Advertisement

 

முகவரி 31:

சூர்யாவின் பார்வை நிலாவை வெறித்தபடி இருந்தது.கண் இமைகள் கூட அசையாமல் பார்த்த வண்ணம் இருந்தான்.”இப்ப எதுக்கு இப்படி டென்ஸன் ஆகுறா….? அந்த அளவுக்கு நான் என்ன செய்தேன்…?” என்று மனதிற்குள் குழம்பியவன்….”இப்ப உனக்கு என்ன பிரச்சனை……? எனக்கு வினோத்தை தெரியும் என்பதா…? இல்லை நாங்க சேர்ந்து எடுத்துகிட்ட அந்த போட்டோவா…? என்றான் நிலாவைப் பார்த்து.

அவனைக் கோபமாகப் பார்த்த நிலா…”ம்ம்ம் ரெண்டும் தான்….அப்ப அவனை உங்களுக்கு தெரிஞ்சுருக்கு….நடந்த எல்லா விஷயமும் தெரிந்திருக்கு….ஆனா எதுவுமே தெரியாத மாதிரி சீன் கிரியேட் பண்ணி….என் கழுத்தில் தாலியும் கட்டி…தியாகிப் பட்டமும் வாங்கிட்டிங்க அப்படித்தான…?” என்றாள் ஆங்காரமாய்.

நிலாவின் பேச்சில் எரிச்சலடைந்த சூர்யா…”உனக்கு கொஞ்சம் கூட மூளை என்பதே கிடையாதா…இல்லை டெல்லிய விட்டு வரும் போதே அடகு வச்சுட்டு வந்தியா… ஒரு போட்டோவைப் பார்த்து நீ எப்படி முடிவு பண்ணலாம்…..திரும்ப திரும்ப நீ ஒரு வக்கீலான்னு என்னை யோசிக்க வைக்குற….” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

நீங்க ரெண்டு பேரும் அவ்வளவு சந்தோஷமா..,தோள் மேல் கைப் போட்டு இருந்திங்க அந்த போட்டோல…..அப்ப அவன் உங்களுக்கு நண்பன் இல்லாம தெரிஞ்சவனா…?” என்றாள் நிலா.

நிலாவை  ஒரு நிமிடம் உற்று நோக்கியவன்…” ஏன் அன்னைக்கு பொள்ளாச்சியில் அந்த ருத்ரம் கூட தான் நீயும் வினோத்தும் மாலையும் கழுத்துமா இருந்த மாதிரி போட்டோ காட்டினார்…..அப்ப நீயும் அவனும் என்ன உண்மையாவே கல்யாணம் பண்ணிகிட்டிங்களா…?” என்றான் சூர்யாவும்.

அவனது கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்த நிலா…”இல்லை…அது வந்து.. வந்து…” என்று கொஞ்சம் தயக்கத்துடன் இழுத்தவள்…”இப்ப நீங்க என்ன சொல்ல வறிங்க…?” என்றாள் கொஞ்சம் மட்டுப் பட்ட குரலில்.

 

ஒரு போட்டோவை வச்சு எதையும் முடிவு பண்ணக் கூடாதுன்னு சொல்றேன்.எதையும் தீர விசாரிக்கனும்…தப்பு செய்றவன் முகத்தைப் பார்த்தா தெரியாது…?என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு…?பொறுக்கி மாதிரி இருக்கா…?” என்றான் கோபமாய்.

அப்பொழுதும் நிலா அமைதியாய் இருக்க….”சொல்லு….என்று அவளின் முகத்தைப் பிடித்தவன்….என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரியா இருக்கு..?. இல்லை தப்பு செய்றவன் மாதிரி இருக்கா..?” என்றான் முகம் சிவக்க.

அவன் முகத்தை அழுத்திப் பிடித்ததில் நிலாவின் கன்னம் சிவந்து வலிக்கத் துவங்க…கண்கள் கலங்க….”அவளது கலங்கிய கண்களைப் பார்த்தவன் முகமும் ஒரு நிமிடம் வேதனையில் சுருள…” பட்டென்று விட்டான்.

வினோத்தும் நானும் சேர்ந்து இருந்த அந்த போட்டோ உண்மை.ஆனால் நாங்கள் நண்பர்கள் கிடையாது.சொல்லப் போனா அவனை நான் இரண்டு முறை தான் பார்த்திருக்கேன்.அந்த போட்டோ இரண்டாவது முறை பார்த்தப்ப எடுத்தது….அவ்வளவு தான்…மத்தபடி அவன் யாரோ நான் யாரோ….” என்றான் சூர்யா.

நிலா…”அப்ப எதுக்காக அந்த போட்டோவை நீங்க வச்சிருக்கிங்க… லேப்டாப்பில் வைக்கும் அளவுக்கு அவன் பழக்கமா…?” என்றாள்.

நீ திருந்தவே மாட்டியா….? உனக்கு எல்லாம் சொன்னாப் புரியாது….அந்த போட்டோவை மட்டும் தான் பார்த்தியா…?ஏன் மற்ற எல்லா போட்டோவையும் பார்த்திருக்கலாமே…? என்றவன் அவள் கைப் பிடித்து அங்கிருந்த சோபாவில் தள்ளியவன்…தனது லேப்டாப்பை எடுத்து வந்தான்.

வேகமாய் ஓப்பன் செய்தவன்….”இந்தா பாரு….இதை எல்லாம் பார்த்துட்டு அப்பறம் கேளு உன் கேள்வியெல்லாம்…”என்று வெருப்புடன் சொன்னவன்.., அமைதியாய் சென்று பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

அதிலிருந்த அனைத்துப் புகைப்படங்களையும் பார்த்த நிலாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது.அதில் உதய குமாரும்,சூர்யாவும் பல புகைப்படங்களில் ஒன்றாய் இருந்தனர்.சில புகைப் படங்களில் இவர்களுடன் சேர்ந்து வினோத்தும் இருந்தான்.சில புகைப் படங்களில் ஜீவாவும்….மற்றும் சிலரும் இருந்தனர்.அந்த போட்டோ எடுக்கப் பட்ட சூழ் நிலை…ஒரு பார்ட்டி நடந்ததற்கான அறிகுறியைக் காட்டியது.

நிலாவிற்கு அதில் பார்த்த எதுவும் மனதில் பதியவில்லை.உதய குமாரும், சூர்யாவும் சேர்ந்து இருந்த போட்டோவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.”என் அப்பாவை இவனுக்கு முன்னமே தெரியுமா…? அப்பாக்கும் இவனைத் தெரியுமா…?இரண்டு பேர் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியும் “நீ நினைப்பது சரியே..” என்று சொல்லியது.

தன் அப்பாவின் புகைப் படத்தைப் பார்த்தவளுக்கு பழைய நியாபங்கள் மீண்டும் வர…..தன் மீதே தனக்கு கழிவிரக்கம் தோன்ற..அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

வேகமாய் பால்கனிக்கு சென்றவள்….எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் நிற்க…அவள் வந்ததைப் பார்த்த சூர்யா…”உன் சந்தேகமெல்லாம் விலகிட்டதா…? இல்லை இன்னும் எதாவது இருக்கா..?” என்றான் குத்தலாய்.

அவனை அமைதியாய் பார்த்த நிலா…”அதெல்லாம் இல்லை…ஆனா உங்களுக்கு அப்பாவை எப்படி தெரியும்…அப்பாவுக்கும் உங்களைத் தெரியுமா…?” என்றாள் கண்களில் கேள்வியுடன்.

ஒரு பெருமூச்சு விட்டவன்…”தெரியும்… நல்லா தெரியும்….ஒரு பேமஸ் லாயர் அவர்…அவரைத் தெரியாமல் இருக்குமா…? சில வருடங்களுக்கு முன்பு வரை நானும் டெல்லியில் தான் இருந்தேன்.நான் பிஸ்னெஸ் ஆரம்பிக்க…எல்லா வகையிலும் எனக்கு உறுதுணையா இருந்தவர் உதய குமார் அங்கிள்.எனக்கு சட்ட ரீதியான ஆலேசனைகளில் இருந்து…. பேங்க் லோன் வரைக்கும் உதவி செய்தவர் அவர் தான்.என் திறமைய என்னக்கே புரியவச்சவர்…இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்…” என்று நிறுத்தினான் சூர்யா.

அவன் சொல்வதை எல்லாம் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் நிலா…..அந்த நேரத்திலும் தன் அப்பாவை நினைத்து பெருமை கொண்டவள் சூர்யாவைப் பார்க்க….

உங்கப்பாவை பார்க்குறதுக்காக,ஒரு நாள் அவர் ஆபீஸ் போயிருந்தேன். அப்போதான் வினோத் கூட பேசிட்டு இருந்தார்.என்னைப் பார்த்த உடனே எங்க ரெண்டு பேரையும் அறிமுகம் செய்து வைத்தார். வினோத் தன் வருங்கால மாப்பிள்ளைன்னும் சொன்னார்.அப்ப தான் அவனை எனக்கு தெரியும்.பிறகு ஒரு பிஸ்னெஸ் பார்ட்டில அவனை மீட் பண்ணினேன்… அப்ப எடுத்தது தான் அந்த போட்டோஸ் எல்லாம்.சொல்லப் போனா உங்கப்பாவை வைத்துதான் வினோத்தையே எனக்கு தெரியும்…இது தான் உண்மை…நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும்….” என்று சொல்லி முடித்தவன்…நிலாவைப் பார்க்க….அவளோ அழுதுவிடும் நிலையில் இருந்தாள்.

எனக்கு தூக்கம் வருது….மனதில் எதையும் போட்டு குழப்பாம வந்து தூங்கு…” என்ற சூர்யா….”அப்பறம் நான் ஒன்னும் தியாகிப் பட்டம் வாங்குறதுக்காக உன் கழுத்தில் தாலியைக் கட்டவில்லை.ஏதோ கடமைக்கு கட்டனும்ன்னும் கட்டலை…மனசில் உண்மையான காதலோட தான் அந்த தாலிய கட்டினேன்…ஒரு நாள் உனக்கு அது புரியும்…” என்றபடி செல்ல…

நிலாவின் பாடுதான் திண்டாட்டம் ஆகியது.”இவன் என்னை காதலிக்கிறானா…?” என்று நினைத்தவள்….வேகமாய் சூர்யாவைப் பார்க்க…அவனோ அவ்விடத்தில் இல்லை.

மனதில் எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்த பிறகும்…நிலாவின் மனதை ஏதோ கசக்கிப் பிழிந்தது.அது நம்பிக்கையில்லாமல் சூர்யாவை கேள்வி கேட்டதாலா…?இல்லை தன்னுடைய பழைய நியாபகங்கள் எல்லாம் படையெடுத்ததாலா என்று அவளுக்குப் புரியவில்லை.

ஆனால் ஏதோ ஒரு விதத்தில் சூர்யாவை காயப் படுத்தியிருக்கிறோம் என்று புரிந்து கொண்டாள் நிலா.அவனை சந்தித்த முதல் தருணத்திலிருந்து இப்பொழுது வரை…எந்த நிகழ்வும் அவனைக் கெட்டவனாகக் காட்டவில்லை.

 

அவன் தன்னைக் காதலிக்கிறான் என்ற விஷயத்தை அவளால் நம்பவும் முடியவில்லை….நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.ஆனால் சூர்யாவோ இதைப் பற்றிய சிந்தனைகள் எல்லாம் இல்லாமல் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

உறங்காமல் சிறிது நேரம் நடை பயின்றவள்…..ஒரு கட்டத்திற்கு மேல் தீர்க்கமான ஒரு முடிவெடுத்தவளாய் உறங்க சென்றாள்.ஆனால் முன் தினம் போல் உள்ளறைக்கு செல்லாமல் சூர்யாவிற்கு அருகிலேயே எந்த தயக்கமும் இல்லாமல் படுத்து உறங்க முடிந்தது அவளால்.

நிலா தூங்கிய சற்று நேரத்தில் கண் விழித்த சூர்யா…”ஒரு வழியா தூங்கிட்டாங்க மேடம்…அவள் இன்று அந்த அறையிலேயே  தங்கியது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.சீக்கிரம் அவள் மாறிவிடுவாள் என்றே தோன்றியது சூர்யாவிற்கு.ஸ்ஸப்பா…. என்னமா கேள்வி கேக்குறா…..?ஆனா கேள்வி கேட்க தெரிஞ்ச அளவுக்கு என் மனசைப் புரிசுக்க மாட்டேங்கிறாளே…!” என்று யோசித்தவன்…இனி தன்னை அவளுக்கு புரியவைப்பது தான் தன் கடமை என்பது போல் நினைத்தவன்….நிலாவின் முகத்தைப் பார்த்தான்.

தூங்கும் பொழுது கூட யோசனையில் தூங்குவாள் போல…நெற்றியை சுருக்கியபடி நிலா தூங்கிக் கொண்டிருக்க…அவளையே இமைக்காது பார்த்தவன்…குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்.பின் அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தவன்….அப்படியே உறங்கிப் போனான்.

ஆனால் விதி மட்டும் உறங்காமல் ….இவர்கள் உறங்குவதை ஏளனமாய் பார்த்துக் கொண்டிருந்தது.விதியின் கணக்கில் மனிதர்கள் எல்லாம் சாதாரண புள்ளிகள் தானே..!

காலையில் முதலில் கண்விழித்தாள் நிலா.விழிப்பு வந்தவுடன் முதலில் எதுவும் புரியவில்லை.பிறகு ஒவ்வொன்றாய் நியாபகம் வந்து புரிய….திரும்பி சூர்யாவைப் பார்த்தாள்.எந்த உணர்வையும் முகத்தில் பிரதிபலிக்காமல் நிதர்சனமாய் இருந்தது சூர்யாவின் முகம். அப்பொழுதுதான் கவனித்தாள் தன்னுடைய கை அவனுடைய கையுடன் பிணைக்கப் பட்டிருப்பதை.

ஒரு நிமிடம் அதைப் பார்த்தவள்….பின் மெதுவாக அவன் தூக்கம் கலையாதவாறு தன் கைகளை உறுவினாள்.இந்த கையைப் போல் தான் தன்னுடைய வாழ்க்கையும் அவனுடன் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பதை அப்பொழுது முழுமையாய் உணர்ந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று  எண்ணினாள் நிலா.அவளுடைய அனைத்து கேள்விகளுக்கும் அவன் பதில் சொல்லியிருந்தாலும்…..அவனின் பார்வை அவளுக்கு எதையோ உணர்த்த துடித்ததை அவனின் கண்கள்…. அவளிடம் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியிருந்தது.

இனி ஒவ்வொரு செயலையும் யோசித்து தான் செய்ய வேண்டும்….தான் பேசும் வார்த்தைகளில் முதலில் கவனமாய் இருக்க வேண்டும் என்று நினைத்த நிலா…அவனைப் புரிந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கினாள்.

வேகமாய் எழுந்து….குளித்து முடித்து கீழே சென்றாள் நிலா. சமயலறைக்குள் நிலாவைப் பார்த்த மகேஷ்வரிக்கு ஆச்சர்யம் என்றால் மாலாவிற்கு மிகுந்த சந்தோஷம்…..ஒரு பெண்ணை வளர்த்த தாயாய் அவரது மகிழ்ச்சி அவரின் முகத்தில் தெரிந்தது.

அதைக் கவனித்த நிலா…”நான் சந்தோஷமாக இருந்தால் தான் எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்…இனி எக்காரணம் கொண்டும் எனது உணர்வுகளை முகத்தில் காட்டக் கூடாது…” என்று நினைத்த நிலா…

என்ன மாலா மம்மி…? எதுக்கு இவ்வளவு ஆச்சர்யம்…நானே தான்… என்னை நல்லா பாருங்க…” என்று ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் காட்டினாள்.

மாலா சிரிக்க…மகேஷ்வரியைப் பார்த்த  நிலா..”என்னை மன்னிச்சிடுங்க அத்தை…நேத்து எனக்குள்ள நிறைய குழப்பம்..அதான் கீழ வராம…சரியா சாப்பிடாம…” என்று அவள் முடிக்கும் முன்..

பரவாயில்லை நிலா…உனக்கு இது புது இடம்…புது மனுஷங்க… அப்படித்தான் இருக்கும்….இதில் தப்பா நினைக்க ஒன்னுமே இல்லை.அப்பறம் என்னை அம்மான்னே கூப்பிடேன்….இந்த அத்தை எல்லாம் வேண்டாம்…” என்று மகேஷ்வரி சொல்ல…

அவரின் வார்த்தைகளில் கண்கலங்கிய நிலா…அதை மறைத்தவாறு….”ம்ம்ம் நல்லா யோசிச்சு சொல்லுங்க..ஏன்னா அம்மான்னு சொன்னா நான் எல்லாம் அடங்கவே மாட்டேன்…..சும்மா அசால்ட்டா இருப்பேன்…” என்று ரவுடி பாணியில் சொல்ல மாலாவிற்கும்,மகிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

சரி சரி சிரிச்சது போதும்…,சூப்பரா ஒரு காபி போடுங்க பார்ப்போம்….அந்த சிடுமூஞ்சிக்கு குடுக்கனும்…” என்றாள் நிலா.

என் பிள்ளை உனக்கு சிடுமூஞ்சியா….?” என்று மகி பொய்யாய் மிரட்ட…”இதுல உங்களுக்கு சந்தேகம் வேறயா..மகி மம்மி…” என்றாள் சிரிப்புடன் நிலா.

“என்னடி இங்க சிரிப்பு வேண்டி கிடக்கு….காலையில எந்திருச்சா ஒரு பெரிய மனுசிக்கு காபி குடுக்கனும்ன்னு தோணுதா…? எல்லாம் கூடி நின்னு கும்மியடுச்சுகிட்டு இருக்கிங்களா…?” என்று ஜக்கு தன்னுடைய வழக்கமான பல்லவியை பாட ஆரம்பித்தார்.

சூர்யாவிற்காக காபியை கையில் வாங்கிய நிலாவிற்கு ஜக்குவின் இந்த பேச்சு எரிச்சலைத் தர…”பாட்டி உங்களுக்கு காபி தான வேணும்…இதோ காபி….என் கையால் போட்ட காபி…” என்றபடி தன் கையிலிருந்த கப்பை நீட்டினாள்.

நிலா போட்ட முதல் காபியிலேயே அரண்டு போயிருந்த ஜக்கு….அதை வாங்க யோசிக்க…”மனதிற்குள் சிரித்த நிலா…இந்தாங்க பாட்டி….” என்று பவ்யமாய் நீட்டினாள்.

இல்லை….வேண்டாம்..வேண்டாம் நான் அப்பறமா குடிச்சுக்கறேன் என்றபடி ஜக்கு நகர….”எப்புடி…” என்று மாலாவையும்,மகியையும் பார்த்து கேட்டவள்….. முகத்தில் அதே சிரிப்புடன் சூர்யாவிடம் சென்றாள்.

கையில் காபியுடன் நிலாவைப் பார்த்த சூர்யாவிற்கு முதலில் எதுவும் புரியவில்லை……ஓவர் நைட்டில் இவ்வளவு மாற்றமா..?என்று யோசித்த படியே காபியை வாங்கி குடிக்கத் துவங்கினான்.

“இவ்வளவு பவ்வியமா வந்து காபி எல்லாம் குடுக்குறா…பின்னாடி பெரிய ஆப்பா வச்சிருப்பாளோ..?” என்று எண்ண..”இல்ல சூர்யா இருக்காது…. நிஜமாவே அவள் ஏன் மாறியிருக்க கூடாது…?” என்று இன்னொரு மனம் அவனைக் கேள்வி கேட்டது.

எல்லாம் நல்ல படியாக நடந்தால் சரி என்று நினைத்தவன்….குளித்து முடித்து அலுவலகம் செல்ல தயாராக..அவனின் முன் வந்தவள்…”நானும் ஆபீஸ்க்கு வரவா…?” என்றாள்.

அவளது ஆசை புரிந்தாலும் இப்பொழுது இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என்பது அவனுக்கு தெளிவாய் புரிந்தது.”இல்லை நிலா…    இனி ஆபீஸ்க்கு வர வேண்டாம்…உன்னோட இடத்துக்கு வேற டிசைனர் வந்துடுவாங்க…” என்றபடி சென்றுவிட்டான்.

அவனின் பதில் அவளுக்கு எரிச்சலைத் தந்தது…”ஏன் என்னைக் கூட்டிட்டு போனா என்ன குறைஞ்சா போயிடுவான்….என்ன இருந்தாலும் இவன் திமிர் மட்டும் குறையாது…வேற ஆள் வரப் போறாங்களாம் வேற ஆள்…” என்று மென்று துப்பியவள் கடுப்புடன் கீழே சென்றாள்.

நிலா செல்வதற்குள் அவன் வேக வேகமாய் சாப்பிட்டு விட்டு சென்றிருந்தான்.அங்கும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.”இப்படி           இருந்தா இவனை எப்ப நான் புரிஞ்சுகிட்டு…அதுக்கப்பறம் லவ் பண்ணி…. நினைக்கிறப்பவே கண்ணைக் கட்டுதே,….கொஞ்சம் சிரமம் தானோ…!” என்று மனதிற்கு எண்ணினாள் நிலா.

அத்தான் போய் அரைமணி நேரம் ஆகிவிட்டது…இன்னமும் ஏன் அவர் போன பாதையையே வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க…? அத்தானைப் பிரிந்த ஏக்கமா… வாட்டமா..? என்றபடி வந்தாள் ரம்யா.

நான் உன்மேல கொலைவெறில இருக்கேன் ரம்ஸ்…!ஒழுங்கா ஓடிடு….. இல்லை…” என்று மிரட்டினாள் நிலா.

உனக்கு எதுக்குடி இப்ப இவ்வளவு கோபம்…உங்க பூஜையில குறுக்க வந்துட்டேன்னா…?அதான் அத்தான் சொல்லிட்டாரே பூஜையே நடக்கலைன்னு….அப்பறமும் ஏன் கோவமா இருக்க…?” என்று புரியாததைப் போல ரம்யா பேசி வைக்க…..

எல்லாம் இந்த கருவாயனால வந்தது…..நீயெல்லாம் இந்த அளவுக்கு பேசுற மாதிரி ஆயிடுச்சு…!”என்றாள் நிலா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும் வாடி… என்றபடி அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

ஏய் எருமை…! கைய விடுடி…நானே வரேன்….என்று கடுப்புடன் சென்றாள் ரம்யா.தனது அறைக்குள் கூட்டி சென்று அவளை அமர வைத்தவள்…”தான் வினோத்தும்,சூர்யாவும் ஒன்றாய் இருந்த போட்டோவை பார்த்தது முதல்…. முதல் நாள் இரவு சூர்யா சொன்ன விளக்கம் வரை அனைத்தையும் சொல்லி முடித்தாள் நிலா.”

முதலில் உன்னிப்பாய் கேட்ட ரம்யா…போகப் போக எரிச்சலடைந்தாள்… “உனக்கு அறிவிருக்காடி….நீ எப்ப இருந்து நிலா இப்படி மாறின…ஒருத்தர் முகத்தை வைத்து கூடவா உன்னால் எடை போட முடியாது.சூர்யா அத்தானை உன்னால் எப்படி தப்பா நினைக்க முடிந்தது….” என்று ரம்யா கத்த துவங்கினாள்.

நான் என்ன பன்றது….என்னால் அந்த போட்டோவைப் பார்த்த உடன் நல்ல மாதிரி யோசிக்கவே தோணலை….அதாண்டி….!”என்றாள் நிலா.

நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத நிலா….நீ தேவையில்லாம யோசிக்கிறன்னு எனக்குத் தோணுது…அவர் உன்னப் பார்க்குற பார்வையில காதல் அப்பட்டமா தெரியுது…ஆனா நீ எப்படி இவ்வளவு முட்டாளா இருக்கேன்னு தான் எனக்கு தெரியலை.நம்பக் கூடாத சமயத்துல நாம அந்த வினோத்தை நம்பினோம்.அவன் ஒருத்தனை உதாரணமா வச்சுகிட்டு எல்லாரையும் தப்பா நினைக்க முடிமா…? சொல்லு” என்றாள் ரம்யா.

“புரியுது ரம்யா…நான் தேவையில்லாம குழம்பி…சூர்யாவையும் கஷ்ட்டப் படுத்தி…பாவம் ரொம்ப கஷ்ட்டமா இருந்திருக்கும் அவனுக்கு…” என்று நிலா சொல்ல…

“ஹேய் நிறுத்து..நிறுத்து…!இன்னமும் என்ன அவன் இவன்னு சொல்லிட்டு இருக்க….ஒழுங்கா மரியாதையா அவர் இவர்ன்னு பேசு….” என்று மிரட்டினாள் ரம்யா.

பார்ப்போம்…பார்ப்போம் என்ற நிலா “இப்ப தான் நான் கொஞ்சம் தெளிந்திருக்கேன் ரம்ஸ்….அதே சமயம் சடனா எப்படி சூர்யா கூட வாழ முடியும்….அந்த ருத்ரம் பிரச்சனையே பெரும் பிரச்சனையா இருக்கும் போல….அதை எல்லாம் எப்படி சமாளிக்கிறது நினச்சாலே….என்னடா வாழ்க்கைன்னு தோணுது…தப்பு செய்தவன் திண்ணக்கமா இருக்க…நாம இங்க நிம்மதி இல்லாம தவிக்க வேண்டியதா இருக்கு….” என்று நிலா புலம்ப..

“இதோ பார் நிலா …அதை எல்லாம் சூர்யா பார்த்துப்பார்…நீ கொஞ்சம் கொஞ்சமா உன் மனசை தெளியவை….அவரைப் புரிஞ்சுகிட்டு வாழற வழியப் பார்…இல்லை நான் இப்படித்தான் இருப்பேன்….நானும் குழம்பி…எல்லாரையும் குழப்பி…உள்ள நிம்மதியையும் கெடுத்துப்பேன் அப்படின்னு நீ நினைச்சா…. அதுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது….

இது உன் வாழ்க்கை …உன் கைல தான் இருக்கு எல்லாமே…! கண்டிப்பா உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்…” என்றபடி சென்றாள் ரம்யா.

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த சூர்யாவை….ராமின் குரல் தடுத்தது.அவனைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்துசென்ற  சூர்யா..”போன காரியம் என்னாச்சு ராம்…?” என்றான் ஆர்வமாய்.

இரு சூர்யா…..பொறுமையா இரு…நாம நினைச்ச அளவுக்கு இது ஈஸியா முடியுற மாதிரி தெரியலை.நிலாவுக்கும் வினோத்துக்கும் நிச்சயதார்த்தம் வரைக்கும் நடந்தது உண்மை…ஆனா அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு தெரியலை…ஒரு நாள் ருத்ர மூர்த்தி வீட்ல மிஸ்டர் உதய குமார் இறந்து கிடந்திருக்கார்.

அந்த வினோத்தும் உயிருக்கு மோசமான நிலமையில் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்கான்.போலீஸும்.., இரண்டு பேருக்கும் நடந்த தகறாருல ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குத்திகிட்டாங்கன்னு சொல்லி கேஸை குளோஸ் பண்ணியிருக்காங்க….வினோத் கோமா ஸ்டேஜ்க்கு போனதால…அந்த ருத்ரம் இதை ஈஸியா செய்து முடிச்சிருக்கார்.

அங்க என்ன நடந்தது…அந்த பிரச்சனை எதனால் வந்தது…? எப்படி உதய குமார் சார் இறந்தார் இதெல்லாம் நிலாவே சொன்னாதான் உண்டு.அவங்க சொன்னா மட்டும் தான் நாம மேற்கொண்டு எதை செய்றதுனாலும் செய்ய முடியும் என்றான் ராம்.

சூர்யா..”ரொம்ப தேங்க்ஸ் ராம்…எனக்கான இவ்வளவு  தூரம் நீ உதவி செய்ததற்கு என்றவன்..,அன்னைக்கே பிரபு அங்கிள் என் கிட்ட சொல்ல வந்தார்…ஆனா நான் தான் தடுத்துட்டேன்….இதையெல்லாம் நிலாவே சொல்லனும்ன்னு எதிர்பார்த்தேன்…ஆனா நிலாவைப் பார்த்தா சாமானியமா சொல்லுவான்னு எனக்குத் தோணலை…” என்றான் யோசனையுடன்.

அப்பறம் சூர்யா….”அந்த வினோத்துக்கு எதிரான ஆதாரம் கூட நிலாகிட்ட ஏதோ இருக்குன்னு நம்பிக்கையான ஒருத்தர்கிட்ட இருந்து தகவல் வந்தது…..நிலா சென்னைக்கு வந்தும் சும்மா இல்லாம… டெல்லியில் இருக்கிற தன்னோட நண்பர்கள் மூலமா அவனுக்கு எதிரான நிறைய ஆதாரங்களை சேகரிச்சு இருப்பதாகவும் தகவல் வந்தது….அதனால் தான் தான் ருத்ரம் ரொம்ப தீவிரமா இருக்குறார்ன்னு சொல்றாங்க…ஆனா அது என்ன ஆதாரம்….எந்த கேஸ் சம்பந்தப்பட்டது…இது எதுவுமே புரியலை…” என்றான் ராம்.

“பிரச்சனை கொஞ்சம் பெரிசா தான் தெரியுது ராம்…நிலா சொல்லுவா…. நாம கேட்கலாம்ன்னு இருந்தா…அந்த ருத்ரம் முந்திக்குவான்…அதுக்கு முன்னாடி அது என்ன கேஸ்….வினோத் அதுல எப்படி சம்பந்தப்பட்டான்…. நிலா வச்சிருக்க ஆதாரம் என்னன்னு கண்டுபிடிக்கனும்….அப்பதான் இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும்…” என்ற சூர்யா…”ரொம்ப தேங்க்ஸ் ராம்…இனி நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கறேன்…” என்றான்.

“எதை செய்தாலும் கவனமா செய்யனும் சூர்யா…!ஏன்னா ருத்ரம் எதற்கும் துணிந்தவன்…அப்ப நான் கிளம்பறேன்…எதுன்னாலும் உடனே போன் பண்ணு….” என்றபடி கிளம்பி சென்றான்.

அப்பொழுது தனது செல்லில் மெசேஜ் ரிங் டோன் ஒலிக்க…அதை ஓப்பன் செய்தான் சூர்யா…நிலா தான் அனுப்பியிருந்தாள்…”சாரி சூர்யா…..நான் உங்களை சந்தேகப்பட்டு அப்படி கேட்டது தப்புதான்….நடந்த சம்பவங்கள் என்னை அப்படி யோசிக்க வைத்து விட்டது…..நான் இதுக்கு முன்னாடி நடந்ததை எல்லாம் மறந்துட்டேன்….நீங்களும் மறந்திடுங்க….. ம்ம்ம்…இல்லை இல்லை மறக்கனும்…முதலில் ஒரு தோழியா இருந்து உங்களை புரிந்து கொள்ள முயற்சி பன்றேன்….அப்பறம் சாரி… சாரி…சாரி.புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..” என்று இரண்டு ஸ்மைலியுடன் அனுப்பியிருந்தாள்.

அதைப் படித்த சூர்யாவின் உதடுகளில் புன்னைகை தோன்ற…. மென்மையான புன்னைகையுடன் அந்த மெசேஜையே திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருந்தான்.நிலாவே நேரில் வந்து சொன்னது மாதிரியான ஒரு உணர்வு அவனுள்.

ஆனால் அந்தப் புறம்….. நிலாவின் செல்லில் இருந்து மெசேஜை அனுப்பிய ரம்யாவோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.வேக வேகமா தான் அனுப்பியதை செண்ட் ஐட்டமில் இருந்து அழித்தவள்…மீண்டும் சிரிக்க துவங்க….”இப்ப எதுக்கு லூசு மாதிரி சிரிக்கிற ரம்யா..?” என்றாள் தீபா.

ஹா..ஹா..ஹா…அதுவா…இப்பதான் சின்னதா ஒரு திரிய கொளுத்திப் போட்டுருக்கேன்…ம்ம்ம் பார்க்கலாம் அது எந்த அளவுக்கு பத்திக்கும்ன்னு…” என்றாள் ரம்யா.

தீபா…. “ஐயோ..!புரியும் படியா சொல்லுங்க…”

அதுவா…என்று இழுத்த ரம்யா….”பஞ்சும்….நெருப்பும் பக்கத்துல வரதுக்கான வேலைய செய்துட்டேன்…இனி எப்ப பத்திக்கும்ன்னு தெரியாது….வெய்ட் பண்ணி பாரு…நடக்கப் போறதை….” என்றாள் சிரித்தபடி.

ரம்யா நினைத்தது நடக்குமா…?

 

முகவரி 32:

 

ரம்யா சொன்னது எதுவும் புரியாமல் தீபா முழித்துக் கொண்டிருந்தாள்…. “என்ன அது பஞ்சு…நெருப்பு…நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியலை…” என்றாள் புரியாத பாவனையுடன்.

ஹையோ கடவுளே..!”என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் ரம்யா.”என்ன ரம்யா நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா..?” என்றாள் தீபா.

இல்லை வீட்ல ஒரு டியூப்லைட் இருந்தாலே சமாளிக்க முடியாது…ஆனா இங்க எல்லாரும் டியூப்லைட்டா இருந்தா சின்னப் பிள்ளை நானும் என்ன தான் பன்றது…” என்று ரம்யா சொல்ல…தீபாவிற்கு சிரிப்பு வந்தது.

சரி சரி …தீபா வீட்ல கோலி குண்டு..,புளிய முத்து ஏதாவது இருக்கா…? என்றாள் ரம்யா யோசனையுடன்.

எதுக்கு…? என்று தீபா அரண்ட பார்வை பார்க்கவும்…”ரொம்ப பயப்படாத…இங்க வா சொல்றேன்…” என்று அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.ரம்யா சொன்னதைக் கேட்ட தீபாவிற்கு “இது சரியாய் வருமா..?” என்று தோன்றியது.ரொம்ப பழைய ஐடியாவா இருக்கே…? என்றாள் தீபா.

ம்ம்ம் அதுக்காக நான் என்ன இண்டெர்நேஷனல் ஐடியாவா தர முடியும்…! எல்லாம் சரியா வரும்….நீ நான் சொன்னதை மட்டும் செய் சரியா..?” என்றாள் ரம்யா. “சரி” என்று தலையை ஆட்டி வைத்தாள் தீபா. ரம்யா சொன்ன ஏற்பாடுகளை கவனிக்க சென்றாள். “நிலா ரொம்ப சாரிடி…” என்று மனதிற்குள் சொன்ன ரம்யா……. தருணத்தை எதிர்நோக்கியிருந்தாள்.

சூர்யா மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.வீட்டிற்குள் வந்த உடன் அவன் கண்கள் நிலாவைத் தேடி நாலாபுறமும் அலைபாய….அதை மறைந்திருந்து பார்த்த ரம்யாவின் மனதிற்கு அப்பொழுதுதான் நிம்மதியாய் இருந்தது.தன்னுடைய ப்ளான் சரியாய் வேலை செய்ததில் உண்டான சந்தோஷம் தான் அது.

அவன் நிலாவைத் தேடி மேலே செல்லும் முன்…ரம்யா முந்திக் கொண்டாள்…”நிலா…இங்க கொஞ்சம் வாயேன்…” என்று கூப்பிட….சூர்யாவும் சரி கீழே வருவாள் என்று சோபாவில் அமர்ந்து விட்டான்.

ஏண்டி எருமை இப்படிக் கத்துற….வீட்டுக்குள்ள தான இருக்கோம்..அப்பறம் ஏன் டைனோசர் கத்துற மாதிரி கத்துற…” என்று ரம்யாவை திட்டியபடி இறங்கி வந்தாள் நிலா.

நிலா இறங்கி வரும் போது அவளை வைத்த கண் வாங்காமல் சூர்யா பார்த்துக் கொண்டிருக்க…”ம்ம்க்க்ம்ம்..” என்ற ரம்யாவின் குரலில் நடப்பிற்கு வந்தான்.

அங்கு சூர்யாவைப் பார்த்த நிலா…வாங்க சூர்யா…! இப்பதான் வந்திங்களா..? என்றபடி படியிலிருந்து கீழே காலை வைக்க…அதன் அடியில் இருந்த புளிய முத்துக்கள் அவளை நிலை தடுமாற வைத்தது.”ஐயோ நிலா பாத்து…” என்று ரம்யா பதற…”நிலாஆ…” என்ற ஒரு கூவலில் சட்டென்று எழுந்து சென்று அவளைத் தாங்கிப் பிடித்தான் சூர்யா.

சூர்யாவின் கைகள் நிலாவின் இடையைத் தாங்கிப் பிடித்திருக்க…. தன்னவனின் கை பட்ட உடன் நிலாவின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.அவனது கைப்பிடியில் நின்ற அந்த நிமிடங்கள் அவளை வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல….ஏற்கனவே நிலாவைக் காணும் ஆவலில் வந்த சூர்யாவிற்கு இது பெரிய விருந்தாக அமைந்தது.அவளுக்கு விலகவும் தோன்றவில்லை…அவனுக்கு விலக்கவும் தோன்றவில்லை. நடுஹாலில் இருவரும் மெய் மறந்த நிலையில் இருந்தனர்.

அவர்கள் தங்களை மறந்திருந்த அந்த வேளையைப் பயன்படுத்தி….தீபா அந்த புறமாக அங்கிருந்த புளிய முத்துக்களை வேகமாக அகற்றினாள். ரம்யாவிடம் “டன்” என்பதைப் போல கையைக் காட்ட…ரம்யாவும் பதிலுக்கு கையை உணர்த்தினாள்.

முதலில் நடப்பிற்கு வந்த சூர்யா….”நிலாவை அப்படியே அணைத்துக் கொள்” என்று அவன் மனம் சொன்னது அவனுக்கு பிடித்திருந்தாலும்… அப்பொழுது இருந்த சூழ்நிலையை நினைவில் கொண்டு….”பார்த்து வரக் கூடாது…அடி பட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்…” என்றபடி நிலாவையும் நிஜ உலகிற்கு அழைத்து வந்தான்.

அப்பொழுது தான் நிஜம் உரைத்த நிலா…சட்டென்று விலகி நின்றாள். சூர்யாவைப் பார்ப்பதற்கு அவளுள் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. “இல்ல பார்த்து தான் வந்தேன்….அங்க ஏதோ இருந்தது…அதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்..” என்றாள் திக்கித் திணறி.

அங்க வெறும் மேட் தான் இருக்கு….நீ ஆடிகிட்டே வந்தா அப்பறம் விழாம என்ன செய்வ…? என்றாள் ரம்யா முந்தி கொண்டு.

குழப்பத்துடன் நிலா திரும்பிப் பார்க்க…அங்கு ரம்யா சொன்னது போல் எதுவும் இல்லை…”இல்லையே எதுவோ காலை இடறிவிட்டதே..” என்று நிலா யோசிக்க,…..”இவளை யோசிக்க விட்டோம்…நாம மட்டினோம்..” என்று நினைத்த ரம்யா….”உனக்கு பிரமையா இருக்கும் நிலா….அதை விடு…அதான் அத்தான் பிடுச்சுட்டாரே…” என்றாள் சமாதானமாய்.

அத்தான் பிடுச்சுட்டாரே..” என்ற ரம்யாவின் வார்த்தை நிலாவிற்கு மேலும் குறுகுறுப்பைத் தர…அவளையும் மீறி அவளது கண்ணம் செவ்வானமாய் சிவந்தது.சூர்யாவைப் பார்க்கவும் முடியாமல்…திரும்பி செல்லவும் முடியாமல் அவஸ்தையுடன் நின்றிருந்தாள்.

அவளது பதட்டத்தையும்,தவிப்பையும் அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான் சூர்யா…”இவளுக்கு இப்படி வெட்கப் படக் கூட தெரியுமா…?” என்று வியந்தவன்…சிவந்த அவளின் முகத்தை பார்த்து தன்னுள் எழுந்த வேட்கைகளை எல்லாம் கஷ்ட்டப் பட்டு அடக்கிக் கொண்டான்.ஆனால் நிலா நிமிரவே இல்லை.நிமிர்ந்து பார்த்திருந்தால் ஒருவேளை சூர்யாவின் ஆசையும் காதலும் புரிந்திருக்குமோ என்னவோ…?

என்ன நிலா…என்னாச்சு..ஏன் ஏதோ மாதிரி இருக்க…?” என்றபடி வந்தார் மகேஷ்வரி.அப்பொழுதுதான் நிலாவிற்கு மூச்சே விட முடிந்தது.தன்னைக் காக்க வந்த காவல் தெய்வமாய் தெரிந்தார் மகேஷ்வரி.

ஒன்னும் இல்லைம்மா…சும்மா..அது வந்து…இல்லை…நான்…கீழ…ரம்யா….” என்று உளறி கொட்ட….சூர்யாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உல்லாசமாய் அவளைப் பார்த்தவன் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

சூர்யாவின் சிரிப்பைப் பார்த்த மகேஷ்வரிக்கு புரிந்து போயிற்று… இருவருக்குள்ளும் ஏதோ நடந்திருக்கிறது  என்று….அவரும் அந்த வயதை தாண்டி வந்தவர் தானே…”போதும் சூர்யா…இப்ப எதுக்கு இந்த சிரிப்பு…போ..போய்  குளிச்சுட்டு வா…” என்றவர்…நிலாவிடம் திரும்பி..”நீயும் போம்மா..” என்றார் எதார்த்தமாய்.

ஆனால் மகேஷ்வரியின் பேச்சு சூர்யாவிற்கு மேலும் சிரிப்பை வர வைக்க…நிலாவுக்கோ..”ஐயோ..இந்த அத்தை காப்பாத்துவாங்கன்னு பார்த்தா….இப்படி சதி பன்னிட்டாங்களே..!” என்று தோன்றியது.சூர்யா விசில் அடித்தபடி மேலே செல்ல….நிலா மட்டும் தயங்கி கீழேயே நின்று கொண்டாள்.

 

மகேஷ்வரியும் சிரித்த படி செல்ல…இது தான் சமயம் என்று நினைத்த ரம்யா…”என்னடி ஓவர் ரொமான்ஸா இருக்கு…அவர் பிடிக்கிறது என்ன…நீ அப்படியே மெய் மறந்து நிற்குறது என்ன…?ம்ம்ம்ம் உன் கண்ணம் சிவந்த சிவப்பு என்ன? என்ன நடக்குது இங்க…?” என்று பொய்யாய் மிரட்டினாள் ரம்யா.

ஐயோ…இதை வச்சே இவ ஒரு வருஷத்துக்கு ஓட்டுவாளே என்று மனதில் நினைத்த நிலா…”அதெல்லாம் ஒன்னுமில்லடி…நான் தெரியாம கால் தவறி தான் விழப் போனேன்…வேற எதுவும் இல்லை…” என்ற படி அவசர அவசரமாக சென்று விட்டாள் நிலா.

நிலா சென்றவுடன்….பெருமூச்சு விட்டபடி வெளியே வந்தாள் தீபா…..”எப்படி   என் ஐடியா…?” என்று ரம்யா பெருமையாய் கேட்க…..அவளை முறைத்த தீபா….”மவளே மாட்டியிருந்தா தெரியும்……நிலா அண்ணி உன்னை பின்னி பெடலெடுத்திருப்பாங்க….” என்றவள்….சிறிது யோசனைக்கு பிறகு “எப்படியோ ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரி தான்…” என்றாள்.

ரம்யா..”தீபா…சேவை செய்யனும்ன்னு வந்துட்டா…சில அடிகள்….கடிகள் எல்லாம் விழத்தான் செய்யும்…ஆனா அதை எல்லாம் பெருசுபடுத்தாம நாம நம்ம சேவைல கண்ணும் கருத்துமா இருக்கனும் சரியா…?” என்றாள் சீரியசான குரலில்.

அவளை மேலும் கீழும் பார்த்த தீபா…”ஐயோ…ஐயோ…” என்று தலையிலடித்துக் கொண்டு செல்ல….ரம்யாவின் சிரிப்பு அந்த வீட்டை நிறைத்தது.

ஆனால் நிலாவிற்கு குழப்பமாய் இருந்தது.எப்படி ..நான் எப்படி அவனின் தொடுகையில் மயங்கி நின்றேன்…அப்போ சூர்யாவை எனக்கு பிடித்திருக்கிறதா….?இல்லை அப்படியெல்லாம் இல்லை.இன்னும் அவனைப் பற்றி எனக்கு முழுமையாக எதுவும் தெரியாது.புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த ஒரு நாளில் எப்படி புரிந்து கொள்ள முடியும்…?

இல்லை எனக்கு அவன் மீது விருப்பம் இன்னும் வரவில்லை…” என்று ஒரு மனம் சொல்ல…”அவன் மீது வெறுப்பும் வரவில்லையே…” என்று மற்றொரு மனம் சொல்லியது.அவனின் கையணைப்பில் நின்ற அந்த சில நிமிடங்கள் அவளுக்கு ஏக்கத்தையும்….வலியையும் ஒரு சேர கொடுத்தது.தான் அவனுக்கு ஒரு நல்ல மனைவியாய் நடந்து கொள்ள முடியுமா..?என்பது குறித்து அவளது மனதில் பெருத்த சந்தேகம் எழும்பியது.

இத்தனை நாள் யோசிக்காமல் இருந்தவள் இன்று ஒவ்வொன்றாய் யோசித்துப் பார்த்தாள்….முதன் முதலில் சாலையில் அவன் அவளை முறைத்தது….பிறகு கல்லடியில் இருந்து தன்னைக் காப்பாற்றியது,…. குடித்துவிட்டு தன்னை மறந்த நிலையிலும் கூட….தன்னிடம் கண்ணியமாய் நடந்து கொண்டது….இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் சூர்யாவின் முகம் வந்து போனது.

சந்தித்த பொழுதுகள் அனைத்தும் சண்டையுடன் முடிந்திருந்தாலும் அதில் தனக்கும் சரி சமமான பங்கு  இருந்ததை நிலாவின் மனம் ஏற்றுக் கொண்டது.அவனது ஆபீஸில் அனைவரும் அவனது புகழ் பாட…இவள் மட்டும் தான் அவனை திட்டித் தீர்ப்பாள்.அனைவருக்கும் நல்லவனாய் தெரிந்த சூர்யா… எனக்கு மட்டும் கெட்டவனாய் தெரிந்தது ஏன்…?

அவன் நல்லவனாகத்தான் இருக்கிறான்…நாங்கள் சந்தித்த தருணங்கள் அவனைக் கெட்டவனாக காட்டியிருக்கலாம்…” என்று தனக்குத் தானே   சமாதனம் சொல்லிக் கொண்டாள் நிலா.சூர்யாவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தவள்….சத்தம் கேட்டு திரும்ப…அங்கு சூர்யா எதையோ உருட்டிக் கொண்டிருந்தான்.

இத்தனை முறை கோபத்தில் பார்த்த போது தெரியாத அவன் குணமும்… அருமையும் இப்பொழுது மனம் முழுதும் அமைதியுடன் பார்க்கும் போது தெரிந்தது.”ம்ம் பரவாயில்லை கொஞ்சம் கருவாயனா இருந்தாலும் களையாத்தான் இருக்கான்…” என்று நினைத்துக் கொண்டவள்…ஓரக் கண்ணால் அவன் அறியாதவாறு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிலா தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த சூர்யா அதை கண்டு கொள்ளாதவாறு தன் போக்கில் எதையோ தேடிக் கொண்டிருந்தான். நிலா தன்னைப் புரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை என்று  நினைத்தவனது மனதில் சந்தோஷ சாரல் அடித்தது.

தனக்கு கிடைக்கவே மாட்டாள் என்று எண்ணியவள் இன்று தனக்கு மனைவியாய்….தன் வாழ்வின் சரி பாதியாய் தன்னிடமே வந்து சேர்ந்து விட்டாள் என்ற எண்ணமே சூர்யாவிற்கு போதுமானதாக இருந்தது. நிதானமாய்….தீர்க்கமாய் யோசிக்கும் வயதில் வரும் காதல் எப்பொழுதும் மாறுவதும் இல்லை….தன்னை மாற்றிக் கொள்வதும் இல்லை. உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்காமல் மனங்களுக்கு மதிப்புக் கொடுக்கும் காதல்களும் இருக்கத்தான் செய்கிறது. அதை தன் விஷயத்தில் புரிந்து கொண்டான் சூர்யா.

அதே சமயம் அந்த ருத்ரம் பிரச்சனையும் நியாபகத்திற்கு வர….சூர்யாவிற்கு அப்பொழுது தான் நினைவு வந்தது.”அங்க அப்படி என்ன நடந்திருக்கும்…. நிலா ஆதாரம் எல்லாம் திரட்டி வச்சிருக்கான்னு ராம் சொல்றான்.அது உண்மைனா நிலா இத்தனை நாள் ஏன் சும்மா இருக்கனும்…நடந்த பிரச்சனையை அவளாவே என்கிட்ட சொல்லனும்….என் மேல நம்பிக்கை வச்சு சொல்லுவாளா…” என்று யோசித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

என்ன செய்யலாம்..?என்று சூர்யா யோசித்துக் கொண்டிருக்கும் போதே….அவனின் அருகில் வந்த நிலா தயங்கி நின்றாள்.

அவளைப் பார்த்த சூர்யா…”ம்ம்ம் சும்மா கும்முன்னு இருக்கா….” என்று ஏக்கமாய் பார்த்தவன்…”என்ன மேடம்….அமைதியா இருக்கிங்க…? இது சரிபட்டு வராதே….இப்படி இருந்தா நீ நிலா தானான்னு எல்லாருக்கும் சந்தேகம் வந்துடும்….!” என்று சகஜமாய் பேச முற்பட்டான்.

அவனின் பேச்சில் பல்லைக் கடித்த நிலா…”நாம சும்மா இருந்தாலும்..இவன் இருக்க விட மாட்டான் போல தெரியுதே…” என்று நினைத்தவள்… “அப்படியெல்லாம் இல்லை சூர்யா….வீட்டுக்குள்ளயே இருக்க என்னமோ மாதிரி இருக்கு….என்னை வெளிய கூட்டிட்டு போங்க…” என்றாள் சுவற்றைப் பார்த்தபடி.

முதன் முதலாக நிலாவே வந்து அவனிடம் கேட்டிருக்கிறாள்…..சூர்யாவின் மனம் இறக்கையில்லாமல் பறந்தது…”ம்ம்ம் போகலாமே…! ஒரு பத்து நிமிஷம்டா….”என்றவன் கையிலிருந்த பைல்களை பத்திரப் படுத்திவிட்டு கிளம்பினான்.

சூர்யா இது தான் நல்ல சமயம்…எப்படியாவது அவ வாயிலிருந்து உண்மைய வர வச்சிடனும்…” என்று தனக்குத் தானே சொன்னபடி கார் சாவியை எடுத்துக் கொண்டு…நிலாவையும் அழைத்துக் கொண்டு செல்ல முற்பட்டவன்…அவளது உடையைப் பார்த்து….வேகமாய் சென்று கபோர்டைத் திறந்தவன்….அதிலிருந்த ஒரு செட் டிரஸை எடுத்து நிலாவின் கையில் கொடுத்தவன்…”இதைப் போட்டுக்கோ நிலா ப்ளீஸ்…” என்றவன் “நான் கீழ வெய்ட் பன்றேன் வா…” என்றபடி சென்றான்.

ஒரு நிமிடம் யோசித்தவள்…பிறகு அதை அணிந்துகொண்டு சென்றாள். ஆனால் மனதில் ஏதோ ஒரு இனம் பிரித்து காண முடியாத ஒரு உணர்வு அவளை ஆட்டிப் படைத்தது.கருப்பு ஜீனும்…வெள்ளை டாப்புமாய் இறங்கியவளைப் பார்த்த ஜக்கு முகம் சுழித்தார்.

குடும்ப பொண்ணு துணி போடுற மாதிரியா போட்டு இருக்க…ஏதோ கரகாட்டத்துக்கு போற மாதிரி போட்டு இருக்க…ம்ம்ம்…கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கம் வேண்டாம்…” என்று தன் பல்லவியை ஆரம்பித்தார்.

நிலா கோபத்தை அடக்க..உதட்டைக் கடித்துக் கொண்டு நிற்க….”என் பொண்டாட்டி என்ன டிரஸ் போடனும்ன்னு நான் தான் முடிவு பன்னனும்….நீங்க இல்லை…” என்று அவளை கைப் பிடித்து சென்றவன்… “இருந்தாலும் பாட்டி உங்க அடக்க ஒடுக்கம் எல்லாம் இவளுக்கு வராது…” என்று அந்த அடக்க ஒடுக்கத்தில் அழுத்தம் கொடுத்து அவன் சொன்ன விதத்தில் நிலாவிற்கு சிரிப்பு வர….ஜக்குவை பார்த்தபடியே சூர்யாவின் பின்னால் சென்றாள்.

டெல்லி:

மிகப் பிரபலமான அந்த மருத்துவ மனையில்….வினோத் அட்மிட் ஆகியிருந்த வார்டில்…குறுக்கும் நெடுக்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்தார் ருத்ரம்.மனதில் வேண்டாத சாமியெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தார்.

முதல் நாள் கோமாவில் இருந்த வினோத் அலறிய அலறல் அந்த  வீட்டையே ரெண்டாக்க…என்னவோ ஏதோ என்று அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.உள்ளே சென்ற மருத்துவர்கள் இன்னும் வெளியே வராத நிலையில் தான் ருத்ரம் இவ்வாறு நடந்து கொண்டிருந்தார்.

நம்ம வினோத் சார்க்கு ஒன்னும் ஆகாது சார்…கவலைப் படாதிங்க…” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் ஜான்.அவன் சொல்லி முடிக்கவும் மருத்துவர்கள் வெளியே வரவும் சரியாக இருந்தது.

டாக்டர் என் பையனுக்கு என்னாச்சு…?”என்று வழக்கமாய் கேட்கும் கேள்வியைக் கேட்டு வைத்தார் ருத்ரம்.

பயப்படாதிங்க மிஸ்டர் ருத்ரம்…எல்லாம் நல்ல விஷயம் தான்.உங்க பையனுக்கு நினைவு திரும்பி விட்டது.அதோட தாக்கம் தான் அவர் கத்திய அந்த கத்தல்.இப்போ அவருக்கு கடந்த காலங்கள் எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது…. அவர் பூர்ணமா குணமடைந்து விட்டார்.நாளைக்கு அவரை டிஸ்ஜார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் நீங்க…” என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டு சென்றனர்.

டாக்டர்ஸ் சொன்ன செய்தியைக் கேட்டு ருத்ரம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“ஹா…ஹா..என் பையனுக்கு குணமாகிடுச்சு…அவன் எழுந்து நடமாடுவான். ஜான், என் பையன் எனக்கு கிடச்சுட்டான்…” என்று வெற்றி சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்.

வேகமாய் வினோத்தைப் பார்க்க சென்றார் ருத்ரம்.இத்தனை நாள் கோமாவில் இருந்ததால் தேகம் எல்லாம் மெலிந்து அடையாளமே தெரியாதவாறு இருந்தான் வினோத்.மெல்ல மகனின் அருகில் சென்று அவனின் தலையை வருட….சில நிமிடங்களுக்குப் பிறகு கண் திறந்தான் வினோத்.

கண்ணைத் திறந்த வினோத்திற்கு…பழைய நினைவுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் நியாபம் வந்தது.இறுதியாய் நடந்த சம்பவங்களில் நினைவுகள் வந்து நிற்க….வேகமாய் அந்த அறையை சுற்றி பார்வையை ஓட்டினான்.அங்கிருந்த காலாண்டர்… இரண்டு ஆண்டுகள் கடந்திருந்த…. அவனின் நிலையை அவனுக்கு எடுத்து சொல்லியது.

மீண்டும் மெதுவாக கண்ணை மூடியவனின் கண்களில்….நிலாவின் சிரித்த முகம் தெரிய….அவர்களின் நிச்சயதார்த்தத்தில் புடவையில் இருந்த அவளின் புகைப்படம் அவனின் நினைவில் வந்தது.சட்டென்று கண்ணைத் திறந்தான் வினோத்.

ருத்ரம்..”வினோத்..வினோத் என்று உருக…”அவரைப் பார்த்த வினோத்…”நிலா எங்கப்பா….? அந்த உதய குமாருக்கு என்ன ஆச்சு…நிலா எங்க…? எங்க அவ..? எனக்கு அவ வேணும்….” என்று காட்டுத்தனமாய் கத்தத் துவங்கியவன் மீண்டும் மயக்கத்திற்கு சென்றான்.

இப்படி நினைவு திரும்பியவுடன்  வினோத்….நிலாவைக் கேட்பான் என்று ருத்ரம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

மங்கிய அந்த மாலை வேளையில் கடல் காற்று குளுமையாய் வீச….கடல் அலைகள் கரையைத் தொட்டு தொட்டு ….முழுவதும் தொடமுடியாமல்  தோற்றுப் போய் மீண்டும் கடலிடமே தஞ்சம் அடைந்து கொண்டிருந்தன.நிலா அமைதியாய் அந்த நிமிடங்களை ரசித்துக் கொண்டிருக்க….சூர்யா தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

சொல்லு நிலா…!ஏதோ சொல்லனும்ன்னு நினைக்கிற…ஆனா தயங்குற…எதா இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாம என் கிட்ட சொல்லலாம்….”என்றான் சூர்யா.

நிலா அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்…”எப்படி கண்டுபிடித்தான்…?” என்று மனதில் நினைக்க….”உன் தவிப்பு தான் உன் கண்களில் தெரியுதே…!” என்றான் பதிலாய்.

ஒரு நிமிடம் வியந்தவள்….”ஆமாம் சூர்யா…பேசனும்…நிறைய பேசனும்…. அதுக்கு முன்னால் ஒன்னு சொல்லனும்.நீங்க எப்படி நினச்சுகிட்டு இருக்கிங்கன்னு தெரியலை….ஆனா இதை சொல்ல வேண்டியது என் கடமை. நான் அருளை காதலிக்கவே இல்லை.அது என்னை மீறி…ஏதோ கோபத்தில்…” என்று தயங்க…அவளது நிலை புரிந்தவனாய்…”இப்ப நான் அதைப் பத்தி கேட்கவே இல்லையே..!” என்றான் இடுங்கிய பார்வையுடன்.

நீங்க கேட்கலைன்ன அது உங்க பெருந்தன்மையா இருக்கலாம்…!ஆனா, எனக்கு மனதில் உறுத்தலிருந்துகிட்டே இருக்கும் அதான் சொன்னேன். ஏன்னா…நான் உங்களை கொஞ்சம் கொஞ்சமா புரிச்சுக்கனும்ன்னு நினைக்கிறேன்…அதுக்கு உங்க மனதிலோ இல்லை என் மனதிலோ எந்த தயக்கமும் இருக்க கூடாதுன்னு நினைத்தேன் அதான்…” என்றாள் விளக்கமாய்.

சூர்யா அவளை வியப்பாய் பார்த்தான்…”இவ்வளவு தெளிவாய் கூட இவ பேசுவாளா..?” என்ற நினைப்பு தான் அவனுடைய வியப்புக்கு காரணம்.

என்ன சொல்றதுன்னு தெரியலை சூர்யா…என்னால் ஒரு நல்ல மனைவியா நடந்துக்க முடியுமான்னு தெரியலை…,ஆனா முயற்சி பன்றேன்.அதுக்கு எனக்கு கொஞ்ச அவகாசம் தேவை.எனக்கு என்னை மாற்றிக்கவே சில நாட்கள் ஆகும் அதான்…” என்றாள் நிலா.

ஒரு நிமிடம் அழ்ந்து அவளைப் பார்த்த சூர்யா…அவளின் கைகளை மெதுவாகப் பற்றி…தன் கைகளுடன் சேர்த்து பிணைத்துக் கொண்டான்.அது உனக்கு எப்பொழுதும்..எல்லாமுமாய் நான் இருப்பேன் என்று அவளுக்கு சொல்லாமல் சொல்லியது.வார்த்தகளுக்கு இடமில்லாத அந்த மௌன மொழியை நிலா உடனடியாகப் புரிந்து கொண்டாள்.

தன்னை மறந்து கண்கலங்கியவள் அப்படியே சூர்யாவின் தோளில் சாய்ந்து கொள்ள….நிலாவிடம் கேட்க வேண்டும்  என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் மறந்து சூர்யாவும் அந்த நிமிடங்களை ரசிக்கத் துவங்கினான்.

இந்த காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க…?”என்றாள் நிலா.

மென்மையாய் சிரித்த சூர்யா..”காதல் இல்லாமல் இந்த உலகம் இயங்காது….என்றான் ஒரே வரியில். உணர்ச்சிப் பூர்வமா இல்லாம..உணர்வுப் பூர்வமா அதை உணரும்… காதலிக்கிறதை விட..காதலிக்கப் படனும்…ஆனா எனக்கு அந்த குடுப்பனை எல்லாம் இல்லாமல் போய்விட்டது…”என்றான் தன்னை மறந்த நிலையில். சொல்லவேண்டும் என்று சொல்லாமல் அவனையறியாமல் சொல்லிவிட்டான்.

சூர்யாவின் வார்த்தைகளைக் கேட்ட நிலா சட்டென்று அவனது தோளில் இருந்து தன் தலையை எடுத்துக் கொண்டாள்.அவனின் வார்த்தைகள் அவளுக்கு ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது.ஆனால் அதை அறியாத சூர்யா…அந்த ஏகாந்த நினைவில் லயித்திருந்தான்.

நாம் கிளம்பலாமா சூர்யா…? என்ற நிலாவின் வார்த்தைகளில் தன்னை மீட்டவன்…”அதுக்குள்ளயா…?” என்றான்.

இல்ல சூர்யா…எனக்கு இந்த கடல் காற்று ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன்… தலை வலிக்கிற மாதிரி இருக்கு..அதான் என்றாள் நிலா.

சரி” என்று மணலை தட்டியபடி எழுந்த சூர்யா…நிலாவிற்காக கையைக் கொடுக்க….,நிலாவோ அதைத் தவிர்த்து தானாக எழுந்து கொண்டாள். சூர்யாவிற்கும் இதில் வித்யாசமாய் எதுவும் படவில்லை.

காரிலும் அமைதியே ஆட்சி மொழியாக இருக்க….அதைக் கலைத்தது நிலாவின் செல்போன்.எரிச்சலுடன் எடுத்தவளின் முகம் படிப் படியாக மாற துவங்கியது.எதிர்புறம் பேச பேச…நிலாவின் முகம் பல பாவணைகளுக்கு உட்பட்டதை கவனித்துக் கொண்டே இருந்தான் சூர்யா.ஆனால் விஷயம் என்னவென்று புரியவில்லை.

போனை வைத்த நிலா அமைதியாய் இருக்க…”என்ன விஷயமா இருக்கும்.. யார் போன் பண்ணியிருப்பாங்க….?” என்று யோசித்தவன் நிலாவைப் பார்க்க…அவளது முகம் கல்லாய் சமைந்திருந்தது.

 

முகவரி 33:

டெல்லி:

டாக்டர் அறையில் கவலையுடன் அமர்ந்திருந்தார் ருத்ரம்.இரண்டு வருடம் கழித்து வினோத்திற்கு நினைவு திரும்பியிருந்தாலும்…அந்த சந்தோஷத்தை முழுவதும் அனுபவிக்க முடியாமல்…வினோத் மறுபடியும் மயங்கியது அவருக்கு கவலையை அளித்தது.

என்ன டாக்டர் சொல்றிங்க..? என் பையனுக்கு நினைவு வந்துவிட்டதுன்னு சொன்னிங்க…?ஆனா அவன் மறுபடியும் மயங்கிட்டான். இதுக்கு என்ன தான் வழி..? என்றார் முடிவாய்.

மிஸ்டர் ருத்ரம் அவர் நினைவு திரும்பியதும் நிலான்ற பெண்ணைத்தான் தேடியிருக்கார்.அப்படின்னா என்ன அர்த்தம்..? அவங்க அவர் மனசுல ஆழமா பதிஞ்சிருக்காங்க…? அதோட தாக்கம் தான் நிலாவை கேட்டிருக்கிறார் என்ற டாக்டர்..”ஆமா நிலான்றது யாரு..? அவரோட மனைவியா..?” என்றார்.

இல்லை டாக்டர்…!அவனுக்கு நிச்சயம் பண்ணியிருந்த பொண்ணு.ஆனா.., கல்யாணம் நடக்கலை.அதுக்கு முன்னாடியே இவன் இப்படி ஆகிட்டதால ஒன்னும் பண்ண முடியலை” என்றார் ருத்ரம்.

டாக்டர்..”எங்களால் முடிந்த அளவுக்கு நாங்க செய்ய வேண்டியதை செய்துட்டோம் மிஸ்டர் ருத்ரம்…இனி எல்லாமே உங்க கைல தான் இருக்கு.அவர் விருப்பம் எதுவோ அதை நீங்க சீக்கிரம் நிறைவேத்தி வச்சுடுங்க…இப்ப அவருக்கு நினைவு திரும்பியிருந்தாலும் மீண்டும் எப்ப அது போகுன்னு சொல்ல முடியாது.ஆனா வினோத் இனி நார்மலா இருந்தாலும் எந்த ஒரு விஷயத்தையும் அளவுக்கு அதிகமா யோசிக்கவோ…இல்லை டென்ஷன் ஆகவோ கூடாது…பார்த்துக்கோங்க…” என்று தன் கடமை முடிந்தது என்பதைப் போல் பார்த்தார் டாக்டர்.

டாக்டர் சொன்னதைக் கேட்ட ருத்ரத்திற்கு கோபம் தலைக்கேறியது.. “எல்லாம் இந்த நிலா பெண்ணால் தான்…இனி சும்மா விடமாட்டான் இந்த ருத்ரம்.. நிலா என் மகனுக்கு நீ தான் மனைவி….இதை யாராலும் மாற்ற முடியாது” என்று மனதிற்குள் நினைத்தவர் அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினார்.

 

***********

அலுவலகத்தில் தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான் அருள். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் தொழிலில் முழுவதும் கவனம் செலுத்த முடியாமல்…அங்கு போட்டது எல்லாம் அப்படியே இருக்க…முரளியும் அதை கொஞ்சம் கொஞ்சமாக சீர்படுத்திக் கொண்டிருந்தார்.

முரளி…”இப்ப எதுக்கு அருள் இப்படி இருக்க…? உன்னை நம்பி தான் உன்கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சேன்..ஆனா நீ இங்க செய்து வச்சிருக்குறது என்ன..? இது தான் நீ தொழில் கத்துகிட்ட வித்தையா…?நம்மை நம்பி பணம் போட்டவங்களைப் பத்தி  நீ நினைச்சுப் பார்த்தியா..? சொன்ன தேதிக்குள்ள அவங்க பிராஜெக்டை எல்லாம் முடிச்சுக் குடுக்கனும்…ஆனா அதை பத்தி எல்லாம் கவலைப் படாம…இப்ப தலையில் கை வைத்து உட்கார்ந்தா எல்லாம் சரியாகிடுமா..?” என்று கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

செக் எதுவும் பாஸாகாமல்….ஆரம்பித்த பில்டிங் ப்ராஜெக்ட் அனைத்தும் அப்படியே இருக்க…அதைப் பார்த்து தான் முரளி கத்திக் கொண்டிருந்தார்.

அப்பா…நான் என்ன செய்ய…?நடந்ததுக்கு நான் மட்டுமே காரணம் இல்லை…நீங்களும் தான்..”என்று எதையோ சொல்ல வந்தவன் அப்படியே நிறுத்திக் கொண்டான்.

தன்னைத் தானே நொந்து கொண்ட முரளி….”என்ன செய்வது ..?” என்று யோசனையில் ஆழ்ந்தார்.இப்போ பேங்க்ல 50 லட்சம் உடனடியா கட்டியாகனும்….லோட் எல்லாம் டெலிவரி எடுக்கனும்….எல்லாருக்கும் பதில் சொல்லியாகனும்…சொன்ன தேதிய விட ஒரு மாதம் தாமதம் ஆகும் போல தெரியுதே..” என்று கவலை கொண்டார்.

தன் சொந்த பிரச்சனையில் தொழிலை கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய  நஷ்ட்டத்தை கொண்டு வரப் பார்த்தது….இதை உடனடியா எப்படி சரி செய்வது என்று அருளும் யோசனையில் ஆழ்ந்தான்.

இருவரும் யோசனையில் இருந்த போது…..மேனேஜர் உள்ளே வந்தார். “சார்….,இதுல ஒரு சைன் பண்ணிட்டிங்கன்னா….லோட் இறக்கிடலாம் சார்..” என்றார்.

என்ன சொல்றிங்க…? ஏற்கனவே இருக்குற பிராஜெக்ட முடிக்கனும்….செக் பாஸாகம எப்படி லோட் டெலிவரி பண்ண முடியும்…நீங்க உங்க இடத்துக்கு போங்க.நான் கூப்பிடுறப்ப வந்தா போதும்..” என்றார் முரளி.

அருளையும்,முரளியையும் புரியாமல் பார்த்த மேனேஜர்…”சார் என்ன சொல்றிங்க..? செக் எல்லாம் எப்போ கொடுத்தாச்சு…ஏற்கனவே மூணு லோட் இறக்கி…பாதி வேலை முடிந்தது….இது அடுத்ததுக்கான பைல் தான் சார்..” என்றார் மேனேஜர்.

என்ன அருள்..?அதான் எல்லாத்தையும் முடிச்சுட்டியே..! அப்பறம் ஏன் என்கிட்ட அப்படி சொன்ன..?” என்று புரியாமல் கேட்டார் முரளி.

அவரை புரியாமல் பார்த்த அருள்..” இல்லப்பா நான் சைன் பண்ணவே இல்லை…” என்றவன் மேனேஜரிடம் பார்வையை செலுத்த…

அருள் சார் பண்ணலை சார்.,சூர்யா சார் தான் சைன் பண்ணினார்….” என்றார்.சூர்யாவா…?” என்று அருளும்,முரளியும் ஒரு சேர அதிர்ந்தனர்.

ஆமா சார்…தினமும் இங்க 2 மணி நேரம் வருவார்….வந்து பைல் எல்லாம் பார்ப்பார்….கிடப்பில் இருந்த எல்லாமே முடிஞ்சுடுச்சு சார்.அருள் சார் வேற பிராஜெக்ட்ல இருக்குறதாவும்…உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னும் சொன்னார்.அப்பறம் பேங்க்ல நாம கட்ட வேண்டிய ஒரு கோடி ரூபாயையும் அவரே கட்டிட்டார்…புதுசா நான்கு பிராஜெக்ட் வேற சைன் பண்ணியிருக்கார் சார்..” என்றபடி கையிலிருந்த பைலைக் காட்ட…முரளி அதிர்ந்தார்.

சூர்யா சார்க்கு உண்மையிலையே ரொம்ப நல்ல மனசு சார்.இப்ப புதுசா சைன் பண்ணியிருக்கிற பிராஜெக்ட்ஸ் எல்லாம் சீக்கிரமா முடிஞ்சா எல்லாருக்கும் இன்கிரிமெண்ட் தருவதாகவும் சொல்லி இருக்கார் சார்…” என்றார் மேனேஜர் பெருமையாய்.

“அருளுக்கு தன்னை நினைத்து தனக்கே வெட்கமாய் இருந்தது.நான் என்ன தான் அவனை எதிரியாய் நினைத்தாலும்…ஒவ்வொரு முறையும் அவன் மட்டும் எனக்கு நல்லதே செய்கிறான்…நான் ஏன் இப்படி மாறிப் போனேன்..எனக்கு என்ன ஆனது….என் குணம் இது இல்லையே…எது என்னை இப்படி கீழ்தரமானவனாக மாற்றியது…அவன் இத்தனை வருடம் கழித்து வந்தாலும் தன் கடைமையை செய்ய தவறவில்லை..ஆனால் நான்..?” என்று மனதில் யோசித்தவனாய் தலை குனிந்து அமர்ந்திருந்தான் அருள்.

“என்ன அருள்…? சூர்யா இதெல்லாம் இந்த சொத்துக்காக பண்ணியிருப்பான்.நீ ஏன் கவலைப் படுற….?அவனுக்குத் தேவை இந்த சொத்து தானே..?” என்று நக்கலாய் குத்தினார் முரளி.

“அப்பா..!”என்று அதிர்ந்தான் அருள்.

“என்னடா அப்பா…,அப்படித்தானே நீ,உன் அம்மா,உன் பாட்டி எல்லாரும் நினச்சுகிட்டு இருந்திங்க.ஆனா சூர்யா  அதெல்லாம் இல்லைன்னு வார்த்தையால சொல்லாம செயலால காட்டிட்டு போய்ட்டான்…உனக்கு தான் தெளிவாய் புரிந்திருக்குமே….சூர்யா கட்டிய பணம் எல்லாம் அவன் சொந்தமா சம்பாதித்தது.அவனுக்கு என்ன வேண்டுதலா..? அவ்வளவு பணத்தையும் கட்டி நம் தொழிலை தூக்கி நிறுத்தனும்ன்னு…” என்று கேள்விகளை வீசினார் முரளி.

“அப்பா சொல்வதும் சரிதானே…! நானும் அப்படித்தானே நினைத்தேன்.ஆனால் அதெல்லாம் இல்லையென்று அவன் நிரூபித்து விட்டான்…” என்று மனதிற்குள் நினைத்தான் அருள்.

முரளி..”ஒரு விஷயம் நல்லா புரிந்து கொள் அருள்….உன்னை  நான் எத்தனை முறை பெருமையா நினைச்சிருக்கேன் தெரியுமா..? நான் இல்லைன்னாலும் என் பிள்ளை பார்த்துக்கொள்வான் எத்தனை இடத்தில் மார் தட்டி சொல்லியிருக்கிறேன் தெரியுமா..? ஆனால் நீ எப்பொழுதிலிருந்து மனிதர்களை விட்டு பணத்திற்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்தாய்…நான் தப்பு செய்தவன் தான்…. இல்லைன்னு சொல்லலை. ஆனா என்னை மாதிரி நீயும் இப்ப தப்பு பண்ணிட்டு பின்னால் வருத்தப் படக்கூடாதுன்னு நினைக்கிறது தப்பா…? நான் தப்பானவனாக இருந்தாலும்.. என் பிள்ளைகளை  அப்படி வளர்க்கலைன்னு நினைக்கிறேன்.. உன் கைல தான் இருக்கு..” என்று அவனுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்தவராய் சென்றார்.

தான் செய்வதும் பேசுவதும் தவறு என்று தனக்கே தெரிந்திருந்தும் ஏன் தன்னால் மாற முடியவில்லை…? என்ற கேள்வி அவனை வண்டாய் குடைந்தது. என் தங்கை கூட எல்லா உறவுகளையும் இயல்பாக ஏற்றுக் கொண்டாளே…? ஏன் அந்த சூர்யா கூட மனதில் கோபம் இருந்தாலும்… அனைவரையும் ஏற்றுக் கொண்டான்.அவன் எங்கே..! நான் எங்கே…! தீபாவிற்கு உள்ள பக்குவம் கூட எனக்கு இல்லாமல் போய்விட்டதா…?” என்ற பல சிந்தனைகள் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அண்ணா…!”என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவன் அங்கு தீபாவையும், ஜீவாவையும் பார்த்து திகைத்தான்.”தீபு குட்டி…” என்று பாய்ந்து அணைத்துக் கொண்டவன்…”இப்ப தான் இந்த அண்ணனை பார்க்கனும்ன்னு தோணியதா..?” என்று செல்லாமாய் கடிந்து கொண்டான்.பிறகு தயக்கத்துடன் ஜீவாவைப் பார்த்தவன்…”வாங்க ஜீவா..” என்றான் மரியாதை நிமித்தம்.

இங்க பார் அருள்…..! உன் தங்கச்சி என்னை ரொம்ப கொடுமைப் படுத்துறா…?ஒவ்வொரு நிமிஷமும் அடுத்து எப்ப அடிப்பாளோன்னு பயந்தே வாழ வேண்டியிருக்கு.மரண பயம்ன்னா என்னான்னு தெரியற அளவுக்கு அடிக்கிறா…” என்றான் ஜீவா பாவமாய்.

யாரு நானா…?நானா…?” என்று தீபா எகிற…”அப்பறம் நீ இல்லாம வேற யாரு செல்லம்…நீ தான என் பொண்டாட்டி…” என்று அவளைப் பார்த்துக் கண்ணடிக்க…”ஐயோ…!அண்ணன் முன்னாடி என் மானத்தை வாங்குறானே..!” என்று பல்லைக் கடித்த தீபா…”அப்படியாங்க…நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.நாளையில் இருந்து இரண்டு அடி சேர்த்து கொடுக்கறேன் போதுமா..?” என்றாள்.

ஜீவா முழிக்க….அவர்கள் இருவரையும் ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான் அருள்.இருவரின் சண்டையும் அவர்களுக்கு இடையே உள்ள நெருக்கத்தை சொல்லாமல் சொல்லியது.அதே சமயம் ஜீவா உள்ளே வந்ததும் தன்னுடன் இயல்பாய் பேசியது அவனை வசீகரித்தது.

அருள்….உன் தங்கை காலையில் இருந்து ஒரே நச்சரிப்பு…அண்ணனைப் பார்க்கனும்…அண்ணனைப் பார்க்கனும்ன்னு ஒரே அண்ணன் புராணம் தான்.கண்டிப்பா டிரைவர் வேலை நீங்க தான் பார்க்கனும்ன்னு என்னையும் கூட்டிட்டு வந்துட்டா…” என்று ஜீவா சொல்லவும் தீபா முறைக்கவும் சரியாக இருந்தது.

நான் ஒன்னும் அப்படி சொல்லலை…!”என்றாள் குழந்தையைப் போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.

என்ன ஜீவா நீங்க…?என் தங்கை அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டா. உங்களை அடிச்சு இழுத்துட்டு வந்திருப்பா சரிதானே..!” என்று சொல்லி அருள் சிரிக்க…”சரியா சொன்ன அருள்…!” என்று ஜீவாவும் சிரிக்க ஆரம்பித்தான்.

சரி அருள்…,எனக்கு டைம் ஆச்சு.மீட்டிங் இருக்கு! நான் கிளம்பறேன்…!” என்று விடை பெற்றவன்..தீபா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கவும்…”அருள் கொஞ்சம் கண்ணை மூடிக்கோ…” என்றவன்..”பட்டென்று அவளது கண்ணத்தில் முத்தமிட்டு….,ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது டார்லிங்..வரேன்…..”என்று சொன்னவன் அவளிடம் இருந்து தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடி விட்டான்.

இவர்களைப் பார்த்த அருளுக்கு மன நிறைவாய் இருந்தது.”நீ சந்தோஷமா இருக்கியாடா தீபு..?” என்றான் ஒரு அண்ணனாய்.

இந்த நிமிஷம் நான் தான் இந்த உலகத்துலையே சந்தோஷமா இருக்கேன் அண்ணா.அவர் என்னை நல்லா பார்த்துக்கறார்.என்னையே சுத்தி வர கணவர்….பெத்த பொண்ணாவே பார்த்துக்கற மகி அம்மா….. உன்னை மாதிரியே பார்த்துக்கற சூர்யா அண்ணா…அப்பா…அப்பறம் என் செல்ல அண்ணா நீ…இப்படி என்னை சுத்தி நீங்க எல்லாரும் இருக்கும் போது நான் எப்படியண்ணா சந்தோசம் இல்லாம இருக்க முடியும்…” என்றாள் தீபா.

தப்பித் தவறியும் சுதாவையும்,ஜக்கு பாட்டியையும் தீபா சொல்லாததை அருள் மனதிற்குள் குறித்துக் கொண்டான்.”உனக்கு அம்மாவைப் பார்க்கனும்ன்னு தோணலையா தீபு..?” என்றான்.

அவங்களுக்கும் என்னைப் பார்க்கனும்ன்னு தோணலையே அண்ணா..!” என்றாள்…,கேள்வியே பதிலாய் தந்தபடி.

“நல்லா பேச கத்துகிட்ட தீபு..!”என்று அருள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள் ரம்யா.அவளைப் பார்த்த அருள்…”கதவைத் தட்டிட்டு வரக் கூடாது…?” என்று எரிந்து விழுந்தான்.

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாத ரம்யா…பிறகு தெளிந்தவளாய்…”ஹலோ என்ன ரொம்ப பேசுறிங்க…?ஏதோ ஒரு நியாபகத்துல வந்துட்டேன்…இது ஒரு தப்பா…?” என்று பதிலுக்கு எகிறினாள்.

“ம்ம்ம் தப்புத்தான்..!”என்றான் அருள் முறைத்தபடி.

“அப்படி தப்பாவே இருந்தாலும் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை மிஸ்டர் அருள்.அப்பறம் இது என்னோட முரளி மாமா ஆபீஸ்…நான் எப்ப வேணும்ன்னாலும் வருவேன்….எப்படி வேணும்னாலும் வருவேன்…” என்றாள் சிலுப்பிக் கொண்டு.

அருளுக்கு கோபம் எகிற…”ஐயோ அண்ணா…! நான் தான் வர சொன்னேன்.எங்களுக்கு வெளிய கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்…எனக்கு எப்பவும் நீ தான செலக்ட் பண்ணுவ…அதான் உன்னை கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்..” என்றாள் தீபா.

“யாரு இவன் கூடவா ஷாப்பிங்…! கடவுளே..உனக்கு என்ன பைத்தியமா தீபா…? உங்க அண்ணா வந்தா அப்பறம் எதுக்கு நான்…என்ன விளையாடுறியா…?” என்று அருள் வாயைத் திறக்கும் முன்னர் சொல்லி முடித்தாள் ரம்யா.

அருள்..”ஏய்…! அவன் இவன்ன்னு சொன்ன பல்லைத் தட்டிக் கைல குடுத்துடுவேன் ஜாக்கறதை…” என்று எரிந்து விழுந்தான்.

இருவருக்கும் நடுவில் தீபா கவலையாய் தலையில் கை வத்து அமர்ந்திருக்க.,…”நீ என் பல்லைத் தட்டுவியா..? தட்டிப் பாருங்க தெரியும் இந்த ரம்யா யாருன்னு…? என்றவள்…தீபாவிடம் குனிந்து…”ஏதோ நீ சொன்னியேன்னு இவனுக்கு வாழ்க்கை குடுக்கலாம்ன்னு பார்த்தா ரொம்பத்தான் குதிக்கிறான்….இவன் என்னை லவ் பன்றதெல்லாம் நடக்காத காரியம்…”என்று  பொரும..”தீபா கெஞ்சல் பார்வை பார்க்கவும்..” அமைதியாய் இருந்தாள்.

அருளிற்கு எப்படியாவது ரம்யாவை வாழ்க்கைத் துணையாக்கி விட வேண்டும் என்று தீபா படாத பாடு பட்டு …ரம்யாவிடம் பேசி…சம்மதம் வாங்கி ஒரு ப்ளானுடன் அவளை அழைத்து வந்திருந்தாள்.ஆனால் ரம்யாவோ வந்ததை எல்லாம் மறந்து அவனுடம் சண்டை கட்டிக் கொண்டிருந்தாள்.

அண்ணா…! ப்ளீஸ் என் செல்ல அண்ணா இல்லை…எனக்காக என் கூட வரக் கூடாதா..?” என்று தீபா கெஞ்சவும் அவளுக்காக சரி என்றான் அருள்.

கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுடா தீபு..” என்றவன் ஏதோ வேலையை கவனிக்க…ரம்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எப்படி அருளை நெருங்குவது..” என்று யோசித்துக் கொண்டிருந்த ரம்யாவிற்கு சரியாக ரூட் போட்டுக் கொடுத்தாள் தீபா.ரம்யாவும் ஏதோ பெரிய மனசு பண்ணி அருளை ஏற்றுக் கொள்வது போல் தீபாவிடம் சீன் போட்டவள் அவளுடன் கிளம்பி வந்திருந்தாள்.

அருள் இளைத்திருப்பதைப் போல் தோன்றியது ரம்யாவிற்கு.ரம்யாதான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனால் அவனோ அவளை மருந்துக்கும் கண்டு கொள்ளவில்லை.

என்ன, அண்ணா உன்னை பார்க்கவே மாட்டேங்குறான்…?” என்று தீபா குறைப்பட…”உங்க அண்ணனுக்கு இருட்டுலையே எருமை மாடு தெரியாது…பகல்ல பசு மாடு மட்டும் தெரியவா போகுது…?” என்று நொடித்தாள் ரம்யா.

மெதுவாக சொல்கிறேன் பேர்வழி என்று ரம்யா சத்தமாக சொல்லிவிட…நிமிர்ந்த அருள் அவளை முறைத்தான்.உங்க அண்ணனுக்கு இதை விட்டா வேற ஒன்னும் தெரியாதா….ஏதோ வில்லிய பார்க்குற மாதிரி பார்க்குறான்.சொல்லி வை உங்க அண்ணன்கிட்ட….நான் வில்லி எல்லாம் இல்லை லல்லி.ஓவரா முறைச்சான் நான் சில்லியாகிடுவேன்…” என்றாள் சீரியசாய்.

ரம்யா ப்ளீஸ்…! எங்கண்ணாவை கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்லை.இப்படி பேசியே கொல்லாத….என் வீட்டுக்காருக்கு நான் ஒரே பொண்டாட்டி…” என்றாள் தீபா.

இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்…..,உங்க அண்ணன் பாடு திண்டாட்டமாகிடும்…நான் வெளிய வெய்ட் பன்றேன்….” என்றபடி சென்றாள் ரம்யா.

அதே நேரம் அங்கு சூர்யாவின் அலுவலகத்தில்….

“நீங்க என்ன சொல்றிங்க அங்கில்…?இவ்வளவு நடந்திருக்கா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சூர்யா.நிலாவிடம் உண்மையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவிற்கு இன்று அவனே எதிர்பார்க்காத ஒருவரிடம் இருந்து…அவனது கேள்விகளுக்கான விடை கிடைத்துக் கொண்டிருந்தது.

 

“ஆமாம் சூர்யா….நான் சொன்னது எல்லாமே உண்மை.அன்னைக்கு மட்டும் ரம்யா மட்டும் சரியான சமயத்துல இல்லைன்னா…இன்னைக்கு நிலா இல்லை.அதே சமயம் உதய குமார் தன் உயிரைக் கொடுத்து தான் நிலா உயிரைக் காப்பாத்தியிருக்கார்.இன்னைக்கு நிலா கற்போடயும்… உயிரோடயும் இருக்குறதுக்கு இவங்க ரெண்டு பேரும் தான் காரணம்…” என்றார்.

நடந்ததைக் கேள்விப்பட்ட சூர்யாவால் அதை ஜீரணிக்க முடியவில்லை. வினோத்தின் மேல் கொலை செய்யும் அளவுக்கு கோபம் உண்டானது. இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் எப்படி நிலாவால் இப்படி இருக்க முடிந்தது.மனதில் இவ்வளவு வலிகளையும் மறைத்துக் கொண்டுதான் வெளியில் சிரித்தபடி நடமாடினாளா..? என்று சூர்யாவின் மனம் பதறியது.

“என்னை மன்னிச்சிடுங்க தம்பி….இதுக்கு நானும் ஒரு காரணம்.நான் அந்த ருத்ரம் ஆபீஸ்ல தான் சூர்யா தம்பி முதல்ல வேலை பார்த்தேன்.அந்த ருத்ரம் சொன்ன பேச்சை நம்பி நான் தான் உதய குமார் கிட்ட வினோத்க்கு பொண்ணு கேட்டேன்.ஆனா அவன் இவ்வளவு பெரிய அயோக்கியன்னு எனக்கு தெரியவே தெரியாது.நிலாவையும் நான் அவ்வளவா பார்த்தது இல்லை.என்னை அறியாமலே இதுக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்…” என்று மனம் வருந்தினார் சுதாகரன்.

“இதுல உங்க தப்பு எதுவும் இல்லை அங்கில்.இதெல்லாம் நடக்கனும்ன்னு இருக்கு நடந்திட்டது,…”என்றான் சூர்யா.

“இல்லை சூர்யா தம்பி…இதெல்லாம் எனக்கு லேட்டாதான் தெரிய வந்தது.நிலாவை இங்க முதன் முதலா பார்த்தப்ப கூட எனக்கு தெரியலை.இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமா இருந்தது.நிலாவுக்கும் என்னைத் தெரியலை.அப்பறம் ஒரு நாள் பிரபுவை பார்த்த போது…அவர் என் சட்டையவே பிடுச்சுட்டார்.”உன்னால் தான் எங்க குடும்பமே அழிந்து விட்டது….நீ தானே அவனுக்கு பொண்ணு கேட்டு வந்த…?”  என்று  ஆதங்கத்தில் ஒவ்வொன்றாய் சொல்லி கத்த தொடங்கிட்டார். அப்பொழுதுதான் தம்பி எனக்கும் தெரியும் உதய குமார் இறந்தது…..மற்ற விஷயங்களும் என்றார் வேதனையாய்.

 

“எனக்கு இருந்தது ஒரே பொண்ணு…அவ அந்த சமயத்துல இறந்துட்டா.அந்த சமயம் ருத்ரம் கேட்டதால….ஏதோ என் பொண்ணுக்கே பன்ற மாதிரி தான் நான் போய் உதய குமார் கிட்ட பேசினேன் தம்பி…. ஆனா இப்படி நடக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.ருத்ரம் என்னை உடனே வேலையை விட்டு அனுப்பிய காரணமும் பிறகுதான் தெரிய வந்தது…” என்றார்.

“பிரபு சொன்னப்பக் கூட என்னால் நம்ப முடியவில்லை.அங்கு ருத்ரம் வீட்டில் நான் வேலைக்கு சேர்த்துவிட்ட வேலையால் ஒருவன் இருக்கிறான்.அவனிடம் விசாரித்த போது…வெளிய சொல்லிடாதிங்கன்னு இந்த உண்மை எல்லாம் சொன்னான் தம்பி”என்றார்.

இதை,நீங்க முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கலாமே அங்கிள்…?” என்றான் சூர்யா.

சொல்லியிருக்கலாம் தம்பி….நிலா என்னை தன்னோட தகப்பனாவே நினைச்சு வாய் நிறைய அப்பா..அப்பான்னு கூப்பிடும்…எங்க இந்த உண்மைய சொல்லி…. நீங்க நிலாகிட்ட சொல்லி… என்னை நிலா வெறுத்துட்டா….பெத்த பொண்ணும் இல்லை..,நிலா என்னை அப்பான்னு கூப்பிடும் போதெல்லாம் என் பொண்ணே என்னை நேர்ல வந்து கூப்பிட்ட மாதிரி இருந்தது தம்பி.அதைக் கெடுத்துக்க வேண்டாமேன்னு தான் சொல்லலை..”

இப்ப கூட நான் சொல்வதற்கு காரணம்…அன்னைக்கு அந்த ருத்ரம் இங்க வந்துட்டு போனது எனக்கு சரியா படலை தம்பி.ஏதாவது பிரச்சனையா இருக்குமோன்னு நினைச்சேன்.அதனால் தான் சொன்னேன்ப்பா..” என்றார் சுதாகரன்.

சுதாகரன் சொன்னதைக் கேட்ட சூர்யாவிற்கு அப்பொழுதே நிலாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.நடந்தது தெரியாமல் நானும் என் பங்குக்கு அவளைக் காயப் படுத்திவிட்டேனோ…! இப்படி ஒரு சூழ்நிலையில் வினோத் உடன் நான் இருக்கும் போட்டோவைப் பார்த்தவள் தப்பாக நினைத்ததில் தவறு என்ன இருக்கிறது…? இது தெரியாமல் நானும் அவளை காயப்படுத்தியிருக்கிறேன்… என்ன தான் அவள் அதை இப்பொழுது மறந்திருந்தாலும் அவளிடம் கண்டிப்பாய் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்று நினைத்தவன்…”நீங்க எதை நினைச்சும் கவலைப் படாதிங்க…..நான் பார்த்துக்கறேன்..” என்றவன் புயலென கிளம்பினான்.

“தம்பி மீட்டிங்….” என்று சுதாகரன் இழுக்க..”இதோ இப்ப ஜீவா வந்திடுவான்…நான் போன உடனே வந்துடுறேன்..ஒரு அரை மணி நேரம் தள்ளி வைங்க…” என்று சொன்னபடி சென்றான்.

கடவுளே..! இனியாவது எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வை.இவர்களை சந்தோஷமாக வாழ வை..” என்று இறைவனிடம் முழுமனதுடன் பிரார்த்தனை செய்தார் சுதாகரன்.அவரது வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்த்தாரா…? என்பது தான் கேள்விக் குறி.

வீட்டிற்குள் புயலாய் நுழைந்தவன் நிலாவைத் தேட…அங்கு வந்த மகேஷ்வரி..”என்ன சூர்யா..முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொன்ன….இப்ப திடுதிப்புன்னு வந்து நிக்குற…?” என்றார்.

அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா….நிலா எங்க…? என்றான்.

ஒன்றும் புரியாத மகேஷ்வரி ..”மேல ரூம்ல தான் இருக்கா சூர்யா…” என்று சொல்லி முடிக்கும் முன்..”தேங்க்ஸ்ம்மா..” என்றபடி இரண்டு இரண்டு படிகளாய் தாவி சென்றான்.

அங்கு நிலாவோ துணியை மடித்துக் கொண்டிருந்தாள்.யதார்த்தமாய் திரும்பியவள் அங்கு சூர்யாவைப் பார்த்து விக்கித்தாள்.”ஆபீஸ்க்கு போனவன் எப்ப வந்தான்..?” என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

நிலாவையே ஒரு நிமிடம் பார்த்த சூர்யா…வேகமாய் எட்டு வைத்து வந்தவன்….”சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். ஒவ்வொரு அணுக்களும் நிலாவிற்காக துடிக்க…அவனின் அனைப்பு இறுகிக் கொண்டே சென்றது. “

நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை…”சூர்யா விடுங்க…உங்களுக்கு என்னாச்சு…” என்று திமிற…”விட்டால் பிடிக்க முடியாது என்பதைப் போல் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.முரட்டுத்தனமான அவனது அணைப்பில் இருந்த நிலாவிற்கு உடல் வலிக்கத் துவங்க…” “சூர்யா ப்ளீஸ்..” என்றாள்.

லேசாய் தனது அணைப்பைத் தளர்த்தினான் சூர்யா.ஆனால்,அவளை முழுவதுமாக விடவில்லை.மெல்ல அவளை விடுத்தவன் நிலாவின் முகமெங்கும் முத்த மழை பொழிய….”நிலா திகைத்தாள்.

சாரி நிலா….ஐ ஆம் சாரி…” என்றவன் கடைசியாக ஒரு முறை இறுக்கி அணைத்தவன்…”தேங்க்ஸ் மதி….ஈவ்னிங் வந்து உன் கூட நிறைய பேசனும்…இப்போ ஒரு மீட்டிங் இருக்கு…போய்ட்டு வந்துடுறேண்டா…” என்றபடி கிளம்பி சென்றான் சூர்யா.

நிலா திகைத்தபடி நின்றிருந்தாள்…”என்னாச்சு இவனுக்கு….அவனா வந்தான்…திடீர்ன்னு அணைத்தான்…சாரி சொன்னான்…என்ன நடக்குது…. கடைசியா மதின்னு வேற சொன்னானே….! யார் அந்த மதி….” என்று மதி குழம்பியவளாய் யோசித்துக் கொண்டிருந்தாள் நிலா.

டெல்லி:

“ஜான்..!என்ன செய்விங்களோ..ஏதோ செய்விங்களோ தெரியாது…உங்களுக்கு இன்னும் ஒரு நாள் தான் டைம்.நிலா இங்க இருக்கனும்.என்ன வேணும்ன்னாலும் பண்ணிக்கோங்க. அந்த சூர்யா செத்தாலும் பரவாயில்லை நிலா இங்க இருக்கனும்….”என்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார் ருத்ரம்.

வினோத்திற்கு நிலாவை கல்யாணம் பண்ணி வைத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.அடுத்தவன் மனைவியாகிவிட்டாள்  என்று கூட நினைக்காமல் தன் குறிக்கோளே பெரிது என திட்டம் வகுத்தார் ருத்ரம்.

கண்டிப்பா சார்….நாளைக்கு காலையில அந்த நிலா இங்க இருப்பாங்க…! என்ற ஜான்,அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினான்.

5 மணி நேரங்கள் சென்ற நிலையில்………….

இவர்களின் சூழ்ச்சி அறியாத  சூர்யா….வாயில் ஒரு பாடலை ஹம் செய்த படியே வந்து கொண்டிருந்தான்.”இன்று எப்படியாவது நிலாவிடம் மனம் விட்டு பேச வேண்டும்…” என்று நினைத்தவன் அவளை பார்க்கும் அந்த நிமிடத்திற்காக வேகமாய் சென்றான்.இனி அவளை விட்டு பிரியவே கூடாது என்று நினைத்தவன்   மனம் முழுதும் காதலுடன் வேகமாய் காரை செலுத்தினான்.

ஆசையுடன் வேகமாய் வந்த சூர்யா காரை நிறுத்தியவுடன்.., உல்லாசமாய் வீட்டிற்குள் சென்றான்.ஹாலில் மாலா அழுதபடி இருக்க..மகேஷ்வரி கலங்கிப் போனவராய் நின்றிருந்தார்.தீபா கவலையாய் இருக்க….ரம்யா பிரமை பிடித்தவள் போல் இருந்தாள்.பிரபுவைக் காணவில்லை.ஜக்கு ஏளனமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

நிலமை ஏதோ சரியில்லை என்று நினைத்த சூர்யா…”அம்மா என்னாச்சு..?ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கிங்க…?” என்றான் .யாரும் வாயைத் திறக்காமல் இருக்க….”உங்ககிட்ட தான கேக்குறேன்… சொல்லுங்க…என்னாச்சு..?” என்றான்.

“அண்ணா…அது வந்து அண்ணி” என்று தீபா தயங்க…”நிலாவுக்கு என்ன…? எங்க நிலா..?” என்றான் அப்பொழுதுதான் நிலா இல்லாததை கவனித்தான்.

“அம்மா நிலா எங்க..? சொல்லுங்க கேக்குறேன்ல…என் நிலா எங்கம்மா…?” என்றான்.சூர்யா.

“நிலாவைக் காணாம்ப்பா…!” என்றார் மகேஷ்வரி.

“நிலாவைக் காணவில்லையா…?”என்று அதிர்ந்தான் சூர்யா. எதற்கும் கலங்காத சூர்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

தப்பேதும் நான் தான் செய்யவில்லை….

அட தண்டனை ஏனோ புரியவில்லை…

கடவுளைக் கூட மறுப்பவர் உண்டு…

காதலியை வெறுப்பவர் உலகில் இல்லை..

கருவறை கூட மறந்தவர் உண்டு..

காதலை மறந்தவர் எவருமில்லை…

காதல் என்பது எனது பெயர்…

கண்ணீர் என்றால் எனக்கு உயிர்….

முகவரி 34:

நிலாவைக் காணவில்லை என்று மகேஷ்வரி சொன்னதைக் கேட்ட சூர்யாவால் அதை நம்பவே முடியவில்லை.எப்படி…?இது எப்படி நடந்தது..? இல்லை இருக்காது…?நிலாவிற்கு எதுவும் தப்பாய் நடந்திருக்காது…? என்று சூர்யாவின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காய் துடித்தது.

அவனின் வேதனையைக் காண சகியாத மகேஷ்வரி…”நீ வந்துட்டு போனதுக்கு அப்பறம் நாங்க யாரும் நிலாவைப் பார்க்கலைப்பா.நிலா வெளிய போகனும்ன்னா எங்ககிட்ட சொல்லிட்டு தான் போயிருப்பா.எனக்கு என்னவோ பயமா இருக்கு சூர்யா.நிலாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோன்னு…?” என்று கண்கள் கலங்கி சொல்ல…

இல்லம்மா என் நிலாவுக்கு ஒன்னும் ஆகியிருக்காது…ஒன்னும் ஆகியிருக்காது…” என்று புலம்பியவன் வேகமாய் தங்கள் அறையை நோக்கி சென்றான்.அங்கு அறையே வெறிச்சோடி இருந்தது.பதட்டத்தில் சூர்யாவிற்கு எப்படி யோசிப்பது என்றும் புரியவில்லை.அப்படியே தொய்ந்து அமர்ந்தான். அந்த சமயத்தில் அவனின் செல்போன் அழைக்க….எடுத்தவனின் முகம் மாறியது.

என்ன சொல்ற ராம்…?”என்றான் சூர்யா.

ஆமாம் சூர்யா…அந்த ருத்ரத்தோட அல்லக்கை அந்த ஜான் இன்னைக்கு 5 மணி பிளைட்ல சென்னைக்கு வந்திருக்கான்.இது நம்பகமான தகவல்.ஏதோ ப்ளானோட தான் வந்திருக்கனும்….எதுக்கும் ஜாக்கரதையா இருக்கனும்…” என்று ராம் சொல்லி முடிக்கும் முன்…சூர்யா கோபத்தில் செல்லை விட்டு எறிந்து இருந்தான்.

அவனால் ராம் சொன்ன செய்தியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”எங்க விட்டேன்…எதில் விட்டேன்…”என்று தனக்குள்ளேயே மறுக ஆரம்பித்தான்.”அவளை நான் தொலைத்துவிட்டேன்…..என்னை நம்பி வந்தவளை நான் தொலைத்து விட்டேன்…”என்று அவனின் உள்  மனம் புலம்ப ஆரம்பித்தது.முதல் தோல்வி அவனை நிலைகுலைய வைத்தது.

என்ன செய்கிறோம்…ஏது செய்கிறோம் என்று தெரியாமல்..ஆத்திரத்தில் கண்மண் தெரியாமல் அங்குள்ள பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்தான் சூர்யா.தனது கோபத்தை எல்லாம் எப்படி காட்டுவது என்று அவனுக்கு தெரியவில்லை.சத்தம் கேட்டு மேலே வந்த அனைவரும் திகைத்தனர்.

அப்பொழுது தான் வந்திருந்த ஜீவா தன் நண்பனின் நிலை கண்டு வருந்தினான்.”சூர்யா என்ன பன்ற  நீ…?எதுக்காக இப்படி நடந்துக்கற…? பொறுமையா யோசிப்போம்…அடுத்து செய்ய வேண்டியதை…” என்று ஜீவா எடுத்து சொல்ல…

இல்லை ஜீவா என்னை விடு…நான் தோத்துட்டேன்.அந்த ருத்ரத்துகிட்ட தோத்துட்டேன்…” என்றவன்…”எனக்கு திமிர்…எல்லாமே என்னால் முடியும்ன்ற திமிர்…என்னை மீறி எதுவும் நடக்காதுன்ற திமிர்…அதனால் தான் இன்னைக்கு நிலா…நிலா…” என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் திணறிக் கொண்டிருந்தான்.

ஜீவா…”சூர்யா ப்ளீஸ்…கொஞ்சம் பொறுமையா இரு… எதுவும் நிச்சயமா தெரியாத போது நாம ஏன் அப்படி நினைக்கனும்..நிலாவை அந்த ருத்ரம் தான் கடத்தியிருப்பான்னு என்ன நிச்சயம்…? ஏன் நிலாவே கிளம்பி போயிருக்கலாமே…? நிதானாமா யோசிக்கலாம் சூர்யா.அப்ப தான் என்ன நடந்ததுன்னு தெரியும்…என்றான்.

“இல்லை ஜீவா….நிலா அப்படியெல்லாம் போயிருக்க மாட்டா…எனக்கு தெரியும் அவளா போக வேண்டிய அவசியம் என்ன வந்தது…நான் வந்தப்ப கூட நார்மலாதான் இருந்தா…” என்று சொல்லிகொண்டிருந்த சூர்யாவிற்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது   ” தான் வரும் போது நிலா துணியை மடித்துக் கொண்டிருந்தது…”

நிதானமாக சூர்யா யோசிக்க…”நான் வந்த போது அவ லேசா அதிர்ச்சியானாளே…ஒரு வேளை..ஒரு வேளை..” என்று யோசித்த போது மேலும் பதறினான் சூர்யா.

“ஜீவா…. அப்படியே அவளா போயிருந்தா..,அது அந்த ருத்ரத்துக்கு சாதகமா போய்டும்…இல்லை நடக்க கூடாது..” என்றவன் வேக வேகமாய் செல்லை தேடியவன் அது உடைந்து கிடந்ததைப் பார்த்து…மேலும் நொந்து கொண்டான் சூர்யா.

வேகமாய் ஜீவாவின் போனை வாங்கி ராமிற்கு அழைத்தவன்..வேக வேகமாய்  சில கட்டளைகளைப் பிறப்பித்தான்.அடுத்து செய்ய வேண்டியது…செய்யக் கூடாதது பற்றி வேகமாய் சொல்லி முடிக்கவும்….அங்கிருந்த அனைவரும் சூர்யாவின் வேகம் பார்த்து பிரமித்தனர்.சில நிமிடங்களுக்கு முன் பைத்தியம் போல் இருந்த சூர்யா எங்கே,…? இப்பொழுது இருக்கும் சூர்யா எங்கே..?

ரம்யாவே ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்தாள்..”இத்தனை ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்து வைத்திருந்தானா…? எல்லாம் நிலாவுக்காகவா…?இப்படி பட்ட ஒருத்தனையா நிலா ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டினாள்…?” என்று பல கேள்விகள் அவளுள்.

ஆனால் சூர்யாவோ இப்பொழுது நிதானத்திற்கு வந்திருந்தான்.அவனின் மனம் நிதானமாய் தன் யோசனையைத் துவங்கியது.”நிலா அவளாக சென்றிருந்தாள் என்றால் யாரிடமும் சொல்லாமல் ஏன் செல்ல வேண்டும்..?அதற்கான அவசியம் என்ன வந்தது…? அல்லது இவை அனைத்தும் ருத்ரத்தின் வேலையா..?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே….ஜீவாவின் செல் அடிக்க ….வேகமாய் அட்டென் செய்து காதில் வைத்தான் சூர்யா.

எதிரில் பேசிய ராம்…”சூர்யா நீ சொன்ன மாதிரி விசாரிச்சுட்டேன்…ஜான் சென்னை வந்தது 5 மணி பிளைட்ல.ஆனா  அதுக்கு முன்னாடி  4.15க்கு சென்னைல இருந்து டெல்லி போன பிளைட்ல நிலா போயிருக்காங்க.. அதுக்கான டிக்கெட்டை ஒரு ப்ரைவேட்  ஏஜென்ஸி மூலமா ரெண்டு நாளைக்கு முன்னாடியே புக் பண்ணியிருக்காங்க…” என்றான் ராம்.

ராம் சொன்ன செய்தியைக் கேட்ட சூர்யாவிற்கு ஒன்று தெளிவாய் புரிந்தது.நிலாவின் டெல்லி பயணம் அவ்வளவு சாதாரணமாக இருக்காது என்று.இவ்வளவு தூரம் யோசித்து செய்தவள் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.அந்த அளவுக்கா நான் வேண்டாதவனாகிப் போனேன்…?என்று யோசித்தவன் ஒரு முடிவுடன் நிமிர்ந்தான்.

சுற்றி எல்லாரும் பதைபதைப்புடன் நின்றிருக்க…அவர்களை சலனமின்றி பார்த்தவன்…”அவளுக்கு ஒன்னும் இல்லை..நிலாவைப் பத்தி யாரும் கவலைப் பட தேவையில்லை.கண்டிப்பா அவ திரும்பி வருவா…எனக்கு நம்பிக்கை இருக்கு.அதனால் அவளைப் பத்தி கவலைப் படாம அவங்க அவங்க வேலைய பாருங்க…” என்றான் வாழ்க்கையே வெறுத்தவனாய்.

ரம்யாவிற்கு ஏதோ புரிந்தும் புரியாததும் போல் இருக்க…மற்றவர்களுக்கு சுத்தமாய் ஒன்றும் புரியவில்லை.ஆனால் சூர்யாவே சொல்லும் போது அவர்களால் மறுக்கவும் முடியவில்லை.

டெல்லி:

தன் வீட்டில் விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தாள் நிலா. இரண்டு வருடங்களாக ஆட்கள் இல்லாமல் வீடு முழுதும் தூசியும்…ஆங்காங்கு ஒற்றடையும் படிந்து இருந்தது.சென்னையில் இருந்த போதே தன் நண்பர்களின் உதவியுடன் ஆட்களை வைத்து வீட்டை சுத்தம் செய்ய சொல்லியிருந்தாள். இப்பொழுது அந்த வீட்டின் வெறுமை அவளை வாட்டியது.இரண்டு வருடங்களுக்கு முன் எப்படி கலகலப்பாய் இருந்த வீடு. அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்டிருந்த வீடு…இன்று யாருமின்றி நினைவுகளை மட்டும்  சுமந்த வண்ணம் இருந்தது.

என்ன இருந்தாலும் நீ இப்படி பண்ணியிருக்க கூடாது நிலா.நீ சூர்யா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம்.இல்லை அவனை கூட்டிட்டாவது வந்திருக்கலாம்.இப்படி தனியா வந்தது நல்லதா படுதா உனக்கு…?” என்று அவளின் மனசாட்சி அவளிடம் கேள்வி கேட்டது.

நல்லதா படுதோ இல்லையோ…எனக்கு இங்க முடிக்க வேண்டிய கணக்கு ஒன்னு பாக்கி இருக்கு.அதில் எல்லாரையும் ஏன் சம்பந்தபடுத்தனும்…? இது எனக்கான நேரம்.என்னோட முடிவுகளை நான் தான் எடுக்கனும். பாதகமோ,சாதகமோ எது வந்தாலும் நான் தான் ஹேண்டில் பண்ணனும்…அதனால் கொஞ்ச நேரம் நீ பேசாம இரு…!” என்று தன் மனசாட்சியை அடக்கினாள் நிலா.

அணைத்து வைக்கப்பட்டிருந்த அவளின் கைபேசி.., “என்னையும் கொஞ்சம் கவனி” என்பதைப் போல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது.வேகமாய் அதை எடுத்தவள் ஆன் செய்ய போக…,அவளது கை தயக்கத்தை உணர்ந்தது.வேண்டாம்….சென்னையில் நான் இல்லாதது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.இப்போதைக்கு செல் இப்படியே இருப்பது தான் நல்லது…” என்று நினைத்தவள் கைபேசியை அப்படியே வைத்தாள்.

கைபேசியை கீழே வைத்த நிலாவால் மனபேசியை இறக்கி வைக்க முடியவில்லை.மனம் முழுதும் சூர்யாவே நிறைந்திருந்தான்.அவனின் நினைவுகள் மட்டுமே அவளின் முழு மனதையும் பட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

வனை பிரிந்த இந்த சில மணி நேரங்களே அவளுக்கு தாங்கவில்லை. அருகில் இருக்கும் போது தெரியாத அவனின் அருமையை….அவனை விட்டு வந்த நிமிடங்கள் அவளுக்கு உணர்த்தியது.அவனின் அருகாமைக்கும், அணைப்பிற்கும் அவளின் உள்ளமும் உடலும் ஏங்கத் தொடங்கியது.

சாரி சூர்யா…எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு…ரொம்ப பிடிச்சிருக்கு…ஆனால் என்னால் அதை இப்பொழுது வெளிபடுத்த முடியாது.விடிந்தால் எனக்கு என்ன ஆகும்…? நான் எடுத்திருக்கும் முடிவு சரியா…? என்று எனக்கே தெரியாத போது…உங்களிடம் என் காதலை சொல்லி உங்களையும் காயப்படுத்த எனக்கு விருப்பமில்லை.எனது சபதத்தில் ஜெய்த்த பிறகு கண்டிப்பாய் உங்களிடம் வந்துவிடுவேன்….”என்று சூர்யாவிடம் சொல்வதைப் போல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

நிலாவின் மன கதறல் சூர்யாவின் செவிகளை எட்டுமா…? அங்கு சூர்யாவின் மன கதறல் நிலாவிற்கு தான் கேட்குமா…?

கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தான் சூர்யா.இன்று அவனுக்கு ஏற்பட்ட அடுத்த அடுத்த அதிர்ச்சிகள் நிலைகுலைய வைத்திருந்தது.சுதாகரனின் மூலம் தெரியவந்த நிலாவைப் பற்ரிய உண்மைகள்…அதை அறிந்ததும் தன் மனம் துடித்த துடிப்பு,வேகமாய் வீட்டிற்கு வந்தது..,நிலாவிடம் பேசியது,அவளை அணைத்தது எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டதாக உணர்ந்தான் சூர்யா.

நிலா சொல்லாமல் சென்றாலும் அவள் சென்றதற்கான நோக்கத்தை சூர்யாவால் உணர முடிந்தது. அன்று ராம் சொன்ன தகவல்களும்,இன்று சுதாகரன் சொன்ன தகவல்களும் சூர்யாவின் சந்தேகத்தை உறுதி செய்திருந்தன.இருந்தாலும் இதில் அவளுக்கு எந்த ஆபத்தும் வந்து விட கூடாதே என்று அவனின் உள் மனம் பதறியது.என்ன தான் அவளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும் மனம் கேட்கவில்லை.

நிலாவும் அங்கு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள்.மனதில் சற்று பயம் இருந்தது என்னவோ உண்மை. தைரியமாக செயலில் இறங்கினாலும் பெண்களுக்கே உள்ள அச்ச உணர்வு அவளுக்கும் இருக்கத்தான் செய்தது.

சூர்யா தன்னைத் தேடி வரக் கூடாது என்று ஒரு மனம் சொன்னாலும்… தன்னைத் தேடி வரவில்லையே என்ற ஏக்கமும் ஒரு புறம் இருந்தது.யோசித்துக்கொண்டே ஜன்னல் அருகில் நின்றிருந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள்.நிலாவின் வீட்டின் முன் நான்கு பேர் நின்றிருந்தனர்.”யாரா இருக்கும்…? நான் வந்தது அந்த ருத்ரத்திற்கு தெரிந்து விட்டதா…? என்று யோசித்தவளுக்கு அவர்களைப் பார்த்து உள்ளே பதறல்  எடுத்தாலும்…அவர்களிடம் சென்று யார் என்று கேட்கவும் பயமா இருந்ததால் வெளியே செல்வதை தவிர்த்து விட்டாள்.

தன் வீட்டில் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் வினோத்.என்னதான் சாதாரணமாக இருந்தாலும் நிலாவை அடைய வேண்டும் என்ற வெறி அவனின் ஆழ்மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது.ஆனால் வீட்டிற்கு வந்ததில் இருந்து நிலாவைப் பற்றி கேட்டாலே தன் அப்பா சமாளிப்பதை தெளிவாய் அறிந்து வைத்திருந்தான் வினோத்.

என்னடா சொல்ற…நிலா அங்க இல்லையா..?அங்க இல்லைன்னா அப்பறம் எங்க இருக்கா…?” என்று அதிர்ந்தார் ருத்ரம்.எரிச்சலும் கோபமுமாய் போனை வைக்க…அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்.

டாட்….உண்மைய சொல்லுங்க…?நிலா எங்க இருக்கா..?” என்றான் வினோத்.இதற்கு மேல் மறைக்க ஒன்றுமில்லை என்று நினைத்த ருத்ரம்….அவன் கோமாவில் இருந்த போது நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்ல சொல்ல அவனின் முகம் எறிகிற தீயாய் மாறியது.

நிலாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா…நோ….எப்படி எப்படி நடந்தது..?ஏன் நடக்க விட்டிங்க..” என்று அவரின் சட்டையைப் பிடித்து வினோத் கேட்க..”வினோத் கொஞ்சம் பொறுமையா இரு..நான் சொல்வதைக் கேள்..” என்ற ருத்ரத்தின் சமாதான பேச்சு அங்கு எடுபடாமல் போனது.

இனி உங்களை நம்பி பிரையோஜனமில்லை..”என்றவன் கிளம்ப எத்தனிக்கும் போது….உள்ளே வந்தது காவல் துறை.

ருத்ரமும்,வினோத்தும் திகைத்து நிற்க…”மிஸ்டர் வினோத் நாங்க உங்களை அரெஸ்ட் பன்றோம்…” என்றார் இன்ஸ்பெக்டர்.

என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கலாமா…? என்றார் ருத்ரம் ஆங்காரமாய்.

ஹோ சொல்லலாமே..!இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பிரபலமான வக்கீல் மிஸ்டர் உதய குமாரை கொலை செய்த குற்றத்திற்காகவும், அவரோட குடும்பத்தையே அடியாள் வச்சு மிரட்டுன குற்றத்திற்காகவும், மூணு பொண்ணுங்களை கடத்தி ரேப் பண்ணி அவங்களை கொலை செய்த குற்றத்திற்காவும்…இதை எல்லாம் மூடி மறைக்கப் பார்த்ததற்காகவும் வினோத்தையும் அவருக்கு உடந்தையா இருந்தவங்களையும் கைது பண்ண சொல்லி மேலிடத்து உத்தரவு…இந்த விளக்கம் போதுமா..?” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஒரு நிமிடம் அதிர்ந்த ருத்ரம்….”கேஸ் யார் குடுத்தாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…?” என்றார் கோபமாய்.

இன்ஸ்பெக்டர்..”உதய குமார் பொண்ணு வக்கீல் நிலா தான் இந்த கேஸை பைல் பண்ணியிருக்காங்க…! இனி நீங்க எதை பேசுவதா இருந்தாலும் கோர்ட்ல தான் பேசனும்….” என்றபடி  வினோத்தின் கைகளில் காவல் விலங்கினைப் பூட்ட…ஏற்கனவே எறிந்து கொண்டிருந்த ருத்ரம் இப்பொழுது அதன்  கோபத்தின் எல்லைக்கே சென்றார்.

இன்ஸ்பெக்டர் நான் யாருன்னு தெரியும்ல..? நான் ஐ.ஜி கிட்ட பேசனும்..” என்றார் ருத்ரம்.

கைது பண்ண சொன்னதே ஐ.ஜி தான் சார்…!”என்றபடி வினோத்தை அழைத்து சென்றனர் காவல் துறை. தன் அப்பாவைத் திரும்பிப் பார்த்த வினோத் அவரை உக்கிரமாய் பார்த்த படி சென்றான். வினோதின் உடல் நிலை…. எங்கே அவன் பழையபடி கோமாவிற்கே சென்று விடுவானோ…? என்ற எண்ணம் வேறு ருத்ரத்திற்கு கவலையளித்தது.

 

நேரமும் காலமும் யாருக்கும் காத்திருக்காமல் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.நிலாவின் அடுத்த அடுத்த நடவடிக்கைகள் யாரும் எதிர்பார்க்காத படி இருந்தது.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க கூட ருத்ரத்திற்கு அவள் அவகாசம் கொடுக்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து தூசி தட்டப்பட்ட வழக்குகள் டெல்லி மாநகரையே பரபரப்பின் உச்சத்தில் ஆழ்த்தியிருந்தது.நிலாவின் வேகத்தைப் பார்த்த மூத்த வழக்கறிஞர்களே திகைத்தனர்.உதய குமார் திரட்டிய ஆதாரங்களும்,தானே திரட்டிய ஆதாரங்களுமாய் அனைத்தையும் பக்காவாய் தயார் செய்திருந்தாள் நிலா.

இன்றோடு நிலா டெல்லி வந்து பத்து நாட்களை கடந்திருந்தது.தனது செல்போனை ஆன் செய்து வைத்திருந்தாலும் அவளுக்கு யாரும் எந்த விதமான போனும் செய்யாமல் இருந்தது ஒரு புறம் அவளை நெருடிக் கொண்டிருந்தாலும் அதை விடுத்து எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தினாள்.ஆனால் தன்னுடைய பாதுகாப்பிற்காக வீட்டிற்கு முன் ஆட்களை நிறுத்தி வைத்திருப்பது சூர்யா என்று தெரிந்ததும் கொஞ்சம் மன ஆறுதலாய் உணர்ந்தாள்.

தன் தந்தையின் படத்தின் முன் நின்றிருந்தாள் நிலா.போட்டோவில் உதய குமார் சிரித்துக் கொண்டிருக்க…”அப்பா இன்னைக்கு எல்லாத்துக்குமே ஒரு முடிவு பிறந்திடும்ன்னு நினைக்கிறேன்.இன்னைக்கு கேஸ் ஹியரிங்க்கு வருது.இத்தனை நாள் என்னோட கஷ்ட்டத்துக்கெல்லாம் இன்னைக்கு ஒரு விடிவு பிறந்திடும்.எனக்கு கொஞ்சம் படபடப்பா இருந்தாலும் நீங்க எனக்கு துணையா இருப்பிங்கன்ற நம்பிக்கைல இதை எல்லாம் செய்றேன்….” என்று மனதில் வேண்டியவள்…உதய குமாரின் வக்கீல் கவுனை கையில் எடுக்க அவளின் கை நடுங்கியது.ஒரு முடிவுடன் எடுத்தவளின் மன திடம் அவளே அறியாதது.

அந்த இளம் பச்சை வண்ண காட்டன் புடைவையும்,நெற்றி வகிட்டில் குங்குமமும்,கையில் வக்கீல் உடையுடையும் அவளின் நிமிர்ந்த நடையயையும் பார்த்து உதய குமார் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார்.ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளுடன் வெளியே வந்தவள் அப்படியே  திகைத்து நின்றாள்.

கதவில் சாய்ந்த படி நின்றிருந்தான் சூர்யா.அவனை அங்கு எதிர்பார்க்காத நிலா அதிர்ந்தாள் என்றால் அவளை அப்படி கம்பீரமான உடையில் பார்த்த சூர்யா அவளை விட திகைத்தான்.

இந்த நிலாவின் தோற்றம் அவனுக்கு புதிது.”சின்னப்பிள்ளைத் தனமாய் தன் வீட்டில் கிரிக்கெட் பந்து எடுக்க வந்த நிலா,தன்னுடன் சரிக்கு சரி வம்புக்கு நிற்கும் நிலா,விவரம் அறியாமல் சின்னப் பெண்ணாய் இருக்கிறாள் என்று நினைத்த நிலா…இப்படி அவளைப் பற்றி தான் நினைத்திருந்த அனைத்து தோற்றங்களும் பொய்யாகி….,இதோ இது தான் என் உண்மையான தோற்றம் என்று…” சூர்யாவிடம் சொல்வது போல் இருந்தது.

சூர்யாவைப் பார்த்த உடன் அத்தனை நேரமும் தனக்குள் இருந்த தயக்கம்,ஒரு இறுக்கம் அனைத்தும்  உடனடியாக காணாமல் போய்விட்டதாக உணர்ந்தாள் நிலா.அப்பொழுதே வென்று விட்ட உணர்வு அவளுக்குள்.சூர்யாவைப் பார்த்த நிலாவின் கண்கள் அவனிடம் மன்னிப்பை வேண்ட….சூர்யாவோ அப்படியே  இருந்தான்.

அவளின் கம்பீரத்தில் தன்னைத் தொலைத்திருந்தான் சூர்யா.”சூர்யா தன்னை மன்னிக்கவில்லை” என்று எண்ணிய நிலா அவனின் அருகில் சென்று அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.ஆயிரம் வார்த்தைகள் உணர்த்தாத அந்த மொழியை அந்த ஒற்றை அணைப்பு உணர்த்தியது.சூர்யாவின் கைகளும் அவனை மீறி அவளை வளைத்தது.

தன் நெஞ்சில் ஈரத்தை உணர்ந்த சூர்யா…”நிலாவின் முகத்தை நிமிர்த்த…அவளின் கண்களில் கண்ணீரைப் பார்த்தவன் கலங்கினான். அவளது கண்ணீரைத் துடைத்தவன்…”இப்போ ஏன் அழற…அதான் தனியாவே எல்லா வேலையையும் பார்த்திருக்க இல்லை.அப்போ வராத கண்ணீர் இப்போ ஏன் வரனும்.என்னை பாதுகாவலனா நினைச்ச நீ உன்னோட கணவனா நினைக்கலையேன்ற வருத்தம் தான் எனக்கு.ஆனா அதைப் பத்தி பேச இது நேரம் இல்லை.இது உனக்கான நேரம்.கண்டிப்பா நீ இதில் ஜெய்க்கனும்.என் மனைவி மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு…உனக்கு எப்படியோ ஆனா எனக்கு இந்த நேரத்தில் உன் கூடவே இருக்கனும்ன்னு தோணியது வந்துட்டேன் ” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

அவனது கையணைப்பிலேயே சென்று காரில் ஏறிய நிலா…”என் கூடவே இருக்கனும்ன்னு தோணியிருந்தா நீங்க அப்பவே வந்திருப்பிங்க…இப்படி பத்து நாள் கழித்து வந்திருக்க மாட்டிங்க…?” என்றாள் மனம் தாங்கலாய்.

அவளை ஒரு நிமிடம் உற்று பார்த்தவன்…”உன்னால் என்னைக்குமே என்னை புரிந்து கொள்ள முடியாது.நீ கிளம்பிய அன்று இரவே நானும் டெல்லி வந்துட்டேன்.” என்று சூர்யா சொல்லவும்,நம்பாமல் அவளின் விழிகள் தெறிக்க…”நீ நம்பித்தான் ஆகனும்.உனக்கு எதிர் வீட்ல தான் நானும் இருந்தேன்.நீ என்னை கவனிக்கலையே தவிர…உன்னோட ஒவ்வொரு அசைவும் என் கண்காணிப்புக்கு உட்பட்டு தான் இருந்தது..” என்றான் சூர்யா அசால்ட்டாய்.

அவளின் பார்வையைப் பார்த்தவன்…”என்ன பார்க்குற…நீ என்ன தான் போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்து பாதுகாப்பா இருக்க முயற்சி செய்திருந்தாலும்…அந்த ருத்ரத்தால் ஒன்னும் முடியாதுன்னா நினைக்கிற.என்னோட கணக்கு சரின்னா….நான் வராம இருந்திருந்தா நீ இங்க வந்த ரெண்டாவது நாளே ருத்ரம் உன்னை தூக்கியிருப்பான்.நீ கேட்ட போலீஸ் பாதுகாப்பை எல்லாம் தூக்கி சாப்பிட அந்த ஆளுக்கு ஒரு நிமிஷம் போதும்…” என்றான் சூர்யா.

சூர்யா எவ்வளவு சொல்லியிருந்தாலும்…”நீ வந்த அன்னைக்கே நானும் வந்துட்டேன்…” என்ற அவனின் வார்த்தைகள் மட்டுமே நிலாவின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.அப்படியே  துள்ளிக் குதிக்க வேண்டும் போல் ஒரு உணர்வு…”நான் நினைத்தபடி சூர்யா வராமல் இல்லை. வந்திருக்கிறான்… நான் அறியாமலே என்னைப் பாதுகாத்திருக்கிறான்..இந்த பத்து நாட்களும் எனக்கு நிழலாய் இருந்திருக்கிறான்” என்று நினைத்த நிலா மனதிற்குள் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை.

சூர்யா காரை ஓட்டிக் கொண்டிருக்க…. அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் திடிரென்று அவனின் கன்னத்தில் முத்தமிட்ட நிலா…”தேங்க்ஸ் சூர்யா… தேங்க்ஸ் பார் எவ்விரிதிங்” என்றாள் முகத்தில் சந்தோஷத்தோடும், கண்களில் கண்ணீரோடும்.

அவளின் திடீர் முத்தத்தை எதிர்பார்க்காத சூர்யா…”ஐயோ ஆண்டவா…..இவ நல்லவளா…கெட்டவளா..? எப்ப என்ன செய்வான்னே தெரிய மாட்டேங்குது..” என்று மனதிற்குள் புலம்பினாலும்….அவளின் முத்தத்தை ரசிக்கவே செய்தான்.

“நிலா நீ உங்கப்பாவோடா கொலை கேசை மட்டும் எடுத்திருக்கலாமே..? எதுக்காக அந்த மூணு பொண்ணுங்க ரேப் அண்ட் மர்டர் கேஸையும் எடுத்த…?” என்றான் சூர்யா சந்தேகமாய்.

“இல்லை சூர்யா…அந்த பொண்ணுங்க கேஸை தோண்டியதால் தான் எங்களுக்கு இந்த நிலைமையே வந்தது.என்னை சீரழிக்கப் பார்த்து..,என் அப்பாவைக் கொன்று…” என்று சொல்ல வந்தவளால் அதற்கு மேல் சொல்ல முடியாமல் உதய குமாரின் நியாபகம் வந்து கண் கலங்க வைத்தது.

“அப்படின்னா அதை நீ இந்த இரண்டு வருஷத்தில் செய்திருக்கலாமே..? இப்ப ஏன்…?” என்று சூர்யா புரியாமல் பார்க்க…”ஹிம் நான் அப்பவே இதை பண்ணியிருந்தா அந்த ருத்ரம் என் பையன் கோமாவில் இருக்கான்…அதுல இருக்கான்..இதுல இருக்கான்னு சொல்லியே கேஸை ஒன்னும் இல்லாம பண்ணியிருப்பான்.கோர்ட்டும் அவன் சுய நினைவில் இல்லைன்னு தண்டனைய குறைச்சிருப்பாங்க….அவனை அப்படியெல்லாம் விட கூடாது.அவனுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் ஒன்னு தூக்கு தண்டனையா இருக்கனும் இல்லை இரட்டை ஆயுள் தண்டனையா இருக்கனும்…..இதுக்காகத்தான் நான் இவ்வளவு நாளா காத்திருந்தேன்…” என்றாள் நிலா கண்களி   ஜுவாலை மின்ன.

அவளின் வேகமும்….அவள் அதற்காய் காத்திருந்த விவேகமும் அவனை வியப்பில் ஆழ்த்தியது.சூர்யா மனதில் வியப்புடன்… நிலா மனதில் கொதிப்புடன் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

உன்  நிழலினை நெருங்கிட

நெருப்புமே பயப்படும் குழப்பங்கள் தேவையில்லை

தடை தாண்டி…படை தாண்டி…

உன் வெற்றிக்கு தூரமில்லை..

திமிரோடு நடைபோடு…

உன் கடமைக்கு ஓய்வு இல்லை…

 

]

Advertisement