7

         எப்போதும் போல அதிகாலையில் எழுந்தவள்., தனது வேலைகளை முடித்துக் கொண்டு குளித்து அலுவலகத்திற்கு கிளம்புவது போல தயாரானாள்.

   நல்ல பருத்தியிலான சுடிதார் அணிந்திருந்தாள். அதன் மதிப்பு பார்த்தவுடன் தெரியும் அளவிற்கு தான் இருந்தது., ஏனென்றால் வினித் முகேஷ்  அவளோடு இருக்கும் போது வாங்கிய உடைகள் அனைத்துமே விலை குறைந்தது வாங்க விடமாட்டார்கள்.,

    அது போலவே தான் எப்போதும் அவளது பழக்கம் இருந்தது. ஏற்கனவே இருவரும் செல்லும் போது சொல்லியிருந்தது தான்.,

    “டிரஸ் பக்காவா பண்ணனும் சரியா., ஆள் பாதி ,ஆடை பாதி அதை மறந்துடாத”, என்று சொல்லியே அவளை பழகி இருந்தனர்.

      அவள் ஹாஸ்டலில் இருக்கும் போதே அப்படி தான் எனும் போது இப்போது கேட்கவா வேண்டும்

     அது போல உணவு உடைக்கு மட்டும் நன்றாகவே செலவழிப்பாள்.

     மற்றபடி அவளுக்கென வேற எந்த செலவும் இல்லாத காரணத்தால் சேர்த்து வைக்க தான் செய்வாள்.

   எப்போது வேண்டுமானாலும் வருவார்கள் என்ற நிலையில்., காலை உணவை மட்டும் தனக்கென தயார் செய்து உண்டவள்,

    காலையிலேயே மெய்டை வரச் சொல்லி வீட்டை எல்லாம் சுத்தம் செய்து வைத்திருந்தாள்.

    ஏற்கனவே சோஃபா இருந்தாலும், வருபவர்களுக்கு உட்கார இடம் பத்துமா என்ற எண்ணத்தோடு யோசித்தவள், மற்றொரு பெட்ரூமில் சோபா வித் பெட் என்று வாங்கி போட்டிருந்தவற்றை எல்லாம் நேற்றே, முகேஷ் வினித் வந்திருக்கும் போதே  வெளியே போட்டிருந்தாள்.

         அதை எல்லாம் சுத்தம் செய்து, அதற்கென விரிப்பை போட்டு மெய்ட் இருக்கும் போதே, வீட்டை சுத்தம் செய்தவள் “மாம்ஸ் போன் செய்யுங்க”, என்று மெசேஜ் தட்டி விட்டாள்.

    அடுத்த சில நிமிடங்களில் இருவரிடமும் இருந்து போன்., “என்ன பாப்பா காலையில போன் பண்ண சொல்லி இருக்க”, என்று கேட்டான்.

       “என்னது காலையிலேயே வா, மணி ஒன்பதாக போகுது, நான் காலைல பிரேக்ஃபாஸ்ட்டே முடிச்சிட்டேன்., நீங்க ரெண்டு பேரும் என்ன மாம்ஸ் பண்றீங்க”, என்று கேட்டான்.

        “இனித்தான் குட்டி,  நாங்க நைட் கொஞ்சம் லேட்டா தூங்கினோம்”, என்று சொன்னான்.

      “ஓஹோ பார்ட்டியா”, என்று கேட்டாள்.

    “அப்படின்னு இல்லடா,  பிரண்ட்ஸ் எல்லாம் வந்துட்டாங்க டா”,என்றான்.

    “தெரியும், தெரியும், பார்ட்டி கொண்டாடியிருப்ப., லேட்டா போய் படுத்திருப்ப., அப்புறம் லேட்டா எந்திரிச்சு இருக்க., சரி கிளம்புங்க போங்க., கிளம்பி பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு வாங்க.,  சரி நான் இங்க வர்றவங்களுக்கு எதுவும் வாங்கி வைக்கணுமா., அவங்க என்ன மாதிரி சாப்பிடுவாங்கன்னு சொன்னா வாங்கி வைக்கிறேன்”, என்று சொன்னாள்.

     “அவங்க வரட்டும் குட்டி, பேசாம இரு”, என்று சொன்னான்.

    “ஓகே” என்று விட்டு அமைதியாகிவிட்டாள்.

      அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை., சரியாக அவர்கள் வருவதற்கு சற்று நேரம் முன்பு வக்கீலும் ஆடிட்டரும் அவரவர் மனைவியோடு வந்து சேர்ந்தனர்.

      அவர்கள் வந்து சற்று நேரத்தில், குடும்பத்தினரும் வந்து சேர்ந்தனர்.,

     இவளோ “வாங்க” என்று சொன்னதோடு அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.,

      அப்போது தான் முதல் முதலாக அம்மாவின் அண்ணாவையும், அவர் குடும்பத்தையும் பார்க்கிறாள்.

     அம்மாவின் புகைப்படத்தில் உள்ள அவர் ஜாடை ஒத்திருப்பது அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

      அது போல அப்பாவின் குடும்பத்தையும் “வாங்க”, என்று கேட்டவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

          அவரவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தனர்., வினித்தும் முகேஷ் ம் அவர்கள் சொன்னது போல இவளுக்கு மொழிப்பெயர்ப்பு செய்யவே உதவி செய்தனர்.

    வினித்தின் பாட்டி அதாவது தர்ஷனாவின் அப்பா பாட்டி தான்.,  தர்ஷனாவின் அருகில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

       இவளோ கேள்வியாக வினித்தை பார்த்தாள்.

     அவனும் “நீ உங்க அப்பா மாதிரியே இருக்கியாம், அவங்க பையன பாக்குற மாதிரியே அவங்களுக்கு பீல் ஆகுதாம்”, என்று சொன்னான்.

       சிரித்தபடி அவரிடம் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.

    அவனும் “குட்டி நீ இவ்ளோ அமைதியா டா” என்று கேட்டாள்.

       அவனைப் பார்த்து முறைத்தவள், “லாங்குவேஜ் பிராப்ளம், லாங்குவேஜ் பிராப்ளம்”, என்றாள்.

    சிரித்துக் கொண்டவள்,  “மாம்ஸ் மற்றவற்றை பேசலாம்”,என்றாள்.

       அதன் பிறகே, “சரி வந்த விஷயத்தை பேசலாம்”, என்ற முடிவு அவர்களுக்குள் வந்தது.

    அவளிடம்  அவர்கள் முழு விபரம் சொன்னார்கள், ஏற்கனவே தெரிந்த விஷயம் என்பதால் ,

   அவளும் “எப்ப ரிஜிஸ்ட்ரேஷன் வைக்கணும்னு சொல்லுங்க., நான் கையெழுத்து போடுறேன்., நீங்க எல்லாம் ரெடி பண்ணுங்க”, என்று சொன்னாள்.

        பின்பு அவர்களோ, “சரி நாங்க நாள் பார்த்துட்டு சொல்றோம்”, என்று சொல்லும் போதே வினித் தான் தள்ளி போடும் எண்ணத்தோடு.,

     “அவளுக்கு நெக்ஸ்ட் வீக் ஜெர்மன் கிளம்ப வேண்டிய வேலை இருக்கு, சோ அவ ஜெர்மன் போயிட்டு வரட்டும்., போயிட்டு வந்ததுக்கப்புறம் மத்ததை பேசுங்க., அதுக்கு அப்புறம் ரெடி பண்ணலாம்”, என்று சொன்னான்.

     முகேஷின் அப்பா முகேஷிடம் கன்னடத்தில் அவளிடம் சொல்லும்படி சொன்னார்.

       பின்பு “ஆங்கிலத்தில் பேசலாமே” என்று சொல்லி அவளிடமே கேட்டார்கள்.

    “நீ போயிட்டு வந்த உடனே சொல்லு, ரெஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம், உனக்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிற”, என்று கேட்டனர்.

இவளோ சிரித்தபடி, “பணம் மட்டுமே எல்லா இடத்திலும், எல்லாத்தையும் சாதிக்காது., சில இடங்களில் பணம் அப்படிங்கறது ஜஸ்ட் லைக் தட், மட்டும் தான் அதே மாதிரி எனக்கு பணம்  வேண்டாம் தேவையே இல்லை”, என்று சொன்னாள்.

  முகேஷின் அம்மா தான், “நார்மலா இருக்கும் போதே, சாதாரண ஒரு படிப்பு, ஒரு வேலையில இருக்கா, நம்ம ஹாஸ்பிடல் இருக்கிறவங்க கூட இதைவிட அதிகமா சம்பளம் வாங்குறாங்க., இவ பேசுறத பாத்தீங்களா”, என்று சொன்னார்.

    முகேஷ்  முகம் மாறுவதை வைத்தே ஏதோ தவறாக பேசுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டாள்.

     முகேஷ் தான் அவர்களை வாயை மூடும்படி சத்தம் போட்டான்.,

    “பரவால்ல மாம்ஸ், சொல்லு என்ன சொன்னாலும் அது எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை”, என்று கேட்டாள்.

      அவன் தயங்கி தயங்கி சொல்லவும்.,  “நோ ப்ராப்ளம் உங்க ஹாஸ்பிடல், பெரிய ஹாஸ்பிடல் நீங்க நிறைய சம்பளம் குடுக்குறீங்க ஓகே., எங்க கம்பெனியும் பெரிய கம்பெனி தான்.,  நான் வேலைக்கு சேர்ந்து மூணு வருஷம் கூட ஆகலையே., அப்ப எனக்கு இவ்வளவு செலரி கொடுத்ததே பெரிய விஷயம் தான்., நான் படிச்ச படிப்பு எனக்கு பெருசு., நான் பாக்குற வேலை எனக்கு பெருசு., எனக்கு உங்களை போல பணம் பெருசு கிடையாது”, என்று சொன்னாள்.

     முகேஷின் அம்மா தான் மூஞ்சை உர் என்று வைத்துக் கொண்டு நின்றார்.

      முகேஷ் மாமாவோ, “இந்த பொண்ணு ஓவரா பேசுது” என்பது போல சொன்னார்.

      இவளோ ‘ஏதோ சொல்கிறார்கள்’ என்று கண்டு கொள்ளாமல் இருந்தாலும்., முகேஷ் அதையும் ட்ரான்ஸ்லேட் செய்தான்.

அவளோ “அப்படியா தெரியுது.,  அப்போ அப்படி தான் பேசுவேன்”, என்று சொன்னாள்.

     முகேஷோ, “உன் வாய் இருக்கே வாய்”, என்று தலையை பிடித்து ஆட்ட.,

   ஒருபுறம் முகேஷும் மறுபுறம் வினித்தும் சேர்ந்து நின்றனர்.

      வீட்டினருக்கு தான் எதுவும் சொல்ல முடியவில்லை., அதே நேரம் வக்கீல் வேண்டும் என்றே,  இங்கிலீஷில் தான் பேச தொடங்கினார்., “சொத்து எழுதறது எல்லாம் ஓகே தான்., ஆனா ஒரே ஒரு சின்ன விஷயம், ஒரு வேளை தர்ஷனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்., இவளோட ஹஸ்பண்ட், ஐ மீன் ஹஸ்பண்டா வர்றவன்., இந்த சொத்து என் வொய்ஃப் கிட்ட இருந்து மெரட்டி எழுதி வாங்கிட்டாங்கனோ, இல்ல ஏமாற்றி எழுதி வாங்கிட்டாங்கன்னு., ஏதாவது கேஸ் பைல் பண்ணா”, என்று கேட்டார்.

      இரு வீட்டினரும் அதிர்ந்து முழித்தனர். இவளோ “அங்கிள் ஏன் இப்படி, அதெல்லாம் ஒன்னும் ஆகாது., நான் பார்த்துக்கிறேன்., இப்படி ஒரு சொத்து இருந்ததா எதுக்கு தெரியணும்., வேண்டாம் அங்கிள்., முதல்ல நான் மேரேஜ் பண்ணுனா பாப்போம்.,  எனக்கு மேரேஜ் பற்றி நோ ஐடியாஸ்”, என்று சொன்னாள்.

  அவர்கள் வீட்டினருக்குள் பேசிக்கொண்டனர். பின்பு ‘யாராவது அவர்கள் பேச்சை கேட்க கூடிய ஒருவனை பிடித்து கல்யாணம் செய்யலாம்’, என்று நினைத்து அவர்களுக்குள் பேசும் போது,  அதற்கு வினித்தும் முகேஷும் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

       இருவரும்  அவரவர் வீட்டினர் முன்பு “என்ன நெனச்சிட்டு பண்றீங்க”, என்று சண்டை போட்டனர்.