“அப்போ நீயே கல்யாணம் பண்ணிக்கிறியா”, என்று வினித்தின் தாத்தா கேட்டார்.
“என்ன கிண்டல் பண்றீங்களா”, என்று வினீத் கேட்டான்.
இது எல்லாம் புரியாமல் அவள் அமைதியாக இருந்தாலும், வக்கீலோ, “என்ன பேசுறீங்கன்னு சொல்லுங்க, நாங்க இங்க லாங்குவேஜ் தெரியாதவங்க இருக்கோம்ல”, என்று கேட்டார்.
வினித் அம்மா தான், வினித் வீட்டில் சொன்னதை ட்ரான்ஸ்லேட் செய்தார்.
அங்கு முகேஷ் அம்மாவோ, ‘ஓ அவங்க அப்படி சொன்னா, அவங்களுக்கு சொத்துப் போயிருமே, என்று நினைத்து விட்டு
“அப்போ எங்க முகேஷ் கல்யாணம் பண்ணிக்குவான்”, என்று சொன்னார்.
இவளோ இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு.,
“மாம்ஸ் ரெண்டு பேரும் எவனாவது ம்ம் தலை ஆட்டின, அப்புறம் நடக்கிறதே வேற., சோத்துல விஷத்தை வச்சிருவேன்”, என்று தமிழில் சொல்லி அவர்களை மிரட்டி கொண்டிருந்தாள்.
அங்கு தமிழ் புரிந்த வக்கீல் ஆடிட்டர் குடும்பம் சிரித்தனர்.
“என்ன”., என்று மற்றவர்கள் கேட்டனர்.
இவர்களோ, “இல்ல அவங்களுக்குள்ள பேசுகிறாங்க”, என்று சொல்லி அவர் பேச்சை முடித்தனர்.
மாமன்கள் இருவரும், “சரி வா, நம்ம தனியா பேசுவோம்”, என்று அவளை தள்ளிக் கொண்டு இருவரும் பெட்ரூமிற்குள் சென்றனர்.
வீட்டினர் தான் ஆ என்று பார்த்தபடி இருந்தனர்.
ஏற்கனவே இவர்கள் மூவரும் நன்கு பழகுவது அனைவருக்கும் தெரியும்.,
உள்ளே சென்றவுடன், “சரி இப்ப சொல்லு, அவன கல்யாணம் பண்றியா, இல்ல என்னை கல்யாணம் பண்றியா”, என்று வினீத் கேட்டான்.
“மாம்ஸ் இப்படியெல்லாம் பேசாத, ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ண முடியாது”, என்று சொன்னாள்.
“ஏய் இது நல்லா ஐடியாவா இருக்கு, கல்யாணம் பண்ணிக்கோ”, என்று சொன்னார்கள்.
“எனக்கு அப்படி ஒரு பீலே வரல”, என்று சொன்னாள்.
“பாப்பா ஏன் அப்படி ஃபீல் வரல”, என்று முகேஷ் கேட்டான்.
“விளையாடாத மாம்ஸ்”, என்று சொன்னாள்.
அங்கு மூவரும் சிரித்தபடியே நின்றனர்.
“குட்டி வேற வழி இல்லன்னா, தலையெழுத்தே ன்னு, என்னை கல்யாணம் பண்ணிக்கோ”, என்று வினித் சொன்னான்.
“மாம்ஸ் ஓவரா பேசாத, சோத்துல விஷத்தை வைக்கிறது கன்பார்ம்”, என்று சொன்னாள்.
முகேஷ், “பாவம் பாப்பா அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம், எனக்கும் கூட ஒரு சான்ஸ் தரலாம்”, என்று சொன்னான்.
“நோ மாம்ஸ், நீங்க ரெண்டு பேரும் சரியில்லை, நான் போறேன்”, என்று சொன்னாள்.
இருவரும் அவளை இழுத்து பிடித்து பேசிய படி, “நாங்க இதுக்கு ஒரு ஐடியா பண்ணிட்டு உனக்கு சொல்றோம் சரியா, உன்னை ஜெர்மன் அனுப்ப வருவோம்ல, அப்ப உனக்கு சொல்றோம் சரியா, இப்போதைக்கு இதை பேச வேண்டாம், நீ ஜெர்மன் போயிட்டு வந்த உடனே பேசலாம்”, என்று சொன்னவர்கள், வா இப்போ எல்லாருக்கும் பாய் சொல்லிடுவோம்”, என்று சொன்னார்கள்.
“சரி நீ ரெண்டு பேரும் என்ன கல்யாணம் பண்றதா இருந்தா, உங்கள நம்பி இரண்டு ஜீவன் அங்க இருக்கே அதுக்கு என்ன பண்ணனும் ன்னு சொல்லுங்க”, என்றாள்.
“அதை சைடா பார்த்துக்கலாம், நீ மெயின் வைஃபா இருந்துக்கோ”, என்று சொன்னான்.
“அடி” என்று இருவரையும் விரட்ட இருவரும் ஓடி வந்து வெளியே நல்ல பிள்ளை போல நின்றுக்கொண்டனர்.
இவள் தான் இருவரையும் முறைத்தப்படி நின்றாள். அப்போதும் அவளின் இருபுறமும் வந்து சேர்ந்தே நின்றனர்.
அவர்கள் சொன்னது போலவே, “அவ ஜெர்மன் போயிட்டு வரட்டும், ஜெர்மன் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் நம்ம மத்தத பேசிக்கலாம்”, என்று சொல்லி அத்தோடு பேச்சை முடித்து அவரவர் வீடு நோக்கி கிளம்பினர்.
மாமன்கள் இருவரும் இவளோடு சேர்ந்து அமர்ந்தனர். வக்கீலும் ஆடிட்டரும் கிளம்ப தொடங்க,
இவளோ அவர்களிடம், “ஏன் இப்படி ஒரு டாபிக் எடுத்தீங்க, இப்ப பாருங்க இவங்க ரெண்டு பேரும் என்ன கிண்டல் பண்ணுறாங்க, என்ன கல்யாணம் பண்ணிக்கோ, என்ன கல்யாணம் பண்ணிக்கோ ன்னு சொல்லிட்டு இருக்காங்க., இவனுங்க ரெண்டு பேருக்கும் கேர்ள் பிரண்ட் இருக்கு தெரியுமா”, என்று சொன்னாள்.
“இவனுங்க ஆல்ரெடி லவ் பண்ணவங்க, இவங்களை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், எனக்கு வர்றவன் வேற லெவல்ல இருக்கணும்”, என்று சொன்னாள்.
அவரோ “இல்ல தர்ஷனா உனக்குனு ஒரு லைப் வேணும்., இவங்க சொத்தை எழுதி குடுக்குறது பிரச்சனை இல்ல., இப்ப அதனால எந்த பிராப்ளமும் வரப்போவதில்லை., நான் வேணும்னே தான் இந்த பேச்சை எடுத்தேன்”, என்று சொன்னார்.
வினித்தும் முகேஷும் அதிர்வோடு எழுந்து நின்று விட,
“உண்மை தானே பா, இவளை இப்படியே விட்டுட்டு நீங்க எல்லாம் உங்க உங்க பேமிலிய பார்த்துட்டு போயிட்டீங்கன்னா., இந்த பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை வேண்டாமா”, என்று கேட்டாள்.
“ஐயோ அங்கிள், ப்ளீஸ் இந்த பேச்சை விட்ருங்க, பார்க்கலாம் அங்கிள், யோசிப்போம்,ஜெர்மன் போயிட்டு வரேன், ஒருவேளை எனக்கு ஜெர்மன் ல யாராவது செட்டாயிட்டா கையோட கூட்டிட்டு வந்துருவேன் பொறுங்க”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் அவர்கள் கிளம்பினர்.
அவள் அமைதியாக “விளையாட்டு தானமா யோசிக்காத மாம்ஸ்., ரெண்டு பேரும் எதுவும் விபரிதமா முடிவு பண்ணாமா போங்க., கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட போய் பேசி ஐடியா கேளுங்க., அவங்க ஏதாவது ஐடியா சொல்லுவாங்க”, என்று சொன்னாள்.
அவனும் சிரித்தபடி, “ஒன்னும் வழி இல்லன்னா, கேர்ள் ஃப்ரெண்ட்ஸ கழட்டி விட்டுருவோம், அவங்க ஜஸ்ட் லவ் தான்., அதுவும் இப்போ லாஸ்ட் 2 இயர்ஸ் தான்., மத்தபடி நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம். ,அது மட்டும் இல்லாம நீ எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப முக்கியம்., எங்களால உன்னை அப்படி விட முடியாது.,
இங்கே வரும் முன்பே போன் பண்ணி எங்ககிட்ட சொன்னாரு, இப்படி ஒரு ப்ராப்ளம் இருக்கு, என்ன முடிவு பண்ண போறீங்க ன்னு கேட்டாரு, அப்பவே நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம்., ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு”, என்று சொல்லி முடிப்பதற்க்குள்.,
“டேய் விளையாடுறீங்களா”, என்றாள்.
“ஏன் இந்த மாதிரி ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு சம்பவம் நடந்திருக்காம், ரெண்டு பிரண்ட்ஸ் சேர்ந்து ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம், அதே மாதிரி இப்போ நான் உனக்கு அத்தை பையன், அவன் உனக்கு மாமா பையன், சரிதானே குட்டி”, என்று கேட்டான்.
“பாப்பா ரொம்ப யோசிக்காத”, என்று சொல்லி இருவரும் தோளில் கையை வைத்தனர்.
“டேய் கொன்னுடுவேன், என்னை தொட்டீங்கன்னா போங்கடா”, என்று சொன்னாள்.
“உங்களை பார்த்தா எனக்கு அப்படி ஒரு பீலே வரலை”, என்று சொன்னாள்.
“இதுக்கு நாங்க சூப்பர் ஐடியா சொல்றோம் பாப்பா, சரி நாங்களும் கிளம்புறோம், இன்னைக்கு ஈவினிங் ஃப்ளைட் போயிட்டு, ஜெர்மன் கிளம்பும் போது வரோம், பாய் நீ நல்ல யோசிச்சு வை”, என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்.
“இந்த மாம்ஸ் ரெண்டு பேரும் லூசு புடிச்சு அலையுறானுங்க”, என்று திட்டிக் கொண்டவள்.,
‘சும்மா சொல்லுவாங்க, கிண்டலுக்கு சொல்லுவானுங்க., மத்தபடி நல்ல பசங்க, ஏதோ கிண்டலுக்கு ஜாலிக்கு பேசிட்டு போறாங்க’., என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் எத்தனை சீரியஸாக பேசுகிறார்கள் என்பதை உணராமல்.,
நாட்கள் வேகமாக சென்றது போல தான் இருந்தது., அப்போதே இவளுக்கு திவ்யாவுடன் பழக்கம் இருந்ததால்., திவ்யாவோடு தான் ஜெர்மனுக்கு இவளுக்கு தேவையான ஆடைகளையும் குளிருக்கு அணியக் கூடிய உடைகளையும் வாங்கினர்.
அங்கு தங்குவதற்கு கம்பெனியிலிருந்து எப்படி இடம் கொடுப்பார்கள்., என்பதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் எல்லாம் தயார் செய்தாள்.
அங்கு பொருட்கள் கிடைக்கும் என்பதால், மற்றவை எதுவும் வாங்கவில்லை.,
துணிமணிகள் மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்புவதற்கு தயாரானாள்.
அவளை அனுப்புவதற்காக முதல் நாளே வருவதாக சொன்ன இருவரையும்., “நீங்க ரெண்டு பேரும் முதல் நாள் வர வேண்டாம், மறுநாள் வாங்க, நான் நல்லபடியா தூங்கி எந்திரிச்சு காலைல சீக்கிரமா ஏர்போர்ட் வந்துருவேன்., ஏர்போர்ட்ல வச்சு பேசிக்கலாம், இப்ப நீங்க வீட்டுக்கு வராதீங்கடா”, என்று சொன்னாள்.
அவனோ, “ஏன் குட்டி நாங்க வந்தா உனக்கு டென்ஷனா இருக்கும் ன்னு பயப்படுறியா., இல்ல உன் மனசு மாறிடும் பயப்படுறியா., மாம்ஸ் ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே”, என்று வினீத் கேட்டான்,