Saturday, July 25, 2026

    Uyirinil Inikkiraai Nee

    19 விடிந்தும் விடியாத பொழுதில் வந்து நின்ற மாமியாரை பார்ப்பதும்,மனைவியை முறைப்பதுமாய் இருந்தான் அரசு. டீயை குடித்துக் கொண்டிருந்த அம்மாவை பார்த்தால்,வேணிக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும்,இன்னொருபக்கம் கலக்கமாகவும் இருந்தது. நகையை பற்றி சொன்னதிலிருந்து உறங்கியிருக்கவே மாட்டார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.. ஒரு ரூபாயையும் அனாவசியமாய்(கணவர் கணக்கு தனி) செலவளிக்காமல் பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்து,பெண்ணிற்கு அழகு பார்க்க ,வர்...
    18 கல்லூரிக்கு அரசு சென்றபோது,முதல்வரின் பிஏ,அவனை அமர சொல்லிவிட்டு,”சார் கேண்டின்ல சாப்பிட போயிருக்கார்.கொஞ்ச நேரத்துல வந்துடுவார்”எனவும், “ஓகே மேம்”என்றவன் அவருக்காக காத்திருந்தான். சரியாய் ஒன்பது அடித்த போது அவர் தனது அறைக்குள் நுழைய,இவனை பார்த்தவர்,”உள்ள வா அரசு”என்றவர் முன்னே செல்ல,தயக்கத்துடனையே அவர் எதிரில் நின்றான். “உட்கார்-ப்பா” “பரவாயில்ல சார்” “நா சொல்றேன்.உட்கார்”அதட்டவும்,உடனே அமர்ந்துவிட்டான். “அம்சவேணி எப்படியிருக்காங்க?”-விசாரிக்கவும் அதிர்ந்து போனான். கல்லூரியில் இதுவரை யாருக்குமே தெரியாதே? ஒருவேளை...
    14 கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு வந்த போது பத்து மணியிருக்கும்.பொருட்களை இறக்கி வைத்துவிட்டு,ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு இரண்டு பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அரசு நகர,வேணியும் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு அவன் பின்னாடியே நடந்தாள். வீட்டை திறந்தவுடன்,’பிரியாணி’வாசனை குப்பென்று வர, “ஐயோ,வேற யாரும் இங்க இருக்காங்களா”பேகை பயந்து போய் கீழே போட்டுவிட்டு,அவனை ஒண்டியவாறே கேட்க, “ம்ம்.பேய் சோறாக்கி வைச்சு...
    17 இரண்டு நாட்கள் கழித்து..... இன்று வேலையில் சேர்வதற்கு வர சொல்லியிருந்ததால்,அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் அரசு.பத்து மணிக்கு தான் வேலை தொடங்கும்.ஆனால் இவனிருக்குமிடத்திலிருந்து அலுவகத்திற்கு,இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால்,ஏழரை மணிக்கெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தான். “சாப்பாடு ரெடியாகிடுச்சா வேணி”அறையிலிருந்தே கேட்டவனுக்கு.. “நீங்க வாங்க.ரெடியாகிடுச்சு”என்று பதில் சொன்னவளின் குரலிலோ அவனுக்கு மேல் பதட்டம். முதல் நாள் வேலைக்கு செல்வது...
    12 உணவுப்பொருட்களை அரசு வாங்கி வந்த சமயம்,சரியாக நீலவேணியும் லாரியில் பொருட்களை கொண்டு வந்து இறக்க,கோபம் வந்தாலும்,’அவங்க பொண்ணுக்கு அவங்க என்ன வேணா செய்யட்டும்.நானா கேட்டா தான் அது தப்பு! தேவையில்லாம இதுக்கெல்லாம் கோவுச்சுக்கிட்டு முகத்தை திருப்பிக்கிடக் கூடாது’தெளிவாய் முடிவெடுத்த பின்னர் அவரை வரவேற்க, “இந்த பொருளெல்லாம் எங்க வைக்கணும்னு நீங்க சொன்னா,அங்கேயே வைச்சிடலாம் தம்பி”-மிகவும் பணிவாக...
    13 அந்த இரவு நேரத்தில் வேணியும்,ரஞ்சியும் ஓய்ந்து போய் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். “இன்னைக்கு ரொம்ப வேலை வாங்கிட்டானுங்கடி வேணி.பன்னெண்டு மணி நேரமா வேலை செஞ்சு,முதுகே ஒடிஞ்சு போச்சுடி”என்றவளின் குரலில் அப்படியொரு சோர்வு. வேணிக்கும் அடித்துப்போட்டது போலத்தான் இருந்தது.ஆனால் அவளோ அந்த வலியை பொருட்படுத்தாமல்,படுக்கைக்கு அருகிலிருந்த நோட்டை எடுத்து கிறுக்க ஆரம்பித்தாள். காலையிலிருந்து இந்த நான்கு வரிகள் தோன்றிக்கொண்டே இருக்க,அழகான...
    9 மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் இன்றோடு கண்ணன் மறைந்து பதினாறு நாட்களாகிவிட்டது.அவர் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாய் அவரது வாரிசுகள் இல்லையென்றாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் அவரின் ஞாபகத்தை மனிதர்கள் மத்தியில் கொடுத்துக்கொண்டே இருந்தன என்பதே நிஜம். “அட கண்ணனா,அவரு நல்ல...
    11 தன்னிடம் தலையசைத்து விடைபெற்றுப்போகும் கணவனை பற்றி நினைத்துக்கொண்டே,செக்யூரிட்டியிடமிருக்கும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு,தன்னறைக்கு வந்து சேர்ந்தாள் வேணி’. ஒரு அறைக்கு இரண்டு பேர் தான் என்பதால்,ரஞ்சிதாவும்,வேணியும் அந்த சின்ன அறையை மிகவும் தாராளமாகவே பயன்படுத்தி வந்தனர். தோழியை கண்டவுடன்,ரஞ்சிதாவிற்கு எங்கிருந்து தான் பேச்செல்லாம் வருமோ.. “டி அம்சு,பிடிச்சாலும் பெரிய ஆளா தான் பிடிச்சுட்டடி”-வந்த உடனையே ஆரம்பித்த தோழியை சிரிப்புடன்...
    8 கண்ணனின் இறப்பை பற்றி கேள்விப்பட்ட ஆச்சிக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.துக்க வீட்டிற்கு சென்று வந்தது தான்! கண்ணனின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.எரித்துவிட்டார்கள் என்று சொல்லவும், வீட்டிற்கு வந்து தலைமுழுகியவர் தான்! அப்படியே படுத்துக்கொண்டார். நேற்று ‘அரசு’வைப்பற்றி நம்பிக்கையாய் பேசிய பேச்சிற்கு எதிராய் நடப்பதெல்லாம் இருப்பது போல தோன்றியது. ‘இனி யாரிடம் போய் எப்படி விசாரிப்பது,என்னவென்று...
    7 வேணியிடம்,தன்னிலையை பற்றி புரிய வைத்த அரசுவிற்கு,சிறிது நேரம்,தூங்கினால் தெம்பாக இருக்குமென்று தோன்றியது.நேற்றிலிருந்து நிறைய எதிர்பாரா தொடர் சம்பவங்களினால் சோர்ந்து போயிருந்தான்.எதிர்காலத்தை பற்றிய கவலையிலையே கொஞ்சம் நிலைகுலைந்து போயிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். பசியென்ற உணர்வு கூட அவனுக்கு இல்லை. “நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.நீயும் தூங்கறதுன்னா தூங்கு”என்றதும் அவள் தலையாட்ட,அவன் அறைக்குள் சென்றுவிட்டான். வீட்டை சுற்றிப்பார்க்கலாம் என்று...
    20 வேணி பூவை கட்டுவதும்,வாசலில் கணவன் வருகிறானா என்று பார்ப்பதுமாய் இருந்தாள். இன்று நிலக்கிரயம் செய்கிறார்கள்.கிடைக்கும் பணத்தை நாளைக்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு அப்படியே பூஜை போட திட்டமிட்டிருந்தார்கள். நிலத்தை விற்பதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.அவர்களாக கேட்ட போது ஒரு விலையும்,இப்போது தங்களது அவசரத்திற்கு விற்க கேட்கும் போது ஒரு விலையும் கேட்டார்கள். முதலில் தானே பார்த்துக்கொள்ள முடிவு...
    error: Content is protected !!