Advertisement

காதல் 2
நாம் பேச ஆரம்பிக்கும் முன்…
இரண்டு விடயங்களை மனதில்
கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்!
முதலில் நாம் என்ன பேசுகிறோம் என்று…
இரண்டாவது யாரிடம் பேசுகிறோம் என்று…
இதில் ஏதாவது ஒன்று தவறானாலும்
அதன் விளைவு நாம் நினைத்ததற்கு
எதிர்ப்பதமாக பத்து மடங்கு இருக்கும்!!
மறந்து விடாதீர்கள்!!!

“இப்புடி நெறய பொண்ண பார்த்துருக்கேன் ஸ்வீட்டி. அப்பறம் அவங்க என்னவிட்டு போகமாட்டேன்னு தவிச்சதையும் பார்த்திருக்கேன். சோ… ஓவர் ரியாக்ட் பண்ணாம நீயே வந்தா நல்லாயிருக்கும்” எனவும் மொத்த பொறுமையும் காற்றோடு பறந்து போனது ராதாவிற்கு.

“அவுட்” என்றாள் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அமர்ந்தபடி…

“கம்ஆன் ஸ்வீட்டி” என ராதாவின் கையை பற்றினான் அந்த இளைஞன். தன் கையை பிடித்த அடுத்த வினாடி எதிரில் இருந்தவனின் கன்னத்தில் இடியென இறக்கினாள் தன் கரத்தை ராதா.

அடுத்த சில வினாடிகளில் தன்னை சமாளித்த அந்த இளைஞன் “ஏய்” என விறைப்புடன் அவள்புறம் திரும்ப…

“கெட் அவுட்” என்றாள் ராதா அழுத்தத்துடன். அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவன் வேகமாக வெளியேறி சென்றுவிட “ஊப்…” என பெருமூச்சுடன் இருக்கையில் மீண்டும் அமர்ந்தவள் கைகளை கொண்டு தன் தலையை தாங்கிக்கொள்ள… சிலபல நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து அமர்ந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தும்போதுதான் கவனித்தாள் அவள் இருக்கையின் எதிரில் இருக்கும் கம்ப்யூட்டர் மேசையில் ஏதோ ஆண்கள் உபயோகிக்கும் பர்ஸ் இருப்பதை… அதை கண்டு ‘ம்க்கும்… இது வேறையா…? எந்த தறுதலதுன்னு தெரியலையே. காலையில இருந்து வந்தது ரெண்டே ரெண்டுதான். சரி பாப்போம்’ என எண்ணியபடி அதை எடுத்து பார்த்தவள் அதிலிருந்த பணத்தை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனாள்.

கணினி மேசை மேல் வைத்துவிட்டு சென்றிருந்த பணப்பையை எடுத்து பிரித்து பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள். ஏனெனில் அதில் இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் எவ்வளவு வைக்க முடியுமோ அவ்வளவு இருந்தது. அதை கண்டவள் வேறேதாவது இருக்கிறதா என தேடிப்பார்க்க கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், ஆதார் கார்ட், வோட்டர்ஸ் கார்ட், பான் கார்ட் என இருக்கும் அத்தனை கார்டும் அதில்தான் இருந்தது. ‘இவன் வீட்டு பால் கார்ட்டும் கேபிள் கார்டும் தவிர மத்த அத்தனையும் வச்சிருக்கான்’ என மனதினுள் திட்டியபடி பெயரை பார்க்க அதிலிருந்த பெயரை பார்த்ததும் மனதினுள் ஏதோ தோன்றியது ‘கோகுல கண்ணன்.. மொதல்ல வந்தவன் ஏதோ கோகுல்ன்னு சொன்னானே… ஒருவேளை இவனா இருக்குமோ? வேற ஏதோ சொன்னானே?’ என யோசித்தாள்

எதுவும் நினைவில் வராமல் போக ‘ப்ச்’ என சலித்தவள் கண்முன் அந்த இளைஞன் அதாவது இந்த கோகுல கண்ணன் கடைசியாக பார்த்த பார்வை நினைவுவர “ஒருவேளை பர்ஸ காணோம்ன்னு கம்ப்ளைண்ட் பண்ணி அவன அடிச்சதுக்கு பலி வாங்கிடுவானோ?” என ஏதேதோ யோசித்தவள் இறுதியாக வெளிய இருக்கானான்னு பாப்போம் என நினைத்து வெளியே சென்று பார்க்க அருகிலிருந்த மரத்தடியில் ஒரு காரின் அருகில் இவள் பார்த்த இருவர் தவிர இருவரும் மூன்று பெண்களும் நின்றிருந்தனர். ‘அப்பாடா’ என நிம்மதி பெருமூச்சு விட்டவள் அவர்கள் அருகில் செல்ல செல்ல அவன் கன்னத்தில் இருந்த தடத்தையும் வீங்கிய கன்னத்தையும் பார்த்தவள் ‘ச்சே… என்னதான் கோபம் வந்திருந்தாலும் இந்தளவு அடிச்சிருக்க வேண்டாமோ?’ என தோன்றியது.

கோகுல கண்ணன் சுண்டிவிட்டால் ரத்தம்வரும் என சொல்லுமளவிற்கு வெண்மை நிறம். காலில் அணிந்திருக்கும் ஷ_வின் பளபளப்பு கூறிவிடும் அவனது செல்வ செழிப்பை. அவன் அருகில் சென்றவள் அப்பொழுதுதான் கவனித்தாள் அவன் முன்னால் ஒட்டிக்கொண்டிருந்த பெண்ணை. “இதுக்கெல்லாம் எதுக்கு பேபி ஃபீல் பண்ற.. நாம என்ஜாய் பண்றதுக்காக தான ஜாலியா கிளம்புனோம். நம்ம ட்ரிப் முடிஞ்சு வந்ததுக்கப்பறமா அந்த பட்டிக்காட என்ன பண்றதுன்னு யோசிக்கலாம். இப்ப இதெல்லாம் மறந்துட்டு நம்ம ட்ரிப்ப ஜாலியா என்ஜாய் பண்ணலாம் பேபி” என அவன் தோளில் தொங்கி கொஞ்சியவள் சட்டென அவன் முகத்தை தன்னருகில் இழுத்து அவன் இதழில் தன் இதழை பதிக்க ராதா சட்டென வேறுபுறம் திரும்பி நின்றுகொண்டாள். அவள் மனதில் ‘ச்சீ.. என்ன பெண்ணிவள்’ என்ற அருவறுப்பு தோன்ற திரும்பி நின்றவாறே “எக்ஸ்க்யூஸ் மீ” என அழைக்க அவள் வருவதை பார்த்து ஏற்கனவே அவன் நண்பன் கூறியிருந்தபடியால் காது கேளாதவன் போல நின்றான் அவன்.

“ஹலோ” என மீண்டும் அழைக்க அவன் உடனிருந்த தோழர்களிடம் ஏதோ பேசியபடியே இருக்க ராதாவிற்கு புரிந்துவிட்டது.

“க்கும்…” என தொண்டையை செறுமியவள் அவன்புறம் திரும்பி “கோகுலண்ணா” என சடாரென திரும்பியவன் “ஏய் அண்ணன் கிண்ணன்ன பல்ல பேத்துருவேன். அதான் அடிச்சியே இப்ப எதுக்குடி வந்த? ஓ.கே சொல்லவா?” என முதலில் கோபமாக ஆரம்பித்தவன் நக்கலாக முடிக்க அவன் பேசியதைக் கேட்டு முறைத்தவளிடம் “என்ன வேணும்?” என்றான் ஏளனமாக அவளை பார்த்தபடி

அவன் கண்களையே பார்த்தவள் எதுவும் பேசாமல் தன் கையிலிருந்த பர்சை அவன்முன் நீட்ட… இப்போது அவன் கண்கள் மட்டுமின்றி உதடுகளும் ஏளனத்தை பூசிக்கொண்டது. அவள் அமைதியாக பார்த்துக்கொண்டே இருக்க “இந்த பர்ஸ்ல இருந்த பணம்தான் உன்ன இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்துச்சா?” என அதே ஏளனத்துடன் கூற…

“ம்… ஆமாமா பணம் வரும்போது பயமும் கூடவே வந்துடுமே” என அமைதியாகவே கூறியவள் ஒரு பெருமூச்சை வெளியிட்டுவிட்டு “அது… சாரி.. என்ன இருந்தாலும்… நான்.. உங்கள.. அடிச்..சிருக்..கக் கூடாது.. ஏதோ எமோசன்ல… திடீர்னு நீங்க கைய பிடிச்சதும்…” என உளறிக்கொட்ட… அவன் சிரிப்பதை பார்த்து “ஊப்ஸ்…” என பெருமூச்சு விட்டவள் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள் “இங்க பாருங்க. எனக்கு மன்னிப்பு கேக்க தெரியாது உங்கயோட இந்த வீக்கத்த பாத்ததும் ஏதோ தப்பு பண்ணிட்டோமோன்னு தோனுச்சு. சோ… சாரி. எனக்கு இப்புடிதான் கேக்க வரும்” என்று பட்டென்று கூறிவிட்டு நகர…

“பணம் பத்தும் செய்யும்ன்னு சொல்லுவாங்க. அதுல ஒன்னா உன்ன இவ்ளோ தூரம் என்ன தேடி வரவச்சிடுச்சு” என நக்கலுடன் சொன்னவன் ராதாவின் அருகில் மிகவும் நெருங்கி நின்று “இட்ஸ் ஓ.கே ஸ்வீட்டி. நடந்தத மறந்துடுவோம் நீ இந்த பணத்த பாத்துதான வந்த இந்த பணத்த உனக்கே தந்துடுறேன். நீ மட்டும் ஒரு நைட்;;” என பாதியிலேயே நிறுத்த

‘திருந்தாத ஜென்மம்’ என மனதினுள் நினைத்தவள் அவனை பார்க்க திரும்பினால் நிச்சயம் அவன்மேல் மோதத்தான் வேண்டும். அவ்வளவு நெருக்கத்தில் நின்றிருந்தான். இரண்டடி முன்னே சென்று திரும்பியவள் “பணம் தேவைன்னா உங்ககூட இல்ல யார்கூட போனாலும் குடுப்பாங்க” என்றவள் திரும்பி பார்க்காமல் செல்ல… அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென அவள் முன்வந்து நிற்க தடுமாறியபடி நின்றாள் ராதா.

“நீ வருவியா மாட்டியா?” என அவள் கண்களை பார்த்து கேட்க

“மாட்டேன்” என்றாள் அவளும் அவன் கண்களை நேராக பார்த்தபடி

அவளையே தீர்க்கமாக பார்த்தவன் “நாங்க இத்தனபேர் இருக்கோமே உன்ன தூக்கிட்டு போக எவ்வளவு நேரமாகும்?” என அழுத்தமாக கேட்க

உள்ளுக்குள் கிலி பரவினாலும் வெளியே விரைப்பாக நின்றவள் “பலப்பரீட்சைன்னு வந்தா கண்டிப்பா படுதோல்வி எனக்குதான். ஆனாலும் நானா என்ன உங்ககிட்ட கொடுக்கமாட்டேன்னு உங்க முகத்துக்கு முன்னாடி… இவ்ளோ…. பெ..ரி……ய பணக்காரன் கிட்ட இவ்ளோ திமிரோட சொல்றேனே அதுக்கு என்ன பண்ணுவீங்க?” என்றாள் தெனாவட்டாக…

எங்கே அவன் சொன்னதை செய்துவிடுவானோ என்ற பயத்;தில் அவனது ஈகோவை தூண்டிவிட்டு தன்னை காக்க முடிவெடுத்தே அவ்வாறு கூறினாள் ராதா. அவள் எய்த அம்பு சரியான குறியையே தாக்க அது அவளை காத்ததா எனபதுதான் கேள்விக்குறியானது “நீயாவே வந்து உன்ன என்கிட்ட நீயாவே குடுக்கல…” என்றவன் “ம்ஹ_ம்” என இருபுறமும் தலையை ஆட்டியபடி “கொடுப்ப” என்று கூறியவன் மீண்டும் அதேபோல பார்த்துவிட்டு நகர்ந்தான்.

அவன் சொன்னதை கேட்ட ராதாவிற்கு உண்மையிலேயே பயம் பற்றிக்கொண்டது தான். தேவையில்லாம எதிரிய உருவாக்கிக்கிட்டோமோ? என நினைத்தவள் அடுத்த நொடியே அந்த நினைப்பை தூக்கி எறிந்துவிட்டு பாத்துக்கலாம் என்ற எண்ணத்துடன் கடந்து வந்துவிட்டாள்.

தன் நண்பர்களிடம் வந்த கோகுல் “எனக்கு அவ யாரு? அவ பலம் பலவீனம் பேமிலி பேக்கிரவுண்ட் எல்லாம் தெரியனும்” எனவும் அவன் நண்பர்கள் “மச்சான் பாத்துக்கலாம்டா. பொறுமையா செய்வோம்” என்றனர் அவனை சாந்தபடுத்தும் விதமாக…

அவர்களை பார்த்தவன் “சரிடா… ஆனா… அதுவரைக்கும் எந்த பார்ட்டியும் கிடையாது. எந்த ட்ரிப்பும் கிடையாது” என்றுவிட

“டேய்… அந்த பொண்ணு டீடெய்ல்தான… இன்னும் ஒன்வீக்ல வந்துடும். ஆனா அதுக்காக ட்ரிப் பார்ட்டியெல்லாம் கேன்சல் பண்ணிடாத” என்று பதறியவர்கள் அவர்கள் கூறியதுபோலவே ராதாவின் மொத்த டீடெய்லையும் ஒரு மாதத்திற்குள் கோகுலிடம் கொடுத்தும்விட்டனர்.

அதன்பிறகு ஐந்து மாதம் திட்டமிட்டு அவளை அவனிடத்திற்கு வரவழைக்க செயல்பட்டு இன்று அந்த நாளையும் கொண்டுவந்துவிட்டான்.

“அம்மா வீடு வந்துருச்சு எறங்கிக்கறியாம்மா?” என வயதான அந்த காரோட்டி கேட்க தன் நிலையை அடைந்தவள் சுற்றிபார்க்க ஒரு வீட்டின் முன்னே நின்றிருந்தது அந்த கார்.

இப்புடியே திரும்பி போயிடலாம் என துடித்த தன் மனதை கடிவாளமிட்டு அடக்கி காரைவிட்டு இறங்கினாள் ராதா. பின்னிக்கொண்ட கால்களை எடுத்து வைத்து அந்த பத்தடியை கடக்க ஐந்து நிமிடமானது அவளுக்கு. ராதா சென்று அழைப்பு மணியை அழுத்துவதற்காகவே காத்திருந்தது போல கதவை திறந்தான் அவன். முகம் முழுக்க புன்னகையுடன் தன் ஆறடி உயரத்தில் இடுப்பு வரை குனிந்து “வெல்கம் ஸ்வீட்டி” என்றபடி நின்றவன் கோகுல கண்ணன்.

வெறித்த பார்வையோடு எதிரே நின்றவளை பார்த்து “டூ லேட் டார்லிங். இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு. நீ உள்ள வர்றதா இல்ல அப்புடியே போயிற்றதான்னு நீயே முடிவு பண்ணிக்கோ?” என்றவன் உள்ளே சென்று “ஹேய் காய்ஸ்… எனக்கு கம்பெனி குடுக்க ஸ்பெஷல் பர்சன் ஒருத்தங்க வந்துருக்காங்க. சோ.. ப்ளீஸ் நீங்க எல்லாரும் கிளம்புங்க” எனவும் அனைவரும் வெளியேற இவளை கடந்து சென்றவர்களில் நிறையபேர் இவளை பார்வையால் கூசவைத்தபடி செல்ல… அது எதையும் உணராதவள் போல நின்றிருந்தாள் ராதா.

அனைவரும் சென்ற பின்பும் அப்படியே நின்றிருந்த ராதாவை பார்த்தவாறே கையில் மது நிரம்பிய குவளையோடு வந்து சோபாவில் அமர்ந்தான். நேரம் கடந்துகொண்டே இருக்க இருபது நிமிடம் முழுதாக கடந்தபின்னும் நின்ற நிலைமாறாமல் இருந்தவளை பார்த்து “இப்புடியே நேரத்த கடத்திட்டு இருந்துட்டு என்ன குத்தம் சொல்லக்கூடாது ஸ்வீட்டி. இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு உனக்கு” என கூறவும் நிமிர்ந்து அவனை பார்த்தவள் “நீங்க வேற ஏதாவது என்கிட்ட கேளுங்க. நீங்க என்ன கேட்டாலும் செய்யிறேன். ப்ளீஸ்” என

“டார்லிங் உனக்கு சாரி கேக்க மட்டுமில்ல கெஞ்சக்கூட தெரியல” என ஏளனமாக பேசி சிரித்தான் கோகுல்.

“நான் அன்னைக்கு பேசுனது உங்கள அடிச்சது எல்லாம் தப்புதான். அதுக்காக நீங்க பண்றது எந்த விதத்துலயும் நியாயப்படுத்த முடியாது” என ஆதங்கத்துடன் கூற…

“சேச்சே.. யூ ஆர் மிஸ்டேக்கன் மீ ஸ்வீட்டி.. நீ என்னை பேசுனதுக்காகவோ இல்லை என்னை அடிச்சதுக்காகவோ நான் இதை பண்ணல..” என்றவன் நிதானமான குரலில் “நீ அன்னைக்கு சொன்னியே ‘என்னை நானே உன்கிட்ட கொடுக்க மாட்டேன்னு’ அதுக்காகதான் இதெல்லாம்” என்றான்

“ஆனா…”

“இந்த ஆனா ஆவன்னாலாம் வேணாம் டார்லிங். உனக்கு குடுத்த டைம்ல இன்னும் மூனு நிமிடம்தான் இருக்கு. முடிவு உன் கையில” என்றவன் அமைதியாக தன் கையிலிருந்த மதுவில் மூழ்கிவிட…

தன் கண்களை ஒரு நிமிடம் இறுக்கமாக மூடி திறந்தவள் வேகமாக வீட்டினுள் வந்து “கால் பண்ணுங்க” என்றாள்.

மெலிதாக சிரித்துவிட்டு போனை டயல் செய்து காதில் வைத்தவன் மறுமுனை எடுத்ததும் “ஆபரேசன் ஸ்டார்ட் பண்ணிடு” என கூறி வைத்துவிட்டு அவளை பார்க்க அவளோ அவனை வெறித்தபடியே நின்று கொண்டிருந்தாள்.

அவளை நெருங்கியவன் “இப்போ கூட ஒன்னுமில்ல நீ போகுறதா இருந்தா போகலாம். ஆனா நான் கால்பண்ணி ஆபரேசன பெய்லியரா மாத்திற சொல்லிடுவேன்” என்றான் ஒருவித வக்கிரத்துடன்.

“பச்சபிள்ளைய கொலபண்ணிடுவேன்னு மிரட்டி என்ன இங்க நிக்க வச்சுட்டல்ல. உனக்கு ஒருநாள் வரும். அன்னைக்கு ஒருத்தி உனக்கு சாபம் கொடுத்தான்னு நெனச்சுக்கோ. ஒருநாள்… ஏன்டா நாம உயிரோட இருக்கோம்ன்னு நீ நெனைக்கல… இது நடக்கும் அப்ப என்ன நெனச்சு பார்ப்ப” என்றாள் இயலாமையும் கோபமும் ஒரு சேர.

“நோ நோ… நான் அந்த குட்டி பையன கார்னர் பண்ணல. அவன வச்சு உன்னதான் கார்னர் பண்ணேன். எனக்கு நீ வேணும் உனக்கு உன் பேமிலி வேணும் உன் பேமிலிக்கு அந்த குட்டிபையன் வேணும். எல்லாமே நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா கெடச்சுரும்” என அசால்ட்டாக சொல்லி விட… இவளுக்குதான் இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் போனது.

“இப்போ பேசுறதுக்கான நேரமில்ல ஸ்வீட்டி” என கூறிக்கொண்டே ராதாவை நெருங்க எப்படி தப்பிப்பது என புரியாமல் தான் கேள்விப்பட்ட அத்தனை தெய்வங்களையும் வேண்டியபடி இருந்தாள். ஆனால் அவை எல்லாம் தன்னை காக்கப்போவது இல்லை என்பதை வெகுதாமதமாகவே அவள் உணர வேண்டியிருந்தது.

தொடரும்…

Advertisement