Advertisement

“ஹலோ” என ராதா கூறியதும் “நான் நீங்க காலேஜ் படிக்கும் போது உங்கள ரோட்ல நின்னு பாப்பேன்” என… “ஓ… அப்படிங்களா சார். உங்க பேர் என்னன்னு சொல்றீங்களா?” என கேட்க…

“என் குரலவச்சு என்ன கண்டுபிடிக்க முடியலையா” என…

“ஆமாமா.. இவரு ஜேசுதாஸ்.. நாங்க குரல வச்சு கண்டுபிடிக்க..”

“ம்… யாரு? யாரு?” என ஒரு நிமிடம் யோசித்தவள் “ஏய் சத்தியமா தெரியலப்பா. யாருன்னு நீங்களே சொல்லிடுங்க” என…

“என்னது தெரியலையா? உன்னல்லாம் பிரண்டுன்னு சொல்லவே கேவலமா இருக்குடி” என செல்வி கூற…

“அது… ஒரு பெரிய கேப் விழுந்துருச்சா… சோ… லிட்டில் கன்பியூசன் ஏதாவது க்ளுவாச்சும் குடுங்கப்பா” என ராதா கேட்க

“ம்… எட்டு வருசத்துக்கு முன்னாடி மீட் பண்ணுனோம்” என அந்த ஆண் குரல் நக்கலுடன் கூற…

“ம்… போடா. நான் நம்மகூட படிச்சதுல நெறய பேர அந்த எட்டு வருசத்துக்கு முன்னாடி பாத்ததுதான். க்ளு குடுக்குறானாம் க்ளு” என அலுத்துக்கொள்ள…

“சரிசரி இன்னொரு க்ளு” என செல்வி கூறவும்

“ம்க்கும்… அது என்னம்மா ஒரே ஸ்கூல்ல படிச்சோம்ன்னா” என கிண்டலாக கேட்க

“அது இல்ல… நம்ம முன்னாடி பெஞ்ச்” எனவும் கடகடவென முன்பெஞ்சில் அமர்ந்திருந்த நான்கு நபர்களின் பெயரை சொல்ல… “ம்… அதுல ஒருத்தன் தான்” என்றாள் செல்வி மீண்டும்

“ம்… யாரது…?” என மீண்டும் இவள் குழம்ப…

“உன் பேப்பர பிடுங்கி எக்ஸாம் எழுதுனேனே”

“அடப்பாவி இதல்லடா மொதல்ல சொல்லியிருக்கனும். வீரா தான” என “அப்பா ஒருவழியா கண்டுபிடுச்சுட்ட” என்றனர் மற்ற இருவரும்.

ராதா சிரிக்கவும் “சிரிக்காத. உனக்கு எவ்ளோ க்ளு குடுக்க வேண்டி இருந்துச்சு” என செல்வி கேட்க

“ஏய் எட்டு வருசம் கேப்மா. கொஞ்சம் கஷ்டம்தான்” என சொல்லி பேசி சமாதானபடுத்தி பழைய கதைகளை பேசிக்கொண்டிருக்க ஒன்றரை மணி நேரம் எப்படி போனதென்று தெரியாமல் பறந்து சென்றது.

“ஏய் பாப்பா கல்யாணமாகிடுச்சா” என வீரா கேட்க…

“பாப்பாவுக்கு எப்படி கல்யாணம் நடக்கும். இன்னும் இல்ல. பாத்துட்டு இருக்காங்க” என ராதா கூற…

“ஏய் இந்த பாப்பான்ற பேரே மறந்து போச்சுல” என செல்வி சொல்ல

“ஏன்…? பாப்பா, பால்டப்பா, அமுல்டின் எல்லாமே இருக்கு. இன்னும் உன் குரல்கூட மாறல. பாப்பா மாதிரிதான் இருக்கு” என வீரா கூற…

“ஏய் குரல் மட்டும் இல்ல. நானும் மாறல. அப்புடியேதான் இருக்கேன்” என ராதா கூற…

“ஆமாமா நாமலாச்சும் முகம்… வெயிட்.. இப்புடி எதுலையாச்சும் மாறியிருப்போம். ஆனா ராதாவ நம்ம ஸ்கூல் யூனிபார்ம் போட சொன்னா இன்னும் அப்புடியேதான் இருப்பா” என செல்வி கூற…

“நான் உன்ன பாத்தேன் ராதா. உன் ஆபிஸ் முன்னாடி யாரோ ஒருத்தர்கூட இறங்குன. ஒரு குட்டிபையன் வேற இருந்தான் பேசலாம்ன்னு நினைச்சேன். நீ பேசுவியோ மாட்டியோன்னு வந்துட்டேன்” என…

“அது என் அண்ணன்டா. அந்த குட்டிபையன் என் மகன்” என ராதா சாதாரணமாக கூற…

“ஏய் இப்பதான் கல்யாணமாகலைன்னு சொன்ன அதுக்குள்ள உன் பையன்ற” என அதிர்ச்சியுடன் கேட்க…

“லூசு. அக்கா பையன் கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மான்னுட்டு ஓடி வந்துட்டான்” என…

“அம்மான்னா கூப்பிடுவான்”

“ம்…” எனவும் “பாப்பா எனக்கு ஒன்னு தோனுது” என கூற

“இல்ல அத சொல்லாத உன்னோடவே வச்சுக்கோ” என்றாள் ராதா பட்டென

“இல்ல நான் சொல்லுவேன்” என அடம்பிடிக்க

“வேணான்டா. ரொம்ப நாளைக்கப்பறம் பேசுறோம் சண்ட வேணாம்”

“ம்ஹீம்… நான் சொல்லுவேன்”

“சரி சொல்லித்தொலை” என ராதா கூற “உன்ன பொண்ணு பாக்க வரும்போது உன் அக்காபையன் அம்மான்னு வந்து கட்டிபிடிச்சா எப்புடி இருக்கும்” என கூற…

“சூப்பரா இருக்கும்” என கூறி செல்வி சிரித்தாள்.

ராதா அமைதியாக இருக்க “நல்லாயிருக்கும்ல ராதா” என கேட்டான் வீரா.

“ம்… இதுதான்பா அம்மாவ கல்யாணம் பண்ணபோற அப்பான்னு காட்டுனா இன்னும் நல்லாயிருக்கும்” என கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு இளைஞன் கதவை திறந்து உள்ளேவர “கஸ்டமர் வற்றாங்க நான் அப்பறம் பேசுறேன்” என கூறி கட்செய்தாள் ராதா.

ராதா ராணி – தன் பெயருக்கேற்றார் போல ராணியாய் வாழும் ராதா. அப்பா செல்வம் அம்மா சுகந்தி. அக்கா சவிதா அவள் கணவன் சுரேஷ். சுரேஷ் தன் வேலை காரணமாக வருடத்தில் பாதி நாட்கள் சவிதாவை தன் மாமனார் வீட்டில்விட்டுவிட்டு வெளியூர் சென்றுவிட… அவர்கள் புதல்வன் மகிழேந்திரன் ராதாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான். ராதாவின் அண்ணன் சுரேந்தர். பேங்கில் மேனேஜராக பணிபுரிகிறான். வீட்டில் இருக்க போர் அடிப்பதால் வேலைபார்க்கிறேன் என பக்கத்து டவுனில் வந்து பணிபுரிகிறாள் ராதா. அவர்கள் வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை என்றாலும் தன் மகள் ஆசைப்படுகிறாள் என விட்டுவிட்டனர் அவள் பெற்றோர். ஆனால் “இந்த வேலையில எப்ப பிரச்சனை வருதோ அப்ப இந்த வேலைய விட்டுறனும்மா” என அவள் தந்தை கூறியிருக்க இவளும் சரியென தலையாட்டி இருந்தாள்.

இன்று அந்த பிரச்சனை தன் எதிரில் இருப்பது தெரியாமல் “என்னண்ணா வேணும்?” என கேட்க…

“பேபி அண்ணன்னு எல்லாம் கூப்பிடாத. கால் மீ சுந்தர்” என கூற… அவனை வேற்று கிரகவாசி போல பார்த்தவள் “என்ன வேணும்?” என சுருக்கமாக கேட்க…

“போலீஸ் பைன் பே பண்ணனும்” என…

சலானை வாங்கியவள் அந்த அரையடி கூந்தலும் கிழிந்த ஜீன்ஸ_ம், மேலே இரண்டு பட்டன் போடாத சட்டையும் அவன் மீது வந்த மதுவாடையும் அதையும் தாண்டிவந்த டியோர் சாவேஜ் மணமும் அவனை பார்க்க நவநாகரீகமான பணக்கார இளைஞனாக தெரிந்தவனை ஏனோ பார்த்ததும் முகம் சுளிக்கத் தோன்றியது ராதாவிற்கு.

தன் போனை எடுத்து காதில் வைத்தவன் “ஷாலு வேர் ஆர் யூ?” என… எதிர்முனை என்ன கூறியதோ உடனே டென்சனானவன் “ஷாலு டோன்ட் பீ ஜோக். கோகுலபத்தி உனக்கு நல்லாவே தெரியும். நீ திடீர்னு இப்புடி சொன்னா செம்ம டென்சனாகிடுவான்” என… எதிர்முனை ஏதோ கூற ராதாவை ஒரு மாதிரி பார்த்தவன் “சரி… இங்க நான் பாத்துக்கிறேன்” என கூறி வெளியேற…

“எக்ஸ்க்யூஸ்மீ உங்க சலான் அண்ட் ரெசிப்ட்” என ராதா அவனை அழைக்க…

“ஜஸ்ட் ஒன் செகன்ட் பேபி. இதோ வந்துடுறேன்” என நிற்காமல் சென்றுவிட… ராதாவிற்கு காலையிலிருந்து இருந்த இதமான மனநிலைமாறி கோபம் வர ‘ரிலாக்ஸ் ரிலாக்ஸ்’ என தனக்குள்ளே கூறிக்கொண்டு தன்னை கட்டுப்படுத்தி அமைதியாக அமர்ந்திருந்தாள் ராதா.

சிறிது நேரத்தில் உள்ளே வந்தவன் “பேபி கேன் யூ ஸ்டே ஒன் நைட் டூ மை பிரண்ட்” என… கீழே விழுந்த பேனாவை எடுக்க போன ராதா குனிந்தபடியே தன்னை ஆசுவாசபடுத்தி எழுந்தவள் “சாரி. நாட் இன்ட்ரஸ்டட்” என்றாள் அமைதியுடன்… ஏதோ கூற வந்தவனை தடுத்தவள் தன்னிடம் இருந்த பேப்பரை அவனிடம் நீட்டிவிட்டு “போங்க” என கதவை கை காண்பிக்க… ஒரு நொடி தயங்கியவன் வேகமாக வெளியேறி சென்றுவிட்டான்.

‘சுந்தராம் சுந்தர் வெளக்கமாத்துக்கு பட்டுகுஞ்சம். இதுல இந்த வெளக்கமாற அண்ணன்னு கூப்பிடக்கூடாதாம். என்ன பாத்து என்ன கேள்வி கேட்டுட்டான். ச்சே…’ என மனதினுள் பொறுமியவள் தன் கையை எதிரிலிருந்த கம்ப்யூட்டர் டேபிளின் மீது குத்திக்கொள்ள… அப்போது கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஒரு இளைஞன்.

இருந்த எரிச்சலில் “என்ன வேணும்” என பட்டென கேட்டாள் அவன் முகத்தை கூட பார்க்காமல்.

“ஒரு ஜெராக்ஸ்” என அவன் தன் லைசென்ஸை எடுத்து நீட்ட… அதை வாங்கி ஒரு காப்பி போட்டவள் அவனிடம் நீட்டி “ரெண்டு ரூபா” என்றாள். அவன் ஐந்நூறு ரூபாயை எடுத்து கொடுக்க “சில்றை இல்ல. மாத்திட்டு வந்து குடுங்க” என்றாள் ராதா.

“பரவாயில்ல. ஐநூறு என்ன ஐயாயிரமே குடுக்கலாம்” என அவன் கூறவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ராதா. இவள் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல தன் பற்கள் அனைத்தையும் காட்டி புன்னகைத்தான் அவன். அவனை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து சிலையாக நின்றவள் அவன் அடுத்து சொன்ன வார்த்தையில் கொதித்து உலைகலனாக மாறினாள். “ம்…? ஐயாயிரம் கொஞ்சம் கம்மியோ?” என்றான்.

“எதுக்கு ஐயாயிரம்?” என தன் கோபத்தை கட்டுப்படுத்தியபடி இரத்தின சுருக்கமாக கேட்டாள் ராதா.

“வேற எதுக்கு..? உனக்காக தான்” என்றவன் அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஒர்த் தான்” எனவும் கோபத்தில் முகம் சிவக்க இவ்வளவு நேரம் ‘பொறுமை… பொறுமை’ என கட்டிவைத்த பொறுமை பறந்தோட அவன் கையில் அவள் கொடுத்த நகலை பறித்து கிழித்து குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு “இப்புடியே ஸ்ட்ரைட்டா போனீங்கன்னா ஒரு தாத்தா ஜெராக்ஸ் கடை வச்சுருக்காரு… போயி.. ஐயாயிரமில்ல அம்பதாயிரம் கூட கொடுங்க” என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்…

“ஓ… தாராளமா குடுக்கலாம். அங்கயும் நீயே இருந்தால்” என அவனும் அசராமல் இவளுக்கு பதிலளிக்க கொதித்தவள் ராதாதான்.

“கௌம்புங்க… எனக்கு உங்க பணமும் தேவையில்ல நீங்க இங்க ஜெராக்ஸ் எடுக்கனும்ன்னு அவசியமும் இல்ல” என கூறி அமர…

“இவ்ளோ சீன் ஆகாது ஸ்வீட்டி என்கூட வந்தா இங்க குடுக்குற சம்பளத்தவிட அதிகமாவே தருவேன். நீ மாதம் முழுக்க சம்பாதிக்கிறத ஒரே நாள் சம்பளமா வாங்கிக்கலாம் என்கிட்ட” என…

“இன்னொரு வார்த்த பேசுன…” என தன் விரலை சுண்டி பத்திரம் காட்டி அவள் கூற…

“இப்புடி நெறய பொண்ண பாத்துருக்கேன் ஸ்வீட்டி. அப்பறம் அவங்க என்னவிட்டு போகமாட்டேன்னு தவிச்சதையும் பாத்திருக்கேன். சோ… ஓவர் ரியாக்ட் பண்ணாம நீயே வந்தா நல்லாயிருக்கும்” எனவும் மொத்த பொறுமையும் காற்றோடு பறந்து போனது ராதாவிற்கு.

“அவுட்” என்றாள் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அமர்ந்தபடி…

தொடரும்…

Advertisement