“அதுக்கு தான் பாப்பா சூப்பர் பிளான் வைத்து இருக்கிறோம், நாளைக்கு சொல்றோம் பாரேன்”,. என்று சொன்னான்.
“வைங்கடா போனை” என்று திட்டிவிட்டே ஃபோனை வைத்தாள்.
“வரவர மரியாதை குறையுது”, என்று போனை வைக்கும் முன் அவர்கள் இருவரும் கத்தியது இவளுக்கு கேட்டது.
சிரித்துக்கொண்டே படுத்தவள், ‘இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலை, தினம் போன்ல ஒரு தடவையாவது என்னை இப்படி கலாய்க்கல னா தூக்கம் வராது போல’, என்று சொல்லி சிரித்துவிட்டே படுத்தாள்.
மறுநாள் காலை வேண்டும் என்றே அவர்கள் வந்தவுடன் “வாங்க கல்யாணப் பொண்ணே, எங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிப்ப தானே”, என்று கிண்டல் செய்தனர்.
இவளோ ஏர்போர்ட் என்றும் பார்க்காமல் அவர்களை அடிக்க.,
“இங்க பாரு பேமஸ் டாக்டர்ஸ் நாங்க ரெண்டு பேரும்., எங்க ஊருக்கு வந்து கேட்டுப்பாரு., இப்படி ஏர்போர்ட்ல வச்சு, பப்ளிக் பிளேஸ்ல வச்சு அடிக்க உனக்கு பாவமா இல்லையா”, என்று கேட்டான்.
அவளோ “ஃபேமஸ் டாக்டர்னு சொல்றீங்களே, உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது அறிவு இருக்கா, ரெண்டு பேரும் ஒரே பொண்ண கல்யாணம் பண்ண போறேன்னு பேசுறிங்களே, இது நல்லாவா இருக்கு”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் இரண்டு பேமிலியுமே சம்மதம் சொல்லியாச்சு அது தெரியுமா”, என்று சொன்னான்.
“லூசாடா அந்த குடும்பம் எல்லாம்”, என்று கேட்டாள்.
“இங்க பாரு மாம்ஸ்ங்கற மரியாதை இருக்கணும், அதுவும் இப்ப கல்யாணம் வேற பண்ண போறோம், இவ்வளவு நாள் மாம்ஸ் மாம்ஸ்னு கூப்பிட்டுட்டு, இப்போ டா சொல்ற”, என்று சொன்னார்கள்.
“உங்களுக்கு இந்த மரியாதை போதும், என்னை கல்யாணம் பண்ணா இதைவிட அசிங்க அசிங்கமா கேட்பேன்”, என்று சொன்னாள்.
“நாங்க அதுக்குதாண்டா குட்டி, ஒரு ஐடியாவோட வந்திருக்கோம்”, என்று வினித் சொன்னான்.
அவனை திரும்பி முறைத்து விட்டு முகேஷ் பார்க்க, அவனும் “சூப்பர் ஐடியா பாப்பா இங்க வா, இப்படி உட்க்காரேன்” என்று சொன்னான்.
ஏற்கனவே இருவரும் டிக்கெட் எடுத்து உள்ளே வரை வந்து இருந்தனர்.
“என்ன சொல்லுங்க, எனக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல அனவுன்ஸ்மென்ட் வந்துடும்”, என்று சொன்னாள்.
முகேஷ் “ஆமா” என்று தலையாட்டிய படி, “என்ன ஐடியா தெரியுமா?, உனக்கு எங்கள பார்த்தா அப்படி ஒரு ஃபீல் வரலை தானே, எங்களுக்கும் உன்னை பாத்தா அப்படி ஒரு ஃபீல் வரலை, ஆனா உன்ன வேற யாருக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்தா பிரச்சனையாகும் ன்னு இரண்டு வீட்டிலும் பயப்படுறாங்களா”, என்று சொல்லும் போதே,
“சரி அதுக்கு” என்று கேட்டாள்.
“நீ ஒன்னு பண்ணு, கல்யாணம் மட்டும் பண்ணிக்கலாம்”, என்று சொல்லும் போதே,
“அதான் சொல்றேன் குட்டி” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்லவும்,
அவனை காலில் ஒரு மிதி மிதித்தவள், “ஒழுங்கா பேசுடா, தப்பா பேசினா கண்ண தோண்டி புடுவேன்”, என்று சொன்னாள்.
“ஒன்னு பண்ணலாம், நம்ம வந்து இந்த சரக்கேசி மதர் இருக்காங்க இல்ல”,என்றனர்.
“ஆமா” என்றாள்.
“அதே மாதிரி நீ சரக்கேசி மாதிரி”, என்றவன், “இப்ப பார்த்தேனா மெடிக்கல் ஃபீல்ட் ல கருமுட்டை இருக்குல்ல அது வந்து எடுத்துடுவாங்க, அந்த முட்டையில உனக்கு அந்த மெத்தெட் தெரியுமில்ல, கேள்வி பட்டு இருக்கேயா”, என்று கேட்டான்.
“ஆமா கேள்விப்பட்டிருக்கேன்”, என்றாள்.
“இப்ப உன்கிட்ட இருந்து ரெண்டு எக் எடுத்தோம்னு வை”, என்றான்.
“எடுத்து”, என்று பதில் கேள்வி கேட்டாள்.
“அதுல ஒரு எக் ல என்னோட பேபியை கிரியேட் பண்ணிடலாம். ஒரு எக் ல முகியோட பேபி கிரியேட் பண்ணிடலாம்”,என்றான்.
“சரி கிரியேட் பண்ணி”, என்றாள்.
“உன் வயித்துக்குள்ள வச்சு வளர்த்திரலாம்”, என்று சொன்னார்கள்.
“அடி உங்க ரெண்டு பேரையும், ஐடியா பண்ணிட்டு வராங்க, நல்ல ஐடியா., டாக்டர்ஸ் ன்னு நினைச்சா, ரெண்டு பேரும் கிரிமினல் டாக்டரா தான் இருக்கீங்க., ஓடி போங்கடா”, என்றாள்.
இருவரும் சிரித்தபடியே அவளைப் பார்த்து”குட்டி நீ வர்ற வரைக்கும் நா வெயிட் பண்ணுவன் குட்டி”, என்று வினித் ஒருபுறம் சொன்னான்.
“முகேஷ் பாப்பா உனக்காக தான் வெயிட் பண்ணுவேன்”, என்று சொன்னான்.
அவர்களில் இருந்து பிரிந்து நடக்க தொடங்கியவள், “வந்தேன் இரண்டு பேருக்கும் விஷத்தை வச்சு நிஜமாவே கொன்றுவேன் டா., நல்ல டாக்டர்ஸ்னு கூட பாக்க மாட்டேன்”, என்று சொல்லி சிரித்தபடி கையாட்டி விடை பெற,
இருவரும் அவளைப் பார்த்து சிரித்தபடியே நின்றனர்.,
இருவரையும் தெரியும், அவர்கள் அவளை கலாய்க்கிறார்கள் என்பது அவளுக்கும் தெரியும், / வேண்டுமென்றே அவளை கலாய்த்து கிண்டல் செய்தனர் .
அது மட்டும் இல்லாமல் அவள் செல்லவும், பின்னாடியே இருவரும் ஓடி சென்று நின்றனர்.
“ஏன் மாம்ஸ் ரெண்டு பேரும் இதுவரைக்கும் எதுக்கு வந்த போ., செக்யூரிட்டி வந்து கழுத்து பிடித்து தள்ளுவதற்கு முந்தி வெளியே போ”, என்றாள்.
“ஏய் நீ ஜெர்மன்ல இருந்து ஆள கூட்டிட்டு வந்துட்டேனா தப்பிச்ச., இல்லனா ரெண்டு பேமிலியும் இப்படித்தான் பிளான் பண்ணி வச்சிருக்கு”.,என்றனர்.
“எப்படி என்ன சரக்கேசி மதராக்குறதுக்கா”, என்று கேட்டாள்.
“ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு., சோ நீ தான் பாப்பா எங்க வாழ்க்கையே காப்பாத்தணும்”, என்று முகேஷ் சொன்னான்.
இவளோ சிரித்தபடி “மாம்ஸ்” என்றாள்.
வினித்தோ “குட்டி எப்படியாவது காப்பாத்தி விட்டுரு குட்டி, உனக்கு இரண்டு அடிமை சிக்கிட்டான்னு நினைச்சிடாத, நாங்க ரெண்டு பேரும் இவ்வளவு நாள் உனக்காக மட்டும் தான் ரொம்ப நல்ல பையனா இருந்தோம், போதாது ன்னு லைஃப் லாங் சாமியார் வாழ்க்கை வாழ்ந்து கஷ்டப்படணுமா”, என்று சொல்லி இருவரும் அழுவது போல ஆக்ட் செய்தனர்.
இருவர் காதையும் பிடித்து திரும்பியவள், “மாம்ஸ் நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு நல்ல பசங்க ன்னு எனக்கு தெரியும், இப்ப ஒழுங்கா போய் உங்க கேர்ள் பிரண்டோட சேருங்கடா., வீட்ல லவ்வ சொல்லி தொலைங்க”, என்று சொன்னாள்.
“சொல்லணும் தான், ஆனால் ஒத்துக்கனுமே”,என்றான்.
“மாம்ஸ் விளையாடாத, நான் ஜெர்மனியில் இருந்து வரதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் வீட்ல உங்க லவ் மேட்டரை ஓபன் பண்ணி வைக்கிறீங்க., நான் வந்ததுக்கப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”, என்று சொன்னாள்.
“எனக்கெனவோ வந்ததுக்கப்புறம் நீ எங்களுக்கு லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க மாட்ட, நாங்க ரெண்டு பேரும் தான் உன் கழுத்துல தாலி கட்ட போறோம்”, என்று சொன்னார்கள்.
இவளோ “என்னை பார்த்தா எப்படி தெரியுது, முருகனோட பெண்பால் மாதிரி தெரியுதா., ஓடிப்போங்கடா ரெண்டு பேரும் “,என்றாள்.
“திவ்யா தானே இப்படி சொன்னா” என்று கேட்டான்.
இவளோ சிரித்தபடி, “ஆமா என்னை அடிக்கடி இப்படித்தான் கிண்டல் பண்ணிட்டு இருந்தா., முருகன் வள்ளி தெய்வானையோட சுத்துன மாதிரி, நீ என்ன உங்க மாம்ஸ் ரெண்டு பேரோட சுத்துறேன்னு கேட்டா., அது இப்போ எவ்வளவு பெரிய இக்கட்டில் கொண்டு வந்து விட்டிருக்குன்னு இப்பதான் எனக்கு தெரியுது., ரெண்டு பேரும் கிளம்பு”, என்று அவர்களை விரட்டினாள்.
அவர்களோ “ஜெர்மனியில் இருந்து வரும் போது எங்களுக்கு ஒரு அண்ணணை கூட்டிட்டு வந்துருமா”, என்று அவளை வாழ்த்தி வழி அனுப்பினர்.
சந்தோஷமும் கவலையும் மாறி மாறி வந்தால் தான் நம் மனது பக்குவப்படும் சந்தோஷத்தில் ஆடவும் கூடாது. கவலையில் வாடவும் கூடாது.