தித்திக்கும் முத்தங்கள்
அவருக்கு அடுத்தபடியாக பூச்சி... கார்த்தியின் அழைப்புக்கு ஏற்ப, அண்ணனாகவே மாறி உடன் நின்றான் அவன். அவனும் பார்ப்பதையெல்லாம் வாங்கி வந்து கார்த்தியின் கையில் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கார்த்திகா தான் திணறிப் போவாள்.
கார்த்திகா பரிசோதனைக்கு செல்லும் நேரமெல்லாம் குமரன் உடன் வந்தாலும், இருவருக்கும் ஓட்டுநர் வேலை பார்ப்பது பூச்சி தான். குமரன் கூட சொல்லிப்...
தித்திக்கும் முத்தங்கள் 26
பூச்சி வாசலோடு விடைபெற்று சென்றிருக்க, மனவியைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த குமரன் கையோடு கதவை தாழிட்டு இருந்தான். மனைவி முகத்தை சுருக்கியவளாக அமர்ந்துவிட, குமரன் அவள் அருகில் அமரவும், "எதுவும் பேசிடாதிங்க." என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் முகம் மிகுந்த வேதனையை பிரதிபலிக்க, இத்தனை நாட்களாக அவள் மனதில் அழுத்திக்...
கார்த்திகா கூட முதலில் மறுத்துப் பார்த்தவள் குமரனின் பிடிவாதத்தால் அவன் போக்கிற்கே விட்டிருந்தாள். பெயர் வைக்கும் நிகழ்வு நல்லபடியாக முடிந்த, அடுத்த இரண்டு வாரங்களில் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பித்து விட்டாள் கார்த்திகா.
மகன் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவள் இளநிலைப் படிப்பு முடிந்திருக்க, ராஜம்மா கூட, "ஒருவருஷம் கழிச்சு பாரேன் கண்ணு." என்று எடுத்து...
தித்திக்கும் முத்தங்கள் 07
ராஜம்மா தன் வீட்டில் இருந்த சில பாத்திரங்களை குமரகுரு - கார்த்திகைச்செல்வியின் உபயோகத்திற்காக பிரித்துக் கொடுக்க, அதுபோக இன்னும் என்னென்ன வாங்க வேண்டும் என்பதையும் அவரே குமரனுக்கு பட்டியலிட்டுக் கொடுத்தார் .
குமரன் தன் ஆட்டோவின் ஆர்சி புத்தகத்தை சேட்டிடம் கொடுத்து அதன் பெயரில் இருபதாயிரம் பணம் வாங்கியவன் அவர் எழுதியிருந்த...
தித்திக்கும் முத்தங்கள் 19
அந்த மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் முன்பு நின்றிருந்தான் கதிர்வேல். எதிரில் அவனை எள்ளலாக பார்த்தபடி அவன் மனைவி நின்றிருக்க, மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் தனக்குமுன் அமர்ந்திருந்த அந்த பெண் அதிகாரியைப் பார்த்திருந்தான் அவன்.
தன் கையில் இருந்த புகாரை நிதானமாக படித்துப் பார்த்த அந்த அதிகாரி, "வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவியா?...
தித்திக்கும் முத்தங்கள் 05
கார்த்திகைச்செல்வி படிக்கும் கல்லூரியின் நுழைவு வாயிலில் ஆட்டோவை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான் பூச்சி. நேரம் ஒன்றை கடந்திருக்க, இன்னும் பத்தே நிமிடங்கள் தான் என்று பதட்டத்துடன் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவிகளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.
சில நிமிடங்களில் கூட்டம் கூட்டமாக மாணவிகள் வெளியே வரத் தொடங்க, தூரத்தில்...
நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான்.
"என்ன பிரியா. உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல் தான் வினவினான் அவன்.
ஆனால், பிரியா அவனை விட வேண்டுமே. "உடம்பு முடியலைன்னா, என்ன பண்ண போற." என்றாள் சவாலாக.
"ஏய்.. இன்னா...
தித்திக்கும் முத்தங்கள் 29
நேற்று இரவு பிரியா வீட்டிற்குள் வந்தபின்னும் கூட ராணி தன் வசைமாரியை நிறுத்தவே இல்லை. அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவர் மகன் தனது பேச்சைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய கோபத்தையும் பிரியாவின் மீதே காண்பித்தார்.
இரவு முழுவதும் அவரின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்தவள் காலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுவிட்டாள். என்னவோ...
நாட்கள் தள்ளிப் போயிருப்பதும் அப்போதுதான் நினைவு வர, ராஜம்மாவின் அருகில் வந்து, "ஏன் அப்படி கேட்டிங்க?" என்று புரியாதவளாக மீண்டும் அவள் கேட்க,
"எத்தனைப் பேரை பார்த்திருப்பேன்? எனக்கு தெரியாதா? உன் முகத்தை பார்த்ததும் அப்படிதான் கேட்க தோணுச்சு எனக்கு. நாள் தள்ளி இருக்கா கண்ணு." என்று மீண்டும் கேட்டவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு...
தித்திக்கும் முத்தங்கள் 08
மகாலட்சுமி பணத்தைக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்தது என்று வெளியேறிவிட, கதிர்வேல் யோசிக்கும்போதே சட்டென பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள் பிரியதர்ஷினி. பணத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், "இவ்ளோ நல்லவங்களா உங்க அம்மா. நமக்கு வீடெல்லாம் பார்த்து கொடுக்கறாங்க." என்றாள் கிண்டல்போல்.
"நீ வேற... அது நம்மளை வீட்டை விட்டு வெளியே...
அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை.
என்ன நினைத்தானோ மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் பைத்தியக்காரன் போல் அன்று முழுவதும் சென்னையை சுற்றிவர, இதற்கும் சவாரிகூட இல்லை....
தித்திக்கும் முத்தங்கள் 25
வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர் உணர்த்தியிருந்தது.
ஒரு கணவனாக அதற்குமேல் என்ன வேண்டும் அவனுக்கு. அருகில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த மனைவியின் மீது பார்வை பதியவும், தன்னைமீறி...
இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த புதிய வீட்டில் ராஜம்மாவும், பூச்சியும் காத்திருக்க, குமரன் கார்த்திகாவோடு உள்ளே நுழைந்தான் இப்போது.
யாரும் எதுவும் சொல்வதற்குள் அவனே, "விளக்கை ஏத்து." என, கார்த்திகா மறுப்பதற்குள் பார்வையால் மீண்டும் பயம் காட்டினான்.
அவன் எதிர்பார்த்ததுப் போலவே பயந்து போனவள் அமைதியாக விளக்கை ஏற்ற, ஒருநிமிடம் கண்களை மூடி வேண்டிக்கொண்டான் குமரகுரு.
'இதயெல்லாம் சரி பண்ணிக்குடு...
தித்திக்கும் முத்தங்கள் 09
கார்த்திகா வீசியெறிந்த தட்டில் இருந்த உணவுப்பருக்கைகள் குமரன் மீதும், தரையிலும் இறைந்து கிடக்க, அசையாமல் அமர்ந்து கொண்டிருந்தான் குமரன். அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்ததன் காரணம் கோபமா, அல்லது உணவில் இருந்த அதிகப்படி காரமா என்று அறியமுடியவில்லை.
ஆனால், கார்த்திகா அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல் அழுகையில் கரைய, சில நிமிடங்கள் பொறுத்துப்...
தித்திக்கும் முத்தங்கள் 20
கார்த்திகாவின் கல்லூரி நேரம் முடிந்து அதற்குமேலும் அரைமணி நேரம் கடந்திருக்க, இன்னமும் அவளை அழைத்துச் செல்ல குமரன் வரவில்லை. எப்போதும் கல்லூரி விடும் நேரத்திற்கு முன்பே வந்து வாசலில் நிற்பவன் இன்று இன்னமும் வராததில் கவலையாக அமர்ந்திருந்தாள் கார்த்தி. அவளுக்கு துணையாக அவளின் தோழிகள் பூர்ணியும், தர்ஷனாவும் இருந்தாலும், மனம் குமரனைப்...
"கார்த்தி."
"எனக்கு என்ன சொல்லணும்னு நிஜமா தெரியல. ஆனா, பிடிக்காம எல்லாம் இங்கே இருக்கல. அதோட என் வீட்டுக்கு போகணும்னு நான் நினைக்கல. எனக்கு என்ன வேணும்னு கூட எனக்கு தெரியல. இதுல நீங்க வேற அப்பப்போ எதையாவது கேட்கறீங்க?"
"நல்லா லவ் பண்ணி கல்யாணம் பண்ண என் அண்ணனும், உங்க தங்கச்சியுமே ஒழுங்கா வாழ முடியல....
தித்திக்கும் முத்தங்கள் 30
பிரியா கதிர்வேல் வீட்டிற்கு வந்து மேலும் சில நாட்கள் கடந்திருக்க, காலையிலேயே ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பியிருந்தான் கதிர். அவன் வேலைக்கு சென்றுவிடவும், மகாவுடன் அவர் வீட்டில் இருந்தாள் பிரியா. மகா மகனுக்காக மதிய உணவு தயாரிக்கும் பரபரப்பில் இருக்க, அவர் கையில் கொடுத்திருந்த கேரட்டையும், பீன்ஸையும் பொடியாக நறுக்கிக் கொண்டிருந்தாள்...
இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள் உபயோகப்படுத்தியதே இல்லை.
அவள் வீட்டை விட்டு வெளியேச் செல்வதும் வருவதும் குமாரனோடு மட்டுமே என்கையில், அவளது அத்தனை செலவுகளையும் அவனே பார்த்துக்...
தித்திக்கும் முத்தங்கள் 32
கார்த்திகைச்செல்வி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவள் இருந்த அறைக்கு வெளியே இருந்த படியில் அமர்ந்திருந்தனர் ராஜம்மாவும், குமரனும். அரசு மருத்துவமனை என்பதால் கார்த்தி இருந்த அறைக்குள் எல்லாம் அனுமதி கிடையாது. இவர்களையே அவ்வபோது விரட்டிக்கொண்டு தான் இருந்தனர்.
குமரன் எத்தனையோ முறை எடுத்து சொல்லியும் கேட்காமல், கார்த்தி தனது கர்ப்பகால பரிசோதனைகளை அரசு...
தித்திக்கும் முத்தங்கள் 13
தன் வீட்டு ஜன்னல் அருகில் நின்று கீழே தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா. மனம் இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டுக் கொண்டிருக்க, சோக சித்திரமாக நின்று கொண்டிருந்தாள் அவள்.
திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அவள் கணவன் நேற்று அவளைக் கைநீட்டி அடித்திருந்தான். ஆம். தனி...