Uyirinil Inikkiraai Nee
17
இரண்டு நாட்கள் கழித்து.....
இன்று வேலையில் சேர்வதற்கு வர சொல்லியிருந்ததால்,அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் அரசு.பத்து மணிக்கு தான் வேலை தொடங்கும்.ஆனால் இவனிருக்குமிடத்திலிருந்து அலுவகத்திற்கு,இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால்,ஏழரை மணிக்கெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தான்.
“சாப்பாடு ரெடியாகிடுச்சா வேணி”அறையிலிருந்தே கேட்டவனுக்கு..
“நீங்க வாங்க.ரெடியாகிடுச்சு”என்று பதில் சொன்னவளின் குரலிலோ அவனுக்கு மேல் பதட்டம்.
முதல் நாள் வேலைக்கு செல்வது...
16
காலைப்பொழுதில் விடியல் ஆரம்பித்து,நேரம் பத்தாகியிருந்தது.வெகு நேரமாய்,மூடியிருந்த கதவை பார்ப்பதும்,மணியை பார்ப்பதுமாய் அமர்ந்திருந்தான் அரசு.
ஒருக்கட்டத்தில் பொறுக்க முடியாமல்,”வேணி.நீ இப்போ வெளில வரப்போறியா? இல்லையா?.நீ உள்ள போய் இருபது நிமிஷம் ஆச்சு.இப்போ நீ கதவை திறக்கலை...”சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் போதே,கதவை திறந்த வேணி,
சேலையை சரி செய்துகொண்டே,”புடவை கட்ட நேரமாகிடுச்சு.சாரி”சின்னப்புன்னகையில் மன்னிப்பு வேண்ட,புதுமாப்பிள்ளைக்கு அந்த மன்னிப்பே என்னவோ செய்தது.
“சரி.போகலாம் வா”எனவும்,ஓர்...
15
‘பார்வை ஒன்றே போதும்.வேறெதுவும் இக்கணம் வேண்டாம்’என்றிருக்க இருவருக்குமே ஆசை தான்.ஆனால் வயிற்றுப்பிழைப்புக்கு வழி செய்ய வேண்டுமே!
கடிகார முள்ளின் சத்தம் அரசுவை நிதானத்துக்கு கொண்டு வர,”ஹையோ,நேரமாச்சு”பரபரப்புடன் எழுந்தவன்,மதிய உணவையும் உண்டுவிட்டு கிளம்ப ஏதுவாய் தட்டை எடுக்க,இம்முறை சிறு முறைப்போடு பிடுங்கி,அவளே காலையில் சமைத்த பிரியாணியை சூடுபடுத்தி அவனுக்கு பரிமாறினாள்.
“இங்க நீ மட்டும் தான் தனியா இருக்கணும்.கஷ்டமா...
14
கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு வந்த போது பத்து மணியிருக்கும்.பொருட்களை இறக்கி வைத்துவிட்டு,ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு இரண்டு பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அரசு நகர,வேணியும் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு அவன் பின்னாடியே நடந்தாள்.
வீட்டை திறந்தவுடன்,’பிரியாணி’வாசனை குப்பென்று வர,
“ஐயோ,வேற யாரும் இங்க இருக்காங்களா”பேகை பயந்து போய் கீழே போட்டுவிட்டு,அவனை ஒண்டியவாறே கேட்க,
“ம்ம்.பேய் சோறாக்கி வைச்சு...
13
அந்த இரவு நேரத்தில் வேணியும்,ரஞ்சியும் ஓய்ந்து போய் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.
“இன்னைக்கு ரொம்ப வேலை வாங்கிட்டானுங்கடி வேணி.பன்னெண்டு மணி நேரமா வேலை செஞ்சு,முதுகே ஒடிஞ்சு போச்சுடி”என்றவளின் குரலில் அப்படியொரு சோர்வு.
வேணிக்கும் அடித்துப்போட்டது போலத்தான் இருந்தது.ஆனால் அவளோ அந்த வலியை பொருட்படுத்தாமல்,படுக்கைக்கு அருகிலிருந்த நோட்டை எடுத்து கிறுக்க ஆரம்பித்தாள்.
காலையிலிருந்து இந்த நான்கு வரிகள் தோன்றிக்கொண்டே இருக்க,அழகான...
12
உணவுப்பொருட்களை அரசு வாங்கி வந்த சமயம்,சரியாக நீலவேணியும் லாரியில் பொருட்களை கொண்டு வந்து இறக்க,கோபம் வந்தாலும்,’அவங்க பொண்ணுக்கு அவங்க என்ன வேணா செய்யட்டும்.நானா கேட்டா தான் அது தப்பு! தேவையில்லாம இதுக்கெல்லாம் கோவுச்சுக்கிட்டு முகத்தை திருப்பிக்கிடக் கூடாது’தெளிவாய் முடிவெடுத்த பின்னர் அவரை வரவேற்க,
“இந்த பொருளெல்லாம் எங்க வைக்கணும்னு நீங்க சொன்னா,அங்கேயே வைச்சிடலாம் தம்பி”-மிகவும் பணிவாக...
11
தன்னிடம் தலையசைத்து விடைபெற்றுப்போகும் கணவனை பற்றி நினைத்துக்கொண்டே,செக்யூரிட்டியிடமிருக்கும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு,தன்னறைக்கு வந்து சேர்ந்தாள் வேணி’.
ஒரு அறைக்கு இரண்டு பேர் தான் என்பதால்,ரஞ்சிதாவும்,வேணியும் அந்த சின்ன அறையை மிகவும் தாராளமாகவே பயன்படுத்தி வந்தனர்.
தோழியை கண்டவுடன்,ரஞ்சிதாவிற்கு எங்கிருந்து தான் பேச்செல்லாம் வருமோ..
“டி அம்சு,பிடிச்சாலும் பெரிய ஆளா தான் பிடிச்சுட்டடி”-வந்த உடனையே ஆரம்பித்த தோழியை சிரிப்புடன்...
9
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்
இன்றோடு கண்ணன் மறைந்து பதினாறு நாட்களாகிவிட்டது.அவர் வாழ்ந்து மறைந்ததன் அடையாளமாய் அவரது வாரிசுகள் இல்லையென்றாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் அவரின் ஞாபகத்தை மனிதர்கள் மத்தியில் கொடுத்துக்கொண்டே இருந்தன என்பதே நிஜம்.
“அட கண்ணனா,அவரு நல்ல...
8
கண்ணனின் இறப்பை பற்றி கேள்விப்பட்ட ஆச்சிக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.துக்க வீட்டிற்கு சென்று வந்தது தான்! கண்ணனின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.எரித்துவிட்டார்கள் என்று சொல்லவும், வீட்டிற்கு வந்து தலைமுழுகியவர் தான்! அப்படியே படுத்துக்கொண்டார்.
நேற்று ‘அரசு’வைப்பற்றி நம்பிக்கையாய் பேசிய பேச்சிற்கு எதிராய் நடப்பதெல்லாம் இருப்பது போல தோன்றியது.
‘இனி யாரிடம் போய் எப்படி விசாரிப்பது,என்னவென்று...
7
வேணியிடம்,தன்னிலையை பற்றி புரிய வைத்த அரசுவிற்கு,சிறிது நேரம்,தூங்கினால் தெம்பாக இருக்குமென்று தோன்றியது.நேற்றிலிருந்து நிறைய எதிர்பாரா தொடர் சம்பவங்களினால் சோர்ந்து போயிருந்தான்.எதிர்காலத்தை பற்றிய கவலையிலையே கொஞ்சம் நிலைகுலைந்து போயிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
பசியென்ற உணர்வு கூட அவனுக்கு இல்லை.
“நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.நீயும் தூங்கறதுன்னா தூங்கு”என்றதும் அவள் தலையாட்ட,அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.
வீட்டை சுற்றிப்பார்க்கலாம் என்று...
6
இருவர் திருமண பந்தத்தில் இணைய வேண்டுமென்றால் மணமக்களுக்கு பிடித்து தான் நடக்க வேண்டுமென்று அவசியமில்லை.ஏன் இரு குடும்பத்தினரின் விருப்பத்தோடு தான் நடக்க வேண்டுமென்றுமில்லை.
திருமண பந்தத்தில் இருவர் இணைய வேண்டியது விதி என்றால் எந்தவிதமான முயற்சியுமின்றியே அவர்கள் இணைந்துவிடுவார்கள்.ஏதோவொரு உந்து சக்தி,தன் வேலையைக்காட்டி பிடித்திருந்தாலும்,பிடிக்காவிட்டாலும் இருவரது திருமணத்தை நடத்திக்காட்டிவிடும்.
அது போலத்தான் அரசுவும் வேணியும் தம்பதியகளாகிவிட்டனர்.ஒருவேளை வேணி...