Advertisement

முகவரி 2:

 

அந்த அரங்கமே  கை தட்டல்களின் ஒலியில் நிறைந்து இருந்தது.சூர்யா இளம் தொழிலதிபர்க்கான விருதை வாங்க மேடை ஏறினான்.அவந்து கம்பீரமான நடை அங்கு குழுமி இருந்த அனைவரையும் வியக்க வைத்து.தனக்கே  உரிய நடையில் சென்று அந்த விருதை வாங்கும் போது அவனுடைய கர்வம் இன்னும் அதிகரித்து.அறிவிப்பாளர் அவனைப் பேச சொல்லி அழைக்க….மைக் அருகில் சென்றவன்..அனைவரையும் நிதானமாக ஒரு பார்வை பார்த்தான்.

 

எல்லாருக்கும் வணக்கம்!

 

இந்த விருது எனக்கு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.இதை நான் எதிர் பார்க்கவே இல்லை…என்று சற்று நிறுத்தியவன்….அப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.ஏன்னா நான் இந்த விருதை வாங்குவேன்னு கண்டிப்பா நம்பினேன்..அதற்காக கடினமா உழைத்தேன்.அதற்கான பலன் இப்போ இங்க..நின்று  இருக்கேன்.அதுதான் உண்மை.நான் இந்த உயரத்திற்கு வருவதற்கு முழுமுதற் காரணம் என் அம்மா…என் அம்மா மட்டுமே…!ஒரு ஆணோட வெற்றிக்குப் பின்னால் தாரம் இருக்கலாம்….தாய் இருக்கலாம்..இதில் நான் இரண்டாவது வகை.

 

நம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம் அப்படின்றது எல்லாம் சும்மா..வெறும் நம்பிக்கை எதற்கும் உதவாது.தன்னம்பிக்கை வேண்டும்.என்னோட ஆரம்பகட்ட முதலீடு நான் பேங்க்கில்  கடன் வாங்கிய..25 லட்சம் ரூபாய்.அதுதான் என் முதலீடு.அதை விட அதிக முதலீடு…என் உழைப்பு..!.என் திறமை.!..என் விடா முயற்சி! முக்கியமா என் தன்னம்பிக்கை…இதெல்லாம் சேர்த்துதான் நான் இப்ப இங்க நிற்கிறேன்.என் அம்மாவுக்கு அடுத்து என் வாழ்க்கையில் நீங்காத இடம் பிடித்த என் நண்பன்…ஜீவானந்தம்.மற்றவர்கள் நட்புக்கு இலக்கணமாய் யாரை சொன்னாலும் …எனக்கு இலக்கணமாய் இவன் தான் தெரிவான்.”என்று ஜீவாவை மேடைக்கு அழைத்தவன்…அவனுடன் அந்த விருதைப் பகிர்ந்து கொண்டான்.

 

தன் நண்பனின் பேச்சைக் கேட்ட ஜீவாவிற்கு… மிகுந்த பெருமையாய் இருந்தது.அவனைத் தோளோடு அணைத்துக்கொண்டான்.

 

இவ்வளவு நேரம் பேசும் பொழுது இருந்த ஒரு இளகல் தன்மை…,,அந்த மேடையை விட்டு இறங்கும் போது., சூர்யாவிடம் சுத்தமாய் இல்லை.மீண்டும் முகம் கல்லாய் மாறியது.

 

சூர்யா விருது வாங்குவதையும்…அவன் பேசுவதையும் …முதல் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தீபாவிற்கு..ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்பட்டது.சூர்யாவிடம் சென்று பேச வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

 

அருளுக்கு.. “இன்று காலை தன்னுடன் சண்டை இட்டவன் இவன்….. என்று இருந்தாலும் மனதின் ஓரத்தில் அவன் வெற்றியை நினைத்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.ஆள் கோபக்காரனா இருந்தாலும்…மற்ற எல்லாவற்றிலும் விஷயம் தெரிந்தவனாய் இருக்கான் “என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

 

ஆனால் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அருளின் அம்மாவிற்கு…!! சிந்தனை முடிச்சு இன்னும் அதிகமாகியதே தவிர குறைந்த பாடில்லை!!

 

அடுத்ததாக….இந்த வருடத்தின் சிறந்த நிறுவனமாக “அருள் கன்ஸ்டரக்க்ஷன்ஸ்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்த விருதினை வாங்க…அந்த நிறுவனத்தின் ஜே.எம்.டி…மிஸ்டர்அருளை., மேடைக்கு அழைக்கிறோம்..என்று அறிப்பாளர் கூற…ஏதேதோ சிந்தனைகளில் இருந்த சுதாவும்…தீபாவும் கவனத்தை மேடையின் மேடையின் பக்கம் திசை திருப்பினர்.

 

அருள் …அவனுக்கு உரிய நடையுடன் சென்று அந்த விருதைப் பெற்றுக் கொண்டான்.ஆனால் அந்த விருதை வாங்கும் பொழுது …சூர்யாவிடம் தென்பட்ட கர்வம்..அவன் முகத்தில் இல்லை..அதையும் மீறி ஒரு சந்தோஷம் மட்டுமே நிலை கொண்டிருந்தது.

 

அறிவிப்பாளர் அவனை பேச அழைக்க…

 

ஹல்லோ பிரண்ட்ஸ்…

இதில் என் சாதனை என்று பெரிதாக எதுவும் இல்லை.இதில் பாதி ..,  என் அப்பாவின் உழைப்பு.அவர் இங்கு இல்லாத காரணத்தால் இப்பொழுது இந்த விருதை நான் வாங்கி கொள்கிறேன்.நான் இன்னும் நிறைய சாதிக்கனும்…அதற்கு பிறகு ஒரு நாள் இதே மேடையில் உங்களை சந்திப்பேன்னு நினைக்கிறேன்..நன்றி.என்று பேசி முடித்து வந்தவனை….தீபா ஓடி சென்று அணைத்துக் கொண்டாள்.

 

ஐயோ! அண்ணா…சூப்பர்..சூப்பர்…என்று தீபா மேலும் கீழும் குதிக்க….”குட்டிமா…,,போதும் பப்ளிக்…பப்ளிக் என்றான் அருள் சிரிப்புடன்.”

 

ஐயோ.. அண்ணா..! என்ற தீபாவின் வார்த்தகளில் திரும்பிப் பார்த்த சூர்யா..அவளைப் பார்த்து திகைத்தான்.

 

குறும்பு மின்னும் கண்கள்….குழந்தைத்தனமான முகம்…என்று அவனை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது.

 

தன்னுடைய விருதை அவளிடம் சென்று கொடுத்து….”இந்தா ..!வைத்துக் கொள்..இது உனக்குத்தான்..” என்று சொல்ல வேண்டும் போல் ஆவல் பிறந்தது.இருந்தாலும் தன்னை அடக்கியவனாய்…தன் உணர்வுகளை மறைத்து அங்கிருந்து அகன்றான் சூர்யா.

 

மிகவும் சந்தோஷமாய் வீட்டினுள் நுழைந்தாள் நிலா.அவளது முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்த பிரபு..,”என்னடா குட்டி ரொம்ப சந்தோஷமா வர மாதிரித் தெரியுது! என்றார்.

 

எப்படிப்பா…கண்டுபிடித்திங்க..! என்று சொல்லி கண்களாலேயே அபினயம் பிடித்தாள் நிலா.

 

இது உனக்கு தேவைதான்…. என்று பிரபு தன்னைப் பார்த்து தானே சொல்ல..அவரது செய்கையில் வாய் விட்டு சிரித்தாள் நிலா.

 

ஐயோ ! அப்பா..போதும் ..விடுங்க..எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று ஆர்ப்பாட்டத்துடன் சொல்ல…அதைக் கேட்ட …மாலாவின் முகமோ இருண்டது.நிலாவிற்கு வேலை கிடைக்க கூடாது என்று அவள் வேண்டாத தெய்வமில்லை.ஆனால்...,,அவரது வேண்டுதலையும் மீறி அவளுக்கு வேலை கிடைத்து விட்டது.இனி ஒவ்வொரு நாளும் ஒரு பஞ்சாயத்தை கூட்டிட்டு  வருவாளே! என்று மனதிற்குள் நினைத்தார்..வெளியில் சொல்லவில்லை…சொன்னால் மகள் ஒரு ஆட்டமே ஆடி விடுவாள் என்று தெரியும் அந்த அன்னைக்கு.

 

நிலாவிற்கு சிறு வயது முதலே தைரியம் மிகவும் அதிகம். தப்பு என்று தெரிந்தால் தட்டிக் கேட்க தயங்க மாட்டாள்.அதே போல் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசிவிடும் குணம் உடைவள்.அது அவளுக்கு பல நேரம் சாதமாவும் அமைந்து இருக்கிறது. சில நேரம் பாதகமாகவும் அமைந்து இருக்கிறது.

 

நிலா …பேசிக்கொண்டிருக்கும் போதே பக்கத்து வீட்டு வாண்டு ஒருத்தன் வர…மாலா அவனைப் பார்த்து முறைத்தார்.

 

யார…. அம்மா இப்படி முறைக்கிறாங்க!! என்றாவாறு நிலா திரும்பிப் பார்க்க…அங்கே அந்த வாண்டு நிற்பதைப் பார்த்தவள்….தன் அம்மாவையும் ஓரமாகப் பார்த்தவள்…நீ போடா நான் வரேன் என்று பார்வையாலேயே சைகை செய்தாள்”. பாஷை புரிந்த அவனும் சென்று விட்டான்.

 

ஆனால் இவளது தில்லாலங்கடி வேலை எல்லாம் தெரியாமல் இருந்தால்..,, மாலா எப்படி இவளுக்கு அம்மாவாக இருப்பது….!  கழுதை கெட்டா குட்டி சுவர்! என்று தலையில் அடித்தவாறு உள்ளே சென்று விட்டார்.

 

அவசர அவசரமாக வெளியில் வந்தவள்…..என்னடா….? இந்த நேரத்துல வந்து இருக்க…! என்று கேட்க…

 

அவனோ அழும் பாவனைக்கு சென்று விட்டான்.அவனது முகத்தைப் பார்த்தவள்…,என்னடா பிரச்சணை..?என்றாள் ஆசுவாசமாக.

 

நிலா…! நாங்க …பக்கத்து தெருல கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தோமா….அப்போ பால்., ஒரு பெரிய வீட்டுக்குள்ள போய் விழுந்துட்டது.  புது பால் நிலா…அது இல்லாம வீட்டுக்குப்  போனேன்…அம்மா என்ன தொலைச்சு புடுவாங்க..நீதான் எனக்கு உதவி பன்னனும் என்றான் சோகமாய்.

 

நீ அந்த வாட்ச் மேன் கிட்ட கேழுடா..!”எடுத்து தருவார் என்றாள் நிலா.

ஐயோ..! நிலா, அதெல்லாம் கேட்டாச்சு..ஆனா அந்த ஆள் எடுத்து தர மாட்டேன்னு சொல்லி என்னை விரட்டி விட்டுட்டான்…” என்றான் வாண்டு.

 

அதுக்கு நான் என்னடா பன்றது!.என்றாள் கடுப்பாய் நிலா..

 

நிலா..நிலா..ப்ளீஸ்..ப்ளீஸ்..நீ வந்து எடுத்துக் குடு என்றான் ஒரே போடாய்!

 

நிலா  “டேய் ! என்ன கிண்டலா…அது யார் வீடு..என்னன்னு தெரியாம எப்படிடா எடுக்குறது..போடா…எங்கம்மா..இப்பத்தான் என்ன பார்வையாலே எரிச்சுட்டு போனாங்க…இப்ப நான் உன்கூட வந்தேன்னு தெரிந்தது….என் கதி அதோ  கதி தாண்டா! நான் வேணும்மின்னா உனக்கு புதுசு வாங்கித்தரேன் என்றாள்.

 

ம்ம்ம்ஹிம்..எனக்கு அந்த பால் தான் வேணும்…நீ மட்டும் வந்து எடுத்து தரலை என்று இழுத்தான் அந்த வாண்டு…

 

எடுத்து தரலைன்னா,,என்னடா பண்ணுவ…! என்றாள் நிலா.

 

ம்ம்ம்..ஒன்னும் பண்ணமாட்டேன்..ன்னு சொல்ல வந்தேன்..ஆனா நீ எடுத்து தருவேன்னு எனக்குத் தெரியும்…என்று ஒரு பிட்டைப் போட்டான்.., அந்த வாண்டு.

 

சரி..சரி..இவ்வளவு தூரம்..கெஞ்சுற..அதனால எடுத்துத் தரேன்….வா..என்றபடி அவனுடன் சென்றாள் நிலா.

 

                                       ————-

 

நான் விருது வாங்குறதை விட அப்படி என்ன முக்கியமான விஷயம்? அப்படி எங்க போயிருப்பாங்க..கேட்டாலும் சொல்லமாட்டாங்க! மனதில் நினத்தபடி படுத்து இருந்தான் சூர்யா.

 

அவன் விருது வாங்கும் பொழுது அவன் அம்மா மகேஷ்வரி இல்லாதது அவனுக்கு மிகப் பெரிய குறையாகத் தெரிந்தது.தன்னை விட முக்கியம் என்று சென்ற விஷயமும் தெரியாமல்…இப்படி தனக்கு இருக்கும் ஒரே உறவு…தன் அம்மா இன்றி இந்த விருதை வாங்க நேரிட்டதற்காகவும்..மனதிற்குள் வெம்பிப் போனான் சூர்யா.”

 

அப்பொழுதுதான் அந்த சத்தம் அவன் காதுகளை வந்து அடைந்து..அவனது காதுகளை கூர்மையாக்கியது.யாரோ குதித்த சத்தம் கேட்டு மெதுவாக எழுந்து வந்தவன்…எங்க இருந்து வருது சத்தம்…என்றபடி ஆராய்ந்தான்.

 

வீட்டில் ஒவ்வொரு இடமாகத் தேடியவன்…தோட்டத்தில் சத்தம் வரவும் அங்கு சென்றான்…அங்கு வெறும் செடிகள் மட்டுமே அசைந்து கொண்டிருந்தது.யாரா..,,இருக்கும் என்று யோசனை செய்தபடி நின்று இருந்தான்..ஆனால் அவனுக்கு முன்பாகவே…அங்கு பந்தை எடுக்க வந்த நிலா அவனைப் பார்த்து விட்டாள்.

 

ஐயோ! இவன் வீடா..மாட்டினோம் இந்த முசுடன்கிட்ட!..காலைல ஒன்னும் இல்லாததுக்கே அவ்வளவு கத்துனான்.இப்ப மட்டும் என்ன இங்க பார்த்தான்…நிலா உன் பாடு…..திண்டாட்டம் தான்..! என்று மனதிற்குள் கூறியவாறு…செடிகளுக்குள் நுழைந்து அந்த பால்கனி…பின்பக்க சுவற்றின் வழியாக செல்ல…அங்கு சென்றவள் அதிகமாய் நொந்து போனாள்.

 

சுவர் ஏறி தாண்டி செலவது முடியாத காரியம்…என்று நினைத்தவள்…வரும்பொழுது வாட்ச்மேன் கண்களில் மண்ணை தூவி விட்டு வந்தது போல் தான் இப்பவும் செல்ல வேண்டும்.ஆனா அவன் அங்க நிக்குறான் …இப்ப என்ன பன்றது..என்று யோசித்தாள்.

 

ம்ம்ம்…நாம வீட்டுக்குள்ள போய் சத்தம் எழுப்புனா..அவன் உள்ள வந்து தேடுவான்.அந்த கேப்ல வெளிய போய்ட வேண்டியதுதான்..என்று அறிவாளித்தனமாக…திட்டம் தீட்டி…அதை நடைமுறைப் படுத்தினாள்.

 

மெதுவாக உள்ளே சென்றவள்…சமயலறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட…அவள் நினத்தது தான் நடந்தது..ஆனால் என்ன…,,அவள் நினைத்தை விட அவன் வேகமாய் வந்ததுதான் அவளுக்கு வினையாகிப் போனது.

 

அவளை ஆண் என்று நினைத்து சூர்யா..பின்னால் இருந்து அவள் வாயை மூடி அவளை இறுக்கிப் பிடிக்க…அவள் வாயைத் திறப்பதற்காகத் திணறினாள்.ஆனால் அவன் விட்டால் தானே!..அந்த மாலை வேளையில் வெளிச்சம் மங்கியிருந்தது.வீட்டில் விளக்கு எதுவும் போடாமல் இருக்க., அவனுக்குத் தெரியவில்லை..தான் ஒரு பெண்னைப் பிடித்து இருக்கிறோம் என்று. .. யார்..? என்று ஆராயும் முயற்சியில் இருந்த அவன் மனம்…..!அவளது கூந்தலைக் கூட ஆராய மறுத்தது.ஆனால் அவனது பிடியில் நின்று இருந்த நிலாவிற்கு தான் உள்ளுக்குள் ஏதோதேதோ..செய்தது..முதன் முதலாய் ஒரு ஆணின் தீண்டலில் அவளும் திகைத்து நின்றாள்.

 

இதெல்லாம் ஒரு நிமிடம் தான். அவள் தன் சுய நினைவிற்கு வந்து மீண்டும் அவனிடம் திமிர ஆரம்பிக்க…அவளது திமிறலில் வலு இழந்த கை அவளது கழுத்துப் பகுதிக்கு கீழ் தெரியாமல் பட…அதில் அதிர்ந்தான் சூர்யா..அவன் வேகமாய் அவளை விட்டு விட்டு யார் என்று ஆராய முற்படும் முன்…அவனது செயலில் அதிர்ச்சியான நிலாவின் கை அவனது கன்னத்தைப் பதம் பார்த்தது.

 

சூர்யா கன்னத்தைப் பிடித்துக் கொண்டு ..நிற்க…அந்த வேளையில் வந்து லைட்டைப் போட்டான் ஜீவா.

 

அம்மா ஊர்ல இல்லைன்னா…லைட் எல்லாம் போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கா சூர்யா.எங்கடா.. இருக்க? என்று கேட்டபடி வந்த ஜீவா..அங்கு நின்றிருந்த இருவரையும் பார்த்து திகைத்து நிற்பது அவன் முறை ஆயிற்று.

 

அப்பொழுதுதான் பார்த்தான் சூர்யா அவளை…!  இவளா!…இந்த திமிர் பிடித்தவளா! என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே…இடையில் நுழைந்த ஜீவா…,சூர்யா! இவங்க காலைல பார்த்தவங்க தான..இவங்க இங்க என்ன பன்றாங்க..? என்றான் கேள்வியாய்.

 

அதற்குள், …பழைய சூர்யா திரும்பி இருந்தான்….ம்ம் என்னக் கேட்டா.. என்னடா தெரியும்….!! இப்ப எல்லாம் திருட வரவங்க…எப்ப …,,எப்படி வருவாங்கன்னே.. தெரிய மாட்டேங்குது  என்றான்..! அவளை உறுத்து பார்த்துக் கொன்டே…

 

அவனது பார்வையில் ஆளாளப்பட்ட நிலாவின் உடலே ஒரு நிமிடம் அதிர்ந்தது. அதை நிமிடத்தில் சரி செய்தவள்…,அவனுடன் சண்டைக்கு தயாரானாள்.

 

யாரு..! நானா…நானா..நான் திருட வந்தேனா..என்றாள் கோபத்துடன்.

 

சூர்யா…”ஆமா ..! நீதான் ..நீ இல்லாம வேற யாரு..இங்க நிற்கிறது நீதான..”என்றான் நக்கலாய்.

 

அவனை முறைத்தவள்..ஜீவாவின் பக்கம் திரும்பி…இங்க பாருங்க…ஒரு கிரிக்கெட் பந்து ..இவங்க வீட்டுக்குள்ள விழுந்துட்டது…அதை எடுக்கத்தான் வந்தேன்..! என்றாள் வீராப்பாய்..நிலா.

 

ஜீவா..ஏதோ சொல்ல வருவதற்குள் முந்திக் கொண்டான் சூர்யா….”இதெல்லாம் ஒரு சாக்கு..சரி பந்தை எடுத்துட்டியா..? எங்க காணாம்..என்றான் நிதானமாய்”.

 

அப்பொழுதுதான் கவனித்தாள் நிலா..தன் கைகளில் பந்து இல்லாததை.”ஐயோ அந்த செடிக்குள்ள ..இருந்து எடுத்தோமே…! எங்க போட்டோம்.என்று யோசித்தாள்.

 

அவளது யோசனையை தவறாக எடுத்துக் கொண்ட சூர்யா…”என்ன அடுத்து என்ன பொய் சொல்லலாம்ன்னு யோசனை பன்றியா?….எப்படா..யார் வீடு திறந்து இருக்கும்…எவன் மாட்டுவான்…அவனை எப்படி மடக்கலாம்ன்னு நினைக்கிறது தான..உன்ன மாதிரி இருக்குற பொண்ணுங்களுக்கு வேலை”   என்றான் குத்தலாய்.

 

நிலா..” மரியாதையா பேசுங்க ..மிஸ்டர்….இவரு பெரிய மன்மதன்..இவரை மடக்க….இவர் வீடு தேடி வரோம் நாங்க…!என்று… அவனை மேலும் கீழும் பார்த்தவள்….மன்மதன் தானடி….!கலர் தன் கொஞ்சம் கம்மி !என்று தன் மனசாட்சி சொல்லியதை  ஓரம்கட்டிவிட்டு…உங்க அம்மாவும் …பெண் தான் என்பதை மறந்துடாதிங்க மிஸ்டர்.!

 

ஒரு வேளை அவங்களும் இப்படித்தானோ ! என்னவோ!..அதான் உங்களுக்கு எல்லாரும் அப்படியேத் தெரியறாங்க..என்று அவள் முடிக்கவும் அவன் கைகள் அவள் கன்னத்தில் இடியாய் இறங்கியது.

 

அவனது முகம் கோபத்தில் சிவந்து.., நரம்புகள் புடைத்தன.அவள் குரல் வலையை சூர்யா நெறிக்கப் போக..அதுவரை அமைதியாய் இவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவா…சூர்யாவின் கைகளை விலக்கினான்.

 

சூர்யா ! விடு..என்ன இது ..நீ பன்றது கொஞ்சம் கூட சரி இல்லை! என்று திட்டியவன்…நிலாவைப் பார்த்து…நீங்க இங்க இருந்து போய்டுங்க.. ப்ளீஸ்..என்று கெஞ்ச….அவனது முகத்தில் இருந்த ஏதோ ஒரு தன்மை…அவனது சொல்லிற்கு அடி பணிய வைத்தது.போகும் போது சூர்யாவை முறைத்து விட்டு போகவும் தவறவில்லை   நிலா.

 

வீட்டிற்கு வந்த நிலாவிற்கு கோபம் மட்டும் இன்னும் மட்டுப்படவே இல்லை.என்ன தின்னக்கம் இருந்தால் என்னப் பார்த்து அப்படி ஒரு வார்த்தைய சொல்லி இருப்பான்..கருவாப்பைய…மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு….உடம்புல இருக்குகுற..மொத்தக் கொழுப்பையும்..திமிரையும் குத்தகைக்கு எடுத்து இருப்பான் போல….என்ன பேச்சு பேசுறான்.

 

அவன் பிரண்டால இன்னைக்குத் தப்பித்தான்….இல்லை ஒரு வழி ஆகிருப்பான் என்கிட்ட..என்று மனதிற்குள் பொருமியவள்…என்னச் சொல்லனும்..பந்தைத் தேடுறேன்..சந்தைத் தேடுறேன்னு ..போயும்..போயும் அவன் வீட்டுக்குள்ள ..போனேன் பாரு..என்று புலம்பியவள்…இல்லை..இல்லை..அவன்  வீடுன்னு எனக்கு என்ன தெரியும்., தெரிஞ்சு இருந்தா போய் இருப்பனா..என்று தனக்குத் தானே சமாதானம் சொன்னாள்.

 

அவளது இன்னொரு மனம்.. அவனது பிடியில் அவள்  நின்று இருந்ததையும்…அவனது கைபட்ட இடத்தையும் நினைவு படுத்த…உள்ளுக்குள் குறுகுறுக்கத்தான் செய்தது..இருந்தாலும் மனதிற்கு கடிவாளம் இட்டு அடக்கினாள்.அந்த திமிர் பிடித்தவனை இனி என் வாழ் நாளில் சந்திக்கவே கூடாது …கடவுளே..என்று அனைத்து கடவுளுக்கும்..வேண்டுதல் வைத்தாள் நிலா. இந்த நிலா யாருன்னு உனக்கு காட்டுறேண்டா..!!என்று ஒரு சபதமும் எடுத்தாள்..அது வீண் என்று தெரிந்தும்.

 

அவள் தனியாய் புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த மாலாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.அவருக்கு தெரியும் அவள் எங்காவது சண்டை போட்டு விட்டு வந்தாலோ அல்லது ஏதாவது வம்பில் மட்டி கொண்டு வந்தாலோ தான் இப்படி புலம்புவாள் என்று தெரியும்.இன்னைக்கு எங்க போய்..எந்த வம்பை இழுத்துட்டு வந்தாளோ! அந்த வாண்டு வந்தப்பவே நான் இவளை விட்டு இருக்க கூடாது…என்று கவலை கொண்டார் மாலா.

 

அவரது தவிப்பைப் பார்த்த பிரபு…அதெல்லாம் ஒன்றும் ஆகாது..நீ தேவை இல்லாம..கவலைப் படதே என்று கண்களால் அவரை அமைதிப்படுத்தினார்.

 

அங்கு சூர்யாவின் வீட்டில் …அவனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான் ஜீவானந்தம்.

என்ன இருந்தாலும் ஒரு பொண்ண நீ இப்படி பேசி இருக்க கூடாதுடா…இதுல அவளை அறைஞ்சுட்ட வேற..என்று ஆதங்கமாய் கூறினான்.

 

அவனது பேச்சில் கடுப்பான சூர்யா…”நல்ல வேளை..அவ என்ன அடிச்சத இவன் பார்க்கலை…என்று சிறிது நிம்மதியுற்றவன்.., நான் ஏன் அவளை அடிச்சேன்னு நீயும் பார்த்துட்டு தான இருந்த…,,அம்மாவை போய் அவ என்ன எல்லாம் சொல்லிட்டா ..!என்றான் எரிச்சலாய்”.

 

அவனை ஒரு நிமிடம் பார்த்த ஜீவா..,”நீ கூடதான்..அவளை கேவலமா பேசின…அதுக்கு என்ன சொல்ற….!அம்மாவ சொன்னப்ப உனக்கு வந்த அதே கோவம் …நீ அவளை சொன்னப்ப அவளுக்கு வந்தா அது குத்தமாப்பா ராசா…என்றான் வக்கனையாய்”.

 

தான் செய்ததும் தப்புதானோ!”என்று ஒரு நிமிடம் நினைத்த சூர்யா..தனது நினைப்பில் இருந்து வெளி வந்தான்.

 

ஆமாடா..,, எனக்கு என் அம்மா தனி தான்.அவங்களை மத்த பெண்களோட சமமா வச்சுப் பார்க்காதே…!முக்கியமா இவ கூட..நானும் எத்தனையோ பேரை பார்த்து இருக்கேன்…இப்படி ஒரு திமிர் பிடித்த பெண்ணை பார்த்தது இல்லை…!என்றாவறு எழுந்து சென்று விட்டான்.

 

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவிற்கு..மனதிற்குள் கவலையாய் இருந்தது.இவன் எப்ப திருந்துறது. கடைசி வரை இப்படியே இருந்து விடுவானோ! என்று நினைத்த ஜீவா..அவன் முழுதாய் மாற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்.

 

அவனது பிரார்த்தனை பலிக்குமா..?

Advertisement