“தயவு செய்து சாப்பாடு தர மாட்டேன்னு சொல்லிராதீங்க., உங்களுக்கு நான் ஊட்டி எல்லாம் விட்டு இருக்கேன்., அதுக்காகவாது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க”, என்று சொன்னான்.
இவளோ “உங்களை யாரும் எனக்கு ஊட்டி விட சொல்லல., நான் சாப்பிட்டுகிறேன் ன்னு சொன்னேன்”, என்று சொன்னாள்.
“உன் மாமன்ங்க மட்டும் ஊட்டுவாங்களாம், நான் ஊட்டுனா அது தப்பா., அது என்ன எப்ப பார்த்தாலும் ஹலோ ன்னு சொல்லிட்டு.,
நானும் உனக்கு என்ன முறைன்னு இதுக்குள்ள தெரிஞ்சிருக்கும்., சொல்லி இருப்பனே வினித்து”, என்று சொன்னான்.
“சொன்னாங்க, சொன்னாங்க, சுரைக்காய் க்கு உப்பில்லன்னு, என்று சொன்னாள்.
“வாட் இஸ் சொரக்கா”, என்று கேட்டான்.
இவளோ வாய்க்குள் முணுமுணு என்று திட்டிக்கொண்டே அவன் கேட்டான் என்பதற்காக சேர்த்தே சமைக்க தொடங்கினாள்.
அவனும் “எனி ஹெல்ப்”, என்று வந்து நின்றான்.
“இல்ல நானே செஞ்சிருவேன்”, என்று சொல்லும் போதும் அவளிடம் இருந்து அவள் கட் செய்வதற்கு என்று வைத்திருந்த தக்காளி வெங்காயத்தை எல்லாம் எடுத்து கட் செய்து கொடுத்தான்.
இவளோ சமையலில் மும்மரமாக இருந்தாலும் மனதோ மதரை நினைத்துக்கொண்டது.
வேலையில் சேர்ந்த புதிதில் மதரை பார்த்த போது மதர் அவளுக்கு சொன்னதெல்லாம் ஒன்றே ஒன்று தான்., ‘உன்னால் முடிந்தவரை மற்றவருக்கு உதவியாக இரு’., என்று சொல்லியிருந்தார்.,
‘அதுபோல பசி என்று வருபவர்களுக்கு, இல்லை என்று சொல்லாமல் கொடுக்க கற்றுக்கொள்., அது மட்டுமல்லாமல் எல்லாத்தையும் தானம் செய்யக்கூடாது, உனக்கு என தேவைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்’, என்று நிறைய சொல்லிக் கொடுத்திருந்தார்.
அதன் பிறகு இவளால் முடிந்தபோதெல்லாம் சென்று மதரை பார்ப்பது இவளுக்கு வழக்கமான ஒன்றுதான்.
ஜெர்மன் செல்வதற்கு முன்பு மதரை பார்த்து விட்டு தான் சென்றிருந்தாள். அதுபோல ஜெர்மன் சென்று வந்து இவர்களுக்கெல்லாம் ப்ராப்பர்ட்டியை எழுதிக் கொடுத்த பிறகு ஒருமுறை மதரை சென்று பார்த்துவிட்டு அங்கேயே இரண்டு நாட்கள் தங்கி இருந்து விட்டு தான் வந்தாள்.
இப்போது யுஎஸ் கிளம்பும் முன்பும் , மதரை பார்த்து பேசி விட்டு தான் வந்திருந்தாள். அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
சமையல் செய்யும்போது அவள் அவன் கேட்டதற்கு ம் ம் ம் என்றது தவிர வேறு வார்த்தை எதுவும் பேசவில்லை., அவள் நினைவெல்லாம் இந்தியாவில் தான் வளர்ந்த விதத்திலும், தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயங்களிலும் நினைவு சுற்றி இருந்தது.
அதன் பிறகு ஒரு வழியாக சமையலை முடித்து எடுத்து வைத்தவள்.,
“உங்களுக்கு வேணுங்கறதை எடுத்து வச்சு சாப்பிடுங்க”, என்று சொல்லிவிட்டு நகர போனவளை தடுத்து நிறுத்தியவன்.,
“ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் நில்லு”, என்று சொன்னவன், “எதுக்கு இவ்வளவு அவசரம் எங்க போற”, என்று கேட்டான்.
இவளோ அவனைப் பார்த்துவிட்டு, “முக்கியமான ஒரு போன் பண்ணனும்., பேசிட்டு வரேன்”, என்று சொன்னான்.
அவனும் ‘அவள் தன் மாமன்களிடம் பேச போகிறாள்’, என்று நினைத்துக் கொண்டு அவளை பார்த்த படி நின்றான்.
“சாப்பிட்டு போய் பேசலாம் இல்ல”, என்று சொன்னவன் குரல் இதற்கு முன் பேசியதற்கும் இப்போது பேசியதற்கும் மாறுபட்டு இருப்பதாக இவளுக்கு தோன்றியது.
இவளோ எதுவும் சொல்லாமல், “நீங்க சாப்பிடுங்க”, என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
இவனோ, “நீயும் வா சேர்ந்து சாப்பிடலாம் “, என்று சொன்னான்.
“நீங்க பாஸ் உங்களுக்கு தேவையானதை எடுத்து வச்சு சாப்பிடுங்க, உங்களுக்கு தேவையானது நீங்களே செஞ்சிக்கோங்க இனிமேல்”, என்று சொன்னாள்.
“ஹலோ ஹலோ அப்படியெல்லாம் தலையில் பாம் போடாதே, எனக்கு அந்த அளவுக்கு சமைக்க வராது., கொஞ்சம் கொஞ்சம் தெரியும்., ஆனா நீ இப்ப செய்த மாதிரி வாசமா இந்த அளவுக்கு எல்லாம் செய்ய தெரியாது., சீக்கிரம் வா”, என்று சொல்லி விட்டு காத்திருந்தான்.
இவளோ அவனை பார்த்தபடியே, மதரை அழைத்தவள், பேசிக்கொண்டே அறைக்கு வந்தாள், “மதர் எதோ சொல்லணும்னு சொன்னீங்க, ஆனா யூ எஸ் கிளம்பும் போது கூட உன் கிட்ட சொல்லனும், நீ போய்ட்டு வா அப்புறம் சொல்றேன் அப்படின்னு மட்டும் சொன்னீங்க., ஏனோ இன்னைக்கு உங்ககிட்ட எனக்கு பேசணும் போல இருந்துச்சு, அதுதான் கூப்பிட்டேன்”, என்று சொன்னாள்.
மதரும் பெருமூச்சு விட்டவர்., “என்னைக்காவது ஒரு நாள், உன்னோட வீகென்ட் நீ ப்ரீயா இருக்கிற சமயமா கூப்பிடு., நான் சொல்றேன் இப்ப பேசணும் னா நேரமாகும்., சாப்டியா நாளைக்கு வேலைக்கு போகணும் இல்ல., போய் சாப்பிட்டு தூங்கு”, என்று அங்கிருந்து பதில் வந்தது.
“வேற ஏதும் முக்கியமான விஷயமா மதர்” என்று கேட்டாள்.
“ரொம்ப முக்கியம் தான், ஆனால் இப்போதைக்கு ரொம்ப முக்கியம் கிடையாது., பின்னாடி உனக்கு தேவைப்படலாம்”, என்று சொன்னார்.
“ஓகே மதர்” என்று இவள் அறைக்கு வெளியே வந்து மதர் என்று சொன்னது அவனுக்கு கேட்டது.
“அவ மாமன் ங்க கிட்ட பேச போகலையா”, என்று யோசித்துக் கொண்டான்.
ஏற்கனவே இவள் உணவை எடுத்து டேபிளில் வைத்திருக்க., அவனுக்கு தேவையானது அவன் வைத்துக்கொள்ள., இவளுக்கு தேவையானது இவள் எடுத்து இருவரும் உண்ண தொடங்கும் போது அவன் அவளிடம் பேசாமலே வேகமாக சாப்பிட தொடங்கினான்.
சாப்பிட்டவன் சற்று நேரத்தில் ‘அப்படி ஒரு டேஸ்ட்’ என்று மலையாளத்தில் சொன்னான்.
அவளோ அவனையே பார்க்க., அவனும் “மேடம் மலையாளத்துல சொன்னா, பதில் சொல்ல மாட்டீங்கல்ல”, என்று சொல்லிவிட்டு, “ஆமா வினித் கூட இவ்வளவு நாள் பழகுற இல்ல., அவன் மலையாளத்தில் பேசாமல் இருந்திருக்க மாட்டான்., அப்ப நீ என்ன பண்ணுவ”, என்று கேட்டான்.
“ஒரு வேலை உனக்கு உங்க தாத்தாவோ, இல்ல வினித்தோ கேரளா சைடு மாப்பிள பார்த்தா”, என்று கேட்டான்.
“அவங்க எனக்கு பார்க்க மாட்டாங்க., என் பெர்மிஷன் இல்லாம எங்க மாம்ஸ் பார்க்க மாட்டான்”, என்று சொன்னாள்.
“அவ்வளவு நம்பிக்கை” என்று சொல்லிவிட்டு மலையாளம் புரியும் தானே “, என்றான்.
அவனைப் பார்த்தவள் தலையை மட்டும் லேசாக ஆட்டிவிட்டு., “ஆனா ரொம்ப புரியாது”, என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட பாத்திரத்தை எடுத்து வைத்தவள். மீதி இருந்தவற்றை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு பாத்திரத்தை எல்லாம் கழுவி எடுத்து வைக்க சென்றாள்.
அவன் தான் வந்து, “இதையும் நான் ஷேர் பண்ணிக்கிறேன், உனக்கு காய்கறி கட் பண்ணி தரேன்., மத்த எல்லாம் செஞ்சு தரேன்., ஏன் பாத்திரம் கூட கழுவி தரேன்., ஆனா இந்த சமைக்கிறது மட்டும் நீ பொறுப்பெடுத்துட்டேனா ஓகே”, என்று சொன்னான்.
அவளோ அவனைப் பார்த்து, “அதுதான் கஷ்டமான வேலை”, என்று சொல்லிவிட்டு சென்றாள்.
அவனோ “ப்ராஜெக்ட் பத்தி கேட்கணும்”, என்று சொன்னான்.
“என்ன” என்றாள்.
“இல்ல இதை தான் கேட்பேன் ன்னு எப்படி கெஸ் பண்ணின”, என்றான்.
“தெரியுமே உங்க ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி ஒருத்தர் பேசினார் இல்ல., அவர் ப்ராஜெக்ட் பத்தி சொல்லும் போது ஓகே எப்படி போகணும் அப்படிங்கறது ஓரளவு கெஸ் ஆயிருச்சு., ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணப்போ கரெக்டா தான் போயிட்டு இருக்கோமா ன்னு அப்பப்போ செக் பண்ணுவேன்ல, அப்போ எந்த இடத்தில எல்லாம் டவுட் வரும் ன்றது ஓரளவுக்கு கெஸ் ஆச்சு., அதுதான் நோட் பண்ணி வச்சேன்”, என்று சொன்னாள்.
“குட் ஜாப்”, என்று சொன்னவன்., “ஓகே இப்போ ப்ராஜெக்ட் எந்த லெவல்ல நிக்குது நினைக்கிற”, என்று கேட்டான்.
வேண்டுமென்றே தான் கேட்டான்., என்பதை இவளும் தெரிந்து கொண்டு மேக்சிமம் 10% , மினிமம் அதைவிட கம்மி தான்., இன்னும் நிறைய இருக்கு., கொஞ்சம் ஸ்பீடா பண்ணி கொண்டு போனா., 6 மாத்ஸ் குள்ள முடிச்சிடலாம்., இல்லாட்டி இழுத்து அடிக்கும்”, என்று சொன்னவள்., “எனி மோர் கொஸ்டின்”, என்று கேட்டாள்.,
அவனும் “இல்ல போய் தூங்கு, குட் நைட்”, என்று சொல்லி அனுப்பியவன்.,
அவள் அறைக்குள் சென்று கதவை சாத்திய பிறகு, தன்னுடைய லேப்டாப்பை திறந்து அதில் இருந்த கண்மணி என்ற பெயரில் இருந்த போல்டரை ஓபன் செய்தான்.
சற்று நேரம் அதிலிருந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தவன்., ஒரு புகைப்படத்தை பார்த்தபடி சிரித்துக்கொண்டே., ‘இந்த போட்டோவை பார்த்தால் நான் தொலைஞ்சேன்’, என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன்., சிரித்தபடியே லேப்டாப்பை ஷட் டவுன் செய்து தூங்க சென்றான் நிறைவான மனநிலையோடு.,
மனம் நேர்மையாக.. ஒழுக்கத்துடன்.. தூய்மையாக.. நம்பிக்கை மிக்கதாக இருந்தால் நாம் கடவுளை தேடி ஆலயத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.!