காலையில் கண் விழிக்கும் போது தன் வீட்டில் தூங்குவதாக நினைத்துக் கொண்டு நன்றாக நெளிந்து கொடுத்தவள், பின்பு நிதானமாக திரும்பிப் படுத்தாள்.
தலையணையை இழுத்து தலைக்குள் நன்றாக வைத்துக் கொண்டு திரும்பிப் படுக்கும் போது தான், கைநீட்டி தேடினாள்.
எப்போதும் கட்டில் அருகே இருக்கும் சிறிய டேபிளில் போன் வைத்திருப்பாள். அந்த ஞாபகத்தில் போனை தேட போன் இல்லாமல் போக நேரம் பார்க்க வேண்டுமே என்ற யோசனையோடு கண்ணைத் திறந்து பார்த்த போது தான், அவளுக்கு ‘தான் எங்க இருக்கிறோம்’ என்று யோசித்தாள்.
பின்பு அவசர அவசரமாக எழுந்து அமர்ந்தாள்., ‘ஐயோ மிஸ்டர் கடத்தல்காரர் நம்மளை கடத்திட்டு வந்தாரே., ஏதோ பேசனும் ன்னு சொன்னாரே, அந்த கடத்தல்காரர் எங்கே’, என்று யோசித்தவள்.
அவசர அவசரமாக தன்னையும் பார்த்துக் கொண்டாள். அப்பாடா நல்ல வேளை, ‘நாம அப்படியே தான் இருக்கோம்’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
‘எதுக்கு இங்க கொண்டு வந்தாங்க, வீட்டுக்கு போகனுமே’ என்று தனக்குத்தானே புலம்பி கொண்டிருந்தாள்.
பின்பு மெதுவாக எழுந்தவள், அந்த அறையின் வாசல் பக்கம் சென்றாள். கதவை திறக்கும் முயற்சி மேற்கொள்ள, கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது, கதவை தட்டினாள்.
சற்று நேரம் எந்த சத்தமும் இல்லை., மீண்டும் கதவைத் தட்ட சத்தம் எதுவும் இல்லாமல் இருக்க., இவளோ எரிச்சலோடு “அய்யோ கடுப்பு கிளம்புறாங்களே”, என்று முனங்கி கொண்டிருக்கும் போதே கதவை திறந்து வந்தான்.
அவளோ, “ஹலோ கடத்தல்காரரே வீட்டுக்கு போகணும்., வீட்ல கொண்டு போய் விட்டுடறீங்களா”, என்று கேட்டாள்.
“வாங்க மேடம், நீங்க பிக்னிக் வந்து இருக்கீங்க பார்த்தீங்களா., நான் உங்களுக்கு டிரைவர் பாத்தீங்களா., காலையில கொண்டு போய் உங்கள வீட்ல விட”, என்றான்.
தன் கையில் இருந்த பையை அவள் கையில் கொடுத்தவன்., “போ போய் குளிச்சிட்டு கிளம்பி ரெடியா வா பார்ப்போம்”, என்றான்.
“உனக்கு எதுக்கு இப்போ போன், சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கேன், யாரும் உனக்கு கூப்பிட மாட்டாங்க”, என்றான்.
“ஃபோன் வேண்டுமே” என்றாள்.
“எதற்கு”, என்று
மீண்டும் கேட்கவும்.,
“டைம் என்ன”, என்றாள்.
“கரெக்டா செவன், நீ என்ன பண்ற சீக்கிரமா குளிச்சிட்டு வந்தா, நான் உனக்கு கதையெல்லாம் சொல்லுவேன், அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு கிளம்பி போகனும், அதனால குளிச்சிட்டு இந்த டிரஸ் போட்டுட்டு வா பார்ப்போம்”,என்றான்.
“உன்னோட திங்க்ஸ் பேக் பண்ணி வச்சுக்கோ” என்று சொன்னான்.
அப்போது தான் பார்த்தாள், அவளுடைய பேக்கில் இருந்து அனைத்தும் அவளோடு வந்திருந்தது.
உள்ளே சென்று உடையை எடுக்கும் போது தான், அவள் அந்த உடையை பார்த்து விட்டு சற்று நேரம் யோசனையோடு இருந்தவள்,
பின்பு அவளுக்கான அனைத்து ஆடைகளும் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.
அளவுகள் எல்லாம் சரியாக இருக்க, ‘இவனுக்கு எப்படி நம்ம அளவு தெரியும் எங்கு போய் டிரஸ் எடுத்து இருப்பான்’ என்று யோசித்தவள்,
வேற யாரும் வாங்கி இருப்பாங்களா இருக்கும், என்று யோசித்தாள்,
வேறு எதுவும் சொல்லாமல் அவன் கொடுத்த ஆடையை அணிந்து கொண்டு பாத்ரூமோடு சேர்ந்து இருந்த ட்ரெஸ்ஸிங் ரூமில் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
பார்த்துக் கொண்டவளுக்கு அந்த உடையை தான் ஏற்கனவே கடையில் பார்த்த நினைவு வந்தது., ஜெர்மன் செல்லும் முன் திவ்யாவும் அவளும் உடை வாங்கும் போது, “இந்த டிரஸ் மெட்டிரியல் மிகவும் அழகாக இருக்கிறது”, என்று சொன்னாள்.
திவ்யா தான், “நீ முதல்ல ஜெர்மன் போயிட்டு வா., அதுக்கப்புறம் வாங்கிக்கலாம்”, என்று சொன்னாள்.
அதை தன் மேல் வைத்து கண்ணாடி முன் நின்று பார்த்துவிட்டு பின்பு ஹேங்கரை தொங்கவிட்டு வந்த ஞாபகம் இப்போதும் இருக்கிறது., ‘அதே உடை தான் இது’என்று யோசித்தவள்.
‘ஒருவேளை அப்போயிருந்து ஃபாலோ பண்ணி இருக்காங்களா, எதுக்காக ஃபாலோ பண்ணி இருப்பாங்க, கடத்துற அளவுக்கு நம்ம ஒன்னும் ஒர்த்தே இல்லையே, எதனால இருக்கும், கதை சொல்றேன்னு சொன்னாங்க இல்ல, பாப்போம்’, என்று யோசித்துக் கொண்டே தன் முடியை எல்லாம் தூக்கி உச்சியில் கொண்டை போல போட்டாள்,
‘சீப்புக்கு எங்க போவேன், லூசு மனுஷன்’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘சரி அவனிடத்தில் போய் கேட்போம்., நம்ம பேக்லயே இருக்கும் அதையே எடுத்து சீவிக்கலாம், இவனோட சீப்பு எல்லாம் யூஸ் பண்ண கூடாது லூசு’ என்று திட்டிக்கொண்டே அவளுடைய அழுக்குடையை அதை பையில் போட்டு சுற்றி எடுத்து வந்தவள்.,
தன் பையை எடுத்து அதில் வைத்து விட்டு கொண்டையோடு அப்படி அமர்ந்திருந்தாள்.
அவள் வந்ததிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “என்ன மேடம் கிளம்ப சொன்னேன் கிளம்பலையா”, என்று கேட்டான்.
தன் பேக்கில் இருந்து சீப்பு மற்றும் சிறிய ரெப்ரஸ் பேக் ஒன்று வைத்திருந்தவள், அதை எடுத்துக் கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூம் க்கு சென்றவள்.,
தலையை வாரி முடி எடுத்து சென்டர் கிளிப் போட்டவள்., தலையை எப்போதும் போல விரித்து விட்டாள்.
பின்பு முகத்தை திருத்திக் கொண்டு தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்தவள் ஆபீஸ்க்கு கிளம்புவது போலவே இருக்க.,
‘போதும் போதும் இப்படியே போவோம், இவர் சொல்ற ஓட்ட கதையை கேக்குறதுக்கு இது போதும்’ என்று நினைத்து கொண்டாள்.
பின்பு வெளியே வரவும், அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், உணவை எடுத்துக் கொண்டு வர அவள் கையை நீட்டி வாங்கி கொள்ள முயன்றாள்.
அவனும் “ஏன் மறுபடியும் உன்னை கட்டி வைக்கணுமா”, என்றான்.
கதவை பார்க்க கதவு பூட்டி இருந்தது, “என்ன கதையா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க”, என்றாள்.
“முதல்ல சாப்பாடு வாயில வாங்கு”, என்று சொன்னான்.
“ஹலோ எனக்கும் கை இருக்கு சரியா, குடுங்க”, என்று சொன்னாள்.
“அப்படி எல்லாம் தர முடியாது, உன் மாமனுங்க கூட இருக்கும் போதும் தான் கை இருந்துச்சு., அப்ப மட்டும் உனக்கு ஊட்டிவிட்டாங்க இல்லயா”, என்றான்.
“சோ வாயைத் திற”, என்றான்.
“யாருனே தெரியாதவங்க கையால எல்லாம் ஊட்டி சாப்பிடணும்னு அவசியம் இல்ல எனக்கு., சாப்பாடே வேண்டாம்”, என்று சொன்னாள்.
“அப்ப கதையும் கிடையாது”, என்றான்.
“எனக்கு எதுக்கு கதை, உன் கதையை நீயே வச்சுக்கோ, என்னை கொண்டு போய் வீட்டில் விடு”, என்று சொன்னாள்.
“வாங்க மேடம், நான் கஷ்டப்பட்டு உன்னை கடத்திட்டு வருவேனாம், நீ வீட்ல கொண்டு போய் விடு ன்னு சொன்ன உடனே வீட்ல கொண்டு விடுவா தூக்கிட்டு வந்தேன்., சாப்பாட்டை வாயில வாங்கு”, என்று சற்று அதட்டலாக பேசியவனை கண்டு அவள் உண்மையிலேயே பயந்து தான் போனாள்.
‘இவன் ஏன் இவ்வளவு கத்துகிறான்’ என்று நினைத்தாள்.
பின்பு அவன் வாயைப் பிடித்து திணிக்காத குறையாக உணவை ஊட்ட, கஷ்டப்பட்டு விழுங்கியவளுக்கு.,
‘அய்யோ கடவுளே, என்னை ஒரு பைத்தியக்கார கடத்தல்காரன் ட்ட வந்து மாட்டி விட்டுட்டியே’ என்று மனதிற்குள் புலம்பினாள்.
ஊட்டி முடித்துவிட்டு, அவனும் உணவை முடித்துக் கொண்டு வந்து மீண்டும் அவளுக்கு எதிராக அமர்ந்தவன், அந்த அறையையும் பூட்டி சாவியை தன் கையில் வைத்திருந்தான்.
‘நான் வேற உன்னை கட்டிப் போட்டாம இருக்கேன்., நீ பேசாம ஓடிப்போயிடலாம் ன்னு எல்லாம் நெனச்சனா நான் என்ன செய்ய அதனால தான் சரியா., இப்ப கதையை சொல்லி முடித்துவிடுகிறேன்’, என்று சொன்னவன் அவர்கள் குடும்ப கதையை சொல்ல தொடங்கினான்.
‘உங்க அப்பா தாத்தா இருக்காரு இல்ல”,., என்றான்.
‘எந்த தாத்தா’ என்று யோசித்தவள், “வினித் மாம்ஸ் தாத்தாவா”, என்றாள்.
இவனும் அவளை முறைத்தபடி, “உனக்கும் தாத்தா தான்”, என்றான்.