Uyirinil Inikkiraai Nee
12
உணவுப்பொருட்களை அரசு வாங்கி வந்த சமயம்,சரியாக நீலவேணியும் லாரியில் பொருட்களை கொண்டு வந்து இறக்க,கோபம் வந்தாலும்,’அவங்க பொண்ணுக்கு அவங்க என்ன வேணா செய்யட்டும்.நானா கேட்டா தான் அது தப்பு! தேவையில்லாம இதுக்கெல்லாம் கோவுச்சுக்கிட்டு முகத்தை திருப்பிக்கிடக் கூடாது’தெளிவாய் முடிவெடுத்த பின்னர் அவரை வரவேற்க,
“இந்த பொருளெல்லாம் எங்க வைக்கணும்னு நீங்க சொன்னா,அங்கேயே வைச்சிடலாம் தம்பி”-மிகவும் பணிவாக...
14
கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு வந்த போது பத்து மணியிருக்கும்.பொருட்களை இறக்கி வைத்துவிட்டு,ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு இரண்டு பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அரசு நகர,வேணியும் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு அவன் பின்னாடியே நடந்தாள்.
வீட்டை திறந்தவுடன்,’பிரியாணி’வாசனை குப்பென்று வர,
“ஐயோ,வேற யாரும் இங்க இருக்காங்களா”பேகை பயந்து போய் கீழே போட்டுவிட்டு,அவனை ஒண்டியவாறே கேட்க,
“ம்ம்.பேய் சோறாக்கி வைச்சு...
20
வேணி பூவை கட்டுவதும்,வாசலில் கணவன் வருகிறானா என்று பார்ப்பதுமாய் இருந்தாள்.
இன்று நிலக்கிரயம் செய்கிறார்கள்.கிடைக்கும் பணத்தை நாளைக்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு அப்படியே பூஜை போட திட்டமிட்டிருந்தார்கள்.
நிலத்தை விற்பதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.அவர்களாக கேட்ட போது ஒரு விலையும்,இப்போது தங்களது அவசரத்திற்கு விற்க கேட்கும் போது ஒரு விலையும் கேட்டார்கள்.
முதலில் தானே பார்த்துக்கொள்ள முடிவு...
****
சில வருடங்களுக்கு பிறகு......
காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.அதே போல் காலம் ஒருவரின் வாழ்க்கையை ஒரே சீராய் கொண்டு செல்வதுமில்லை.ஏமாற்றமே வாழ்வாக இருப்பதுமில்லை.வெற்றியே வாழ்வாக இருப்பதுமில்லை.சந்தோஷம்,துக்கம்,வெற்றி,தோல்வி,ஏமாற்றம்,
துரோகம் என்ற அனைத்துமே வாழ்வில் இடம்பெறத்தான் செய்கின்றன.
நிலையானதென்று இவ்வுலகில் எதுவுமேயில்லை.
அரசு-வேணியின் வாழ்க்கையும் இப்படித்தான் நகர்ந்தது.
இன்று மிகவும் சோகமான நாள் அரசுவிற்கு!!மூன்று வருடங்களுக்கு முன் கடந்து சென்ற நாளை அவனால் மறக்கவே முடியாது.இப்போது...
7
வேணியிடம்,தன்னிலையை பற்றி புரிய வைத்த அரசுவிற்கு,சிறிது நேரம்,தூங்கினால் தெம்பாக இருக்குமென்று தோன்றியது.நேற்றிலிருந்து நிறைய எதிர்பாரா தொடர் சம்பவங்களினால் சோர்ந்து போயிருந்தான்.எதிர்காலத்தை பற்றிய கவலையிலையே கொஞ்சம் நிலைகுலைந்து போயிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
பசியென்ற உணர்வு கூட அவனுக்கு இல்லை.
“நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.நீயும் தூங்கறதுன்னா தூங்கு”என்றதும் அவள் தலையாட்ட,அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.
வீட்டை சுற்றிப்பார்க்கலாம் என்று...
21
இன்று அதிகாலையிலே பூஜை என்பதால்,அனைவரும் கல்லூரிக்கு நேரத்திலையே வந்துவிட்டனர்.நேரத்தில் பூஜை முடித்துவிட்டு,காலை எட்டு மணியிலிருந்தே கேண்டினை நடத்த திட்டமிட்டுவிட்டார்கள்.
பூஜை முடியவும்,கல்லூரி முதல்வர் ராஜா,”நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா வருவீங்க-ப்பா.தன்னம்பிக்கையும் உழைப்பும் தான் மூலதனம்.இது ஆரம்பம் மட்டும் தான்.இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.என்னால முடிஞ்ச சப்போர்ட் எப்பவும் நான் கொடுப்பேன்”என்றார்.
“ரொம்ப நன்றி சார்.முதல்...
18
கல்லூரிக்கு அரசு சென்றபோது,முதல்வரின் பிஏ,அவனை அமர சொல்லிவிட்டு,”சார் கேண்டின்ல சாப்பிட போயிருக்கார்.கொஞ்ச நேரத்துல வந்துடுவார்”எனவும்,
“ஓகே மேம்”என்றவன் அவருக்காக காத்திருந்தான்.
சரியாய் ஒன்பது அடித்த போது அவர் தனது அறைக்குள் நுழைய,இவனை பார்த்தவர்,”உள்ள வா அரசு”என்றவர் முன்னே செல்ல,தயக்கத்துடனையே அவர் எதிரில் நின்றான்.
“உட்கார்-ப்பா”
“பரவாயில்ல சார்”
“நா சொல்றேன்.உட்கார்”அதட்டவும்,உடனே அமர்ந்துவிட்டான்.
“அம்சவேணி எப்படியிருக்காங்க?”-விசாரிக்கவும் அதிர்ந்து போனான்.
கல்லூரியில் இதுவரை யாருக்குமே தெரியாதே? ஒருவேளை...
19
விடிந்தும் விடியாத பொழுதில் வந்து நின்ற மாமியாரை பார்ப்பதும்,மனைவியை முறைப்பதுமாய் இருந்தான் அரசு.
டீயை குடித்துக் கொண்டிருந்த அம்மாவை பார்த்தால்,வேணிக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும்,இன்னொருபக்கம் கலக்கமாகவும் இருந்தது.
நகையை பற்றி சொன்னதிலிருந்து உறங்கியிருக்கவே மாட்டார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்..
ஒரு ரூபாயையும் அனாவசியமாய்(கணவர் கணக்கு தனி) செலவளிக்காமல் பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்து,பெண்ணிற்கு அழகு பார்க்க ,வர்...
11
தன்னிடம் தலையசைத்து விடைபெற்றுப்போகும் கணவனை பற்றி நினைத்துக்கொண்டே,செக்யூரிட்டியிடமிருக்கும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு,தன்னறைக்கு வந்து சேர்ந்தாள் வேணி’.
ஒரு அறைக்கு இரண்டு பேர் தான் என்பதால்,ரஞ்சிதாவும்,வேணியும் அந்த சின்ன அறையை மிகவும் தாராளமாகவே பயன்படுத்தி வந்தனர்.
தோழியை கண்டவுடன்,ரஞ்சிதாவிற்கு எங்கிருந்து தான் பேச்செல்லாம் வருமோ..
“டி அம்சு,பிடிச்சாலும் பெரிய ஆளா தான் பிடிச்சுட்டடி”-வந்த உடனையே ஆரம்பித்த தோழியை சிரிப்புடன்...
16
காலைப்பொழுதில் விடியல் ஆரம்பித்து,நேரம் பத்தாகியிருந்தது.வெகு நேரமாய்,மூடியிருந்த கதவை பார்ப்பதும்,மணியை பார்ப்பதுமாய் அமர்ந்திருந்தான் அரசு.
ஒருக்கட்டத்தில் பொறுக்க முடியாமல்,”வேணி.நீ இப்போ வெளில வரப்போறியா? இல்லையா?.நீ உள்ள போய் இருபது நிமிஷம் ஆச்சு.இப்போ நீ கதவை திறக்கலை...”சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் போதே,கதவை திறந்த வேணி,
சேலையை சரி செய்துகொண்டே,”புடவை கட்ட நேரமாகிடுச்சு.சாரி”சின்னப்புன்னகையில் மன்னிப்பு வேண்ட,புதுமாப்பிள்ளைக்கு அந்த மன்னிப்பே என்னவோ செய்தது.
“சரி.போகலாம் வா”எனவும்,ஓர்...
6
இருவர் திருமண பந்தத்தில் இணைய வேண்டுமென்றால் மணமக்களுக்கு பிடித்து தான் நடக்க வேண்டுமென்று அவசியமில்லை.ஏன் இரு குடும்பத்தினரின் விருப்பத்தோடு தான் நடக்க வேண்டுமென்றுமில்லை.
திருமண பந்தத்தில் இருவர் இணைய வேண்டியது விதி என்றால் எந்தவிதமான முயற்சியுமின்றியே அவர்கள் இணைந்துவிடுவார்கள்.ஏதோவொரு உந்து சக்தி,தன் வேலையைக்காட்டி பிடித்திருந்தாலும்,பிடிக்காவிட்டாலும் இருவரது திருமணத்தை நடத்திக்காட்டிவிடும்.
அது போலத்தான் அரசுவும் வேணியும் தம்பதியகளாகிவிட்டனர்.ஒருவேளை வேணி...