“ஏன் உன்ன கடத்திட்டு வந்தத, போலீசுக்கு நானே எவிடன்ஸ் கொடுக்கவா”, என்று கேட்டான்.

   “நிச்சயமா கேமரா கிடையாது இல்ல”, என்று கேட்டுக் கொண்டவள்.,

   அதன்பிறகு பாத்ரூமுக்கு சென்று வந்த பிறகு.,

    “உட்காரு” என்று சொல்லி மீண்டும் கட்டி வைக்கப் போனான்.

    “இல்ல, நான் இங்கிருந்து ஓடி எல்லாம் போக மாட்டேன், கட்ட வேண்டாம்”, என்று சொன்னாள்.

   “அதெல்லாம் கிடையாது” என்று சொல்லி மீண்டும் அப்போது போலவே அவளை கட்டி வைத்தான்.

    அவள் தான், “எதுக்காக என்ன கட்டி வச்சிருக்க”, என்று கேட்டாள்.

   “கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமா, சொல்றேன்”, என்று சொல்லிவிட்டு.,

“ஆமா கேமரா இருக்கா., கேமரா இருக்கா ன்னு, இங்க இத்தனை கேள்வி கேக்குறியே., உங்க மாமனோட ரூம்ல போய் எத்தனை நாள் அரட்டை அடிச்சிருக்க, ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணியிருக்க, அப்பல்லாம் உனக்கு கேட்கணும்னு தோணலையா”, என்றான்.

   “ஹலோ எங்க மாம்ஸ்  அவங்கள பத்தி உனக்கு எப்படி தெரியும்”, என்றாள்.

   “மரியாதையா பேசு” என்றான்.

    “மரியாதையா  எல்லாம் பேச முடியாது”, என்றாள்.

“ஓஹோ மேடமுக்கு மரியாதை எல்லாம் மாமன்களை பார்த்து தான் வருமோ”, என்றான்.

    வாயை திறக்காமல் அமைதியாக அவனையே பார்த்தாள்.

   ‘இவனை இதற்கு முன்பு எங்கும் பார்த்து இருக்கிறோமா’ என்று யோசித்தாள்.,  பின்பு தலையை திருப்பிக் கொண்டு அமரந்தாள்.

    அதற்குள் உணவு வந்து விட்டதாக அப்போது வந்தவன், வந்து கையில் கொடுத்து விட்டு சென்றான்.

   இவனும் அவனிடம் பிளேட்ஸ் கேட்க, அவன் சென்று எடுத்து வந்தான்., கூடவே தண்ணீர் பாட்டில் எல்லாம் சேர்த்து எடுத்து வந்தான்.

   அமைதியாக தட்டில் வைத்தவன் , அவளைப் பார்த்துக் கொண்டே உணவை எடுத்து வந்தான்.

     அவளோ, அவள் இருந்த இடத்திலேயே முகத்தை திருப்பி  அமர்ந்திருந்தாள்.

    அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை., அவனோ அவள் வாய் அருகில் உணவைக் கொண்டு வர வேகமாக தலையை நகட்டியவள்.,

    “என்ன பண்றீங்க”, என்று கோபமாக கேட்டாள்.

   “ஊட்டி விடுறேன்”, என்றான்.

    “நீங்க யாருங்க.,  நீங்க கொடுக்கிறதெல்லாம் நான் சாப்பிட முடியாது”, என்று சொன்னாள்.

  அவனோ அவள் சொன்னது எதையும் காதில் வாங்காமல்., அவளையே பார்த்தபடி., “உனக்கு குட்டி ன்னு  கூப்பிட்டா பிடிக்குமா.,  பாப்பா ன்னு கூப்பிட்டா பிடிக்குமா”, என்று கேட்டான்.

   அவனையே அதிர்ச்சியாக பார்த்தவள்.

     “உங்களுக்கு எங்க மாமாவ  பிடிக்காதா., அவங்களோட எனிமியா நீங்க”, என்று கேட்டாள்.

    அவனும் சிரித்தபடி “எனக்கு எனிமியா இருக்குறதுக்கு உங்க மாமன்களுக்கு தகுதியே கிடையாது, சரியா., எனக்கு யாரும் எனிமி கிடையாது., எனக்கு எனிமியா இருக்கணும்னு அதுக்குன்னு ஒரு தகுதி வேணும்”, என்று சொன்னான்.

     இவள் மனதிற்குள்ளோ., ‘ஆமா பெரிய இவன்’ என்று நினைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

    “என்ன.,  ஏதாச்சு என்னை திட்டுறீயா என்ன”, என்று கேட்டான்.

    வேகமாக இல்லை என்று தலையாட்டினாள்.

       “அப்போ கண்டிப்பா திட்டியிருக்க”, என்று சொன்னபடி “சரி வாயைத் திற” என்று சொல்லி உணவைக் கொண்டு போக இவளோ அழுத்தமாக வாயை மூடியிருந்தாள்.

    நிதானமாக தட்டை அருகில் இருந்த மற்றொரு சோபாவில் வைத்தவன்., அவள் கன்னத்தை அழுத்தமாக பிடித்து அவள் வாயை திறக்க வைத்து உணவை வாய்க்குள் திணித்தான்.

    பின்பு வாயை அழுத்தமாக மூடி “சாப்பிடு முழுங்கு”, என்று அதட்டலாக சொன்னான்.

    இவளோ கண்ணில் வந்த லேசான பயத்தோடு அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

    அவனும் “சத்தமே இல்லாம வாயைத் திறந்தா, கட கட ன்னு சாப்பாடு உள்ள போகும்., ஏதாவது பேசுன., இல்ல வாயைத் திறக்க மாட்டே ன்னு அடம் பிடிச்ச.,  அப்புறம் தான் இருக்கு”, என்று சொன்னான்.

    “என்ன வாய ஒழுங்கா திறப்பியா”, என்று கேட்டான்.

    வேகமாக தலையை மட்டும் ஆட்டினாள். அடுத்த துண்டு  உணவை அவள் வாயில் கொடுத்தவன்.,

    “உன் மாமனுங்க ரெண்டு பேரும் உனக்கு பப்ளிக் பிளேஸில் வைத்து கூட ஊட்டி இருக்கான்”, என்றவுடன் இவள் அவனை யோசனையாக நிமிர்ந்து பார்த்தாள்.

   அது தான் நீ ஒர்க்ல ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் ன்னு நினைக்கிறேன்., ம்ஹூம், கரெக்ட் உன் மாமனுங்க ரெண்டு பேரும் அவன் ஊருக்கு போறதுக்கு முன்னாடி., எல்லோரும் சேர்ந்து ஹோட்டலுக்கு போய் இருந்தீங்களா., சாப்பிட்டீங்களா அப்போ அவங்க பிரண்ட்ஸ் எல்லாம் வந்திருந்தாங்க தானே,  அந்த நேரத்துல நீ உனக்கு பிடிச்சது ஆர்டர் பண்ணாலும்., அவனுக்கு பிடிச்சது ஆர்டர் பண்ணீனாங்க, உனக்கு ஒவ்வொரு வாய் எடுத்து ஊட்டினாங்களா., ஹோட்டல்ல பப்ளிக் பிளேஸ்ல வச்சு ஊட்டுறான்., உனக்கு அதெல்லாம் தப்பு இல்ல.,  உனக்கு இந்த ரூம்ல வச்சு நான் கொடுத்தா வாங்க மாட்டியா”, என்றான்.

    அதுவரை அமைதியாக அவன் கொடுத்த உணவை வாங்கிக் கொண்டிருந்தவள் அவனிடம் பதில் பேசினாள்.

     “அவங்க ரெண்டு பேரும் எங்க மாமா, எனக்கு தெரியும் நீங்க யாரு., நான் எதுக்கு உன்கிட்ட வாங்கணும்”, என்று சொன்னாள்.

    “பார்றா கோவம்  எல்லாம் வருது உனக்கு”, என்று சொல்லிவிட்டு “சரி நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லலையே, குட்டின்னு கூப்பிட்டா பிடிக்குமா., பாப்பான்னு கூப்பிட்டா பிடிக்குமா”, என்று கேட்டான்.

     இவளோ அமைதியாக இருந்தாள்.

    “சரி அப்போ அதையும் சொல்ல மாட்ட., உனக்கு நான் எதுக்கு உன்னை தூக்கிட்டு வந்தேன் ன்ற விஷயமாவது உனக்கு சொல்லனுமா., வேண்டாமா”, என்று கேட்டான்.

     ‘ஆமா’ என்னும் விதமாக தலையாட்டினாள்.

    “அப்ப ஓகே இப்ப சாப்பிட்டு முடி., நான் உனக்கு கதை சொல்றேன்., இந்த கதை நல்ல இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் பாத்துக்கோ”, என்று சொன்னாள்.

    அவனையே  பார்த்திருந்தவள் யோசனையானாள்.

   “ஆமா என் கிட்ட இவ்வளவு யோசிக்கிற, சரி நான் யாருன்னு தெரியாதவனாக இருக்கட்டும்., பப்ளிக் பிளேஸ் ல உன் மாமனுங்க கூட தொட்டுப் பிடிச்சு விளையாடுற”., என்றான்.

     இவளோ அவனை மீண்டும் யோசனையாக பார்த்தாள்.

    “அது தான் மா, நீ ஜெர்மன் போறதுக்கு முன்னாடி ஏர்போர்ட்ல அவனுங்க ரெண்டு பேரையும், அங்க வச்சு அடிக்கிற, அவனுங்க இரண்டு பேரும் உன்னை துரத்தி ஓடி வரானுங்க., விளையாடுறீங்க, சிரிக்கிறீங்க., போகும் போது ரெண்டு பேரும் உன்னை தோளோடு ஹக் பண்ணிட்டு போறாங்க”, என்றான்.

   இவளோ அவனை முறைத்து பார்த்தவள்., “தப்பா பேசாதீங்க., அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ன்னு சொல்லுவாங்க., அந்த மாதிரி தான் இருக்கு,   பார்க்கிறவங்க கண்ணுல தப்பு இருந்தா., தப்பா தான் தெரியும்.,  உங்களுக்கு அவங்கள பத்தி தெரியாது”, என்றாள்.

     “எனக்கு அவங்கள பத்தி தெரியாது”, என்றான் கேள்வியாக.,

   “ஆமா உங்களுக்கு அவங்களை பத்தி தெரியாது., அவங்கள நான் எந்த இடத்தில் வைத்து பார்க்கிறேன் ன்னு உங்களுக்கு தெரியாது., சோ தயவு செய்து இப்படி எல்லாம் அவங்கள பத்தி பேசாதீங்க., அவங்கள பத்தி உங்களுக்கு என்ன தெரியும்”, என்றாள்.

    “என்ன தெரியும் ன்னு  நான் சொல்லவா, உன்ன பிரைன் வாஷ் பண்ணி மெடிசின் சேர்க்க வந்தவங்க., மெடிசன் சேர்க்க முடியலன்னு நீ அங்க தனியா இருக்கிறதை பார்த்த உடனே உன்னோட படிப்பை இங்கே கொண்டு வந்தாங்க, சரியா எல்லாம் கரெக்டா”, என்றான் .

     “வேற என்ன  எல்லாம் தெரியும்”,என்றாள்.

    “எல்லாம் தெரியும்”, என்று சொன்னான்.

    “அப்ப நீங்க யாரு, உங்களுக்கு எப்படி எல்லாம் தெரியும்”, என்று கேட்டாள்.

  “நீ இதுக்குள்ள என்னை மலையாளி ன்னு கெஸ் பண்ணி இருப்ப., நான் மலையாளியா இருந்தா எனக்கு வினித்த பத்தி தெரியும்., வினித் பத்தி தெரிஞ்சா அவன் கூட இருக்கிற முகேஷ் பத்தியும் தெரியும்., அப்போ அவனுங்க  ரெண்டு பேரு கூட சுத்துற உன்ன பத்தியும் தெரியும்”, என்று சொன்னான்.

    “சுத்துறேன் ன்னு தேவையில்லாம பேசாதீங்க”, என்று சொன்னாள்.

   “என் கூட அதே மாதிரி வருவீயா”, என்றான்.

  அவனை பார்த்து முறைத்தவள்.,

      “எங்க மாம்ஸ் பத்தி, முக்கியமா என்னை பேசுறதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது”,என்றாள்.

    “எனக்கு ரைட்ஸ் இல்லையா., அதை அப்புறம் பேசலாம், நான் உனக்கு கதை சொல்லணும் இல்ல”, என்றான்.

     “ஆமா சொல்லுங்க” என்றாள்.

   அதற்குள் அவளுக்கு அடுத்த வாயை திணிக்க போக.,  “ப்ளீஸ் வேண்டாம், இதுக்கு மேல எனக்கு சாப்பிட முடியாது”, என்று சொன்னாள்.

   பாட்டில் பிரித்து தண்ணீரை அவள் வாயில் புகட்டினான்.

    “எங்கேயும் ஓடி எல்லாம் போக மாட்டேன்”, என்று சொன்னாள்.

   “ஓடிப்போக மாட்ட, ஆனா என்னை அடிச்சிட்டா”, என்றான்.

   “ப்ளீஸ் எனக்கு தூங்கணும்”, என்று சொன்னாள்.

     “கதை வேண்டாமா”, அவள் அமர்ந்திருந்த சோபாவிற்கு முன் மற்றொரு சோபாவை இழுத்து போட்டவன்., அவன் உண்டபடியே அவளிடம் “கதை சொல்லவா”, என்றான்.

    “நீங்க சொல்லலை ன்னா இப்ப தூங்கிடுவேன்”, என்று சொன்னாள்.

   “பொறு பொறு தூங்கிறாத, தூங்கிறாத, இன்னைக்கு கதையை கேட்டுட்டு தான் தூங்குற, சரியா”, என்றவன்.

    “முதல்ல நான் சாப்பிட்டு முடிச்சிடறேன்”, என்று சொல்லிவிட்டு சாப்பிட்டு முடிப்பதற்குள் இவள் அரை தூக்கத்திற்கு சென்றிருந்தாள்.

அவன் சாப்பிட்டு முடித்தவுடன்.,  அவள் கட்டை எல்லாம் அவிழ்த்து விட்டான்.

    அப்படியே தூங்கி அந்த ஒற்றை சோஃபாவில் விழுந்தவள்., “சரி நீ போங்க, நான் காலையில கதை கேட்டுக்கிறேன்”, என்று சொன்னாள்.

    அவள் கையை பிடித்து தூக்கி எழுப்பினான்.

   “ஏய் நான் உன்னை தூக்கிட்டு வந்து இருக்கேன்”.,  என்றான்.

   “பரவால்ல காலையில கதை சொல்லுங்க”, என்றவள், “இப்ப வெளியே போங்க” என்றாள்.

      “ஹே என் வீட்ல உட்கார்ந்துட்டு, என்னையே வெளியே போனு சொல்லுவியா”, என்றான்.

    “அப்புறம் நான் தூங்கணுமே”,என்றாள்.

“தூங்கு இது  என் ரூம் தான்”, என்றான்.

   ” ஹலோ என்ன விளையாடுறீங்களா”, என்று கேட்டாள்.

  “ஹலோ என்ன நீ., உங்க மாமாவோட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ், உங்க மாம்ஸ், நீ  அஞ்சு பேரும் சினிமாவுக்கு போயிட்டு ஒருநாள் உன்  வீட்டில் தான் அவனுங்க அந்த பொண்ணுங்க அஞ்சு பேர் இருந்தீங்க.,  அந்த ரெண்டு பெண்களையும் தனியாக அவங்க கூட தங்க வைக்க தங்க முடியாதுன்னு.,  சொல்லிட்டு, உன்  வீட்டில் அவங்க தான் இருந்தீங்க தெரியும்”, என்றான்.

        “எங்க மாமாவும், நீங்களும் ஒன்னா”, என்றாள்.

     “அப்படியா சரி., நம்ம கதை கேட்கலாமா”, என்றான் .

      அவளோ மெதுவாக முணுமுணுப்பாக புலம்பினாள்.

   அவனும் “ஹலோ என்ன கடத்திட்டு வந்துருக்கேன், அந்த பயம் இருக்கா., இங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம், உன்னை நான் இப்ப ஸ்வாஹா பண்ணினா என்ன செய்வ”, என்று கேட்டான்.

   “அட போயா அதுக்கு ஒரு மூஞ்சி வேணும்., உனக்கு அந்த மூஞ்சி இல்ல”, என்று சொன்னாள்.

அவனும் சத்தமாக சிரித்தவன், அவளை பார்த்துக் கொண்டே நின்றான். இவளோ அவனை நிமிர்ந்து பார்க்க அவ்வளவு தூக்க கலக்கத்திலும், ‘நல்லா தான் இருக்கான், பெரிய இடம் போல, மாம்ஸ்  குடும்பத்தை விட பெரிய இடமா இருக்குமோ’, என்று யோசித்துக் கொண்டாள்.

பின்பு தூக்க கலக்கத்தோடு சென்று பெட்டில் படுத்தவள், “குட் நைட் கடத்தல்காரரே, எதுவா இருந்தாலும் காலைல கதை சொல்லுங்க., இப்ப டிஸ்டர்ப் பண்ணாம வெளிய போயிருங்க”, என்று சொல்லிவிட்டு படுத்து கண்ணை மூடியவுடன் உறங்கிப் போனாள்.

  அவன் தான் அவளை பார்த்த வண்ணம் அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

    ‘கொஞ்சமாவது பயம் இருக்கா, தூக்கிட்டு வந்து இருக்கேன், கடத்திட்டு வந்திருக்கேன்னு தெரியுது., ஹலோ கடத்தல்காரரே ன்னு  கூப்பிடுது, எவ்வளவு திமிர் அவளுக்கு’, என்று நினைத்தவன் அவளில் இருந்து சற்று தள்ளி அவள் முகத்தைப் பார்த்தபடியே படுத்தான்.

  அவன் வாயோ மென்மையாக, “என் கண்மணி, உன்னை அருகில் வைத்து பார்க்கும் ஆசை இன்று தான் நிறைவேறியது”, என்று மெதுவாக முணுமுணுத்தான்.

அது எதுவும் கேட்காதவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

பார்க்கும் அனைத்திலும் கண்கள் ஆசை வைத்தாலும்.. மனம் அதில் சிறந்ததை தேடி தான் ஆசை வைக்கிறது.