12

   யு எஸ் ல் ப்ராஜெக்ட் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டாவது மாதத்தை நெருங்கும் நிலையில் அவன் மற்றவர்களிடம் பாஸ் போல நடந்து கொண்டாலும், இவளிடம் மட்டும் நடந்து கொள்ளும் விதமே வேறாக இருந்தது.

    அவ்வப்போது யோசனை வந்தாலும், எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்தாள். முதலில் அவர்கள் பேசிக் கொண்டது போல சமையல் அனைத்தும் இவள் செய்தாலும், அவன் இவளுக்கு உதவி செய்வது தவறவில்லை, காய்கறி வெட்டி கொடுக்கும் போதோ அல்லது அவளோடு சேர்ந்து சமையலுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் போதோ, இவள் பேசுகிறாளோ இல்லையோ அவன் பேசிக் கொண்டே இருப்பான்.

    இவளை பேச வைக்க முயற்சி செய்வான். அவனது முயற்சிகளைப் புரிந்தவள்.,

    “ஏன் இந்த வேலை”, என்று ஒருநாள் கேட்டாள்.

    அவன் தான் அடுப்பை பார்த்து நின்றவளை, தன்னை பார்த்து திரும்பியவன்,

    “சொன்னா தப்பா நினைக்க மாட்ட இல்ல”, என்றான்.

    இவளோ “என்ன”, என்றாள்.

     “மனசு விட்டு பேசு, நீ மனசு விட்டு பேசல”, என்று சொன்னான்.

      “உங்களுக்கு எப்படி தெரியும், நான் எங்க மாம்ஸ் ரெண்டு பேரிடமும் நல்லா தான் பேசுவேன்”, என்று சொன்னாள்.

     “உன் மனசுல இருக்குறத பேசி இருக்கியா”, என்று கேட்டான்.

     “பேசி இருக்கேன்”,என்று சொன்னாள்.

    “நீ சந்தோஷமான விஷயத்தை மட்டும் தான் சொல்லுவ., உங்க மாமா மேல நிறைய உனக்கு உரிமை இருக்குன்னு வச்சுக்கோ., உங்க மாம்ஸ் அதான் வினித் மேல, முகேஷ் மேல, உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, சோ அவங்க ரெண்டு பேரிடமும் நீ க்ளோசா பழகுற சரியா.,

    இப்படித்தானே எல்லாரையும் நம்ப வச்சுட்டு இருக்க., என்ன”, என்று சொன்னான்.

    “ஹலோ, நம்ப வச்சுட்டு இருக்கல, அது தான் உண்மை”, என்றாள்.

     “அதான் உண்மையா”, என்று அவளைப் பார்த்து ஒரு மாதிரியாக கேட்டான்.

        அவளோ அவனை யோசனையாக பார்த்து., “பின்ன”, என்றாள்.

       “நான் இப்போ சொல்லவா”, என்று சொன்னவன்.,

    “நீ எல்லாத்தையும் ஜாலியா பேசுற, சிரிச்சிட்டே பேசுற, யாரு என்ன சொன்னாலும் முகத்தில் ஒரு சின்ன ரியாக்ஷன் கூட காட்டாமல் எல்லாத்தையும் ஏத்துக்கிற, ஆனா உன் மனசுக்குள்ள இருக்கிற வலி, உன்னோட கஷ்டம், உன்னுடைய எதிர்பார்ப்பு, உன்னுடைய ஏக்கம், இது எப்பவாவது வெளியே சொல்லி இருக்கியா”, என்று கேட்டான்.

     சற்று நேரம் அமைதியாக குனிந்த படி நின்றவள்., பின்பு அடுப்பை பார்த்து திரும்பி சமையலை செய்து கொண்டே., “எனக்கு நீங்க சொன்ன எந்த எண்ணமும் இல்லை சரியா, எனக்கு அப்படி எதுவும் தோன்றவும் இல்லை., இருக்கிறத வச்சு சந்தோஷமா வாழ கத்துக்கணும், இதுதான் எனக்கு மதர் சொல்லிக் கொடுத்தது., மதர் சொல்லிக் கொடுத்தத தான், நான் அப்படியே  ஃபாலோ பண்றேன்”, என்று சொன்னாள்.

         “அப்படியா உன்னோட கஷ்டம் என்னன்னு உங்க மதர் புரிஞ்சுகிட்டதே இல்லையா”., என்று கேட்டான்.

      “மதரை உங்களுக்கு எப்படி தெரியும்”, என்று கேட்டாள்.

       “போ போ போய் மதர் ட்ட  கேட்டுக்கோ, ஆனா உன்கிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன், தயவுசெய்து உன் மனசுல இருக்குறத ஓபனா பேசு., உன்னை பேச வைக்கணும் ன்னு தான் நானும் இவ்வளவு முயற்சி பண்றேன், புரிஞ்சுப்பே ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னவன் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான்.

      சமையலை முடித்து எடுத்து வைத்தவள்., இருவருக்குமாக மதியத்திற்கு ஹாட் பாக்சில் எடுத்து வைத்து, இவள் ஒதுக்கி போடவும், அவன் கழுவி வைக்க போக.,

      “நான் கழுவிக்குவேன், வச்சுட்டு கிளம்புங்க போங்க”, என்று அவனை பார்த்து சொன்னாள்.

       அவனும் “அம்மாடி, நான் தான் உன் பாஸ்”, என்று சொன்னான்.

        “ஆபீஸ்ல தான் நீங்க பாஸ், வீட்ல வச்சு பாஸ் ன்னு சொல்லி மிரட்டிட்டு இருக்காதீங்க., இங்க என்னை சமையல் பண்ண விட்டு இருக்கீங்க., அப்ப நான் உங்களுக்கு சமையல் காரியா”, என்று கேட்டு விட்டு எல்லாம் எடுத்து வைத்தாள்.

     இவள் சொல்ல சொல்ல கேட்காமல், அவன் அனைத்தையும் கிளீன் செய்து போட்ட படி.,

     “இங்க பாரு எப்பவுமே நீ பெருசு, நான் பெருசு அப்படி எல்லாம் யோசிக்க கூடாது., ரெண்டு பேரும் ஷேர் பண்ணி செஞ்சுக்கிறது பெட்டர்., அப்பத்தான் செய்யறதுக்கு ஈஸியாவும் இருக்கும்”, என்று சொன்னான்.

        அவனை திரும்பிப் பார்த்துவிட்டு காலை உணவையும் எடுத்து உண்ணும் இடத்தில் வைத்துவிட்டு., தன்னறைக்கு கிளம்புவதற்காக சென்றாள்.

       அறைக்கு சென்று கிளம்ப தொடங்கியவள், குளித்து முடித்து வந்து உடைமாற்றும் போது கண்ணாடியை பார்த்துக் கொண்டே., “வலியா அதை சொல்லனுமா”, என்றவள்.,

      “அது நிறைய இருக்கே., நான் யார்கிட்டயும் சொல்லாத வலி நிறைய, அதெல்லாம் எக்ஸ்பிளைன் பண்ண கூட என்னால முடியாது., எப்படி சொல்லுவேன்”, என்று கண்ணாடியில்  தெரிந்த பிம்பத்திடம் கேட்டுக் கொண்டிருந்தவள்.,

     பின்பு கண்ணாடியை பார்த்து., “எப்பவும் சிரிச்சிட்டே இரு., அது தான் உனக்கு நல்லது”, என்று கண்ணாடியை பார்த்து சொல்லிக் கொண்டாள்.

     பின்பு ‘வலியோ வேதனையோ, கண்ணீரோடு கரைக்க வேண்டும், குளிக்கும் போது அழுது தீர்த்து விட வேண்டும், அது தான் நல்லது’, என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.

        அன்று அவன் கேட்ட போது கண் கலங்கத் தொடங்கவும் தான், வேகமாக அடுப்பை பார்த்து திரும்பினாள்.,

    குளிக்கும் போது அதை நினைத்து கண் கலங்கியது., ஆனால் கண்ணீரை விடாமல் இருந்தவள், முகத்தை மட்டும் நன்றாக மீண்டும் மீண்டும் கழுவியவள் ஒருமுறைக்கு இருமுறையாக, கண்ணாடியில் தன்னை சரிபார்த்துக் கொண்டு.,  கண்கலங்கியது கூட தெரியாமல் ஒப்பனை செய்து கொண்டு கிளம்பி வந்தாள்.

    அவளோடு சேர்ந்து காலை உணவு உண்ணும் போது., அவள் முகத்தையே பார்த்தவன், அவளை உத்து பார்த்தான்.

     “என்ன”, என்றாள்.

   “அழுதியா என்ன”, என்றான்.

   அவனை பார்த்துக் கொண்டே, “நான் எதுக்கு அழணும்”, என்றாள்.

     “இல்ல கண்ணுல காஜெல்லாம் போட்டாலும் கூட, உன் கண்ணுல ஏதோ வித்தியாசம் தெரியுது”, என்று சொன்னான்.

      “உங்களை யார் இப்ப என் கண்ணை ஆராய்ச்சி பண்ண சொன்னா, சாப்பிட்டு கிளம்புங்க ப்ராஜெக்ட் ஆராய்ச்சி பண்ணுங்க., உங்க கம்பெனிக்கான ப்ராஜெக்ட் பார்க்கிறத விட்டுட்டு, என்னை கவனிக்காதீங்க”, என்று சத்தமாகவே சொன்னவள்.,

    “இந்த நாளிலிருந்து நீங்களே சமைச்சு நீங்களே சாப்பிட்டு போங்கன்னு விட்டுட்டு போயிடுவேன்”, என்று சொன்னாள்.

      “தாயே சாப்பாட்டில் கைவைத்து விடாதே, ஏதோ தமிழ்நாட்டு ஃபுட்னாலும் கொஞ்சமாவது உள்ள போய்கிட்டு இருக்கு”, என்று சொன்னவன்,

       “எனக்காக ஒரு நாள் கேரளா சமையல் செய்யலாமா”,என்று கேட்டான்.

    “கேரளா சமையல் வேணும்னா, நீங்க செஞ்சு சாப்பிடுங்க., எனக்கெல்லாம் கேரளா சமையல் எல்லாம் உள்ள இறங்காது”,என்று சொல்லி விட்டு, “நான் எனக்கு புடிச்ச மாதிரி தான் சமைப்பேன், உங்களுக்கு புடிச்ச மாதிரி சமைக்கனும்னா நீங்க தான் சமைக்கணும்”, என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    இருவரும் ஒரே காரில் தான் சென்றார்கள். அவள் அருகில் தான் அமர்ந்து வருவான்.,  அங்குள்ள டிரைவர்கள் என்பதால் இவளோடு பேசும் போது தமிழில் தான் பேசுவான்.,

      ஆங்கிலம் துளி கூட கலக்காது, டிரைவருக்கு புரிய கூடாது என்பதால், அப்போது அவனுக்கு அலைபேசி அழைப்பு வர, அது அவனுடைய கம்பெனி கால் என்பது அவன் பேசும் விதத்திலே தெரிந்தது.

        அவன் மலையாளத்தில் பேச தொடங்கவும்., இவளோ வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள், அவன் பேசிக்கொண்டே ஏதோ இவளிடம் சொல்வது புரிந்து “என்னவென்று”, கேட்டாள்.

      “ஃபோன் நம்பர் நோட் பண்ணனும்”, என்று சொன்னான்.

     இவள் பேப்பர் பேனாவை தேடும் முன்., அவளது போனை எடுத்து அன்லாக் செய்தான்.

    ஒரு நிமிடம் அதிர்ச்சியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘எப்படி அன்லாக் பண்ணினான்’, என்று யோசித்தவள்,

       எதுவும் சொல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருக்க., நம்பரை எல்லாம் நோட் செய்து அவளுடைய வாட்ஸ் அப் ல் இருந்து, அவனுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

     அவனிடமிருந்து போனை பறித்தவள், மீண்டும் போனை தன் கைகளுக்குள் வைத்துக்கொள்ள, அவனும் அவளைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருந்தான்.

    இவளோ அவனை முறைத்து விட்டு பழையபடி ஜன்னலை பார்த்து திரும்பி வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும் போதே.,

    இவனுடைய பார்வை பேச்சு, தன்னை உற்றுக் கவனிப்பது எதுவும் சரியில்லை என்று அவளுக்கு தோன்றியது.,

      ‘ ஆனாலும் எப்போது ப்ராஜெக்ட் முடிந்து எப்போது போக, இரண்டு மாசம் கழிவதற்குள்ளே தலை எல்லாம் சுற்றுகிறது’, என்று யோசித்தவள்,

      ‘அய்யோ வடிவேலு டயலாக் எல்லாம் ஞாபகம் வருதே., இப்பவே கண்ணை கட்டுதே, நான் என்ன செய்வேன்’, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்.,

         ‘நோ வே சமாளிப்போம்’ என்று நினைத்துக் கொண்டாள்.

     பின்பு சாதாரணமாக அமர்ந்து போனில்  நோண்டுவது போல போனை பார்த்துக் கொண்டே வர.,

     அவன் பேசி முடித்துவிட்டு அவளிடம் இருந்து போனை பறித்தவன்., “டிராவல்ல போன் பார்க்காத, கண்ணு பெயினா இருக்கும்., அது மட்டும் இல்லாம டிராவல் ஒரு மாதிரி ஹெரா ஆகும்., போய் கம்பெனி ஒர்க் பார்க்க வேண்டாமா”, என்றான்.

   அவனைப் பார்த்து முறைத்து விட்டு போனை கைகளுக்குள் வைத்து மூடியவள், “எப்பவாவது பார்க்கலாம்”, என்றாள்.

    “அது நல்ல பிள்ளைக்கு அழகு”, என்று சொன்னவன் அவளைப் பார்த்து மலையாளத்தில் பாட்டு பாட., இவளோ அவனைப் பார்த்து முறைத்து “வாய் மூடிட்டு வர முடியாதா”, என்று கேட்டாள்.

     “நான் என்ன மலையாள பாட்டு பாடினேன்., உனக்கு அர்த்தம் தெரியுமா”, என்றான்.

     “தெரியாது, இருந்தாலும் தேவையில்லாத வேலை பார்க்காதீங்க”, என்று சொல்லி அவனோடு வாக்குவாதம் செய்தபடியே அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

        அதன் பிறகு நேரம் அவர்களை முழுங்கிக் கொண்டது.