Rathaiyin Kaathal
காதல் 4
யாரும் தானாக மாறுவதில்லை!
யாரோ ஒருவரால் மாறுகிறோம்!!
நல்லவராக…
கெட்டவராக…
ஏமாளியாக…
கோமாளியாக…
முட்டாளாக…
என அனைவரும் யாரோ
ஒருவருக்காக ஏதோ ஒரு
சூழ்நிலையில் ஏதாவது ஒரு
பரிணாமத்தை மாற்றி மாற்றி
எடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!!!
ஆனால் அவை எந்தளவு சாத்தியம்
என்பதை நாம் உணர மறுக்கிறோம்!!!!
மறக்கிறோம்!!!!!
“ராதாவா… அவ செத்து மூனு மாதமாச்சேப்பா. நீ யாரு?” என கேட்க அதிர்ச்சியில் உறைந்து நின்றான் கோகுல். அவன் அப்படியே நிற்பதை கண்ட...
காதல் 3
கலவரத்தால் நிலவரம் மாறியதென்னவோ
சினம்கொண்டு நிறம் மாறியதென்னவோ
சூழ்நிலையில் சிக்குண்டு மனிதனால்
சிதிலம் அடைந்ததும் என்னவோ
கூறடா என் கண்ணனே!!!
தன் அருகில் நெருங்கி வந்தவனை தடுக்க முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் ராதா. “இந்த கையை பிடிச்சதுக்காகதான அன்னைக்கு என்ன அடிச்ச” என்றபடி கையை பற்றியவன் “இந்த கன்னத்துல” என அவளின் கரம் கொண்டு அவன் கன்னத்தை தடவ ராதாவின்...
காதல் 8
நீ என் வாழ்வில் வந்த நாளை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்…
இன்று உன் துரோகத்திற்காக எனக்கு
கிடைத்த அழகிய மலரை
நான் கைகளில் ஏந்தி…
கண் கலங்கி… மதி மயங்கி
நின்றிருக்க மாட்டேன்!
இந்த மலராவது தெய்வத்தின் சன்னதி
சென்றடையுமா…? என் கண்ணா…!
சேலையை எடுத்து பார்த்துவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கு” என்ற அவளது குரலை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க “இந்த சேலைக்கும் பில் போட...
காதல் 7
எத்தனை கோபத்திலும் வார்த்தைகளை
விட்டு விடாதீர்கள்… காயங்களை விட
அது தரும் வலிகள் அதிகம்.
பின்பு எத்தனை முறை மன்னிப்பு
கேட்டாலும் ஆறாத காயம் அது!!
ராதா அழைப்பை துண்டித்த அடுத்த நொடியே கோகுலிடமிருந்து அழைப்பு வந்தது கண்ணனிற்கு. ‘இப்ப இவன வேற சமாளிக்கனுமா?’ என நினைத்தவர் அழைப்பை ஏற்று காதில் வைக்க…
“என்ன எதுக்காக இங்க அனுப்புனீங்கப்பா?” என்றான் கோகுல்.
“சுந்தரத்தோட...
காதல் 10
காண்பவர் அனைவரையும்
ரசிக்க வைப்பது ஒன்று
உண்டெனில் அது
மழலையின் சிரிப்பு மட்டுமே...
"நீ கோகுல கல்யாணம் பண்ணிக்க அவன் கமலுக்கு செலவு பண்ணிப்பான்" என கண்ணன் சாதாரணமாக கூற...
அவரை அதிர்ச்சியுடன் பார்த்தான் கோகுல். ராதாவோ கண்ணனை கோபத்துடன் ஏறிட்டு "இதுதான் உங்க ப்ளானா?" என கேட்டாள்.
"ஐயோ.. என்னம்மா என்ன பாத்து இப்புடி சொல்லிட்ட? நான் எதுவும் ப்ளான்...
இலேசான மனநிலையுடன் அனைவரும் தன் பயணத்தை தொடர சுமநேரிகுப்பமும் வந்து சேர்ந்தது. அங்கு சென்றதும் ராதாவிடம் வீட்டிற்கான வழியை கேட்டுக்கொண்டு சென்றனர். அந்தவீட்டை பார்த்ததும் அனைவரும் ஒருநிமிடம் அதிர்ந்து நின்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கண்டது ஓட்டினால் வேயப்பட்ட பழங்காலவீடு.
அதைக்கண்ட கண்ணன் "என்னம்மா இங்க எப்புடி...? லலிதா அட்ஜஸ்ட் பண்ணிப்பாளா?" என சந்தேகமாக கேட்க...
"அட்ஜஸ்ட் பண்ண...
காதல் 12
எது நம்மிடம் இருக்கிறதோ
அதை பற்றி நாம் அதிகம்
சிந்திப்பதும் இல்லை...
ஏற்றுக்கொள்வதும் இல்லை...
எது நம்மிடம் இல்லையோ
அதை பற்றி சிந்தித்தே நம்
வாழ்க்கையை வீணாக்குகிறோம்.
"யோசிச்சு பாரும்மா.. உன் விருப்பு வெறுப்ப தாண்டி எது சரின்னு யோசி" என்றுவிட்டு சென்றார் கண்ணன்.
ராதாவுக்கு என்ன செய்வதென்று புரியாமல் கண்ணன் சென்ற திசையை பார்த்தபடி நின்றாள்.
சுகந்தி தன் வீட்டைவிட்டு கிளம்பும் போது தன்...
காதல் 17
சுற்றியுள்ள சொந்தமெல்லாம்
காணாமல் போகும் மாயம்…
பேசுகின்ற மொழிகளெல்லாம்
புரியாமல் போகும் மாயம்…
காணுகின்ற காட்சியெல்லாம்
பதியாமல் போகும் மாயம்…
அழுகை சத்தமெல்லாம்
சங்கீதமாய் மாறும் மாயம்…
இனிமையான இசைகளெல்லாம்
அபசுரமாய் ஒலிக்கும் மாயம்…
இவையனைத்தும்
காதலில் மட்டுமே சாத்தியம்!!!
வந்தவரை வாசலிலேயே நிற்க வைப்பது முறையல்ல என்பதை உணர்ந்த கண்ணன் “வாங்க” என முகத்தில் சிறு புன்னகையுடன் வரவேற்க வேறு வழியின்றி அனைவரும் அவரை பின்பற்றி வரவேற்றனர்.
உள்ளே வந்தவன்...
காதல் 11
எது நடந்தாலும் அதை அந்த
இடத்தில் அப்படியே விட்டுவிட்டு
செல்லுங்கள்... தூக்கி சுமந்து
செல்லாதீர்கள்...
இல்லையெனில் நத்தை போல
இருக்கும் இடத்தில் இருந்து
நடந்து அல்ல... நகர்ந்து தான்
செல்வீர்கள்!!!
மறுநாள் காலை எட்டு மணிக்கு நெருக்கமான வேளையில் வந்த கண்ணன் "உன்ன இவங்க பாக்கனும்ன்னு சொன்னாங்கம்மா" எனவும் வாயிலை பார்த்தவள் திகைத்து எழுந்துவிட்டாள்.
பிறகு தன்னை சுதாரித்தவள் "இது... உங்க வேலதான..?" என்றாள் கோபத்துடன்.
"நான்...
காதல் 16
கனவில் வந்து கண் நிறைந்த
உன்னை அடையாளம் கண்டு…
மனம் கவர்ந்த உன்னை
மணம் முடிக்கும் நாளிற்காய்
ஏங்கி நிற்கும் பாவை…
இவளின் எண்ணம் ஈடேற
எத்தவம் புரிகுவேனோ…?
என் கண்ணா…!
“யாருக்காகவும் ஒரு குண்டூசி கூட வாங்கிட்டு வந்து தரமாட்டான். இன்னைக்கு பாத்தியா?” என லலிதாவும் சிரித்தபடி சொன்னாள். “என்ன பாத்தா சிரிப்பா இருக்கா? இத மொதல்ல வாங்கு” என்றபடி அவசரமாக ராதாவின்...
காதல் 9
நாம் ஒருமுறை செய்த தவறு உலகிற்கு அம்பலம்
ஆகும் போது நாம் செய்த
அத்தனை விசயங்களும்
சந்தேகத்திற்கு உள்ளாக்கப் படும்...!
ராதா அந்த படிவத்தை வாங்கி அதை நிரப்ப ஆரம்பித்தாள். அதில் தந்தை பெயர் அருகே ஒரு நொடி தயங்கினாலும் மறுநொடி அதில் நிரப்பியிருந்தாள் அவன் பெயரை “கோகுலக் கண்ணன்”. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் தான்...
காதல் 13
புத்தம்புது தாவரமாய் முளைக்கட்டும்
புது வாழ்வு...
பூக்களை போல பூக்கட்டும்
புதிதாய் பல உறவுகள்...
வாடாமல் வாசம் என்னும்
மகிழ்ச்சி மணம் பரவட்டும் எந்நாளும்
காய்ந்த சறுகென உதிரட்டும்
துன்பமும் துயரமும்... என் கண்ணா!!!
மூன்று நாட்களுக்கு பின்...
ஆபரேசன் தியேட்ருக்குள் கமலை அழைத்துச் செல்வதற்காக செவிலியர் வர குழந்தை ராதாவின் கரத்தை பற்றியவாறு அழத்தொடங்கினான். அவனை சமாதானப் படுத்தி அனுப்பியவள் ஆபரேசன் தியேட்டர் வாசலில்...
காதல் 15
காதலனே…
உனை எண்ணி காத்திருந்தேன்!
உன் காதலின் தடத்தை
என் நெஞ்சில் பதிக்க…
நீ கண்ணீரின் தடத்தை
என் கண்களில் பதித்தது
ஏனடா…? என் கண்ணா…!
உன்னை எண்ணி ஏங்கும் நெஞ்சம்
நெருங்க மறுக்கிறதே…!
என் மன்னா…!
“உங்க அம்மாகிட்ட கேட்டேன்.. உங்களுக்கும் உங்க அக்காவுக்கும் பூரி மசலான்னா பிடிக்குமாமே.. இன்னைக்கு நான் செய்யறேன். சீக்கிரமா வந்து சாப்பிடுங்க” என்றபடியே சென்றவளை பார்த்து “கடவுளே… உங்கிட்ட என்ன...
காதல் 14
சிலரை மறந்து விடுங்கள்…
சிலரை மன்னித்து விடுங்கள்…
சிலரை ஒதுக்கி விடுங்கள்…
சிலரை வெறுத்து விடுங்கள்…
யாரையும் தூக்கி சுமக்காதீர்கள்
வாழ்க்கை சுமையாகிவிடும்!!!
பத்து நாட்களுக்கு பிறகு...
கண்ணனின் வீட்டிற்கு வந்த மறுநாளே சுகந்தி தன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
லலிதா எதிலுமே கலந்து கொள்ளாமல் தன் அறையிலேயே இருந்தாள். வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் வீட்டிலிருந்த அனைவரும் லலிதாவை நினைத்து கவலைப்படுவதை ராதா அறிந்திருந்தாள். எப்படியாவது...
“என்ன பாக்குறீங்க..? காபி எடுத்துக்கோங்க” என மீண்டும் ராதா சொல்லவும் தன்னிலைக்கு வந்தவன் காபியை வாங்கிக் கொள்ள “சீக்கிரமா கிளம்புங்க.. கோவிலுக்கு போகனும்” என்றுவிட்டு சென்றவள் திரும்பி நின்று “வேஷ்டி சட்டை போடுங்க” என்று கூறிவிட்டு சென்றாள்.
ராதா அறையைவிட்டு சென்றபின் கோகுலின் நிலைதான் அந்தோ பரிதாபம் “ஆ… சும்மாவே இங்க எரியிது.. இதுல இவவேற...
காதல் 18
உன்னை எண்ணி இன்பக் கவிதை
தான் எழுத ஆசைப்பட்டேன்…
ஆனால் இறுதி கவிதைக்கு
கரு கொடுத்துவிட்டாய் நீ…
என் வாழ்வின் முகவுரையும் நீதான்!
முகாரியும் நீதான்!! என் அன்பே!!!
ராதா பாடிய பாடலை கேட்டு அனைவரும் ராதாவை பாராட்ட அவளோ திரும்பிச் செல்லும் சேகரையே வலியுடன் பார்த்திருந்தாள். “அத்த.. அப்பா இந்த பாட்ட அடிக்கடி கேப்பாங்க. நீங்க அதே மாதிரி அழகா...
காதல் 8
நீ என் வாழ்வில் வந்த நாளை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்…
இன்று உன் துரோகத்திற்காக எனக்கு
கிடைத்த அழகிய மலரை
நான் கைகளில் ஏந்தி…
கண் கலங்கி… மதி மயங்கி
நின்றிருக்க மாட்டேன்!
இந்த மலராவது தெய்வத்தின் சன்னதி
சென்றடையுமா…? என் கண்ணா…!
சேலையை எடுத்து பார்த்துவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கு” என்ற அவளது குரலை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க “இந்த சேலைக்கும் பில் போட...