இவனுக்கு ஒரு பிளாக் டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்ற., எழுந்து டீ தயாரிக்கும் இடத்திற்கு சென்றவன்.,
தனக்கு ஒரு பிளாக் டீ தயாரித்து எடுத்துக்கொண்டு அவளை பார்க்க மும்மரமாக வேலையில் இருக்கவும்., மற்றவர்கள் எல்லாம் இடையிடையே எழுந்து அவர்களுக்கு தேவையான பானத்தை அருந்திக்கொண்டு தான் இருந்தார்கள்.,
இவள் மட்டும் வந்ததிலிருந்து எழும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, அவளுக்கும் காபி கலக்கிக் கொண்டிருந்தான்.
அருகில் வந்த மற்றொரு ஊழியர் அவனிடம் ஆங்கிலத்தில் “டீயோடு காபி வேண்டுமா”, என்று கேட்டான்.
“டீ எனக்கு ,காபி தர்ஷுக்கு”, என்று சொன்னான்.
அவனும் “இங்க நீங்க பாஸ், பட் உங்ககிட்ட வேலை பார்த்தாலும் அவங்களுக்கும் நீங்க செய்றீங்க”, என்று சொன்னான்.
இவனோ அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளுக்கான காபியை கலக்கிக் கொண்டு வந்தான்.
ஆனால் எதுவும் சொல்லவில்லை, அவனைப் பொறுத்தவரை அவளை யாரும் நெருங்காத வண்ணம் பார்த்துக் கொண்டான்.
சிறகுக்குள் வைத்து காக்கும் தாயுமானவனாக அங்கு நின்றான். அவனைப் பொறுத்தவரை அது ஒரு பொசசிவ்னஸ்., அவளை யாரும் நெருங்கி விடக்கூடாது என்றே பார்த்திருந்தான்.,
ஏற்கனவே இவளிடம் மற்ற நேரங்களில் எல்லாம் நன்றாக பேசுபவன்., முகேஷ் வினித் அழைப்பு வந்தால் மட்டும் முகம் கடுகடுவென மாறிவிடும்., அதன் பிறகு கொஞ்ச நேரம் அவளிடம் கோபமாக பேசுவது போல தான் அவனுடைய போச்சுகளும் இருக்கும்., அதன் பிறகு தன்னைத்தானே சமாதனப் படுத்திக் கொள்வான்.
இதை எல்லாம் அவள் உணர்ந்திருந்தாலும் எதுவும் தெரியாது போலவே நடந்து கொண்டாள்.,
அவனும் அவனுக்கு வேறு வேலைகள் இருந்தால் கூட இவளை வீட்டிற்கு அனுப்பிய பிறகு தான் மற்ற வேலைகளை பார்க்க செல்வான்., அவளை தனியே யாரிடமும் விடமாட்டான், இவளுக்கு அது ஒரு புறம் எரிச்சலை தான் கொடுத்தது.
‘இது என்ன இதுவரைக்கும் நம்ம வொர்க் பண்ணவே இல்லையா? , ஏன் ஜெர்மனியில் எல்லாம் போய் ஒர்க் பண்ணல, லூசு மாதிரி பண்ணுது இந்த ஆளு’, என்று நினைத்துக் கொண்டாள்.
அவளுக்கு தெரியும் அந்த கார்டில் இருந்த கையெழுத்து இவனுடைய தாகத்தான் இருக்கும் என்று., வினித்தும் அவளும் நினைத்தது போக., அதை முகேஷிடமும் சொல்லி இருந்தனர்.
அவன் தான் ‘அதெல்லாம் இருக்காது’ என்று சொல்லி இருந்தான்.
இப்போதும் அடிக்கடி அவன் எழுதுவது., அனைத்தையும் நோட் செய்து கொண்டு தான் இருக்கிறாள்., ஆனாலும் வேண்டாம் தேவையில்லை என்று எண்ணம் வந்தது.,
மனதிற்குள்ளோ ‘இவனாக இருக்கக் கூடாது, வேறு யாராக இருந்தாலும் பரவாயில்லை’, என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றுகிறது.
‘ஏன் அப்படி நினைக்கிறோம்., வேற யாருமா இருந்தா ஏத்துக்கிடுமா மனசு’, என்று அவளுக்கு அவளே கேள்வி கேட்டுக் கொண்டாலும்.,
‘இது சரிவராது, நம்ம எண்ணம் போற போக்கு சரியில்லை’, என்று அவ்வப்போது தன் மனதை திட்டி அடக்கி கொள்வாள்.
அன்று வேலை முடிந்து மதியம் உணவு உண்ணும் நேரத்தில் தான் இருவருக்குமான உணவை அங்குள்ள அவனில் வைத்து சூடு செய்து கொண்டு வந்தவள்., சாப்பிட அமரும் போது அவன் முக்கியமான போன் கால் வர அதில் பேசிய படியே அமர்ந்தான்.
அவனை முறைத்து பார்க்கவும்., 2 மினிட்ஸ் என்று சொல்லிவிட்டு பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.,
இவளோ எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளோ, ‘ஆமா இன்னைக்கு காலையில மதரை பத்தி பேசினாங்க இல்ல., இவங்களுக்கு எப்படி மதரை தெரியும்’, என்று யோசித்தவள்.,
‘இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு, கண்டிப்பா மதர் கிட்ட பேசிய ஆகணும்’, என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
பின்பு உணவு முடிக்கவும்., அவன் “இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்புவோமா”, என்று கேட்டான்.
“ஏன்”, என்றாள்.
“எனக்கு வெளியே ஒரு வேலை இருக்கு முடிக்கணும்”, என்று சொன்னான்.
” டீம் அவங்கவங்க முடிச்ச உடனே கிளம்புவாங்க., நீ என் கூட கிளம்பு”, என்று சொன்னான்.
இவளோ “டீம் கிளம்பும் போது கிளம்புறேன்”, என்று சொன்னாள்.
“உன்னை கிளம்பு ன்னு தான் சொன்னேன்., ஒரே கார்ல போயிறலாம், உன்னை வீட்டில் இறக்கிவிட்டு நான் என் வேலையை பார்க்க போயிடுவேன்., நான் போயிட்டு ரிட்டன் வருவதற்கு நேரம் ஆகும்., அப்புறம் கேப் வராது., நீ எப்படி போவ”, என்று கேட்டான்.
அவளோ ‘ஆமா இன்னைக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கு’, என்று நினைவோடு சரி என்று ஒத்துக் கொண்டாள்.
அது போலவே போகும் வழியில் தேவையான பொருட்களை வாங்கிய பிறகு அவளை வீட்டில் இறக்கி விட்டவன்., “கதவை மூடிக்கோ கேர்ஃபுல்லா இரு” என்று சொன்னான்.
அவனைப் பார்த்து முறைத்தவள்., “ஹலோ ரொம்ப பண்ணாதீங்க, கிளம்புங்க., நான் தனியாவே இருந்து பழக்கப்பட்டது தான்., எனக்கு ஒன்னும் பயம் எல்லாம் கிடையாது”, என்று சொன்னாள்.
“அது அப்போ, இது இப்போ”, என்று சொல்லி விட்டு அவனுடைய பேக் மற்றவற்றை வைத்துவிட்டு வெளியே செல்வது போல கிளம்பியவன்.,
“என் பிரண்ட்ஸ் வந்து இருக்காங்க., பார்த்துட்டு லேட்டா தான் வருவேன்., நான் நைட் டின்னர் அங்கே முடிச்சிடுவேன்., உனக்கு வேண்டுமென்றால் வாங்கிட்டு வரவா”, என்று கேட்டான்.
“இவளோ வேண்டாம், நான் பாத்துக்கறேன், உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க., என் வேலையை நான் பாத்துக்குவேன்”, என்று சொன்னாள்.
“திமிரு”, என்றான்.
“நான் இப்படி தான், இது திமிர் இல்லை, எனக்கு உள்ள கான்ஃபிடன்ஸ், நான் இதுவரைக்கும் தனியா தான் இருந்தேன், தனியா தான் என்னை பார்த்துக்கிட்டேன்., சோ இனிமேலும் எனக்கு பாத்துக்க தெரியும்., நீங்க உங்க வேலைய மட்டும் பார்த்தால் போதும்”, என்று அழுத்தமாகவே சொன்னாள்.
அவள் சொல்வது புரிந்தாலும், புரியாதது போல பார்த்தவன், “ஓகே மேடம் நீங்க சமைச்சு சாப்பிடுங்க., காலையில எனக்கும் சேர்த்து சமைங்க”, என்று சொல்லி விட்டு “நான் வரதுக்கு நேரமாகும், எதிர்பார்க்காதே”, என்று சொன்னான்.
“நான் யாரையும் இதுவரைக்கும் எதிர்பார்த்தது கிடையாது., என்ன பார்த்துக்க எனக்கு தெரியும், நீங்க கிளம்பலாம்”, என்று சொன்னாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே வெளியே கிளம்பியவன் கதவை பூட்டு என்று, அவள் கதவை பூட்டிய பிறகு கிளம்பி சென்றான்.
அவன் கிளம்பி சென்ற பிறகு, தன்னறையை சுத்தம் செய்தவள், துணி எல்லாம் மிஷினில் போட்டு விட்டு மறுநாள் சமையலுக்கு தேவையான காயை கட் செய்தபடி சற்று நேரம் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தாள்.
பின்பு இரவு உணவு தனக்கு மட்டும் தயார் செய்தவள், உணவு உண்ட பிறகு எப்போதும் போல இரு மாமன்களிடமும் சீக்கிரமாக பேசினாள்.
அவனும் “என்ன இன்னைக்கு சீக்கிரம் பேசிட்ட”, என்று கேட்டனர்.
“இல்ல மதர் மெசேஜ் பண்ணி இருக்காங்க, கூப்பிடனும், அவங்க எந்திரிக்கிற டைம் கணக்கு பண்ணி நான் பேசணும்”, என்று சொன்னாள்.
“சரி சரி பேசு”, என்று சொல்லிவிட்டு வைத்தனர்.
அவர்களின் காலை நேரம் மதர் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அமரும் நேரத்தை கணக்கிட்டு இவளும் அவர்களுக்கு அழைத்தாள்.
மதர் தான் அவள் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
“எப்படி இருக்க தனா”, என்று கேட்டார்.
“நல்லா இருக்கேன் மதர்., நீங்க எப்படி இருக்கீங்க”, என்று கேட்டுவிட்டு அங்கு உள்ள அனைவரையும் தனித்தனியாக நலம் விசாரித்தாள்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க தனா, ஆமா நீ எப்படி இருக்க வேலை எப்படி போகுது, உன்னோட மாமா ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க, அவங்க போன் பண்ணாங்களா”, என்று கேட்டார்.
“அப்பவே பேசிட்டாங்க மதர்”, என்றாள்.
“அவங்க இரண்டு பேரின் மனைவிமாரும் எப்படி இருக்கிறாங்க”, என்று மதர் கேட்டார்.
“நல்லா இருக்காங்க மதர்”, என்று சொன்னாள்.
“சரி சரி சொல்லு, என்ன விஷயம்”, என்று மதர் கேட்டார்.
“உங்ககிட்ட நான் ஏற்கனவே பேசணும்னு நினைச்சிட்டு இருந்தது தான்., நீங்களும் என்கிட்ட ஏதோ சொல்லணும் அப்படின்னு சொன்னீங்க., ஆனா நம்ம அதுக்கப்புறம் பேசிக்கவே இல்ல., சோ அதனால தான் இப்ப கூப்பிட்டேன்”, என்று சொன்னாள்.
“தனா உன்கிட்ட நிறைய விஷயங்கள் சொல்லணும்., ஆனா நீ எதுவும் மதர தப்பா நினைக்க கூடாது”, என்று சொன்னார்.
“நினைக்க மாட்டேன் சொல்லுங்க”, என்று சொன்னாள்.
பின்பு அவர் சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு., ‘தன்னைச் சுற்றி எவ்வளவு மர்மங்கள், ஏன் தன்னைச் சுற்றி இத்தனை விஷயங்கள்’, என்று மட்டுமே தோன்றியது.
‘ஒவ்வொரு நாளும் தன்னோடு, தனக்காக என்று யார் யாரோ செய்திருக்க., யாருக்கும் எந்த கைமாறும் தான் செய்யவில்லையே’, என்று மட்டுமே தோன்றியது.
அப்போது மதர் சொன்ன தகவல்களை நிதானமாக கேட்டுக் கொண்டவள்., தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
பின்பு மீண்டும் சாதாரண பேச்சுவார்த்தைக்கு வர.,
மதர் தான், “தனா உன்கிட்ட நான் சொல்லனும் அவசியமில்லை, ஆனால் நீ சீக்கிரம் கல்யாணம் பற்றி முடிவுக்கு வருவது ரொம்ப நல்லது., ஏன்னா நான் சொன்னது உனக்கு புரிஞ்சிருக்கும் ன்னு நினைக்கிறேன்”, என்று சொன்னார்.
“யோசிக்கிறேன் மதர்., நான் இதுவரைக்கும் அப்படி யோசிச்சு கூட பார்த்ததில்லை, கல்யாணம் ன்கிற ஒரு கான்செப்ட் எனக்கு அப்படி எதுவும் தோணலையே”, என்றாள்.
“கல்யாணம் ன்னு நெனச்சாலே எங்க அம்மா அப்பாவோட லைஃப் பெயிலியரா போனதும், அவங்க கொஞ்ச நாள் கூட சந்தோஷமா வாழாம போனது தான் ஞாபகம் வருது”, என்று சொன்னாள்.
அவர் தான் “அப்படியெல்லாம் இல்லம்மா, எல்லார் வாழ்க்கையும் என்ன பெய்லியரா வா போகுது., எல்லாம் நம்ம கையில தான் இருக்கு., கண்டிப்பா உன் லைஃப் நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது., உங்க அம்மா அப்பா வோட பிளஸ்ஸிங் உனக்கு இருக்கும்., சோ ரொம்ப பீல் பண்ணாத எல்லாம் நல்லபடியா நடக்கும்., நீ தான் இப்போ யோசிக்கணும்”, என்று சொன்னார்.
“இல்ல மதர் எனக்கு என்ன சொல்றதுன்னு தோணல, பட் எனக்கு கொஞ்சம் யோசிக்கிறதுக்கு டைம் வேணும்”, என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் அவரிடம் உடம்பை பார்த்துக் கொள்ள சொன்னவள், தான் இந்தியா வந்த பிறகு அவரை நேரில் வந்து பார்ப்பதாக சொல்லி போனை வைத்தாள்.
சற்று நேரம் அப்படியே ஹாலில் அமர்ந்திருந்தவளுக்கு, ‘தன்னை சுற்றி என்ன நடக்கிறது., ஏன் இது’, என்ற எண்ணம் மட்டும் தான் தோன்றியது. வேறு எதுவும் தோன்றவில்லை.
மதர் சொல்வது போல ‘கல்யாணம் என்ற ஒரு விஷயம் சாத்தியமா என்று தெரியாது., ஆனால் எனக்காக என்னை மட்டும் நேசிக்கும் ஒரு ஜீவனுக்காக அதைப்பற்றி யோசிக்கலாம்., ஆனால் அது தனக்கு சரி வருமா’, என்ற எண்ணம் அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
மீண்டும் யோசித்தவள், ‘இல்ல இது சரிவராது, இது பரிதாபத்தில் வர்ற ஒரு விஷயம்., இது நமக்கு செட்டாகாது’, என்று நினைத்தவள் தன் அறைக்கு சென்று அப்படியே படுத்து விட்டாள்.
அவள் உறங்க சென்ற சற்று நேரத்தில் வந்த நிமலன் தன்னிடமிருந்த சாவியை கொண்டு திறந்து வந்து பார்க்க அனைத்தும் சுத்தப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஏதோ தயாரித்திருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது., பின்பு அவள் அறையை தொட போக., இல்ல தூங்கிருப்பா வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு தன்னறைக்கு சென்றவன், எப்போதும் போல லேப்டாப்பில் இருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டே இருந்தவன்.
அதில் ஒரு புகைப்படத்தை பார்த்து சிரித்தபடி, ‘இதுக்கு என்னைக்கு திட்டு வாங்க போறனோ தெரியல’, என்று நினைத்து சிரித்துக்கொண்டே நண்பர்களுடன் பேசியதை நினைத்துப் பார்த்தபடி உறங்கிப் போனான்.
நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனம் தான்.. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கவனியுங்கள்.