Mugilaname Mugavari Kodu
முகவரி 7:
காலமும்.., நேரமும் .... எப்பொழுதும்.... யாருக்காகவும் நின்று கொண்டிருப்பதில்லை.இதைப் புரிந்து கொண்டவன் அறிவாளி ஆகின்றான்.புரியாதவன் ஏமாளி ஆகின்றான் வாழ்க்கையிடம்.
நிலா இன்றோடு வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது.அவளது டிசைன்ஸ் சுதாகரனுக்கு மிகவும் பிடித்துப் போக..அது எம்.டி யின் பார்வைக்கு சென்று அவளது வேலையும் உறுதியாகிப் போனது.அதுமட்டுமின்றி சுதாகரனும்..,நிலாவும் இப்பொழுது நிஜ தந்தை..,மகள் போல்...
முகவரி 27:
நிலா-வினோத் நிச்சயதார்த்தம் அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ருத்ர மூர்த்தி வியாபார உலகில் பெரும் புள்ளி என்பதாலும்...உதய குமார் புகழ் பெற்ற வக்கீல் என்பதாலும்.... நிச்சயதார்த்தமே கல்யாணத்தை போல் நடந்தது.
எதிர்கால மணப்பெண்ணான நிலா......தேவதையாய் ஜொலிக்க..... வினோத்தோ... தேன் குடித்த வண்டு போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.நிலாவை அந்த கோலத்தில் பார்த்த உதய...
முகவரி 3:
சுதாவிற்கு மனம் ஏனோ பாரமாக இருந்தது.என்னவென்று வெளியில் சொல்லமுடியாத ஒரு உணர்வாக இருந்தது. விருது வழங்கும் விழாவிற்கு சென்று வந்ததில் இருந்தே அவர் மனம் ரயில் வண்டியைப் போல் தடதட வென்று அடித்துக்கொண்டுதான் இருக்கிறது.ஆனால் எதுவும் உறுதியாக தெரியாத பொழுது..
ஏன் இப்படி ஒரு பயமான உணர்வு மனதை வாட்டுகிறது என்று தான் அவருக்குத்...
“அத்தை உள்ள படுத்துருக்காங்க. ராதிகா சாதம் வடிக்க உள்ள போனா டா.....”
“ஓ அப்படியா? அப்புறம் அம்மா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன்”
“என்ன டா?”
“நாங்க இன்னைக்கு சென்னைக்கு போகலாம்னு இருக்கோம்”, என்று சொன்னதும் திக்கென்று இருந்தது யசோதாவுக்கு.
“என்ன பாண்டி சொல்ற?”
“ஆமா மா, ராதிகாவுக்கு நவீன் நினைவாவே இருக்கு போல? நைட் எல்லாம் கனவு கண்டு அலறுறா?...
முகவரி 25:
நிலாவால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.பார்த்தது பொய்யாய் இருக்கக் கூடாதா என்று அவளின் மனம் ஏங்கத் தொடங்கியது. எப்படி...?எப்படி...? இது சாத்தியம். வினோத்தை....சூர்யாவுக்கு தெரியுமா...? அப்போ நடந்த அனைத்தும் சூர்யாவுக்கு தெரியுமா...?தெரிந்து தான் எதுவும் தெரியாத நல்லவன் மாதிரி என் கழுத்தில் தாலியைக் கட்டினானா...? ஐயோ..!கடவுளே என்னை சுற்றி என்ன தான் நடக்குது...?...
முகவரி 5:
மே ஐ கம் இன் சார்...! என்றாள் நிலா....
வாம்மா...என்றார்...அந்த பெரிய மனிதர். அவரது தலையில் இருந்த நரை முடி அவரை ஐம்பது வயதுகளில் காட்டியது.அவரது முகத்தில்....அனுபவத்தின் ரேகைகள்...ஆழ்ந்து படிந்து இருந்தது.அவரது அமைதியான.சாந்தமான...முகத்தைப் பார்த்த உடனே ...,நிலாவிற்கு கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது.என்னதான் வெளியில் தைரியமாக இருந்தாலும்...முதல் நாள் வேலைக்கு சென்று இருப்பதால்..அனைவருக்கும்...
முகவரி 11:
தவறு செய்த குழந்தையைப் போல் தலை குனிந்து அமர்ந்து இருந்தான் சூர்யா. " அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ ஆத்திரத்தில் .., சென்று குடித்தது..தன்னை இந்த நிலைக்கு தள்ளும் என்று கனவா..? கண்டான். அவனால் ..சில உன்மைகளை ஜீரணிக்க முடியாமல், அதை மறப்பதற்காக குடித்தான். ஆனால் தன்னையே மறந்து விட்டான் ...".
இதை உன்கிட்ட...
முகவரி 1:
பொழுது புலர்ந்து சூரியன் வழக்கம் போல் தன் உதயத்தை ஆரம்பித்து.., ஒளிக் கதிர்களை வீசிக்கொண்டிருந்தான்.அந்த காலை வேளையில் சென்னை...தனக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.பள்ளி மாணவ மாணவிகளும்...கல்லூரி மாணவர்களும்....அலுவலகம் செல்பவர்களும்....நம் வேலை நமக்கு என்ற ரீதியில்.. பேருந்திற்கும்..டிரெயினுக்குமாய் ஓடிக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொருவருக்கும்..வாழ்க்கையில்...ஏதோ ஒன்று துரத்த...இவர்களும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க ..ஓடிக்கொண்டிருந்தனர்.
"பரபரப்பான அண்ணா சாலையில் தனது ஆடிக்காரில்..சூரியனுக்கும்...
முகவரி 29:
நிலாவிடம் கோபத்தைக் காட்டிவிட்டு கோபித்துக் கொண்டு வந்தாலும்.... சூர்யாவிற்கு நிலாவின் நியாபகமாகவே இருந்தது.என்ன தான் அவளிடம் வீராப்பாய் பேசிவிட்டாலும் தன்னால் அவளைப் பார்க்காமல் பேச முடியாமல் இருக்க முடியுமா என்பது அவனுக்கு பெரிய கேள்வியாக இருந்தது. நினைவிலும்,மனதிலும் நிலாவே நிறைந்திருக்க.....வேலை எதுவும் செய்யத் தோன்றாமல் குஷனில் தலை சாய்த்து அமர்ந்திருந்தான் சூர்யா.
என்ன மச்சான்...நைட்...
முகவரி 31:
சூர்யாவின் பார்வை நிலாவை வெறித்தபடி இருந்தது.கண் இமைகள் கூட அசையாமல் பார்த்த வண்ணம் இருந்தான்."இப்ப எதுக்கு இப்படி டென்ஸன் ஆகுறா....? அந்த அளவுக்கு நான் என்ன செய்தேன்...?" என்று மனதிற்குள் குழம்பியவன்...."இப்ப உனக்கு என்ன பிரச்சனை......? எனக்கு வினோத்தை தெரியும் என்பதா...? இல்லை நாங்க சேர்ந்து எடுத்துகிட்ட அந்த போட்டோவா...? என்றான் நிலாவைப்...
முகவரி 2:
அந்த அரங்கமே கை தட்டல்களின் ஒலியில் நிறைந்து இருந்தது.சூர்யா இளம் தொழிலதிபர்க்கான விருதை வாங்க மேடை ஏறினான்.அவந்து கம்பீரமான நடை அங்கு குழுமி இருந்த அனைவரையும் வியக்க வைத்து.தனக்கே உரிய நடையில் சென்று அந்த விருதை வாங்கும் போது அவனுடைய கர்வம் இன்னும் அதிகரித்து.அறிவிப்பாளர் அவனைப் பேச சொல்லி அழைக்க....மைக் அருகில் சென்றவன்..அனைவரையும்...
முகவரி 17:
நிலாவிற்கு தலையும் புரியவில்லை,வாலும் புரியவில்லை."இப்ப எதுக்காக இவன் இப்படி கத்திட்டு இருக்கான்.திடீர்ன்னு என்ன ஆச்சு...பைத்தியம் முத்திப் போய்ட்டதா....? கடவுளே..! என்னை நீதான் காப்பாத்தனும்.." என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தாள் நிலா.
சூர்யா...தன் மனதில் அடைத்து வைத்திருந்த அனைத்துக் கோபத்தையும் நிலாவின் மேல் காட்டிக் கொண்டிருந்தான்.."என்ன நினச்சுகிட்டு இருக்க...? இதென்ன ஆபீஸா...இல்லை உன் வீடா...? அப்படி...
முகவரி 23:
சென்னையில் சூர்யாவின் வீட்டில் வந்து இறங்கினர் அனைவரும். சுதாவும்,ஜக்குவும் வர மறுக்க...அவர்களைத் தவிர்த்து அனைவரும் வந்து இறங்கினர்.சூர்யா பிடிவாதமாய் சொல்லிவிட்டான்.எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் சென்னையில் தங்கள் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்று.மகேஷ்வரியை வாழ விடாமல் அடித்து விரட்டிய அந்த வீட்டில்....தன்னுடைய வாழ்வு தொடங்குவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.அதேசமயம் ஜீவா-தீபா வாழ்க்கையும் அங்கு...
முகவரி 21:
கல்யாண வீடு பரபரப்பாய்க் காணப்பட்டது.மங்கள வாத்தியங்கள் முழங்க, கிராமத்து பெண்களின் பட்டுபுடவைகள் ஒரு பக்கம் சரசரக்க... ஒரு பக்கம் சொந்த பந்தங்கள் அமர்ந்து கதை அளந்து கொண்டிருக்க...,இன்னும் சிலரோ சூர்யாவை பற்றியே பேசிக் கொண்டிருக்க..அந்த வீடு ஆட்களின் வரவால் நிறைந்து காணப்பட்டது.
சென்னையில் இருந்து பல முக்கியப் புள்ளிகளும் வருகை தந்து கொண்டிருந்தனர்.ஒவ்வொருவராய் வந்து...