்டான்

அது..” வைதேகி உறுதியாக சொல்ல முடியாமல் திணறவே செய்தார்

என் விஷயம் சாரு போல இல்லைம்மா, இதை நான் தான் பார்த்துக்கணும்..” மகன் தெளிவாக சொல்ல

எதுக்கு இந்த தலையெழுத்து உனக்கு..? இதெல்லாம் தேவையா சொல்லு..?” வைதேகி முதல் முறையாக மகன் காதலை  கடிந்து கொண்டார்

மகனோ,  “தேவை மட்டும் இல்லை எனக்கு வாழ்க்கையே அது தானே..?” என்றான் யோசிக்காமல்

அம்மாகிட்டே இப்படி பேச ரொம்ப தைரியம் உனக்கு..?”  வைதேகி அவன் தோளில் வலிக்கும் படி அடித்தார்

ம்மா.. உங்களுக்கு அவர்கிட்ட இப்படி பேச தைரியம் இருந்தா எப்படி இருக்கும்..? யோசிச்சு பாருங்க..” என்றான்

எனக்கு எதுவும் யோசிக்கவே வேண்டாம்  தனா, நீ அங்க தனியா போகாத அவ்வளவு தான்..” என்றார் விடாமல்

ம்மா.. அனு அப்பா உன் புருஷன் அளவுக்கு மோசம் இல்லை தான், ஆனாலும் உனக்காக நான் குகனை என்னோட கூட்டி போறேன்.. வாங்க, நேரம் ஆச்சு..” என, வைதேகி கணவனுக்கு உணவை வைத்து, மகனுடன் கிளம்பினார்

நேரே குகன் வீடு சென்றவர்கள், இப்படி என்று சொன்னார்கள். “ஹேய் சூப்பர்ண்ணா..” சாரு மகிழ, “பார்த்து போய் வாப்பா..” என்றார் பரிமளம். குகன் மட்டும்  தனாவை பார்த்து நின்றான்

என்னடா..?” தனா கேட்க, எதுவும் இல்லை என்று தலை ஆட்டினான். ஆனால் மனதில் அன்பழகன் இதற்கு நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார் என்று நினைத்தான்.  

அது தனாவிற்குமே தெரியும் தான். அதற்காக அனுவை  கேட்காமல் இருக்க முடியாதே, அவர் நியாயம் அவருக்கு, எங்கள் காதல் எங்களுக்கு, நாங்கள் தானே போராட வேண்டும், எடுத்ததும் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாதே..? 

“அதற்காக கிடைக்காமலும் இருக்காது.. கேட்போம், சம்மதம் சொல்லும் வரை காத்திருப்போம், இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் நிச்சயம் ஒத்துக்கொள்வார்..” தனா மனதில் என்றுமே இந்த நம்பிக்கை, உறுதி உண்டு. அதே நம்பிக்கை,  உறுதி அனுவிடத்திலும் தெரிய வேறென்ன வேண்டும் அவனுக்கு..? இதோ குகனுடன் பெண் கேட்க கிளம்பிவிட்டான்

அனு வீட்டுக்கா  போக போற..?” குகன் கேட்டான்.  

இல்லைடா.. அனு அப்பாவோட பங்காளி நம்ம சுந்தரண்ணா கிட்ட இப்படின்னு அவர்கிட்ட கேட்க  சொன்னேன், அனு அப்பா முதல்ல முடியாதுன்னு சொன்னார் போல, அப்புறம் அவரே  மில்லுக்கு வர சொல்லியிருக்கார்..” என்றான்

அடப்பாவி.. என்னமோ திடீர் சூழ்நிலைன்னு சொன்ன..?” என்றான் குகன் கிண்டலாக

முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிட கூடாது குகன், ஏற்கனவே நிறைய நடந்திடுச்சு, அவருக்கு முறையை தகவல் சொல்லி போறது தான் சரியா இருக்கும், திடீர்ன்னு வீட்டு வாசல்ல போய் நிக்க கூடாது இல்லை..” என்றான்

ம்ம்.. நடத்து.. நடத்து..”  குகன் அவன் தோளை தட்ட, தனா அன்பழகன் மில்லில் வண்டியை நிறுத்தினான்

என்னடா இது..?” குகன் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாகி கேட்டான். அங்கு அன்பழகனை சுற்றி ஒரு கூட்டமே இருந்தது

தனாவோ, எத்தனை பேர்  இருந்தா என்ன..? என்று சாதாரணமாக அந்த கூட்டத்தை நோக்கி சென்றான். “என்ன பையன் தனியா வந்திருக்கான்..?” அன்பழகன் தனாவை யோசனையாக பார்த்தார்

தனா உடன் பெண் கேட்டு ஒரு கூட்டமே  வரும், அல்லது, குருமூர்த்தி பிரச்சனை செய்ய வருவார்  என்று தான் இவர் பக்கமும் ஒரு பத்து பேர் வந்திருந்தனர். இப்போது அவன் குகனுடன் தான் மட்டும் வந்திருக்க, பார்வை பரிமாற்றம் நடந்தது

தனா கவனித்தாலும், கண்டு கொள்ளாமல், “வணக்கம்..” என்றான் எல்லோருக்கும் பொதுவாக

உட்காருப்பா..” என்றார் அன்பழகனின் அண்ணன். தனா மறுக்காமல் குகனுடன் அமர, “சொல்லுப்பா..” என்றார் அவரே.

தனா நன்றாக நிமிர்ந்து அமர்ந்து அன்பழகனை பார்த்தவன்,  “உங்க வீட்டு பொண்ணு அனுவை எனக்கு பெண் கேட்டு வந்திருக்கேன்..”  என்றான் நேரடியாக

பெண்ணை பெற்றவருக்கு இப்படி என்று முன்னமே யூகம்  இருந்தாலும், தனா கேட்கும் போது  உடல் பற்றி கொள்ள தான் செய்தது.. அதன் வெளிப்பாடே, “இல்லைப்பா.. கொடுக்கிறதில்லை, என் பொண்ணுக்கு வேற இடத்துல பேசியாச்சு, இன்னைக்கு நிச்சயதார்த்தம், நீ கிளம்பு..” என்றார் நொடியும் தாமதிக்காமல்

தனா  எதிர்பார்த்தது தான். உடனே எதுவும் பேசிவிடவில்லை. அவரின் மறுப்பு ஒன்றும்  அதிர்ச்சி, ஆச்சரியம் கொடுக்கவில்லை. ஒரு கனமான அமைதி. எல்லோரும் அவன் முகம் பார்க்க, அவன் அன்பழகனை பார்த்தவன், “எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க..”   என்றான் மிகவும் அமைதியான பணிவுடன்

அவர் முகம் திருப்ப, “என்ன வாய்ப்பு கொடுக்க..? நமக்குள்ள இருக்க வித்தியாசம் உனக்கு தெரியாதா..? நியாயமா பார்த்தா எங்க பொண்ணு  மனசை கலைச்சதுக்கு உன்னை உள்ளவே விட்டிருக்க கூடாது.. பேசாம கிளம்பிடு..” கூட்டத்தில் ஒருவர் ஆரம்பித்தார்

அவரை தொடர்ந்து,  “இப்போ இருக்கிற பசங்களுக்கு எல்லாம் அசட்டு தைரியம் ஜாஸ்தி, என்ன வேணா பண்ணலாம், யார் வீட்டு பொண்ணை வேணா பார்க்கலாம், அவங்க மனசை கெடுக்கலாம், ஒன்னும் கட்டுப்பாடு இல்லை..” என்றார் மற்றவர்

என்னண்ணா நீங்க கட்டுபாடு பத்தி எல்லாம் இவங்ககிட்ட பேசுறீங்க, இவரோட அப்பா தான் ஊர் கவுண்டர், அவர் மகனுக்கு ஊர் பழக்க வழக்கம் தெரியல, எங்க வேணா கை நைனக்க முடியாது தம்பி..”  இன்னொருவர் சொல்ல

அதை சொல்லுங்க, என்னமோ அந்த குருமூர்த்தி அந்த பேச்சு பேசுவார், கடைசில அவர் மகன் இப்படி.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..” மற்ற ஆள் படு நக்கலாக சொன்னார்

இவர்கள் பேச்சில் குகனுக்கு கடுப்பாக, தனாவை பார்த்தான். அவனோ பேசிய எந்த மனிதர் பக்கமும் திரும்பவில்லை. அவனுக்கு இவர்கள் யாரும் பொருட்டும் இல்லைஅன்பழகனை தான் பார்த்திருந்தான்

அவனின் இந்த செயலில், பேசியவர்களுக்கு கோவம் வர, “ஏய் என்னப்பா உன்கிட்ட தான் சொல்லிட்டிருக்கோம்நீ ஆசைப்படுற எதுவும் நடக்காது, கிளம்பு.. ஏதோ நம்ம ஊர் பையன்னு பொறுமையா பேசினா..”  எகிற

அதை நீங்க சொல்ல கூடாது, எனக்கு இவர் தான், இவர்கிட்ட தான் என் பேச்சு..” என்ற தனா இப்போது மிகவும் அழுத்தமாக எல்லோரையும் பார்த்தான்

நாங்க சொல்லாம, நாங்க தான் சொல்வோம், எங்க வீட்டு பொண்ணு அது, உனக்கு பொண்ணு கொடுக்க முடியாது, திரும்பி பார்க்காம போயிடு..” ஒருவன் தனா முன் வந்து நின்று விரல் நீட்டி எச்சரித்தான். 

அவன் குருமூர்த்திக்கு ஆகாதவன். ஊர் பிரச்சனையில் இவனை மன்னிப்பு கேட்க வைத்ததற்கு, தனாவை பழிவாங்க கிளம்பியிருந்தான். அது தனாவிற்கு நன்கு புரிய, “பேச்சா பேச்சா இருக்கும் போது எதுக்கு கிட்ட வரீங்க..?” குகன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து நின்றான்

என்னடா எங்க இடத்துக்கே வந்து சவுண்ட் விடுற, அன்னைக்கு இவன் அப்பன் என் பங்காளியை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துனப்போ எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்..? இன்னைக்கு நீங்க எங்க இடத்துல இருக்கீங்க, அடங்கி இருங்க..” அவர் பேச, தனா திரும்பி அன்பழகனை தான் கூர்மையாக பார்த்தான்

அவர் என்ன நினைத்தாரோ, “என் பொண்ணுகிட்ட இருந்து தள்ளி இருன்னு  சொல்ல தான் உன்னை  வர சொன்னேன்..” என்றார்

நீ என்னப்பா இவனுக்கு பார்த்திட்டு இருக்க..? இவன் அப்பன் ஆடினத்துக்கு மகனுக்கு பாடம் சொல்லி கொடுக்காம.. ஏய் என்னடா முறைக்கிற..? இங்கிருந்து உருப்படியா போக முடியாது..” தனா மேலே  ஏறி வந்தான்.

தனா முகம் இறுக, மேல் ஏறி வந்தவன் மூக்கை உடைக்க கை பரபரத்தது. தன்னை வெகுவாக அடக்கி கொண்டவன், “உனக்கு என் அப்பா கூட பிரச்சனைன்னா நேருக்கு நேர் அவர்கிட்ட மோது, இல்லை அவர் மகன் என்கிட்ட தான் மோதுவேன்னாலும் எனக்கு முழு சம்மதம், ஆனா இடம் மட்டும் இங்க இல்லை, இந்த கேட்டுக்கு வெளியே..”  என்றான் தீவிர பாவனையுடன்