Advertisement

முகவரி 1:

 

பொழுது புலர்ந்து சூரியன் வழக்கம் போல் தன் உதயத்தை ஆரம்பித்து.., ஒளிக் கதிர்களை வீசிக்கொண்டிருந்தான்.அந்த காலை வேளையில் சென்னை…தனக்கே உரிய பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.பள்ளி மாணவ மாணவிகளும்…கல்லூரி மாணவர்களும்….அலுவலகம் செல்பவர்களும்….நம்  வேலை  நமக்கு என்ற ரீதியில்.. பேருந்திற்கும்..டிரெயினுக்குமாய்  ஓடிக்கொண்டிருந்தனர்.

 

ஒவ்வொருவருக்கும்..வாழ்க்கையில்…ஏதோ ஒன்று துரத்த…இவர்களும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க ..ஓடிக்கொண்டிருந்தனர்.

 

“பரபரப்பான அண்ணா சாலையில் தனது ஆடிக்காரில்..சூரியனுக்கும் குறையாத வெப்பத்தை தன் முகத்தில் தேக்கி வைத்திருந்தான்…சூர்யா என்ற சூர்ய வேந்தன்.நேரம் காலம் தெரியாமல்..தனது அவசரம் புரியாமல்..சிக்னல் விழுந்த கோபத்தில் இருந்தான் அவன்.

 

அவனது கோபம் பார்த்து ..தனது வாயை அடக்கிக் கொண்டு அமர்ந்து இருந்தான்..ஜீவா என்ற ஜீவானந்தம்.

 

அவன் அமைதியைப் பார்த்த சூர்யாவிற்கு கோபம் இன்னும் அதிகரித்தது.”என்னட இங்க ஒருத்தன் காட்டுக் கத்துக் கத்திகிட்டு இருக்கேன்..நீ என்னடான்னா…அமைதியா இருக்க..என்ன பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது” என்றான் கோபம் கொஞ்சமும் குறையாத முகத்துடன்.

 

சூர்யாவின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காக..ஜீவா வாயைத் திறக்கவும்..சூர்யா., அவனை அனல் பார்வை பார்க்கவும்., சரியாக இருந்தது.நமக்கு எதுக்கு வம்பு என்று ஜீவா மறுபடியும் வாயை மூடிக் கொண்டான்.

 

அதற்குள் சிக்னலில் பச்சை விளக்கு எறிய …காரை புயல் வேகத்தில் செலுத்தினான் சூர்யா.

 

சூர்யவேந்தன் …எம்.எஸ்.குரூப்ஸ் ஆப் கம்பெனிஸ்  இவனால் உருவாக்கப்பட்டது. இருபத்து எட்டு வயதில் அவன் அடைந்த உயரம் அதிகம்.நல்ல நிறம் என்றும் சொல்ல முடியாது…அதற்காக கருப்பு என்றும் சொல்ல முடியாது.மாநிறத்தில்..ஒரு வலிமையான ஆணிற்குத் தேவையான அத்தனை தகுதிகளுடனும் இருப்பவன்…

 

ஒருவரின் பார்வையில் இத்தனை ஆளுமை இருக்க முடியுமா என்று சந்தேகம் கொள்பவர்கள்…..இவனைப் பார்த்தால் தங்கள் எண்ணம் முற்றிலும் தவறு என்பதை ஏற்றுக் கொள்வர்.பார்வையில் தெரியும் அறிவின் தீட்சண்யம்…என்னிடம் எதுவும் செல்லுபடி ஆகாது…என்கிற ரீதியில் அவனது தோரணை…மொத்தத்தில் கடுமையின் மறுபக்கமாய் திகழ்ந்தான்.தந்தையின்றி தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். அவனது தாய் மகேஸ்வரி மட்டுமே அவனது உலகம்…தாய்க்கு மட்டுமே கட்டுப்பட்டவன்.

 

தனது தாயைத் தவிர.., தன் வாழ்வில் அவன்  பங்கு அளித்த மற்றொரு பரிதாபத்திற்கு உரிய ஜீவன்…தான் இந்த பாவப்பட்ட ஜீவானந்தம்.சூர்யாவின் உற்ற தோழன்.அவனது இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் உடன் இருப்பவன்.

 

இன்று இளம் தொழில் அதிபர்க்கான விருது…சூர்யாவிற்கு வழங்கப்படுகிறது.அங்கு செல்வதற்காக கிளம்பிய வேளையில்,….பாக்டரியில் பிரச்சனை என்று அழைப்பு வரவும்… அங்கு சென்று பிரச்சனையை முடித்துக் கொண்டு வரும் வழியில் வாகன நெரிசலில் மாட்டிக்கொள்ள..சூர்யாவின் கோபம் கட்டுக்கடங்காமல் சென்றது.இதுதான் அவனது கோபத்திற்கு காரணம்.

 

                                                  ———-

 

அம்மா…எங்க இருக்கிங்கசீக்கிரம் வாங்க…நீங்க வரதுக்குள்ள… எல்லாரும் விருது குடுத்துட்டு கிளம்பிடுவாங்க..”என்று பொய்யாய் சலித்தபடி..தன் தாயை அழைத்தான் அருள்.

 

கட்டுமானத் தொழிலில் சிறப்பான நிறுவனமாக…இவர்களது நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

தனது தந்தை ஊரில் இல்லாத காரணத்தினால்..அருள் மட்டும் அந்த விருதை வாங்குவதாக இருந்தது.அதற்காகத்தான் இந்த பரபரப்பு.

 

இதோ வந்துட்டேண்டா…என்று கூறியபடி வந்தார் சுதா.அருளின் அருமையான அன்னை.அன்பின் மறுபக்கமாய் திகழ்பவர்.அருளும், அவன் தங்கை தீபாவுமே அவரது உலகம்.வெளி உலகம் அறியாதவர்.அருளின் தந்தை முரளி..மிகச்சிறந்த மனிதர்…நல்ல சிந்தனையாளர்.மொத்தத்தில் அருளுக்கும், தீபாவுக்கும் அவர்தான் வழிகாட்டி,முன்னோடி என அனைத்துமே.” 

 

அம்மா..!நீங்க வந்துட்டிங்க…எங்க… என் அருமை தங்கையைக் காணவில்லை!  என்றான் சிரிப்புடன் அருள்.

 

அருள்..கண்ணா..அவ முன்னமே கிளம்பி கார்க்கு போய்ட்டா…நாம மட்டும் தான் பாக்கி …கிளம்பலாமா? என்றார் கேள்வியாய்.

 

ஐயோ அம்மா….! என்ன கிளம்பலாமா?…கிளம்பித்தான் ஆகனும்!…என்றான் அருள் பரிதாபமாய்…

 

சுதாவும் அவனது சிரிப்பில் இணைந்து கொள்ள…அவர்களும் விருது வழங்கும் இடத்திற்கு பயணப்பட்டனர்.

 

அருள்..26 வயது இளைஞன்.பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று…தன் தந்தையின் தொழிலை………அவர் உடன் இணைந்து  செய்து கொண்டிருப்பவன்.இனிமையும்…கலகலப்பும் இவனது அழகு.தன் தாயைப் போல் நல்ல நிறம்.ஆனால் இவை அனைத்தையும் இவனது பிடிவாதம் என்னும் குணம் …பின் நிறுத்தி வைத்துவிடும்.

 

அருள் காரை எடுக்க போக அங்கு…மான் விழிகளுடன்…துறுதுறு கண்களுடன்…குறும்பு செய்வது மட்டுமே எனது பிறவிப் பயன் என்பதைப் போன்ற அவளது முகமும்…சுடர் ஒளியாய் அமர்ந்து இருந்தாள் தீபா.அவளது அமைதியே அருளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

 

அப்பனே அருளா..!உனக்கு இன்னைக்கு என்ன…என்ன சோதனைகள் எல்லாம் காத்து இருக்கோ! என்று மனதிற்குள் நினைத்தபடி காரைக் கிளப்பினான்.

 

அவன் நினைப்பது தெரிந்தாலும் …ஒன்றும் தெரியாத அப்பாவி போல் அமர்ந்து இருந்தாள் தீபா.

 

தீபா…கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்ககும் சுட்டிப் பெண்….அவளுக்கு திருமணம் செய்ய ..வரன் பார்த்துக் கொண்டிருந்தனர்..சுதா-முரளி தம்பதியினர்.

 

ஆனால் தீபாவாவோ…”எனக்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் சிட்டுக் குருவியாய் சிறகடித்துக் கொண்டிருந்தாள்.

 

                                      *****************

முடியாது..முடியாது….நான் ஸ்கூட்டியில தான்..போவேன் என்று அடம் பிடித்து அமர்ந்து இருந்தாள் நிலா.பிரபு-மாலா  தம்பதியரின்  சீமந்திர புத்திரி.தவமிருந்த பெற்ற ஒற்றைப் பெண்.  பிறந்த பொழுது  நிலவாய் ஜொலித்த அவளது முகம் கண்டு…மாலாவிற்கு பிரசவித்த மருத்துவரே அவளுக்கு நிலா என்று பெயர் சூட்டுங்கள்! என்று கூற..அவர்களும்  அவ்வாறே பெயர் சூட்டினர்.

 

நிலா..!பெயருக்கேற்றார் போல் நிலவென ஜொலிப்பவள்.பாரதி கண்ட புதுமைப் பெண்ணிற்கு உரிய அனைத்து இலக்கணங்களும் அமையப் பெற்றவள்.குத்து விளக்காய் அவள் அழகு சுடர் விட…அதைப் பற்றிய கர்வம் சிறிதும் இன்றி..இயல்பாக இருப்பவள்.மனிதாபிமானமே அவளது சொத்து.நேர்கொண்ட பார்வை அவளது அணிகலன்.அழகை அள்ளிக் கொடுத்த கடவுள்…அறிவையும் குறையாது அள்ளிக் கொடுத்து இருந்தார்.”

 

இன்று அவளது வேலைக்கான நேர்முகத் தேர்விற்காக…. கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.அவள் ஸ்கூட்டியில் தான் செல்வேன் என்று அடம் பிடிக்க…அவளது வண்டி ஓட்டும் திறனைப் பற்றி தெளிவாகத் தெரிந்த..பிரபும் ,மாலாவும் வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.அதற்கு தான் இந்த போராட்டம்.

 

அப்பா..ப்ளீஸ்ப்பா..நீங்களாவது அம்மாகிட்ட சொல்லுங்கப்பா….,,” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் நிலா.

 

பிரபு..மாலாவைப் பார்க்க…,,என்னமோ செய்ங்க என்ற ரீதியில் அவர் உள்ளே சென்று விட்டார்.பிரபு சம்மதமாய் தலையை ஆட்ட…ஹைய்யா அப்பான்னா அப்பாதான்..! என்று தன் தந்தையை இறுக அணைத்துக் கொண்டாள் நிலா.ஆனா மெதுவாதான் போகனும் என்று அவர் கட்டளையிட….முயற்சி பன்றேன்ப்பா..என்றவாரு தனது வண்டியைக் கிளப்பினாள் நிலா.

 

கடவுளே..! இன்னைக்கு ரோட்ல போறவங்களை நீதான் காப்பாற்றனும்…! என்று மனதிற்குள் வேண்டியபடி சென்றார் பிரபு.

 

நிலாவிற்கு மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது. வேலைக்கான எழுத்துத்தேர்வை எதிர் கொண்டு…அதில் தேர்வாகி..இன்று நேர்முகத் தேர்விற்காக சென்று கொண்டிருக்கிறாள்.படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவளது கனவு.அது இன்று நிறைவேறப் போகிறது…..” என்ற மகிழ்ச்சியுடன்..சென்று கொண்டிருந்தாள் நிலா.

 

நிலா மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க….நேரம் ஆன காரணத்தினால் சூர்யாவும் வண்டியயை வேகமாய் ஓட்டிக் கொண்டு வர….அதே நேரமின்மையின் காரணமாக…அருளும் தன் பங்கிற்கு வண்டியயை வேகமாய் செலுத்திக்கொண்டு வர…மூன்று வண்டிகளும் ஒரே திருப்பத்தில் சந்தித்தன.

 

முன்னால் வந்த லாரி சற்று வேகமாய் வர..அதைக் கவனித்த நிலா..தனது வேகத்தை மட்டுப்படுத்த…திடிரென்று பிரேக் போட்டாள்.அவளது ஸ்கூட்டிக்கு பின்னால் வந்த அருள் நிலைமையை உணர்ந்து..அவள் மீது மோதாமல் இருக்க…மற்றொரு புறம் திருப்ப…அந்த பக்கம் வேகமாய் வந்த சூர்யாவும்….திடிரென்று பிரேக் போட முடியாமல்..தடுமாறி தன் காரை லாவகமாய் நிறுத்தினான்.ஆனால் ஏற்கனவே கோபமாக இருந்த அவன்…இதில் ருத்ர மூர்த்தியாய் அவதாரமெடுத்து….,கீழே இறங்கினான்.”

 

அருள்..நிலாவை திட்டுவதற்காக கீழே இறங்க…இதை எதும் அறியாமல்..,ஆனால் ஏதோ உள்ளது என்று தன் உள் மனம் உந்த..நிலாவும் ஸ்கூட்டியை விட்டு இறங்கினாள்.

 

ஏய்..! அறிவில்லை…என்று திட்டியபடி., அருளின் அருகில் வந்தான் சூர்யா.அவனது கோபம் கண்டு ஜீவா இறங்கி வருவதற்குள்……….. சூர்யா..,,அருளின் சட்டையைப் பிடித்து இருந்தான்.

 

சூர்யா என்ன பன்ற? விடு அவரை என்று ஜீவா அவனைத் தடுக்க..அவனைப் பார்த்து உக்கிரமாய் முறைத்தான்.

 

பிறகு அருளிடம் திரும்பியவன்..”ஏண்டா.. கண்ண என்ன ரோட்ல தான் வச்சு வண்டி ஓட்டுறியா…,,இல்லை வேற எங்கும் வச்சு வண்டியை ஓட்டுறியா..? என்றாவாரு அவன் நிலாவைப் பார்க்க… அவனது கேள்வியில் வெகுண்ட நிலா..வாயைத் திறந்து ஏதோ சொல்ல வர…அதற்குள் அருள் முந்திக் கொண்டான்.

 

சாரி சார்..!தப்பு என் மேல்தான்.ஐ ஆம் வெரி சாரி! என்றான் அருள் தப்பு செய்தவனாய்.ஆனால் சூர்யாவின் காதுகளுக்கு அருளின் மன்னிப்பு அவ்வளவு சீக்கிரம் கேட்டுவிட்டால் அவன் சூர்யா அல்லவே.

 

செய்வதையும் செய்துவிட்டு சாரி கேட்டா சரி ஆகிவிடும் என்றால் ….. இந்த நிமிடம் நீயும் நானும்.., சொர்க்கத்துல தான் சண்டை போட்டுட்டு இருப்போம்… கண்ணை.., பொண்ணு மேல வைக்காம…ரோட்ல வச்சு ஓட்டு.. என்றான் கோபமாய்.

 

அதுவரை அமைதியாய் இருந்த நிலாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது.

 

என்ன சார்! அவர்தான் சாரி கேக்குறார்ல…..அப்பறம் ஏன் சார் இந்த கத்து கத்துறிங்க..?என்றாள்..,  கோபத்தில் சிவந்த முகமாய்.

 

அவளை மேலும் கீழும் ஏற...  இறங்கப் பார்த்தவன்…,,காலம் கலிகாலம் ஆகிவிட்டது.இப்ப எல்லாம் ஆம்பிளைங்களைத் திட்டுனா… பொண்ணுங்களுக்கு கோவம் வருது…..என்றான் நக்கலாய்…!என்ன ஜென்மங்களோ…!என்று   வார்த்தைகளைக்  கடித்துத் துப்பினான் சூர்யா.

 

நிலா அவனை சீற்றமாய் பார்க்க..,உன் பார்வை என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையில் சளைக்காமல் முறைத்துக் கொண்டிருந்தான் சூர்யா.

 

அதுவரை அமைதியாய் நின்று இருந்த அருளுக்கும்…அமைதி போய் கோபம் குடி கொண்டது.அவன் கோபமாய் ஏதோ சொல்ல வர…அவனின் முயற்சி அறிந்த ஜீவா…அருளின் அருகில் சென்று…,,சாரி சார்..அவன் சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..அவன் ஏதோ டென்ஸன்ல இருக்கான் என்று சமாதானம் செய்து கொண்டிருக்கும் போதே..காரிலிருந்து தீபாவும்,சுதாவும் இறங்கி வந்தனர்.

 

என்ன அருள்..என்னாச்சு…என்றபடி சுதா வரவும்…அவரைப் பார்த்த அருள்…”அது ஒன்னும் இல்லம்மா…நீங்க வாங்க என்று அழைத்துக் கொண்டு சென்றான்”..தீபா அங்கு நின்றிருந்த அனைவரையும், பே..என்று பார்த்துக் கொண்டு போனாள்.

 

சுதாவும்…சூர்யாவைப் பார்த்துக்கொண்டே போனார்.நிலா கண்களாலேயே அருளுக்கு நன்றி கூற…அவன் மென்மையாய் கண்களை அமர்த்தி சென்றான்.நிலாவிற்குத் தெரியும் இந்த பிரச்சனையே தன்னால்தான் என்று!

 

இதுக்கு அம்மா சொன்ன மாதிரி..நம்ம ஆட்டோலயே போய் இருக்கலாம் என்று நினைத்தவள் …அங்கு நின்று இருந்த சூர்யாவை முறைத்தவாறே சென்றாள் நிலா.

 

ஏற்கனவே..நிலா..அருளிடம் கண்களால் பேசியதைப் பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு…நிலாவின் முறைப்பு..இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியது.  எங்க இருந்து கிளம்பி வருவாளுங்கன்னே தெரியலை!..ச்ச்ச…எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..என்று கண்களிள் வெருப்பைத் தேக்கி வைத்துக் கொண்டு…புயாலாய் காரை எடுத்தான் .”

 

நடந்த அனைத்தையும் பார்த்த ஜீவாவிற்கு…ஆயாசமாய் இருந்தது.கடவுளே..இப்பவே கண்ணக் கட்டுதே….!என்று மனதிற்குள் நினைத்தவன்…எவ்வளவோ பார்த்துட்டோம்….இதைப் பார்க்க மாட்டோமா! என்று மனதில் நினைத்தவனாய் அமைதியாய் அமர்ந்து இருந்தான் ஜீவா.

 

ஆனால் சூர்யா மனதிற்குள் கனன்று கொண்டே இருந்தான்.நிலாவின் முறைப்பு ..அவனது மனதில் வந்து வெறி ஏத்த…அவன் அதை காரை செலுத்துவதில் காட்ட….பாவம் ஜீவாதான் .

 

நிலாவும் அதே மன நிலையில் தான் சென்று கொண்டிருந்தாள். என்ன மனிதன் இவன்!…தெரியாம பண்ணிட்டேன்னு ஒருத்தன் சாரி கேட்கிறான்…ஆனா இவன் என்னடானா..பெரிய இவன் மாதிரி…திமிரா பேசுறான்.ஜூல இருந்து நேரா வந்து இருப்பான் போல.அவனும் அவன் மூஞ்சியும்…என்று வசை பாடிக்கொண்டிருந்தாள்.அதே நேரம் அருளின் முகம் அவளுக்கு நியாபகம் வர…நல்ல மனிதன்..கடைசிவரை என்னை ஒருவார்த்தை கூட சொல்லவில்லை.ஜெண்டில்மேன்..என்று அருளுக்கு புகழாரம் சூட்டினாள் மனதிற்குள்.

 

அமைதியாய் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் அருள்.அவனுக்கு சூர்யா திட்டியதோ…சட்டையைப் பிடித்ததோ எதுவும் நியாபகத்திற்கு இல்லை.அவன் நிலாவை பற்றிய கற்பனையில் இருந்தான்.கடைசியாய் அவள் பார்த்த நன்றிப் பார்வை…அவனது உயிர் வரை தீண்டியது.என்ன ஒரு அழகு…அவள் பேர் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.”

 

அவனைப் பார்த்த தீபா…டேய் அண்ணா…நீ இந்த உலகத்துலதான் இருக்கியா..? என்றாள்.அப்பொழுதும் அவன் கவனியாது இருக்க…,தீபா பின்னால் இருந்து அவனை உழுக்கினாள்.அப்பொழுதுதான் நிஜத்திற்கு வந்தான் அருள்.

 

அவனது பாவனையைப் பார்த்த தீபா..”அது சரி…என்று இழுத்தவள்…தன் அன்னையைப் பார்த்து..அம்மா..இவனுக்கு ஏதோ பேய் அடிச்சுடுச்சு…” என்றாள் சிரிப்புடன்.

 

ஆமாமா ..பேய்தான்…மோகினிப் பேய் என்றான் அருள் மனதினுள்.

 

ஆனால் சுதாவின் நினைவு எல்லாம் இவர்களின் பேச்சில் இல்லை.அவரது மனம் அங்கு பார்த்த சூர்யாவின் முகத்தில் நிலைத்து இருந்தது.அவனைப் பார்த்த அவரது மனதிற்குள் ஏதோ ஒரு நெருடல்.அது என்னவென்று அவருக்கு தெரியவில்லை.அதனால் மறுபடியும் மறுபடியும்  சூர்யாவின் முகத்தையே மனதிற்குள் உரு போட்டுக் கொண்டிருந்தார்.

 

வாழ்க்கை இவர்களுக்கு வைத்திருப்பது என்ன……?

Advertisement