Advertisement

முகவரி 3:

 சுதாவிற்கு மனம் ஏனோ பாரமாக இருந்தது.என்னவென்று வெளியில் சொல்லமுடியாத  ஒரு உணர்வாக இருந்தது. விருது வழங்கும் விழாவிற்கு சென்று வந்ததில் இருந்தே அவர் மனம் ரயில் வண்டியைப் போல் தடதட வென்று அடித்துக்கொண்டுதான் இருக்கிறது.ஆனால் எதுவும் உறுதியாக தெரியாத பொழுது..

ஏன் இப்படி ஒரு பயமான உணர்வு மனதை வாட்டுகிறது என்று தான் அவருக்குத் தெரியவில்லை.அது எப்படி இருக்க முடியும்!…இல்லை இதற்கு சாத்தியமே இல்லை!நான் தான் வீணாக கற்பனை செய்து மனதைப் போட்டு வருத்திக் கொண்டிருக்கிறேன்.அப்படி நடந்து இருக்க வாய்ப்பே இல்லை…என்று தானே கேள்வியும் …தானே பதிலுமாய்…மனதினுள் பேசிக் கொண்டிருந்தார் சுதா.

 அம்மா! என்ன பன்றிங்க?..எங்க இருக்கிங்க?என்றபடி வந்தாள்..தீபா.உள்ளே வந்த தீபா…”தான் அழைத்தும் சிலையாய் அமர்ந்திருக்கும் தாயைக் கண்டு குழம்பிப் போனாள்.என்ன ஆச்சு அம்மாவுக்கு?ஏன் இப்படி பேயறைந்த மாதிரி உட்கார்ந்து இருக்காங்க…! என்றபடி  சென்று அவரின் தோள்களைத் தொட்டு…அம்மா..! என்று அவரை அசைக்க…தீபாவின் தொடுதலில் நிஜ உலகிற்கு வந்தார் சுதா”.

ம்ம்…ங்ம்…சொல்லுடா குட்டி…! என்றார் சுதா குரலில் ஒரு சுரத்தையே இல்லாமல்.

 

ஐயோ ! அம்மா…என்னாச்சு உங்களுக்கு…கனவு எதும் கண்டுகிட்டு இருக்கிங்களா…! இல்லை…மிஸ்டர் முரளி..அதான் என் அருமை அப்பா..அவர் கூட டூயட் பாடிட்டு இருக்கிங்களா!..என்றாள் முத்தாய்ப்பாய்.

 

தனது படபடப்பை…தன்னுள் அடக்கியவர்…”அதெல்லாம் ஒன்னும் இல்லைடா குட்டி…சும்மாதான்…லேசா தலை வலிக்கிற மாதிரி இருந்தது என்று சமாளித்தார் சுதா”.

 

தீபா..” அம்மா..! உங்க தலைவலி போக்குற மருந்து என்னன்னு எனக்குத் தெரியுமே!” என்றாள் குறும்பாக.

 

தன்   சுய சிந்தனையில் இல்லாத சுதா…அதை கவனியாமல் விட..தீபாவே தொடர்ந்தாள்..”உங்க தலைவலி நீக்கும் மருந்து…உங்கள் தலைவரிடம் உள்ளது.தன் மனையாளுக்கு நோவு என்று அறிந்த தலைவர்…தான் சென்று இருந்த ஏழு கடல்…ஏழு மலை எல்லாம் தாண்டி…தங்களுக்காகவே ..ஓடோடி..வந்துவிட்டார்”…என்றாள்     நையாண்டியுடன்.

 

அவளது பேச்சில் அவளின் பின்னால் நின்று இருந்த முரளி வாய்விட்டு சிரிக்க….அப்பொழுதுதான் சுய நினைவிற்கு வந்தார் சுதா.

 

சுயனினைவிற்கு வந்தவர்….அங்கு முரளி நின்று இருப்பதைப் பார்க்கவும்…”வாங்க!..நீங்க எப்ப வந்திங்க..போன் கூட பண்ணலையே? என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கினார்…தன் கவலை,சிந்தனைகளை மறந்து..”.

 

நான் வந்து ஒரு மணி நேரம் ஆகுது சுதா.நாங்களும்….நீ இப்ப வெளிய வருவ…அப்பறம் வெளிய வருவ…  என்று பார்த்து..பார்த்து… ஏங்கி..ஏங்கி..கண்ணெல்லாம் பூத்ததுதான் மிச்சம்.என்றார் பிரபு ஆதங்கமாய்”.

 

தீபா..” சரியா சொன்னிங்க …டாடி.அம்மா..நேற்று அந்த அவார்ட் பங்கஷனுக்கு போய்ட்டு வந்ததில் இருந்தே இப்படித்தான் இருக்காங்க!”

 

அப்படி அங்க என்ன நடந்தது? என்றார் பிரபும்…. சுருங்கிய நெற்றியுடன்.

 

ம்ம்ம்..உங்க பையன் அவார்ட் வாங்குனான்..அப்பறம்…எனக்கு பேசவேத் தெரியாதுன்னு சொல்லிட்டு..அங்க போய் ஒரு மொக்கையப் போட்டான்.இதுதான் டாடி நடந்தது.அனேகமாய் அருள்…அங்கு மேடையில் அருளிய வார்த்தைகளை கேட்ட எத்தனை பேர் இன்னைக்குத்  தூக்கு மாட்டி செத்தாங்களோ…!  ஹிம்ம்ம் அது அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்..என்றாள் தீபா பெருமூச்சுடன்.

 

அவளின் காதைப் பிடித்த சுதா..” ஏய்..! வாலு..என் பையன் பேசியது ஒன்னும் மொக்கையா இல்லை.அவன் பேசி முடித்ததும்…உலக மகா..பாசமலர் போல நீ….போய் அவனை கட்டிகிட்டு குதிச்சயே…! அதுதான் மொக்கையா இருந்தது…”என்று சொல்ல..

 

அவரிடம் இருந்து விலகி…அவரைப்பார்த்து வக்கனை காட்டியவள்..”என் அண்ணன் ..நான் கொஞ்சுறேன்…அது மாதிரி…உனக்கு அண்ணன் இருந்தா..நீ போய் செல்லம் கொஞ்சு சுதா”….அதை விட்டுட்டு இப்படி எங்களைப் பார்த்து கண்ணு வைக்கக் கூடாது ..சரியா? என்றபடி சிட்டாய்ப் பறந்து விட்டாள் தீபா.

 

தீபாவின்..”உனக்கு அண்ணன் இருந்தா நீ போய்  செல்லம் கொஞ்சு ..”  என்ற வார்த்தைகளே…சுதாவின் மனதில் சம்மட்டியாய்த் தாக்கியது.

 

இதை எதும் அறியாத ..முரளி..”சுதா…ரொம்ப அசதியா இருக்கு…நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்மா” என்றபடி உள்ளே சென்று விட்டார்.

 

சுதாவின் மனதில் இருப்பதை யார் அறிவார்?

 

சூர்யாவின் வீட்டில் மகேஷ்வரியின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.சூர்யா தூக்கிய முகத்தை..தூக்கியவாறே வைத்திருந்தான்…!தன் கோபத்தை வெளிப்படையாகத் தன் தாயிடம் காட்டவும் அவனால் முடியவில்லை.அதனால் பேசாமல் இருந்து விடுவதே மேல் ! என்ற ரீதியில் அமர்ந்து இருந்தான்.

 

என்ன சூர்யா? நான் தான் இவ்வளவு..சொல்றேன்லப்பா…அதுக்கு அப்பறம் இப்படி உம்முன்னு இருந்தா எப்படி? என்றார் ஆதங்கமாய்.

 

அதற்கும் அவனது மௌனமே விடையாய் அவருக்குக் கிடைக்க..பொருமை இழந்தவர்    “இப்ப உனக்கு என்ன தெரியனும்?”  என்றார் . 

 

பெத்த மகன் விருது வாங்குறதைக் கூட பார்க்க அவசியம் இல்லாமல்..அப்படி என்ன உங்களுக்கு முக்கியமான வேலை? என்றான் அமைதியாய்.

 

மகேஷ்வரி அமைதியாய் இருக்க…”ஆவேசம் வந்தவனாய் கத்தத் தொடங்கினான் சூர்யா.சொல்லுங்கம்மா…அப்படி என்ன முக்கியமான  நாள் உங்களுக்கு?..அதுவும் என்கிட்ட கூட சொல்ல முடியாதபடி..!எனக்குன்னு இருக்கறதே நீங்க மட்டும் தான்…நீங்களும் வராம…நான் மட்டும் தனியா போய் அந்த விருதை வாங்கவா…,,,இப்படி நாயா உழைச்சேன்சாப்பாடு ,தூக்கம்ன்னு பார்க்காம..,, இப்படி முன்னுக்கு வந்தேன்?சொல்லுங்கம்மா…இப்ப சொல்லப் போறிங்களா? இல்லையா? என்றான் கோபத்தை அடக்க முடியாதவனாய்.

 

அவனை ஒரு நிமிடம் வேதனையான பார்வைப் பார்த்தவர்…” இப்ப என்ன உனக்கு நான் எங்க போனேன்னு தெரியனும் அவ்வளவு தான…நேற்று …உங்கப்பா..! இறந்த நாள்!!.அதுதான் மனம் அமைதி இல்லாம இருந்தது.கற்பகாம்பாள் கோவிலுக்குப் போய் என் கவலைகளை எல்லாம் தீரும் அளவுக்கு…அந்த தாயோட காலடியில் என் கண்ணீரை இறக்கி வச்சுட்டு வந்தேன்”.  அந்த கவலையோட வந்து உன் சந்தோஷத்தையும் ஏன் கெடுக்கனும் அப்படின்னுதான் சூர்யா…,,நான் வரலை.என்றார் மகேஷ்வரி.

 

சாரிம்மா…சாரி..சாரி…ஆனா என் கிட்ட சொல்லி இருந்தா நான் வந்து இருப்பேனே…! என்றான் சூர்யா.

 

மகேஷ்வரி..  “இதை விட…உனக்கு நேற்று முக்கியமான நாள் இல்லையா…சூர்யா..? நேற்று நீ வாங்கிய விருது..உன்னுடைய இத்தனை வருட உழைப்புக்கு அங்கிகாரம்.அதை ஒரு தாயா என்னால் எப்படி தடுக்க முடியும்.அதுமட்டும் இல்லாம..இது வருஷா வருஷம் செய்றதுதான்.ஆனா அப்ப எல்லாம் …நான் எங்க போறேன்..வரேன்னு கேட்க கூட உனக்கு நேரம் இருந்ததில்லையே கண்ணா! அதான் இந்த வருடமும்..எப்பவும் போல ..நான் மட்டும் அந்த கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்…சூர்யா..!!  என்றார் அமைதியாய்.

 

தன் தாயின் வேதனை அறிந்து …அவர் கைகளை மெதுவாய் வருடியபடி ..அவரின் அருகிலேயே அமர்ந்து இருந்தான் சூர்யா.

 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாய் இருந்தது.சுதாவிற்கு மனம் ஏனோ பாரமாக இருந்ததால் ..அன்று அனைவரும் கோவிலுக்கு வந்திருந்தனர்.அதிலும் தீபா..ஒரு இடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் ஆடிக்கொண்டிருக்க….சுதா எங்கிருந்த கோபத்தை தீபாவின் மீது காட்டினார்.

 

தீபா….!!ஆடாமா இரு…எப்ப பாரு பொம்பளைப் பிள்ளை ஆடிக்கிடே இருக்க கூடாது.நாளைக்கு கல்யாணம் பண்ணிப் போற இடத்துல இப்படியே ஆடிக்கிட்டு இருந்தா…உன் புகுந்த வீட்ல என்னதான் பேசுவாங்க…பொண்ண எப்படி வளர்த்து வச்சு இருக்காங்க பாருன்னு”   என்று சிடுசிடுத்தார் சுதா.

எப்பொழுதும் அன்பாய் பேசும் தன் அம்மா இன்று சிடுசிடுக்கவும் தீபாவிற்கு முகம் விழுந்து விட்டது.அவளது முகத்தைப் பார்த்த அருள் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு அவளை சீண்டினான்.”விடுடா செல்லக் குட்டி..நாம இப்ப..நேத்தா ..திட்டு வாங்குறோம்..இல்ல இதெல்லாம் நமக்கு புதுசா…நாம வாங்காத அடியா” என்றான் வடிவேல் பாணியில்.

 

டேய்..! ஒழுங்கா போய்டு….! இல்ல….நான் பத்ரகாளியா மாறிடுவேன்…..ஏன்றாள் கோபமாய்.

 

சரிடா…விடு…அம்மா ஏதாவது டென்சன்ல இருந்துருப்பாங்க…அதெல்லாம் பெரிசா எடுத்துக்கக் கூடாது…என்றான் அருள்.

 

டேய்,..! எருமை…நான் எங்கடா சீரியசாய் எடுத்துகிட்டேன்..நீதான் இப்ப தேவை இல்லாம சீனைப் போடுற…என்றாள் கடுப்பாய்…என்றாள் தீபா.

 

சரி விடு நான்தான் அவுட்…என்றான் அருள் கர்ம சிரத்தையாய்.

 

அவனது பாவனையில் சிரித்த தீபாவின் முகம் பழைய நிலைக்கு திரும்பி இருந்தது கண்டு…அருள் புன்னகைத்தான்.

 

இதுதான் அருள்.தங்கையின் முகம் ஒரு நொடி வாடினாலும் அவனால் தாங்க முடியாது.பாசமலர்,திருப்பாச்சி க்கு அடுத்து….வரும் பாச மலர்கள் இவர்கள் தான் என்னும் அளவிற்கு ..தீபாவின் மேல் அருளுக்குப் பாசம்.அதே போல், தீபாவிற்கும் தொட்டதற்கெல்லாம் அருள் வேண்டும்.அவள் அம்மா என்று அழைத்தை விட அண்ணா என்று அழைத்ததுதான் அதிகம்.அருளுக்கு கோபம் அவ்வளவு சீக்கிரம் வராது.அப்படி வந்தால்…அது தீபா சம்பந்தப் பட்டதாக இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்….அவ்வளவு அன்பு..இவர்களின் அன்பைப் பார்க்கும் சுதாவிற்கு கூட..தன் பிள்ளைகள் என்பதை மறந்து சில சமயம் பொறாமையாய் இருக்கும்…தன் அண்ணனை நினைத்து..”

 

ஐயர்….தீப ஆராதனைக் காட்ட….அனைவரும் கண்மூடி ஒரு மோன நிலையில் லயித்திருந்தனர்.தீபா எப்பொழுதும் போல் அனைவருக்காகவும் வேண்ட…சுதாவோ…தன் குழப்பத்தை எல்லாம் தீர்த்து வைக்குமாறு அம்மனிடம் மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தார்.

 

அருள் …தன் வேண்டுதலை முடித்து கண் திறக்க…அவனுக்கு எதிரில் தேவதையாய் நின்றிருந்தாள் நிலா.

 

அவளைப் பார்த்த அருளுக்கு அந்த மாலைப் பொழுதே ரம்மியமானதைப் போல் தோன்றியது.நிலாவை அவன் இங்கு சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.இன்ப அதிர்ச்சியுடன்..அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் .

 

சாமி கும்பிட்டு முடித்த நிலாவும் எதிர் வரிசையில் நின்றிருந்த அருளைப் பார்த்துவிட்டாள்.அவனைப் பார்த்த உடன் அவளுக்கு அவனை நியாபகம் வர…மெல்லிதாய் ஒரு புன்னகையை சிந்தினாள்.அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த அருளுக்கு மனம் சிறகில்லாமல் பறந்தது.

 

அனைவரும் பிரகாரம் சுற்றி வந்து ஒரு இடத்தில் அமர….சுதா மட்டும் தனக்கு தெரிந்த ஒரு பெண்மணியை எதேச்சையாய் சந்திக்க…. அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

 

அருளும்..தீபாவும் அமர்ந்திருக்க…அருள்..நிலவைத் தேடிக் கொண்டிருந்தான்.எங்க போய்ருப்பா..பிரகாரம் சுத்தி வரதுக்குள்ள காணாம போய்ட்டா என்று மனதினுள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே….ஹல்லோ ஜென்டில்மேன்..என்ற சத்தம் பின்னால் இருந்து கேட்க…திரும்பிப் பார்த்த அருள்..நிலாவைப் பார்த்து அதிர்ந்தான்.

 

என்னவா கூப்பிட்டிங்க..? என்றான் கேள்வியாய்.உங்களைத்தான் கூப்பிட்டேன்…என்றாள் நிலாவும் அசராமல்.

 

யாருடா..?பிகர் சூப்பரா..இருக்கு…நீ ஒரு பன்னாடைன்னு தெரியாம உன்ன பார்த்து ஜெண்டில்மேன்னு வேற சொல்லுறா..என்ன நடக்குது இங்க..!..தீபா..அருளின் காதில் ரகசியமாய்.

 

அவளைப் பார்த்து பல்லைல் கடித்தவன்…நான் உனக்கு பன்னாடையா…வீட்டுக்கு வாடி இருக்கு உனக்கு..!என்று அவளைப் போல் காதோரத்தில் சொல்லியவன்..,,நிலாவின் பக்கம் திரும்பி புன்னகைத்தான்”.

 

அருள்..”நீங்க எங்க இந்த பக்கம் என்றான் ?” எதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக….

 

ம்ம்..அதுவா..சினிமாப் பார்க்கலாம்ன்னு வந்தேன் …!என்றாள் நிலா சீரியசாய்.

 

என்ன ..என்று அதிர்ந்தவன்…சிறிது யோசித்து அவள் பதிலில்…உள்ள நக்கலை எண்ணி சிரித்தான்.சாரிங்க..கோவிலுக்கு வந்தவங்களைப் பார்த்து..நான் இப்படி கேட்டு இருக்கக் கூடாதுதான் ..! என்றான் சிரிப்புடன்.

 

தெரிந்தா சரி….என்றாள் நிலா….!”

 

ஆமா என் பேரு நிலா…உங்க பேர்..என்றாள் நிலா”.

 

நிலா….நிலா…! என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான் அருள்”.

 

உங்களைத்தான் என்ற நிலாவின் கேள்வியில் மறுபடியும் நினைவுக்கு வந்தவன்….நான் அருள்..இது என் தங்கை தீபா..! என்று தன்னையும்..தீபாவையும் அறிமுகப் படுத்திக் கொண்டான்.

 

அப்பறம் உங்ககிட்ட ..ஒரு சாரி..ஒரு தேங்க்ஸ் சொல்லனும் என்றான் நிலா.

அருள் கேள்வியாய் அவளை நோக்க….”அது அன்னைக்கு நடந்த ஆக்ஸிடண்ட்…அது என்னாலதான்..அதுக்கு சாரி..அப்பறம் அந்த சிடுமூஞ்சிகிட்ட இருந்து என்ன காப்பாற்றியதற்கு தேங்க்ஸ்.என்றாள் நிலா தலையசைத்து..!”

 

ஹா..ஹா…நான் கூட என்னவோ ஏதோன்னு நினைத்தேன் என்றான் சிரிப்புடன் அருள்.

 

அவளும் சிறிது புன்னகைத்து….”உங்க தங்கை தீபா அழகா இருக்காங்க..!” என்று சொல்ல..தீபா..அழகாய் வெட்கப்பட்டாள்.

 

அவளைப் பார்த்த அருள்..” என் தங்கை இப்படித்தாங்க…சின்ன சின்ன பொய்க்கு எல்லாம்…வெட்கப்படுவாள்” என்று காலை வாற…தீபா அவனை மொத்து மொத்து என்று மொத்தினாள்.

 

சரி நான் கிளம்பறேன்.வீட்ல அம்மா தேடுவாங்க…வரேன் அருள்..வரேன் தீபா என்று விடை பெற்றவள்..சிட்டாய்ப் பறந்து விட்டாள்.

 

சிட்டாய்ப் பறந்தவள்…அருளின் மனதிலும் தென்றலின் குழுமையை வீசிச் சென்று விட்டாள்…!

 

நிலா தனது ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.அவள் ஒரு திருப்பத்தில் திரும்ப..,,அந்த இடமே ரணகளமாய் காட்சியளித்தது…!

 

இரண்டு கட்சிகளுக்கு இடையேயான…கோஷ்டி மோதல் தான் அங்கு நடந்து கொண்டிருந்தது.வண்டிகளில் கல் எறிதல்…வரும் வண்டிகளை அடித்து நொருக்குதல்…அடி தடி இப்படி அனைத்தும் அங்கு நடந்து கொண்டிருக்க….அதனைக் கண்ட நிலா திகைத்தாள்.

 

கடவுளே..இதுவேறா…இவனுகளுக்கெல்லாம்…,,ஒரு தலைவனும் செத்துடக் கூடாது….,,ஒருத்தனையும் கைது பண்ணிடக் கூடாது.உடனே…கிளம்பிடுவானுங்க….கல்லையும்…கத்தியையும் தூக்கிகிட்டு…,,அப்படி என்னதான் வெறியோ..? இந்த சமுதாயம் எங்க போட்டு இருக்கு? என்று மனதினுள் பொருமினாள் நிலா.

 

சமுதாயத்தை பத்தி அப்பறம் யோசிக்கலாம்..இப்ப எப்படி இங்க இருந்து போறதுன்னு முடிவு பண்ணு..நிலா..என்று அவளது மூளை அவளுக்கு கட்டளைப் பிறப்பித்தது.

 

வேறு வழி எதும் இல்லாததால் தைரியமாய் செல்ல முடிவு எடுத்தாள் நிலா.அங்கு ஒன்று இரண்டு வண்டிகளும்..கார்களும்..சென்று கொண்டிருந்ததே அவளது அந்த முடிவிற்கு காரணம்.என்னதான் திடமாக வண்டி எடுத்தாலும் ..,மனதிற்குள்  நிலாவிற்கு உதறல் எடுத்தது.எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவள் செல்ல… விதி வேறு விதமாய் தன் ஆட்டத்தைத் தொடங்கியது.

 

கலவரம் பெரிதாவதற்கான அத்தனை அறிகுறிகளும்…,அந்த சாலையில் தெரிந்தது..நிலா அந்த கலவரத்தில் மாட்டாமல் இருக்க..,,ஒரு குறுக்கு சந்தினுல் வண்டியை விட்டாள்.

 

அவளது கெட்ட நேரமோ என்னவோ…! கலவரக்காரர்கள்..சந்து பொந்தையும் விட்டு வைக்கவில்லை.நிலா அதிலிருந்து நேக்காக..தப்பித்து வர…,,அந்த இடத்தை கடந்து செல்லும் இறுதி நேரத்தில்…கலவரக்காரர்களால் எறியப்பட்ட கல்..நிலாவின் தலையைப் பதம் பார்த்தது.

 

அவளை நோக்கி கல் செல்லும் போதே..,, அவ்வழியாக வந்த சூர்யா அதைக் கண்டு…தடுக்கப் போகும் முன்…இந்த செயல் நடந்து முடிந்திருந்தது…!அதே நேரத்தில் சூர்யாவின் காரும் அவர்களால் ..சூரையாடப்பட்டது.பின்புற கார் கண்ணடி  முழுதும் உடைய…அவன் வேகமாய் காரை விட்டு இறங்கி…நிலாவை நோக்கி சென்றான்.

 

கல் பட்ட அதிர்ச்சியில் …நிலா மயங்கி விழப் போக…,,சூர்யா அவளைத் தாங்கிப் பிடித்தான்.தன் நினைவு தப்பும் வேளையிலும் நிலாவிற்கு தன்னை யாரோ பிடித்து இருக்கிறார்கள் என்று உள் மனம் உறுத்த..,,வேகமாய் விலகப் பார்த்தாள்.ஆனால் அவனின் பிடி இரும்புப் பிடியாய் இருந்தது.

கண்ணைத் திறந்து…லேசாகப் பார்த்தவள்..” தான் சூர்யாவின் பிடியில் இருப்பதைப் பார்த்து முற்றிலும் விலகப் பார்த்தாள்.அவளது விலகல்…சூர்யாவிற்கு பெரும் கோபத்தை விளைவித்தது.அவளை அப்படியே விட்டு விட்டு போய்விடலாமா என்று நினைத்தவன்…மனசாட்சி உருத்த….அவளை அப்படியேத் தூக்கியவன்…தன் கார்லேயே  அவளை கிடத்தினான்.காரின் கண்ணாடி உடைந்ததையும் பொருட்படுத்தாது…புயல் வேகத்தில் காரை எடுத்தான்.

 

டேய்…நிறுத்துடா….வண்டிய நிறுத்துடா….கருவாப்பயலே..! என்று அவள் பாதி நிதானத்தில் புலம்ப…அவளின் கருவாப்பயலே..! என்ற வார்த்தையில்…சூர்யாவிற்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.

 

மவளே …! இருக்குடி உனக்கு…பாவமேன்னு உதவி பண்ண வந்தா…ஏதோ ரேப் பன்ற ரேஞ்சுக்கு கத்துற,…இதுல நான் உனக்கு கருவாப்பயலா..! என்று கத்தினான்.

 

அவனது கத்தல்..அந்த நிலையிலும் கூட நிலாவின் உடலை அதிர வைத்தது.அவள் பயந்து சீட்டின் மூலையில் ஒதுங்க…அவளது ஒதுக்கம் அவனின் கோபத்தை இன்னமும் அதிகப்படுத்தியது.

 

அங்கு நிலாவின் வீட்டில்…”கோவிலுக்கு சென்று வருகிறேன் என்று சொல்லி சென்ற மகள் ..இன்னமும் வந்து சேராதது …நிலாவின் அம்மா…மாலாவிற்கு…பயத்தை ஏற்படுத்தியது.அவரது பயத்திற்கு நிலாவின் அசட்டுத் துணிச்சலும் ஒரு காரணம்”.

 

அங்கு அருளின் வீட்டில் நிலாவை பற்றிய….இனிமையான நினைவுகளில் மூழ்கியிருந்தான்.

 

வாழ்க்கை இவர்களுக்கு வைத்திருப்பது என்ன?

 

 

முகவரி 4:

 

அன்னை நர்சிங் ஹோம்..என்ற பெயர் தாங்கிய வரவேற்பு பலகை., சூர்யாவையும்..நிலாவையும் வரவேற்றது.

 

தலையில் இருந்து ரத்தம் வழிந்த போதிலும் நிலா தன் நினைவை முழுவதுமாக இழக்கவில்லை.அவளை உள்ளே அழைத்து செல்வதற்காக..சூர்யா அவளை மறுபடியும் காரில் இருந்து தூக்கப் போக…,அதை அறிந்த நிலா…”இல்லை.., தேவை இல்லை..நான் நல்லாத்தான் இருக்கேன்.., என்னால் வரமுடியும்..,” என்று வீம்புடன் காரில் இருந்து இறங்கினாள்.

 

அவளது பதிலில்…சூர்யா ஒட்டு மொத்த கோபத்தையும் வாடகைக்கு எடுத்தான்.”இவளுக்கு என்னப் பார்த்தா எப்படித் தெரியுது.வேலை வெட்டி இல்லாதவன் போல் தெரியுதுதா…விட்டா ரொம்ப ஓவராப் பேசுறா…எனக்கு வேணும்…இவள அப்படியே அங்கயே விட்டுவிட்டு வந்துருக்கனும்..அப்ப தெரிந்திருக்கும் இவளுக்கு…அதை விட்டுட்டு..வேலியில் போண ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையா ஆகிவிட்டது”…என்று மனதிற்குள் புலம்பித் தவித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

 

இவனது புலம்பல்களை அறியாத நிலா..தட்டுத்தடுமாறி மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்.அவள் என்னதான் பார்த்துப் பார்த்து நிதானமாக நடந்த போதும்…அவளது உடல் நிலை அவளுக்கு ஒத்துழைப்பேனா ..! என்று அவளிடம் சண்டித்தனம் செய்தது.மறுபடியும் அவள் விழப் போக…சூர்யா ஓடிச்சென்று அவளைத் தாங்கிப் பிடித்தான்.

 

யானைக்கும் அடிசறுக்கும் கண்ணு..” என்று நிலாவின் காதின் அருகில் சொன்னவன்..அவளை…அழைத்துக் கொண்டு …உள்ளே சென்றான்.

 

வாடா ….மச்சான்..,எப்படி இருக்க…?பார்த்து ரொம்ப நாள் ஆகுது…”என்று, உரிமையோடு அழைத்தான் டாக்டர்..ஜினேஷ்.

 

நான் நல்லா இருக்கேண்டா….!நீ எப்படி இருக்க..,வீட்ல அம்மா,அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க..? என்று நலம் விசாரித்தாலும் சூர்யாவின் கண்கள் நிலாவின் அடிபட்ட தலையில் இருக்க…அதைப் புரிந்து கொண்ட ஜினேஷ்..முதலில் அவளுக்கான சிகிச்சையை ஆரம்பித்தான்.

 

பெரிய காயம் எல்லாம் ஒன்னும் இல்லை…நெற்றியில் ஏதோ கல் விழுந்த மாதிரி இருக்கு…? என்று ஜினேஷ் தான் ஒரு டாக்டர் என்று நிறுபித்தான்.”

 

சூர்யா நடந்ததை சொல்ல…,”ஹோ..பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை…டி.டி.இஞ்செக்க்ஷன் ஒன்னு போட்டு இருக்கேன்.மற்றபடி அவங்களுக்கு வந்த மயக்கம்…எல்லாருக்கும் படபடப்புல வர சாதாரண மயக்கம் தான்..என்றான் ஜினேஷ்.

 

இங்கு நடந்த எதிலும் கலந்து கொள்ளாமல்.., அவர்கள் பேசுவதைக் கேட்டவாறு அமைதியாய் அமர்ந்திருந்தாள் நிலா.

 

என்னடா சிஸ்டர் எதுவும் பேசாமல் அமைதியா இருக்காங்க..!..என்றான் ஜினேஷ்.உங்க ரெண்டு பேருக்கும் எதுல பொருத்தமோ இல்லையோ..!இப்படி அமைதியா..இறுக்கமா  ..இருக்குறதுல…பக்கா பொருத்தம்டா மச்சான் என்று…,”நிலாவை சூர்யாவின் காதலி என்று எண்ணி..,ஜினேஷ் தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான்.

 

டாக்டர்..,.!போதும் நிறுத்துங்க..! என்று கத்தினாள் நிலா.”யாருக்கு யாரு பொருத்தம்..! இவனுக்கு நானா..! நெவர்..இந்த ஜென்மத்துல நடக்காத விஷயம்..இந்த கருவாப்பயல தான் நான் கட்டிக்கனும்ன்னா..அதுக்கு.., நான் காலம் முழுக்க கன்னியாவே.. இருந்துடுவேன்.

 

ஏய்..! என்று கிட்டத்தட்ட உறுமினான் சூர்யா…”நான் என்னமோ..எனக்கு வாழ்க்கை குடும்மா..தெய்வமேன்னு  உன்கிட்ட வந்து கெஞ்சுன..மாதிரி பேசுற…உன்ன மாதிரி ஒரு திமிர் பிடித்தவளை..கல்யாணம் பன்றதுக்கு…நான் சன்னியாசியா போய்டலாம்…! எனக்கு வேணும்..உன்ன அங்கயே..அப்படியே விட்டுட்டு வந்து இருக்கனும்.ஒரு மனிதாபிமானத்துல இங்க கூட்டி வந்தேன் பாரு..என்ன சொல்லனும்.எனக்கு இது தேவைதான்…என்று பொரிந்தவன்…ஜினேஷின் பக்கம் திரும்பினான்.

 

டேய்…மேடம் பக்கத்து தெருதான்….இனி அவங்களே போய்டுவாங்கன்னு நினைக்கிறேன்.உன் உதவிக்கு ரொம்ப நன்றிடா..!என்று கையெடுத்து கும்பிட்டவன்…விருட்டென்று அவ்விடத்தை விட்டு நகன்றான்.”

 

உங்க சிகிச்சைக்கு ரொம்ப நன்றி டாக்டர்…என்று மொழிந்த நிலாவும்…, அவ்விடத்தை விட்டு நகன்றாள்.

 

இவர்களிடையே மாட்டிக்கொண்ட ஜினேஷ் தான்…இடுக்கில் மாட்டிய எலி என…..,என்னடா… நடக்குது இங்க…!   என்று மனதிற்குள் புலம்பியபடி…நின்றிருந்தான்.

 

நிலாவைக் இன்னும் காணவில்லை என்று  தவித்துக் கொண்டிருந்த மாலாவிற்கு..,தலையில் காயத்துடன் வரும் நிலாவைப் பார்த்த உடன் இதயம் எக்குத் தப்பாய் எகிறிக் குதித்தது.பல வருடம் குழந்தையின்றி பெற்றெடுத்த ஒற்றை மகவு…அவர்களின் உலகமே நிலாவைச் சுற்றிதான் இயங்குகிறது என்ற நிலையில்…அவளை இப்படிப் பார்த்த மாலாவின் கண்களில் கண்ணீர் அருவியெனக் கொட்டியது.

 

தூரத்தில் வரும் போதே..அவரது அழுகையைப் பார்த்த நிலா..தன் மடத்தனத்தை எண்ணி..தானே தன் தலையில் குட்டிக் கொண்டாள்.வேகமாக தாயின் அருகில் சென்றவள்…ஐயோ..!  அம்மா..எனக்கு ஒன்னும் இல்லை..ஒரு சின்னக் காயம் தான் ..! ஒரே ஒரு கல் என் தலையில் பட்டுவிட்டது..அவ்வளவுதான்.என்று அவரை சமாதானமாய் இறுக அணைத்தவள்..ஆமா..அப்பா..! எங்க..என்று கேட்டாள்.

 

மாலா வாயைத் திறப்பதற்குள்…, ஒரு வேளைத் தன்னைத் தேடி சென்றிருப்பாரோ..! என்று யோசித்தவள்..தனது போனைத் தேட…அப்பொழுதுதான் நியாபகம் வந்தது…ஹேண்ட் பேக்கை அவனது காரிலேயே விட்டுவிட்டு வந்தது…அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள்…வீட்டுப் போனில் இருந்து..தன் தந்தையை அழைத்து விவரம் சொன்னாள்.”

 

அம்மா..எனக்கு டயேர்டா இருக்கு…நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்ம்மா..அப்பா வந்து உடனே எழுப்புங்க..! என்று கூறிவிட்டு… தனது படுக்கையை நோக்கி சென்றாள் நிலா.

 

                             ————————

          

வாங்க தரகர் அய்யா..! வாங்க.., என்று முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார் சுதா.

 

வரேன்ம்மா…ஆத்துல எல்லாரும் சௌக்கியமா  இருக்கேளா..! என்றார் தரகர்.

 

எல்லாரும் நல்லா இருக்கோம் தரகர் அய்யா…உங்க வீட்ல எல்லாரும் நலம் தானே..! என்றார் சுதா.

 

எல்லாரும் பேஷா இருக்கா…நான் இப்ப இங்க எதுக்கு வந்தேன்னா….நம்ம தீபா பாப்பாவுக்கு நல்ல வரன் எதாவது இருந்தா சொல்லச் சொல்லி கேட்டு இருந்திங்க..இல்லையா..ஒரு நல்ல வரன் வந்து இருக்கு..என்றார்.

 

சுதாவின் முகம் முழுதும் சந்தோஷத்தின்  ரேகைகள் வேகமாய்ப் பரவியது.”பையன் நல்ல பையனா..ஐயா.!குடும்பம் நல்ல குடும்பமா..என்றார் சுதா தனது அடுத்தடுத்த கேள்விகளுடன்.

 

ரொம்ப நல்லக் குடும்பம்….பையனும் ரொம்ப தங்கமான பையன்.எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.சொந்த தொழில் தான் …எம்.பி.ஏ வரைக்கும் படிச்சுருக்கான்.நம்ம தீபாவுக்குப் பொருத்தமா இருப்பான்.பையனுக்கு அம்மா மட்டும் தான்..அப்பா கிடையாது. பையன் சின்ன வயசா இருக்கும் போதே தவறிட்டார்.என்றார்.. முழு விவரங்களுடன்.”

 

நீங்க சொல்றதப் பார்த்தா…, எனக்கும் இந்த சம்பந்தம் அமையும்ன்னு தான் தோணுது…அவர் வந்த உடனே…அவர்கிட்ட கலந்து பேசிட்டு தகவல் சொல்றோம் அய்யா.பிறகு ஒரு நாள் பொண்ணு பார்க்க வர சொல்லுங்க…பொண்ணுக்கும் பையனுக்கும் பிடிச்சிருந்தா….இந்த கல்யாணம் முடிந்த மாதிரிதான்..என்றார் சுதா..எல்லாமே முடிவானது போல்..”

 

யாரின் விதி யாருக்கென்று….!

 

வீட்டில் தூங்க செல்கிறேன் என்று சொல்லி சென்ற நிலாவிற்கு தூக்கம் மட்டும் ஏனோ வரவில்லை.

 

இன்று மாலையில் இருந்து நடந்த சம்பவம் அவளைத் தூங்க விடவில்லை.நான் ஏன் இப்படி இருக்கேன்.அவன் எனக்கு உதவி செய்யத்தான வந்தான்..பிறகு நான் ஏன் அவனை அப்படிப் பேசுனேன்..என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

 

நீ பேசியது சரிதான் நிலா.அவன் என்ன சிரிச்சுகிட்டேவா வந்து உனக்கு உதவி செய்தான்.ஏதோ வேண்டா வெருப்பா..உதவி பண்ணனுமே அப்படின்னு ஏதோ பேருக்கு உதவி பண்ணினான்..அவனுக்கு எல்லாம் நீ பேசினது தான் சரி..” என்று கூவியது நிலாவின் மற்றொரு மனம்.

 

ஆமாமா..அதுதான் சரி…அவனும் அவன் மூஞ்சியும்..எப்பபாரு குரங்கு மாதிரியே வச்சுருக்கான் முகத்தை..

 

என்று நினைத்தவள்…மனதில்.., அன்று மாலை கோவிலில் பார்த்த அருளின் முகம் தேவை இன்றி நினைவுக்கு வந்தது.அருளின் முகத்தைப் பார்த்தாலே…கோபமாய் இருப்பவர்கள் கூட அமைதியாகி விடுவர்…அப்படி ஒரு இனிமையான சுபாவம்..அவன் தங்கை ..பேர் கூட என்னவோ சொன்னானே…ஆங் தீபா….பெயருக்கு ஏத்த மாதிரி..தீப ஒளி போன்ற அழகு..! என்று தேவை இல்லாமல் அருளையும் சூர்யாவையும் மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.

 

இப்ப என்ன நிலா….!ரெண்டு பேர்ல..நல்லவங்க யாரு….அரக்கன் யாருன்னு பட்டிமன்றம் நடத்தி பரிசா கொடுக்கப் போற..என்று அவளது மனசாட்சி அவளிடம் கேள்வி கேட்க…கப்..சிப் என்று அடங்கினாள் நிலா.”

 

அருள் வீட்டினுள்  நுழையும் போதே…சோகமாய்..சோபாவில் அமர்ந்திருந்த தீபாவின் முகம் தான் தென்பட்டது.

 

வேகமாய் அவன் அருகில் சென்றவன்..”ஏய் குட்டிமா..என்ன சோகமா இருக்கிங்க..! அம்மா அடிசுட்டாங்களா…என்றான்  வேண்டுமென்றே..”

 

அவனைப் பார்த்து முறைத்த தீபா…பின் எதுவும் பேசாமல் அமைதியாகவே..அமர்ந்து இருந்தாள்.அவளை இப்படி விட்டாள் சரிப்படாது என்று நினைத்த அருள்….”குட்டிமாக்கு என்னடா ஆச்சு…!ஏன் இப்படி இருக்கிங்க…அண்ணாகிட்ட சொல்லக் கூடாதா..! என்றான் உண்மையான பாசத்துடன்.

 

அவன் அப்படிக் கேட்டதுதான் மாயம்..!அவன் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கினாள் தீபா.அவளது அழுகையைப் பார்த்த..அருளுக்கு விஷயம் என்னவென்று விளங்கவில்லை.

 

அம்மா..!அம்மா! என்று வீடே அதிரும் படி கத்தினான் அருள்.

 

இதோ வந்துட்டேன் கண்ணா..என்றவாறு வந்த சுதா….தீபா அழுது கொண்டு நிற்பதையும்…அருள் கோபமாய் நிற்பதையும் பார்த்து….”என்ன…வந்த உடனே சண்டையா..? ரெண்டு பேருக்கும் என்றார்.”

 

அம்மா…! என்று பல்லைக் கடித்தவன்…”தீபுவ ..என்ன சொன்னிங்க.. ஏன் இப்படி அழறா..என்றான் கோபமாய்.

 

டேய்..! நான் ஒன்னும் சொல்லைடா….நான் இவ்வளவு நேரம் சமையல் கட்டுல வேலையா இருந்தேன்..என்றார் சுதா பதிலுக்கு.

 

தீபாவின் பக்கம் திரும்பிய அருள்….” அம்மாவும் ஒன்னும் சொல்லைன்னா..வேற யார் என்ன சொன்னாங்க…என் அம்முக் குட்டிய..? என்றான்.”

 

அண்ணா.. அம்மா,…அம்மா…என்று தேம்பித் தேம்பி அழுதவள்….,,அருள்அம்மா,.!” என்று  எடுத்துக் கொடுக்க..,அம்மா…எனக்கு கல்யாணம் பண்ணப் போறாங்களாம்…! என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.

 

அவள் சொல்லி முடிக்கவும்..அருள் விழுந்து விழுந்து சிரிக்கவும் சரியாக இருந்தது.வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பதைப் பார்த்த தீபாவிற்கு….,மூக்கிற்கு  மேல் கோபம் வந்தது.

 

ஏண்டா..எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுக்கப் போறாங்கன்னு சொல்றேன்…நீ கொஞ்சம் கூட கவலை இல்லாம சிரிக்குற,…என்று அவன் முடியைப் பிடித்து ஆட்டி எடுத்தாள்.

 

ஸ்ஸ்ஹா…வலிக்குதுடி…விடுடி….என்று..அவள் கையை எடுக்க..தீபா அருளை நன்றாக மொத்தத் தொடங்கினாள்.ஒரு கட்டத்தில் அடித்து ஓய்ந்தவள் மறுபடியும் அழத் தொடங்கினாள்.

 

அருள்..”தீபுக் குட்டி..இங்க பாருடா…இன்னைக்கு இல்லன்னாலும் …என்னைக்காவது நீ கல்யாணம் பண்ணித்தானே ஆகனும் ..! என்று கேட்க..தீபா ஆம் என்று தலை ஆட்டினாள்.”

 

என்னைக்காவது பண்ண வேண்டிய கல்யாணத்தை…நீ ஏன் இப்பவே பண்ணிக்கக் கூடாது.உன்ன உள்ளூர்ல தான் கல்யாணம் பண்ணிக் கொடுப்போம்…அதுவும் ரொம்ப பக்கத்துலயே தான்…சரியா…அப்படி ஒரு மாப்பிள்ளை வந்தாதான் கல்யாணம்…இல்லைன்ன வர மாப்பிள்ளைய… அடிச்சு துரத்திடுவோம் சரியா..!என்றான் அருள் …,,சின்னக் குழந்தைக்கு சொல்வது போல்.

 

தீபாவிற்கு எது புரிந்ததோ இல்லையோ..கல்யாணம் பண்ணினாலும்..தான் தன் குடும்பத்தை விட்டு வெகு தூரம் செல்ல தேவை இல்லை என்ற விஷயமே…அவளை அமைதிப் படுத்தியது. அதுவரை அவளது முகம் அழுகையில் இருந்து..அமைதிக்கு வந்ததைப் பார்த்த அருளுக்கு..இப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.

 

இவர்களின் பேச்சைக் கேட்ட சுதா.., “நல்ல… அஅ..பிள்ளைங்க..!என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.”

கண்ணுக்கு மை அழகு…

கவிதைக்கு பொய் அழகு..

மாலாவுக்கு இந்த நிலா அழகு.. 

என்று தன் தாயையும் வைத்துக் கொண்டு …தன் ஒப்பனைகளை முடித்தாள் நிலா.ஒப்பனை என்று பார்த்தாள் எதுவுமில்லை.,,அடர் நீல வண்ண ஜீன்ஸ்,வெள்ளை நிற..டாப்ஸ்,,காதுகளில் ஒரு சிறிய அளவிலான நவீன கம்மல்,ஒரு கிளிப்பில் அடக்கிய கூந்தல்..இது மட்டும் தான் நிலாவின் ஒப்பனை.

 நிலாவையேப் பார்த்துக் கொண்டிருந்த மாலாவிற்கு..,நிலாவின் அழகு ஒரு புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்,மறுப்புறம் கவலையையும் கொடுத்தது.இந்த அழகினால் எதும் பிரச்சனை தன் மகளுக்கு வந்து விடக் கூடாதே..!” என்ற ,எல்லாத் தாய்மார்களின் வழக்கமான கவலை தான் அது.

 அம்மா..!என்று நிலா ஒங்கி அழைத்த பின்னர் தான் மாலா..நிஜ உலகிற்கு வந்தார்.

 நிலாவைப் பார்த்து என்ன என்று கேட்டவர்..அவளின் தலையை பரிவாக வருடி விட்டார்.

ஐயோ..! அம்மா..போதும் ..நான் இன்னைக்குதான் முதன்முதலா ஆபீஸ் போறேன்..அதனால் இன்னைக்கும் வழக்கமான உங்கள் பல்லவியைப் பாடாமல்…என்ன அனுப்பி வைங்கம்மா…என்றாள் அப்பாவியாய்.

 அவள் சொல்லி முடிக்கவும்.., பக்கத்து வீட்டு வாண்டு வரவும் ,,மாலாவின் முகம் கடினத்தைக் காட்டியது.

 ஆனால் வந்த வாண்டுவோ அதை எல்லாம் கண்டு கொள்ளாது..,”நிலா..நீ இன்னைக்கு முதன் முதலா ஆபீஸ் போற இல்ல…அதான் உன்ன ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…நம்ம சங்கத்துல எல்லாரும் வரதாத்தான் இருந்தது.இருந்தாலும்… என்று தயங்கி ….,,,மாலாவின் பக்கம் தன் பார்வையை செலுத்தியவன்,நிலாவிடம் திரும்பி..,ஆண்ட்டிக்கு பயந்துகிட்டு தான் யாரும் வரலை..!.எனக்கு மனசு கேட்கலை..அதான் வந்தேன்.., என்றான் பெரிய மனித தோரணையில்.

 

அவனது பேச்சில் .,மாலாவிற்கே..சிரிப்பு வந்தது.இருந்தாலும் அடக்கிக்கொண்டு அவனைக் கோபமாகப் பார்க்க…”நிலா குனி என்ற வாண்டு அவளது கன்னத்தில் ஒரு முத்தத்தை தந்து விட்டு,,நிலாவின் காதில் ரகசியமாய் ஏதோ சொல்லிவிட்டு ..,ஓடிவிட்டான்.”ஆனால் நிலாவிற்கு தான் சிரிப்பு தாங்க முடியவில்லை.

 

அவள் சிரிப்பதைப் பார்த்த மாலா…”அவன் காதில் என்ன சொன்னான் ?”என்று கேட்க…நிலா  சிரித்தபடி,”ஆண்ட்டி முகத்துல ஆப்பாயிலே போடலாம்..அவ்வளவு சூடு ” என்று அவன் சொன்னதை சொன்னால்., எப்படியும் அம்மா காண்டாகிவிடுவார்..என்று நினைத்த நிலா..,,ஒன்னும் இல்லைம்மா…உங்களை ரொம்ப நல்லவங்கன்னு சொன்னான் என்றவள்..எனக்கு நேரம் ஆச்சுமா..நான் வரேன் என்றபடி சிட்டாய்ப் பறந்தாள்.

 

அங்கு சூர்யா ஆபீஸில் நடை பழகிக்கொண்டிருந்தான்.அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவிற்குதான் மண்டை காய்ந்தது.பொருத்து பொருத்து பார்த்தவன்.., சூர்யா..! என்று அழைக்க..,அவனது அழைப்பில் நின்று ஜீவாவைப் பார்த்தவன் மறுபடியும் நடக்கத் தொடங்கினான்.அவனது முகம் மட்டும் பாறையாய் இருந்தது.

 

கிளிஞ்சது கிருஷ்ணகிரி..,இப்ப எதுக்கு இந்த நடை நடக்குறான்.. கேட்டாலும் ஆகாத பொண்டாட்டிய முறைக்கிற மாதிரி முறைக்கிறான்.நில நடுக்கம்..,சுனாமி வரதக் கூட இப்ப எல்லாம் முன்னமே சொல்லிடறாங்க..ஆனா இவன் மட்டும் எப்ப எப்படி இருப்பான்னே சொல்ல முடியலை…கடவுளே..” என்று கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான் ஜீவா.

 

திடீரென்று ஜீவாவின் முன் நின்ற சூர்யா..” டேய்..! நீயே சொல்லு..,நான் இதுவரைக்கும் அம்மாக்கு ஏதாவது குறை வச்சுருக்கேனாடா..? என்றான்”.

 

அவன் எதற்குக் கேட்கிறான் என்று தெரியாத பொழுதும் ,இல்லை..என்று ஜீவாவின் தலை தானாக ஆடியது.

 

அப்பறம் எதுக்குடா..,நேத்து நைட்..,அம்மா ..! தனியா உட்கார்ந்து அழுதுட்டு இருந்தாங்க..? என்றான் ஜீவாவைப் பார்த்து.”

இந்த செய்தி ஜீவாவிற்கு புதிது.”அம்மா..அழுதாங்களா..!என்றான் ஜீவாநம்ப முடியாமல்.ஜீவாவிற்குத் தெரிந்து மகேஷ்வரி அழுததே கிடையாது.

 

அவ்வளவு மனதிடம் உள்ளவர்.எதற்கும் லேசில் கலங்க மாட்டார்.அப்படிப்பட்டவங்க எதற்கு அழனும்..என்று யோசித்தான். இருந்தாலும் அவனுக்கு எதுவும் புலப்படவில்லை.”

 

சரி அழுதாங்க…நான் போய் கேட்டப்ப..,,ஏன் அவசர அவசரமா கண்ணைத் துடைக்கனும்..,அப்படி என்கிட்ட கூட சொல்ல முடியாத விஷயமா..?” என்று சூர்யா தன் போக்கில் கத்திக் கொண்டிருந்தான்.

 

இப்ப எல்லாம் அம்மா..என்கிட்ட எதையோ மறைக்கிறாங்கன்னு தோணுது ஜீவா..! என்றான் வேதனையுடன் சூர்யா.

 

ஜீவா..” அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது சூர்யா..நீ தேவை இல்லாம..,மனசப்போட்டுக் குழப்பிக்கிறயோன்னு எனக்குத் தோணுது..”என்றான்.

 

இல்லடா..,,எதையோ மறைக்கிறாங்க..அது மட்டும் எனக்கு தெளிவாத் தெரியுது.ஆனா அது என்னன்னுதான் தெரியலை..அதை நான் கூடிய சீகிரம் கண்டு பிடிக்கிறேன்.” என்றான் சூர்யா கண்களில் உறுதியுடன்.

 

தனது புது அலுவலகத்தின் உள்ளே….சென்ற நிலாவிற்கு…இன்னமும் நம்ப முடியவில்லை.தனக்கு இங்க வேலை கிடைத்ததைப் பற்றி.இருந்தாலும் நிலா..உனக்கு நிகர் நீதான் ..,உனக்கு கடவுள் அறிவைக் கொஞ்சம் அதிகம் படைச்சுட்டார்..என்று தனக்குத்தானே மார்தட்டிக் கொண்டாள் நிலா.”

ரிஷப்ஷனில் சென்று தன் வேலைக்கான உத்தரவை நீட்டினாள்.அதை வாங்கிப் பார்த்த அந்தப் பெண்…வெல்கம் மேடம்..நீங்க தேர்ட் புளோர்ல போய் மேனேஜர் சாரை மீட் பண்ணுங்க… என்றாள் இனிமையாய்.

 

பரவாயில்லையே..இன்னும் ஜாயின் பண்ணவே இல்லை.அதற்குள் வெல்கம்..வேற..ம்ம்ம்..நல்ல மரியாதை தெரிந்த முதலாளி தான்.ஆட்களையும் அப்படியே வேலைக்கு வச்சுருக்கார் என்று கண்ணுக்குத் தெரியாத முதலாளியைப் மனதினுள் பாராட்டியபடி…தேர்ட் புளோரை நோக்கி சென்றாள் நிலா.”

 

நிலா .,மனம் முழுதும் சந்தோஷ சிறகுகளுடன்…அந்தா லிப்டில் பயணித்தாள்.அவளுக்கு மனதினுள் சொல்ல முடியாத ஒரு உணர்வு..எழுந்தது.இன்னது என்று அவளால் அதை வரையறுக்க முடியவில்லை.ஆனாலும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தாள் அந்த சூழ்நிலையை.பிறகு அவளடைய லட்சியமே வேலைக்கு செல்வதுதான்.அதற்கான முதற்படி…இன்று …என நினைக்கும் போதே அவளுக்கு துள்ளிக் குதிக்க..வேண்டும் போல் இருந்தது.

 

லிப்ட் தேர்ட் புளோரில் நிற்கவும் நிலா வெளியே வந்து கண்ட காட்சி..

“தான் வந்த லிப்டில் சூர்யா உள்ளே சென்றதைத்தான்…”

 

ஆனால் அவளை சூர்யா கவனிக்கவில்லை.

 

இந்த கருவாப்பய எப்படி இங்க..! என்று மனம் முழுதும் யோசனையுடன் சென்றாள் நிலா.

 

முகவரிகள் கிடைக்குமா…?

Advertisement