பாங்கியர் பந்தம்
பந்தம் – 6
“இப்ப எவ்ளோ அழகா இருக்கு பாரு.’’ என கண்ணாடியை மல்லி முன் திருப்பி காட்டிக் கொண்டிருந்தாள் ரேணு. அவர்கள் கல்லூரியில் இணைந்து ஒரு மாதம் கடந்த பிறகே அவர்களுக்கு வரவேற்பு விழா (வெல்கம் பார்ட்டி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பொருட்டு இன்றைக்கு மதிய வகுப்புகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. அதோடு மாணவிகள் வண்ண உடைகளில்...
அதுக்கு நான் தேவலை போலையே என்று எண்ணிக் கொண்ட மல்லி, “கிளாசிபிகேசன் ஆப் பாக்டீரியா அண்ட் கல்ச்சர் மீடியம். அதான் முக்கியமான கேள்வி. சீக்கிரம் படி.’’ என்றாள் பதட்டத்துடன்.
அப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவள், அவள் சொன்ன பக்கத்தை பிரித்து வைத்து கொண்டு தன் பார்வையை அதில் செலுத்தினாள். அந்தப் பக்கம் ரேணுவோ, ‘ஓ... காட்...
பந்தம் – 5
“ஏய்...! கேன்டீன் முன்னாடி நிக்குறேன். எப்ப வருவ...? இன்னும் அஞ்சி நிமிஷம் தான் வெயிட் பண்ணுவேன். நீ சீக்கிரம் வரல. விட்டுட்டு போயிருவேன்.’’ மல்லி சங்கரியிடம் அலைபேசியில் காய்ந்து கொண்டிருந்தாள்.
ஆனால் அந்தப் பக்கம் பெரிதாக எதிர்வினை ஏதும் இல்லை. “பொறுடி. சர்ஜிகல் பிளாக் தாண்டி வந்துட்டு இருக்கேன். போகும் போது ஜில்லுன்னு...
வகுப்பறையே அமைதியில் ஆழ்ந்து அவர் முகத்தையே பய பக்தியாய் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், மதி மட்டும் தான் மேசைக்கடியில் வைத்திருந்த கடலை மிட்டாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, மல்லியின் கைகளை சுரண்டினாள்.
மல்லி என்ன என்பதை போல பார்க்க, தன் கண்களால் மேசைக்கடியில் பார்க்குமாறு சைகை செய்தாள். மல்லி லேசாக விழி தாழ்த்தி...
பந்தம் – 4
“எந்த பேட்ச்.’’ தான் அமர்ந்திருந்த நீண்ட இருக்கையின் அருகே நின்று கேள்வி கேட்டு கொண்டிருந்தான் நெடியவன் ஒருவன். “2009.” என்றாள் மல்லி சற்று பதட்டத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
என்னதான் தகுதி சான்றிதழை தன் மற்ற தோழிகளுக்கு பின்னால் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு முன்னால் கல்லூரியில் இணைந்திருந்தாள் மல்லி. மற்றவர்களுக்கு பணி விடுவிப்பு ஆணை...
வீட்டில் மற்றவர்கள் அனைவரும் ‘ஓ’ பாசிடிவ் என்றிருக்க, இவளின் அரிய வகை ‘ஓ’ நெகடிவ் பிரிவை தானும் கொண்ட சுந்தர் சென்னையில் தன் ஆய்வு வேலையை பாதியில் போட்டுவிட்டு வந்து, குருதி தானம் அளித்து சென்றான்.
தாய் மற்றும் மகன் இருவரும் தங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வர் என்ற நம்பிக்கை அந்த நொடி சீதைக்குள்...
சுந்தரும், மல்லியும் அந்த கட்டிலின் கீழ் பாய் போட்டு படுத்துக் கொள்வர். சிறு வயதிலேயே அவர்கள் புட்டிப்பாலுக்கு பழக்கப்படுத்தப்பட்டு விட, பாதி நாட்கள் பாரிஜாதத்தோடு கூடத்தில் படுத்துக் கொள்வர்.
சுந்தரி, மல்லியின் மண வாழ்வு பரஸ்பர நேசத்தில் தொடங்கிய ஒன்றல்ல. மல்லிக்கு அவள் தந்தை வரன் தேட தொடங்கிய போது, அரசுப் பணியில் அப்போது தான்...
பந்தம் – 3
மல்லி சமயலறையில் நின்று பாத்திரங்களை தேய்த்து கொண்டிருந்தாள். கூடத்தில் சுந்தரேசன் இரு மகள்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அவன் விரிவுரையாளன் பணியில் இருந்தான்.
என்ன தான் விரிவுரையாளன் என்றாலும் அவனுக்கு மல்லி வாங்கும் அரசு ஊதியத்தில் பாதிக்கும் கீழான ஊதியமே மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. மல்லி...
ஈர மணலில் கால்களை இழுத்து கொண்டு நடந்து வந்தது, மூவரின் ஆற்றலையும் உறிஞ்சி இருந்தது. ஏதேனும் பேசினால் இன்னும் கொஞ்சம் பெரிதாய் கிடைக்கும் என்ற பயத்தில் மல்லி தன் உடையில் உள்ள மண் துகள்களை தட்டி விடுபவள் போல குனிந்து கொண்டாள்.
‘ஆத்தி இதுக்கு பேர் தான் நாசூக்கா நழுவுறதா...! ஐயோ அடுத்து அவ நேரா...
பந்தம் – 2
அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அவர்கள் தலைநகரை அடைந்திருந்தார்கள். அங்கிருந்த பயணிகள் தங்கும் பெண்களுக்கான ஓய்வறையில் மூவரும் தங்கினர். நள்ளிரவிற்கு பின்பே சற்று உறங்க தொடங்கியிருந்தால் மல்லி தான் அரைகுறையாய் விட்ட தூக்கத்தை அந்த அறையிலும் தொடர்ந்தாள்.
அங்கிருந்த அழுக்கேறிய தலையணையோ, படுக்கை விரிப்போ, அவளின் உறக்கத்தை கொஞ்சமும் தடை செய்யவில்லை. மதி தன்...
“அதான் அவரை எனக்கு மட்டும் டெடியா மாத்த போட்டேன் பக்கா பிளானை. அவர் ரெகுலரா யூஸ் செஞ்ச ஹேர் ஆயில் அப்புறம் ஷாம்பூ எல்லாத்தையும் வாரம் ஒருமுறை என் இஷ்டத்துக்கு சேஞ் பண்ணி வச்சேன். தோணும் போது எல்லாம் வம்புக்கு இழுத்து கடைசியா நான் கண்ல தண்ணி விட்டேன். சமாதானம் ஆகும் போதெல்லாம், நல்லா...
பந்தம் – 1
“கூ...” வென பெருங் குரல் கொடுத்தபடி அந்த பெருநகர புகைவண்டி நிலையத்திற்குள் நுழைந்தது அந்த தொடர்வண்டி. சுற்றிலும் மனிதக் கூட்டம். பயணிப்பவர்களை விட, வழியனுப்ப வந்தவர்கள், சுமை கூலிகள், தின்பண்டம் விற்பவர்கள் என மனித தலைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது அந்த இடம்.
“என்ன இன்னும் உன் பிரண்டை காணோம்.’’ என தலை...