யூ எஸ் ல் வந்து இறங்கியவளை அழைத்துச் செல்ல வேண்டி எந்த கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்தாலோ, அந்த கம்பெனியில் இருந்து கார் அனுப்பப்பட்டிருந்தது.
அவளுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்து சென்ற கார் டிரைவர் அவளிடம் விளக்கம் கொடுத்தார்.,
“இந்தியாவில் இருந்து வந்த உங்க பாஸ் க்கும், உங்களுக்குமான வீடு இது, ஒரே வீடு போல் இருக்கும்”, என்று சாவியை கொடுத்தவர்.,
“வீட்டிற்குள் செல்லலாம்”, என்று சொல்லி வீட்டை மட்டும் வந்து காட்டி தந்தார்.
வாசல் சாவியை போட்டு திறக்கவும்., அவர் சொன்னார் “ஒரே வாசல் தான், ஹாலும் கிச்சனும் பொதுவானது., மற்ற பொருட்கள் எல்லாம் இருவருக்கும் தனித்தனி”, என்று சொல்லி உள்ளே வந்து விளக்கம் கொடுத்து விட்டு சென்றார்.
வீட்டை சுற்றி பார்க்க அது ஹைதராபாத் யூனிவர்சிட்டியை அவளுக்கு ஞாபகப்படுத்தியது., ஒரு செமினார் காக ஹைதராபாத் யூனிவர்சிட்டி சென்றிருந்தவர்களுக்கு அது போல தான் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.,
நடுவில் பெரிய ஹாலும் சுற்றிலும் அவரவருக்கான அறையின் முன்பு அவர்களுக்கு என சிறு தடுப்பு போல அமைத்து அதில் கிச்சனும் வைத்திருந்தார்கள்.,
அதுபோலவே தான் இங்கும் இருந்தது., ஆனால் என்ன கிச்சன் இருவருக்கும் பொதுவானது., நடுவில் இருந்த ஹாலும் பொதுவானது.,
இரண்டு அறை மட்டும் ஒதுக்கி இருந்தார்கள்.
மற்ற அறைகள் ஆட்கள் வந்தால் தங்குவதற்கு என ஒதுக்கப்பட்டு இருப்பதாக சொன்னதை கேட்டு இவளும் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
வந்து சேர்ந்ததை அனைவருக்கும் மெசேஜ் மூலம் தெரிவித்தாள்,
உங்க பாஸ் என்று டிரைவர் சொன்னது மட்டுமல்லாமல்., மறுநாள் அவள் அங்கே உள்ளே அலுவலகத்தில் போய் சேரும் போதும் அதையே சொன்னார்கள்.
“உங்கள் பாஸ் இரண்டு நாளில் வந்துருவாங்கல்ல”, என்று இவளிடம் கேட்டனர்.
இவளோ யோசித்து விட்டு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.
அலுவலகத்திற்கு மெயில் செய்தாள், நேராக சிஇஓ பார்க்கும் மெயிலுக்கு மெசேஜ் செய்ய, அவனும் பார்த்து விட்டு ‘அய்யய்யோ அந்த பொண்ணு ட்ட இப்ப உண்மையை சொல்ல வேண்டுமே’ என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.
போனில் அவளை அழைத்தவன், “இப்போதைக்கு உங்க பாஸ் அப்படின்னு சொல்றது என்னோட ஃப்ரெண்ட் தான்., அவன் தான் வருவான்., நான் இல்ல, ஏன்னா அவங்க கம்பெனிக்கு தான் நீங்க ப்ராஜெக்ட் செய்ய போயிருக்கீங்க., அவங்க கம்பெனிக்கு எப்பவும் செஞ்சு கொடுக்கிறது யூஸ்ல தான்., உங்க ஜெர்மன் ப்ராஜெக்ட் நல்லா இருக்கு அப்படிங்கறதால தான் உங்களை செலக்ட் பண்ணி இருக்காங்க., சோ நீங்க உங்களோட பெஸ்ட் குடுங்க., என்னோட ப்ரண்ட் மட்டும் இல்லாம அவன்…, சரி நீங்க வொர்க் ஆரம்பிங்க அதுக்கப்புறம் என் ப்ரண்ட பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு ஏதும் டவுட் வந்துச்சுன்னா, நீங்க எனக்கு மெயில் பண்ணுங்க”, என்று மட்டும் சொல்லி இருந்தான்.
‘இந்த மனுஷன் என்னடா இவ்ளோ மரியாதை கொடுத்து பேசறாரு’ என்று நினைத்தாள்.
பின்பு ‘யாரோ ஃப்ரெண்ட்’ என்று நினைத்துக் கொண்டு தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.
அவள் மாமன்கள் சொன்னது போல இவளுக்கு ஜெட் லாக் படுத்தி எடுத்தாலும்., வேலையின் மும்மரத்தில் அதை மறக்க தொடங்கினாள். ஆனாலும் சற்று சிரமப்பட்டு அவளது வேலையை செய்தாள்.
பின்பு வேலையின் மும்மரத்தில் மற்றவற்றையும் அங்குள்ளவற்றிக்கு தக்க மாற்றிக் கொண்ட போது இவளுக்கு பாஸ் ஆக இங்கு இருக்க போகிறவன் வந்து சேர்ந்தான்.
அன்று வேலை முடிந்து அறைக்கு வரும் போது யாரோ வந்திருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
எதிர்த்தார் போல் பாஸுக்கென்றே இருந்த அறை சாத்தி இருந்தாலும் வெளியே ஹாலில் சில பொருட்கள் அப்படி கிடந்தது.
தன்னறைக்கு சென்றவள் கதவை சாத்தி விட்டு தன்னை ரெப்ஃரஷ் செய்து கொண்டு வந்தவள், உணவை தயாரிக்க சென்றாள்.,
அங்கு ஏற்கனவே உணவு ஆர்டர் செய்து வாங்கி வைத்திருப்பது தெரிந்தது.,
பார்த்துவிட்டு அவளுக்கு மட்டும் தயார் செய்தவள், சாப்பிட்டு விட்டு எப்போதும் போல பாத்திரத்தை எல்லாம் கழுவி அதன் இடத்தில் வைத்தாள்.
‘வீக் என்ட் வந்தவுடன் முதலில் போய் தேவையான பொருட்களை வாங்கணும்., இந்த பாஸ்தா, நூடுல்ஸ் இதெல்லாம் இன்னும் ரெண்டு நாளைக்கு சாப்பிட்டேனா, என் நாக்க கொண்டு போய் அடக்கம் தான் பண்ணனும்’, என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டவள்,
விளக்கு எல்லாம் அணைத்து எப்போதும் போல டீம் லைட்டை போட்டு வைத்து விட்டே வந்தாள்., ஏனென்றால் ‘அந்த புது பாஸ் வேற வந்திருக்கிறார், அவர் என்ன செய்வாரோ தெரியாது., எப்போது எழுந்து வருவாரோ, முதலில் எப்போது வந்து சேர்ந்தாரோ அதுவும் தெரியாது’,என்று நினைத்துக் கொண்டே அவள் அறைக்கு சென்று தூங்கிவிட்டாள்.
காலை எழும் போதும் எந்த அரவமும் இல்லை., அவளுக்கு தேவையானதை மட்டும் தயாரித்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேலைக்கு கிளம்ப தயாரான போது அலுவலக கார் அழைத்துச் செல்ல வந்தது.,
எப்போதும் செல்லும் நேரத்திற்கு அலுவலகம் சென்று சேர்ந்தாள். அப்போது தான் அந்த டீம் மெம்பர்ஸ் எல்லாரும் “இன்று பாஸ் வந்து விடுவாராமே”, என்று கேட்க தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.
‘வந்திருந்த பாஸ் யார் என்றே பார்க்கவில்லை ,அந்த பாஸ் எப்போது வருவார், என்று எப்படி சொல்வது’, என்று நினைத்துக் கொண்டாள்.
இவர்களின் ப்ராஜெக்ட்டுக்காகவே தனியாக ஒரு பெரிய அறை போல ஒதுக்கப்பட்டிருக்க., அனைவரும் சேர்ந்தமர்ந்து தான் அவரவர் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இஷ்டப்பட்ட இடத்தில் அமர்ந்து கொள்ளும்படி அந்த அறை செட் செய்யப்பட்டிருந்தது.,
ஒருபுறம் சோபா, ஒரு பக்கம் டேபிள் சேர், மற்றொரு புறம் திவான் போன்ற அமைப்புடைய சோஃபா., இவர்களின் லேப்டாப் வைத்துக் கொள்ள லேப்டாப் டேபிள் என ஆங்காங்கே இருந்தது.
அன்று இவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே மற்றொரு லேப்டாப் டேபிளும் சேரும் போடப்பட்டது.
‘ஏற்கனவே இத்தனை இருக்க, இது எதற்கு என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஓஹோ பாஸ் வருவாரே’, என்று நினைத்துக் கொண்டாள்.
‘பாஸ்க்கு தான் இத்தனை இருக்கே எந்த இடத்தில் ஆனாலும் உட்கார்ந்து வொர்க் பண்ணலாமே” என்று நினைக்க.,
அவனுக்கு என்று போடப்பட்டிருந்த சொகுசு இருக்கையே சொல்லியது,கம்பெனிக்கு அவன் எத்தனை முக்கியமானவன், பரீட்சையமானவன் என்று புரிந்தது.
அது மட்டுமல்லாமல் தான் வேலை செய்யும் கம்பெனியின் சொந்தக்காரனும் அதையே சொல்லி அனுப்பி இருக்க., ‘ரைட் ,இடம் பெரிய இடம், நம்ம ஜாக்கிரதையா இருக்கணும்’, என்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் தன்னிருக்கை வந்து அமர்ந்தவன் “ஹாய்”, என்று அனைவருக்கும் பொதுப்படையாக சொன்னான்.
திரும்பிப் பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் தன் கண்ணையே நம்ப முடியவில்லை .
“ஐயோ கடத்தல்காரர்”, என்று தான் தோன்றியது. ஆனாலும் பதில் சொல்லாமல் அவன் முகத்தை மட்டும் பார்க்க.,
அவனும் அவளை திரும்பிப் பார்த்தான், மற்றவரிடம் கையை காட்டிவிட்டு, இவளை பார்த்து தன் புருவத்தை தூக்கி, “என்ன மேடம் நலமா”, என்றான்.
தன் போலத் தலை அசைந்தாலும் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.
“மேடம் இங்க வச்சு பார்த்ததுக்கே வார்த்தை வரலை, வீட்ல வச்சு பார்த்திருந்தால் என்ன பண்ணி இருப்ப”, என்று கேட்டான். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக குனிந்து லேப்டாப்பை பார்ப்பது போல அமர்ந்து கொண்டாள்.
அவனும் வேண்டுமென்றே வம்பு இழுப்பதற்காக., “உன்னோட பாஸ் வந்து இருக்கேன், ஒரு குட் மார்னிங் கிடையாது, ஒன்னும் கிடையாது”, என்று சொன்னான்.
அவன் அவளிடம் லேசாக தலையை சாய்த்து பேசிக் கொண்டிருக்க இவளோ நிமிர்ந்து அவனை பார்த்துவிட்டு சுத்தி ஒரு முறை பார்த்தாள்.
அனைவருமே அவளுக்கு பாஸ் இருவரும் அபிசியல் ஆக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தாலும்,
இவளோ, “இப்படி எல்லாம் பக்கத்துல வந்து பேசாதீங்க” என்று சொல்ல நினைத்தாள்,
ஆனால், “நீங்க பாஸ், பாஸ் மாதிரி நடந்துக்கோங்க”, என்று சொன்னாள்.
“அப்படியா பாஸா”, என்று கேட்டான்.
இவளோ பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
பின்பு அவளிடம் இருந்து எந்த பதிலும் வராது என்பதை அறிந்தவன்., வேலை சம்பந்தமாக அவளிடம் பேச தொடங்கினான். அதன் பின்பே அவன் கேட்பதற்கு மட்டும் பதில் சொன்னாள்.