Monday, May 26, 2025

    என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

    13        காலையில் எப்போதும் போல வீட்டின் வேலை செய்ய தொடங்கியவளுக்கு பல நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.     சமையல் வேலை முடித்துக் கொள்ள போகும் தருணத்தில் அவன் எழுந்து வருவது தெரிந்தது.        "சாரி சாரி, லேட் ஆயிடுச்சு நேத்து சீக்கிரம் தூங்கிட்டியா", என்று கேட்ட படி வந்து "ஏதாவது செய்ய வேண்டியது இருக்கா", என்று...
    இடையில் ஒரு முறை அவள் வேலையில் மும்மரமாக இருக்க.,     இவனுக்கு ஒரு பிளாக் டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்ற., எழுந்து டீ தயாரிக்கும் இடத்திற்கு சென்றவன்.,      தனக்கு ஒரு பிளாக் டீ தயாரித்து எடுத்துக்கொண்டு அவளை பார்க்க மும்மரமாக வேலையில் இருக்கவும்., மற்றவர்கள் எல்லாம் இடையிடையே எழுந்து அவர்களுக்கு தேவையான பானத்தை...
    12    யு எஸ் ல் ப்ராஜெக்ட் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டாவது மாதத்தை நெருங்கும் நிலையில் அவன் மற்றவர்களிடம் பாஸ் போல நடந்து கொண்டாலும், இவளிடம் மட்டும் நடந்து கொள்ளும் விதமே வேறாக இருந்தது.     அவ்வப்போது யோசனை வந்தாலும், எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்தாள். முதலில் அவர்கள் பேசிக் கொண்டது போல சமையல் அனைத்தும் இவள் செய்தாலும்,...
         "தயவு செய்து சாப்பாடு தர மாட்டேன்னு சொல்லிராதீங்க.,  உங்களுக்கு நான் ஊட்டி எல்லாம் விட்டு இருக்கேன்., அதுக்காகவாது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க", என்று சொன்னான்.     இவளோ "உங்களை யாரும் எனக்கு ஊட்டி விட சொல்லல., நான் சாப்பிட்டுகிறேன் ன்னு சொன்னேன்", என்று சொன்னாள்.      "உன் மாமன்ங்க மட்டும்  ஊட்டுவாங்களாம், நான் ஊட்டுனா அது...
    அவனும் 'பரவால்ல வேலையில கில்லாடி தான் போல' என்று நினைத்துக் கொண்டே.,    இதுவரை நடந்த பிராஜெக்டை மொத்தமாக சரிபார்த்துக் கொண்டிருந்தவன்.,     பின்பு அந்த பிராஜெக்ட் என ஒதுக்கப்பட்டிருந்த டீம் மெம்பர்களை அழைத்து மீட்டிங் போல வைத்தான். அப்போதும் இவளிடம் சந்தேகமான பகுதிகளில் குறிப்பு கேட்க., அவள் எடுத்துக் கொடுத்தாள்.      அவள் மேலே அவனுக்கு ஆச்சரியமாக தான்...
    11            யூ எஸ் ல் வந்து இறங்கியவளை அழைத்துச் செல்ல வேண்டி எந்த கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்தாலோ, அந்த கம்பெனியில் இருந்து கார் அனுப்பப்பட்டிருந்தது.      அவளுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்து சென்ற கார் டிரைவர் அவளிடம் விளக்கம் கொடுத்தார்.,    "இந்தியாவில் இருந்து வந்த உங்க பாஸ் க்கும், உங்களுக்குமான வீடு இது, ஒரே...
         தாத்தா தான்., "ஏண்டா இப்படி எல்லாம் பிரிச்சு பேசுற", என்று கோபப்பட்டார்.     பின்பு "எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசலாம்., பேசாம  கிளம்புங்க போங்க", என்று சொல்லி அவர்களுக்குள் பேசி முடிவு செய்து வீட்டிற்கு கிளம்பினர்.   ஊருக்கு சென்ற  நான்கு நாட்களில் வினித்திருக்கும் முகேஷ் க்கும் மெஸேஜ் செய்ய.,     அவர்கள் தங்கள் ஃப்ரீயான...
       அவர்கள் வீட்டில் உள்ளவர்களை பார்க்கும் போதே தெரிந்தது அவர்களின் படோபமும், அவர்களின் நிலை என்ன என்றும்., வினித் தான் அவளோடு பேசிக் கொண்டிருந்தான்.    "என்ன பிரச்சனை" என்று கேட்டான்.    "டிக்கெட் போட்டு கொடுத்திருக்கிறார்" என்று சொன்னான்.     'அப்படியே என்றாலும் இது கொஞ்சம் கூட தான் இல்லையா' என்று கேட்டான்.     "இருந்துட்டு போகட்டும் நம்ம ...
    10         கொச்சின் பிளைட்டில் ஏறி  அமர்ந்தவள், ஏதோ யோசனையில் கண் மூடி அமர்ந்திருந்தாள்.      அருகே ஆள் அமரும் அறவம் உணர்ந்தாள்,  ஆனாலும் கண்ணை திறந்து பார்க்கவில்லை.,      ஏனென்றால் அங்கிருந்து கிளம்பும் போது தன்னருகில்  வந்து, "அந்த காரில் ஏறு" என்று சொல்லும் போது அவனிடமிருந்து வந்த அதே பர்ப்புயும் மணம்., ஏனோ அவன் தான்...
    போன் வரவும் எடுத்தவள், "சாரி மாம்ஸ், காலையிலேயே டிஸ்டர்ப் பண்றேன்", என்று சொன்னாள்.     "என்னடா குட்டி",என்று வினீத் ஒரு புறமும்., "என்னடா பாப்பா காலையிலேயே கூப்பிட சொல்லி இருக்க., நேத்து நைட் நல்ல ரெஸ்ட் எடுத்தியா", என்று கேட்டனர்.     "அதெல்லாம் ஓகே மாம்ஸ்", என்றவள் குரல் மாறுபாட்டிலேயே வினித் தான், "குட்டி என்னடா குரல்...
         "உனக்கு எப்படி வினித் அத்த பையனோ, அதே மாதிரி உங்க அப்பாவுக்கு, எங்க அப்பா அத்தை பையன்", என்றான்.       "ஓ எங்க டாடியோட மாம்ஸ், உங்க டாடி ஓகே, சரி அப்புறம்", என்றாள்.     "என்ன கிண்டலா", என்றான்.      "நோ நோ கிண்டல் எல்லாம் இல்ல., நீங்க சொல்றத சீரியஸா கேக்க தான் என்ன...
    9      காலையில் கண் விழிக்கும் போது தன் வீட்டில் தூங்குவதாக நினைத்துக் கொண்டு நன்றாக நெளிந்து கொடுத்தவள், பின்பு நிதானமாக திரும்பிப் படுத்தாள்.         தலையணையை இழுத்து தலைக்குள் நன்றாக வைத்துக் கொண்டு திரும்பிப் படுக்கும் போது தான், கைநீட்டி தேடினாள்.      எப்போதும் கட்டில் அருகே இருக்கும் சிறிய டேபிளில் போன் வைத்திருப்பாள். அந்த ஞாபகத்தில்...
      "ஏன் உன்ன கடத்திட்டு வந்தத, போலீசுக்கு நானே எவிடன்ஸ் கொடுக்கவா", என்று கேட்டான்.    "நிச்சயமா கேமரா கிடையாது இல்ல", என்று கேட்டுக் கொண்டவள்.,    அதன்பிறகு பாத்ரூமுக்கு சென்று வந்த பிறகு.,     "உட்காரு" என்று சொல்லி மீண்டும் கட்டி வைக்கப் போனான்.     "இல்ல, நான் இங்கிருந்து ஓடி எல்லாம் போக மாட்டேன், கட்ட வேண்டாம்",...
    8       3 மாதங்கள் வேலையில் கழிய, தன் வேலைகளை முடித்து விட்டு சென்னை வந்து இறங்கினாள்.     ஜெர்மனியில் இருக்கும் சமயம் முகேஷ் ,வினித் இருவரிடம் எப்போதும் போல பேசிக் கொண்டு இருந்தாள்.      தினமும் இருவரிடமும் புலம்ப தவறவில்லை., முதலில்  அவளுக்கு ஜெட் லாக் எப்படி இருந்தது என்பதை கிட்டத்தட்ட ஒரு வாரமாக புலம்பியவள்.,  பின்பு...
          "ஜெர்மன் போறதுக்கு முன்னாடி கொலைக்காரியா மாறிட கூடாது ன்னு தான், வர வேண்டாம்னு சொல்றேன், வந்து தொலைச்சுராதீங்க", என்று சொன்னாள்.       முகேஷ் "பாப்பா நாங்க ரெண்டு பேரும் சூப்பரா ஒரு பிளான் பண்ணி இருக்கோம்",  என்று சொன்னான்.      "எப்படி மாம்ஸ் நீங்க ரெண்டு பேரும் பாப்பா, குட்டின்னு, நிக் வச்சு செல்லம் கொஞ்சி...
          "அப்போ நீயே கல்யாணம் பண்ணிக்கிறியா", என்று வினித்தின் தாத்தா கேட்டார்.      "என்ன கிண்டல் பண்றீங்களா", என்று வினீத் கேட்டான்.        இது எல்லாம் புரியாமல் அவள் அமைதியாக இருந்தாலும், வக்கீலோ, "என்ன பேசுறீங்கன்னு சொல்லுங்க, நாங்க இங்க லாங்குவேஜ் தெரியாதவங்க இருக்கோம்ல", என்று கேட்டார். வினித் அம்மா தான், வினித் வீட்டில் சொன்னதை ட்ரான்ஸ்லேட் செய்தார்.       ...
    7          எப்போதும் போல அதிகாலையில் எழுந்தவள்., தனது வேலைகளை முடித்துக் கொண்டு குளித்து அலுவலகத்திற்கு கிளம்புவது போல தயாரானாள்.    நல்ல பருத்தியிலான சுடிதார் அணிந்திருந்தாள். அதன் மதிப்பு பார்த்தவுடன் தெரியும் அளவிற்கு தான் இருந்தது., ஏனென்றால் வினித் முகேஷ்  அவளோடு இருக்கும் போது வாங்கிய உடைகள் அனைத்துமே விலை குறைந்தது வாங்க விடமாட்டார்கள்.,     அது...
    "இது எங்க அம்மாவோட சம்பாத்தியம் கிடையாது., எங்க அம்மாவோட அப்பா சம்பாத்தியம், மே பி அவங்க அப்பாவோட சம்பாத்தியமா கூட இருக்கலாம்., அவங்க பொண்ணுக்கு அவங்க எழுதி வச்ச சொத்து அப்படித்தானே",  என்று சொன்னாள்.     "ஆமாமா கல்யாணத்துக்கு முன்னாடியே, பிள்ளைங்க டாக்டர் ஆன உடனே ஷேர் பிரிச்சு கொடுத்திருக்காங்க., அப்படி ஷேர் பிரிச்சு கொடுத்ததுல...
    6 விமானத்தில் தன் இருக்கையில் அமர்ந்தவள், ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகும் வரை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.    சிங்கப்பூர் சென்று, அதன் பிறகு அடுத்த பிளைட் மாற வேண்டும்., இவள் சென்று சேர்ந்த நேரத்திற்கு பிறகு நான்கு மணி நேரம் கழித்து தான் சிங்கப்பூரிலிருந்து பிளைட்,  ஏற்கனவே  இங்கே ஒரு மணி நேரம் தாமதமானதால் அங்கு...
        அப்போது அவர்களுடைய நண்பர்கள் மேலும்  இருவருக்கும் சந்தேகம் வர., அவர்களையும் எழுத சொல்லி கையெழுத்தை ஒத்துப் பார்த்தனர்.     'யாருடைய கையெழுத்தும் ஒத்துப் போகாததால் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இது வெளியே  எங்கேயோ இருந்து வருது', என்று முடிவு செய்தனர்.    இவளுடைய கடைசி வருட படிப்பின் போது அவர்கள் இருவருக்குமே தோழர்களோடு சேர்ந்து...
    error: Content is protected !!