Paavai Sernthaal Mannan Maarbil
அவளுக்கு எதுவுமே புரியாத நிலை.
“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஷோ ரூம் ஆரம்பிக்கிறதா பிளான் இருந்தது அஞ்சலி, சொல்லப் போனா இது அப்பாவோட ஆசை. இத மனசுல வச்சுத்தான் உன்கிட்ட ஆறு மாசம் டைம் கேட்டேன், பிளான் எல்லாம் பக்காவா பண்ணி வேலை செஞ்சாலும் கொஞ்சம் டிலே ஆகிடுச்சு. உன் பர்த்டேக்குள்ள லைசென்ஸ் வாங்கியே...
கடந்த மூன்று நாள் வழக்கமாக அன்றைய இரவும் மஞ்சள் மிளகு பனங்கற்கண்டு போட்டு பால் ஆற்றி கணவனுக்கு எடுத்து வந்தாள் அஞ்சலி.
“நீ சாப்பிட்டியா?” என கேட்டறிந்து கொண்டு பருகினான். அவ்வளவுதான், பின் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன்.
இருவரும் இன்னும் படுக்காமல் படுக்கையிலேயே ஆளுக்கொரு பக்கம் கைப்பேசி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
அவன் தொடர்ந்து இரும, காய்ச்சல்...
“ப்ச் அம்மாவை குறை பேசாத. உன் முன்னாடிதானே பேசுறாங்க, அவங்களுக்கு இதெல்லாம் அக்செப்ட் பண்ணிக்க கஷ்டம், ஆனாலும் செய்யவே கூடாதுன்னு கண்டிப்பா ஏதும் சொன்னாங்களா?”
“அம்மாவை பத்தி சொன்னா ஸாருக்கு மூக்குல மொளகா ஏறிடும்”
“உனக்கு ஏதாவது சொல்லணும் என்னை” என சொல்லிக் கொண்டே, சூடு ஆறியிருந்த கஷாயத்தை அவளுக்கு குடிக்க கொடுத்தான். மறுக்காமல் பருகியவள் அவனுக்கும்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -19
அத்தியாயம் -19
அஞ்சலிக்கு நல்ல இருமல், சளி. கஷாயம் செய்ய துளசி, வெற்றிலை, கற்பூர வல்லி எல்லாம் வீட்டின் பின்பக்கத்திலிருந்து பறித்துக் கொண்டிருந்தான் யுகி. மூக்கு நுனி சிவந்திருக்க, சோர்ந்து போன முகத்தோடு அவனுக்கு காஃபி எடுத்து வந்து கொடுத்தாள் அஞ்சலி.
நேற்றைய முன் தினம் பெய்த மழையில் பைரவியின் பெண்களோடும்...
“இது லவ் ஆஃப்டர் மேரேஜ் டைப் ஸ்டோரி, இதுல என்ன இருக்கு கிக்? வீட்ல ஒத்துக்க வைக்கணும்னு கஷ்டம்லாம் கிடையாது”
“ஆனா ஆஃப்டர் மேரேஜ் லவ் வர்றது கஷ்டம்ல அஞ்சலி? இவ என் வைஃப்னு கட்டாயத்துல காதல் வரலை, நான் சொல்றது பேச்சுலர் பையனுக்கு திடீர்னு ஒரு பொண்ணு மேல ஏதோ ஸ்பார்க் ஆகுமே, அப்படி...
அஞ்சலிக்கு இனி கவுன்சிலிங் தேவையில்லை என சொல்லி விட்டார் மருத்துவர். இப்போது புகுந்த வீடு அவளுக்கு நன்றாக பழகி விட்டது. ஸ்ரீஜாவும் அவளும் மட்டும் அந்நியர்கள் போலவே நடந்து கொண்டனர்.
அலமேலு பராமரித்து வைத்திருந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் இப்போது அஞ்சலியின் பராமரிப்புக்கு மாறியிருந்தன. நந்தினியின் திருமணம் முடியவுமே வெங்கட் பெரிய நிம்மதி பெற்றார்,...
“நீ இப்போ நல்லாத்தான் இருக்க, யுகி உன்னை எப்படி பார்த்துக்கிறார்னு நான் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன். என்ன குறை உனக்கு? அண்ணா தப்பான வாழ்க்கையை அமைச்சு கொடுத்தேன்னு உனக்கு தோணுதா?” தன்னை நியாய படுத்திக் கொள்ளதான் பார்த்தான் கார்த்திக்.
“எங்களுக்குள்ள செட் ஆனதால ஓகே, இல்லைனா? என்னை புரிஞ்சுக்காத ஒருத்தரா இவர் இருந்திருந்தா? என்னோட தேவை என்னன்னு...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -18
அத்தியாயம் -18
அன்றைய தினம் மதிய விருந்து முடிந்து பொள்ளாச்சி கிளம்புகின்றனர் கார்த்திக், நந்தினி இருவரும்.
யுகி அண்ணனை அழைத்துக் கொண்டு கடை வரை சென்றிருந்தான். மதிய உணவுக்கு மாப்பிள்ளையுடன் ஒரு மச்சானாவது அமர வேண்டாமா, இருவரையுமே இன்னும் காணோமே என தவித்துக் கொண்டிருந்தார் அலமேலு.
“டைம் பன்னெண்டுதானே அத்தை ஆகுது, வந்திடுவாங்க”...
அறைக்குள்ளேயே நடை போட்டுக் கொண்டிருந்தான் யுகி. தன்னையே பார்த்திருந்தவளிடம், “நடந்தா டயர்ட் ஆகி வலிய மீறிக்கிட்டு தூக்கம் வந்திடும்ல, அதான்” என்றான்.
அவனை பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். தயக்கத்தோடு அவனிடம் வந்து நின்றாள்.
“என்ன டிஸ்டர்ப் பன்றேனா?” எனக் கேட்டான்.
அவள் ஆம் என தலையசைக்க, “சரி வா நானும் படுக்கிறேன்” என சொல்லி படுக்கைக்கு விரைந்தான். அவனை...
தம்பியால் கார் ஓட்ட இயலாது என்பதால் சேகர் மூலமாக டிரைவர் ஏற்பாடு செய்து வர செய்திருந்தான் வாசு.
பொள்ளாச்சியில் திருமண மண்டபத்தில் மணமகள் வீட்டினரை வரவேற்ற கார்த்திக்கின் பெற்றோர் அஞ்சலியை காணாமல் சுணங்கி போனார்கள்.
“ரெண்டு முக்கியமான கெஸ்ட், அழைச்சிட்டு வருவாங்க” என சொல்லி சமாளித்தான் வாசு.
வழியில் அஞ்சலியின் தோளில் சாய்ந்த வண்ணம் உறங்கி விட்டான் யுகி....
உடனே அவளே அவனை அணைத்துக் கொண்டாள்.
“உன் புடவை அழுக்காக போகுது” என்றான்.
“அழுக்கானா பார்த்துக்கலாம். சீக்கிரம் கிளம்புங்க” என்றாள்.
“ம்… கிளம்புறேன், முதல்ல இத என்னன்னு பாரு, ஏதாவது மருந்து இருந்தா போட்டு விடு” என சொல்லி தன் கையை காட்டினான்.
பதறி விலகியவள் வேகமாக கைக்கட்டை அவிழ்த்து பார்த்தாள். கட்டை விரல் நகம் முழுதாக பெயர்ந்து, சதையும்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -17
அத்தியாயம் -17
பொள்ளாச்சியில் இருந்து பெண் அழைப்புக்கென கார்த்திக்கின் தாய் மாமா, மாமி, சித்திகள், சித்தப்பாக்கள் என ஆறு பேர் கோவை வந்திருந்தனர்.
நந்தினிக்கு பார்லர் பெண்கள் அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். நல்ல நேரம் முடிவதற்குள் புறப்பட வேண்டும் என அவசர படுத்திக் கொண்டிருந்தார் கார்த்திக்கின் மாமி.
“அவளை போய் பாரேன் பைரவி”...
“அது பாட்டுக்கும் போகுது, நாம தூரமா நிக்கிறோம், பயப்படாத” என்றான்.
“பக்கத்துல வந்தா என்ன பண்றது? டேஞ்சர் இல்லை?”
“தெரியல. அஞ்சலிகிட்ட நான் பட வேண்டியது நிறைய இருக்குன்னு என் தலைல எழுதி இருந்தா சிறுத்தை வந்தா கூட பாவப்பட்டு என்னை விட்டுட்டு போயிடும்” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். மழை கோட்டிலிருந்து வடிந்த நீர் அவளின்...
வெளியில் பனிப் படலமாக இருந்தது. கால் மணி நேர பிரயாணத்தில் அஞ்சலியின் மூக்கு நுனி சிவந்து போய் விட்டது.
சூரிய உதயம் பார்க்கவென மஞ்சகுட்டை வியூ பாயிண்ட் அழைத்து வந்திருந்தான். நேரம் ஆறை தொடப் போனது. அவர்கள்தான் முதலில் வந்திருந்தவர்கள் போலும், வேறு சுற்றுலா பயணிகளே தென்படவில்லை.
அமைதியாக சூரிய உதயத்தை பார்த்திருந்தாள் அஞ்சலி. கண்ணோரம் கசிய...
“அப்படியே விட்டா தானா சரியாகிடும் அஞ்சலி. அம்மாக்கு எம்மேலதான் கோவம், உம்மேல இல்லை. நீ எப்பவும் போல இரு” என சொல்லி விட்டான்.
திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் வருகிறேன் என சொல்லி சென்னைக்கு கிளம்பினாள் நந்தினி. சண்டை நடந்த அன்று அவள் மாடிக்கு சென்ற பிறகு நடந்தவை அனைத்தும் அம்மா வழியாக அவளுக்கும் தெரியும்.
ஸ்ரீஜாவிடம்...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் - 16
அத்தியாயம் – 16
சற்று நேரம் வெளியில் சுற்றி மனப் புழுக்கத்தை குறைத்துக் கொண்ட வாசு, தன் அக்காவின் வீட்டுக்கு சென்றிருந்தான். வீடு சென்று மனைவியை காண அவனுக்கு பிடிக்கவில்லை.
ஸ்ரீஜாவை பெண் பார்க்க சென்ற நாள் நினைவுக்கு வந்தது. என் மனைவியின் குடும்பத்தை என் குடும்பமாக நான் ஏற்றுக்கொள்வேன்,...
என்ன ஏதென அவள்தான் விசாரித்து அக்காவிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அதை அப்படியே சொன்னால் போட்டு கொடுத்ததாக ஆகி விடுமே, ஆகவேதான் தன்னை மீறிக் கொண்டு சொன்னது போல இருக்க வேண்டும் என காத்திருந்து காய் நகர்த்தி விட்டாள் ஸ்ரீஜா.
“இன்னும் என்னெல்லாம் மறைச்சிருக்க டா எங்ககிட்டருந்து?” என யுகியிடம் சீறினார் அலமேலு.
“எதுக்குமா இவ்ளோ எமோஷ்னல் ஆகுற...
“உன் துடுக்குத் தனத்துக்கு அளவே இல்லாம போச்சு. கொஞ்ச நேரம் வேற கடைக்கு போனா உன்னை மறந்திட்டேனான்னு எல்லாம் கேட்கிற” என கடிந்தான் யுகி.
“இல்லையா நெனப்பிருந்தா சொல்லிட்டு போயிருப்பீங்கல்ல? நான் தேடுவேன்னு தெரியாதா?” எனக் கேட்டாள்.
அவள் கேட்ட விதத்தில் ஒரு நொடி மறுமொழி வரவில்லை அவனிடம்.
“நீங்க எப்படி என்னை நினைச்சிட்டே இருந்தீங்களா?” என சின்ன...
பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -15
அத்தியாயம் -15
திருமண வேலைகளை இழுத்துக் கட்டி கொண்டு வாசு செய்ய, ஸ்ரீஜாவுக்கு கொஞ்சம் முதுகு ஒடிவது போலிருந்தது. எதுவும் கணவனிடம் வாய் திறக்க முடியாது, இவள் எப்படி நடக்கிறாளோ அப்படியேதான் மனைவியின் பிறந்த வீட்டில் நடந்து கொள்வான்.
அதற்காகவே உள்ளுக்குள் பொறுமினாலும் கணவன் போக்குக்கு சென்று கொண்டிருந்தாள் ஸ்ரீஜா.
தன் மனைவி ...
“கல்யாணம் முடிச்சிட்டு நீயும் கிளம்பிடுவதானே அண்ணா? எல்லாத்தையும் இழுத்து போட்டுக்காத, ஃபேமிலியோடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணு, ரோஹித் உன்னை ரொம்ப மிஸ் பண்றான். வேலையெல்லாம் நாம பிரிச்சு பார்த்துக்கலாம்” என்றான் யுகி.
“ரோஹித் ஸ்கூல் போற டைம் என்னடா பண்றது நான்? ஸ்ரீஜாவையும் சேர்த்து அழைச்சிட்டு போனா அவ கூடவும் இருந்த மாதிரி ஆகிடும்” என்றான்...