Advertisement

முகவரி 13:

 

அருளும் ..சூர்யாவும் மோதிக் கொண்டிருக்க..நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. “இப்ப எதுக்கு ரெண்டு பேரும் இப்படி மோதிக்கிறாங்க…? ஒரு காபி சிந்துனதுக்கு எதுக்காக அருளுக்கு இப்படி கோபம் வரனும்..?” என்று நிலா யோசித்துக்  கொண்டிருந்தாள்.

 

பாவம் நிலா..இவர்களின் விட்ட கதை., தொட்ட கதையைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

 

சுற்றி இருப்பவர்கள்….அவர்களை வேடிக்கை பார்ப்பதை உணர்ந்து…சூர்யா., முதலில் அருளின் சட்டையை விட்டான். “இதோ பார்..பேரர் வந்ததை நான் கவனிக்கலை…இது தெரியாம நடந்த ஒன்னு…” என்றான் சூர்யா.

 

அருள்..” அதெப்படி..தெரியாம..நடக்கும்..நீ வேணும்ன்னு தான் பண்ணியிருக்க….எப்ப பார்த்தாலும் குறுக்க வரதே உனக்கு வேலையா போய்டுச்சு…” என்றான் அருள்…கோபமாய்.

 

சூர்யாவிற்கு இப்பொழுது உண்மையாகவே கோபம் வந்தது..”யாருடா…குறுக்க வந்தது..நானா..? இல்லை நீயா?” என்றான்  சூர்யா நக்கலாய்.

 

சூர்யா..கேட்டதன் உள் அர்த்தம் அருளுக்கு புரிய..அவனது கோபம் முன்பை விட அதிகமாகியது.

 

அருளின் கோபம் கண்டு…சூர்யாவிற்கு அந்த நேரத்திலும் நக்கலாய் சிரிப்பு வந்தது…” இப்ப உனக்கு என்ன பிரச்சனை…உன் மேல் காபி கொட்டியதா…? இல்லை நீ கர்ண சிரத்தையாய் காதல் பண்ணிகிட்டு இருக்கும் போது…அது இடையிலயே தடை பட்டதாலயா…?” என்றான் சூர்யா.

 

ஏற்கனவே..அருள் காதலை சொன்ன கடுப்பில் இருந்த நிலா…சூர்யாவின் வார்த்தகைக் கேட்டு..மிகவும் அசிங்கமாய் உணர்ந்தாள்.

 

ஏய் மிஸ்டர்…என்ன பேசுறோம்..ஏது பேசுறோம்ன்னு தெரிஞ்சுதான் பேசுறியா…? நீ பேசாம வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்க…?” என்றாள் மூச்சு வாங்க.

 

இதோ  பார்..எனக்கு என்ன.இவனை மாதிரி  வேலை வெட்டி இல்லைன்னா  நினச்சுகிட்டு இருக்க… என்று அருளைக் காட்டிய சூர்யா…” நீ காதல் பண்ணு..கல்யாணம் பண்ணு…இல்ல கருமாதி கூட பண்ணு..அதைப் பத்தி எனக்கு என்ன வந்தது. ஆனா.., தெரியாம பட்ட காபிக்காக, எகிறிகிட்டு வந்தது…., உன் அருமைக்  காதலன் தான். அதனால.., நீ எதை பேசுறதா இருந்தாலும் அவன் கிட்ட பேசிக்க. அதை விட்டுட்டு..என்னமோ நான் உன் காதலன் மாதிரி, இந்த ஏய் …போ..வா…அப்படின்னு மரியாதை இல்லாம  பேசுறதை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத ….ஒரு நேரம் போல ஒரு நேரம் நான் இருக்க  மாட்டேன்…” என்றான் சூர்யா.

 

சூர்யா…சொல்லி முடிக்கவும் நிலா…வாய் விட்டு சிரித்தாள். சூர்யா…கண்கள் இடுங்க அவளைப் பார்க்க., நிலாவோ.. இங்க பாருங்க ஜெண்ட்டில் மேன்…, “இவன் என் காதலன்..என்று சூர்யாவைக் காட்டியவள் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.  வாய் வார்த்தைக்கு கூட அந்த வார்த்தையை சொல்லாத.ஏன்னா அப்படி ஒரு நிலைமை வந்தா..நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. உனக்கு காதல் ஒன்னு தான் கேடா..?” என்றாள் கிண்டலாய்.

 

அவளின் வார்த்தையைக் கேட்ட..சூர்யா..ரவுத்திரமாய் மாறினான்.  “ஏய் என்னடி விட்டா..பேசிட்டே போற…செத்தாலும் உன்ன மாதிரி ஒரு திமிர் பிடிச்சவள…, இப்படி கண்டவனோட சுத்துறவள..நான் நினச்சுக் கூட பார்க்க மாட்டேன்..” என்றான் சூர்யா.

 

சூர்யா…அருள் மேல் இருந்தக் கோபத்தில் அவனை கண்டவன் என்று சொல்ல..” ஆனால் நிலாவோ..அவன் தன்னை தப்பாய் சித்தரித்து பேசுவதாக.., சரியாக ஆனால் தப்பாய் புரிந்து கொண்டாள்”.

 

நிலா..” ஏய் யாரைப் பார்த்து கண்டவன்னு சொல்ற…இவர் யார் தெரியுமா…நான் இவரைத்தான் லவ் பன்றேன்..இவரைத்தான் கல்யாணமும் பண்ணிப்பேன்..இவர் கூட நான் எங்க வேணும்னாலும் சுத்துவேன்…அதைக் கேட்க நீ யாருடா…?”  என்றாள் ..கோபத்தில் வார்த்தைகளை விட்ட படி.

 

நிலாவின் இந்த வார்த்தைகள்..சூர்யாவிற்கு நெருப்பை அள்ளிக் கொட்டியது என்றால்…அருளுக்கு பூக்களை அள்ளிக் கொட்டியது போல் இருந்தது. அவனது மனம் சிறகில்லாமல் பறக்க…சூர்யாவின் மனமோ…கல்லினும் கடின பாறையாய் மாறியது.

 

தான் கோபத்தில் வார்த்தைகளை விட்டதை அறியாத நிலா..” இனி என் வாழ்வில் குறுக்க வராதே..! “என்றாள் சூர்யாவைப் பார்த்து.

 

நெற்றி சுருங்க அவளைப் பார்த்த சூர்யா…” அப்படி குறுக்க வந்தா..என்னடி செய்வ…?” என்றான்  நிலாவை நேராய்ப் பார்த்தபடி.

 

அருள் காதலை சொன்னது…சூர்யா தன்னை தவறாக நினைத்து., அங்கு நடந்த கலவரம் இது எல்லாம் நிலாவைப் போட்டு ..பாடாய் படுத்த…, தன் நிலையில் இல்லாத நிலா..தேவையின்றி வார்த்தைகளை விட்டாள்.

 

சொல்லு..என்னடி செய்வ..?” என்றான் சூர்யா மறுபடியும்.

 

செருப்பால அடிப்பேண்டா..” என்றவள் கோபமாய் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

நிலாவின் வார்த்தைகளைக் கேட்ட சூர்யா…உண்மையாகவே செருப்பால் அடிவாங்கியதைப் போல் உணர்ந்தான். “அருளுக்கோ..நிலா, சூர்யாவைப் புறக்கணித்ததைப் பார்த்து மனதிற்குள் இதமாக இருந்தது.  அதே சமயம் அவன் தன்னை காதலிக்கிறாள் என்று அவனும் சரியாய் , தப்பாய் புரிந்து கொண்டான்”.

 

போகும் போது ., சூர்யாவை ஒரு எகத்தாளப் பார்வை பார்த்துவிட்டுப் போனான் அருள்.

 

ஆனால்…. அருளோ., நிலாவோ அப்பொழுது உணர்ந்திருக்கவில்லை..இனி அவர்கள் வாழ்க்கை சூர்யா கையில் என்பதை.

 

 சூர்யாவை அப்படி பேசிவிட்டு வந்த நிலாவின் மனம்….காரணமின்றி தவித்தது.தனது பேச்சின் தாக்கத்தை அப்பொழுதான் அவளும் உணர்ந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இயலாமையா..? இல்லை சூர்யாவை அப்படி பேசிவிட்டோம் என்ற குற்ற உணர்வா..? எதுவென்று அவளால் பிரித்தறிய முடியவில்லை.தன்னையும் மீறி அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.”இப்ப எதுக்கு நாம அழனும்…நான் என்ன தப்பு செய்தேன்…என்று ஒரு மனம் நினைக்க…மற்றொரு மனம்..இன்று காலையில் கண்ட கனவையும்..இப்பொழுது நடந்த பிரச்சனையையும் ஒப்பிட்டு பார்த்து கலக்கம் அடைந்தது.

 

என்ன இது அவனை திட்டிட்டு.., நான் ஏன் இப்படி புலம்பித் தவிக்கிறேன்..” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் நிலா.

 

நீ பேசியது சரிதான் நிலா., அவன் எப்படி உன்ன அப்படி சொல்லலாம்..” என்று இன்னொரு மனம் அவளை சமாதானம் செய்தது.

 

இன்னைக்கு விடிந்ததில் இருந்து என் நேரமே சரி இல்லை.நடப்பது எல்லாம் ஏட்டிக்கு போட்டியாவே நடக்குது.”இதுல இந்த அருள் வேற…காதல் அது இதுன்னு பிணாத்துறான்..நான் எப்ப அவன என் ஹஸ்பெண்ட்னு சொன்னேன்..” என்று யோசித்தாள் நிலா. ஆனால் அவளுக்கு நியாபகத்திற்கு வரவே இல்லை. அவள்  சொல்லி இருந்தால் தானே நியாபகத்திற்கு வர. இனிமே இவனுங்களைப் பத்தி நினைக்கவே கூடாது. என்று மனதில் நினைத்தவாறு…சென்றாள் நிலா.

 

                                                ***********

 

முரளி தளர்வாய் வீட்டிற்குள் நுழைந்தார். மகேஷ்வரி அவர் பேசுவதற்கே இடம் கொடுக்காததும்…தன்னை  மன்னிக்காததும் அவரை மேலும் தளர்த்தியது.முரளி உள்ளே வருவதைப் பார்த்த தீபா….தண்ணீர் எடுத்துக் கொண்டு போய் …அவருக்கு கொடுத்தாள். அவருக்கும் அந்த நேரத்தில் அது மிகவும் தேவையாய் இருந்தது.வேகமாய் தண்ணீரை வாங்கி குடித்து முடித்தார்.

 

என்னப்பா சொன்னாங்க…மகி அம்மா..? உங்களை மன்னிச்சுட்டாங்களா..? உங்க தரப்பு நியாயத்தை நீங்க சொன்னிங்களா..?” என்றாள் தீபா…அடுக்கடுக்காய் கேள்விகளுடன்.

 

தீபாவை அமைதியாகப் பார்த்த முரளி..சோர்ந்தவராய் சோபாவில் சாய்ந்தார்…..“அவ என்னை மன்னிக்கவும் இல்லை,….என்னை பேசவிடவும் இல்லைமா…அவ கோபம் கொஞ்சம் கூட குறையலை..என்னோட பழைய மகியா அவ இல்லை..” என்றார் முரளி.

 

அவரை எரிச்சலாய்ப் பார்த்த தீபா..” அதெப்படிப்பா..அவங்க உடனே மன்னிப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியும்..அவங்க பட்ட அவமாங்களும்…வலிகளும் அதிகம். அதுவும் இத்தனை நாள் நீங்க உயிருடன் இல்லைன்னு நினைச்சு வாழ்ந்தவங்களுக்கு., நீங்க உயிரோட வந்தது ஒரு அதிர்ச்சின்னா …..நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளைங்களோட இருக்குறது அதை விட அதிர்ச்சியா இருக்கும்..இப்படி இருக்கும் போது..அவ என் பழைய மகி இல்லைன்னு நீங்க எப்படி சொல்ல முடியும். அவங்க பழைய மகேஷ்வரியாத்தான் இருக்காங்கப்பா..ஆனா நீங்க தான் பழைய முரளியா இல்லாம…புது முரளியா மாறிட்டிங்க…” என்றாள் கண்டிக்கும் தொணியில்.

 

முரளிக்கு தீபாவை நினைத்து பெருமையாக இருந்தது.” இன்னும் குழந்தையாகவே இருக்கிறாள்…பக்குவம் இல்லை என்று சுதா.. தன் மகளை சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று அப்பொழுது உணர்ந்தார் முரளி.இதோ இன்று தனக்கே தாயுமானவளாகி..புத்தி சொல்லிக் கொண்டிருக்கிறாள் தன் மகள்..” என்று நினைத்த முரளிக்கு நெஞ்சம் விம்மியது.

 

அய்யோ..! தன் அப்பாவா இப்படி என்று…கோபப்படவில்லை. அருள் மாதிரி ஆத்திரப்படவில்லை.இந்த நேரத்திலும் எவ்வளவு பொறுமையாக அனைத்தையும் யோசிக்கிறாள். ஒவ்வொன்றையும் நிதானமாககையாளுகிறாள் என்று நினைத்தார் முரளி. ” அப்பொழுதுதான் அவருக்கு நியாபகம் வந்தது…தீபாவும்,சூர்யாவும் ஒரே ஜாடையில் இருப்பது. ஜாடையிலும்  அப்படித்தான்., குணத்திலும் அப்படித்தான் போல என்று நினைத்த முரளிக்கு…, சூர்யாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது “.

 

அன்று சூர்யாவும் இதே போல் நிதானமாகத்தானே இருந்தான்… என்று நினைத்த முரளியின் மனம் அருளை நினைத்து கவலை அடைந்தது…இப்படி தன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தவரை..தீபாவின் குரல் இடைமறித்தது.

 

அப்பா..இப்ப தெரிந்த உண்மைகள் , உங்களுக்கு எவ்வளவு வேதனையைத் தரும்ன்னு எனக்குப் புரியுது.ஆனா அதுக்காக நீங்க எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும். ஆபீஸ் போகனும்., உங்களுக்கான கடமை இன்னும் நிறைய இருக்குப்பா…அதுக்கு முதலில் உங்களுக்கு தெம்பு வேணும்..நடந்ததைப் பத்தி யோசிக்காம..இனி நடக்கப் போறதப் பத்தி யோசிங்கப்பா…நல்லா யோசிச்சு முடிவெடுங்கப்பா…உண்மை எல்லாம் தெரிந்த பிறகு…நீங்க மகி அம்மா கூட இருக்க விருப்பப் பட்டாலும்., நான் தப்பா நினைக்க மாட்டேன்ப்பா…என்று சொல்லும் போதே..தீபாவின் குரல் தடுமாறி.,அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியெனக் கொட்டியது…”

 

தீபாவின் வார்த்தைகளைக் கேட்ட முரளி திகைத்தார்.ஒரு மகள் இப்படி சொல்லி கேட்கவேண்டிய நிலை…தன்னைப் போல் எந்த தந்தைக்கும் வரக் கூடாதென்று நினைத்தார் முரளி.

 

தீபா..என்று அவளின் தலையைப் பரிவாக தடவியவர்…கணவன் அப்படின்ற கடமையில் இருந்து நான் தவறி இருந்தாலும்…ஒரு தகப்பனா நான் என் கடமைய கண்டிப்பா செய்வேன் தீபுக் குட்டி., உனக்கும் அருளுக்கும் மட்டுமில்லை., சூர்யாவிற்கும் சேர்த்து தான் சொல்றேன்”. என்று உறுதியாய்க் கூறிய முரளியின் கண்களில் சூர்யாவுக்கு நான் அந்த கடமையை இத்தனை நாள் செய்யவில்லையே..! என்ற ஏக்கம் அப்பட்டமாக படர்ந்திருந்தது. ஒரு தகப்பனாய் சூர்யாவின் வளர்ச்சியில்தன் பங்கு இல்லையே..! என் மூத்த மகன்..என் குடும்பத்தின் மூத்த வாரீசு…இத்தனை நாள் யாருமற்ற அனாதை போல் இருந்திருக்கிறான் என்று நினைத்த முரளிக்கு…தான் செய்தது எவ்வளவு பெரிய  துரோகம் என்று   வேதனையில் துடித்தார் முரளி.

 

முரளியின் முகத்தை வைத்தே..அவரின் மனதில் உள்ளதை தெளிவாகப் புரிந்து கொண்டாள் தீபா.அவரின் கைகளை இறுகப் பற்றியவள்..” கவலைப் படாதிங்கப்பா …. எல்லாப் பிரச்சனையும் ஒரு நாள் முடியும்.இரவுன்னு இருந்தா…பகல் கண்டிப்பா இருக்கும்ப்பா…அடுத்து நடக்க வேண்டியதப் பத்தி யோசிங்க..” என்றாள் தீபா…பெரிய மனுஷியாய்.

 

தந்தையற்றவனாய்…தன் தாயின் வளர்ப்பில் வளர்ந்து..இத்தனை பெரிய தூரத்தை அடைந்த, தன் மகன் சூர்யாவை  நினைக்கும் போது…முரளிக்கு பெருமிதம் தாண்டவமாடியது.

 

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட சுதாவிற்கு….”யாரும் தன்னை ஒரு பொருட்டாக நினைக்காதது போல் இருந்தது. பெத்த மகளே தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாள்..,கட்டிய புருஷன் நான் ஒருத்தி இருப்பதையே விரும்பவில்லை. அருள் மட்டும் இல்லையென்றால் என் நிலை..” என்று யோசித்த சுதாவிற்கு தன் மீது தனக்கே கழிவிரக்கம் தோன்றியது.

 

இன்று முரளி..மகேஷ்வரியின் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார் அன்று அறிந்த சுதாவால்…அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னதான் கட்டுப் படுத்த முயன்றாலும் அவருக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்னவோ உண்மைதான்.வேகமாய் வெளியில் வந்தவர்…

 

இப்ப எதுக்காக…, அங்க போய்ட்டு வந்திங்க..இப்படி அவமானப்படவா..? ” என்றார் சுதா.

 

அவரின் கேள்விகளைக் கேட்ட முரளிக்கு., கோபம் தலைக்கு மேல் ஏறியது. இருந்தாலும் உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..என்ற தோரணையில் அமர்ந்து இருந்தார். அது சுதாவிற்கு இன்னமும் கோபத்தைத் தூண்ட…

 

என்னப் பார்த்தா ..உங்களுக்கு எல்லாம் எப்படி தோணுது.தப்பு பண்ணினேன் தான் ..இல்லைன்னு சொல்லலை. ஆனா நானவா பண்ணினேன்…உங்கம்மா..என் அத்தை சொன்னதால தான் செஞ்சேன்.என்ன வளர்த்தவங்க..என்கிட்ட இதை செய்ன்னு சொல்லும் போது நான் என்ன செய்ய முடியும்..” என்று ஆத்திரத்தில் உதடு துடிக்கக் கேட்டார் சுதா.

 

முரளி இப்பொழுதும் அமைதியாக இருக்க..தீபாவிற்கு தான் கோபம் குமுறிக் கொண்டு வந்தது…” என்னம்மா…உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை…அப்பா..அங்க போய்ட்டு வந்ததுதான் பிரச்சனையா…ஆமா அப்பா அங்கதான் போனாரு..நான்தான் போய்ட்டு வர சொன்னேன்..இப்ப என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறிங்க…?” என்றாள் தீபா..கோபமாய்.

 

தீபபாஅ… என்று சுதா..கத்த..” சும்மா கத்தாதிங்கம்மா…ஒரு நாள் மகி அம்மாவைப் பார்க்க போய்ட்டு வந்ததையே உங்களால் தாங்க முடியலை. ஆனா நீங்க 25 வருஷமா..அவங்க புருஷன அவங்ககிட்ட இருந்து பிரிச்சு..அவங்க வாழ்க்கைய வாழ்ந்து இருக்கிங்களே..அப்ப அவங்களுக்கு எவ்வளவு கோபம் வரனும்..சொல்லுங்க..எவ்வளவு கோபம் வரனும்..ஏதாவது ஒரு கட்டத்துலையாவது திருந்துங்கம்மா…” என்றாள் ஆங்காரமாய்.

 

தீபா…என்று முரளி தடுக்க வர..” நீங்க சும்மா இருங்கப்பா..இதை இப்படியே விட்டா சரிவராது. இத்தனை நடந்ததுக்கு அப்பறமும் அம்மாக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையேப்பா..அதுதான் எனக்கு வேதனையா இருக்கு…” என்றவள் சுதாவின் முகத்தைப் பார்ப்பது கூட பாவம் என்பது போல் சென்று விட்டாள்.

 

தீபா சொன்னது உண்மைதான்…தப்பு செஞ்சா..ஏதாவது ஒரு இடத்துலையாவது திருந்தனும்..ஆனா நீ…அதுக்கு எல்லாம் தகுதியானவ கிடையாது. இங்க என்ன வேடிக்கைன்னா..உன் பொண்ணு தீபான்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க… உன் வயித்துல பிறந்தாலும்.நல்ல வேளை என் பொண்ணு உன்ன மாதிரி பிறக்கலை…” என்று வெறுப்புடன் கூறி விட்டு சென்றார் முரளி.

 

தன் வீட்டிலேயே., தான் தனிமைப் படுத்தபட்டது போல் உணர்ந்தார் சுதா.

 

உற்சாகமாய் வீட்டிற்குள் நுழைந்தான் அருள்.உள்ளே…வந்தவன் வேகமாய் தீபாவின் அறைக்கு சென்றவன்..அவளை தர தரவென்று இழுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான்.

 

தீபா ஒன்றும் புரியாமல்…அவன் பின்னே செல்ல…அருளுக்கு தலைகால் புரியவில்லை.

 

என்ன அண்ணா..அப்படி என்ன விஷயம்..இவ்வளவு சாந்தோஷமா இருக்க..? என்றாள் தீபா.

 

தீபுக் குட்டி…அது வந்து…நான் எப்படி ..அது என்று இழுத்துக் கொண்டிருந்தான்.

 

சரி நீ யோசிச்சுட்டு அபறம் சொல்லு., நான் கீழ போறேன் என்றவாறு தீபா கிளம்பப் போக., அவளைக் கைப் பிடித்து தடுத்தான் அருள்.

 

தீபு.., நான் அவளைப் பார்த்தேன்..” என்றான் மொட்டையாய்.

 

ஒன்றும் புரியாத தீபா..” யாரை என்று..நெற்றி சுருக்கிக் கேட்டாள்”.

 

அதான் தீபு… நிலாவைப் பார்த்தேன்..” என்று நடந்ததை சொன்னான் அருள். ஆனால் சூர்யாவைப் பற்றியோ..அங்கு நடந்த சண்டையைப் பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

 

அப்படியா..அண்ணா…வாழ்த்துக்கள்..எப்படியோ இந்த ரணகலத்துலையும் உன் லவ்வ சொல்லி கன்பார்ம் பண்ணிட்ட…” என்றாள் தீபா.

 

அவளின் பதிலில் அருளுக்கு ஏதோ ஒன்று உறுத்தியது…”இடக்காக சொல்கிறாளா..என்று தீபாவின் முகம் பார்க்க., அவள் சாதரணமாகத் தான் இருந்தாள்..”.

 

சாரி தீபா..எனக்கு அவசரம் எல்லாம் ஒன்னும் இல்லை. ஏற்கனவே இருந்த பிரச்சணையில்..இது வேற என் மனச உறுத்திகிட்டே இருந்தது..அதான் சரி கன்பார்ம் பண்ணிக்கலாம்ன்னு, இன்னைக்கு நிலாகிட்ட பேசிட்டேன். இப்ப கொஞ்சம் மனசு லேசான மாதிரி இருக்கு..”

 

சரிண்ணா…நல்ல விஷயம் தான் …என்றவள் வேகமாய் கீழே இறங்கி சென்று விட்டாள்.

 

என்னாச்சு தீபுக் குட்டிக்கு….என்று யோசித்த அருளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதுக்காக இப்படி போறா…என்று யோசித்துக் கொண்டிருந்தான் அருள்.அப்பொழுதுதான் அவனுக்கு மின்னல் வெட்டியது. ச்சை..இதை எப்படி மறந்தோம்…என்று தன்னைத் தானே குட்டிக் கொண்டான் அருள்.

 

தீபா..கல்யாண பேச்சு வார்த்தை இடையில் நிற்பது அருளுக்கு அப்பொழுதுதான் நியாபகத்திற்கு வந்தது.

 

உடனே..அவன் மனதில்கோபமும் வந்தது. வெரும் நடிப்புக்காக வந்து பொண்ணுப் பர்த்துட்டு போனவங்கதான..இது தெரியாம..நானே தீபா மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டேன்.என்ன பன்றது என்று யோசித்தவன்………….. தீபாவிற்கு விரைவில் ஒரு நல்ல மப்பிள்ளையாய் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கனும்..அவனுங்க மூஞ்சியில் கரியப் பூசனும்…” என்று முடிவெடுத்துக் கொண்டான் அருள்.

 

ஆனால் அறைக்குள் சென்ற தீபாவோ… குழுங்கி..குழுங்கி அழுது கொண்டிருந்தாள்.என்ன தான் அது நாடகம் என்றாலும்..அவளுக்கு ஜீவாவை பிடித்துப் போய் அவனை மனதில் தன்னவனாய் வரித்துக் கொண்டாள். ஆனால் அது எல்லாம் உண்மை இல்லை என்று தெரிந்த நொடி…அவள் ஜீவாவை வெறுத்தாள்… இல்லையில்லை வெறுப்பது போல் நடித்தாள் என்பது தான் உண்மை”.

 

வீட்டிலிருக்கும் பிரச்சணைகளைப் பார்த்து அவள் துவண்ட போது எல்லாம்…ஜீவாவின் மார்பில் சாய்ந்து அழுதால் தனது பாரம்  எல்லாம் தீரும் என்று அவள் மனம் நினைக்கத்தான் செய்தது. ஆனால் விதி அவள் வாழ்க்கையில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுது கொண்டிருந்தாள்.

 

.உன்னை எங்கோ பார்த்தேன்..

ஒரு நாள் காவியம்…

என்னை என்னக் கேட்டாய்…

மறுநாள் நாடகம்…

அன்பின் வாசல் போடும்…

திரைகள் ஆயிரம்…

இன்பம் இங்கே நாளும்…

இருளின் ஓவியம்….

 

ஆனால் அவளைப் பார்த்த அருளோ..அவளது அழுகையைத் தப்பாய்ப் புரிந்து கொண்டான்.  அவனுக்கு சூர்யாவின் மேலும்., ஜீவாவின் மேலும் கோபம் இன்னும் பெருகியது.

 

விதி அனைவரின் வாழ்க்கையிலும்..ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறது. மதி உள்ளவன் விதியை வெல்கிறான். மதியைப் பயன்படுத்த தவறியவன்..விதியின் போக்கில் தானும் செல்கிறான்.இதி அருள் இரண்டாவது வகையாறவைச் சேர்ந்தவனாய் இருந்தான்.

 

                                                 ———————–

 

சூர்யா..அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான். மானைத் தவற விட்ட சிங்கம் போல் இருந்தது அவன் முகம்…அவ்வளவு கோபத்துடன்.

 

என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தைய..ஏண்டா சொன்னோம்ன்னு நினைச்சு., நினச்சு நீ அழுகனும்டி…நினைக்க வைப்பேன்..அப்படி செய்யலை  நான் சூர்ய வேந்தன் இல்லைடி..” என்று நிலாவிடம் நேரில் பேசுவது போல் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான் சூர்யா.

 

அடுத்ததாக அவன் கவனம் அருளின் மேல் வந்தது. மேஜையைப் பார்க்க..அதில் அருளைப் பற்றிய வரலாறே இருந்தது.அதைக் கையில் எடுத்தவன்…” உனக்கு இன்னைக்கு இருந்து ஆரம்பிக்குதுடா…ஏழரை. போனாப் போகுது…பொடிப் பையன்னு பார்த்தா., என்னவே சீண்டிப் பாக்குறியா நீ ….இனி ஒன்னும் செய்ய முடியாது அருள் தம்பி…. உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது. இனி தான் நீ பார்க்க போற., இந்த சூர்யா யாருன்னு..” என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான் சூர்யா.

 

அப்பொழுது உள்ளே..நுழைந்தான் ஜீவா.”சூர்யா..நம்ம புது ஜுவல்லரி ஆரம்பிக்கறது சம்பந்தமா…மீட்டின் ஏற்பாடு பண்ண சொன்னியே…எல்லாம் பக்காவாப் பண்ணியாச்சு…11 மணிக்கு மீட்டிங்க்..இப்ப மணி 10.” என்றான் ஜீவா.

 

தேங்க்ஸ்டா….என்று நியாபகம் வந்த சூர்யா…அத்றகான தயாரிப்பில் ஈடுபட்டான். அவனைப் பார்த்த ஜீவாவிற்கு

 

பாவமாகவும் இருந்தது அதே சமயம் பெருமையாகவும் இருந்தது. முன் தினம் காபி ஷாப்பில் நடந்த அத்தனையும் ஜீவா அறிந்து இருந்தான்.ஆனால் சூர்யாவிடம் கேட்டு அவனைக் கஷ்ட்டப் படுத்த ஜீவா விரும்பவில்லை.  

 

நிலாவிற்கு அன்று படபடப்பாய் இருந்தது. ஏனென்றால் அன்று தான் அவள் தன் எம்.டி. யைப் பார்க்கப் போகிறாள். முதலில் சுதாகரன் வந்து இன்றைக்கு மீட்டிங்க் என்று சொன்ன போது..நிலாவுக்கு  சூர்யாவைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் மிகுந்தது. ஆனால் நேரம் ஆக..ஆக..அதுவே அவளுக்கு படபடப்பாய் மாறியது. அது என்னவென்று அவளால் சொல்ல முடியவில்லை.

 

தனது டிசைன்களை எல்லாம்..சீர்படுத்தி…ஒரே பைலில் போட்டு சரியாக வைத்தாள்.கடவுளே..இதெல்லாம் எம்.டி.க்கு பிடிக்கனும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள் நிலா.

 

மணி பதினொன்றைக் காட்ட…அனைவரும் மீட்டிங்க் ஹாலில் நுழைந்து இருந்தனர். நிலாவும் பரபரப்பாய் அங்கு தனக்கான இடத்தில் அமர்ந்து இருந்தாள். அனைவரும் அவளை வித்யாசமாகப் பார்க்க…நிலா சுதாகரனிடம் குனிந்து..” அப்பா.,என்ன எல்லாரும் என்னை இப்படி பார்க்குறாங்க..”என்றாள்.

 

அது ஒன்னும் இல்லை நிலாம்மா..எப்பவும் புதுசா ஜாயின் பண்ணவங்க எல்லாம் மீட்டிங்க்கு வர முடியாது.ஆனா நீ வந்துருக்க இல்லை..அதான் அப்படிப் பார்ப்பாங்க..நீ அதெல்லாம் கண்டுக்காத நிலா..” என்றார் சுதாகரன். நிலாவிற்கு இப்பொழுது  ப்ரஷர் அதிகமாய் உயர்ந்தது.” அப்படின்னா..நம்மல எதுக்கு மீட்டிங்க் வர சொல்லனும்..” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளது யோசனையைக் கலைப்பது போல் கேட்டது அந்த காலடி சத்தம்..”கருப்பு வண்ண..கோட் சூட்டில் மிடுக்காய் நடந்து வந்து கொண்டிருந்தான் சூர்யா. அவனுக்கு இணையாக., சற்றும் குறைவில்லாதது போல்  வந்து கொண்டிருந்தான் ஜீவா”

.

நிலாவிற்கு இது பேரதிர்ச்சி…இவனா..இவனா..சூர்யா…இவன் பேரா சூர்யா..என்று நினைத்தவளுக்கு தலை சுற்றுவது  போல் இருந்தது.அனைவரும் அமர்ந்த பின்னரும் அவள் அமராமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் நிலா.

 

இப்படியே… இப்படியே…

இறந்துவிடக் கூடாதா…

என்கண்ணில் உன் இமைகள்….

பொருந்தி விடக் கூடாதா…

இப்படியே..இப்படியே..

இறந்துவிடக் கூடாதா..

இப்படியே காலங்கள்..

உறைந்து விடக் கூடாதா…

 

 

முகவரி 14:

 

சூர்யாவைப் பார்த்த நிலா..அதிர்ச்சியில் அப்படியே சிலையென நின்றாள். இது வரை அவள் கேள்விப் பட்ட எம்.டி. சூர்யாவைப் பற்றிய அனைத்து நல்ல விஷயங்களும் அவள் கண் முன்னால் வந்து வந்து போனது.அந்த அலுவகமே..அவன் பேரை சொன்னாலே…அப்படி புகழ்ந்து தள்ளும். அதே சமயம்…நிலா, சூர்யாவை சந்தித்த அனைத்து சந்தர்ப்பங்களும் அவள் கண் முன்னால் வந்து வந்து போனது.இதில் எந்த முகம் இவனின் உண்மையான முகம் என்று அவள் குழம்பித் தவித்தாள்.

 

சூர்யாவின் நடையில் தெரிந்த ஒரு மிடுக்கும். ஒரு ஆளுமைத் திறனும்., அங்கிருந்த அனைவரையும் பார்வையாலயே கட்டிப் போட்ட..அவனின்  அதிகார தோரணையும்..அவள் கண்ணில் பட்டாலும் அவள் சிந்தைக்கு எட்டவில்லை.”பார்த்த விழி..பார்த்தபடி பூத்து இருக்க..,”  என்பதை போல் நின்றிருந்தாள் நிலா.

 

சூர்யாவுடன் வந்த ஜீவாவும் அப்பொழுதுதான் நிலாவைப் பார்த்தான்…” ஐயோ..! இந்த பொண்ணா…! கடவுளே….! இன்னைக்கு என்ன நடக்க காத்திருக்கோ…! நீ தான் காப்பாத்தனும். இந்த பொண்ணு இங்கயா வொர்க் பண்ணுது…இது தெரியாம போய்டுச்சே ஜீவா…” என்று மனதிற்குள்  புலம்பியபடி..அதே நேரம் அது வெளியில் தெரியாபடி வந்தான் ஜீவா.

 

நிலா..சூர்யாவை பே….என்று பார்த்துக் கொண்டிருக்க…மற்ற அனைவரும் அவளையே..! பே…என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.சுதாகரனுக்கோ ஒன்றும் புரியவில்லை.”இப்ப எதுக்கு நிலா பொண்ணு ., சூர்யா தம்பிய இப்படி பார்த்துகிட்டு நிற்குது..” என்று அவரும் அவர் பங்குக்கு யோசித்துக் கொண்டிருந்தார்.

 

தன் இருக்கையின் அருகில் வந்து அனைவருக்கும் ஒரு பொதுவான வணக்கத்தை சொல்லிவிட்டு..,   அமர்ந்தான் சூர்யா.அவனைப் பின்பற்றி ஜீவாவும் அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

 

சூர்யா ஆமர்ந்த பிறகும்., நிலா தன்னிலையில் இருந்து அசையாது நின்று கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்த ஜீவாவின் மூளைக்குள்…மணி அடித்தது..”என்ன பூகம்பம் வருமோ..!” என்று நினைத்துக் கொண்டிருந்தான் ஜீவா.ஆனால் நடந்தது எல்லாம் அவன் எதிர் பார்த்ததுக்கு எதிர்மறையாக நடந்தது.

 

நிலாவைப் பார்த்த சூர்யா…அப்பொழுதுதான் அவளைப் புதிதாய் பார்ப்பது போன்று பார்த்து வைத்தான்.ஹல்லோ..மிஸ்ஸ்..என்று அவன் இழுக்க…”நிலா சார் என்று சுதாகரன் எடுத்துக் கொடுத்தார்”.

 

மிஸ்.நிலா…எதுக்காக இப்ப இப்படி நிக்குறிங்க….சிட் டவுன் என்றான் சூர்யா.

 

இவன் என்ன  முன்ன பின்ன தெரியாதமாதிரி பேசுறான்…என்னம்மா நடிக்கிறான் கருவாப்பைய….திமிர் எல்லாம் திமிர்..ச்ச..கடைசியில் இவன் ஆபீஸ்லயா நான் வேலை பார்க்குறேன். கடவுளே..! சும்மாவே இவன் தய்யா தக்கான்னு குதிச்சு என் உசுர வாங்குவான்…இனி…கேட்கவா வேணும்..” என்று மனதில் நினைத்தபடி அமர்ந்தாள் நிலா.

 

ஆனால் சூர்யாவோ…அவள் ஒருத்தி அங்கு இருந்ததை கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. அவன் தன் வேலையை செய்வதில் மும்பாரமாக இருந்தான். தான் புதிதாய் ஆரம்பிக்கும் ஜுவல்லரி ஷாப்  பற்றி விரிவாக விவரித்தவன்..,அதில்… தான் புகுத்தப் போகும் புதுமையான உத்திகளை பற்றி வெகு சீரியசாக விவரித்துக் கொண்டிருந்தான். இதில் அவனுடைய பணியாளர்களின் பங்கு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கூறிக்கொண்டிருந்தான்.

 

நிலாதான் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அப்படியே இருந்தாள்.அவளுக்கு சூர்யா பேசிய எதுவும் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.அவள் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். “பரவாயில்லை..,திமிர் பிடிச்சவனா இருந்தாலும்..மூளை உள்ளவன் தான்..” என்று நிலாவின் மனம்., அவளறியாமல் சூர்யாவை மெச்சிக் கொண்டிருந்தது. ஆனால் சூர்யாவோஅவளை சிறிதும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

 

நிலாம்மா…என்னாச்சு..ஏன் ஒரு மாதிரி இருக்க..?”  என்றார் சுதாகரன்.

 

அவரது கேள்வியில் தெளிந்தவள்..” அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா…லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்குப்பா..அதான்..” என்றாள் நிலா..சமாளிப்பாய்”.

 

அவளது பதிலை அவர் நம்பவில்லை என்பது அவரது முக பாவணையில் இருந்து தெரிந்தது.அவரை சந்திக்க முடியாமல் நிலா..தலையைக்  குனிந்து கொண்டாள்.

 

மீட்டிங்க்..முடிந்து அனைவரும் வெளியே செல்ல….சுதாகரனும் எழுந்து சென்றார். நிலா கடைசியாக செல்ல முற்பட…” ஒரு நிமிஷம்…” என்றான் சூர்யா அதிகாரமாய்.

 

செல்ல அடி டுத்து வைத்தவள் அப்படியே.. சடனாக பிரேக் போட்டது போல் நின்றாள். சூர்யாவுக்கு அருகில் இருந்த  ஜீவாவோ..” போச்சு..எல்லாம் போச்சு…மறுபடியும் என்ன நடக்க போகுதோ…? ”  என்று கவலைப் பட்டான் சூர்யாவின் குணம் அறிந்தவனாய்.

 

நிலாவின் முன் வந்த சூர்யா..அவள் முகத்துக்கு நேராய் சொடக்கு போட்டான்..” பரவாயில்லையே…உனக்கு அமைதியா கூட இருக்க தெரியுமா…? என்ன ஒரு ஆச்சர்யம்…வாயத் திறந்தா மூட மாட்ட..இன்னைக்கு என்ன அப்படி ஒரு அமைதி” என்றான் தோரணையாய்.

 

அதான இந்த கருவாப்பயலுக்கு என் கிட்ட வாங்கிக் கட்டலைன்னா தூக்கமே வராது போல….” என்று மனதில் நினைத்த நிலா…அந்த தொணியை முகத்திலும் காட்ட.., அதைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டான் சூர்யா.

 

இதோப் பார் உன்னை பேச விட்டு வேடிக்கைப் பார்த்த காலம் எல்லாம் மலையேறிப் போய்டுச்சு….நீ என்ன ரொம்ப சீண்டிட்ட….இனி தெரியும்டி உனக்கு இந்த சூர்யா யாருன்னு…!” என்றான் சூர்யா.

 

நிலா…”அப்படியா…! ஐயோ…பாரு எனக்கு எவ்வளவு  பயம்ன்னு…” என்று நக்கலாய்க் கூறியவள்…” உன் ஆபீஸ்ல வேலை  செய்றேன்றதுக்காக, நீ என்ன வேணும்னாலும் பேசலான்னு நினைக்காத…நெவர் இந்த நிலா ஒரு போதும் உனக்கு அடி பணிய மாட்டாள்..” என்றாள் தலையை சிலுப்பிக் கொண்டு.

 

ஹா..ஹாஅ…என்று வாய்விட்டு சிரித்தான் சூர்யா.

 

நான் என்ன சொல்லிட்டேன்னு..இப்ப எதுக்கு இந்த குடிகாரன் சிரிக்கிறான்..” என்று யோசித்தாள் நிலா.

 

சிரிப்பை நிறுத்திய சூர்யா..” அப்பறம் எப்படி இருக்கான் உன் ஹஸ்பெண்ட்…சாரி..சாரி உன் காதலன் ..” என்றான்.

 

அதுவரை அருள் என்ற ஒருவன்.., நிலாவின் சிந்தையிலேயே இல்லை.ஆனால் சூர்யாவின் முன் அவளது பிடிவாதம் விழித்துக் கொண்டது..ஹா..ஹா…என்று  அவனைப் போலவே சிரித்த நிலா..” என் காதலன் சூப்பரா இருக்கான்…சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம்…. அதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க..?”  என்றாள் நிலா.

 

அவளை கண் இடுங்க பார்த்தவன்..” நீங்க லவ் பன்றிங்க…நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறிங்க….இதில்  நான் நினைக்க என்ன இருக்குன்னு நினைக்கிறிங்க ,…மிஸ் நிலா…”  என்றான் சூர்யாவும் கிண்டலாய்.

 

சூர்யா அப்படி சொன்னதில்..நிலாவின் மனம் ஏதோ ஒரு இடத்தில் துணுக்குற்றது. ஆனால் அதை ஆராயும் மன நிலையில் அவளது பிடிவாதம் அவளை விடவில்லை.

 

ஆனால் அவர்களுக்கு இடையில் நின்றிருந்த ஜீவாவின் நிலை தான் அதோ பரிதாபமாய் இருந்தது.” ஜீவா உன் நிலைமை இப்படியா ஆகனும்…..ரெண்டு நாள் ஆனாக் கூட ரெண்டு பேரும் நிறுத்த மாட்டாங்க போலவே…” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான் ஜீவா.

 

சூர்யா… நமக்கு பார்க்க வேண்டிய வேலை நிறைய இருக்கு….. என்று நியாபகப் படுத்தினான் ஜீவா  ”.

 

ஓகே…மிஸ்.நிலா.. உங்க வாயக் குறைச்சுட்டு…..சீக்கிரம் உங்க டிஸைன்ஸோட வந்து என்ன மீட் பண்ணுங்க…” என்று அவளது எம்.டியாய் அவளுக்கு உத்தரவு பிறப்பித்தவாறு சென்றான் சூர்யா.

 

சீக்கிரம் வந்து என்ன மீட் பண்ணுங்க…”என்று அவனைப் போல் சொன்ன நிலா…”இவன் திமிரை அடக்கலை நான் நிலா இல்லை..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

 

சில நாட்களாக அலுவலகம் செல்லாததால் முரளிக்கு வேலை மலை போல் குவிந்து இருந்தது. அவர் வராத இந்த நாட்களில்..அருள் சரியாய் வேலை பார்த்ததற்கான  எந்த அறிகுறியும் அவருக்கு தெரியவில்லை.”அருளையும் குற்றம் சொல்ல முடியாது…, அவன் ஒருவனாய் எத்தனை வேலைகளை முடிப்பான்..” என்று பிள்ளைக்காக வக்காலத்து வாங்கியது அந்த தந்தையின் உள்ளம்.அப்பொழுதுதான் அவருக்கு நியாபகம் வந்தது…”அருள் இப்ப எல்லாம் இடையில்..இடையில் எங்கோ கிளம்பிப் போகிறான்..” என்று தங்கள் ஆபீஸ் சி.இ.ஓ சொன்னது.

 

“என்னவா இருக்கும்…அப்படி அருள் எங்க போறான்….” என்று சிந்தனையில் ஆழ்ந்தார் முரளி.

 

இதற்கு மேல்..முடியாது என்று நினைத்தவர் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார்.”அவருக்கு திடீரென்று மகேஷ்வரியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதை மகி விரும்பபாட்டார் …”என்று நினைத்த முரளி..தன் மனதிற்கு கடிவாளம் இட்டவராய் கிளம்ப…எத்தனிக்க…அப்பொழுது வந்த அந்த போன் கால் அவரைத் தடுத்தது.

 

போனை  எடுத்தவர் டிஸ்ப்ளேயில் வந்த நம்பரை சற்று நேரம் வெறித்து பார்த்துவிட்டு., பின் அதை எடுத்துப் பேசினார்.

 

ஹலோ..!  என்றார் முரளி..”

 

மறுமுனையில் என்ன பேசினார்களோ…! முரளியின் முகம் வெறுப்பை அப்பட்டமாய்  கக்கியது. சட்டென்று போனைக் கட் பண்ணியவர் வேகமாய் வீட்டிற்கு கிளம்பினார். வீடு வந்து சேரும் வரை அவருக்கு., அந்த வெறுப்பும் கோபமும் குறையவில்லை. அதே முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தார்.

 

அவர் உள்ளே வந்து ஆயாசமாய் அமர்வதற்குள்..அருள் உள்ளே.வருவதற்கும் சரியாய் இருந்தது. அருளும் மிகவும் களைப்பாய் தன் தந்தைக்கு எதிரில் அமர்ந்தான்.இவர்கள் வந்ததை அறிந்த தீபா…இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.ஆம் இப்பொழுது எல்லாம் முரளி சுதா கையால் எதுவும் சாப்பிடுவதில்லை.சுதாவுடன் பேசுவதும் இல்லை.

 

அப்பா…! உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்…” என்றான் அருள்.

 

என்ன அருள்…பீடிகை பலமா இருக்கு…சொல்லுப்பா..” என்றார் முரளி.

 

தீபா…உள்ளே செல்லப் போக….அவளைத் தடுத்தான் அருள்.” தீபா..நீயும் இரு.விஷயமே உன்னப் பத்தித்தான்…” என்றான் அருள்.

 

தீபா..கேள்வியாய் நோக்கியபடி நின்றாள்.

 

அருள்..” அம்மா…என்று சுதாவையும் அழைக்க…” முரளியின் முகத்தைப் பார்த்தவாறே வந்தார் சுதா.

 

அவர்கள் முன்னிலையில் ஒரு கவரை வைத்தான் அருள்..” அப்பா…இதுல ஒரு வரன் இருக்கு…பையன் டாக்டர்..ஒரே பையன்..வசதிக்கும் குறைவு இல்லை.பையனப் பத்தி விசாரிச்சுட்டேன்…எந்த கெட்ட பழக்கமும் இல்லை…குடும்பமும் நல்ல குடும்பம்….நம்ம தீபாவுக்கு எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லை..உங்க மன திருப்திக்கு வேணுமின்னா..நீங்க ஒரு தடவை விசாரிச்சுக்கோங்க…” என்றான் அருள்.

 

அவன் சொன்னதைக் கேட்டு தீபா..அவனை முறைக்க…முரளி எரிச்சலானார். ஆனால் சுதாவிற்கு நேர்மாறாய் சந்தோஷம் தாங்க முடியவில்லை.அருளை நினைத்து சுதாவிற்கு பெருமையாக இருந்தது. முரளியோ..தீபாவின் பார்வையை வைத்தே,…அவளின் விருப்பமின்மையைக் கண்டுகொண்டார்.

 

இந்த வரன் சரிப்படாது அருள்” என்றார் முரளி.,அமைதியாய்.

 

ஏன்ப்பா…அப்படி சொல்றிங்க…இந்த பையனுக்கு என்ன குறைச்சல்…” என்றான் கேள்வியாய்.

 

முரளி..”பையனுக்கு குறைச்சல் இல்லை..ஆனா தீபாக்கு பிடிக்கலை…அதனால விட்டுடு..” என்றார்.

 

அருள் ., தீபாவை கேள்வியாய் நோக்கவும்..” அண்ணா…எனக்கு இப்பதிக்கு கல்யாணம் பன்ற ஐடியா…இல்லை.எனக்கு வரன் பாக்குற வேலை எல்லாம் இதோட விட்டுடு…” என்றாள் விட்டேறியாய்.

 

என்ன காரணம்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..? என்றான் .

 

காரணம் எல்லாம் ஒன்னும் இல்லை..,ஆனா இப்போ கல்யாணம் வேண்டாம் அவ்வளவுதான்…..“என்றாள் தீபா.

 

நீ இன்னும் அந்த ஜீவாவை நினச்சுகிட்டு இருக்கியா…அப்படி இருந்தா அந்த நினைப்ப விட்டுடு தீபா..அவன் உன்ன உண்மையா பொண்ணுப் பார்க்க வரலை…நடிப்புக்காக வந்தவன். அவனை சொல்லியும் குத்தமில்லை..அவனோட சகவாசம் அப்படி..” என்று சூர்யாவை மறைமுகமாய்க் குத்திக் காட்டினான் அருள்.

 

அவனது பதிலில் கோபம் அடைந்த முரளி..” அருள்…நாக்க அடக்க கத்துக்க….அப்பறம் தீபா என் பொண்ணு..அவளுக்கு எப்ப கல்யாணம்  பண்ணனும்ன்னு எனக்கு தெரியும்..அவளைப் பெத்த அப்பன் இன்னும் உயிரோடதான் இருக்கேன்..ஒருவேளை நான் போய் சேர்ந்துட்டா..அதுக்கப்புறம் நீ உன் கடமைய செய்…” என்றார் முரளி.

 

உங்க மூத்த பிள்ளைய சொன்ன உடனே உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது இல்லப்பா…இத்தனை நாள் நான் எது செய்தாலும்..அது சரியா இருக்கும்ன்னு சொன்ன நீங்க…இன்னைக்கு..உன் வேலையை மட்டும் பார்ன்னு சொல்லிட்டிங்க இல்லை …” என்றான் அருளும் கோபமாய்.

 

ஆமாடா..சொன்னேன். இல்லைன்னு சொல்லலை.. ஆனா அப்ப இருந்த அருளுக்கும் ..இப்ப இருக்குற அருளுக்கும் எவ்வளவு வித்யாசம்ன்னு உனக்கு தெரியுமா..? என்றவர்..”உனக்கு எங்க தெரியப் போகுது..உனக்குதான் இப்ப கிறுக்கு பிடிச்சு இருக்கே.! ” என்று சுதாவைப் பார்த்து சொன்னவாறே..உள்ளே சென்று விட்டார் முரளி.

 

அருளைக் கோபமுடன் பார்த்த தீபா..”அண்ணா..உனக்கு அவ்வளவு அவசரம்ன்னா..நிலா வீட்ல பேசி நீ முதல்ல கல்யாணம் பண்ணிக்க…அதைத்தான் நானும் எதிர் பார்க்குறேன்..உன் கல்யாணம் நடக்காம நான் கல்யாணம் பன்றதா இல்லை…அதை விட்டுட்டு எனக்கு நல்லது பன்றதா நினைச்சு..என்ன உயிரோட கொல்லாத…உனக்கு புண்ணியமா போகும்..” என்றவாறு சென்றுவிட…அருளுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.

 

வேகமாய் அருளின் அருகில் வந்த சுதா..” யார் அருள் நிலா… தீபா சொல்லிட்டு போனாளே…” என்றார் ஆர்வமாய்.

 

அம்மா…அது வந்து…அது..ஒன்னும் இல்லம்மா..விடுங்க..” என்று தயங்கினான் அருள்.

 

நிலா யாருன்னு சொல்லு முதல்ல..” என்றார் சுதா.

 

அம்மா…., நான் நிலான்ற பொண்ணை லவ் பன்றேன்.அவளும் தான்..” என்றான் அருள் சற்று சங்கடமாய்.

 

நிஜமாவ அருள்…பொண்ணு அழகா இருப்பாளா…? என்றார் ஆர்வமாய்.

 

ம்ம்ம்… அழகா இருப்பாம்மா…!“என்றான் அருள்.

 

அப்ப என் மருமகள எப்ப எனக்கு காட்டப் போற…அவங்க வீடு தெரியுமா…உங்க காதல் விஷயம் அவங்க வீட்ல தெரியுமா..?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டார் சுதா.

 

சீக்கிரம் காட்றேன்ம்மா…அவங்க வீட்டுக்கு தெரியுமா என்னன்னு தெரியலைம்மா…ஆனா அவங்க வீடு எனக்கு தெரியும்…..நான் நிலா பிரண்ட்ன்னு சொல்லி   உங்களை கூட்டிட்டு போறேன்.அப்ப பார்த்துக்கோங்க உங்க மருமகளை..” என்றான் அருள்.

 

சுதாவும் மற்ற கவலைகளை மறந்து…தன் மருமகளைப் பார்க்கப் போகும் சந்தோஷத்தில்  இருந்தார்.

 

அருள் சொன்ன செய்தியை கேட்டு தீபாவிற்கு மனம் ஏதோ பாரமாக இருக்க…அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தாள்.நடந்த பிரச்சணைகள ஒவ்வொன்றும் அவளை மிகவும் பாதித்திருந்தது.தீபாவிற்கு சுதாவை விட மகேஷ்வரியின் மேல் மதிப்பும் மரியாதையும் கூடியிருந்தது.இந்த பிரச்சனை எல்லாம் எப்பொழுது ஒரு முடிவுக்கு வரும் என்று என்னியபடி வந்து கொண்டிருந்தாள் தீபா.

 

அவளை உரசுவது போல் ஒரு கார் வந்து நிற்க…தீபா..பதறி விலகினாள்.அப்பொழுது கார் கதவு திறக்க…உள்ளே பார்த்த தீபா திகைத்தாள்.உள்ளே சூர்யா அமர்ந்து இருந்தான். அவளுக்காக கதவையும் திறந்துவிட்டு..அவள் ஏற்வதற்காக காத்திருந்தான். சில நிமிடங்கள் யோசித்த தீபா…தயக்கத்துடன் உள்ளே அமர்ந்தாள்.அவள் ஏறியவுடன் வண்டியை எடுத்த சூர்யா சில நிமிடங்கள் வரை எதுவும் பேசவில்லை. தீபாவும் குனிந்த தலை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள்.

 

தொண்டையை செருமிய சூர்யா..அவள் நிமிர்ந்து பார்க்கவும் தன் பேச்சினை ஆரம்பித்தான்..”சாரி தீபா….”  என்றான்.

 

எதுக்கு..? என்பதைப் போல் பார்த்து வைத்தாள் தீபா.

 

அவளது பார்வையின் கேள்வியை உணர்ந்து கொண்டவன்…” உன் மனச  தேவையில்லாம கஷ்ட்டப் படுத்திட்டேன்னு நினைக்கிறேன்…அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்த காரணம் பொய்யா இருந்தாலும்…பொண்ணு பார்த்தது பொய்யில்லை. இதில் ஜீவா மேல் எந்த தப்புமில்லை. சொல்லப் போனா அன்னைக்கு அவன் என்கிட்ட  எவ்வளவோ சொன்னான்.ஆனா நான் தான் கேட்கலை. என்னோட பிறப்பைக் கண்டுபிக்க போய்….எங்க உன்னையும் ஜீவாவையும் காயப் படுத்திட்டேனோ அப்படின்னு எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி இருந்துட்டே இருக்கு…அதை நான் சரி பண்ணனும்ன்னு நினைக்கிறேன்…இதைப் பத்தி நீ என்ன நினைக்கிற…” என்றான் சூர்யா.

 

இதில் நான் என்ன பன்னனும் அஅ….” என்று ஆரம்பித்தவள்..அண்ணன் என்ற வார்த்தயை முழுங்கினாள். அதைக் கண்டு கொண்ட சூர்யா  உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்..” நீ ஜீவாவை கல்யாணம் பன்னிக்கனும்..உனக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பாக்குறதா கேள்விப் பட்டேன்…அதான் இன்னைக்கு உன்ன பார்த்து பேசனும்ன்னு நினச்சேன்…”  என்றான் சூர்யா.

 

இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு…சம்பந்தப்பட்ட பக்கி ஆளவே காணாம்…இதுல கல்யாணம் வேற…” என்றாள் தீபா ..தன் பழைய துடுக்குத் தனம் தலைதூக்க…

 

அவளது பதிலில் கவரப் பட்ட சூர்யா…” அப்ப அவன் வந்து பேசுனா உனக்கு சம்மதமா தீபா…” என்றான் ஆசையாக.முதல்ல வரட்டும் அப்பறம் சொல்றேன்..”என்றாள் தீபா கெத்தாக.

 

அப்படியா..? என்று சிரித்த சூர்யா..”டேய் நல்லவனே…நீயே பேசிக்கடா…” என்றான் பின்னால் திரும்பி.

 

அப்பொழுதுதான் கவனித்தாள் தீபா..பின்னால் ஜீவா அமர்ந்து இருந்ததை. அவனைப் பார்த்தவள் சட்டென்று நாக்கை கடிந்து கொண்டாள்.

 

அவளையே முறைத்துக் கொண்டிருந்த ஜீவா…அவளைப் பார்த்துக் கொண்டே..சூர்யாவிடம் சொன்னான்..” நான் தான் சொல்லை…உன் தங்கச்சி பார்க்க மட்டும் தான் அமைதி..வாயத் திறந்தா..அவ்வளவுதான்…பாரு இப்ப நீயே பார்த்தியே…நான் பக்கியாம்..” என்றான் ஜீவா.

 

அவனது முக பாவணையில் சூர்யா சிரிக்க..தீபா முன்புறம் திரும்பிக் கொண்டாள்.

டேய் என்னடா..நினச்சுகிட்டு இருக்கிங்க …அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும்..” என்று அந்த அண்ணன் தங்கையில் அழுத்தம் கொடுத்து ஜீவா சொல்ல….அதைக் கேட்ட..சூர்யாவின் மனம் மகிழ்ந்தது.

 

பெண்ணே..அடி பெண்ணே..!

உன் உள்ளம் சுகமா..?

பேசு ஒரு வார்த்தை ..

நீ கல்லா…. மரமா…?

 

 

தீபாவின் பக்கம் திரும்பிய ஜீவா…” சரி சரி..கோபப்பட்டது  எல்லாம் போதும்  டார்லிங் நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்றான் . சூர்யாவை வைத்துக் கொண்டே ஜீவா அவ்வாறு கேட்க…தீபா பல்லைக் கடித்தாள்.அவனை நக்கலாய்ப் பார்த்தவள்…”அடேங்கப்பா…எப்ப வந்து கேக்குற….ஆமா நீ சும்மாதான பொண்ணு பார்க்க வந்த…சும்ம வந்தது சும்மாவாவே இருக்கட்டும்..” என்றாள் இடக்காக.

 

ஐயோ என்று அலறினான் ஜீவா…”டேய் மச்சான் இதுக்கு மேல தாங்காதுடா….நீ முதன் முதல்ல அந்த அவார்ட் பங்க்ஷன்ல., என்ன சொன்ன இவளக் காட்டி..என்னைக்கா  இருந்தாலும் இவதான் உனக்கு மனைவி…நல்லா பார்த்துக்க..” அப்படின்னு சொன்னியா இல்லையா.சரி நானும் நம்ம நண்பன் சொன்னத செய்வான்னு நம்ம்ம்பி…களத்துல இறங்காம…கரையிலயே நின்னுட்டேன்..ஆனா இப்ப பாரு இவ எப்படி பேசுறான்னு…” என்று அங்கலாய்த்தான் ஜீவா.

 

அவன் சொன்னதைக் கேட்டு தீபா திகைத்தாள்…”அப்பவேவா..” என்றாள்  வாயைத் திறந்தபடி.

 

ஆமா..” வாயக் கொஞ்சும் குளோஸ் பண்ணு….என்றான் ஜீவா.

 

அவர்களின் வாக்குவாத்தை ரசித்துக் கொண்டிருந்த சூர்யா…சட்டென்று சீரியசாய் மாறினான்…” தீபா…இது உன் வாழ்க்கை நீதான் யோசிச்சு முடிவு பண்ணனும்..இது என்னோட கார்ட்…நீ எப்ப வேணும்ன்னாலும் என்கிட்ட பேசலாம்..யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு..” என்றான்.

 

அருள் அண்ணாஅ…”என்று  இழுத்தாள் தீபா. அருளின் பேரைக் கேட்ட சூர்யாவின் உடல் இறுகியது.

 

என்னை நீ நம்புறதா இருந்தா….யோசிச்சு சொல்லு தீபா..உங்க கல்யாணத்துக்கு நான் பொறுப்பு…உனக்கு சம்மதம்ன்னா..”  என்று பேச்சை முடித்துக் கொண்டான் சூர்யா.

 

அந்த தெருவின் முனையில் அவளை இறக்கிவிட….ஜீவாவை ஒரு பார்வை பார்த்தவள்…அவனின் காதல் பார்வையில் திகைத்தவளாய்  நின்றிருக்க…ஜீவா அவளைப் பார்த்து சட்டென்று கண்ணடித்தான்.அவனது செயலில் விதிர்விதித்தவள்…”பிச்சுடுவேன் என்று சைகையால் அவனுக்கு உணர்த்தியவள் ” சூர்யாவின் பக்கம் திரும்பி…” ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…” என்றாள் முதன் முறையாய்.

 

அவளது அழைப்பில் சூர்யாவிற்கு சற்று கண்கலங்க…அதை மறைத்தவாறு…அவளுக்கு தலை ஆட்டிவிட்டு.. சட்டென்று சென்று விட்டான் சூர்யா.

 

தீபாவிற்கு ஏனோ தெரியவில்லை..மனம் இனம் புரியாத சந்தோஷத்தில் பறந்தது.அது சூர்யாவை அண்ணன் என்று அழைத்தாலா இல்லை..ஜீவாவைப் பார்த்ததாலா என்று தெரியவில்லை.வீட்டிற்குள் சென்று பூஜையறைக்குள் பிரசாதத்தை வைத்தவள்..தன் அறைக்கு செல்ல முற்பட..வாசலில் கார் வந்து நிற்கவும்..”யார இருக்கும்…” என்று நினைத்தபடி சென்றவள் அப்படியே சிலையாய் நின்றாள்.

 

அதற்குள் சுதாவும் வெளியே வர…அங்கு வந்தவரைப் பார்த்து சுதாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. வாங்க..அத்தை..” என்றார் சுதா

 

ம்ம்ம் வரேன் சுதா..” என்ற ஜக்கம்மாள் …தோரனையாய் வந்தமர்ந்தார்.

 

தீபாவிற்கு வயிற்றில்  புளியைக் கரைத்தது.”கடவுளே..இன்னும் என்ன என்ன பிரச்சனை எல்லாம் வரப் போகுதோ..” என்று நினைத்தவள்..தன் பாட்டியை முறைத்துக் கொண்டு நின்றாள்.

 

அங்கு ஜக்கம்மாவின் வரவு…சுதாவைத் தவிர..யாராலும் எதிர்பார்க்கப்படாத ஒரு வரவாக இருந்தது.

 

முகவரி கிடைக்குமா…?

 

 

 

Advertisement