Advertisement

என்ன செய்வது என்று தெரியவில்லை. பாரதி மருமகளுக்கு குடிக்க எடுத்து வந்தவர், இருவரையும் கேள்வியாக பார்த்தார். ஆர்த்தி ஜுஸ் குடித்து சிறிது நேரம் படுக்க, ப்ரவீன் அம்மாவுடன் வெளியே வந்தான்.

“ரொம்ப பிரஷர் கொடுக்கிறாங்க போலம்மா” என்றான் தாங்காமல்.

பாரதிக்கு புரிந்தது. “என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கலாம் ப்ரவீன்” என்றார்.

“சீக்கிரம் செய்யணும்மா, இங்கேயே இருன்னா  வேணாம்ங்குறா” என்றான் வேதனையாக. பிரசவத்திற்கு நாள் வேறு நெருங்க, பயமாக இருந்தது.

தணிகைவேல் எதற்கோ அழைக்க, அம்மாவும் மகனும் இன்றயை நாளிற்கான வேலைகளில் ஈடுபட்டனர். சீர் பொருட்களை இரண்டு பெரிய வண்டியில் ஏற்றினர்.

லாக்கரில்  உள்ள நகைகளை எல்லாம் எடுத்து வந்திருக்க, வேணி துணையுடன் ராஜேஸ்வரி சரி பார்த்து, சூட்கேஸில் அடுக்கினார். அவரின் நகைகளை மூன்றாக பிரித்து பேத்தி பங்கை தனியே வைத்தார்.

“உனக்கு கொடுக்கிறதை நீ உன் மருமகளுக்கு கொடுத்துக்கோ. என் பேத்திக்கு நான் தனியே கொடுத்துகிறேன்” என்றார் பாரதியிடம். அவர் சரியென்று கேட்டு கொண்டார். வாயே திறக்கவில்லை.

தணிகைவேல்க்கோ மகளுக்கு இன்னும் செய்ய வேண்டும். ஆனால் உறவுகள் இருக்க அடக்கி கொண்டார். ப்ரவீன் தங்கைக்காக அவன் சம்பாத்தியத்தில் இருந்து சேமித்த பணத்தை  கொடுக்க, “இவ்வளவு தானா” என்றார் ராஜேஸ்வரி.

“உங்க மகனை போய் கேளுங்க. வேலை பார்க்கிற எனக்கு கொடுக்கிற சம்பளம் கம்மி. உங்களுக்கு பெட்டி பெட்டியா வருது”  என்றான் அவன்.

“கண்ணு வைக்கிறான். வேணி முதல்ல என் லாக்கருக்கு சுத்தி போடு” என்று நின்றார் அவர்.

“அதுல என் உழைப்பும் இருக்கு” என்று ப்ரவீன் சொல்ல,

“என் புருஷன், என் மகன் உழைப்புக்கு அடுத்தது தான் நீ. போடா” என்று வேகமாக லாக்கரை மூடி சாவி எடுத்து கொண்டார்.

“நாளைக்கு நான் தான் அதை பேங்க் எடுத்து போகணும். பார்த்துக்கோங்க” என்று மிரட்ட,

“வேலா இவன்கிட்ட கொடுக்காத. நேரா வெல்டிங் கடைக்கு போயிடுவான்” என்றார் பாட்டி.

“வெல்டிங் எதுக்கு. நம்பரே எனக்கு தெரியும்” என்று நெருங்க,

“தள்ளி போடா. கிட்ட வந்த பார்த்துக்கோ” என்றவர், முதலில் எல்லோரையும் வெளியே தள்ளி நம்பரை தான் மாற்றினார்.

வேணி சிரித்து ப்ரவீன் தோளில் அடித்தவர், “என் அம்மாவை ரொம்ப டென்சன் பண்ணாத” என்றார்.

“அத்தை நீங்க உலக்கை வைச்சு கூட என்னை அடிச்சுக்கோங்க. ஆனா இதை மட்டும் சொல்லாதீங்க. உங்க அம்மாவை எங்களை டென்சன் பண்ணா போதாதா” என்றான்.

எல்லாம் சிரித்து வேலை பார்க்க சென்றனர். அருணகிரி வீட்டினர் மதியம் போல வந்துவிட்டனர். ரகுராம் முகம் மலர்ந்து போனது. சித்தப்பாவுடன் நின்று கொண்டான்.

தணிகைவேல் இவர்கள் இருவரை பார்த்து வேறு பக்கம் செல்ல, அப்பாவும் மகனும் சிரித்து கொண்டனர். “இது தெரிஞ்சிருந்தா முதல்ல இருந்தே அவரை நல்லா கவனிச்சிருக்கலாம். இத்தனை வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம்” என்று வருத்தப்பட்டார் ராமமூர்த்தி.

“என் மருமகன் தனியா இருந்தா நல்லவர் தான். உன் அண்ணா தான் அவரை கெடுக்கிறது” என்று மனைவியிடம் குற்றம் சாட்டி சென்றார் தணிகைவேல்.

பாரதிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. கிளம்பும் வரை ராமமூர்த்தி கணவனை நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அருணகிரி வீட்டிற்கு முன் இருந்த பந்தலில் இருக்க, சுந்தரம் அவரிடம் பேசி கொண்டிருந்தார். பத்மா, மஞ்சுளா இருவரும் ராஜேஸ்வரியிடம் நலம் விசாரித்ததுடன், ஒதுங்கி கொண்டனர்.

ஜனக்நந்தினி கனக்க ஆரம்பித்த மனதுடன் உடமைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தாள். உதவிக்கு இருந்த பாரதிக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்தது. “எல்லாம் எடுக்காத” என்று பாதி உடமைகளை வைத்து கொண்டார்.

உணவு நேரம் என்பதால் பந்தி ஒரு பக்கம் நடந்து கொண்டே இருந்தது. நல்ல நேரத்தில் மணமக்கள் கிளம்ப வேண்டும் என்பதால் அவர்களை சாப்பிட அழைத்தனர்.

ஜனக்நந்தினி கண்கள் சிவக்க வர, ரகுராம்க்கு புரிந்தது. ஆறுதலாக அவள் கை கோர்த்து கொண்டான். தணிகைவேல் வீட்டில் யாருக்கும் உணவு இறங்கவில்லை.

ராஜேஸ்வரி அறை விட்டே வெளியே வரவில்லை. வேணியிடம் ஒரே அழுகை. “நான்.. என்னை வைச்சு என் பேத்தியை ஏதும் கஷ்ட படுத்துவாங்களா?” என்று கேட்டு கண்ணீர்.

“நிச்சயம் மாட்டாங்க” என்று வேணி சொல்லி கொண்டிருக்க, பேத்தியே அவரை தேடி கொண்டு வந்துவிட்டாள்.

“பாப்பா” என்று அணைத்து கொண்டவருக்கு அவ்வளவு துக்கம். ஜனக்நந்தினி சமாதானம் சொன்னாலும் அவளுக்கும் கண்ணீர் நிற்கவில்லை.

தணிகைவேல் மகளை தேடி அங்கேயே வந்துவிட்டார். அவரை பார்த்ததும் மகளுக்கு இன்னும் கண்ணீர் கூடியது.  பாரதி, ப்ரவீன், ஆர்த்தி, சுந்தரம் என, எல்லாம் அங்கு ஆஜராகிவிட, பாசப்போராட்டம்.

ஜனக்நந்தினி தன் பிரிவில் தான் அப்பாவின் கண்ணீரை கண்டாள். மார்போடு அணைத்து கொண்டவரின் வைரத்துளி மகளின் உச்சியில் தெறித்தது.

ராஜேஸ்வரிக்கு தன் பேத்தியை நன்றாக பார்த்து கொள்ள சொல்ல ஆசை தான். ஆனால் ரகுராம் முகத்தை பார்த்தாலே அவரால் அவனை நெருங்க முடிவதில்லை.

சுந்தரம் தான் எல்லோரையும் சாந்தபடுத்தி, பெண்ணை தேற்றி வெளியே அழைத்து வந்தார். அருணகிரி குடும்பம் தங்கள் மருமகளை அழைத்து செல்ல தயாராக இருந்தனர்.

பிறந்த வீட்டின் லக்ஷ்மி  புகுந்த வீட்டிற்கு குடியேற கிளம்பினாள்!

ப்ரவீன், வேணி இருவரும் அவர்களுடன் வந்தனர். ரகுராம் அழுத மனைவியை தன் தோளில் சாய்த்து கொண்டான்.

பத்மா, மஞ்சுளா இருவரும் பாரதியுடன் தணிகைவேல் மற்றவர்களுக்கும் தைரியம் சொல்லி கிளம்பினர். மாலை போல் ரகுராம் தம்பதி வீடு வந்து சேர, ப்ரவீன், வேணிக்கு உபச்சாரம் நடந்தது.

அவர்கள் கிளம்பும் போது, பெண்ணுக்கு திரும்ப கண்ணீர். “பாப்பா.. போதும். நாம தான் அடிக்கடி பார்த்துக்க போறோம் இல்லை. சந்தோஷமா இரு” என்று ப்ரவீன் தன் கண்ணுடன், தங்கை கண்ணையும் துடைத்து கிளம்பினான்.

அருணகிரி குடும்பம் மருமகளிடம் பொதுவான பேச்சு கொடுத்தனர். கொண்டு வந்திருந்த நகை, பணத்தை எப்படி பத்திரப்படுத்துவது? சீர் பொருட்களை சென்னைக்கு எடுத்து செல்வது என.

ஜனக்நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக தன் கண்ணீரை குறைத்து, இயல்பு நிலைக்கு வந்தாள். “இங்க பேங்க் வேண்டாம். சென்னையில உங்க பொறுப்புலே வைச்சுக்கோங்க” என்று அருணகிரி சொல்ல,

பெரிய மாமாவிடம், “சரி” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. ராமமூர்த்தியிடம் கொஞ்சம் சாதாரணமாக இருப்பாள்.

அனுஷா மகன் புது அத்தையிடம் வராமல் இருந்தவன், அவளின் மொபைல் பார்த்து அவளிடம் சேர, நன்றாகவே சிரித்துவிட்டாள் பெண்.

“அப்பாடா சிரிச்சுட்டியா. இனியாவது எங்களுக்கு சோறு போடுங்க” என்றார் ராமமூர்த்தி.

இரவு ஒன்பதே ஆகிவிட்டது அப்போது தான் தெரிந்தது. குடும்பமாக அமர்ந்து உணவு முடித்தனர். அனுஷா ஜாதி மல்லியை புது பெண்ணுக்கு வைத்துவிட, பெண்ணின் கண்கள் கணவன் பக்கம் சென்றது.

‘இப்போ தான் என்னை பார்க்கிறா?’ அவன் முகம் திருப்பி கொண்டுக்கு ரூம் சென்றுவிட்டான்.

சில நிமிடம் சென்று, பாலுடன் அறைக்கு வந்த ஜனக்நந்தினியின்  கால்கள் தடுமாறவே செய்தது. ரகுராம் அப்போது தான் குளித்து வந்தான். வேஷ்டி மட்டும் அணிந்து அறையில் அங்கும் இங்கும் நடமாடி கொண்டிருந்தான்.

புதுப்பெண் அவனை பார்க்காமல் நிற்க, புது மாப்பிள்ளைக்கோ கடுப்பு. “நீ பார்க்கணும்ன்னு தானேடி ரூமை அளந்துட்டு இருக்கேன். என்னை பாரு” என்று அவள் முன் நின்றான் அவன்.

ஆஹ்ன் இதென்ன.. அவள் அப்போதும் ஆட்டம் காட்ட, கன்னத்தை பிடித்து தன்னை மட்டுமே பார்க்க செய்தான்.

“விடுங்க” என,

“இனியும் விட்டா நான் என்னத்துக்கு ஆகிறது” என்று தன் வெற்றுடலுடன் அவளை முட்ட வைத்தான்.

சில்லென்ற அவன் உடல், உடைய மீறி அவளுக்கு சூட்டை கொடுக்க, இன்னும் தவிப்பு கொண்டாள். கணவனோ அவளின் இடை சேலையை விலக்கி, உள்ளே கை நுழைத்தவன், “இதுவும் நான் கொடுத்த புடவை தானே?” என்றான்.

தெரிஞ்சே ஏன் கேட்கிறாராம்? அவள் மௌனம் காக்க,

“சொல்லுடி” என்று இடை நெறுக்கினான் அவன்.

“ஸ்ஸ்” என்று அவன் நெஞ்சில் கை வைத்தவள், வைத்த வேகத்தில் எடுத்துவிட்டாள்.

ரகுராம் முகத்தில் மந்தகாச புன்னகை. “கை வைடி” என்றான்.

மனைவி மறுப்பாய் தலையசைக்க, “நீ கை வைக்கலைன்னா நான் வைக்க வைப்பேன் பார்த்துக்கோ” என்றான்.

என்ன பண்ணுவார்? அவள் யோசித்த நொடி, அவளின் உதடுகளை பற்றியிருந்தான். உடன் அவன் கைகளும் அவளின் உடலில் கட்டுப்பாடின்றி அலைந்தது.

ஜனக்நந்தினி ஒரு கட்டத்தில் தாங்காமல் அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளி நிறுத்தினாள். ரகுராம் கண்கள் அவள் கை பார்த்து அவளை பார்த்து சிரித்தது. அவள் உணர்ந்து எடுக்க போக, திரும்ப அவள் உதட்டை நெருங்கினான்.

“வைச்சுட்டேன் வைச்சுட்டேன்” என்று இவள் பதறி கை வைக்க, ரகுராமிடம் வசீகர சிரிப்பு. அவள் நெற்றி முட்டியவன், “ஆரம்பிக்கலாமா?” என்றான்.

“அப்போ இவ்வளவு நேரம் என்ன பண்ணாராம்?” அவள் கேள்வியாக பார்க்க,

“இது சும்மாடி” என்றான் அவன் கண்ணடித்து.

மனைவிக்கு இதுக்கே திணறல் தான். “பால் குடி” என்று எடுத்து வந்து கொடுக்க, மறுக்காமல் குடித்தவளின் மிச்சத்தை இவன் குடித்து வைத்தான்.

“என்ன இங்க பால்” என்று அவள் உதட்டின் ஓரம் இருந்ததை விரல் கொண்டு அழுத்தமாக துடைக்க, உதடே சிவந்து போனது.

ரகுராம் பார்வை அதில் மாற, காதோரம் பற்றி சிவந்ததை இன்னும் சிவக்க வைத்தான். கைகள் அதன் வேலையை செய்திருக்க, நெய்தவனுக்கே புடவை சென்று சேர்ந்தது.

பிரமிப்புடன் அவளை பார்க்க, பெண் வெட்கம் தாளாமல்  அவன் கண்களை மூடினாள். அவனோ அவளை இழுத்து கொண்டு கட்டிலில் சரிந்தான். நேரம் ஆக ஆக அவள்தான் கண்களை மூடி கொண்டாள்.

“கூடாது” என்று தன் ஆசை, தாபம், மோகத்தை அவள் பார்க்க செய்தான்.

சோர்ந்த உடல், எரிந்த காயங்கள், வீங்கிய உதடுகள், அடங்கா கொஞ்சல்கள், தீராத நெருக்கம் என்று அந்த இரவு அவர்களுக்கு நீண்டு கொண்டே சென்றது.

Advertisement