Saturday, June 15, 2024

    தித்திக்கும் முத்தங்கள்

    தித்திக்கும் முத்தங்கள் 17  அன்று காலையில் அவசர  அவசரமாக கிளம்பிச் சென்ற குமரன் நாள் முழுவதும் வீட்டிற்கு வராமல் இருக்க, வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு எதையோ சமைத்து வைத்திருந்தாள் கார்த்திகா. மதியம் வழக்கமான நேரம் கடந்தும் அவன் வரவில்லை என்றாகவும், நான்கு மணிக்கு மேல் தான் மட்டும் உண்டு முடித்திருந்தாள். எப்போதும் திட்டிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் மட்டுமே...
    தித்திக்கும் முத்தங்கள் 16 குமரனின் அருகாமை கொடுத்த இதத்தில் அமைதியாக படுத்திருந்தாள் கார்த்திகா. குமரன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட போதும், பயத்தில் நடுங்கியபடிதான் இருந்தாள் கார்த்திகைச்செல்வி. ராணியும், பிரியாவும் ஆடிய ஆட்டம் அப்படியானது அல்லவா. குமரன் "பயப்படாத கார்த்தி. இனிமே வரமாட்டாங்க. இப்பிடி நடுங்காத." என்று கொஞ்சமாக குரலுயர்த்தியதற்கே அவள் உடல் அதிர, அவள் கைப்பிடித்து இருந்தவன்,...
    தித்திக்கும் முத்தங்கள் 15 பிரியா அழுது சிவந்த விழிகளுடன் தனது தாய்வீடு இருந்த குடியிருப்பை நெருங்க, வழக்கம்போல் அந்த குடியிருப்பின் கீழே இருந்த தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தார் ராணி. தொலைவில் வரும்போதே அவரைப் பார்த்துவிட்ட பிரியா "அம்மா..." என்று அழுகையுடன் அழைக்க, அவள் தோற்றம் கண்டு பதறிப்போனார் ராணி. "பிரியா..." என்று அவர் வேகமாக...
    நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான். "என்ன பிரியா.  உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல் தான் வினவினான் அவன். ஆனால், பிரியா அவனை விட வேண்டுமே. "உடம்பு முடியலைன்னா, என்ன பண்ண போற." என்றாள் சவாலாக. "ஏய்.. இன்னா...
    தித்திக்கும் முத்தங்கள் 13 தன் வீட்டு ஜன்னல் அருகில் நின்று கீழே தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா. மனம் இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டுக் கொண்டிருக்க, சோக சித்திரமாக நின்று கொண்டிருந்தாள் அவள். திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அவள் கணவன் நேற்று அவளைக் கைநீட்டி அடித்திருந்தான். ஆம். தனி...
    தித்திக்கும் முத்தங்கள் அவர்கள் குடியிருப்பின் கீழே இருந்த பெட்டிக்கடையின் அருகே அமர்ந்திருந்தார் தங்கராஜ். ஏறத்தாழ ஒருமணி நேரமாக அங்கு காத்திருக்கிறார் அவர். ஆனால், இன்னும் அவர் மனைவி வேலை முடிந்து வந்திருக்கவில்லை. மகாலட்சுமி வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து, மேலும் அரைமணிநேரம் ஆகிவிட்ட பின்பும் அவர் வராதது வேறு சந்தேகத்தைக் கொடுக்க,’வரட்டும் அவ’ என்று ஒரு...
    குமரன் சட்டென திரும்பிப்பார்க்க, அதற்குள் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். குமரன் சிறுசிரிப்புடன் கிளம்பிவிட, அவனிடம் சொன்னதுபோலவே சமைத்து முடித்தவள் சாப்பிட்டு முடித்து தன் பாடங்களை எடுத்து வைத்துக்கொண்டு அமர, குமரன் வந்துவிட்டான். அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க முற்பட்டவளை, "நீ பாரு. நான் போட்டு சாப்பிட்டுக்கறேன்." என்றபடியே நகர்ந்துகொண்டான். சொன்னதுப்போலவே அவன் உண்டுமுடித்து கிளம்பிவிட, அவனை...
    தித்திக்கும் முத்தங்கள் 12 குமரன் கார்த்திகாவின் உடமைகளை எடுத்துவந்து கொடுத்து மூன்று நாட்கள் கழிந்திருக்க, அன்று காலை கண்விழித்தது முதலே உர்ரென்று தான் அமர்ந்திருந்தான் குமரன். இந்த ஐந்து நாட்களின் வழக்கமாக காலையில் உறக்கம் தெளிந்து எழுந்ததுமே பாலும், காய்கறிகளும் வாங்கி வந்து கொடுத்திருந்தான். கார்த்திகா அவனுக்கு முன்பே எழுந்து குளித்து முடித்திருக்க, அவளும் வழக்கம்...
    தித்திக்கும் முத்தங்கள் 11 கார்த்திகாவிடம் அவள் படிப்பைப் பற்றி பேசியதில் இருந்தே அதே யோசனையாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தான் குமரன். என்ன யோசித்தாலும், எப்படி அவள் புத்தகங்களை எடுத்து வருவதென்று ஒருவழியும் புலப்படவில்லை. அடுத்தநாள் காலையிலும் அதே சிந்தனையுடன் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு சுலபமாக வழியமைத்துக் கொடுத்தது பூச்சிதான். குமரன்  விஷயத்தைக்  கூறிய கணமே அவன் நினைவில் வந்தது...
    தர்ஷனாவும், காவியாவும் அதிர்ந்து நின்றவர்கள் ஒருவழியாக சுதாரித்து, "ஹேய் விடுடி.. பிரச்னையாகிடப் போகுது." என்று பூர்ணியைப் பிடித்திழுக்க, "விடுங்கடி. இவன்தான் அன்னைக்கு கார்த்தியைக் கூட்டிட்டுப் போனது. இப்போ அவ என்னடான்னா கார்த்தி ஓடிபோய்ட்டான்னு சொல்றா. ஏய்... எங்கேடா கார்த்தி, என்ன செஞ்ச அவளை. சொல்றியா இல்ல போலீசுக்கு போன் பண்ணவா." என்று எகிறியவள் "ஏய்.. போலீசுக்கு...
    தித்திக்கும் முத்தங்கள் 10 நேற்று ப்ரியாவிடம் கூறியதுப் போலவே காலையில் நேரத்திற்கு எழுந்து வேலைக்குச் செல்ல தயாராகி நின்றான் கதிர்வேல். ஆனால், அவன் மனைவி வழக்கம்போல் உறக்கத்தைத் தொடர, அதுவே எரிச்சலாகிப் போனது அவனுக்கு. தன் வேலைகளை முடித்து அவள் முன்னே வந்து நின்றவன், "பிரியா... ப்ரியா." என்று அதட்டலாக அழைக்க, அதையும் காதில் வாங்காமல் உறக்கத்தைத்...
    தித்திக்கும் முத்தங்கள் 09 கார்த்திகா வீசியெறிந்த தட்டில் இருந்த உணவுப்பருக்கைகள் குமரன் மீதும், தரையிலும் இறைந்து கிடக்க, அசையாமல் அமர்ந்து கொண்டிருந்தான் குமரன். அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்ததன் காரணம் கோபமா, அல்லது உணவில் இருந்த அதிகப்படி காரமா என்று அறியமுடியவில்லை. ஆனால், கார்த்திகா அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல் அழுகையில் கரைய, சில நிமிடங்கள் பொறுத்துப்...
    தித்திக்கும் முத்தங்கள் 08 மகாலட்சுமி பணத்தைக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்தது என்று வெளியேறிவிட, கதிர்வேல் யோசிக்கும்போதே சட்டென பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள் பிரியதர்ஷினி. பணத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், "இவ்ளோ நல்லவங்களா உங்க அம்மா. நமக்கு வீடெல்லாம் பார்த்து கொடுக்கறாங்க." என்றாள்  கிண்டல்போல். "நீ வேற... அது நம்மளை வீட்டை விட்டு வெளியே...
    இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த புதிய வீட்டில் ராஜம்மாவும், பூச்சியும் காத்திருக்க, குமரன் கார்த்திகாவோடு உள்ளே நுழைந்தான் இப்போது. யாரும் எதுவும் சொல்வதற்குள் அவனே, "விளக்கை ஏத்து." என, கார்த்திகா மறுப்பதற்குள் பார்வையால் மீண்டும் பயம் காட்டினான். அவன் எதிர்பார்த்ததுப் போலவே பயந்து போனவள் அமைதியாக விளக்கை ஏற்ற, ஒருநிமிடம் கண்களை மூடி வேண்டிக்கொண்டான் குமரகுரு. 'இதயெல்லாம் சரி பண்ணிக்குடு...
    தித்திக்கும் முத்தங்கள் 07   ராஜம்மா தன் வீட்டில் இருந்த சில பாத்திரங்களை குமரகுரு - கார்த்திகைச்செல்வியின் உபயோகத்திற்காக பிரித்துக் கொடுக்க, அதுபோக இன்னும் என்னென்ன வாங்க வேண்டும் என்பதையும் அவரே குமரனுக்கு பட்டியலிட்டுக் கொடுத்தார் . குமரன் தன் ஆட்டோவின் ஆர்சி புத்தகத்தை சேட்டிடம் கொடுத்து அதன் பெயரில் இருபதாயிரம் பணம் வாங்கியவன் அவர் எழுதியிருந்த...
    தித்திக்கும் முத்தங்கள் 06           குமரன் தன் கையில் வந்து விழுந்தவளை தாங்கிப் பிடிக்க, அந்த நிலையிலும் அவன் அருகாமையை ஏற்காமல் பட்டென விலகி நின்றுகொண்டாள் கார்த்திகா. தங்கராஜ் கோபத்துடன் மீண்டும் மகளை நெருங்க, அவரை வழிமறிப்பவனாக கார்த்திகாவிற்கு  முன்னே அவளை மறைத்தபடி நின்றுவிட்டான் குமரகுரு.          தங்கராஜ் "ஏய்.. இன்னா சீனா... யார் ஊட்டு பொண்ணு...
                 "இப்போவும் அதேதான்.. தாலி கட்டதான் தூக்கினு வந்தேன்.. நாளைக்கு தாலி கட்ற வரிக்கும் இது உசுரோட இருக்கணும் இல்ல.. அதுக்குதான் இந்த செட்டப்.. இப்படியே கிடக்கட்டும்.." என்றவன் படகின் ஒரு ஓரம் சாவகாசமாக அமர்ந்து கொள்ள, அவன் பேச்சை கேட்டதில் மூர்ச்சையாகாத நிலைதான் கார்த்திகாவுக்கு.                "தாலி...
    தித்திக்கும் முத்தங்கள் 05                கார்த்திகைச்செல்வி படிக்கும் கல்லூரியின் நுழைவு வாயிலில் ஆட்டோவை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான் பூச்சி. நேரம் ஒன்றை கடந்திருக்க, இன்னும் பத்தே நிமிடங்கள் தான் என்று பதட்டத்துடன் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவிகளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.               சில நிமிடங்களில் கூட்டம் கூட்டமாக மாணவிகள் வெளியே வரத் தொடங்க, தூரத்தில்...
    "யப்பா.." என்று அவரை அணைத்து கொண்ட மகன் "தெய்வம்ப்பா நீ.. என் தெய்வம்... என் வாழ்க்கைல வெளீக்கேத்தி வச்ச சாமி நீ.." என்று தந்தையின் காலில் விழுந்து வணங்கினான் மகன். இருவரும் பேசியது மொத்தத்தையும் அன்று இரவே தந்தை மறந்துவிட, "நாளைக்கே தூக்குடா.." என்றதை மட்டும் மறக்காமல் பிடித்துக் கொண்டான் மகன். இருவரும் அந்த குடியிருப்பின் பின்பகுதியிலேயே...
    தித்திக்கும் முத்தங்கள் 04                  தன் வீட்டிற்கு அருகில் இருந்த அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அன்று பிரதோஷம் என்பதால் கல்லூரி முடித்து வந்ததுமே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு  ஐந்து மணிக்கெல்லாம் சரியாக கோவிலில் வந்து அமர்ந்துவிட்டாள் அவள்.               உள்ளே மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்க, முழுவதுமாக அவரிடம் லயித்துப் போய் அமர்ந்திருந்தாள் கார்த்திகா.பூஜை...
    error: Content is protected !!