Monday, May 20, 2024

    Chathriya Vendhan

    சத்ரிய வேந்தன் - 10 – வீரம் போற்றல் விஜயபுரி நகரம், எத்தனை இன்னல்களைக் கடந்தாலும் தன் எழிலில் சற்றும் குறைவின்றி அன்றலர்ந்த மலர் போன்று இருந்தது. வெள்ள பாதிப்புகளும், ஆறு மாத காலமாக போருக்காக காத்திருந்து நடைபெற்ற கடும் போரும், அந்த போரின் தாக்கங்களும் கண்களுக்கு புலப்படாத அளவு, ஒரு வித மாயையை அந்த...
    சத்ரிய வேந்தன் - 24 – பகைமை படையினர் சந்திர நாட்டின் மேற்கு பகுதியில் சில மலைக்குன்றுகள் இருந்தது. நாடு முழுவதும் விவசாயம் செழித்திருக்க, பல வயல்களையும் வரப்புகளையும் தாண்டி, புதர்கள் அடர்ந்த பகுதிகளைத் தாண்டி மலைக்குன்றுகள் இருந்தது. பொதுவாக அந்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் சந்திர நாட்டு மக்கள் வயல் வரப்புகளைத்...
    சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள் மாதவமோ! யாகமோ! பிரார்த்தனைகளோ! வேண்டுதல்களோ! என்ன செய்தேன் நினைவில்லை… எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை… இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்... அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக் கொண்டிருந்தாள் சமுத்திர தேவிகை. சமுத்திராவைக் காண இளவரசி தோகையினியும், அவருடன் சேயோனின் மனைவி வருணதேவியும் விருந்தினர் அறைக்கு வந்தனர். அதிகாலை ஆதவனின்...
    சத்ரிய வேந்தன் - 30 – ரூபனர் வருகை என் விழி அரும்புகளை முழுவதுமாய் மலரச் செய்கிறது உன் திருமுகம்… மலர்ந்த விழிகளை மீண்டும் அரும்பச் செய்கிறது உன் பார்வை... மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதருக்கும், வேங்கை நாட்டின் இளவரசி தோகையினிக்கும் திருமண ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வந்தது. திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட மருத சக்ரவர்த்தி வீரேந்திர மருதருக்கு முழு திருப்தியாக இருந்தது. வீரேந்திர மருதர் தீட்சண்யருடனும், முதன் மந்திரியாருடனும் திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார். முதன் மந்திரியார்தான்...
    சத்ரிய வேந்தன் - 03 தாமரைக்குளம் மருத கோட்டையின் நடுவினில் கம்பீரமாய் வீற்றிருந்தது மருத தேசத்தின் அரண்மனை. அரண்மனையின் முன்வாயிலில் இருந்து பார்ப்பவருக்கே அதன் பிரமாண்டம் வாயை பிளக்க வைப்பதாக இருக்கும். பலவகை மாட மாளிகைகள், பிரமாண்டமாய் வீற்றிருக்கும் அரசவை அரண்மனை, ஆங்காங்கே அமைந்திருந்த தோட்டங்கள் என பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பினில் ஆழ்த்திவிடும். மருத தேசத்து அரச...
    error: Content is protected !!