அவர்கள் வீட்டில் உள்ளவர்களை பார்க்கும் போதே தெரிந்தது அவர்களின் படோபமும், அவர்களின் நிலை என்ன என்றும்., வினித் தான் அவளோடு பேசிக் கொண்டிருந்தான்.

   “என்ன பிரச்சனை” என்று கேட்டான்.

   “டிக்கெட் போட்டு கொடுத்திருக்கிறார்” என்று சொன்னான்.

    ‘அப்படியே என்றாலும் இது கொஞ்சம் கூட தான் இல்லையா’ என்று கேட்டான்.

    “இருந்துட்டு போகட்டும் நம்ம  அடுத்தவங்களுக்கு கொடுத்ததா தான் இருக்கணும்., நம்ம யார்ட்டையும் போய் கையேந்தி நின்றதா இருக்க கூடாது”, என்று சொன்னாள்.

   அவளை திரும்பி பார்த்தவன், “அப்ப நீ இப்ப பிராப்பர்ட்டிய இரண்டு  ஃபேமிலி கேட்டாங்கன்னு எழுதி கொடுக்கிறது கூட அது தான் காரணமா”, என்றான்.

      “நிச்சயமா, யார்கிட்டயும் நான் எதுவும் வாங்கிக்க கூடாது  ன்னு ஒரு எண்ணம் உண்டு., மே பி இந்த படிக்க வச்ச செலவு மற்ற எல்லாத்துக்கும் சேர்த்து தான்., அவங்கவங்க பிராப்பர்ட்டி அவங்க ட்ட  கொடுக்கிறேன்., அந்த பிராப்பர்ட்டி இருக்க போய் தான் எல்லாரும் படிக்க அன்ட் எல்லாவற்றிலும் ஹெல்ப் பண்ணாங்கன்னு எனக்கு தெரியும்., என்னால பீல் பண்ணவும் முடியுது”, என்று சொன்னாள்.

   “ஏன் குட்டி அப்படி நினைக்கிற., அப்ப எங்களையும் அப்படித்தான் தப்பா நினைச்சு இருக்கியா”, என்று கேட்டான்.

     “சேச்சே நான் உங்க ரெண்டு பேரையும் அந்த கணக்குல சேர்க்கவே மாட்டேன்., நீங்க ரெண்டு பேரும் தனி மாம்ஸ், மத்தவங்க செலவு பண்ணதுக்கு  நான் கணக்கு பார்க்கலாம்.,  நீங்க ரெண்டு பேரும் என் மேல காட்டின உண்மையான அன்புக்கு நான் கணக்கு பார்க்க முடியாது., அதுக்கு பதிலா வேற எதுவும் என்னால செய்ய முடியாது”, என்று மட்டுமே சொன்னாள்.

     அவர்கள் சொன்ன நேரத்திற்கு அந்த ஆபீசே சற்று பரபரப்பாக இருப்பது போல காணப்பட்டது. சற்று நேரத்தில் அவர்கள் வீட்டின் பெரியவர்களும் வந்து சேர ரெஜிஸ்ட்ரேஷன்  ஆரம்பமானது.

    அதற்கு முன்பே பத்திரத்தை வினீத் வாசித்திருக்க, வேறு எதுவும் சொல்லவில்லை வினித்துடன் வினித்தின் தந்தை மட்டும் வந்திருந்தார்.

சற்று நேரத்தில்  வினித்தின் தாத்தா அம்மா பாட்டி என அனைவரும் வந்து சேர்ந்தனர், இவளோ யாரையுமே கண்டு கொள்ளவில்லை.,

பத்திரத்தில்  கையெழுத்து போட சொல்லும் போது வினித் தான் “போடு” என்று சொன்னான்.

    எதுவும் பேசாமல் அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டாள்.,

    சொல்லும் இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்க., சற்று நேரத்தில் அதே பத்திரத்தில் நிமலன் கையெழுத்து போட்டான்.

தற்செயலாக அவன் கையெழுத்திடுவதை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, ஒரு நிமிடம் அந்த கையெழுத்தை இதற்கு முன் எங்கோ பார்த்திருப்பது போல தோன்றியது.,

      வினித்தினருகில் சென்று மெதுவாக, “அந்த கையெழுத்தை கொஞ்சம் பாரு”, என்றாள்.

   அவனும் திரும்பி பார்க்க சில இடங்களில் அவன் எழுதி கையெழுத்து போடும் போது அவன் கையெழுத்தை பார்த்தவன் சற்று அதிர்ந்த முகத்துடன் தர்ஷனாவை நிமிர்ந்து பார்த்தான்.

   “குட்டி இந்த ஹேண்ட் ரைட்டிங்”, என்றான்.

    அவளும் தலையசைத்து “எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது”., என்று மட்டும் சொன்னவள் அவன் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கும் போதே வினித்தோடு வெளியே வந்தாள்.

     வெளியே வந்தவள், “மாம்ஸ் அவங்க சும்மா அனுப்பி இருப்பாங்க,ஏன்னா அவங்களுடைய  பெரிய ப்ராப்பர்ட்டி இருக்கு இல்ல,  ஒரு வேளை எழுதிக் கொடுக்கலை என்றால்., இதே மாதிரி ஏதாவது ஒரு சீன் கிரியேட் பண்ணி ஜஸ்ட் ஏமாத்திட்டு எழுதிக்க முயற்சி செஞ்சு இருக்கலாம் இல்லையா”, என்று சொன்னாள்.

    “இப்படி இறங்குற ஆள் கிடையாது, ஆனாலும் பார்க்கலாம்”, என்று சொன்னான்.

    “வேண்டாம் மாம்ஸ், இந்த மாதிரி பெரிய இடங்களோட டச் இல்லாம இருக்கிறதே நல்லது”, என்று சொன்னவள்.,

     “உனக்கு சொந்தம் நீ டச் ல இருக்கிறது தப்பில்லை, எனக்கு யாரும் வேண்டாம்”, என்று சொல்லிவிட்டு “கிளம்பலாமா” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நிமலனும் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்திருந்தான்.

   அதற்குள் இன்னும் பத்து நாளில் அடுத்த ரெஜிஸ்ட்ரேஷன் இருப்பதால்., அவள் வரவேண்டும் என்று  தாத்தா பொதுப்படையாக அங்கு இருக்கும் போதே சொன்னார்.

    வினித்திடம் “வந்துருவேன் ன்னு சொல்லு”, என்று சொல்லிவிட்டு, “எனக்கு ஒரு டேக்ஸி புக் பண்ணி கொடு., அப்படி இல்ல னா ஒரு ஆட்டோ எடுத்து கொடுத்தா கூட ஓகேதான்”, என்று சொன்னாள்.

     அவனும் “ஏன் குட்டி” என்று கேட்டான்.

    “வேண்டாம் எல்லோரும் வந்திருக்காங்க., அவங்க கூட போ”, என்று சொன்னாள்.

    “இல்ல”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

   அங்கு வந்த நிமலன்., “நான் கார் அனுப்புறேன், போய் இறங்கிக்கோ”, என்றவன்,

    “உனக்கு ஏழு மணிக்கு தான் பிளைட்., இப்ப மணி நாலு தான் ஆகுது”, என்று சொன்னான்.

    “நோ தேங்க்ஸ், நான் கிளம்புறேன்”, என்று சொல்லிவிட்டு அவனிடம் “உங்க கார் வேண்டாம்”, என்று சொன்னவள்.,

    ஏற்கனவே வினீத் வந்தவுடன் கையில் கொடுத்திருந்த பணத்தை எடுத்து, “ஒரு நிமிஷம் கையை நீட்டுறீங்களா”, என்றாள்.

“என்ன” என்ற படி கையை நீட்டினான்.,

   அவன் கையில் பணத்தை வைத்தவள், வினித் அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு.,

     ” ஃப்ளைட் டிக்கெட், சாப்பாடு, டிரஸ்., எல்லாத்துக்கும் சேர்த்து”, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

    அதே நேரம் வினித் காரோடு வந்து நின்றான்.

    “சொல்லிட்டேன், அப்பா தாத்தா கூட கிளம்பிட்டாங்க., நீ வா நான் உன்னை விட்டுட்டு போறேன்”, என்று சொன்னான்.

அவனோடு காரில் ஏறினாள்.

    கையில் இருந்த பணத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன்., “திமிரு புடிச்சவ”, என்றவன், “ம்ஹூம் கௌரவம் பார்ப்பவள்”, என்று சொன்னான்.

   அதே நேரம் அருகில் வந்த குடும்பத்தில் தாத்தா அவன் கையில் பணத்தை பார்த்துவிட்டு.,  “என்னடா”, என்று கேட்டார்.

    “ஒன்றும் இல்லை”, என்று சொன்னவன் முகம் முற்றிலும் மாறி இருந்தது., பணத்தை தன் பாக்கெட்டில் வைத்து விட்டு.,

     “நான் கிளம்புறேன், ரெண்டு நாளா கம்பெனி ஒர்க் அப்படியே கிடக்குது, அதை பாக்கணும்., நீங்க சொன்ன மாதிரி உங்க பிராப்பர்ட்டிய வாங்கி கொடுத்துட்டேன்., இனிமேல் என் விஷயத்துல நீங்க தலையிடக்கூடாது”, என்று சற்று கோபமாக சொன்னது போல இருந்தது.

   தாத்தா தான், “நான் எதுக்கு சொல்றேன் ன்னு நீ புரிஞ்சுக்கோ”, என்று சொன்னார்.

    கையை காட்டி அவரின் பேச்சை நிறுத்தியவன்., “எனக்கு தெரியும், நான் எது பண்ணனும்னு நீங்க சொல்ல வேண்டாம்”, என்று சொல்லிவிட்டு அவன் அப்பாவை பார்க்க.,

     அவரோ “சரிடா போயிட்டு வா”, என்று மட்டுமே சொன்னார்.

     வீட்டினரில் பாட்டியும் தாத்தாவும் நிமலனின் பெற்றோரிடம் கோபம் காட்டினர்.

    “அவன் செய்றதுக்கெல்லாம் நீங்க ரெண்டு பேரும் ஏன் அமைதியா சம்மதம் கொடுக்குறீங்க., கேள்வி கேட்க மாட்டீங்களா”, என்று கேட்டனர்.

   நிமலனின் அப்பா தான்., “அவன் கேள்வி கேட்கிற ஸ்டேஜ் எல்லாம் தாண்டிட்டான்., அவன் முதல்ல உங்ககிட்ட பெர்மிஷன் கேட்கும் போது நீங்க யாரும் சரின்னு சொல்லல., ஆளாளுக்கு மாத்தி மாத்தி பேசுனீங்க., அதனால தான் அவன் இப்படி ஒரு முடிவு எடுத்தான்., இப்பவும் நீங்க சொத்தை தான் காரணம் காட்டினீங்க., அதனால தான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ., அதை உங்க கையில வாங்கி கொடுத்துட்டான்., இனிமேல் நீங்க அவனைக் கேள்வி கேட்க முடியாது., ஏன்னா இப்போ அவன் நடத்துறது அவனோட கம்பெனி., அவனோட சம்பாத்தியம், நான் கூட கேள்வி கேட்க முடியாது., நம்ம ஃபேமிலி சொத்துல இருந்து அவன் கொஞ்சம் கூட எடுக்கல., அது உங்களுக்கே தெரியும்., பேங்க் லோன் போட்டான்.,

     இத்தனை வருஷம் அவனோட உழைப்பு அது., அதனால நாங்க யாரும் எதுவும் கேட்க முடியாது., எதுவும் சொல்லவும் முடியாது”, என்றார்.

   “அப்போ அவன் என்ன செஞ்சாலும், நீ சரின்னு சொல்லுவியா “, என்று மகனை பார்த்து கேட்ட பாட்டியிடம்.,

      “என் மகனுக்கு நான் சுதந்திரம் கொடுக்கணும்னு நினைக்கிறேன்., உங்க அண்ணன் அவர் பையனுக்கு அந்த சுதந்திரத்தை கொடுக்காத காரணம் தான் இவ்வளவு பிரச்சனை., அன்னிக்கு நீங்களும் உங்க அண்ணனும் பேசியிருந்தீங்கன்னா., அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வந்து இருக்காது., இவ்வளவு பிரிவும் இருந்திருக்காது., நீங்க கேக்கல., நானும் என்னோட நண்பன நம்பினேன் இல்லன்னு சொல்லல., ஆனா நானும் கேட்டு இருக்கணும்., தப்பு என் மேலயும் தான்., சோ என் பையன் இஷ்டம் அவன நான் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த மாட்டேன்., ஒரு வேளை என் பையன் இங்க வரக்கூடாதுன்னு சொன்னீங்கன்னா., அவன் அவன் கம்பெனி பக்கம் ஒரு வீடு இருக்குல்ல அங்கேயே இருந்துப்பான்”, என்று சொன்னார்.