Friday, July 17, 2026

    Paavai Sernthaal Mannan Maarbil

    அத்வைத் பிறந்த போதே சமையலுக்கு தனி ஆள், வெங்கட், அலமேலு இருவரின் உதவிக்கென எப்போதுமே வீட்டில் இன்னொரு ஆள், முறை வாசல் செய்ய, தோட்டம் பராமரிக்க, மேல் வேலைக்கு என அதற்கு தனி ஆள் என நியமித்து விட்டான் யுகி. பெற்றோரையும் சிரம படுத்தவில்லை, மனைவியையும் வீட்டு வேலைகளில் சிக்கிக் கொள்ள வைக்கவில்லை யுகி. சேகர்...
    “ப்ச் அம்மாவை குறை பேசாத. உன் முன்னாடிதானே பேசுறாங்க, அவங்களுக்கு இதெல்லாம் அக்செப்ட் பண்ணிக்க கஷ்டம், ஆனாலும் செய்யவே கூடாதுன்னு கண்டிப்பா ஏதும் சொன்னாங்களா?” “அம்மாவை பத்தி சொன்னா ஸாருக்கு மூக்குல மொளகா ஏறிடும்” “உனக்கு ஏதாவது சொல்லணும் என்னை” என சொல்லிக் கொண்டே, சூடு ஆறியிருந்த கஷாயத்தை அவளுக்கு குடிக்க கொடுத்தான். மறுக்காமல் பருகியவள் அவனுக்கும்...
    சம்பந்திக்கு, பிறந்த பெண்ணுக்கு எல்லாம் ஆடை எடுத்து முறை செய்வதை சுட்டி காட்டி பேசிய புகழ், பணமாக கொடுத்து விடுகிறோம், பிடித்த மாதிரி எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். யுகி, அஞ்சலியின் திருமணத்தின் போதே இதற்காக எல்லாம் கடைக்கு சென்று உடைகள் தேர்வு செய்ய அலமேலுவுக்கு சிரமமாகத்தான் இருந்தது. ஆகவே சரி என்பது போல கணவரை பார்த்தார். “அதுவும்...
    தான் எந்த தவறும் செய்யவில்லை, எதற்காகவும் தான் தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை, என் வாழ்க்கையை நன்றாக வாழ்வேன் என புரிதலும் தைரியமும் அவளுள் இருந்தாலும் ஆழ் மனதில் அந்த மார்ஃபிங் செய்யப் பட்ட புகைப்படங்கள் அவளை பாதிக்கவே செய்திருத்தன.  இப்போது விருப்பமில்லாத திருமணம் வேறு. எதிர் பார்க்காத யுகியின் நெருக்கம் அவளை அதிர...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -18 அத்தியாயம் -18 அன்றைய தினம் மதிய விருந்து முடிந்து பொள்ளாச்சி கிளம்புகின்றனர் கார்த்திக், நந்தினி இருவரும். யுகி அண்ணனை அழைத்துக் கொண்டு கடை வரை சென்றிருந்தான். மதிய உணவுக்கு மாப்பிள்ளையுடன் ஒரு மச்சானாவது அமர வேண்டாமா, இருவரையுமே இன்னும் காணோமே என தவித்துக் கொண்டிருந்தார் அலமேலு. “டைம் பன்னெண்டுதானே அத்தை ஆகுது, வந்திடுவாங்க”...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -10 அத்தியாயம் -10 நந்தினியின் அலுவலகத்திற்கு வந்திருந்தான் கார்த்திக். எதற்காக இங்கு வந்தான் என எரிச்சல் பட்டவள் தவிர்க்க முடியாமல் பார்க்க சென்றாள். கார்த்திக்கின் பிறந்தநாள் இன்று. தங்கை, வருங்கால மனைவி இருவரிடமிருந்தும் எந்த வாழ்த்து செய்தியும்  அவனுக்கு வந்து சேரவில்லை. மறந்து விட்டாளா அல்லது அந்தளவு வெறுத்து விட்டாளா என கேட்டறிந்து...
    கடந்த மூன்று நாள் வழக்கமாக அன்றைய இரவும் மஞ்சள் மிளகு பனங்கற்கண்டு போட்டு பால் ஆற்றி  கணவனுக்கு எடுத்து வந்தாள் அஞ்சலி. “நீ சாப்பிட்டியா?” என கேட்டறிந்து கொண்டு பருகினான். அவ்வளவுதான், பின் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன். இருவரும் இன்னும் படுக்காமல் படுக்கையிலேயே ஆளுக்கொரு பக்கம் கைப்பேசி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அவன் தொடர்ந்து இரும, காய்ச்சல்...
    அதையே கணவனுக்கு கைப்பேசியில் அழைத்து கேட்டாள் அஞ்சலி. “ஆயிரம் வேலை இருக்கும், பட்டினி கெடக்காம வெளில சாப்பிட்டேன்தான், அம்மாட்ட சொல்லிடு” என்றவன் அவளை மேலே பேச அனுமதிக்காமல் கைப்பேசியை வைத்து விட்டான். அஞ்சலிக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டியிருந்தது. டவுன் ஹாலில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் கிடைக்கும் என இணைய வழியாகவும் தெரிந்து கொண்டாள். யுகியிடம்...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -2 அத்தியாயம் -2 மனதில் நிம்மதி இல்லாத காரணத்தால் நந்தினிக்கு சரியான உறக்கமில்லை. கார்த்திக்கை விட்டு பிரிவதை அவளால் எண்ணியே பார்க்க முடியவில்லை. இந்த முடிவை எடுத்தது இவள் அல்ல, அவன்தான். எப்படி அவனால் அப்படி சொல்ல முடிந்தது என நினைத்து நினைத்து ஆற்றாமையாக வந்தது. கோவத்தில் ‘ரொம்ப சந்தோசம், நான் போகிறேன்’...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -12 அத்தியாயம் -12 யுகேந்திரனும் அஞ்சலியும் அந்த முன்மாலை பொழுதில் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அஞ்சலிக்கு உறக்கத்தில் கண்கள் சொக்கியது. “உன்னை பார்த்து எனக்கும் தூக்கம் வருது அஞ்சலி, பின்னால போறியா நீ?” எனக் கேட்டான் யுகி. தலையை சிலுப்பிக் கொண்டவள், “லஞ்ச் கொஞ்சமா சாப்பிட்ருக்கணும். ஒரு ஓரமா காரை நிறுத்துங்க, ரெண்டு பேருமே...
    அறைக்குள்ளேயே நடை போட்டுக் கொண்டிருந்தான் யுகி. தன்னையே பார்த்திருந்தவளிடம், “நடந்தா டயர்ட் ஆகி வலிய மீறிக்கிட்டு தூக்கம் வந்திடும்ல, அதான்” என்றான். அவனை பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். தயக்கத்தோடு அவனிடம் வந்து நின்றாள். “என்ன டிஸ்டர்ப் பன்றேனா?” எனக் கேட்டான். அவள் ஆம் என தலையசைக்க, “சரி வா நானும் படுக்கிறேன்” என சொல்லி படுக்கைக்கு விரைந்தான். அவனை...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -20 அத்தியாயம் -20 அஞ்சலி ஹோம் அப்பளயன்ஸஸ் ஷோ ரூம் திறப்பு விழா முடிந்து இரண்டு மாதங்களாகி விட்டன. இடத்தையும் அதற்கான பதிவையும் பெற்று தந்ததோடு தன் பங்கு முடிந்தது என விலகி நின்று கொண்டான் யுகி. அதற்கு பின் எல்லாமே அஞ்சலிதான். தன் கனவை மருமகள் செயல் படுத்துகிறாள் என்பதில் வெங்கட்டுக்கு...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -6 அத்தியாயம் -6 திருமணத்துக்கு அடுத்த நாள்  யுகியும் அஞ்சலியும்  முதல் நாள் போல பேசிக் கொள்ளாமல் இல்லாமல் சற்றே இயல்பாக இருப்பது போலவே பைரவிக்கு பட்டது.  யுகி மனைவியிடம் ஏதவாது கேட்க அவளும் பதில் சொல்ல எனதான் இருந்தாள். அப்பாடா தம்பி சமாளித்துக் கொள்வான் என நிம்மதி அடைந்தாள் பைரவி.  மதிய விருந்துக்கு...
    பாவை சேர்ந்தாள்  மன்னன் மார்பில் -1 அத்தியாயம் -1 கோவையில் டவுன் ஹாலில் இருந்தது  அலமு எலக்ட்ரிகல்ஸ் அண்ட் ஹார்ட்வேர்ஸ் கடை.  எத்தகைய நுணுக்கமான பொருளும் அங்கு கிடைத்து விடும், அங்கு இல்லை என்றால் வேறெங்கும் கிடைக்க வழியில்லை எனும் வகையில் பெயர் பெற்றிருந்தது.  கடையின் நடுப் பகுதியில் ஓரமாக அலுவலக அறை சின்னதாக இருந்தது. ஏதோ லிஸ்ட்...
    பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -4 அத்தியாயம் -4 கார்த்திக் பொள்ளாச்சி வந்திருக்கிற காரணத்தால் இப்போதே அவனை நேரில் சந்திப்பதுதான் வசதி என நினைத்த யுகேந்திரன் காலையிலேயே புறப்பட்டு விட்டான். வீட்டில் யாருக்கும் தெரியாது.  தான் வந்து கொண்டிருப்பதாக கார்த்திக்கிற்கு மட்டும் செய்தி அனுப்பி வைத்தான். அவனுக்கும் யுகியிடம் பேச வேண்டுமாக இருக்க, இவனது வரவை எதிர் பார்த்திருந்தான்.  இரண்டு...
    “ஆமாம் உங்களுக்குதான் சிரமம் பார்த்துக்கோங்க” என அஞ்சலியும் சொன்னாள். “எனக்கென்னடி சிரமம்? உன் புள்ளைங்கள நீ பாரு” “உங்க புள்ளைய நான் பார்க்கிறேன்ல, பதிலுக்கு நீங்க எம்புள்ளைங்கள பாருங்க” “எம்புள்ள என்ன உம்புள்ளைங்க மாதிரி படுத்துறானா?” “படுத்தலைன்னு உங்களுக்கு ரொம்ப தெரியமா? உங்க புள்ளைய சமாளிக்கிற சாமர்த்தியம் எனக்கிருக்கு, உங்களுக்கு இல்லைனா நான் என்ன பண்றது?” எனக் கேட்டாள் அஞ்சலி. “பார்த்தியாடா...
    உடனே அவளே அவனை அணைத்துக் கொண்டாள். “உன் புடவை அழுக்காக போகுது” என்றான். “அழுக்கானா பார்த்துக்கலாம். சீக்கிரம் கிளம்புங்க” என்றாள். “ம்… கிளம்புறேன், முதல்ல இத என்னன்னு பாரு, ஏதாவது மருந்து இருந்தா போட்டு விடு” என சொல்லி தன் கையை காட்டினான். பதறி விலகியவள் வேகமாக கைக்கட்டை அவிழ்த்து பார்த்தாள். கட்டை விரல் நகம் முழுதாக பெயர்ந்து, சதையும்...
    கால் மணி நேரத்துக்கு பின் மருத்துவ மனையை வந்தடைந்தவன் பைக்கை பார்க் செய்து விட்டு வேகமெடுத்து ஓடினான். மூச்சிறைக்க தன் முன்னால் நின்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்த அஞ்சலி, “அப்பா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டாள். இதற்கு மேல் அவளிடம் என்ன பொய் சொல்லி சமாளிப்பான்? ஆகவே உண்மையை சொல்லி விட்டான். அவனை கோவமாக பார்த்தவள் உடனே...
    தனுஷுக்கு  விபத்து நேர்ந்து விட்டதாம். அவனது அப்பாதான் வெளிநாடு சென்று மகனை அழைத்து வந்தாராம். உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும் முகத்தில் பெரிய காயமாம். அது பெரிய தழும்பாகி முக அமைப்பையே சிதைத்திருக்க,  வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் இருக்கிறானாம். அஞ்சலிக்கு செய்த பாவத்தால் தான் இப்படியாகி விட்டதாக நினைத்தார் தனுஷின் அம்மா. அவனுக்கான  தண்டனை...
    என்ன ஏதென  அவள்தான் விசாரித்து அக்காவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அதை அப்படியே சொன்னால் போட்டு கொடுத்ததாக ஆகி விடுமே, ஆகவேதான் தன்னை மீறிக் கொண்டு சொன்னது போல இருக்க வேண்டும் என காத்திருந்து காய் நகர்த்தி விட்டாள் ஸ்ரீஜா. “இன்னும் என்னெல்லாம் மறைச்சிருக்க டா எங்ககிட்டருந்து?” என யுகியிடம் சீறினார் அலமேலு. “எதுக்குமா இவ்ளோ எமோஷ்னல் ஆகுற...
    error: Content is protected !!