போன் வரவும் எடுத்தவள், “சாரி மாம்ஸ், காலையிலேயே டிஸ்டர்ப் பண்றேன்”, என்று சொன்னாள்.
“என்னடா குட்டி”,என்று வினீத் ஒரு புறமும்., “என்னடா பாப்பா காலையிலேயே கூப்பிட சொல்லி இருக்க., நேத்து நைட் நல்ல ரெஸ்ட் எடுத்தியா”, என்று கேட்டனர்.
“அதெல்லாம் ஓகே மாம்ஸ்”, என்றவள் குரல் மாறுபாட்டிலேயே வினித் தான், “குட்டி என்னடா குரல் டல்லா இருக்கு”, என்று கேட்டான்.
“அது ஒன்னும் இல்ல மாம்ஸ், உங்க தாத்தா ஒரு பிராப்பர்ட்டி பத்தி பேசினாங்க இல்லையா., அது என்னைக்கு எழுதலாம் முடிவு பண்ணிட்டீங்களா”, என்று கேட்டாள்.
“தெரியலையே குட்டி, நீ இப்போ தானே ஊர்ல இருந்து வந்திருக்க.,10 நாள் போகட்டுமே பேசலாம்”, என்று சொன்னான்.
“இல்ல நீ எனக்கு உங்க தாத்தா கிட்ட கேட்டுட்டு இம்மீடியட்டா போன் பண்ணு,
முகி மாம்ஸ், நீயும் உங்க டாடி கிட்ட கேட்டுட்டு எனக்கு போன் பண்றியா., பெட்டர் ரெண்டு பேரும் வேற வேற நாள்ல வைங்க., அப்பதான் நான் ரெண்டு இடத்துக்கும் வந்து சைன் போட முடியும்., இல்ல நான் வராமலே சைன் போட முடியும்னாலும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”., என்று சொன்னாள்.
“கேட்டுட்டு இப்ப போன் பண்ணட்டுமா”, என்று கேட்டனர்.
“கேட்டு கண்டிப்பா சொல்லு”, என்று சொன்னாள்.
அவர்கள் போனை வைக்கவும்., இவனை நிமிர்ந்து பார்த்தவள்., “அவங்க ரெஜிஸ்ட்ரேஷன் வைக்கிற, அதே நாள்ல நீங்களும் வெச்சீங்கன்னா பெட்டரா இருக்கும்., நான் வந்து சைன் பண்ணி கொடுக்கிறேன்”, என்று சொன்னாள்.
“அவங்க என்னைக்கு வைக்கிறார்களோ தெரியாது., இன்னைக்கு ஆப்டர் நூன் க்கு மேல ரெஜிஸ்ட்ரேஷன்., நீ என் கூட கொச்சின் வர்ற”, என்று சொன்னான்.
ஒரு நிமிடம் அதிர்வாக பார்த்தாள்., “எனக்கு மலையாள வாசிக்க தெரியாது., அதுல என்ன எழுதி இருக்குன்னு எனக்கு தெரியாது., அப்போ வினி மாம்ஸ் அந்த நேரத்தில் அங்க இருக்கணும்”, என்று சொல்லி விட்டு “அங்க வீட்டில் நடந்தது என்னவென்று எனக்கு தெரியாது, நீங்க சொல்றத., நான் அப்படியே நம்புறேன் ஆனா அது உண்மையா பொய்யா ன்னு எனக்கு எதுவும் புரியாது., தெரியாது., சோ அந்த வீட்ல உள்ளவங்க கண்டிப்பா வரணும்., அப்படின்னா மட்டும் தான் நானும் வருவேன்”, என்று சொன்னாள்.
இவனே யாரையோ அழைத்து அங்கு உள்ளவர்கள் மூலம் தகவல் சொல்ல சொல்லிவிட்டான்.,
தன் வீட்டிற்கும் தகவல் தெரிவித்தான், “மத்தியானம் மூணு மணிக்கு மேல ரெஜிஸ்ட்ரேஷன் ஏற்பாடு பண்ணுங்க, அந்த பொண்ணு சைன் பண்ண வருவா”, என்று மட்டும் சொன்னான்.
“மத்தியானம் மூணு மணிக்கு னா”, என்று கேட்டாள்.
“12:00 மணிக்கு பிளைட் கிளம்பு”, என்றான்.
“நான் வீட்டுக்கு போயிட்டு”, என்று சொன்னாள்.
“வீட்டுக்கு போறதுக்கு எல்லாம் டைம் இல்ல, கிளம்பு இப்படியே போயிட்டு சைன் பண்ணிட்டு உன்னை ஈவினிங் பிளைட்டுக்கு ஏற்றி விடுறேன், நீ சென்னை வந்திடலாம், உன் வீட்டுக்கு போயிடலாம்”, என்று சொன்னான்.
“தேங்க்ஸ்” என்றவள்.
அப்படியே தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கிளம்ப தயாராக தொடங்கினாள்.
அவள் முகத்தைத்தான் பார்த்தான். அவள் முகத்தில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஏனெனில் முகம் எப்போதும் போல தான் இருந்தது.
ஆனால் மனதிற்குள் தான் அத்தனை வலி, சொத்து என்று வந்தவுடன் சொந்தங்கள் எப்படி அடித்துக் கொள்கிறது என்று தோன்றியது.
‘இப்படி பிரச்சனைகளை தரக்கூடிய அந்த சொத்து எதற்கு’, என்று தோன்றியது.
‘எல்லாருமே பணத்திற்காக தான் பார்த்திருக்கிறார்கள்., பிரண்டோட பொண்ணு, அவங்க அப்பா பார்க்க ஆசைப்பட்டார் ன்னு சொல்லுறது நம்புற மாதிரியா இருக்கு, அப்போ ஆக மொத்தம் எல்லாருமே சாபம் விட்டு இருக்காங்க இல்ல., அதனால தான் எங்க அம்மா அப்பா சீக்கிரமா போய்ட்டாங்களா’ என்று யோசித்தவள், கண் கலங்க போவது அறிந்து வேகமாக எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள்.
அங்கு சென்றவளுக்கு அவள் அறியாமல் கண்ணீர் வடிந்தது. முகத்தை நன்றாக கழுவி துடைத்து விட்டு தன்னை ரெப்பரஷ் செய்து கொண்டு வெளியே வந்தாள்.
அந்த அறையில் இருந்த ஜன்னல் வழியே தூரத்தில் தெரிந்த கடற்கரையை வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.
அப்போது அறையின் கதவு திறக்கப்பட., திரும்பிப் பார்த்தவள், அவன் கிளம்பி வந்து நிற்பதை பார்த்தவுடன்., தன்னுடைய திங்க்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு அவனை பின் தொடர்ந்தாள்.
வெளியே வந்து ஒரு காரைக்காட்டி., “அதுல வா, உன்னோட டிக்கெட் உன் கைக்கு ஏர்போர்ட் வந்த பிறகு டிரைவர் கைல கொடுப்பான்., உனக்கு ப்ராசஸ் என்னன்னு தெரியும்., கொச்சின் பிளைட் கேட் சொன்னவுடனே வந்துரு., நான் நேரா பிளைட்டுக்கு வந்துருவேன்”, என்று சொல்லிவிட்டு அவளை ஒரு காரில் அனுப்பிவிட்டு., அவன் மற்றொரு காரில் சென்றான்.
இவள் எதுவும் சொல்லாமல்., இயந்திரம் போல அவன் சொன்னதை மட்டுமே செய்தாள்.
ஏர்போர்ட் வந்து இறங்கியவள் கையில் டிக்கெட் கொடுக்கப்பட., வாங்கிக் கொண்டவளுக்கு ‘தன் வாழ்க்கை மற்றவர்களால் விளையாடப்படுகிறது’, என்பது மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது.
அதே நேரம் வினித் ம் முகேஷ் ம் போன் செய்து., “குட்டி என்னடா பிரச்சனை”, என்று வேகமாக கேட்டான்.
“என்ன மாம்ஸ், இவளோ டென்ஷன்” என்று மெதுவான குரலில் கேட்டாள்.
“குட்டி மிஸ்டர் நிமலன் அங்க வந்தாராடா”, என்று கேட்டான்.
“யார் அந்த நிமலன்”, என்றாள்.
“தாத்தாவோட தங்கச்சி பேரன்”, என்று சொன்னான்.
“ஓஓ அவர் பெயர் நிமலனா, பேர் தெரியாது, ஆனா பேமிலி பற்றி சொன்னாங்க., இப்போ ஏர்போர்ட்ல நிக்கிறேன்., மத்தியானம் 3:00 மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ன்னு சொன்னாங்க., உனக்கு தகவல் கொடுக்கிறதா அவங்களே சொன்னாங்க., சோ வந்துருவ இல்ல”, என்று கேட்டாள்.
அவனும் “கண்டிப்பா வந்துருவேன் குட்டி., ஏன் இவ்வளவு அவசரம்”, என்று கேட்டான்.
“அடுத்தவங்க சொத்து, எனக்கு எதுக்கு மாம்ஸ்., எங்க அப்பா பேருல தாத்தா எழுத சம்மதித்ததே தப்பு., அவங்க அவங்களுக்குன்னு ஒரு விருப்பம் இருக்கும், அதை கேட்காம கல்யாணம் பேசினது அதைவிட தப்பு., சரி விடு அதெல்லாம் அவங்க அவங்க விஷயம் இனிமேல் பேசி பிரயோஜனம் இல்லை.,
மத்தவங்களோட சாபமோ, என்னமோ என்னோட பேரன்ட்ஸ் அவங்களோட வாழ்க்கை வாழாமலே போயிட்டாங்க., அவங்க வாழாம போயி என்னையும் அனாதை ஆகிட்டு போயிட்டாங்க., ஆனா ஒன்னே ஒன்னு மாம்ஸ் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன், காசு பணம் ஆசையில கல்யாணம் பண்ணி பொறந்திருந்தா நானும் மணி மைய்ன்ட்டடா தான் இருந்து இருப்பனோ, என்னவோ., ஆனா எங்க அம்மாவும், அப்பாவும் உண்மையான அன்போட கல்யாணம் பண்ணி நான் பிறந்து இருக்கேன்., அதனால தான் எனக்கு பணம் பெருசா தெரியல., இந்த ஹேப்பினஸ் போது மாம்ஸ்”, என்று சொன்னாள்.
அந்த பக்கம் இருந்த முகேஷோ “பாப்பா” என்று ஏதோ சொல்ல வர.,
“பரவால்ல மாம்ஸ்., சரி நீங்க ரெண்டு பேரும் உங்க தாத்தா கிட்ட, உங்க டாடி கிட்ட பேசினீங்களா”, என்று கேட்டாள்.
இருவரும் ஒன்று போல, “அவங்க கூட உனக்கு ஒரு உறவு முறை இருக்கு”, என்றனர்.
“இருக்கு, ஆனா எனக்கு கூப்பிடனும் தோணல., எப்பவாவது கூப்பிடனும்னு தோணுச்சுன்னா கூப்பிடுறேன், எல்லாரோட சாபம் தான் அப்படிங்கறது எனக்கு மனசுல பதிந்து போய் இருக்கு., சோ ப்ளீஸ் கேட்டு சொல்றியா”, என்று சொன்னாள்.
வினித் தான், “தாத்தா 15 நாள் கழிச்சு னு சொன்னாங்க”, என்று சொன்னான்.
முகேஷ் ம் “எங்க அப்பாவும் அத தான் சொன்னாங்க., ஒரு 15 நாள் கழிச்சு பார்ப்போம்., கொஞ்சம் ஒர்க் இருக்கு அதெல்லாம் முடிச்சுட்டு அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாங்க”, என்று சொன்னான்.
“ஓகே அதுக்கப்புறம் உங்க இஷ்டம்”, என்று சொல்லி விட்டு “வினீ மாம்ஸ் வந்துருவ இல்ல”, என்று கேட்டாள்.
“கண்டிப்பா குட்டி வந்துருவேன்”, என்றான்.
“எனக்கு மலையாளம் வாசிக்க தெரியாது மாம்ஸ்., நீ வந்து தான் கரெக்டா இது தானா, உண்மையிலேயே அப்படி ஒரு ப்ராப்ளம் உண்டு தானா அப்படிங்கறது எல்லாம் உங்க தாத்தா கிட்ட கேட்டுட்டு வா”, என்று சொன்னாள்.
“அதெல்லாம் உண்டு ன்னு தெரியும்., மிஸ்டர் நிமிலன் கொஞ்சம் பெரிய இடம்., சும்மா ஓங்கி கூட பேச முடியாது”, என்று சொன்னான்.
“அவங்க ராஜ பரம்பரையாவே இருக்கட்டும்., எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல., கையெழுத்து போட்டு கொடுத்துட்டு நான் வந்துட்டே இருக்க போறேன்., எனக்கு நீ கூட நிக்கணும் அவ்வளவு தான்”, என்று சொன்னாள்.
“வந்திருவேன் குட்டி”, என்று சொன்னான்.
“தேங்க்ஸ் மாம்ஸ்” என்றபடி அவர்கள் கட் செய்வதற்கு முன்பே கட் செய்தாள்.
மனம் முழுவதும் சொல்ல முடியாத வலி, அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை., ஆனால் எப்போதும் வலியை மனதிற்குள் அடக்கி அடக்கி பழகியதாலோ என்னவோ முகத்தில் சிறு வேறுபாடு கூட தெரியவில்லை.
உள்ளத்தில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே.. கல்லான இதயம் கூட கரையும்.. அன்பு மழையாய் பொழியும் போது.!