“அதாவது எங்க அப்பாவோட தங்கச்சிய தான்., உங்க அப்பாக்கு கல்யாணம் பண்றதா வீட்ல பேசி இருக்காங்க., ஐ மீன் எங்க அத்தைய கல்யாணம் பண்ணுறத பற்றி அப்போ உங்க அப்பா எதுவுமே சொல்லல., அதாவது அப்ப எதிர்ப்பு தெரிவித்து இருந்தாங்கன்னா கல்யாணம் பேசி இருக்க மாட்டாங்க., உங்க தாத்தா அதாவது எங்க முத்தட்சிய”, என்று சொல்ல தொடங்கவும்,
“முத்தட்சிய” என்று இவள் பதில் கேள்வி கேட்டாள்.
“எனக்கு பாட்டி”, என்றான்.
“ஓ பாட்டி கிரான்ட் மதர் ஓகே”,என்றாள்.
“எங்க முத்தட்சிக்கு கல்யாணத்துக்கு பார்க்கும் போதே, அவங்க குடும்ப வசதியை விட கூடின வசதில வேணும் அப்படின்னு சொல்லி தான், எங்க தாத்தாவ பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காரு உங்க தாத்தா சரியா.,
தன் தங்கச்சியோட லைஃப் வசதியா இருக்கணும்., நம்ம வீட்ல இருந்ததை விட அதிகமா இருக்கணுமே ஒழிய குறைச்சி போயிறக் கூடாது அப்படிங்கிற லெவல்ல தான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காரு.,
அந்த காலத்திலேயே ஊரை கூட்டி நடந்த திருமணம், அந்த ஏரியா ஃபுல்லா ஒரு மாசத்துக்கு இங்கதான் விருந்து, அப்படிங்கிற லெவல்ல நடந்த கல்யாணமாம்,
எங்க தாத்தா வசதிக்கு, சரியா எந்த விதத்திலும் குறைக்க கூடாதுன்னு, தங்கச்சிக்கு சீர் செய்வது ஆகட்டும், அவங்க குடும்ப உறவு ஒற்றுமையாகட்டும் எல்லாம் நல்லா தான் இருந்துச்சு”., இவள் அமைதியாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனும் மீண்டும் சொல்ல தொடங்கினான். “நான் சொல்றது புரியுதா”, என்று கேட்டான்.
தலையை ஆட்டியவள், அவன் மலையாளம் சற்று கலந்து பேசினாலும், இவளுக்கு தெளிவாகவே புரிந்தது.
“எங்க அப்பாவ விட, உங்க அப்பா வயசுல சின்னவர் தான்., ஆனாலும் ரெண்டு பேரும் பயங்கர திக் ஃப்ரெண்ட்ஸ்., அந்த தைரியத்துல எங்க அத்தைக்கும்., உங்க அப்பாவுக்கும் மேரேஜ் பேசி இருக்காங்க பெரியவங்க.,
உங்க அப்பாவோட பிசினஸ் அப்பதான் ஸ்டார்ட் பண்ணின சமயம்., கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு வர சமயம்., சோ எதுவும் மறுப்பு சொல்ல மாட்டாரு அப்படிங்கிற நம்பிக்கைல எல்லாம் பேசி முடிச்சிட்டாங்க.,
அந்த சமயம் எங்கப்பாக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிருச்சு., பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குற அளவுக்கு அவங்களுக்குள்ள வயசு வித்தியாசங்கள் வேறுபட்டு போயிட்டு, அந்த மாதிரி ஒரு ஐடியா இல்ல, ஆனா உங்க அப்பாவுக்கும், எங்க அத்தைக்கும் பேசி முடிச்சப்ப வீட்ல எல்லாரும் கேட்க்கும் போது தாத்தா பாட்டி ல இருந்து எல்லாரும் சம்மதிச்சிட்டாங்க.,
தாத்தாக்கு நம்பிக்கை, உங்க அப்பா அவர் சொன்னா கேட்பார் அப்படி ன்கிற நம்பிக்கையில் சம்மதிச்சிட்டாங்க., எல்லாம் பேசி முடிச்சிட்டாங்க., பொதுவா எங்க குடும்ப பழக்கம்., ஐ மீன் உங்க தாத்தா வீட்லயும் சேர்த்து தான் சொல்றேன்.,
என்ன அப்படின்னா, பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது அவங்களுக்காக ஒரு சொத்தையும் எழுதி கொடுக்கிறது வழக்கம்., அந்த மாதிரி உங்க அப்பா அந்த நேரத்தில் தான் பிசினஸ்ல வளர்ந்துட்டு வந்ததால, எங்க தாத்தாக்கு தன் பொண்ணோட பேருக்கு குடுக்குற சொத்தை, மருமகன் பெயரில் இருக்கட்டும் அப்படிங்கிற எண்ணத்துல உங்க அப்பாக்கு அந்த பிராப்பர்ட்டியை எழுதி வைத்துவிட்டார்., எழுதி வச்சதோட இல்லாம எங்க அப்பாவோட பேச்ச கேட்டு அவர் மேல் இருந்த நம்பிக்கையில ரெஜிஸ்டர் ம் பண்ணிட்டாங்க”, என்றான்.
“சரி அதுக்கு”, என்றாள்.
“அதுக்கப்புறம் ஒரு ரெண்டு வருஷம் அப்படியே தான் போயிட்டு இருந்துச்சு., உங்க அப்பாட்ட கல்யாணத்த பத்தி பேசினாலே இப்ப வேண்டாம் இப்ப வேண்டாம் ன்னு மட்டுமே சொல்லி இருக்காரு.,
ஆனா அவர் இன்னொருத்தரை விரும்புறத சொல்லவே இல்ல., ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் வைக்கலாம் அப்படிங்கிறதுல இருந்துட்டாங்க., ஏன்னா அந்த காலத்துல எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் ஏஜ்ல கல்யாணம் பண்ணிடுவாங்க போல.,
அதனால கொஞ்சம் லேட் ஆனாலும் எப்படியும் கல்யாணம் முடியும் ன்ற நம்பிக்கைல இருந்துட்டாங்க., அந்த சமயத்துல தான் உங்க அப்பா லவ் மேரேஜ் பண்ணிட்டு வந்து நின்னாங்க., உங்க வீட்ல யாரும் ஏத்துக்கல., உங்க வீட்ல மீன்ஸ், உங்க தாத்தா வீட்ல யாரும் ஏத்துக்கல., எல்லாரும் அப்படியே வெளியே போ ன்னு சொல்லிட்டாங்க., அதே மாதிரி உங்க அம்மா சைடுல ஏத்துக்கலன்னு அதுக்கப்புறம் கேள்விப்பட்டாங்க., இதுல என்ன பிரச்சனை அப்படின்னா.,
எங்க தாத்தாக்கு கோவம் எங்க அப்பா மேல., எந்த தைரியத்துல நம்பிக்கையா சொன்ன., நீ சொல்ல போய் தானே ரிஜிஸ்டர் பண்ண சொன்னேன்.,
நானும் சொத்தை எழுதி ரெஜிஸ்டர் பண்ணினேன்., அவனை நம்பி தானே ரெண்டு வருஷம் என் பொண்ண வெயிட் பண்ண வெச்சோம், அப்படிங்கற கோபம்., இதை விட பெட்டரா மாப்பிள பாக்கணும்., நல்ல மாப்பிள்ளை பார்த்து நல்லபடியா கல்யாணம் பண்ணாரு., ஆனா எங்க தாத்தாக்கு ஏமாந்துட்டோம்., அவன் நம்மள நம்ப வச்சு ஏமாத்திட்டாங்கற கோபம் அதிகமா இருந்துச்சு.,
அந்த கோபத்தோட எஃபெக்ட்., ஞாபகம் வரும் போது சண்டை வந்து பேச்சு வார்த்தையே இல்லாம ஆயிடுச்சு., எங்க முத்தட்சியும் அங்க போறத விட்டுட்டாங்க., என்ன தான் சொந்த அண்ணன் வீடா இருந்தாலும்., அவங்களாலயும் போக முடியாம ஆயிடுச்சு.,
எங்க முத்தட்சி க்கி அவங்களோட சேட்டனோட உறவு இல்லாமல் போயிடுச்சு.,
என்னோட அப்பா அவங்களும் அப்படியே வெறுப்புல, உங்க அப்பாவோட டச் ல இல்லாம ஆயிட்டாங்க., ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் எங்க அப்பாக்கு தெரியும், உங்க அம்மா போய் கொஞ்ச நாள்ல உங்க அப்பாவும் போய்ட்டாருன்னு.,
அதுக்கப்புறம் தான் அப்பாக்கு நீ இருக்கிறதே தெரியும்., உன்னை தேடினாங்க எதுக்கு னா, உன்னை பார்க்கணும் என்ற எண்ணம்”, என்று சொன்னான்.
அமைதியாக அமர்ந்திருந்தவள் அவன் சொல்வதை நம்பாதது போல தலைய அசைத்தவள்.,
“இப்ப என்ன அந்த சொத்து எங்க அப்பா பேருல இருக்கா., உங்க பெயருக்கா, இல்ல உங்க வீட்ல உள்ளவங்க வேற யாரு பெயருக்கு மாத்தனும்” என்று கேட்டாள்.
அவன் முகத்தில் சற்று அதிர்வு வந்து போனது போல தான் இருந்தது.
இவளோ “யார் சொத்தும் எனக்கு தேவை இல்லைங்க சார்., எங்க அப்பா எனக்காக விட்டுட்டு போனது இருக்கு., அது மட்டும் எனக்கு போதும்., என் படிப்பு இருக்கு, என் வேல இருக்கு., நான் பாத்துக்குவேன்., இப்ப என்ன உங்களுக்கு எழுதி கொடுக்கணும் அதுக்கு தான் கூட்டிட்டு வந்தீங்களா., இதை நீங்க என்கிட்ட நேரடியாகவே கேட்டு இருக்கலாமே., இதுக்காக மேனகட்டு கடத்திட்டு வந்து., கஷ்டப்பட்டு எதுக்கு தேவையில்லாத வேலை எல்லாம்”, என்று சொன்னவள்.,
சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு பின்பு சொன்னாள், “என் ஃபோன் இருந்தா குடுக்குறீங்களா., நான் வினீத் மாமா கிட்ட பேசணும்”, என்று சொன்னாள்.
அமைதியாக அவளைப் பார்த்தவன், கபோர்ட்டில் பவர் பேங்கில் சார்ஜில் இருந்த அவள் போனை எடுத்து கையில் கொடுத்தான்.
ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது, எடுத்து ஆன் செய்தாள். அமைதியாக போனை வைத்துக் கொண்டிருந்தவள்.,
சற்று நேரத்தில் கூப்பிடும் படி மெசேஜ் செய்தாள், இந் நேரம் தான் இருவரும் ஹாஸ்பிடல்ல போய் இருப்பார்கள் என்று தெரியும்., இருந்தாலும் அழைக்க சொன்னவுடன் அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஃபோன் வந்தது.
அதுவரை அமைதியாகவே இருந்தாள், அவனை நிமிர்த்து கூட பார்க்கவில்லை.