Advertisement

 

முகவரி 19:

 

நிலா சொன்னதை பிரபுவால் நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.ஆனால் அவருக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது.என்ன பேசுவது என்று ஒரு தெளிவில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.இது சரியாய் வருமா…ஜக்குவைப் பற்றியும்,சுதாவைப் பற்றியும் அவருக்கு தெளிவாய் தெரியுமாதலால்….இன்னும் சற்று கூடுதலாக சிந்தித்தார்.இருவருமே சுய நலம் மிக்கவர்கள். தன்னலத்திற்காக எதுவும் செய்வார்கள் என்று மகேஷ்வரி விஷயத்தில் கண் கூடாய் பார்த்தவராயிற்றே.ஆனால்….. நிலாவே ஆமாம் என்று சொல்லும் போது…பிரபுவும் நிலாவின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.கடந்த கால சம்பவங்கள் நினைவில் வந்தாலும்…நிலா இந்த அளவிற்கு சரி என்று சொன்னதே பெரிய விஷயமாக பட்டது பிரபுவிற்கு.

 

ஜக்கு..”என்ன அப்பு..அதான் பொண்ணே…சரின்னு சொல்லிடுச்சே…! அப்பறம் இன்னும் என்ன யோசனை பண்ணிட்டு இருக்க…?” என்றார்.

 

ஆமாண்ணா…!நிலாவை நான் நல்லாப் பார்த்துப்பேன்.அதுக்கு மேல அருள் அவளை கண்ணுக்குள் வச்சு பார்த்துப்பான்.என் விஷயத்தை வச்சு அருளை எடை போடதண்ணா…!” என்றார் சுதா.

 

பிரபு..”அதெல்லாம் ஒன்னும் இல்லை சுதா.இருந்தாலும் முரளி வரலை.அவனுக்கு இதில் சம்மதமான்னு தெரியலை.எனக்கு என் பொண்ணு  விருப்பம் பெரிசா தெரிஞ்சாலும்….நாலையும் நான் பார்க்கனுமில்லையா..?” அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு என்றார் பிரபு.

 

சுதா..”உங்களை மாதிரி தான் அவரும்.அருள் விருப்பத்துக்கு தடை சொல்ல மாட்டார்.அத்தை அவர் கிட்ட பேசிக்குவாங்க..! இப்ப உங்க சம்மதமும்..,அண்ணி சம்மதமும் தான் முக்கியம்..” என்றார் எதிர்பார்ப்பாய்.

 

நிலாக்கு இதில் சம்மதம் என்னும் போது….. எனக்கும் சம்மதம் தான் சுதா…” என்றார் அரைமனதாய்.

 

ஜக்கு..”அதை ஏன் அப்பு இப்படி சொல்ற…? கொஞ்சம் சந்தோஷமா தான் சொல்றது..” என்றார் அங்கலாய்ப்பாய்.

 

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லத்தை என்று பிரபு சொல்லிக் கொண்டிருக்கும் போதே…”ஆமா அப்பு உன் பொண்டாட்டி நம்ம ஜாதி தான…? ” என்று இழுத்தார் ஜக்கு.

 

பிரபுவிற்கு எரிச்சலாய் போனது..”என்ன மனுஷி இவங்க…திருந்தவே மாட்டாங்களா….?என்ற நோக்கில் சுதாவைப் பார்க்க….சுதா கண்களால் பிரபுவிடம் வேண்டிக்கொண்டார்.

 

அய்யோ..! இந்த பாட்டி நமக்கு ஆப்பு வச்சுடுவாங்க போல இருக்கே…” என்று மனதில் யோசித்துக் கொண்டிருக்கும் போதே..”நம்ம ஆளுங்க தான் அத்தை..”என்ற பிரபுவின் பதில்..,அருளின் வயிற்றில் பாலை வார்த்தது.

 

ஆனால் மாலாவிற்கோ…”மனதில் எங்கோ உறுத்திக் கொண்டே இருந்தது….இருந்தாலும் அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை..”

 

நிலாவின் திருமணத்திற்கான அடித்தளம் அங்கு போடப்பட்டது.தான் சொன்ன வார்த்தை அங்கு செயலாகிக் கொண்டிருப்பதை அறியாத நிலா…அங்கு நிம்மதியாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

இடம் டெல்லி:

 

ஹோ…ஷிட்…! என்று கால்களை தரையில் ஓங்கி உதைத்த ருத்ரம்….தன் முன்னால் இருந்தவனை ஓங்கி ஒருஅறை அறைந்தார்.”இப்படி சொல்ல உனக்கு வெட்காம இல்லை…ரெண்டு பொட்டச்சியத் தேடி கண்டுபிடிக்க துப்பில்லை….உனக்கு எல்லாம் எதுக்குடா மீசை…” என்று கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார் ருத்ரம் என்று தொழிலுலகில் அழைக்கப்படும்  ருத்ரவேல்.

 

இல்லை சார்….நாங்களும் சல்லடை போட்டு தேடிகிட்டே இருக்கோம்..ஆனா சிக்க மாட்டேங்குறாங்க.எல்லாம் என் தப்பு தான் சார்.அன்னைக்கு அவளைப் பார்த்தப்பவே அவளைப் பிடிச்சுருக்கனும்.ஆனா அவ கார்ல ஏறி எஸ்கேப் ஆகிட்டா சார்..” என்றான் அறை வாங்கிய ஜான்.

 

அதற்கும் அவனுக்கு ஒரு அறை விழுந்தது.”என்ன அவ இவன்னு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க. அவ யாருன்னு தெரியுமில்லை…என் மருமக…! அது எப்பவும் கவனத்துல இருக்கனும்..” என்றார் கோபமாய்.

 

சாரி சார்….!“என்றான் ஜான்.

 

ருத்ரம்..”ஜான் நல்லா கேட்டுக்க…நீ என்ன செய்வியோ..!ஏது செய்வியோ எனக்கு தெரியாது….உனக்கு இன்னும் ஒரு மாசம் தான் டைம்.அதுக்குள்ள என் மருமகளைக் கண்டுபிடிச்சு இங்க கூட்டிட்டு வரனும்…இல்லை உன் உயிர் உன் உடம்புல இருக்காது…” என்று கட்டளையிட்டார்.

 

இந்த தடவை என் குறி தப்பாது சார்.அவங்க போட்டோவை நான் அங்க இருக்குற நம்ம ஆளுங்ககிட்ட எல்லாம் குடுத்துருக்கேன்.எப்படியும் நீங்க சொன்ன நாளுக்கு முன்னாடியே அவங்களை கண்டுபிடுச்சு உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறது என் பொறுப்பு…” என்று வாக்களித்தான் ஜான்.

 

ருத்ரம் பழைய சம்பவங்களை அசை போட்டார்.நடந்த சம்பவங்கள் எதுவும் உவப்பாய் அவருக்கு தோன்றவில்லை.நினைவுகள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வர…அவரின் முகம் செந்தழனாய் மாறியது.உதயக் குமார், அவ்வளவு சீக்கிரம் இந்த ருத்ரம் பின்வாங்க மாட்டான்.நான் நினைத்ததை நடத்திக் காட்டுவேன்.உன் மக தான் என் வீட்டு மருமகள்.இதை எந்த கொம்பன் வந்தாலும் மாத்த முடியாது.அவ எங்க இருந்தாலும் தேடிப் பிடித்து.., என் மகன் கையால் தாலி வாங்க வைக்கிறேண்டா….”என்று மனதினுள் கருவியவாறு சென்று ஒரு அறைக் கதவை திறந்தார். 

 

அங்கு கட்டிலில் துயில் கொண்டிருந்தான் வினோத்.சலனமற்ற தூக்கம்.தன் மகனின் நிலையைப் பார்த்து சற்று கண் கலங்கிய ருத்ரம்….சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார்.

                                                                   

                                ———————————————

 

என்னப்பா சொல்றிங்க….?”என்று அதிர்ந்தாள் நிலா.

 

என்னம்மா இப்படி அதிர்ச்சியாகுற….நீ தான சொன்ன எனக்கு அருளைப் பிடிச்சுருக்குன்னு.அப்ப அவங்க இங்கதான் இருந்தாங்க.நானும் முதல்ல கொஞ்சம் யோசித்தேன் …அப்பறன் உன் விருப்பம் தான் முக்கியம்ன்னு சரின்னு சொல்லிட்டேன்..” என்றார் பிரபு.

 

நிலா..”அப்பா அது வந்து…அதுக்காக இவ்வளவு சீக்கிரமா….என்ன அவசரம்…..” என்று இழுத்தாள்.

 

பிரபு..”நானும் அப்படித்தான் நினைத்தேன் நிலா.ஆனா ஒரு பக்கம் யோசிச்சுப் பார்த்தா அதுவும் சரின்னு தான் தோணுச்சு.சுதா என் சொந்த தங்கை வேற…என்று ஆரம்பித்தவர்..பழைய கதையை சொல்லலாமா வேண்டாமா..? என்று யோசித்து..பின் அதை எல்லாம் தேவையில்லாதவை என்று விலக்கியவராய்..பையனும் நல்ல பையா இருக்கான்…உனக்கும் பிடிச்சுருக்கு…அதான் சரின்னு சொன்னேன் நிலா..” என்றார்.

 

நிலா..”அதெல்லாம் சரிப்பா…ஆனா அதை உடனே பன்னனும்ன்னு என்ன அவசரம்…இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.எல்லா பிரச்சனையும் முடியட்டும்ப்பா…” என்றாள்.

 

நிலா…பிரச்சனை என்னைக்கும் இருந்துகிட்டே தான் இருக்கும்.அதனால் இந்த விஷயத்தை எல்லாம் தள்ளிப் போடக் கூடாது.அதுமட்டும் இல்லைம்மா…உனக்கு ஒரு நல்லதைப் பண்ணினால் தான் ரம்யாவும் அடுத்து கல்யாணத்தைப் பத்தி யோசிப்பாள்.அவ மனசும் கொஞ்சம் மாறும் இல்லையா…?” என்றார் பிரபு.

 

நிலாவிற்கு.,ரம்யா என்ற உடன் தான் நியாபகம் வந்தது.”மற்ற எல்லாம் மறந்து….. அவள் மட்டுமே முன்னால் நின்றாள்.அவளுக்கு இடஞ்சலாய் தன் வாழ்க்கை இருப்பதா..என்று யோசித்த நிலா.. உங்க இஷ்ட்டம் போல் செய்ங்கப்பா…” என்றாள்.

 

மாலா…நிலாவின் கைகளைப் பிடித்துக் கொள்ள..”என் செல்ல அம்மா…..இப்படி பயப்படலாமா…நான் இருக்கேன்..” என்று தைரியம் சொன்னாள் நிலா.உள்ளே இருந்து வந்த ரம்யா…”என்னம்மா கல்யாணப் பொண்ணு இப்பவே கனவா..?” என்று கிண்டல் அடித்தாள்.

 

அவளின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் நிலா..”இவளை இப்படி சந்தோஷமாய் பார்த்து எத்தனை நாள் ஆயிற்று….கடவுளே..! இவளின் முகத்தில் இந்த மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும்…இவள்  உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது….” என்று மனதிற்குள் நினைத்த நிலா…வெளியில் சிரித்து வைத்தாள்.

 

ரம்யா…”நிலா மாப்பிள்ளை வந்தப்ப நான் பார்க்கலை. மிஸ் பண்ணிட்டேண்டி. நல்லா தூக்கிட்டேன்.அம்மா கூட என்னை எழுப்பலை.நான் கோவமா இருக்கேன்.மாப்பிள்ளைய நான் பார்த்து ஓகே பண்ண வேண்டாமா..?” என்றாள்.

 

அதற்கும் சிரித்து வைத்தாள் நிலா.அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.ஆனால் மனம் பாரமாகிப் போனது என்னவோ உண்மை.என்னவென்று அவளால் வரையறுக்க முடியவில்லை.

 

ரம்யா..”பாருங்கம்மா..கல்யாணப் பொண்ணுக்கு இப்பவே வெட்கத்தை.ம்ம்ம்….கொஞ்சம் வச்சுக்கம்மா…பின்னாடி உபயோகப்படும்…” என்றாள்.

 

அம்மா தாயே ஆளை விடு….” என்று அறைக்குள் சென்ற நிலாவிற்கு…ஏனோ கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.ஏண்டா அந்த வார்த்தையை போனில் சொன்னோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.எல்லாம் அந்த கருவாப்பயனால தான்.அவனால் தான் நான் அப்படி பேசினேன். கடைசியில் அது எனக்கே வினையா வந்து விடுஞ்சுடுச்சு…என்று மனதிற்குள் புலம்பித் தவித்துக் கொண்டிருந்தாள் நிலா.

 

இப்ப எதுக்கு நிலா நீ அவன் மேல் பழியப் போடுற..அவனா அப்படி  சொல்ல சொன்னான்.நீயா சொன்னா அதுக்கு அவன் எப்படி பொறுப்பாக முடியும்.உன்னோட திமிர் மட்டும் தான் காரணம்…”என்று அவளின் மனசாட்சி அவளை இடித்துரைத்தது.

 

                                            *****************

 

முரளியை அந்த நேரத்தில் யாரும் அங்கு எதிர்பார்க்கவில்லை.

 

சூர்யாவும்,ஜீவாவும் சாப்பிட்டுக் கொண்டிருக்க இரவு எட்டு மணிக்கு அவர் அங்கு வருவார் என்று நினைக்கவில்லை.மகேஷ்வரி சூர்யாவைப் பார்க்க..அவனோ எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல்.,தன் போக்கில் சாப்பிட்டு கொண்டிருந்தான்.

 

மகிக்கு என்ன செய்வதென்று புரியாமல்..”வாங்க..!” என்றார்.

 

முரளி நேராய் சோபாவில் அமருவார் என்று எதிர்பார்க்க..அவரோ…தானும் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தார்.அதைக்  கண்ட சூர்யாவின் கோபம் அவன் சாப்பிடும் வேகத்தில் புரிந்தது.ஆனால் மகியோ இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.அந்த நொடியில் பழைய பிரச்சனைகள் அவருக்கு நியாபகத்திற்கு வரவில்லை.மகிக்கு தெரிந்ததெல்லாம் சாப்பிட அமர்ந்திருக்கும் கணவன் மட்டுமே…!

 

முரளிக்கு தட்டை வைத்த மகேஷ்வரி…அவருக்கு வேகமாய் பரிமாறினார்.”அவரின் செய்கையில் முரளிக்கு கண்கலங்கினாலும்  வெளியில் சொல்லவில்லை.உண்மையில் வரும் போதே அவருக்கு நல்ல பசி.அதான் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவர் சாப்பிட அமர்ந்ததே. ஆனால் மகி இப்படி பரிமாறுவார் என்று முரளி எதிர்பார்க்கவில்லை.இத்தனை வருடங்களுக்கு பிறகு மகியின் கையால் சாப்பிடுகிறார்.மகியின் கை வண்ணம் அவர் வயிற்றை நிரப்பியதோ இல்லையோ..அவரின் மனதை நிறைத்தது.அவர் சாப்பிடும் அவை வைத்தே அவரின் பசியை நங்கு அறிந்து கொண்டார் மகி.

 

ஆனால் சூர்யாவால் இதை எல்லாம் காண முடியாமல் பல்லைக் கடிக்க…அவனைப் பார்த்த ஜீவாவோ…! இப்ப தான் சாப்பிடுவதா… வேண்டாமா ..?என்பதைப் போல் அப்பாவியாய்ப் பார்த்தான்.

 

ஒருவழியாக சூர்யா சாப்பிட்டு முடித்து  எழ…ஜீவாவும் சாப்பிட்டு முடித்து எழுந்தான்.சூர்யா,முரளியை நிமிர்ந்தும் பார்க்காமல் சென்றான்.

 

முரளி..”ஒரு நிமிஷம் சூர்யா..! நான் உன்கிட்டையும் மகிகிட்டையும் கொஞ்சம் பேசனும்..” என்றார் அனுமதி கோரும் பாவனையில்.

 

சூர்யா அதை சட்டை செய்யாமல் செல்ல…பின் என்ன நினைத்தானோ..! தன் தாயின் முகத்தைத் திரும்பிப் பார்க்க…மகியின் முகத்தில் என்ன கண்டானோ தெரியவில்லை.அமைதியாய் சென்று ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தான்.ஜீவா..தான் இங்கு இருப்பதா வேண்டாமா..? என்று எண்ணியவாறே மேலே செல்ல முற்பட…”பரவாயில்லை மாப்பிள்ளை நீங்களும் இருங்க..” என்றார் முரளி.

 

அவரின் பேச்சைத் தட்ட முடியாமல் ஜீவா சென்று சூர்யாவிற்கு அருகில் அமர்ந்தான்.”தன்னுடைய கல்யாணத்தைப் பற்றி இருக்குமா..?” என்று ஜீவா யோசிக்க…”இப்ப என் கிட்ட பேச என்ன இருக்கு இவருக்கு..” என்று சூர்யா மனதில் யோசித்துக் கொண்டிருந்தான்.ஒருவழியாய் முரளியும் சாப்பிட்டு வர..மகியும் வந்தார்.

 

எப்படி ஆரம்பிப்பது என்று முதலில் யோசித்த முரளி,…பின் தொண்டையை செருமியவாராய் பேச ஆரம்பித்தார்.

 

அது வந்து…சூர்யாக்கு.,கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கலாமா..?” என்றார்.

 

அவரின் அந்த கேள்வியில் திகைத்த சூர்யா..அவரை விசித்திரமாய் பார்த்தான்.இப்ப இது தேவையா..? என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்தான். மகியின் முகமோ யோசனைக்கு தாவியது.

 

இப்ப என்ன திடீரென்றுஇந்த ஒரு கரிசனம்..? என்றான் சூர்யா…,யாரிடமோ பேசுவது போல்.அவனது கேள்வியில் முரளி திகைத்தாலும்…,அவன் அவரிடம் பேசியது அவருக்கு சந்தோஷமாய் இருந்தது.

 

அது அருள் நிலான்ற பொண்ணை லவ் பன்றானாம்.கடைசில அந்த பொண்ணு…சுதாவோட அண்ணன் பொண்ணு.அந்த பொண்ணும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுச்சு போல.அதான் அவன் ஒரே பிடிவாதமா இருக்கான்.உடனே கட்டி வைங்க..அதுவும் தீபா கல்யாணத்தன்னைக்கே தனக்கும் கல்யாணம் பண்ணனும்ன்னு ஒரே முடிவா சொல்றான்.மூத்தவன் இருக்கும் போது எப்படி அருளுக்கு பன்றது.அதான் சூர்யாவுக்கும் பொண்ணு பார்த்தா…மூணு பேர் கல்யாணத்தையும் ஒரே மேடைல நடத்திடலாமேன்னு கேட்டேன்..” என்றார் முரளி விளக்கமாய்.

 

அவர் சொல்ல சொல்ல…சூர்யாவின் கோபம் ஏறிக்கொண்டே போனது.ஏற்கனவே நிலா,அருளை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்ன கடுப்பில் இருந்த சூர்யாவிற்கு,முரளின் பேச்சு தூபம் போடுவதாய் அமைந்தது.

 

சூர்யா..”சபாஷ்….சூப்பர்.அதெப்படி அவனுக்கு கல்யாணம் உடனே நடக்கனும்ன்னா…நான் கல்யாணம் பண்ணனுமா…? அப்ப கூட அக்கறைல வரலம்மா உங்க புருஷன்.நான் உங்களை என் அப்பான்னு ஏத்துக்கவே இல்லை.என்னோட உரிமைய எங்க,எப்படி காட்டனும்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்.அதுவரைக்கும் எங்கம்மாக்கு மட்டும் தான் நீங்க புருஷன்.எனக்கு அப்பா கிடையாது.” என்றான் ஆக்கோரஷமாய்.

 

ஜீவாவிற்கு புரிந்தது..சூர்யா எந்த கோபத்தில் இப்படி பேசுகிறான் என்று.ஜீவாவும் இதை எதிர்பார்க்கவில்லை.ஆனால் ஜீவாவால் இன்னமும் நம்பமுடியவில்லை….நிலா சம்மதம் சொன்னதை. இந்த அருள் இவ்வளவு வேகமாய் செயல்படுவான் என்று ஜீவாவும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

இல்ல சூர்யா..!நான் வேற எந்த எண்ணத்துலையும் சொல்லலை.நீ என்ன எப்பவும் ஏன் தப்பானவனாவே பார்க்குற…என்னை புரிந்து கொள்ளவே மாட்டியாப்பா..?” என்றார் முரளி ஏக்கமாய்.

 

சூர்யா..”தேவையில்லாததை எல்லாம் நான் பேச விரும்பலை.ஆனா ஒன்றை சொல்லியே ஆகனும்.எனக்கு பொண்ணு பார்க்குறேன்.,கல்யாணம் பண்ணி வைக்கிறேன் அப்படின்ற எண்ணத்தை இதோட விட்டுடுங்க..எப்ப கல்யாணம் பண்ணனும்., பண்ணக் கூடாதுன்னு எனக்குத் தெரியும்.உங்க பையனுக்கு அவசரம்ன்னா தாராளமா நீங்க கல்யாணம் பண்ணி வைங்க.அவனுக்காக எல்லாம்…… நான் எந்த முடிவுக்கும் சரின்னு சொல்லுவேன்னு கனவு கூட காணாதிங்க……..”

 

தொழில்லையும்….,வாழ்க்கையிலும் முன்னுக்கு வரத் தெரிஞ்ச எனக்கு.., கல்யாணமும் எப்ப பண்ணனும்ன்னு தெரியும்….” என்றான் முகம் இறுக.

 

மகேஷ்வரிக்கு….சூர்யாவின் முகம் வித்தியாசமாய் பட்டது.அவருக்கு தெரிந்து சூர்யா எதற்கும் கலங்க மாட்டான்.ஆனால் இப்பொழுது அவன் முகம் கடுமையைக் காட்டினாலும் கண்கள் வலியைக் காட்டியது.மகேஷ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை.சூர்யாவின் முகத்தையே கூர்ந்து பார்த்தார்.ஆனால் மகியின் பார்வையை உணர்ந்து கொண்ட சூர்யா…உடனடியாக தன் பாவனைகளை மறைத்துக் கொண்டான்.

 

முரளி பேச்சற்றவராய் சூர்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.அவரால் என்ன பேச முடியும்…?

தந்தை என்ற நிலையில் இருந்து முரளி சூர்யாவுக்கு எந்த ஒரு நல்லதும் செய்ததில்லை.இந்த கல்யாண விஷயத்திலாவது,நல்ல பெண்ணாய் பார்த்து,சூர்யாவிற்கு திருமணம் செய்து வைத்து கண்குளிர பார்க்க வேண்டும் என்று அவர் நினைத்த கற்பனைகள் எல்லாம்..,சூர்யாவின் பேச்சில் தவிடு பொடியாகியது.

 

முரளி சென்று வெகு நேரமாகியும் சூர்யாவின் கோபம் குறையவில்லை. ஜீவாதான் அவனை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தான். மகேஷ்வரியோ….சூர்யாவின் முகத்தில் தோன்றிய அந்த ஒரு நிமிட வலிக்கான காரணத்தை ஆராயும் முயற்சியில் இறங்கியிருந்தார்.அதனால் அவர் சூர்யாவையோ,ஜீவாவையோ கவனிக்கும் மன நிலையில் இல்லை.

 

மேலே தன் அறைக்கு சென்ற சூர்யா….மிகவும் கோபத்தில் அமர்ந்திருக்க…”சூர்யா…இப்ப எதுக்கு இப்படி ஒரு கோபம்.முரளி  அங்கில்…வந்துட்டு போனதாலயா..?இல்லை அருள்., நிலாவைக் கல்யாணம் பண்ணிக்க போறான் அப்படின்றதாலையா…? எது மனசுக்குள்ள புகுந்து உன்ன ஆட்டி வைக்குது..” என்றான் ஜீவா.

 

அது எப்படி ஜீவா மனுசங்க இப்படிக்கூட சுய நலமா இருப்பாங்களா…? அவர் இப்பக் கூட என் மேல இருக்குற பாசத்துல வந்து பேசலை ஜீவா.அருளுக்கு அவசரம்.அதனால் என்னை பார்த்து ஒரு பேச்சுக்கு கேட்கனும்ன்னு வந்துருப்பார்..” என்றான் வெருப்பாய்.

 

ஜீவா…”சூர்யா…அவர் சொன்ன முறை சரியானதா இல்லாம இருந்தாலும்..,அவர் கண்ல உண்மையான பாசம் தான் தெரிஞ்சது.தப்பு செய்யாத மனுஷங்கன்னு இந்த உலகத்துல யாரும் இல்லை.இன்னும் எத்தனை நாளைக்கு அவரை நீ இப்படி ஒதுக்கி வைப்ப.நீ இப்படி ஒதுங்கி போக…போக..அருளுக்கும் அவங்க பாட்டிக்கும் இன்னும் இளக்காரமாய் போய்டும்.அதே சமயம் நீ அம்மாவைப் பத்தியும் யோசிக்கனும் சூர்யா.இத்தனை வருஷம் தனியா இருந்தாங்க சரி.ஆனா இப்ப…..? அவங்க வாழ்க்கையில சந்தோஷம்ன்ற ஒன்னை அனுபவிக்கவே இல்லை.உன் பிடிவாதத்தால இனியும் அவங்க நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறையா..? என்னதான் அவங்க உங்கப்பா மேல கோபமா இருக்குற மாதிரி இருந்தாலும் அவங்க மனசுக்குள்ளையும் உங்கப்பா மேல நிறைய பாசம் இருக்கு.இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நடந்ததை நீயும் பார்த்தையே…! நீதான் யோசித்து ஒரு நல்ல முடிவா எடுக்கனும்…” என்றான்.

 

எனக்கு புரியுது ஜீவா.இருந்தாலும் அப்படி சட்டுன்னு என்னை மாத்திக்க முடியும்ன்னு தோணலை.இருந்தாலும் நான் அம்மாவுக்காக முயற்சி செய்வேன் ஜீவா….”என்றான் சூர்யா

 

இதுதான் சூர்யா….!ஜீவாவிற்கு.., சூர்யாவிடம் பிடித்ததே இந்த விஷயம் தான்.தவறு என்று சொன்னால் அதனை எதிர்த்து வாதம் பண்ணாமல் அது சரியாக இருக்கும் பட்சத்தில் சரி என்று கேட்டுக் கொள்வான். அதுதான் சூர்யாவின் வெற்றிக்கும் காரணமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

 

அருள்,நிலாவின் கல்யாணத்தைக் கேள்விப்பட்டு சூர்யாவின் மனம் எவ்வளவு வருத்தப்படும் என்று ஜீவா நன்கு உணர்ந்திருந்தான்.ஆனால் சூர்யாவோ..!அதெல்லாம் ஒன்றும் இல்லை என்பதைப் போல் தன் முகத்தை வைத்திருந்தான்.

 

இப்ப என்ன பன்றது சூர்யா..? எனக்கென்னமோ…அருள் உன்ன பழிவாங்கதான் எங்க கல்யாணத்தைன்னைக்கே அவனுக்கும் நடக்கனும்ன்னு சொல்றான்.அதுவும் நீ சொன்ன அதே பொள்ளாச்சியில்…”என்றான் ஜீவா.

 

சூர்யா…”அனுமானம் எல்லாம் இல்லை ஜீவா.அவன் கண்டிப்பா என் மேல் உள்ள கோவத்தை தான் இப்படிக் காட்டுறான்.அது எனக்கும் நல்லாவே தெரியுது.ஆனா அதுக்காக என்ன பண்ண முடியும்…..ஒரு விஷயம் கவனிச்சியா ஜீவா…! அவன் ரொம்ப குடுத்து வச்சவன் இல்ல. போதும்…போதும்ன்னு சொல்ற அளவுக்கு அவனுக்கு..,அவன் நினைச்ச எல்லாமே கிடைக்குது…ஆனா எனக்கு..?” என்று  வெற்று சிரிப்பு சிரித்தவன்..”எது எப்படி இருந்தாலும்…உனக்கும் தீபாக்கும் கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகனும்….” என்றான் காரியத்தில் கண்ணாய்.

 

என்ன…! நிலா டல்லா இருக்க..?” என்றாள் ரம்யா.

 

அதெல்லாம் ஒன்னும் இல்லை ரம்யா…! ஏதோ யோசனை…அதான்…”என்று நிலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிலாவின் செல்போன் ஒலித்தது.அதில் வந்த ஜெண்டில்மேன் என்ற பெயரைப் பார்த்தவள்….அதை எடுக்க மனமில்லாது அப்படியே விட்டாள்.ஆனால் அது மறுபடியும் மறுபடியும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிலா…அதை அட்டென் செய்தாள்.

 

அருள்…”என்ன நிலா…? இவ்வளவு நேரம் போன் அடிச்சுகிட்டே இருந்தது….நீங்க எடுக்கவே இல்லை.ஏதாவது பிராப்ளமா..?”என்றான்.

 

நிலா…”ஐயோ…! கடவுளே…இவன் வசனம் பேசியே கொல்லப் போறான்..என்று மனதில் நொந்த நிலா…சொல்லுங்க..நான் பார்க்கலை.இப்பதான் பார்த்தேன்…அதான்..” என்றாள் வேண்டா வெறுப்பாய்.

 

இல்லை இன்னும் கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு.நாளைக்கு எல்லாரும் பொள்ளாச்சிக்கு போகனும்.அதான் அதுக்கு முன்னாடி பேசலாமேன்னு கூப்பிட்டேன் என்றான் அருள்.நிலா அவனிடம் போனில் பேசமலேயே இருந்தது அவனுக்கு உறுத்தலாய் இருந்தது என்பதே உண்மை.

 

நிலா…”அப்படியா…!”என்றாள் சுரத்தையில்லாமல்.பிறகு கடனே என்று நிலா கேட்க…,அருள் அவன் போக்கில் பேசிக்கொண்டிருந்தான்.ஒரு கட்டத்தில் நிலா தூங்கியே விட்டாள்.ஆனால் அருளோ…அந்த பக்கம் நிலா..நிலா என்று கத்திக் கொண்டிருந்தான்.”

 

அப்பொழுது வந்த ரம்யா…”என்ன இது போன்ல சத்தம் கேட்குது…என்று நினைத்தவாறு…நிலாவின் கைகளில் இருந்து போனை வாங்கியவள்…ஹலோ..! “என்றாள்.

 

குரல் வித்யாசம் உணர்ந்த அருள்…”நான் அருள் பேசுறேன்..நிலா எங்க,..?” என்றான்.

 

ரம்யா,நிலாவைத் திரும்பி பார்க்க…அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.ரம்யாவால் சிரிப்பை அடக்க முடியாமல்  சிரிக்க…”நிலாவா..அவ நல்லா தூங்குறா…இவ்வளவு நேரம் நீங்கதான் தாலாட்டுப் பாடுனிங்களா..?” என்றாள் கிண்டலாய்.

 

அருள்…அந்த பக்கம் அசடு வழிந்தான்.”சரிங்க ரம்யா…அப்ப நான் போனை வைக்கிறேன்.நிலா எழுந்தா சொல்லிடுங்க…!” என்றவாறு போனை வைக்க….ரம்யா சிரிப்பை மட்டும் நிறுத்தவில்லை.

 

உறங்கிக் கொண்டிருக்கும் நிலாவையே பார்த்தாள் ரம்யா.”இவள் தான் தனக்காக எவ்வளவு மெனக்கெடுகிறாள்.உறங்கும் போது கூட அவள் முகத்தில் கள்ளம் கபடம் தெரியவில்லை.அலையாய் ஆர்ப்பர்த்தவளா…இவள்? என்று மனதிற்குள் வியந்தாள் ரம்யா.இப்பொழுது இவள் கல்யாணத்திற்கு சம்மதித்தது கூட தனக்காகத்தான் இருக்குமோ..!”என்று மனதில் எண்ணியவாறு அமர்ந்திருந்தாள்.

 

விதியும்….நிலாவின் வாழ்வில் இப்படித்தான் உறங்கப் போகிறது என்பதை அறியாதவளாய்…தன்னிலை மறந்தவளாய்…எதிர்காலத்தை அதன் போக்கில் விட்டவளாய்….எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாதவளாய்…தன் மனதில் உள்ள ஆசையை உணராதவளாய் ….உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா. விதி தனது ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராய் இருந்தது…..அருளின் வடிவில்.

 

நடப்பதை எல்லாம் முன்கூட்டியே அறியும் சக்தியை மனிதன் பெற்றிருந்தால்….. அங்கு கடவுளுக்கு என்ன வேலை…?

 

ஒரு வார காலமாக நிலா ஆபீஸ் வருவதை நிறுத்தியிருந்தாள்.

 

சூர்யாவிற்கு அவள் இல்ல ஆபீஸ் சுடுகாடாய் தெரிந்தது.எதிலும் ஒரு பிடிப்பற்று போனான்.அவனது நிலை கண்டு ஜீவாவே மிகுந்த கலக்கம் அடைந்தான்.ஒரு விசயத்தில் சூர்யாவை நினைத்து ஆச்சர்யம் கொண்டான் ஜீவா.எவ்வளவு வலிகள் தனக்குள் புதைந்திருந்த போதும்….சூர்யா எதிலும் தேங்கி அமர்ந்து விடவில்லை.எடுத்த காரியத்தை நிறுத்தவும் நினைக்கவில்லை.அவன் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் தெளிவாய் இருந்தான்.வலிகளை தன்னுடைமையாக்கிக் கொண்டான்.

 

என்னதான் மறைத்தாலும் நிலா ஏற்படுத்தி சென்ற தனிமையை சூர்யாவால் நன்கு உணர முடிந்தது.அப்படி என்ன அவள் பெரிசாய் தன்னை பாதித்து விட்டாள் என்று சூர்யாவும் யோசித்து ஓய்ந்தது தான் மிச்சம்.ஆனால் அவளின் அந்த கண்கள் அவனை இம்சித்தது.நீ என்னை முன்னமே அறிந்திருக்கிறாய் என்று சொல்லாமல் சொன்னது.ஆனால் அது என்ன என்பது மட்டும் சூர்யாவிற்கு விளங்கவில்லை.காதல் ஒருவனை இப்படியும் நிலைகுலைய வைக்கும் என்பதை சூர்யா தன்னை வைத்தே உணர்ந்து கொண்டான்.

 

சூர்யா….வேண்டாம் விடாத….நீ தியாகி பட்டம் வாங்கி என்ன செய்ய போற….! ஒன்னும் செய்ய முடியாது.அவள் யாரை லவ் பண்ணா என்ன..? நீ அவளை முதல்ல கல்யாணம் பண்ணு… அதுக்கு அப்பறம் வர பிரச்சனைகளை…அப்பறம் பார்த்துக்கலாம் ” என்று ஒரு மனம் அவனை உசுப்பேற்ற….

 

வேண்டாம் சூர்யா…”இது தப்பு.ஆயிரம் இருந்தாலும் அவன் உனக்கு தம்பி முறை.அவன் ஆசைப் படும் பெண்ணை நீ மனதில் நினைப்பது கூட குற்றம்.ஒரு பெண்ணிற்காக…உன் இத்தனை வருட ஒழுக்கத்தையும் விட்டு விட போகிறாயா..?” என்று இன்னொரு மனம் அவனை எச்சரித்தது.

 

முதன் முறையாக….,என்ன செய்வது என்று தெரியாமல்…குழம்பிப் போய் இருந்தான் சூர்யா.

 

அருளின் கல்யாணத்தில்…தீபாவிற்கு கொஞ்சமும் உடன் பாடு இல்லை.தீபாவிர்கும் தெரிந்தே இருந்தது…அருள் வீம்பிற்கு செய்கிறான் என்று.என்னதான் இருந்தாலும் சூர்யாவிற்கு கல்யாணம் செய்யாமல் அருள் செய்ய வேண்டும் என்று குதிப்பதை தீபா விரும்பவில்லை. ஆனால் தான் சொன்னால் கண்டிப்பாய் அருள் கேட்க மாட்டான் என்று தீபாவிற்கு தெளிவாய் தெரியும்.சூர்யா வந்து கல்யாணம் என்று சொல்லிவிட்டு பத்திரிக்கையை கொடுத்து சென்றதில் இருந்தே…அருள் தீபாவிடம் பேசுவதை அடியோடு  நிறுத்தி விட்டான்.தீபாவும் எதுவும் செய்ய இயலாதவளாய் விஷயத்தை அதன் போக்கில் விட்டு விட்டாள்.

 

ஜக்குவிற்கும்…,சுதாவிற்கும் மகிழ்ச்சியாய் இருந்தது.முரளி எதிர்ப்பைக்  காட்டுவார் என்று எதிர்பார்த்திருக்க…முதலில் எதிர்த்த முரளி…நிலா பிரபுவின் மகள் என்று தெரிந்த பிறகு சரி என்று சொல்லிவிட்டார். ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…முரளி மகியின் வீட்டிற்கு சென்று வந்த பிறகுதான் அப்படி சொன்னார் என்று.

 

பிரபுவும்….முரளியிடம் தெளிவாய் பேசியிருந்தார்.உண்மையாக சொல்லப் போனால் முரளி இருக்கும் தைரியத்தில் தான் நிலாவை பெண் கொடுக்க சம்மதித்ததே…!இப்படி எல்லா புறமும் அனைத்தும் சமன் செய்யப்பட்டு இரண்டு கல்யாணமும் ஒரே மேடையில் என்று முடிவாகியிருந்தது.

 

ஆனால் முரளிக்கு சூர்யாவிற்கு திருமணம் செய்யாமல்….இதை செய்வதில் உடன்பாடு இல்லை.ஆனால் அவன் வேண்டாம் என்று சொன்ன பிறகு அவரால் அவனை வற்புறுத்தவும் முடியவில்லை.அதற்கு காரணம்…அவனை திட்டியாவது கல்யாணம் செய்ய சொல்லக் கூடிய தகுதியை அவர் இழந்து விட்டிருந்ததே..!

 

இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்ட முரளியின் பாடு தான் அங்கு மிகவும் பரிதாபமாய் இருந்தது.கண்மூடித்தனமாய் தன் தாயை நம்பியதற்கான பாவத்தை… இன்று ஒவ்வொன்றாய் உணர்கிறாய் முரளி.

 

தங்களுக்கு வரும் ஆபத்தை நிலாவும்..,ரம்யாவும் உணரவில்லை.தன் மேல் நிலாவுக்கு காதல் துளி கூட இல்லை என்பதை அருள் உணரவில்லை.நிலாவின் மனதில் இருக்கும் அவளே அறியாத காதலை சூர்யா உணரவில்லை.நிலா….தன்னைத்தானே உணரவில்லை.சூர்யாவின் காதலை ஜீவாவைத் தவிர யாரும் அறியவில்லை.இவை அனைத்தும் தெரிந்தால்….?

 

 

மேடையேறக் கூடுமோ மீண்டும் நமது நாடகம்…

நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்…

யாரை சொல்லி நோவது …காலம் செய்த கோலம்…

உன்னை என்னை வாட்டுது..காதல் செய்த பாவம்…

கண்ணும் நெஞ்சும்…என் வசம் இல்லை…

என்ன செய்வது சொல்லடி முல்லை…

கனவில் மட்டுமே கைகள் சேரலாம்…

மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்….

காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்….

பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே..!

 

 

 

முகவரி 20:

 

நிலாவின் அமைதி மாலாவை பயம் கொள்ள செய்தது.முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லாமல் இருக்கும் நிலாவைப் பார்த்து..மாலாவின் சந்தேகம் அதிகமானதே தவிர குறைந்த பாடில்லை.அந்த பையனை பிடிச்சுருக்குன்னு சொன்ன பின்னாடி தான..அவரும் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னார்.இப்ப ஏன் நிலா இப்படி இருக்கா…? என்ற கேள்விகள் மாலாவின் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

 

ரம்யா சமையலறையில் எதையோ போட்டு உருட்டி கொண்டிருந்தாள்.சத்தம் கேட்டு அங்கு வந்த நிலா…,ரம்யா சமையல் கட்டில் நின்றிருந்த கோலத்தை பார்த்து அம்ம்மாஆஆ….என்று கத்த..,மாலா என்னவோ ஏதோவென்று ஓடி வந்தார்.வந்து பார்த்த மாலாவிற்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை.

 

எதுக்குடி உனக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம்…என்று கடிந்து கொண்ட மாலா……,ரம்யாவின் மேல் சிந்தியிருந்த மாவை எல்லாம் துடைத்து விட்டார்.ரம்யா இரண்டு கைகளிலும் மாவுடன் அசடு வழிந்தவாறு நிற்க…நிலாவே சிரிப்பை அடக்காமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

இங்க என்னடி வேலை உனக்கு..?“என்றாள் நிலா.

 

அது நிலா…உனக்கு கல்யாணம் நடக்க போகுதா…அதான் சரி.., கடைசியா என் கையால் சமைச்சு தரலாமேன்னு இந்த பக்கம் வந்தேன்.ஆனா முடியலைடி.எது எங்க இருக்குன்னே தெரியலை…என்று பேந்த பேந்த விழித்தாள் ரம்யா.

 

நிலா..”எக்சாம் ஹாலில் கூட நீ இப்படி முழித்ததில்லைடி….. வரலைன்னா விட்டுடனும்…இப்படி எல்லாருக்கும் சோதனை வைக்க கூடாது சரியா…!”என்றவாறு அவள் கண்ணத்தைப் பிடித்துக் கிள்ள…அந்த நிமிடம் இருவரும் அனைத்தையும் மறந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

அந்த நேரம் சூர்யாவும்..,ஜீவாவும் அங்கு வர…நிலா ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.”இப்படி, ஒரு வாரம் கழித்து சூர்யாவை..அதுவும் தன் வீட்டில் அவனை நிலா முற்றிலும் எதிர்பார்க்கவில்லை”.இருந்தாலும் தன்னை சில நொடிகளுக்குள் நிதானப் படுத்திக் கொண்டவள்…”வாங்க…வாங்க ஜீவாண்ணா…” என்றாள்.

 

ரம்யாவிற்கு வந்தவர்களை யாரென்று தெரியவில்லை.அதனால் பொதுவாக ஒரு சிரிப்பை சிரித்து வைத்தாள்.ஆனால் சூர்யாவின் முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது ரம்யாவிற்கு.”எங்க பார்த்தோம்…!” என்று மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அதுவோ அவ்வளவு சீக்கிரம் உன் நினைவிற்கு வருவேனா..? என்று அடம் பிடித்தது.

 

சத்தம் கேட்டு வந்த மாலா…சூர்யாவைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.”வாங்க…தம்பி..” என்பது போல் சைகை செய்தார்.

 

அவரைப் பார்த்து மென்மையாய் புன்னைகைத்த சூர்யா…மருந்துக்கும் நிலாவைத் திரும்பி பார்க்கவில்லை.தம்பிக்கு மனைவியாகப் போகிறவளை பார்க்கக் கூடாது என்று தனக்குத் தானே ஆயிரம் முறை சொல்லிக் கொண்டவன்….அவளின்  எம்.டியாக பார்த்து வைத்தான்.

 

ஆனால் நிலாவோ அதையும் தப்பாகவே பார்த்தாள்..”இன்னும் இவன் திமிர் கொஞ்சம் கூட குறையவே இல்லை.அதே திமிர் பார்வை…பெரிய இவன் போல் எப்பவும் ஒரு கெத்தாதான் இருக்கான்…கருவாப்பைய…” என்று  வய்விட்டு முனுமுனுக்க…அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ரம்யா திகைத்தாள்.

 

அந்தக் கருவாப்பையலா….இந்தக் கருவாப்பைய…”என்ற ரீதியில் சூர்யாவைப் பார்த்தவள் அசந்து நின்றாள்.இவரைப் போய் நிலா எப்படி கருவாப்பயன்னு சொல்றா..?கண்டிப்பா இவளுக்கு கண்ணுல ஏதோ கோளாறு..? சூர்யாவின் முகமே..அவனின் அவனின் ஆளுமைத் திறனை தெள்ளத் தெளிவாய் காட்டியது…ப்ளு ஜீனும்..,வெள்ளை சட்டையுமாய்…நார்மலான உடையில் இருந்தான்.” சூர்யாவைப் பார்த்துக் கொண்டே…. ரம்யா வாய் பிளந்து நின்றாள்.

 

ரம்யாவின் பார்வையைப் பார்த்த நிலா..எரிச்சலுடன்..”லூசு…லூசு வாய மூடு.அவனை அப்படி பார்த்து வைக்காத.அப்பறம் அதுக்கும் ஒரு முழு நீள கிளாஸ் எடுப்பான்….” என்றான் நிலா கடுப்பாக.

அவளை விசித்திரமாக மேலும் கீழும் பார்த்த ரம்யா…,அது சரி…..இவளுக்கு பைத்தியம் கன்பார்ம் என்வாறு அமைதியாய் நின்றிருந்தாள்.

 

அப்பா இல்லையா நிலா…? என்றான் ஜீவா.

 

அப்பா வெளிய போய்ருக்கார் அண்ணா.இன்னமும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.ஏதாவது முக்கியமான விஷயமா…? என்றாள் நிலா.

 

ஆமாம் நிலா…!எனக்கு  கம்மிங்க் சண்டே கல்யாணம்.நம்ம ஆபீஸ் ஸ்டாப் எல்லாருக்கும் ஆபீஸ்லயே இன்விட்டேஷன் குடுத்துட்டேன்.நீ லீவ்ல இருக்குறதால வீட்டுக்கு வந்து தரலாம்ன்னு வந்தேன்…” என்று தான் வந்ததுக்கான காரணத்தை உரைத்தவன் தனது கல்யாணப் பத்திரிக்கையை நீட்ட…நிலா அதிர்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள்.

 

எதுக்கு நிலா….இப்படி ஒரு அதிர்ச்சி…!இவனுக்கெல்லாம் கல்யாணம் அப்படின்னா..?”என்றான் ஜீவா சிரித்துக் கொண்டே.

 

ரம்யா..”அப்படி எல்லாம் இல்லண்ணா அவளுக்கும் அன்னைக்கு தான் கல்யாணம்…அதான் அப்படி திகைச்சுப் போய் நிக்குறா…” என்றாள்…இடையில் புகுந்து.

 

தெரியும் நிலா….என்ற ஜீவா…”நிலா உனக்கு தெரியுமா இல்லயான்னு தெரியலை.இருந்தாலும் சொல்றேன்.நீயும் நானும் ஒரே வீட்ல தான் வாக்கப் பட போறோம்…” என்றான் அப்பாவியாய்.

 

ஜீவா…சொன்ன விதத்தில் சூர்யாவிற்கே சிரிப்பு வர…அதைக் கஷ்ட்டப் பட்டு மறைத்தான் சூர்யா.ஆனால் நிலாவும்,ரம்யாவும் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த சூர்யா…நிலா தன் கல்யாணத்தை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பாதாய் நினைத்துக் கொண்டான்.

 

நிலா..”அப்போ தீபாவை கல்யாணம் செய்து கொள்ள போகிற அந்த அப்பாவி ஜீவன் நீங்கதானா…!” என்றாள் நிலா. 

 

நிலாவின் கேள்வியிலிருந்தே….அருளின் குடும்பத்தில் தன்னையும்..,தன் தாயையும்  யாரென்று சொல்லவில்லை என்பதை சூர்யா அறிந்து கொண்டான்.ம்ம்ம்…இன்னும் எத்தனை நாளைக்கு…என்று மனதில் நினைத்தவன்…. ஒரு வெற்று சிரிப்பை சிரித்து வைத்தான்.

 

நிலா..”சாரி ஜீவாண்ணா…தீபாக்கும் அன்னைக்குதான் மேரேஜ்ன்னு சொன்னாங்க.ஆனா மாப்பிள்ளை நீங்கதான்னு எனக்கு தெரியாது…”என்றாள் வருத்தம் தேய்ந்த குரலில்.

 

ஜீவா..”அதனால் என்ன நிலா….,எப்படியும் ஒரே மேடை.பார்த்துக்காமயா இருக்க போறோம்…ஆமா நிலா இந்த கல்யாணத்தில் உனக்கு முழு சம்மதம் தானே..” என்றான்…. தனது  கடைசி முயற்சியாய்.

 

இதற்கு நிலா பதில் கூறுவதற்கு முன் ரம்யா முந்திக் கொண்டாள்…”என்ன இப்படிக் கேட்டுடிங்க….எங்க நிலா தான் எல்லாரையும் விட…இந்த கல்யாணம் எப்ப…எப்பன்னு காத்துகிட்டு இருக்கா…” என்றாள் கிண்டல் செய்யும் நோக்குடன்.

 

ஆனால் இது சூர்யாவின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்று ஜீவா நன்கு உணர்ந்து கொண்டான்.ஏண்டா இந்த கேள்வியைக் கேட்டோம் என்று நொந்து போனான்.

 

ஜீவாவும்..,சூர்யாவும் சென்ற மறு நிமிடம் பிரபு வீட்டிற்கு வந்தார்.”என்னம்மா நம்ம வீட்டுக்கு யார் வந்தது…?”ஏதோ கார் கிளம்பி போகுது..? என்றார் மாலாவிடம்.

 

ரம்யா…அவர்கள் வந்து சென்றதற்கான காரணத்தை சொல்ல…பிரபுவிற்கு அதிர்ச்சியாகிப் போனது.ஏனென்றால் நிலா., சூர்யாவின் அலுவலகத்தில் வேலை பார்ப்பதே அவருக்கு இப்பொழுதுதான் தெரியும்.

 

பிரபு…”நீ அந்த தம்பி கம்பெனியிலா வேலை பார்க்குற..?” என்றார்.

 

நிலாவும் ஒன்றும் புரியாமல்..”ஆமாம்ப்பா…ஏன் கேக்குறிங்க..?” என்றாள்.

 

ஆனால் பிரபுவோ வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.ஆனால் மனதிற்குள் அவருக்கு ஆயிரம் கேள்விகள் படை எடுத்தது.கல்யாணத்தன்று எப்படியும் ஏதாவது பிரச்சனை வருமென்று எதிர்பார்த்தார்.”அப்போ…சுதாவுக்கும் முரளிக்கும்..மகேஷ்வரி விஷயம் எல்லாம் தெரிஞ்சுருக்கு.இருந்தாலும் நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே…? என்ன காரணமா இருக்கும்…” என்று யோசித்தாவாறு இருந்தார் பிரபு.

 

நிலா..”அப்பா உங்களைத்தான்…என்ன ஆச்சு….?” என்றாள்.

 

பிரபு..”அதெல்லாம் ஒன்னும் இல்லை நிலா…இந்த கல்யாணம் நல்ல படியா நடக்குமாம்மா…” என்றார் கவலையாய்.

 

தன்னை நினைத்து தான் கவலைப் படுகிறார் என்று தவறாக புரிந்து கொண்ட நிலா….ஐயோ..! அப்பா..கண்டிப்பா நல்ல படியா நடக்கும்..” என்றாள் அவரை சமாதானப் படுத்தும் பொருட்டு.இருந்தும் அவர் முகம் தெளியாமல் அமர்ந்திருந்தார்.

 

நிலா…”அப்பா…! ப்ளீஸ் நடந்ததை எல்லாம் மறந்துடுங்க. இனி நமக்கு எந்த பிரச்சனையும் வராது.அதுக்கு நான் பொறுப்பு.அதையும் மீறி எதாவது வந்தா…அதுக்கு அப்பறம் நடக்க வேண்டியதை பார்த்துக்கலாம்ப்பா…என்னை நம்புறிங்க இல்ல..” என்றாள் ஏக்கமாய்.

 

தான் ஒன்றை நினைத்துக் கூற…நிலா ஒன்றை நினைத்துக் கொண்டாளே..என்று பதறிய பிரபு..”அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைடா…நான் வேற ஒன்னை நினைச்சு சொன்னேன்.அது வந்து…என் தங்கையும்..,என் அத்தையும் கொஞ்சம் பிடிவாதம் பிடிச்சவங்க.அதிலும் எங்க அத்தை..அவங்க நினைக்கிறதுதான் நடக்கனும் அப்படின்ற….ஒரு இறுமாப்புலயே வாழ்றவங்க…” அதை நினைத்துதான் அப்படி சொன்னேன் நிலா.

 

இவ்வளவு தானாப்பா…அதை எல்லாம் போட்டு மனசைக் குழப்பிக்காதிங்க.எவ்வளவோ பார்த்துட்டோம்.இதைப் பார்க்க மாட்டோமா..? கழுதைக்கு வாக்கப்பட்டா  கத்தித்தான ஆகனும்என்றாள் அசால்ட்டாய்.அவளின் பாவனையில் அப்போதைய தனது குழப்பத்தை மறந்தார் பிரபு.

 

என்னங்க நீங்க …?இப்படி உட்கார்ந்து இருந்தா யார் கல்யாண வேலை எல்லாம் பார்க்குறது…?என்றார் சுதா முரளியிடம்.

 

சுதாவைப் பார்த்த முரளியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.”சுதா மனதிற்குள் பொறுமினார்.நான் என்ன பேசினாலும்…..அப்படியே இருக்குறது.இதே அவ பார்த்தாலே போதும்..மனுஷன் அப்படியே உருகிடுவார்..” என்று நினைத்தபடி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார் சுதா.

 

ஜக்கு..”என்னடா..அவ கேக்குறா…?நீ பதில் சொல்லாம அப்படியே உட்கார்ந்து இருக்க….அருள் உன் பிள்ளை தான.அவன் கல்யாண வேலைய நீ தான் முன்ன இருந்து பார்க்கனும்.அதை விட்டுட்டு இப்படி இருந்தா அதற்கு என்ன அர்த்தம்…” என்றார்.

 

எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலைன்னு அர்த்தம்…இதோ பாருங்க.கல்யாணம் என் பொண்ணு தீபாவுக்கு.அதுக்கான வேலை எல்லாம் ஒன்னு கூட வைக்காம…என் பையன் சூர்யாவே பார்த்துக்கறான்.அப்பறம் எதுக்கு நான் கவலைப்படனும்…”என்றார் முரளி.

 

சுதா..”அப்ப அருள்  உங்க பையன் இல்லையா..?” என்றார் ஆங்காரமாய்.

 

முரளி..”நான் அப்ப்டி சொல்லவே இல்லையே..! என் பையன் தான்.ஆனா என் பேச்சைக் கேட்காத பையன்.நான் ஒன்னும்  அருளைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ன்னு சொல்லலையே…! ஆனா…கொஞ்ச நாள் கழித்து கல்யாணம் பண்ணிக்கன்னு தான சொன்னேன்.ஆனா….அவன் பிடிச்ச முயலுக்கு தான் மூணு கால்ன்னு பிடிவாதமா நின்னு கல்யாணம் பண்ணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை…” என்றார்.

 

ஜக்கு..”என்னடா…கொஞ்சம் கூட அக்கறை இல்லாம பேசுற…நீ செய்றது எல்லாம் சரி இல்லை…” என்றார் கண்டிக்கும் தொணியில்.

 

நீங்க இருக்குற தைரியத்தில் தான அவன் ஆடுறான்.மூணு பேரும் சேர்ந்து எவ்வளவு தூரம் ஜால்றா போடுறிங்கன்னு பார்க்குறேன்..ஆனா ஒன்னு மட்டும் உறுதி…இதெல்லாம் நல்லதுக்குன்னு எனக்கு தோணலை..அந்த நிலா பொண்ணு ரொம்ப பாவம்.அதிலும் பிரபு..அவன் ஒரு வடி கட்டுன முட்டாள்.உங்க குணம் தெரிஞ்சும் பொண்ணக் குடுக்குறானே” என்றார் முரளி.

 

பார்த்தியா சுதா…சொந்த பிள்ளைக்கு கல்யாணம்…ஆனா இவன் பேசுற பேச்சை.எல்லாம் என் தலை எழுத்து…ஒத்த பிள்ளைய பெத்து…அதுவும் இப்படி என் பேச்சைக் கேட்காம திறியுது.இவன் ஒருத்தனே போதும்.போய் பிரபுகிட்ட பொண்ணைக் குடுக்காதிங்கன்னு கூட சொல்லிடுவான்…அதனால் இனி இவன் கிட்ட நமக்கு என்ன பேச்சு..ஆக வேண்டியத நாம  பார்த்துக்கலாம்…”என்றார் கடுப்புடன் ஜக்கு.

 

சுதாவும் அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்ட…”எக்கேடோ கெட்டுத் தொலைங்க…”என்றவாறு சென்றார் முரளி.

 

அத்தை அங்க பிரச்சனை ஒன்னும் நடக்காதுல…… எனக்கென்னமோ…மனசுக்குள்ள அடிச்சுகிட்டே இருக்குது..தீபா கல்யாணம் தான் நம்ம நினைச்ச மாதிரி நடக்கலை.அருள் கல்யாணமாவது நம்ம நினைச்ச மாதிரி நடக்குமா..? என்றார் சுதா.

ஜக்கு..”சுதா…அதெல்லாம் ஒழுங்கா நடக்கும்.இல்லைன்னா….அப்பறம் இருக்கு.அப்பத் தெரியும் இந்த ஜக்கு யாருன்னு…” என்றார் முடிவு எடுத்தவராய். இருந்தாலும் அவருக்கும் உள்ளே..பதறத்தான் செய்ததது.

 

டெல்லி:

 

என்னாச்சு ஜான்..? இன்னும் என் மருமக இருக்குற இடம் தெரியலையா…? இல்ல..அந்த போலீஸ்கார பயலுக கண்டுக்காம விட்டுட்டானுகளா..? என்றார்  ருத்ரம்.

 

ஜான்..”இல்லை சார்.அவங்க இருக்குற இடம் தெரியலை சார்.ஆனா அவங்க இருக்குற ஏரியா பேர் தெரிஞ்சுடுஞ்சு..இனி அங்க போய் விசாரிச்சா தெரிஞ்சுடும்…எப்படியும் இன்னைக்கு தெரிஞ்சுடும் சார்…” என்றான் பவ்வியமாய்.

 

என்னத்தடா கிளிச்சிங்க…இதை சொல்லத்தான் வந்தியா..இனி உங்களை நம்பி பிரையோஜனம்  இல்லை.நானே களத்துல இறங்குனாதான் காரியம் நடக்கும் போல தெரியுது…..என்ற ருத்ரம் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.

 

உயிருடன் இருந்தும் செத்த பிணமாய்..எந்த நினைவுகளும் அசைவுகளும் இன்றி இருக்கும் தன் மகன் வினோத்தை நினைக்கும் போது ருத்ரத்தின் ஆத்திரம் ஏறிக் கொண்டே போனது.இந்த விஷயத்தில் இனி நான் தோற்க கூடாது..” என்று நினைத்த ருத்ரம்..”ஜான் சென்னைக்கு இப்பவே கிளம்பனும்,…ஏற்பாடு பண்ணு…” என்றார் அதிகாரமாய்.

 

ஜான்..”சார் இதுக்கு போய் நீங்க அங்க வரை வரனுமா…?” என்றான்.

 

சொன்னதை மட்டும் செய்….இனியும் நான் பொறுமையா இருந்தா….என் மருமக எந்த எல்லைக்கும் போவா…அவளைப் பத்தி தான் தெரியுமே..! அதனால் இனி தயங்கி நிக்குறதுல பிரையோஜனம் இல்லை…”என்றவாறு சென்னைப் பயனத்திற்கு ஆயத்தமானார் ருத்ரம். 

 

                                       ************************

 

என்னடா..நினச்சுகிட்டு இருக்க உன் மனசுல…? என்றான் சூர்யா.

 

ஜீவா..”என்னடா என்னாச்சு..? எதுக்கு இப்ப இப்படி குதிக்கிற..?” என்றான்.

 

சூர்யா..”தீபாகூட நீ பேசவே இல்லையாம்.அவள் போன் பண்ணினாலும் எடுக்கலையாம்….உனக்கு என்ன ஆச்சு…” என்றான்.

 

இல்ல சூர்யா.நீ இந்த மாதிரி ஒரு மன நிலையில் இருக்கும் போது…எனக்கு இப்ப இந்த கல்யாணம் அவசியமான்னு தோணுது.என்னால் முடியலைடா….நீ வெளிய சொல்லைனாலும் உன் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு எனக்கு தெரியும் சூர்யா..அதான் எனக்கு என்னவோ போல் இருக்கு..” என்றான்.

 

சூர்யா..”லூசாடா நீ…..என் விஷயம் வேற..உன் விஷயம் வேற.என்னப் பத்தி யோசனை செய்த நீ..ஏன் தீபாவைப் பத்தி  யோசிக்கலை.அவ மனசு என்ன பாடுபடும்ன்னு நீ யோசிச்சுப் பார்த்தியா….இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்…நீ இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்…இந்த கல்யாணத்துல தான் என் மானம் மரியாதையே அடங்கி இருக்கு ஜீவா.ஒரு நண்பனா…எனக்கு ஏதாவது செய்யனும்ன்னு நினைச்சா….எந்த மன உறுத்தலும் இல்லாம தீபாவை கல்யாணம் பண்ணிக்கனும்….சரியா…! வேற எந்த சிந்தனையும் உன் மனசுக்குள் வரக் கூடாது.” என்றான்.

 

சரி சூர்யா….இருந்தாலும் அங்க நீ நிலா கல்யாணத்தையும் பார்க்கனும் இல்லை.அது எப்படிடா உன்னால் முடியும்.அதான் எனக்கு யோசனையா இருக்கு…வேணும்ன்னா எங்க கல்யாணத்தை இன்னொரு நாள் வச்சுக்கலாம்டா…” என்றான் ஜீவா.

 

பல்லைக்கடித்தான் சூர்யா…”டேய்….உனக்கு இன்னமுமா புரியலை.அருள் வீம்புக்குதான் இந்த கல்யாணத்தை உடனே பன்றான்.அது புரியாம நீயும் இப்படி பேசுற…போய் மாப்பிள்ளையா கனவு காணுற வேலைய மட்டும் பார்..” என்றான் முழுக் கோபத்தையும் முகத்தில் திரட்டி.

 

சரி…சரி….போதும்…போதும்..இதுக்குமேல என்னால் முடியாதுடா சாமி உன்கிட்ட பேச்சு வாங்க…..அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன் மச்சான் ..” என்று ஜீவா சொல்ல…”இருந்தாலும் எனக்காக இவ்வளவு யோசனை பண்ணியதற்கு தேங்க்ஸ்டா மச்சான்..” என்றபடி சூர்யா.,ஜீவாவைக் கட்டிக் கொண்டான்.  

 

எங்கு  எதிர்பார்ப்புகள் பொய்யாக்கப் படுகின்றனவோ…!அங்கு ஏமாற்றங்கள்  மிதம்மிஞ்சிப் போகின்றன.மனித வாழ்வும் அதற்கு விதிவிலக்கல்ல.எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு கட்டத்தில் சுய நலமாக யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதுவே அதிகம் ஆகும் போது…?

 

இப்பொழுது மகேஷ்வரிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சூர்யாவும்..,ஜீவாவும் பேசியது தன் காதுகளில் விலாமலே இருந்திருக்கலாம் என்று எண்ணிக் கொண்டார் மகி.தன் மகனின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.சூர்யா….காதலித்தான் என்பதையே மகியால் நம்ப முடியவில்லை.அப்படி இருக்கும் போது..அந்த பெண்ணைதான் அருள் திருமணம் செய்யப் போகிறான் என்பதை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

 

சூர்யாவின் மனதை நினைத்துப் பார்த்த மகியால் அதைத் தாங்க  முடியவில்லை.என் பிள்ளைக்கு தான் இப்படி எல்லாம் நடக்க வேண்டுமா….? என்று கடவுளிடம் முறையிட மட்டும் தான் முடிந்தது அவரால்.

 

எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை…

வாழ்க்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை….

 

 

இடம் பொள்ளாச்சி:

 

பொள்ளாச்சியில் அந்த பெரியபண்ணையார் வீடே விழாக்கோலமாய் காட்சி அளித்தது.ஜக்கம்மாவிற்கும் ..,சுதாவிற்கும் வீட்டை அடையாளமே தெரியவில்லை.ஆதை விட ஜக்கு எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகள் அங்கு காத்திருந்தது.அனைவரும் சென்னையில் இருந்து கிளம்பி அப்பொழுதுதான் பொள்ளாச்சி cஅந்து இறங்கியிருந்தனர்.பிரபு குடும்பம் பின்னால் வந்து கொண்டிருக்க….முதலில் வந்தது அருள்…குடும்பம்.அருளுக்கும் சுத்தமாய் அடையாளம் தெரியவில்லை.அவ்வளவு அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த வீடு.

 

வீடு முழுதும் ஆட்களின் நடமாட்டம் அதிகமாய் காணப்பட்டது.வீடே ஏதோ பெரிய திருவிழாவிற்கு தயாராய் இருப்பது போல் இருந்தது.மாவிலைத் தோரணங்களும்…அலங்கார விளக்குகளும் கண்ணைப் பறித்தது.

 

அருள்…”சூப்பர் பாட்டி…எப்படி பாட்டி அங்க இருந்துகிட்டே இங்க இவ்வளவு வேலையையும் பார்த்திங்க..?” என்றான்.

 

சுதா…”அத்தை நான் கூட உங்களை என்னமோ..ஏதோன்னு நினைச்சேன்…ஆனா பாருங்க..இவ்வளவு வேலையும் எவ்வளவு அருமையா பண்ணியிருக்கிங்க…” என்றார்.

 

ஜக்கு இருவரையும் வினோதமாய் பார்த்தார்.”என்ன அருள்…நான் எங்க இந்த வேலை எல்லாம் பண்ணினேன்.நானும் உங்க கூடதான வரேன்.நீ பண்ணியிருப்பன்னு இல்ல நான் நினைச்சுகிட்டு இருக்கேன்..” என்றார்.

 

யார் பண்ணியிருப்பா….? என்று  யோசித்துக் கொண்டிருக்கும் போதே…தீபாவிற்கும்,முரளிக்கும் தெரிந்துவிட்டது.இருந்தாலும் நமக்கு எதுக்கு வம்பு…நடப்பதை வேடிக்கை மட்டும் பார்ப்போம் என்ற பாவனையில் நின்று இருந்தனர்.

 

அடடே….வாங்க…வாங்க…என்ன வெளியவே நிக்குறிங்க…வந்தவங்க நேரா வீட்டுக்குள்ள வர வேண்டியதுதான…? என்ன பாட்டி…? நீங்க  கூட சொல்ல மாட்டிங்களா…?நம்ம வீட்டுக்குள்ள வரதுக்குஎதுக்கு இப்படி யோசனை பண்ணிட்டு இருக்கிங்க…ம்ம்ம்..?” என்றான் உள்ளே இருந்து வந்த சூர்யா.

 

சூர்யாவின் பேச்சில்,தீபாவிற்கும் முரளிக்கும் சிரிப்பு வர..அதைக் கஷ்ட்டப் பட்டு அடக்கிக் கொண்டனர்.

 

என்ன பாட்டி…அப்படியே ஷாக்காகிட்டிங்க…?” இதை நீங்க எதிர்பார்க்கவே இல்லைல….!என்ன பாட்டி பன்றது….நீங்க முடியாதவங்க…அப்பாவும் பாவம் எத்தனை வேலையதான் பார்ப்பார்.அதான் மூத்த பேரனா..இங்க எல்லா வேலையும் நானே முடுச்சுட்டேன்…என்றான் சூர்யா.அவன் பேசுவதை அருகில் இருந்த வேலையாட்கள் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

ஜக்குவிற்கு வாயில் ஈயாடவில்லை.அவர் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.இப்படி முன்னாடியே வந்து உரிமையாய் அனைத்தும் செய்வான் என்று ஜக்கு என்ன கனவா கண்டார்.வேலையாட்களும் அவனை மரியாதையுடன் பார்ப்பதைப் பார்த்து வயிறு எரிந்தது ஜக்குவிற்கு…”

 

நம்ம சின்ன ஐயா..அப்படியே நம்ம பெரிய அய்யாவை உரிச்சு வச்சு பொறந்துருக்காக இல்ல…என்றாள் ஒருத்தி.

 

அட ஆமாண்டி…..அப்படியே இருக்காக…ஆளும் பார்க்க அம்சமா இருக்காக..!”  என்றாள் இன்னொருத்தி.

 

இதை எல்லாம் கேட்ட அருளின் மன நிலையை சொல்லவா வேண்டும்.அவனுக்கு உள்ளே தீயாய் எரிந்து கொண்டிருந்தது.”என்னது இது இவனை நாம கடுப்பு ஏத்தலாம்ன்னு பார்த்தா…இவன் நம்மளைக் கடுப்பு ஏத்துறான்…” என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே…உள்ளே இருந்து வந்தார் மகேஷ்வரி.

 

கையில் ஆரத்தி தட்டுடன் வந்த மாகேஷ்வரியைப் பார்த்து முரளி சந்தோஷத்தின் உச்சிக்கே செல்ல…சுதாவோ ஆங்காரத்தின் உச்சிக்கே சென்றார்.ஜக்குவிற்கு எதுவும் பேச முடியவில்லை.சுற்றி சாதி சனம் நின்றிருக்க..இப்பொழுது என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாய் இருந்தார் ஜக்கு.அதைப் பார்த்த சுதாவிற்கு கடுப்பு இன்னும் ஏறியது.

 

மகேஷ்வரி…தீபாவிற்கு ஆரத்தி எடுக்க..”அப்பா..! அம்மா பக்கத்தில் நில்லுங்க…!” என்றான் சூர்யா முதன் முறையாக முரளியை அப்பா என்ற வார்த்தையுடன்.

 

சூர்யா முரளியை அப்பா என்று கூப்பிட்ட அந்த நிமிடம்..முரளி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.இத்தனை நாள்  சூர்யா தன்னை ஒரு முறையாவது அப்பா என்று அழைக்க மாட்டானா..? என்று ஏங்கியவர்…இந்த எதிர் பாராத தருணத்தில் அவன் அவ்வாறு அழைத்தது…அவர் ஆனந்த கூத்தாட செய்தது.மகனின் சொல்லை வேத வாக்காய் எடுத்துக் கொண்டவர் வேகமாய் சென்று  மகேஷ்வரியின் அருகில்  சென்று நின்று கொண்டார்.

 

சூர்யாவின் உதட்டில் மர்மப் புன்னகை நிலவியது.அவன் கண்டிப்பாய் இதை எதிர்பார்த்தான்.அதே புன்னைகையுடன் ஜக்குவையும்., அருளையும் பார்க்க…அருள் பல்லைக் கடித்தான்.ஆனால் ஜக்குவிற்கோ உள்ளே உதறல் எடுத்தது.இன்னும் என்ன எல்லாம் பண்ணி தொலையப் போறானோ…! என்று நினைத்த ஜக்குவிக்கு அப்பொழுதே நெஞ்சு வலி வரத் தொடங்கியதுதான் மிச்சம்”.

 

முரளியும்.., மகேஷ்வரியும் சேர்ந்து ஒன்றாய் நின்று தீபாவிற்கு ஆரத்தி எடுத்த அந்த அழகிய தருனத்தை ஜீவா…தனது கேமராவில் பதிவு செய்தான்.தீபாவிற்கும் அவர்களை ஜோடியாகப் பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.அவ்வளவு பொருத்தமாக இருந்தது.உண்மையில் தன் அம்மாவை விட…மகி அம்மாதான் அனைத்து விஷயத்திலும் அப்பாவிற்கு பொருத்தமானவர் என்று தீபாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.இருந்தாலும் ஒரு மகளாய்…தன் தாய்க்காகவும் அந்த மகளின் உள்ளம் பரிதாபப் படத் தொடங்கியது.

 

வீட்டிற்குள் சென்ற முரளிக்கு கண்கள் தானாக கலங்க…சுதாவிற்கு வெறி பிடிக்க…அருளோ…எதுவும் செய்ய முடியாமல் முழிக்க…ஜக்குவிற்கு உண்மையாலுமே நெஞ்சு வலி வந்துவிடும் என்று பயந்தவாராய் பொத்தென்று சோபாவில் அமர்ந்தார் ஜக்கு.

 

ஹாலில்…”முரளி-மகேஷ்வரியின் திருமணப் புகைப்படம் பெரிய அளவில் லாமினேஷன் செய்து மாட்டப்பட்டிருந்ததே….” அனைவரின் திகைப்பிற்கு காரணம்.சூர்யா…தன் அம்மாவை கட்டாயப்படுத்தி,கெஞ்சி…இதுவரை அவர் வெளியில் தெரியாமல் வைத்திருந்த அந்த போட்டோவை வாங்கி…அதை அங்கு மாட்டியிருந்தான்.

 

போட்டோவைப் பார்த்த முரளி…அந்த பழைய நாட்களுக்கே சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.கண்களில் தானாக கண்ணீர் பெருக….சூர்யாவை தோளோடு அணைத்துக் கொண்டார்.”என் அம்மாவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சவில்லை.எனக்கு அப்பா என்ற அங்கீகாரத்தை தாருங்கள் என்று சொல்லவில்லை.அதே சமயம் தேவையில்லாமல் பகை உணர்வை வளர்க்கவில்லை.ஆனால் எனக்கான உரிமைகளை மற்றவர்கள் தர தேவையில்லை.., அதை எனக்கே எடுக்கத் தெரியும் என்ற பாணியில் சூர்யா ஒவ்வென்றாய் செய்து கொண்டிருந்தான்”. அவனின் இந்த அணுகுமுறை முரளிக்கே புதிதாய் தெரிந்தது.

 

இந்தாங்க பாட்டி தண்ணீர்…!“என்று ஜக்குவின் முன் டம்ளரை நீட்டினான் சூர்யா.

 

ஜக்குவிற்கு அந்த நேரம் உண்மையாலுமே தண்ணீர் தேவைப் பட்டது.அதனால்… என்ன …ஏது  என்று கேட்காமல் அதை வாங்கி வேகமாய் குடித்தார்.

 

பார்த்திகளா…பேரனுக்கு., நம்ம ஆத்தா மேல எம்புட்டு பாசம்…..பாட்டிக்கு ஒன்னுன்னா விழுந்து விழுந்து கவனிக்கிறாக….” என்றனர் அங்கிருந்த வேலையாட்கள் அனைவரும்.அதைகேட்டு சூர்யாவின் முகத்தில் புன்னகை மலர…ஜக்குவிற்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

 

ஜீவா..தீபாவைப் பார்க்க..அவளோ அவனை கண்டு கொள்ளாமல் வேகமாய் அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று விட்டாள்.ஜீவாவிற்கு புஸ் என்று ஆகியது.”இதெல்லாம் நீயா தேடிகிட்டது…ஒன்னும் செய்ய முடியாது..”என்று சூர்யா சொல்ல…ஜீவா…பேந்த பேந்த விழித்தான்.

 

சூர்யாவையும்.., மகேஷ்வரியையும் பார்ப்பதற்கு ஊரில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தராய் படை எடுக்க…ஜக்குவிற்கு என்ன செய்வது…என்ன சொல்வதென்று தெரியவில்லை.”இவங்க….”என்று ஜக்கு வாயைத் திறக்க….

 

நீங்க சும்மாயிருங்க ஆத்தா…உங்களுக்கு உடம்புக்கு முடியலையாமே….சின்னையா சொன்னாக.என்ன சொல்லு ஆத்தா…நம்ம அய்யா அப்படியே நாம பெரியய்யா (தாத்தா வீர பாண்டியன்) மாதிரி தான்.அவுகள மாதிரியே தங்கமான குணம்.குணத்துல அப்படியே அவுகளை உரிச்சு வச்சு பொறந்துருக்காக.நம்ம ஊர்ல ஒரு வீடு பாக்கி இல்லாம…எல்லாருக்கும் நேர்லையே வந்து பத்திரிக்கை வச்சாகன்னா பார்த்துக்கங்க….” என்று அங்கிருந்த பெண்கள் சொல்ல…”இது எப்படா…” என்ற கேள்வியில் சூர்யாவைப் பார்த்தார் ஜக்கு.

சூர்யா…”என்ன பாட்டி நீங்க…இதுக்கு எல்லாம் போய் எனக்கு நன்றி சொல்லிகிட்டு.அப்படி நான் என்ன பண்ணிட்டேன்..என் கடமையத்தான செஞ்சேன்..இதெல்லாம் பெரிசுபடுத்தாதிங்க…” என்று அனைவருக்கும் கேட்குபடியாக சொன்னவன்…ஜக்குவின் காதருகில்…”இதுக்கே அசந்துட்டா எப்படி…இன்னும் நீங்க பார்க்க வேண்டியது…சமாளிக்க வேண்டியது எல்லாம் எவ்வளவோ இருக்கு…” என்றான் ரகசியமாய்.

 

சூர்யாவின் ஒவ்வொரு காரியமும்…சுதாவை பயம் கொள்ள வைத்தது.அங்கு அவர் எந்த உரிமையும் இல்லாமல் நிற்பதை போல் உணர்ந்தார்.அனைவரிடம் இருந்தும் தான் மட்டும் தனிமைப் படுத்தப் பட்டது போல் உணர்ந்தார்.ஆனால் மகேஷ்வரியோ அங்கு உரிமையாய் சமைத்துக் கொண்டிருந்தார்.

 

ஆனால் அருளோ இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.அவன் நிலாவின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தான்.அந்த நிமிடம் சூர்யாவின் முகம் போகும் போக்கைப் பார்க்க ஆவலாக இருந்தான் என்று சொன்னால் அதுதான் சரியாக இருக்கும்.

 

ஆனால் அங்கு தீபாவோ உள்ளே….கண்களில் கண்ணீர் வர அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.சூர்யா வந்து இரண்டு பெட்டிகளை கொடுத்துவிட்டு செல்ல..அதைத் திறந்து பார்த்தவள் …அதில் உள்ளதை எல்லாம் பார்த்து….சொல்ல வார்த்தையின்றி இருந்தாள்.

 

சூர்யா…கண்ணில் கண்ட அனைத்தையும் வாங்கிக் குவித்து இருந்தான்.அவளே நேரில் சென்று வாங்கியிருந்தால் கூட இவ்வளவையும்.,அதுவும் இப்படி சிறப்பாக வாங்கியிருப்பாள் என்று சொல்ல முடியாத அளவிற்கு அனைத்தையும் ஒரு நேர்த்தியுடன் வாங்கியிருந்தான் சூர்யா.தீபாவிற்கு செய்ய வேண்டும் என்று சூர்யாவிற்கு எந்த கட்டாயமும் இல்லை.இருந்த போதிலும் எதையும் கடமைக்காக செய்யாமல்…அதை முழு மனதுடன் செய்தது…தீபாவை கண்கலங்க வைத்தது.

 

அதே நேரம் உள்ளே வந்தான் அருள்.தீவாவின் முன் இருப்பதை எல்லாம் பார்த்தவன்..எதுவும் பேசவில்லை.தீபாவிற்கே ஆச்சர்யம்….அருள் எதுவும் பேசாதது.வந்தவன் நேராக தீபாவிடம் ஒரு அட்டைப் பெட்டியை தந்தான்.

 

அருள்..”எனக்கு கோபம் இருக்குறது என்னவோ உண்மைதான் தீபு.ஆனா அதுக்காக என் தங்கைக்கு செய்வதை எல்லாம் எப்படி செய்யாமல் விடுவேன்.ஜீவா நான் பார்த்த மாப்பிள்ளைதான…?சில விஷயங்கள்ல வருத்தம் இருந்தாலும்…ஜீவா உனக்கு ஏத்த மாப்பிள்ளைதான்.உனக்கும் பிடிச்சு…கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு…இனி நான் பிடிவாதம் பிடிச்சு என்ன ஆகப் போகுது…என் செல்ல தீபுக் குட்டி எப்பவும் சந்தோஷமா இருக்கனும் …சரியா..” என்று அவளின் தலையில் கைவைத்து சொன்னவன் அங்கிருந்து வேகமாய் சென்று விட்டான்.

 

தீபாவிற்கு ஒரு நிமிடம் நடந்ததை நம்பவேமுடியவில்லை.தனது பழைய அண்ணனாக அருளைப் பார்த்ததில் அவளுக்கு மகிழ்ச்சிதான்.ஆனால் அருள் இப்படி எல்லா விஷயத்திலும் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று ஏக்கத்துடன் பார்த்தாள் தீபா.

 

வாசலில் நிலாவின் குடும்பமும் வந்து இறங்க….அருள் ஆர்வமாய் வெளியே ஓடினான்.பிரபு தயக்கத்துடன் இறங்க…,மாலா இப்பொழுதுதான்  முதன் முறையாக தன் கணவனின் பிறந்த ஊருக்கு வருகிறார்.அதனால் அவரும் சற்று தயக்கத்துடன் தான் இருந்தார்.ஆனால் நிலாவோ எதைப் பற்றியும் கவலைப் படாதவளாய் அந்த ஊரின் செழுமையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

அருள் வேகமாய் வெளியே வர…இப்பொழுது சுதா முந்திக் கொண்டு தன் மருமகளுக்கு ஆர்த்தி எடுத்தார்.அதைப் பார்த்த முரளிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.சுதாவின் மனதில் உள்ள உரிமைப் போராட்டத்தை நன்கு உணர்ந்து கொண்டார் முரளி.

 

அருளைப் பார்த்த ரம்யா..அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.”அன்னைக்கு ஹோட்டலில் இவரைத்தான கணவர்ன்னு சொல்லி..பில்லைத் தலையில் கட்டிவிட்டு வந்தோம்..ஒருவேளை நம்மைத் தெரியுமா…?இல்லை தெரிந்து இருக்க வாய்ப்பில்லை…” என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் ரம்யா.அருள் மறுமுறை நிலாவின் வீட்டிற்கு வந்து சென்றதில் இருந்து…இந்த எண்ணம் தான் ஓடுகிறது ரம்யாவின் மனதினுள்.

 

நிலா வந்ததை உள்ளிருந்து பார்த்த சூர்யாவின் முகம் ஒரு நிமிடம் வேதனையை சுமந்து…அடுத்த நொடியே அதை மாற்றிக் கொண்டது.ஜீவா தன்னைக் கவனித்துவிட்டால்…மறுபடியும் பழைய பல்லவியைப் பாடுவான் என்று சூர்யா நினைத்தான்.எக்காரணம் கொண்டும் முகத்தில் எதையும் காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.ஆனால் சூர்யா இவ்வாறு பார்த்து..,தனக்குள் மறுகிக் கொண்டிருப்பதைப் பார்த்த மற்றொரு ஜீவன் மகேஷ்வரி.

 

நிலாவைப் பார்த்த மகேஷ்வரிக்கு அவளை உடனே நியாபகத்திற்கு வர….”இந்த பொண்ணு தான,அன்னைக்கு சூர்யாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது….” என்று யோசித்த அவருக்கு அனைத்தும் புரியத் துவங்கியது.இருந்தும் அவரால் கடைசி நேரத்தில் என்ன செய்ய முடியும்…

 

நிலா வந்த உடன்.., சூர்யா வருத்தபடுவான்….அவன் முகம் போகும் போக்கை பார்க்க காத்துக்கொண்டிருந்த அருளுக்கு…சப்பென்று ஆனது.சூர்யா எதையும் கண்டுகொள்ளாதது போல் இருக்க…அருளுக்கு தான் முகம் சின்னதாகிப் போனது.”உண்மைக்குமே இவனுக்கு வருத்தம் இல்லையா…?இல்லை இல்லாதது மாதிரி நடிக்கிறானா…?” என்று  அருள் யோசித்துக் கொண்டிருக்க…சூர்யாவை அங்கு பார்த்த படபடப்பில் நிலா வேறு எதையும் கவனியாது சுதாவின் பின்னால் சென்று விட்டாள்.

 

தன் நினைவிற்கு வந்து அருள் நிலாவைத் தேட…”யாரை அண்ணா தேடுற,…?”என்றாள் தீபா.

 

இல்லை..நிலா…அதான்…என்று இழுத்துக் கொண்டிருந்தான் அருள்.”ஐயோ..! அண்ணா..அவங்க அப்பவே உள்ள போய்ட்டாங்க…! நீ பார்க்கலையா…? ” என்று சிரித்தாள் தீபா.அப்பொழுதும் அருளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

 

சூர்யாவும்..,முரளியும் பிஸ்னெஸ் வட்டாரத்தில் முக்கிய புள்ளிகள் என்பதால் நிறைய முக்கிய பிரமுகர்களை திருமணத்திற்கு அழைத்திருந்தனர். சென்னையில் இல்லாத மண்டமா..? என்று வினவிய அனைவருக்கும் சூர்யாவின் புன்னகையே பதிலாய் கிடைத்தது.கடல் போல் வீடு இருக்க…திருமண மண்டபம் தேவையில்லை என்று நினைத்த சூர்யா….அந்த வீட்டின் பெரிய ஹாலையே மண்டம் போல் அலங்கரித்திருந்தான்.முரளியே தன் மகளுக்கு செய்ய நினைத்திருந்தால் கூட..,இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்க மாட்டார்.அப்படி அனைத்தையும் சூர்யா சிறப்பாக செய்திருந்தான்.அனைத்திலும் ஒரு நேர்த்தி தெரிந்தது.அன்று அந்த ஊரின் கதானாயகனாவே சூர்யா மாறி போனான்.

                                               **************

ரம்யா..! எனக்கு என்னவோ தப்பு நடக்கப் போற மாதிரியே தோணுதுடி..! என்றாள் நிலா.நிலாவின் வார்த்தைகளைக் கேட்ட ரம்யாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.இதே மாதிரி தானே இவள் அன்றும் சொன்னாள்..என்று யோசித்த ரம்யா..”அதெல்லாம் ஒன்னும் இல்லை.உனக்கு மனப் பிராந்தி…” என்றாள் தன் கலக்கத்தை மறைத்தவாறு.

 

இல்லை ரம்யா…எனக்கு என்னவோ எங்கயோ இடிக்குது….மனசு படபடன்னு இருக்கு…ஆனா ஏன்னு தெரியலை..” என்றாள் நிலா அப்பாவியாய்.

 

ரம்யா….”ம்ம்ம்ம் அதுவா..? அதான் உனக்கு ஆகாத அந்த கருவாப்பையல இங்க பார்த்த இல்லை…அதோட எபக்ட் தான் இப்படி வேலை செய்யுது….” என்றாள்.

 

ரம்யாவின் பேச்சைக் கேட்டவுடன் தான் நிலாவிற்கு இன்னமும் மனம் பாரமாகி போனது.அதற்கு காரணம் ரம்யாவின் பேச்சா…?இல்லை அது சூர்யாவை நியாபகப் படுத்தியதற்காகவா….? என்பதை அவள் அறியாள்.

 

                                             *****************

 

அத்தை என்ன நடக்குது இங்க..?என்னால எதையும் பார்க்க முடியலை.இதைப் பார்க்கத்தான் சென்னைல இருந்து இங்க வந்தோமா..? இங்க எனக்கு என்ன உரிமை இருக்கு…? எல்லாமே என் கைய விட்டு  போய்டுச்சு….! என்று கத்தினார் சுதா.

 

ஜக்கு..”சுதா பொறுமையா இரு.எனக்கென்ன தெரியும்…? முரளிதான் இங்க எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சுக்கறதா சொன்னான்.ஆனா அவன் சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கும்ன்னு எனக்கு என்ன தெரியும்.அந்த சூர்யா பய கூட சேர்ந்துகிட்டு இப்படி ஜால்ரா அடிப்பான்னு நான் நினைச்சு கூட பார்க்கலை….இப்ப நாம எதுவும் பேச முடியாது.அமைதியா இருந்து தான் காரியம் சாதிக்கனும்.அதையும் மீறி நாம ஏதாவது பேச போக…ஊர்ப்பயக யாரும் நம்மளை காலணா துட்டுக்கு மதிக்க மாட்டானுங்க…முதல்ல தீபா கல்யாணம் முடிஞ்ச உடனே..அந்த ஜீவா பயல எப்படியாவது அந்த சூர்யா கிட்ட இருந்து பிரிச்சு வீட்டோட மாப்பிள்ளையா வர வைக்கனும்.அதுலையே இவன் பாதி அடங்கிடுவான்.அதுக்கப்பறம் இருக்கு அவனுக்கு…” என்று பல்லைக் கடித்தார் ஜக்கு.

 

சுதா..”இருந்தாலும் என்னால் முடியலை அத்தை.அவ சொந்த வீடு மாதிரி நடமாடுறா..! ஆனா நான் யாரோ வீட்டுக்கு வந்த மாதிரி இப்படி திக்கில்லாம நிக்குறேன்…அப்ப எனக்கு என்ன வழி.நீங்கதான எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்க..?இப்ப நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லனும்…” என்று குமுறினார்.

 

ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா சுதா…? கல்யாணம் முடியுற வரை நீ பொறுத்து தான் ஆகனும்.ஏன்னா.,உன் பொண்ணுக்கும்,பையனுக்கும் தான் கல்யாணம்.அதுல உன்னால் எந்த பிரச்சணையும் வரக் கூடாது..எல்லாம் முடியட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்..” என்று ஒரு அதட்டு அதட்டியவராய் சென்று விட்டார் ஜக்கு.ஆனால் சுதாவின் மனது ஆற்றாமையுடன் தவித்துக் கொண்டிருந்தது.

 

 

 

 

 

சென்னை:

ஒரு வழியாக பிரபு-மாலா இருந்த வீட்டைக் கண்டுபிடித்து புயல் வேகத்தில் வந்தார் ருத்ரம்.ஆனால் அவரை வரவேற்றது என்னவோ பூட்டியிருந்த வீடுதான்.”ஒரு வேளை நால வருவது தெரிந்து எஸ்கேப் ஆகிட்டாங்களோ..!” என்று ருத்ரம் யோசிக்க…பக்கத்து வீட்டின் கதவைத் தட்டினான் ஜான்.

 

யாருங்க வேணும் உங்களுக்கு..?”என்றார் உள்ளே இருந்து வந்த பெண்மணி.கையில் இருந்த போட்டோவைக் காட்டிய ஜான்…”நான் போலீஸ்…இவங்களை உங்களுக்கு தெரியுமா..?” என்றான்.

 

ஆமா …தெரியும் சார்.பக்கத்து வீட்டுக்காரங்க தான்.ஆனா அவங்க இப்ப இல்லையே…அந்த வீட்டு பொண்ணுக்கு கல்யாணம்ன்னு சொல்லி ஊருக்கு போய்ருக்காங்க…” என்றார் அந்த பெண்மணி பயத்துடன்.

 

ஜான்..”எந்த ஊர்ன்னு தெரியுமா..?”

 

பொள்ளாச்சின்னு நினைக்கிறேன் சார்.எனக்கு அவங்களை பழக்கம் இல்லை.இந்த தெருவுல சின்ன பசங்க எல்லாரும் அந்த பொண்ணு கூடத்தான் விளையாடுவாங்க…அவங்கதான் சார் சொல்லிட்டு இருந்தாங்க…அக்காக்கு கல்யாணம் அப்படி..இப்படின்னு..” என்றார் அந்த பெண்மணி அரைகுறையாய்.

 

விஷயத்தைக் கேள்விப் பட்ட ருத்ரம் …”யாருக்கு கல்யாணமா இருக்கும்…? யாருக்கா இருந்தாலும் சரி.வந்த வேளை முடியுற வரை ஓயக்கூடாது.இப்பபே பொள்ளாச்சி போகனும் ஜான்….” என்று சொல்லி ருத்ரம் காரில் ஏற..கார் ஜெட் வேகத்தில் பறந்தது.

 

அன்றைய திருமண நாள் காலைப் பொழுது அழகாய் விடிந்தது.அனைத்து வேலைகளும் பரபரப்பாய் நடக்க…சூர்யா பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தான்.நிலா விஷயத்தை தவிர..அனைத்தும் அவனின் திட்டப்படியே நடந்து கொண்டிருந்தது.

 

தீபா மகிழ்ச்சியான மன நிலையில் சந்தோஷமாய்..,தன் வாழ்வின் அந்த அற்புத நிகழ்விற்காக தயாராகிக் கொண்டிருந்தாள்.இரண்டு கல்யாணமும் ஒரே நேரத்தில் நடந்தால் வீட்டிற்கு ஆகாது என்று பெரியவர்கள் சொன்னதால் முதலில் ஜீவா-தீபா கல்யாணமும்..அடுத்த அரைமணி நேர முகூர்த்தத்தில் அருள்-நிலா கல்யாணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

நிலாவோ..! ஏனோதானோ என்று கிளம்பிக் கொண்டிருந்தாள். ரம்யாவிற்கு மனதிற்குள் பயம் அடித்துக் கொண்டிருந்தாலும் அவளும் திடமாய் இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாள்.அருளோ…! சந்தோஷமாய் புது மாப்பிள்ளையாக ரெடியாகிக் கொண்டிருந்தான். சூர்யாவோ…தன் அம்மாவிற்கு நடந்த சம்பவங்களை மாற்றி…அவர் மீதுள்ள அந்த அவப் பெயரை துடைத்து..,அவரின் உரிமையை நிலை நாட்ட போகும்அந்த நிமிடங்களுக்காய் காத்திருந்தான்.இருந்தாலும் சூர்யாவின் மனதில் நிலாவின் நினைவு சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருந்தது.

அங்கு ருத்ரம் தனது தேடுதல் வேட்டையின் இறுதி எல்லையை அடைந்தவராய்…பொள்ளாச்சியை நோக்கி அவரின் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

 

விதியின் ….மதியில் சிக்கிய இவர்களின் நிலை என்ன..?

தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேருமா…?

முகவரிகள் கிடைக்குமா…?

Advertisement