Advertisement

முகவரி 9:

 

மகேஷ்வரியைப் பார்த்த முரளிக்கு அதிர்ச்சி என்றால்.., முரளியைப் பார்த்த மகேஷ்வரிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.  பூமி இரண்டாய் பிளந்து…அதில் விழுவது போன்ற உணர்வு மகேஷ்வரிக்கு. முரளி.., முரளி என்று அவரின் மனம்..முரளி நாமத்தை ஜபித்தது. கடந்த காலமும்..,நிகழ் காலமும் அவர் கண் முன்னால் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடியது.

 

ஆனால் மகேஷ்வரியைப் பார்த்து அதிர்ந்த ..முரளியின் முகம்..சற்று நேரத்தில் வெறுப்பைக் காட்டியது.பல வருடங்கள் கழித்து பார்த்திருந்த போதும்….” என்னை விட்டு ஓடிப் போனவள் தானே…” என்று அவர் கண்கள் வெறுப்பினைக் கக்க…அவரின் முகத்தை பார்த்த மகேஷ்வரியின் திகைப்பு இன்னும் கூடியது.  எதற்காக அவரின் கண்களில் இத்தனை வெறுப்பு….இவர் உயிருடன் இருக்கிறாரா..அப்படியென்றால் ஏன் என்னைத் தேடி வரவில்லை…! எதற்காக இத்தனை காலமும்….என்னை ஏமாற்ற வேண்டும்…அப்படி நான் என்ன தவறு செய்தேன்… .கடவுளே..! என்று மகேஷ்வரியின் கண்கள்  சொறுக ஆரம்பித்தது.

 

முரளி..” இவள் இந்த ஊரிலா …இருக்கிறாள்…இவள் வீட்டிற்கா ..நான் வந்து இருக்கிறேன்…யாரை நான் என் வாழ் நாளில் பார்க்கக் கூடாது…. என்று நினைத்து இருந்தேனோ..! அவளையே இன்று பார்க்கும் படி ஆகிவிட்டதே.. என்று  மனதில் எண்ணி முரளி ., வெம்பிக் கொண்டிருக்க..,   அருளும், தீபாவும்…புரியாமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அண்ணா…என்னாச்சு   அப்பாவுக்கு…….   அந்த ஆண்ட்டியை அப்படியே பார்த்துகிட்டே நிற்குறார்…”   என்று அருளின் காதைக் கடித்தாள் தீபா.

 

அதுதான் எனக்கும் ஒன்னும் புரியலைடா திபூ குட்டி….என்னாச்சு அப்பாக்கு என்றபடி…சுதாவைப் பார்க்க…அவர் குனிந்த தலை குனிந்த படி  இருந்தார்.

 

மகேஷ்வரி….முரளியிடம் ஏதோ..கேட்க வர…” அப்பா.. என்னாச்சு….ஏன் இப்படியே  நிக்கிறிங்க..?” என்ற அருளின் கேள்வியில்…, மகேஷ்வரி..தன்னிலைக்கு வந்து பின் தங்கினார்.அப்பொழுதுதான் மகேஷ்வரிக்கு உரைத்தது  உண்மை….! முரளியின் குடும்பத்தைப் பார்த்து…”. அந்த நொடி மகேஷ்வரியின் கண்களில் இருந்த.., பாசம்.., ஏக்கம்…அன்பு   இப்படி அனைத்துவித உணர்வுகளும் மறைந்து..,வெறுமை குடி கொண்டது.

 

அம்மா…! என்னாச்சு..இன்னும் என்ன பன்றிங்க..? என்றவாறு வந்தான் சூர்யா. வந்தவன் அங்கு தன் தாய் நின்றிருந்தையும்….முரளி நின்றிருந்ததையும் பார்த்து.., அவனது நெற்றியில் முடிச்சுகள்  விழுந்தது.  அம்மா..என்னாச்சு என்று மகேஷ்வரியை உலுக்க….” ஒன்னும் இல்லை சூர்யா….கண்ணில் தூசி..” என்றார்.

 

சூர்யாவைப் பார்த்த முரளியின் மனம்.., எகிறிக் குதிக்க ஆரம்பித்தது.    தான் இத்தனை நாள் மனதில் கட்டிய கோட்டைகள் எல்லாம்..மட மட வென சரிவதைப் போல் உணர்ந்தார்.   மகேஷ்வரியைப் பார்க்க…அவரோ..சூன்யமாக காட்சியளித்தார்.அப்படியே தன்னை உரித்து வைத்தது போல் இருக்கும் சூர்யாவை பார்த்த முரளியின் கண்கள் கலங்கியது.    இத்தனை வருட தன் வாழ்க்கையை எண்ணி வெட்கம் கொண்டார்.

 

யார் என்ன சொல்லி இருந்தாலும்.., என் மகேஷ்வரியை நான் அப்படி நினைத்து இருக்கலாமா….? இல்லை..இல்லை..எங்கயோ  தவறு நடந்திருக்கு…என்று எண்ணியவர் சுதாவைப் பார்க்க..அவர் தலையை நிமிரவே இல்லை.

 

அங்கில் ஏன் வெளியவே…நிக்குறிங்க…உள்ள வாங்க.. என்று சூர்யா அழைக்க…” நான் உன் அங்கில் இல்லை அப்பா…. என்று கத்த வேண்டும் போலிருந்தது முரளிக்கு”.  ஆனால் சூழ் நிலைக் கைதியாய் அமைதியாக அவர் உள்ளே செல்ல… அவரைத் தொடர்ந்தனர் அனைவரும்.   ஆனால்.., சுதாவிற்கு தான் உள்ளே செல்ல கால்கள் கூசியது.

 

அருளிற்கு ஏற்கனவே…சூர்யாவை எங்கோ ..! பார்த்தது போன்ற நினைவு ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.   ஆனால் இன்று… தன் தந்தையையும்.சூர்யாவையும் அருகருகே பார்த்த அவனுக்கு.., எல்லாம் தெள்ளத் தெளிவாய் விளங்கியது.இரண்டும்..இரண்டும் நான்கு என்று கணக்குப் போட அவனுக்குத் தேவைப் பட்டது  சில நிமிடங்களே…!”.

 

ஆனால்…மூளைக்கு எட்டிய உண்மையை.., மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. தன் அப்பாவா இப்படி…? என்று அவனால் நம்ப முடியவில்லை. அருளைப் பொறுத்தவரை…தன் தந்தை ஒரு அரிய மனிதர்..நல்ல தோழன்…நல்ல சிந்தனையாளர்…இப்படித்தான் அவரின் தோற்றங்கள்.., அவன் மனதில் பதிந்து இருந்தது.”    ஆனால்……. இந்த உருவம் அவனுக்குப் புதிது.

 

அந்த நொடி அவன் மனதில்  தோன்றிய வெறுப்பு…இதுவரை அருளே  அறியாதது.அமைதியாய் நடப்பவற்றை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

 

ஆனால் அங்கு நடந்த எதையும் தீபா…ஆராயவில்லை.அவள் மனம் ஜீவாவை மட்டுமே தேடியது.அவளை அதிக நேரம் தேட விடாமல் வந்தான் ஜீவா.அவனைப் பார்த்த பின்பு…இதுவரை இல்லாத வெட்கம் ..தீபாவிடம் வந்து ஒட்டிக் கொண்டது.    தீபாவை…நேராகப் பார்த்த ஜீவா .., சில நிமிடங்கள் அதே நிலையில் இருந்தான்.

 

முரளிக்கு..என்ன பேசுவது…எப்படி ஆரம்பிப்பது….என்றே தெரியவில்லை.மகேஷ்வரியைப் பார்க்க..அவரோ கல்லாய் சமைந்து இருந்தார்.

சூர்யா தான் அமைதியைக் கலைத்தான். என்ன..எல்லாரும் இப்படி அமைதியா..இருக்கிங்க…? என்னாச்சு…அங்கில் நீங்களாவது பேசுங்க…என்றான் சூர்யா..அங்கில் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து.

 

உங்கப்பா…இல்லையா…? என்றான் அருள் வேண்டுமென்றே…தன் வீட்டில் மகேஷ்வரி கேட்ட அதே கேள்வியை.

 

மன்னிக்கனும் எங்க அப்பா..நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டார்ன்னு…. எங்க அம்மா ஏற்கனவே  உங்க வீட்ல…சொன்னாங்களே…உங்க யாருக்கும் நியாபகம் இல்லையா..என்றான் குத்தலாய் சூர்யா.

 

இவனுக்கு விஷயம் தெரியுமா..? என்று அதிர்ந்தான் அருள்.

 

சூர்யாவிற்கு ஏற்கனவே தெரிந்து விட்டது என்று அறிந்த மகேஷ்வரி…சூர்யாவைப் பார்க்க…அவன் அவரைப் பார்ப்பதை அறவே தவிர்த்தான்.மகேஷ்வரியின் மனதை சம்பட்டியால் ஓங்கி அடித்தது போன்று இருந்தது.

 

அனைவரும் வாய் பேசா ஊமைகளாய் இருக்க….சூர்யா  தான் ஆரம்பித்தான்…” அப்பறம் ..அம்மா..! சொல்லுங்க.. என்ன பெத்த அப்பா..எப்படி செத்தாரு…ஏன் செத்தாரு…,? இதுவரைக்கும் அவர் போட்டோ கூட காட்டாமல்…என்னை ஏங்க விட்டது ஏன்..? நான் அப்பாவைப் பத்தி கேட்கும் போது எல்லாம்…செண்ட்டிமெண்ட் லாக் பண்ணது எதுக்காக..எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலா…உயிரோட இல்லாத அப்பா…, இப்ப எங்க இருந்து திடிரென்று குதித்து வந்தார்.  இப்ப சொல்லப் போறிங்களா…இல்லையா..? என்று கத்தினான்.

 

உனக்கு எப்போ தெரியும்..? என்றார் மகேஷ்வரி.

 

ஹா..ஹா..என்ன ஒரு அருமையான கேள்வி…என்னைக்கு அந்த அவார்ட் பங்க்ஷன்ல…இதோ..தீபாவை பார்த்தேனோ…அன்னைக்கு வந்தது…என் முதல் சந்தேகம்…அப்பறம் எல்லாம் கண்டு பிடிக்கறது அவ்வளவு கஷ்டமா இல்லை எனக்கு. அவ்வளவு ஏன்….அந்த பொண்ணு பார்க்க போன சம்பவம் கூட என்னால் தான் நடந்தது.    சரி…. நீங்க அங்க  இவரைப் பார்ப்பிங்க….பிரச்சனை வெளிய வரும்ன்னு நினச்சேன்…ஆனா..அன்னைக்கு இவர் கிரேட் எஸ்கேப்.  மத்தபடி எல்லா பிளானும் என்னதுதான்…போதுமா…இப்ப சொல்லுங்க…எதுக்காக இத்தனை வருஷம் என்கிட்ட அப்படி ஒரு பொய்ய சொன்னிங்க…? அதற்கான அவசியம் என்ன..? என்றான் ஆங்காரமாய்.

 

மகேஷ்வரி தீபாவை அப்பொழுதுதான் நன்றாகப் பார்க்க….நிறத்தில் சுதாவைக் கொண்டு பிறந்து இருந்தாலும்….ஜாடை முரளியைப் போல் இருந்தாள். சூர்யாவும் ..தீபாவும் ..முரளியின் சாயல் கொண்டு பிறந்து இருந்தனர்.

 

அங்கு மீண்டும் அமைதியே பதிலாய் கிடைக்க…, சூர்யாவே..தொடர்ந்தான்..

 

அன்றைக்கு தீபாவைப் பார்த்தப்பக் கூட எனக்கு சின்ன சலனம்., சந்தேகம் மட்டும் தான்.ஆனா…ஜீவாவைப் பத்தி விசாரிக்க…ஆபீஸ்க்கு வந்து இருந்தார் இந்த அங்கில்….,சரி யாரா இருக்கும்ன்னு பார்த்தா…அங்க இந்த அங்கில் நிக்குறார்…அப்பறம் சந்தேகம் ஊர்ஜிதமாகி…அங்கில் பேரை விசாரிச்சா….முரளிதரன்னு  சொல்றாங்க…!  நல்ல வேளை…என்னோட அப்பா பேரு முரளின்ற விஷயத்தையாவது சொல்லி இருந்திங்கம்மா…” என்று  நக்கலுடனும்….ஒவ்வொரு அங்கில் என்ற வார்த்தையையும் அழுத்தம் கொடுத்து சொன்னான்.

 

மகேஷ்வரி கண்களில் கண்ணீருடன்…சூர்யாவிடம் ஏதோ..சொல்ல வர..” வேண்டாம்…நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்… கடைசியா..நான் சந்தேகப் பட்டது தான் உண்மை. அம்மா..எது சொன்னாலும் சரியா இருக்கும்  அப்படின்னு இத்தனை நாள்  அமைதியா இருந்ததுக்கு…நீங்க ரொம்ப நல்லது பண்ணிட்டிங்கம்மா…இதை நான் உங்க கிட்ட இருந்து எதிர் பார்க்கலை.இத்தனை வருஷம்..உயிரோட இருந்த அப்பாவுக்கு திதி வேற…இந்த கொடுமை எல்லாம் இங்க தான் நடக்கும். எல்லாரும் சேர்ந்து என்னை  26 வருஷமா ஏமாத்தி இருக்கிங்க…” என்று வேதனையுடன் சூர்யா..சொல்ல.., அவனது  வேதனை கண்டு பொருக்காத ஜீவா…” சூர்யா..அமைதியா இரு என்ன ஏதுன்னு விசாரிப்போம்..” என்றான்.

 

 

ஜீவாவை.., சூர்யா..மேலும் கீழும் பார்க்க..” இனி விசாரித்தால் விசாரிக்காவிட்டால் என்ன..?” என்ற கேள்வி  அவனது   பார்வையில் தொக்கி நின்றது.

 

இத்தனை நடந்தும்…சுதா அமைதியாக இருந்தது அருளிற்கு கோபத்தை வரவழைத்தது…” அம்மா..உங்களுக்கு கொஞ்சம் கூட கோபமே வரலையா..அப்பா உங்களுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தைப் பண்ணியிருக்கார்…நீங்க என்னடான்னா…இவ்வளவு அமைதியா இருக்கிங்க…!..நம்ம எல்லாரையும் ஏமாத்தி இருக்கார். இத்தனை நாள்…வேஷம் போட்டு இருக்கார்…நான் இதை அப்பாகிட்ட இருந்து சுத்தமா..எதிர்பார்க்கலை…”  என்றவன் சூர்யாவை முறைத்தான்.  சூர்யாவும் இவனை முறைக்க…இருவரது பார்வைகளும் அனலாய் மோதிக் கொண்டது.

 

சூர்யாவின் மனம் படும் பாட்டை..மகேஷ்வரியால் உணர முடிந்தது.ஆனால் அவர் என்ன செய்ய முடியும்…” சூர்யா…உனக்கு சொல்லப் பட்ட விஷயம் தான் எனக்கும்…இவர் உயிரோட இருப்பதே இன்னைக்குத்தான் எனக்கும் தெரியும்.என்னை நம்பு சூர்யா…மத்தபடி நீ ஏங்கக் கூடாதுன்னு தான் அவரப் பத்தின விபரங்களை சின்ன வயசுல இருந்தே நான் உன்கிட்ட சொல்லை.  ஏன்னா..அப்பயெல்லாம்..நீ , மத்த பிள்ளைங்களை   பார்த்துட்டு… அப்பா..அப்பா..ன்னு கேட்டுநச்சரிப்ப…அதுக்காகத்தான்…மறைத்தேனே தவிர….உண்மை எனக்கும் இப்பத்தான் சூர்யா தெரியும்…என்னை நம்புப்பா” என்று மன்றாடினார்.

 

ஆனால் சூர்யாவோ..” இப்போதைக்கு நான் கல் ” என்பது போல் இருந்தான்.

 

அருளிற்கு கோபம் கோபமாய் வந்தது…. என்னதான் அப்பாவைப் பற்றி நம்ப முடியாமல் இருந்தாலும்..,, அவரை அனைவரின் முன்னாலும் விட்டுக் கொடுக்க அவனால் முடியவில்லை.எவ்வளவு பெரிய அறிவாளியும்., பொருமைசாலியும்..ஏதாவது ஒரு கட்டத்தில் முட்டாளாவான் என்பது அருளின் விஷயத்தில் உண்மையானது.

 

அவனுடைய மூளை வேலை செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.மூளை கட்டுப் பாட்டை இழந்த வேளையில் அந்த வார்த்தைகளை விட்டான்   அருள்.

 

போதும் நிறுத்துங்க…என்றான் மகேஷ்வரியைப் பார்த்து..” அடடா..என்னமா நடிக்கிறிங்க…அம்மாவும் பிள்ளையும்…எங்கம்மா..வாழ்க்கையில் நுழைந்து…அதை கெடுத்ததுன்னு பத்தாது…இப்ப உங்களை நல்லவங்களா..காட்டிக்க..இப்படி ஒரு நாடகம் அவசியம் தேவைதான்….ஆமா எத்தனை நாள் ஒத்திகைப் பார்த்திங்க ரெண்டு பேரும்…” என்று அருள் முடிக்கும் முன் …சூர்யா அவன் கழுத்தை நெரிக்க வர…அதற்கு முன்னால் முரளியின் கை அருளின் கண்ணத்தில் பட்டு அடியை இறக்கி இருந்தது.

 

போதும் நிறுத்து அருள்….”  யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற….என்றவர் மகேஷ்வரியின் அருகில் சென்று…” இவ ஒன்னும் உங்கம்மா…வாழ்க்கையில் வரலை…உங்கம்மா தான்  இவ வாழ்க்கையில் வந்துருக்கா…போதுமா..? சந்தேகமா இருந்தா உங்கம்மாவைக் கேள். மகேஷ்வரி..,நான் காதலித்து., எல்லார்கிட்டையும் சம்மதம் வாங்கி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து… தாலி கட்டிய என் மனைவி..” என்றார்.

 

அருளிற்கு சாட்டையால் அடிவாங்கியது போல் இருந்தது. சுதாவின் கண்களோ..கண்ணீரை வேகமாய் சுரந்தது.

 

அப்போ ..என் அம்மா ..இரண்டாம் தாரமா…நாங்கள் இரண்டாம் தாரத்து வயிற்றுப் பிள்ளைகளா…” என்று நினைத்த அருளின் மனம் சுக்கு நூறாய் உடைந்தது. ஒரு நாளின் அடுத்தடுத்த நிகழ்ச்சி அருளையும்., சூர்யாவையும்…நிலை தடுமாற வைக்க.. சூர்யாவை முறைத்த அருள்…விருட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

 

மகேஷ்வரியின் அருகில் சென்ற முரளி…” இதெல்லாம் எப்படி நடந்ததுன்னு…எனக்கே இன்னும் தெளிவாய் தெரியலை..கூடிய சீக்கிரம்..உண்மைகளோட ..உன்ன வந்து சந்திக்கிறேன்..” என்றபடி வெளியேறினார்.   சுதா..பின் அவரை  தொடர..தீபாவை யாரும் கவனிக்கவில்லை.

 

தீபாவிற்கு நடப்பது கனவா..இல்லை நனவா ..என்றே தெரியவில்லை.அங்கு நடந்த எதையும் நம்ப முடியாமல்..இருந்தாள் .யாரையும் பார்க்கப் பிடிக்காமல்…முக்கியமாக ஜீவாவைப் பார்க்கவே பிடிக்காமல்..அந்த இடத்தை விட்டு சென்றாள்…கண்களில் கேள்வியுடனும்…மனதில் வேதனையுடனும்.

 

தீபாவின் பார்வையை சந்திக்க முடியாமல்….. ஜீவா தலைகுனிந்தான்.  அவனுக்கும் அது வேதனையாய் தான் இருந்தது.  சூர்யாவின் சொல்லுக்கு இனங்கி தான் அவன் பெண் பார்க்க சென்றது.ஆனால் அன்று முரளியைக் காணாது…சூர்யா கடுப்பாக…,, தீபாவைப் பார்த்த ஜீவா…மனதிற்குள் இனிமையாய் உணர்ந்தான்.ஆனால் அதெல்லாம் சும்மாதான் என்று தெரிந்து, இன்று அவள் பார்த்து விட்டு சென்ற பார்வை….,அந்த வேதனையான முகம்..இப்படி அனைத்தும் ஜீவாவை வாட்டி வதைத்தது.இருந்தாலும் இப்பொழுது சூர்யாவை நிலைப்படுத்துவது முக்கியம் என்ற கடமை உணர்வு நியாபகத்திற்கு வர…சூர்யாவைத் தேடினான்.ஆனால் அங்கு சூர்யா…இல்லை.மகேஷ்வரி அமைதியாய் அமர்ந்து இருக்க…இப்பொழுது குழம்புவது ஜீவாவின் முறை ஆயிற்று. எங்க போனான்..? ”   என்று  மனதில் நினைத்தவன்…..அவனைத் தேடி சென்றான்.

 

இந்த சொந்தம் என்ன சொந்தம் ….

யாருக்கும் தோணலை…

வாய் திறந்து சொல்ல வந்தா…

வார்த்தை வரலை…

 

 

அம்மா…வாங்க சொன்னதை எல்லாம்  சரியா..இருக்கா..என்று தனது கைகளில் இருந்த பையை சரி பார்த்துக் கொண்டே…அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இருந்து வெளியே வந்தாள் நிலா.  வீடு பக்கத்து தெருவில் இருப்பதால் நடந்தே வந்திருந்தாள்.

 

வண்டிய எடுத்துட்டு வந்திருந்தா..ரம்யாவையாவது போய் பார்த்துட்டு வந்துருக்கலாம்..” என்று மனதில் நினைத்தபடி  நடந்து கொண்டிருந்தவள்..அங்கு நின்றிருந்த ..காரை அப்பொழுதுதான் பார்த்தாள்.” இது அவன் அந்த கருவாப்பய கார் ஆச்சே….எதுக்கு இங்க நிற்குது”. என்று யோசித்தாள்.”அந்த கார் எங்க நின்னா..உனக்கு என்ன.,வந்த வேலை முடிந்ததுல…பேசாம நடையக் கட்டு என்று உள் மனம் அவளுக்கு உத்தரவு பிறப்பித்தது”.

 

இருந்தாலும் ஏதோ ஒரு உந்துதலில் காரின் அருகில் சென்றாள் நிலா. அங்கு காரினுள் ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்து படுத்து இருந்தான் சூர்யா.

 

எதுக்கு இங்க..இப்படி தலை சாஞ்சு இருக்கான்.  வீடு பக்கத்துல தான் இருக்கு…அப்பறம் எதுக்கு இங்க இருக்கான்..என்று யோசித்து..அவனை கூப்பிட வாய் போக…கூப்பிடாமல் அமைதியாய் நின்றாள்.

 

ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. இருந்தாலும்    ஏதோ சரியில்லை என்று அவள் உள் மனம் உணர்த்த…அவனைக் கூப்பிட்டாள்.

 

நிலாவிற்கு அவனது பேர் தெரியாததால் எப்படிக் கூப்பிடுவது என்று தெரியவில்லை.” ஹல்லோ..மிஸ்டர்..,,ஹல்லோ மிஸ்டர் கருவாப்பையன்…என்றாள். அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.கார் கதவின் வழியாக ., கையை விட்டு அவன் தலையை அசைக்க…,அவன் தள்ளாடியபடி நிமிர்ந்தான்”.

 

மதுவின் நெடி அவள் குடல் வரை சென்று அவளுக்கு வயிற்றைப் பிரட்டியது.” ச்ச..குடிகாரன்..மூக்கு முட்ட குடிச்சு இருக்கான்…கருமம்..கருமம்..” என்றவள் செல்ல எத்தனித்தாள்.இருந்தாலும் அவன் இவளுக்கு உதவிய தருணங்கள் நியாபகத்திற்கு வர…பின் தங்கினாள்.

 

முன்னே பின்னே மது அருந்தி பழக்கம் இல்லாததால்…இன்று தடுப்பார் யாருமின்றி , சூர்யா அளவுக்கு அதிகமாய் குடித்து இருந்தான். தட்டுத் தடுமாறி அது வரை வந்தவனது கார் அங்கயே நின்றது. சூர்யா போதையில் இருந்ததால்..காரில் என்ன பிரச்சனை என்ற இறங்கிப் பார்க்கும் அளவுக்கு தெம்பில்லாமல் தான் அப்படியே சாய்ந்திருந்தான்.

 

ஹல்லோ…கருவாப்பையன்…காரை எடுத்துட்டு வீட்டுக்குப் போங்க..” என்றாள் நிலா.

 

கார்ர்ர்ர்ர்ர்……ஸ்டார்ர்ர்ட்ட்ட் ஆகல்ல்ல…என்றான் குளறியபடி.அவனுக்கு தன் முன் நிற்பது யாரென்றும் புரியவில்லை.

 

இப்ப என்ன பன்றது ..? என்று யோசித்தவள்…ஒரு முடிவுக்கு வந்தவளாய்..ஒரு ஆட்டோவை அழைத்தாள்.

 

கார் கதவைத் திறந்து…, இறங்குங்க…என்றாள்.அவன் தட்டுத் தடுமாறி…இறங்க.,அவள் மேலேயே விழுந்தான்.அவனைப் பிடித்து நிறுத்தியவள்…அண்ணா..என்று ஆட்டோக்காரை அழைத்தாள்.

 

என்னம்மா..என்றபடி வந்தார் அவர்.

 

இவரை..ஆட்டோல உட்கார வைங்க…என்றவள்..கரைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.

 

ஆட்டோக்காரரிடம் முகவரியை சொன்னவள்…அமைதியாய் வர..சூர்யா போதையில் உளறிக் கொண்டே வந்தான்.

 

உனக்கு தெரியும்ம்ம்மாஆஆ…என்றான் சூர்யா..,, நிலாவைப் பார்த்து.அவள் முகம் சுளித்து என்ன என்பதைபோல் பார்க்க….”ஹ.அது..வந்து…என்ன் அப்ப்பாஆ….உசுரோஓடதான் இருக்க்கார்…என்னக்கு இன்ன்னைக்கு  எல்ல்ல்லாம்  புருஞ்சுடுசூஒ  என்று..ஏதேதோ உளறியபடி … இருந்தான் சூர்யா.

 

கடவுளே..!..என்று நிலா மனதில் பல்லைக் கடித்தாள்.

 

அதற்குள் அவன் வீடு வந்து விட..ஆட்டோவை விட்டு இறங்கி சென்று ..வாட்ச் மேனைக் கூப்பிட…அவன் அங்கு இல்லை.    சரி  என்று   வீட்டிற்குள்   சென்று  காலிங் பெல்லை அழுத்தினாள். மகேஷ்வரி தான் வந்து கதவைத் திறந்தார்.

 

வாம்மா….யாரும்மா நீ…? என்ன வேணும் என்றார்.

 

இல்லை..இங்க உங்க பையன்..என்று இழுத்தாள்.

 

ஆமாம்…எங்க அவன்…என்று பரபரத்தார்.

 

இல்லை ஆண்ட்டி…அவர் புல்லா குடுச்சு இருக்கார்.  கார் பக்கத்து தெருவில நிற்குது.நான் தான் ஒரு ஆட்டோ பிடிச்சு அழைச்சுட்டு வந்தேன்..என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவர் வெளியே சென்று இருந்தார்.

 

அங்கு ஆட்டோவில் சூர்யாவை..பார்த்த…மகேஷ்வரி திகைத்தார்.  தன் அம்மாவைப் பார்த்த சூர்யா…போதையிலும் தவறு செய்த குழந்தையாய் தலையைக் குனிந்தான்.இருந்தாலும் அவன் தள்ளாடுவது நிற்கவில்லை.அவனின் செய்கையைப் பார்த்த நிலாவிற்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாய் இருந்தது.

 

வாப்பா..உள்ள…என்று அவனைத் தாங்கியவர்..நிலாவையும் உதவிக்கு கூப்பிட…இருவருமாய் சேர்ந்து அவனை ..வீட்டிற்குள் கொண்டு சேர்த்தனர். சூர்யாவை தேடி சென்ற ஜீவா இன்னும் வீடு வந்து சேரவில்லை.

 

அவனின் அறைக்கு போகும் முன்னரே…சூர்யா..வாந்தி எடுக்க…,ஒரு வழியாய் அவனை..பாத்ரூமில் தள்ளினார்…மகேஷ்வரி. ஒழுங்க குளிச்சிட்டு வா…என்றபடி வந்தார் மகேஷ்வரி.

 

இந்தாங்க ஆண்ட்டி கார் சாவி…எனக்கு ஆட்டோ வெயிட் பண்ணுது ..நான் கிளம்புறேன்..” என்றாள் நிலா.

 

இருமா..காபி சாப்பிட்டு போகலாம்..” என்றார் மகேஷ்வரி.

 

இல்லை ஆண்ட்டி ., இப்பவே லேட் ஆகிட்டது.அம்மா எனக்காக காத்திருப்பாங்க…அடுத்த தெருதான் ஆண்ட்டி என் வீடு..இன்னொரு நாள் நான் கண்டிப்பா வந்து காபி சாப்பிடுறேன்..இப்ப கிளம்பறேன்”  என்றாள் நிலா.

 

ரொம்ப நன்றிம்மா….என்றார் மகேஷ்வரி.

 

பரவாயில்லை ஆண்ட்டி…நான் வரேன்..என்றவாறு கிளம்பினாள் நிலா. ஆனால் அவனை தோள் சேர்த்து அழைத்து வந்ததால் …அவளுக்குள் ஏற்பட்ட குறுகுறுப்பு மட்டும் அடங்க மறுத்தது. கஷ்ட்டப் பட்டு அதை ஒதுக்கினாள் நிலா.

 

அங்கு அருளின் வீட்டில் …”சுதா….ஆஆஆஆ..என்று வீடே அதிரும் படி கத்தினார் முரளி..”

 

சுதா…குனிந்த தலையுடன் வர….” சொல்லு ..உனக்குதானத் தெரியும் என்ன நடந்ததுன்னு…,, எனக்கு இப்ப தெரியனும்…இல்லை..நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது…” என்றார்..கோப மூர்த்தியாய்.

 

அப்பா..!கொஞ்சம் அமைதியா..நிதானமா பேசுங்க…” என்றான் அருள்.

 

அருள்.. இந்த விஷயத்துல தலையிடாம ..அமைதியா..இரு..என்று ஆணை பிறப்பித்தவர்…” சுதாவைப் பார்த்து..சொல்லு சுதா..என்ன நடந்தது..? ” என்றார்.

 

அவரது கேள்வியில் பயந்த சுதா…கண்கள் சொறுக..மயக்கம் போட்டு விழுந்தார்.

 

 

நெஞ்சிலே நெருப்பை வச்சா ….

நீரும் அணைக்க முடியமா…

கண்ணிலே முள்ளு தச்சா..

இமையயை மூட முடியுமா…

பாரத கதையும் கூட…

பழியில் முடிந்த காவியம் தான்….

 

 

 

முகவரி 10:

 

சுதா மயங்கி விழுவதைப் பார்த்த அருள் பதறி….வேகமாய் அவரின் அருகில் சென்று தாங்கினான்.

 

அம்மா…இங்க பாருங்க…என்ன பன்னுது உங்களுக்கு…என்று அவன், சுதாவின் முகத்தை இருபுறமும் தட்டிக் கொண்டிருக்க….” தீபா..வேகமாய் தண்ணீர் கொண்டு வந்து அருளிடம் கொடுத்தாள்.

 

தண்ணீரை வாங்கி.., வேகமாய் தன் தாயின் முகத்தில் தெளித்தான் அருள்.அருள் தெளித்த தண்ணீரின் மாயத்தில் .., சுதாவின் மயக்கம் கொஞ்சம் தெளிவுக்கு வர…மெதுவாக கண்களைத் திறந்தார்.

 

அம்மா…!  உங்களுக்கு ஒன்னும் இல்லையே..? என்றான் அருள் படபடப்புடன்”.

 

ஒன்றும் இல்லை என்பதைப் போல் சுதாவின் தலை ஆடியது.மெதுவாக தட்டுத்தடுமாறி.,அருளின் உதவியால் எழுந்து ., அருகில் உள்ள சோபாவில் அமர்ந்தார் சுதா.

 

இத்தனை நடந்தும்.., முரளி அங்கு எதையும் காண சகியாதவராக…அதே கடினத் தன்மையுடன் இருந்தார்.  ” என் கேள்விக்கு.., இன்று நீ  கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்..! ”  என்ற தன்மை முரளியின் முகத்தில் நிலைத்து இருந்தது .

 

அருள்..” அப்பா…! அம்மாக்கு முடியலை…..இப்ப போய்..நீங்க இப்படி பிடிவாதம் பிடிக்கிறிங்க..! ” என்றான் கோபமாய்.

 

அருள்…கொஞ்ச நேரம் அமைதியா இரு. இல்ல.., உன்னால அமைதியா இருக்க முடியாதுன்னா… போய் வேலை எதாவது  இருந்தா பார்.” என்றார் கடுமையாய்.

 

அவரின் பதிலில் தீபாவே…கொஞ்சம் மிரண்டு தான் போனாள்.அவளுக்கு விவரம் தெரிந்து.., முரளியின்  முகத்தில் இவ்வளவு கடுமையைப் பார்த்தது இல்லை. அடுத்து என்ன நடக்குமோ..! என்ற பயம் அவளின் முகத்தில் அப்பிக் கிடந்தது.சுதாவின் நினைவுகளோ….கடந்த காலத்திற்கு  சென்றிருந்தது.

 

முரளியின் குடும்பம் .., பொள்ளாச்சி ஏரியாவில்., பரம்பரை பரம்பரையாக   பெரிய குடும்பம்.அவர்களின் தொழில் விவசாயமாக இருந்தாலும்…பரம்பரைத் தொழில் நகைப் பட்டறை தான். தலைமுறைகளின் விருப்பமின்மை, நாகரிக வளர்ச்சி இவற்றின் காரணத்தால்…முரளிக்கு நகைத் தொழிலில் ஈடுபாடு இல்லாமல் போனது. தான் ஒரு பொறியாளாராக வர வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. பொறியியல் படிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதாரணமாக இருந்தாலும்….  25 வருடங்களுக்கு  முன்னால் மிகவும் அரிதாகவே காணப்பட்டது.  அதனால் முரளிக்கு அந்த படிப்பின் மீது ஒரு வெறி என்றே சொல்லலாம்.

 

முரளியின் தாய் ஜக்கம்மாள்…தந்தை வீரபாண்டியன். இவர்களின் பேரைச் சொன்னால் அந்த சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும்.தந்தை வீர பாண்டியன்…ஒரு பரந்த நோக்குடன்…விசாலமான பார்வையுடன் விளங்குபவர்.ஆனால் ஜக்கம்மாள் அவருக்கு எதிர்மறையானவர். அதிகமான சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிப் போனவர். தான் பெரிய வீட்டு மருமகள்  என்ற  கர்வம் ஜக்காமாவின் மனதை எப்போதும் நிறைத்திருக்கும். சுருக்கமாக சொல்லப் போனால் பழங்கால கட்டுப் பெட்டி அவர். ஆனால் அவருக்கு முரளியின் மீது பாசம் அதிகம்.ஒற்றைப் பிள்ளை என்பதால்.

 

ஜக்கம்மாவின்.., அண்ணன்..அண்ணி இருவரும் இறந்து விட..அவர்களின்  பிள்ளைகளாகிய…சுதாவுக்கும் பிரபுவுக்கும்...., ஜக்கம்மா (அத்தை) அம்மாவாகிப் போனார்.சுதாவை எப்படியாவது முரளிக்கு கட்டி வைத்து தன் உறவையும்.., வம்சத்தையும் தளிர வைக்க வேண்டும் என்பது தான் அவரின் முக்கிய கடமையாக இருந்தது.

 

முரளியை., அவர் படிக்க அனுப்ப சம்மதிக்கவே இல்லை.  ஆனால் வீரபாண்டியன் தான்..ஜக்கம்மாவை சமாதானப் படுத்தி…முரளியைப் படிக்க அனுப்பினார்.

 

மகேஷ்வரியின் குடும்பமும்…. சென்னையில்   நல்ல வளமான குடும்பம். மகேஷ்வரி…அழகு நிறைந்த சுட்டிப் பெண்ணாய் இருந்தார். சென்னையில் உள்ள புகழ் பெற்ற கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார்.

 

முரளி மற்றும் மகேஷ்வரியின் கல்லூரிகள் அருகருகே இருந்த காரணத்தால்…இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய் விட….தங்களின் காதல் பயணத்தை தொடர்ந்தனர்.முரளி..மகேஷ்வரியின் மீது உயிராக இருக்க..,மகேஷ்வரியும் அவருக்கு ஒரு படி மேலே போய் ..,முரளியை உயிராக நேசிக்கத் துவங்கினார். இருவரும் காதல் வானில் சிறகடித்தனர்….,”காதல் என்ற சொல் வேப்பங்காயாய் கசக்கும் காலத்தில்”.

 

முரளி படிப்பை முடித்து விட்டு., தான் சொந்தமாக கட்டுமான நிறுவனம் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஜக்கம்மாவிற்கு அதில் உடன் பாடு இல்லை என்ற போதிலும்.., தன் மகனின் ஆசைக்கு அவர் எதிர்ப்புக் கூறவில்லை.

 

இப்படியான சூழ் நிலையில்…. முரளியின் காதல் வீட்டிற்கு தெரிய வந்தது. முரளியின் தந்தை பாண்டியன் …ஏற்றுக் கொள்ள... ஜக்கம்மாள் சம்மதம் என்ற பாவனையை கடுகளவேனும் தரவில்லை. முரளியும் தன் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தார். வாழ்ந்தால் மகேஷ்வரியுடன் தான் வாழ்வேன் என்ற அவரின் உறுதி ஜக்கம்மாவையே சற்று அசைத்துப் பார்த்தது. இருந்தாலும் அவர் சம்மதிக்கவில்லை.

 

ஜக்கம்மா…இப்படி பிடிவாதம் பிடித்தா..எப்படி..? நமக்கு  இருக்குறது ஒரே பிள்ளை. அவன் ஆசை தான் நமக்கு முக்கியம்…” என்றார் பாண்டியன் அமைதியாய்.

 

எப்படிங்க..? பொண்ணு ..என்ன குலமோ..கோத்திரமோ..? யாருக்குத் தெரியும். அவன் வந்து சொன்ன உடனே எப்படி சம்மதம் சொல்ல முடியும்…? அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் ..குத்துக்கல்லு மாதிரி நான் சுதாவை வளர்த்து வச்சு இருக்கேன்.இப்ப இவன் திடுதிப்புன்னு வந்து…அந்த வெளங்காத சிறுக்கியத்தான் கட்டுவேன்றான். அவ எல்லாம் நல்லா இருப்பாளா..? பாவி..பாவி…நல்லா இருந்த என் மகன் மனச கலச்சுட்டா..! என்று முகம் பார்க்காத மகேஷ்வரி ..அவரின் வாயில் விழுந்து எழுந்தார்.

 

ஜக்கம்மா..! என்று அதட்டினார் பாண்டியன். யார்ன்னு தெரியாத ஒரு பெண்னை நீ இப்படி விமர்சனம் பன்றது கொஞ்சம் கூட சரி இல்லை. நீ என்ன சொன்னாலும் என் மகனின் ஆசைதான் எனக்கு முக்கியம். அந்த பெண் எந்த சாதியா இருந்தால் என்ன..? என்ன மதமாய் இருந்தால் என்ன..? ரெண்டு மனம் ஒத்துப் போனால் போதும்.எனக்கு இந்த சடங்கு சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால் அடுத்து நடக்க வேண்டிய வேலையை மட்டும் பார்.” என்று அதட்டியபடி சென்று விட்டார் பாண்டியன்.

 

இது எப்படி நடக்குதுன்னு நான் பார்க்கிறேன்..? என்று மனதிற்குள் வெகுண்டார் ஜக்கம்மாள். ஆனால் நடந்தது எல்லாம் ஜக்கம்மாவின் அனுமதியின்றி வேகமாய் நடந்தது.

 

பாண்டியன் வேகமாய் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க….சுதா மனதிற்குள் நொறுங்கிப் போனாள். ஜக்கம்மாவின் வார்த்தைகள்…சுதாவின் மனதிலும்., முரளியின் மீதான ஆசையை தோற்றுவித்து இருந்தது. ஆனால் இப்பொழுது நடப்பது எல்லாம் சுதா எதிர்பாராதவை.

 

சென்னையில் இருந்து வந்து பார்த்த மகேஷ்வரியின் பெற்றோர்க்கும் இந்த திருமணத்தில்  திருப்தி இல்லை. மகேஷ்வரி பிறந்ததில் இருந்தே நகரத்தில் வாழ்ந்தவர். கிராமத்தில் வாக்கப்பட்டு., அந்த சூழ் நிலைக்கு பொருந்திப் போவாளா….என்று அவர்களுக்கு சந்தேகமாய் இருந்தது.அது மட்டுமில்லாமல் ஜக்கம்மாவின் குத்தல் பேச்சுக்களும்..மகேஷ்வரியின் பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

 

இப்படி அனைத்து தடைகளையும் மீறி….முரள்-மகேஷ்வரியின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மகிழ்ச்சி அடந்தவர்கள்….இவர்களும்., பாண்டியன் மற்றும்  சுதாவின் அண்ணன் பிரபு மட்டுமே..!

 

ஆனால் ஜக்கம்மாவின் கோபம் அதிகரித்ததே தவிர குறைந்த பாடில்லை. அவர் மனதிற்குள் கனன்று கொண்டே இருந்தார். சுதா அவர் அறையை விட்டு வெளியே வருவதையே தவிர்த்து விட்டார்.  முரளிக்கு இப்படி ஒரு முறைப்பெண் இருப்பதையே மகேஷ்வரி அறிந்திருக்கவில்லை. அந்த பெரிய வீட்டை சுற்றி வரவே இரண்டு நாட்கள் ஆகும்.முரளிக்கும் அந்த சமயத்தில் அவர்களை  அறிமுகப் படுத்துவது முக்கியமாய் படவில்லை.

 

கல்யாணம் ஆகி பத்து  நாட்கள்  கடந்திருந்த நிலையில்..,மகேஷ்வரிக்கு அங்கு இருப்பது ஆயாசமாய் இருந்தது. அதிலும் ஒவ்வொரு நாளும் ஜக்கம்மாவின் குத்தல் வார்த்தைகள் அதிகமாகிக் கொண்டே போனது. முரளிக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த வீட்டில் வலம் வந்தார் மகேஷ்வரி. ” ஆனால்  நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவளுக்கு….கிராமத்தில் உள்ள பழக்க வழக்கங்களும்.., நடைமுறைகளும் புரிய நாள் எடுத்தது”.

 

முரளியும் தனது புது தொழிலை நிலைப் படுத்த ஓயாது உழைக்கத் தொடங்கினார். அதனால் அந்த வீட்டில் மிகவும் தனிமையை உணர்ந்தார் மகேஷ்வரி. அவருக்கு அங்கிருந்த ஒரே ஆருதல்…மாமனார் பாண்டியன் தான். மகேஷ்வரியை தன் மகளைப் போலவே பாவித்தார். இப்படியாக போய்க் கொண்டிருந்த ஒரு நாளில்…

 

ஏங்க..எனக்கு ரொம்ப போர் அடிக்குது….நான் என்ன பன்றது..?” என்றார் மகேஷ்வரி மனம் தாங்கலாய்.

 

நீ ஒன்னும் செய்ய வேண்டாம்…மகாராணியா இந்த வீட்டை வலம் வந்தால் மட்டும் போதும்…” என்றார் கொஞ்சலாய் முரளி.

 

என்ன சொல்லுங்க..எனக்கு இங்க பிடிக்கவே இல்லை…பேசாம..நாம் சென்னைக்கே போயிடலாம்..அங்க வந்து உங்க பிஸ்னெஸ பார்த்துக்கக் கூடாதா…? என்றார் மகேஷ்வரி.

 

முரளிக்கு சட்டென்று கோபம் வந்தது…” நான் கிராமத்தில் பிறந்தவன்னு தெரிஞ்சுதான..,  என்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட…இப்ப என்ன திடீரென்று..இப்படி ஒரு எண்ணம்…”…இதை கட்டாயம் நீ மாத்திக்க…ஏன்னா…என்னோட வாழ்க்கை இங்கதான்…என்றார் கடுமையாய்.

 

முரளியின் இப்படி ஒரு பேச்சை  மகேஷ்வரி எதிபார்க்கவில்லை. அவள் சாதரணமாக சொன்ன ஒரு சின்ன விஷயத்திற்கு…இப்படி ஒரு கோபத்தை எதிர்பார்க்காமல் திகைத்தாள் . முரளியின் பேச்சு அவளுக்கும் கோபத்தைத் தூண்ட…முகத்தைத் தூக்கிக் கொண்டாள்.ஒரு வேளை பேசியிருந்தால் பின்னால் வந்த விளைவுகளை தவிர்த்து இருக்கலாமோ என்னவோ..?

 

இவர்களின் பேச்சை ஜக்கம்மாள் கேட்டது தான்.. கடைசியில் வினையாகிப் போனது.

மறுநாள் “மிகப்பெரிய ..பொறியியல் வல்லுனர்கள் கலந்து கொள்ளும் மாநாடு…சிங்கப்பூரில் நடைபெறவிருப்பதாகவும்..தான் அங்கு சென்று திரும்ப ஒரு வாரம் ஆகும் என்று முரளி செய்தியாக மகேஷ்வரியிடம் தெரிவித்தார்”.

 

இதை மகேஷ்வரி முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை. முரளி இருக்கும் போதே…ஜக்கம்மாள்  வார்த்தகளால் சாடுவார்.இப்பொழுது இவரும் இல்லை எனில்..என்று நினைத்தவளின் மனம்….தவிக்க ஆரம்பித்தது. ஆனால் அவளின் தவிப்பை உணராத முரளி….தன் பெற்றோரை நம்பி…மகேஷ்வரியை விட்டு விட்டு…சிங்கப்பூர் கிளம்பினார்.

 

முரளி சென்ற நாளிலிருந்து ஒவ்வொரு மணித்துளியும்  ரணமாய் சென்றது. ஜக்கம்மாவின் வார்த்தைகள் எல்லை மீற ஆரம்பித்தது. சுதாவோ..நடப்பதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சுதாவிற்கு தெரியும்…தன் அத்தையின் குணத்தைப் பற்றி..அதனால் அவளும் அமைதியாக இருந்து விட்டாள். மறந்தும் மகேஷ்வரி இருக்கும் பக்கம் கூட சுதா போகவில்லை. ஆனால் இவை யாவும் பாண்டியனின் முன்பு அரங்கேற்றப் படவில்லை. ஒவ்வொரு நாளையும் ஒரு யுகமாய் கழித்தாள் மகேஷ்வரி.

 

அப்பொழுதுதான்….முரளி வீடு திரும்பும் இரண்டு நாட்களுக்கு முன் அந்த விபரீதம் நடந்தது. யாரும் எதிர்பார்க்காத சமயத்தில்….. வயலுக்கு சென்று வந்த பாண்டியன் பக்க வாதம் வந்து படுத்த படுக்கையாகி விட்டார்.

 

ஜக்கம்மாவிற்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நேற்று வரை நன்றாக நடமாடிக் கொண்டிருந்த  தன் கணவன் …இப்பொழுது தன் கண் முன்னால் பக்கவாதம் வந்து படுத்து இருப்பதை…அவரால் பார்க்க முடியவில்லை. ஜக்கம்மாவின் கோபம் முழுவதும்  மகேஷ்வரியின் மீது பாய்ந்தது.

 

இந்த சண்டாளி..என்னைக்கு என் வீட்டுக்குள் காலடி எடுத்து வச்சாளோ..அன்னைக்கு பிடிச்சது..என் வீட்டுக்கு தரித்திரம்…என் தாலிக்கொடிய பறிக்கனும்ன்னு நினச்சே…இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வச்சிருக்கா…சிறுக்கி.. இவ எல்லாம் நல்லா இருப்பாளா..நாசமா..போய்டுவா…! என்று அவர் ஒப்பாரி வைக்க…,மகேஷ்வரி திகைத்தார்.

 

மனதிற்குள் சுக்கு நூறாய் உடைந்து போனாள் மகேஷ்வரி. பாண்டியன் நடப்பதை தடுக்கும் சக்தி அற்றவராய் …கிழிந்த நாறாய் படுத்திருந்தார். ஆற்றுவார் தேற்றுவாரின்றி அழுது கொண்டிருந்தார் மகேஷ்வரி.

 

இதை எல்லாம் பர்த்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தார் பிரபு.அவருக்கு…மகேஷ்வரியின் மீது ஒரு தனிப் பிரியம் இருந்தது. சுதாவைப் போல தான்.., மகேஷ்வரியையும்  ஒரு தங்கையாக நினைத்து இருந்தார் பிரபு. சுதாவும் ஜக்கம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள்.

 

இரண்டு நாட்களாய் நடந்து கொண்டிருந்த இந்த வேதனையில்…கடைசி நாள் வந்த செய்தியில்… உயிரோடு   பிணமானாள்   மகேஷ்வரி. அவளுக்கே இப்படி என்றாள்..ஜக்கம்மாவிற்கு….உலகமே இருண்டது போல் ஆகிவிட்டது. ஆத்திரம்..  ஆங்காரம் எல்லாம் ஒன்றாய்ப் படை எடுக்க….உடைந்து போய் அமர்ந்து இருந்த மகேஷ்வரியின் ..தலை முடியைக் கொத்தாகப் பிரித்தார் ஜக்கம்மாள்.” எங்கடி இருந்து வந்த….யார் குடிய கெடுக்க வந்த…கட்டுன புருஷன் படுத்த படுக்கையாகி விட்டார். பெத்த புள்ள வந்த விமானம் வெடுச்சு…உடம்பு கூட கிடைக்காம செத்துட்டான்….ஐயோ….கடைசி காலத்துல எங்களுக்கு கொள்ளி போடுறதுக்கு முன்னாடி…இப்படி அல்ப்ப ஆயுசுல போய்ட்டானே..ராசா….என்று கதறி துடித்தார் ஜக்கம்மாள்.

 

முரளி வந்த விமானம் வெடித்து சிதறி.., ஒரு உடல் கூட முழுமையாய் கிடைக்கவில்லை என்ற செய்திதான் அது..!”. டி.வி சேனல்களும் அதையே ஒளிபரப்பு செய்தன.அன்றைய பிளாஷ் நியூஸ் அதுவாகவே இருந்தது.

 

மகேஷ்வரிக்கு இன்னும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை…” என்.. முரளி   இறந்து விட்டாரா….என்னை அனாதையாய் விட்டு விட்டு போய் விட்டாரா….? என்னைப் பற்றிய நினைப்பு இல்லையா…? போகும் போது என்னைக் கூட்டிச் செல்ல வேண்டும் என்று தோணவில்லையா….என்று கேள்வியும் அவளே..பதிலும் அவளாக மாறி மாறி..மனதினுள் பேசிக் கொண்டிருந்தாள். நான் அப்படி ஒரு துரதிஷ்டம் பிடித்தவளா…? கடவுளே..என்னையும் கூப்பிட்டுக் கொள்…என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதற…மகேஷ்வரியின் கதறலைப் பார்த்த அனைவரின் கண்களுகளும் கலங்கியது. ஜக்கம்மாவைத் தவிர….

 

சுதாவாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகேஷ்வரியைப் பார்த்த சுதாவும் வேதனைப் பட்டு போனார். அவள் சாப்பிட்டு இரண்டு நாட்களானதால் துவண்டு போய் இருந்தாள். சுதா ..மோர்க் கொண்டு போய் மகேஷ்வரியை கட்டாயப் படுத்தி குடிக்க வைத்தார்.  ஆனால் மகேஷ்வரி இருந்த நிலையில் சுதாவை ..கவனிக்கவில்லை.

 

மகேஷ்வரி அழுது கொண்டிருக்கும் பொழுதே…அவருடைய பெட்டிகள் வந்து வெளியே விழுந்தன.” ஒழுங்கு மரியாதையா..இங்க இருந்து போய்டு…இன்னும் இங்க இருந்து எத்தனை பேர் உயிரை எடுக்கப் போற..,சனியம் பிடிச்சவளே…முதல்ல போடி …இங்க இருந்து….உன்ன பிடிச்ச தரித்திரம்.., இப்ப என் வீட்டையே…சின்னா பின்னமாக்கிடுச்சு….இப்ப உனக்கு சந்தோஷமா…? அப்பவே..இவ வேண்டாம்…வேண்டாம்ன்னு சொன்னேனே…யாருமே..கேட்கலையே..! இப்ப… இப்படி பெத்த ஒத்தப் புள்ளையும் பறிகுடுத்துட்டனே…!  என்று ஒரு தாயாய் ஜக்கம்மாவும் கதறி அழ ஆரம்பித்தார்.

 

அத்தை..ப்ளீஸ் அத்தை….நான் கடைசியா ஒரு முறை மாமாவப் பார்த்துட்டுப்   போறேன்…என்று மன்றாடினார் மகேஷ்வரி.

 

எதுக்கு அவரையும் கொல்லவா…? ஏன் படுத்த படுக்கையா இருக்கனும்…ஒரேயடியா…சாகடிச்சுட்டுப் போகலாம்ன்னு நினைக்கிறியா..? என்றார் வார்த்தைகளை சாட்டையாய் வீசியபடி.

 

மகேஷ்வரியால் இப்படியாகப்பட்ட வார்த்தைகளைத் தாங்கவே முடியவில்லை. இதற்கு மேலம் இருந்து யாரின் நிம்மதியையும் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவள்….நேராக தங்களின் அறைக்கு சென்று தங்களின் திருமணப்  புகைப் படங்களை எடுத்துக் கொண்டு செல்ல எத்தனிக்க…ஜக்கம்மா..ஆவேசமாய்..அவற்றை எல்லாம் பிடுங்கினார்.

 

என் மகனயே.. கொன்னுட்ட…! இப்ப அவன் மேல பாசம் இருக்குற மாதிரி நடிக்கிறியா..? குடுடி..என்று வாங்கியவர்…அவள் முன்னாடியே…அவற்றை எல்லாம் தீ வைத்துக் கொழுத்தினார். அவ்வளவு தான் அவரது செயலில் மகேஷ்வரியின் உடலில் இருந்த கொஞ்ச நஞ்ச உயிரும் சென்றது. அவளை தர தர வென்று வெளியில் இழுத்து வந்து விட்டார் ஜக்கம்மாள். உன் முகத்துல முழிச்சா கூட தரித்திரம் தானா வந்து ஒட்டிக்கும்…போடி வெளியே..! என்றாரு அவளை வெளியே தள்ளினார்.

 

கல்யாணம் செய்து கொடுத்த மகளைப் பார்க்க வந்த மகேஷ்வரின் பெற்றோர்கள்..பார்த்தது அவளின் இந்த நிலையை தான். தன் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே..என்று அவர்கள் துடித்து…ஏதோ சொல்லப் போக..மகேஷ்வரி அவர்களைத் தடுத்து..அமைதியாக வெளியேறினார்..அந்த வீட்டை விட்டு.

 

அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து…தாலியை ஏற்றுக் கொண்டு அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தவள்…இன்று..தலைவிரி கோலமாய்…வேதனைகளையும் .., துக்கங்களையும்…மனதில் சுமந்து கொண்டு அனாதரவாய் சென்றாள். அவளின் திருமண வாழ்க்கை ஆரம்பித்த இருபது நாளில் கருகியது.

 

 

யாருக்கு மாலைகள் ஆவதென்று…

பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை…

யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று…

தேவைதைகள் வந்து சொல்வதில்லை….

விதி என்ற காட்டிலே,….திசை மாறும் வாழ்க்கையே…

போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு….

 

 

அவளின் நிலையைப் பார்த்து பிரபு தான் மிகவும் கலங்கிப் போனார். தன் அத்தையின் செயல் அவருக்கு ….வெருப்பை ஏற்படுத்தியது. பாண்டியன் எதையும் தடுக்கும் சக்தி அற்றவராய் மாறிப் போனார்.  சுதாவோ..வாயிருந்தும் ஊமையாகிப் போனாள்.

 

மகேஷ்வரி வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குள்….வீட்டின் தொலைபேசி அலறியது. சுதா சென்று எடுக்க…அடுத்த முனையில் இருந்து கேட்ட குரலில்…சுதாவிற்கு பேச்சே வரவில்லை.வாயடைத்து நின்றார்.

 

பேசியது முரளிதான்….” தான் செய்தி பார்த்ததாகவும்…அந்த விமான விபத்தை நினைத்து கலங்க வேண்டாம் என்றும்..தான் கடைசி நேரத்தில் பிளைட்டை தவறவிட்டதையும்..சொல்லி…,, அம்மாவிடமும்..,மகேஷ்வரியிடமும் சொல்லிவிடு சுதா.. நான் இப்போ அடுத்த பிளைட்டுல கிளம்புறேன்..மத்ததெல்லாம் வந்து சொல்றேன்” என்றபடி போனை வைத்துவிட்டார்.

 

சுதாவிற்கு தொண்டைக்குள் ஏதோ..அடைத்துக் கொண்டது..வேகமாய் வெளியே வந்து ஜக்கம்மாவிடம் உண்மையை சொல்ல….முதலில் திகைத்தாலும்….தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்ற செய்தி…அவரது வயிற்றில் பாலை வார்த்தது.மகன் வந்து மகேஷ்வரியைக் கேட்டால்…என்ன செய்வது  என்று யோசித்தவர்..ஒரு முடிவுடன்..எழுந்தார்.

 

சுதா..நளைக்கு முரளி வந்த உடனே…நான் சொல்றதுக்கு எல்லாம் நீ தலையை மட்டும் தான் ஆட்டனும்….சரியா..உன் மாமன் உனக்கு வேணும்ன்னா…நான் சொல்றதைதை செய்…..!” என்று கட்டளையிட்டார்.

 

இதைக் கேட்ட பிரபு….”ச்சீ ..இவங்க எல்லாம் மனுஷங்க தானா..என்று மனதில் நினைத்தவராய் வெளியேறினார்”.

 

                                                   *********

 

முரளி உற்சாகமாய் வீட்டிற்குள் நுழைந்தார். வேலைக்காரர்கள்…புரியாத பாவனையில் ஒரு பார்வை பார்க்க..அதை பற்றி ஆராய நேரம் இல்லாதவராய்..மகி…மகி…எங்க இருக்க…என்று தன் மனையாளை காணும் ஆவலில்…மகேஷ்வரியின் பெயரை ஏலம் விட்டுக் கொண்டே வந்தார்.

 

முதலில்..வெளிய வந்த ஜக்கம்மாள்….தன் மகனை உயிருடன் கண்டு விட்ட சந்தோஷத்தில்…ராசா..என்று அன்று அவரைத் தழுவ….” அம்மா…எனக்கு ஒன்னும் இல்லை…நான் நல்லா இருக்கேன்…நல்ல வேளை…நான் அந்த பிளைட்டை  மிஸ் பன்னேன்…கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும்..” என்று முரளியின் வாய் சொல்லிக் கொண்டிருந்தாலும்…கண்கள்…தன் மனைவியைத் தேடியது.

 

அம்மா…! மகேஷ்வரி எங்க…? என்றார்.

 

சிறிது தயங்கி…தொண்டையை சரி செய்தவர்….” முரளி நீ உன் மனசத் தேத்திக்கோப்பா…உன் பொண்டாட்டி இங்க இல்லை..என்றார்”.

 

இங்க இல்லன்னா….? என்றார் முரளி இடுங்கிய பார்வையுடன்.

 

இங்க இல்லைன்னா….ஓடிப் போய்ட்டான்னு அர்த்தம்…என்று ஜக்கம்மா முடிக்கவும்…முரளி தன் தாயின் கழுத்தை நெறித்தார்.” அம்மா..பார்த்துப் பேசுங்க….நீங்கன்ங்க போய் நான் இவ்வளவு பொறுமையா இருக்கேன்..என் மகி எங்க..என்ன பன்னிங்க அவளை….அவ அப்படி எல்லாம் பண்ண மாட்டா….அவளப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்..சொல்லுங்க…” என்று கத்தினார்.

 

டேய்..சும்மா நிறுத்துடா…” உன் பொண்டாட்டிக்கு..இந்த பட்டிகாட்டுல வாழ விருப்பம் இல்லையாம்…உன்கிட்ட சொன்னாளாம்….! அதுக்கு நீ..என் வாழ்க்கை இங்க தான் அப்படின்னு சொன்னியாம்…அதான் அவரு வாழ்க்கை இங்க இருக்கலாம்..ஆனா என்னால எல்லாம் இங்க வாழ முடியாது….நான் போறேன்.உங்க பிள்ளை வந்தா சொல்லிடுங்க..அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டா..உன் அருமைப் பொண்டாட்டி..” சந்தேகம்ன்னா நீ சுதாவைக் கேள் என்றார் சாமர்த்தியமாய்.

 

சுதாவும் தன் அத்தையின் சொல்லுக்கினங்க….ஆமாம் என்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

 

முரளி நம்பாமலேயே..நின்றிருக்க….” எனக்குத் தெரியும் நீ நம்ப மாட்டேன்னு….போய் உங்கப்பா..நிலைமைய பாரு..அப்பவாவது நீ நம்புவியான்னு பார்ப்போம்…எப்ப உன் பொண்டாட்டி இந்த வீட்டு விட்டு போக முடிவு பண்ணாளோ..அப்பவே..அவருக்கு பக்கவாதம் வந்து பேசக் கூட முடியாம இருக்கார்…” என்று மூக்கை சீந்தினார் ஜக்கம்மாள்.

 

சுதாவிற்கு..” மகேஷ்வரியை தன் அத்தை விரட்டியது மனதிற்குள் வந்து வந்து போனது”.

 

முரளி வேகமாய் சென்று தன் தந்தையைப் பார்க்க..சுக்கு நூறாய் நொறுங்கினார்.தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல்…தன் மனைவியை மகளைப் போல் பாவித்த ..தந்தை இன்று இந்த நிலையில் இருக்க காரணம்…என் மனைவியா…? என்ற கேள்வி…புயலாய் தாக்கியது. சில சமயம்…மூளை தன் வேலையை நிறுத்தி..புத்தி பேதலிக்க செய்யும் என்பது.., முரளிக்கு அன்று நடந்தது.

 

தன் அப்பாவின் அருகில் சென்று கைகளைப் பிடித்துக் கொண்டார் முரளி,..” பாண்டியன் கை சைகையால் ..மகி அவளா…போகலை.. என்று  உண்மைய சொல்ல வர ..” அதற்குள்  ஜக்கம்மாள் முந்திக் கொண்டார். ” விடுங்கங்க..நீங்க அவள மகளாப் பார்த்திங்க..ஆனா அவ அதுக்கெல்லாம் தகுதி இல்லாதவங்க…என்று அழுவதைப் போல் நடிக்க..” பாண்டியன் வெறுத்துப் போனவராய்..தன் மகனின் கைகளைப் பிடித்தவாரும்…கண்களில் கண்ணீர் வடிந்தவாரும் …இந்த உலகத்தை விட்டு சென்றார் “.

 

அப்பா…! என்று முரளியின் குரல் அந்த வீட்டில் எதிரொலித்தது.

 

ஆயிற்று…பாண்டியன் இறந்து…ஒரு மாதம் ஆகியும்…முரளியின் நிலை மாறவில்லை. “தன் உயிருக்கு உயிரான அப்பா..உலகத்தை விட்டு சென்று விட்டார். தான் உயிராய் நேசித்த பெண்..தன் வாழ்க்கையை விட்டே சென்று விட்டாள்…” என்று எண்ணி எண்ணி…பித்துப் பிடித்துப் போய் அமர்ந்து இருந்தார்.

 

தன் தாயின் சொல்லையும் நம்பாமல்….மகியைத் தேடி சென்னை சென்ற அவருக்கு.., கிடைத்தது எல்லாம் ஏமாற்றம் மட்டுமே…! அவர்கள் வீட்டை விற்று விட்டனர் என்ற செய்தியே அவரை வரவேற்றது. மகேஷ்வரியின் நினைப்பில்..ஒவ்வொரு நாளும் அவர் ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தார்.

 

போனவ போய்ட்டா மகராசி…..என் மகன் நிம்மதியையும் சேர்த்து இல்ல எடுத்துட்டுப் போய்ட்டா..!” என்று புலம்பிய ஜக்கம்மாள்…சுதாவை..முரளிக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் முயற்சியில் தீவிரமாய் இறங்கினார்.இதை அறிந்த பிரபு..முரளியிடம் உண்மையை சொல்லப் போக…ஜக்கம்மாள் அவரை முரளியை நெருங்க விடவே இல்லை.கரைப்பார் கரைக்க கல்லும் கரையும் என்பதற்கிணங்க….முரளியின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார் ஜக்கம்மாள். அதற்கே அவருக்கு ஒரு வருடம் பிடித்தது.

 

சுதாவிற்கு தான் மனதிற்குள் பயமாக இருந்தது…” ஒரு வருடமாக இல்லாத பொண்டாட்டிக்காக முரளி உருகியதை நேரடியாகப் பார்த்தவளாயிற்றே….இவர் தன்னை ஏற்றுக் கொள்வாரா..?” என்றெல்லாம் எண்ணி கலங்கிக் கொண்டிருந்தாள் சுதா. ஆனால்  அவளின்  கலக்கம் தேவையற்றது என்பதற்கிணங்க..ஜக்கம்மாள் தான் நினைத்தை சாத்தித்துக் காட்டினார்.

 

இவர்களின் செயலால் …தன் தங்கையையும்..அத்தையையும் விட்டு அன்று வெளியேறிவர்தான் பிரபு. மறுபடியும் அவர் அங்கு செல்லவே இல்லை.

 

 

சொல்லி முடித்தார் சுதா………

 

மேகம் சூழ்ந்து விட்டால்….

கதிரவன் ஒளிக்காது….

சந்தேகம் வந்துவிட்டால்…

வாழ்க்கை இனிக்காது….

அக்கினியை  சாட்சி வச்சு..

நடக்குது கல்யாணம்….

அக்கினியா பொண்ணு எரிஞ்சா…

வாழ்க்கை என்னாகும்….?

Advertisement