Thursday, May 1, 2025

    அழகியல்

    அழகியல் 10 "என்னை  கட்டிக்க ஏற்பாடு பண்றேன்" என்று ஜனக்நந்தினியிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டான். ஆனால் அது ரகுராமிற்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை. முதலில் தன் வீட்டில் இப்படி என்று சொல்ல வேண்டுமே. அவர்கள் நிச்சயித்த பெண், அதுவும் அத்தை மகள் தான் என்றாலும், ஏதோ ஒரு தயக்கம். ஏற்கனவே ப்ரவீன் நிச்சயத்தில் வைத்து ஜனக்நந்தினி பாட்டி அவர்களுக்கு நிச்சயித்தது...
    அழகியல் 17 அதிகாலையில் ரகுராமின் மொபைல் ஒலிக்க, மணமக்களுக்கு ஆழ்ந்த உறக்கம். சில நிமிட இடைவெளியில் திரும்ப ஒலிக்க, அப்போதும் இருவரும் அசைய கூட இல்லை. "நல்லா தூங்கிட்டிருக்காங்க போல" என்றாள் அனுஷா அம்மாவிடம். "பூஜைக்கு போகணுமே" அவர் கைகளை பிசைய, "என்னாச்சு" என்று வந்தார் அருணகிரி. எல்லாம் குளித்து தயாராக இருக்க, முக்கியமானவர்கள் இன்னும் எழவே இல்லை. "அது பிள்ளைங்க...
    அழகியல் 3 "எட்டாக்கனி!" இது தான் பாரதியின் நிலை தற்போது. எட்டாமல், கைக்கு கிடைக்காமல் போகும் பொருளுக்கு மதிப்பும், ஏக்கமும் அதிகம். எட்டிய கனியை ருசி பார்த்து தனக்கு அதை பிடிக்குமா, பிடிக்காதா, சேருமா, சேராதா என்று தெரிந்து கொள்ளலாம். எட்டாமல் போவதாலே அதற்கான முக்கியத்துவம் மாறுபட்டு விடுகிறது. பாரதிக்கான அம்மா வீட்டு உறவும் இப்படியான முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அவருக்கு அமைந்துவிட்டது....
    ரகுராம் தள்ளியிருந்த பார்சல்களை காட்டி, "எல்லாம் ஆன்லைன் ஆர்டர்" என்றான். "தெரியும். பாப்பா நிறைய ஆர்டர் போடுவா" என்றார் பாரதி. ரகுராம் விரல்கள் ஒரு நொடி நின்று வேலை செய்ய, "வீட்ல எல்லோருக்கும் எடுத்துட்டு போகணும்" என்று பாரதி சொல்ல, ரகுராமே பார்த்து எடுத்து கொண்டான். பாரதி நூறு ரூபாய் மட்டும் கொடுத்து எடுத்து கொண்டார். காரை வரவைத்து...
    "ப்ரவீன்.. உன் அம்மாவை கொஞ்ச நாளைக்கு பெங்களூர் போக சொல்லு. இங்க வேணாம். கண்ணு நீ உன் அம்மாவை கூட்டிட்டு கிளம்பு " என்றார் தணிகைவேல் இடையிட்டு. "ப்பா" "இல்லை கண்ணு. என்னை கொஞ்ச நாளைக்கு விட்டுடுங்க. கிளம்புங்க" என்ற தணிகைவேல் வெளியே கிளம்பிவிட்டார். "போதுமா. இப்போ உனக்கு நிம்மதியா. வேணும் வேணும்ன்னு உன்னை கட்டிக்கிட்டு வந்ததுக்கு அவனை...
    அழகியல் 11 இன்னும் சிறிது நேரத்தில் விடியல் பிறந்துவிடும். பேருந்து சூரிய உதயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பாதி தூக்கத்தில்  விழித்ததால் ரகுராமின் கண்கள் எரிச்சலை கொடுத்தது. மொபைல் எடுத்து நேரம் பார்த்து கொண்டான். பஸ் திருப்பூரில் நிற்க,  பையுடன் இறங்கினான். ராமமூர்த்தி இவனுக்காக காத்திருந்தவர், "ரகு" என்றழைத்தார் கையை தூக்கி காட்டி. ரகுராம் அவரிடம் சென்றவன், "நீங்க ஏன்...
    இரண்டு நாளில் முடிவானது போல் சென்னை கிளம்பினர். தணிகைவேல் கொடுத்த சீர் ஒன்று விடாமல் பத்மா ஏற்றிவிட்டார். ராமமூர்த்தி, அனுஷா குடும்பம் வர, வேனில் பயணித்தனர். முந்தின இரவு சென்று சேர, இவர்களுக்கு முன் தணிகைவேல் குடும்பம் அங்கிருந்தது. ஆர்த்தி தவிர்த்து, ராஜேஸ்வரி, வேணி உட்பட, பெண் "பாட்டி" என்று அவரை அணைத்து கொள்ள, ராஜேஸ்வரிக்கு கண்கள்...
    ரகுராம், "நல்லது ம்மா" என்றான். "அது தம்பி அங்க சபையிலே உட்கார அப்பா இருக்கணும். கண்டிப்பா வரணும்ன்னு சொல்லி கேட்டுட்டுகிட்டு இருக்கா" என, "ஏன்ம்மா போக வேண்டாமா. அப்பா என்ன சொல்றார்?" என்று விசாரித்தான் மகன். "அப்பாக்கு போக இஷ்டம் தான் தம்பி. அந்த ராஜேஸ்வரி அம்மாவை நினைச்சா தான் எனக்கு  மனசு ஒப்ப மாட்டேங்குது. இந்த மூணு...
    அழகியல் 23 ஜனக்நந்தினி, ரகுராம் தம்பதி அறைக்கு சென்றுவிட, கீழே பெரியவர்களிடம் பெருத்த அமைதி. தணிகைவேல், பாரதி மௌனமாக உணவை உண்டு கொண்டிருந்தனர்.  பாரதியுடன் திருமணம் முடிந்து மறுவீடு வந்த நேரம் இப்படி மாமியார் வீட்டில் விருந்து உண்ட நினைவு தணிகைவேல்க்கு. பழையதை யோசிக்க, அவரின் மாமனார் தானே நினைவிற்கு வந்தார். மிகவும் நல்ல மனிதர். "என் விருப்பத்தை...
    அழகியல் 2 தன் கையில் இருக்கும் நோட்டீஸையே அதிர்ந்து பார்த்திருந்தார் அருணகிரி. பேச்சு வருவேனா என்றது. பாரதி இப்படி செய்வாள் என்று அவர் ஒரு சதவீதம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. நிச்சயம் முடித்து தேங்கி நின்றிருந்த நெருங்கிய உறவுகள் ஆளுக்கொன்று பேச, பத்மாவிற்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது. மஞ்சுளா அவரின் கை பற்றி கொள்ள, ரகுராம் அப்பாவிடம்...
    அழகியல் 24 தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து  ஜனக்நந்தினியும்  ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள். தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ என் பொண்ணு ஏன் பரிமாறனும் என்றெல்லாம் தோன்றவில்லை. உணவு முடியவும் அருணகிரி வீட்டிற்கு வந்தனர். ஓய்வாக அமர, "நைட் சென்னை கிளம்பலாமா?"...
    இத்தனை வருடம் கழித்து இப்போது தான் பாட்டி வீடு சொந்தம் என்று ஒன்று கிடைக்க, ஆர்வம் தான். மகிழ்ச்சியுடனே அம்மாவின் ஊரை பார்த்தாள் பெண். "இங்க என்ன ஸ்பெஷல்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு போகணும்" என்று நினைக்க, எதிரில் ரகுராம். யாரிடமோ பேசி கொண்டிருந்தவனை இப்போது தான் வெளிச்சத்தில் நன்கு பார்த்தாள். அவன் தானே! நெடு நெடுவென அரும்பு...
    "எங்களுக்கு தான்" மஞ்சுளா நேராக சொல்ல, "நீங்களே தான் சொல்லிக்கணும் அதை. பகல் கனவு காணாம சீக்கிரமே உங்க பையனுக்கு பொண்ணு தேடுற வழியை பாருங்க. இப்போவே ஆரம்பிச்சா தான் உங்க வசதிக்கு ஒரு வருஷத்துக்குள்ள அமையும்" என்றார் ராஜேஸ்வரி. "உறுதி பண்ண பொண்ணு இருக்க நாங்க ஏன் வெளியே தேடணும்?" என்று மஞ்சுளா கேட்க, "உறுதி பண்றதுன்னா...
    அங்கு அருணகிரி முட்டி மோதி பார்த்துவிட்டு வேறு வழி இல்லாமல் தங்கையிடம் பேசும் முடிவினை எடுத்தார். இருக்கும் சில சொத்துக்கள் பரம்பரை சொத்து. எதில் கை வைத்தாலும் பாரதி வந்து நிற்பார். சேமிப்பு இல்லை. பிள்ளைகளின் படிப்பே கடினமாக தான் இருந்தது. மகன் இப்போது தான் வேலைக்கு சேர்ந்திருக்க, அவனிடமும் எதிர்பார்க்க முடியாது. முட்டு சந்து போல்...
    அழகியல் 19 புது தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்க, ஜனக்நந்தினியும் மாமியார் வீட்டில் ஒன்ற ஆரம்பித்தாள். அசைவ விருந்தும், முக்கிய உறவினர்களின் விருந்தும் இந்த நாட்களிலே முடிந்திருந்தது. "இன்றைக்கு எங்கும் கிடையாது. அவ்வளவுதான் விருந்து முடிஞ்சது" என்று பத்மா சொல்லிவிட, ரகுராம்க்கு ஆசுவாசம். அனுஷாவும், ராமமூர்த்தி தம்பதியும் அவர்கள் இருப்பிடத்துக்கு திரும்பினர். பத்மா வழக்கம்...
    ஜனக்நந்தினி திரும்பி அப்பாவை பார்க்க, தணிகைவேல் எவ்வளவு தள்ளி செல்ல முடியுமோ அவ்வளவு தள்ளி சென்று பேத்தியை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தார். பாரதிக்கு சைகை செய்து தண்ணீர் எடுத்து வர சொல்லி குடிக்க கொடுத்தார். பட்டு, பாவாடை சட்டை அணிந்திருந்தவளின்  உடை தளர்த்தி முகம் துடைத்து, முடியை ஒதுக்கி கிளிப் குத்திவிட்டார். ஜனக்நந்தினி, "இப்படி தான்...
    அழகியல் 8 இன்னும் அம்மா வீட்டு ஆட்கள் வராததில் பாரதி கண்ணீரை அடக்கி நிற்க, ப்ரவீன் தொடர்ந்து ராமமூர்த்திக்கு அழைத்து கொண்டிருந்தான். அவர் எடுக்காததில், அருணகிரி எண்ணுக்கும் அழைத்துவிட்டான். அவரும் எடுக்கவில்லை. ப்ரவீன் புருவம் சுருங்கியது. ‘வரலைன்னா வரலைன்னு சொல்ல வேண்டியது தானே? இதென்ன போன் எடுக்காம இருக்கிறது?’ "ம்மா.. உடனே டவுன் ஆகாதீங்க. அவங்க வருவாங்க" என்று ஜனக்நந்தினி...
    அழகியல் 25 கந்தன் படத்துக்கு மாலையிட்டு, அலங்காரம் செய்தார் பாரதி. கைகள் சுறுசுறுப்பாக இயங்க, முகத்திலோ அளவில்லா மகிழ்ச்சி. இப்படி ஒரு நாள் வரும் என்று அவர் கனவிலும்  நினைத்து பார்த்ததில்லை. எல்லாம் அவரின் அண்ணன் மகன் செயல். அவரின் தவறை மிக சரியாக திருத்தி, அவரை குற்ற உணர்ச்சியில் இருந்து விடுவித்துவிட்டான். "என்ன முகம் மின்னிட்டே இருக்கு?"...
    அழகியல் 5 நிச்சய வீடு இப்போது வெறிச்சோடி போனது. பாரதி கிளம்பவும், சொந்தங்களும் ஒவ்வொருவராக கிளம்பி விட்டிருந்தனர். ராமமூர்த்தி, மஞ்சுளா தவிர. பெரியப்பா மட்டும் இறுதியாக நின்று, "இரண்டு நாள் கழிச்சு பாரதியை போய் பாருங்க. முடிஞ்சா நானும் கூட வரேன்" என்றிருந்தார். "போகணும் தான் பெரியப்பா. அனுஷா கல்யாண பத்திரிக்கை வைக்கணுமே" என்றார் அருணகிரி. "சரியா போச்சு. அதை...
    அழகியல் 22 ஜனக்நந்தினி, ரகுராம் மட்டும் வெளியில் நின்றனர். மனைவி கணவனை ஒட்டி நின்றாள். "நான் கிளம்பவா?" அவன் கேட்க, பெண் தலை மட்டுமே  அசைத்தாள். "என்னடி" என்று அவள் கை பிடிக்க, அமைதி. "நான் அதிகமா ஏதும் பேசிடலை தானே. அப்செட் ஆகிட்டியா?" என்று கேட்டான். மொத்த பேச்சு வார்த்தையிலும் மனைவி மௌனமாக இருந்ததை கவனித்து தான்...
    error: Content is protected !!