Advertisement

முகவரி 5:

 

மே ஐ கம் இன் சார்…! என்றாள் நிலா….

 

வாம்மா…என்றார்…அந்த பெரிய மனிதர். அவரது தலையில் இருந்த நரை முடி அவரை ஐம்பது வயதுகளில் காட்டியது.அவரது முகத்தில்….அனுபவத்தின் ரேகைகள்…ஆழ்ந்து படிந்து இருந்தது.அவரது அமைதியான.சாந்தமான…முகத்தைப் பார்த்த உடனே …,நிலாவிற்கு கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது.என்னதான் வெளியில் தைரியமாக இருந்தாலும்…முதல் நாள் வேலைக்கு சென்று இருப்பதால்..அனைவருக்கும் இருக்கும் படபடப்பு அவளுக்கும் இருக்கத்தான் செய்தது.ஆனால் அந்த படபடப்பு எல்லாம்…அவரின் முகத்தைப் பார்த்த உடன் நிலாவிற்கு ..,அவளது கலக்கம் எல்லாம் ஓடி மறைந்தது.

 

வணக்கம் சார்…! என்றாள் நிலா.

 

வணக்கம்ம்மா..! உட்கார் என்றார்.

 

நீதான் புதுசா ஜாயின் பண்ண வந்த பொண்ணு…நிலாவாம்மா…?

 

ம்ம்..ஆமா சார்..ரிஷப்ஷன்ல உங்களை வந்து மீட் பண்ண சொன்னாங்க…சார்.

 

உன்னோட டிசைன்ஸ் எல்லாம் அருமையா இருக்கும்மா…உனக்குள்ள…கற்பனைத் திறனும்…,கற்பனையை செயல் வடிவம் கொடுக்கும் ஆற்றலும் இருக்கும் வரை உனக்கு இங்க வேலை நிச்சயம் நிலா என்றார்..,,அவளை ஆராய்ந்த பார்வையுடன்.

 

முதலில் நிலாவிற்கு கோபம் வர..சட்டென அதை மாற்றிக் கொண்டவள்..,”நிச்சயம் சார்…உங்க கம்பெனிய விட.., என் மேல் எனக்கு நம்பிக்கை அதிகம் சார்.கற்பனை ஆற்றல் என்ன பால் மதிரியா சார்…பொங்கி பொங்கி வறதுக்கு…பால்ல செய்ற டிஷ் மாதிரி சார்…எப்படி வெரைட்டியா பண்ணலாம்…இல்ல இருக்குறதுல எப்படி வெரைட்டியா..குடுக்கலாம்..புதுசா என்ன சேர்த்தா..என்ன டேஸ்ட் வரும்ன்னு தான் சார் யோசிக்கனும்…அதை விட்டுட்டு கற்பனை இருக்குற வரை தான் வேலைன்னா……,நானும் பால் மாதிரி பொங்கத்தான் பார்ப்பேன்..அப்படி பொங்கினா கடைசில ஒன்னுமே இருக்காது சார்….பால் பாத்திரம் தான் இருக்கும்…உங்க கம்பெனி மாதிரி.என்றாள் ஒரு இழுவை இழுத்தபடி .

 

அவர் அவளை ஆராயவே…அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.ஆனால் அதற்கு அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.மனம் விட்டு சிரித்தவர்..”கடைசில ..இந்த கம்பெனிய பால் பாத்திரத்துக்கு ஒப்பிட்டு சொல்லிட்டயேமா..!..இதை மட்டும் முதலாளி கேட்கனும் என்றார் மறுபடியும் தன் சிரிப்பை தொடர்ந்தவாறே…..

 

அய்யோ…! அப்ப நீங்க இங்க எம்.டி இல்லையா..சார்..? என்றாள் அதிரிச்சியாய்.

 

இல்லம்மா..நிலா..,நான் இங்க ஜெனரல் மேனேஜர் ..எம்.டிய அவ்வளவு சீக்கிரம் எல்லாம் பார்க்க முடியாதுமா..! என்றார்.

 

நிலா ..,அசடு வழிந்தவாறே..ஹி..ஹி..சாரி சார்…என்றாள்.

 

இருக்கட்டும் நிலா…”இப்ப உங்களுக்கு சின்ன டெஸ்ட் மதிரிதான் முதல் பத்து நாள் ..,இந்த பத்து நாள…நீ எப்படி பயன்படுத்தப் போறேங்கறது உன் சாமர்த்தியம்..ஆனால் பத்து நாள் கழித்து நீ எவ்வளவு புது டிசைன்ஸ் எல்லாம் வரைந்து இருக்கிங்க…அதை ஏத்துக்கலாமா ..,இல்லை வேண்டாமா.., அப்படின்றதை எல்லாம் எம்.டி தான் முடிவு பண்ணுவார்.நம்ம டிசைன்ஸ் எல்லாம்…ரொம்ப பிரபலமான நகைக் கடைகளுக்கு போகுதுமா..அதனால் உங்க கற்பனையை எல்லாம் இந்த பத்து நாள்ல..நீ புரூவ் பண்ணனும் நிலா. என்றார் அமைதியாய்.

 

அவர் சொல்வதை முழுவதுமாய் உள்வாங்கிக் கொண்டாள் நிலா.”நிச்சயமா சார்…கண்டிப்பா.. என்னால் முடிந்த அளவுக்கு முழு முயற்சி பண்ணுவேன்..”என்றாள் நிலா நம்பிக்கையாய்.

 

அப்பறம் நிலா…உன்ன நிலான்னு கூப்பிடலாமா…உனக்கும் என் பொண்ணு வயசுதான் இருக்கும்..என்றார் ஆதுரமாய்.

 

ஏனோ அவளுக்கும் அப்படித்தான் இருந்தது.  அவள் தலை தானாக ஆடியது.”அப்ப நானும் இனி உங்களை அப்பான்னே கூப்பிடலாமா…? என்றாள்  தலை சரித்து..”

 

அவளின் செய்கையில் கவரப் பட்டவர்..,,சரிம்மா..என்றார் அன்புடன்.”

 

சற்று தூரம் சென்றவள்…ஆங்…சார்……….. இல்லை அப்பா.. உங்க பேர் சொல்லவே இல்லை என்றாள் நிலா..

 

சற்று புன்னகைத்தவர்…”சுதாகரன் ..இதுதான் என் பேர் என்றார் அவர்.”

அவரை யோசனையாய் பார்த்தவள்…ஓகே..சார்..என்றபடி வெளியேறினாள் நிலா.

 

                                            ************

 

ஐயோ..! அம்மா என்ன சொல்றிங்க..!!..என்றனர் சூர்யாவும்..,ஜீவாவும் அதிர்ச்சியாய்.

 

சூர்யா..ஒருபடி மேலே …கத்தத் தொடங்கினான்… “முடியாது..முடியாது..,முடியவே முடியாது என்றான் தீர்க்கமாய்..”

 

மகேஷ்வரி அமைதியாய்…”அது எனக்குத் தெரியாது…நாளைக்கு நாம பொண்ணுப் பார்க்கப் போறோம்..அவ்வளவுதான்” என்றார் முடிவாய்.

 

என்னம்மா…இப்படி திடீரென்று கல்யாணம்..பொண்ணுப் பார்க்கப் போறோம்ன்னா எப்படி என்றான் ஜீவாவும்.

 

அதான…அதெப்படி..? என்றான் சூர்யாவும் சேர்ந்து கொண்டு…

 

மகேஷ்வரி..”இப்ப கல்யாணம் பன்னாம ..,வேற எப்ப கல்யாணம் பன்றதா உத்தேசம் உங்க ரெண்டு பேருக்கும்..இப்பத்தான் பதினாறு வயசு நடக்குதா…?..இல்ல ஒரேதா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிற நினைப்பு ஏதும் இருக்கா..உங்க செட்ல இருந்த பசங்க எல்லாம் கல்யாணம் காட்சின்னு பண்ணி வாழ்க்கையில செட்டில் ஆகிட்டாங்க..ஆனா நீங்க ரெண்டு பேர் மட்டும் தான்..எனக்கு இப்படி …. தண்ணி காட்டிட்டே இருக்கிங்க..,,,இந்த தடவை நான் விடறதா இல்லை..நாம பொண்ணுப் பார்க்கப் போறது உறுதி..” என்றார்..தீர்க்கமாய்.

 

ஐயோ..! அம்மா..நான் அதுக்காக சொல்லலை..இன்னும் பிஸ்னஸ நல்லா டெவலப் பண்ணனும்..அதுக்கு கொஞ்சம் டைம் குடுங்கன்னு தான் கேட்கிறேன்…என்றான் சூர்யா..

 

போதும் சூர்யா…இதுவரைக்கும் நீ சொன்ன கதை எல்லாம்…தொழில்ல முன்னேறனும்.., அந்தஸ்துல உயர்ந்த இடத்துக்குப் போகனும்..,அதுக்கு அப்பறம் நிச்சயமா கல்யாணம் பண்ணிக்கிறோம்ன்னு சொன்னிங்களா இல்லயா..?” என்றார் மகேஷ்வரி.

 

சூர்யாவும்.., ஜீவாவும் ஒரு சேரத் தலையை ஆட்டினர்.

 

மகேஷ்வரி..”அப்பறம் என்ன..நீங்க சொன்ன முன்னேற்றம்..அந்தஸ்து எல்லாமே இப்ப வந்துட்டது இல்லையா..? அதனால் இனி நான் சொல்ற பேச்சைக் கேட்டு ஒழுங்கா…நடக்கப் பாருங்க..”என்றார்  மிரட்டலாய்.

 

அது வந்து அம்மா..!!! என்று ஜீவா இழுக்க….” என்ன மதிக்கறதா இருந்தா….என் பேச்சைக் கேட்கிறதா இருந்தா…நாளைக்கு ரெடியா இருங்க..இல்லை இவங்க என்ன சொல்றது…நம்ம என்ன கேட்கறது அப்படின்னு நினைச்சா…இனி கல்யாணம் பண்ணிக்கங்கன்னு நான் சொல்லவே மட்டேன்…. போதுமா…” என்றபடி சென்று விட்டார் மகேஷ்வரி.

 

சூர்யா..ஜீவாவை முறைக்க…..,,இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..,, என்பதைப் போல் நழுவி ஓடி விட்டான் ஜீவா.

இந்த கலர் வேண்டாம்..அதை எடுங்க….இல்லையில்லை இது வேண்டாம் அந்த பின்க் கலர எடுங்க..என்று தீபா அந்த ஷாப்பிங்க் மாலில் இருந்த கடையையே இரண்டாக்கிக் கொண்டிருந்தாள். எப்பொழுதும்..அருள் தான் அவளுக்கு உடை தேர்வு செய்வான்…ஆனால் இன்று அவனால் வர முடியவில்லை..அதனால் தான் தீபா கடையையே இரண்டாக்கிக் கொண்டிருந்தாள்.அவளுக்கு எல்லாமே நன்றாய் இருப்பதாக தோன்றியது.ஆனால் சுதா தான் பாவம்.”என் சோக கதையைக் கேழுங்கள்” என்பதைப் போல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார்.

 

அவரும் என்ன செய்வார் பாவம்..கிட்டதட்ட ஒரு மணி நேரமாய் ஒன்றையும் எடுக்காமல் குழம்பித் தவிக்கும் தன் மகளை..என்ன செய்வதென்று அவருக்குப் புரியவில்லை.இனி அருள் இல்லாமல் இவளைக் கடைக்கு கூட்டி வரும் மாபெரும் தப்பை செய்யவேக் கூடாது என்று ஒரு உறுதி மொழியே எடுத்தார் சுதா.

 

யோசனைகளில் இருந்தவரை…”அம்மா..இது நல்லாருக்கா…? என்ற தீபாவின் குரல் கலைத்தது..”

 

சுதா..நன்றார் இருப்பாதாய் தலையை ஆட்ட…தீபாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை..பின்னே ஒரு மணி நேரமாக அவள் எடுத்துக் காட்டியதை எல்லாம்..நன்றாக இல்லை என்று சொன்னவர் ஆயிற்றே…அதான் இப்பொழுது அவர் தலையை ஆட்டவும்..அவளுக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.குழந்தையென தீபா துள்ளிக் குதிக்க…சுதா மீண்டும் கவலை கொண்டார். இப்படி அறியாப் பெண்ணாக இருக்கும் தன் பெண்ணிற்கு..திருமணம் செய்வது சரியாய் வருமா….??  இவளுக்கு கணவனாக வரப் போகிறவன் இவளைப் புரிந்து கொள்வானா..என்ற கேள்வி அவரது மனதை வண்டாய்க் குடைந்தது.

 

தீபா ..தான் எடுத்த துணிகளை பேக்கிங்கிற்கு அனுப்பி விட்டு…அம்மா..எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என்று அடம்பிடித்தாள் தீபா.

 

தீபா…அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..வா வீட்ல போய் சாப்படலாம்..இப்பவே மணி ஆறாயிடுச்சு…இனி ஐஸ்கிரீம் சாப்பிட்டு போனா லேட் ஆகிடும்..என்று சுதா மறுத்தார்.

 

அம்மா..அம்மா..ப்ளீஸ்மா..என் செல்ல அம்மாதான நீங்க…!! என்று கொஞ்சினாள் தீபா.  மகளின் கொஞ்சலில் மனம் இறங்கிய சுதா..அவளை அங்கிருந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் அழைத்துச் சென்றார்.

 

கூட்டமாக இருந்ததினால்…சுதா சற்று தடுமாறி கீழே விழப் போக…அவரை விழாமல் பிடித்தான் சுதாவின் முன்னால் வந்து கொண்டிருந்த சூர்யா.

 

பார்த்து ஆண்ட்டி..,என்று அவரை பிடித்து நிறுத்தியவன்…” பார்த்துப் போங்க ஆண்ட்டி…அடி எதும் படலையே என்று அக்கறையாய் விசாரித்தான்.”

 

ஆனால் சுதாவிற்கு..சூர்யாவைப் பார்த்த அதிச்சி..அவரை பேசவிடாமல் செய்தது.

 

ஆண்ட்டி…,, ஆண்ட்டி..,,என்று சூர்யா இரண்டு முறை அழைத்த பின்னரே…அவர் நினைவிற்கு வந்தார்.

 

அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா….. கால் கொஞ்சம் மடங்கிட்டது..அவ்வளவுதான்..ரொம்ப நன்றிப்பா..என்றார்.”

 

இதுக்கு எதுக்கு ஆண்ட்டி.., நன்றி எல்லாம்…. என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே..,,,தன் அம்மாவைத் தன் பின்னால் காணவில்லை என்று தீபா திரும்பி வந்தாள்.”

 

அம்மா..!எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு இங்க என்ன பன்றிங்க…? என்றவாரு சுதாவின் அருகில் வந்தாள் தீபா..,..யார் இவங்க..?என்றாள் அருகில் நின்றிருந்த சூர்யாவைப் பார்த்து…

 

சூர்யா ..,அவளை ஆர்வமாய்ப் பார்க்கவும்..” இது என் பொண்ணு தீபா…என்றார் சுதா..சங்கடமாய்..”

 

ம்ம்ம்.தெரியும் ஆண்ட்டி..பார்த்து இருக்கேன்..அந்த அவார்டு பங்க்ஷன்ல…!!! என்றான் சூர்யா..

 

அப்பொழுதுதான் தீபாவிற்கும் நினைவு வந்தது  சூர்யாவை….,, அவனைப் பார்த்து லேசாய் புன்னகைத்தவள்..தன் தாயின் பின்னால் ஒண்டினாள்.”

 

அவளிடம் பேச வாயெடுத்த சூர்யா…அவள் ,, தன் தாயின் பின்னால் ஒண்டியதைப் பார்த்து  தன் முயற்சியை கை விட்டவனாய்…” சரி ஆண்ட்டி..,,பார்த்துப் போங்க ..!! “என்றாவாரு அங்கிருந்து கிளம்பினான்.

 

நிலாவிற்கு இந்த வேலை மிகவும் பிடித்துப் போனது.அந்த அலுவலகத்தின் பரபரப்பையும்..அதன் நேர்த்தியையும் மிகவும் ரசித்தாள்.இவ்வளவு பெரிய அலுவலகத்தை ..இப்படி நேர்த்தியாய் நடத்திக் கொண்டிருக்கும்..முகம் அறியாத அந்த உரிமையாளனை நினைத்து மனதிற்குள் வியந்தாள் நிலா.

 

அலுவலகம் முடிந்து வரும் போது..தான் அவளுக்கு நியாபகம் வந்தது..நாளை தன் பெற்றோர்க்கு திருமண நாள் என்று..அவர்களுக்கு ஏதாவது பரிசு வாங்க வேண்டுமென்று நினைத்தவள்.. ஸ்கூட்டியை..அந்த ஷாப்பிங்க் மாலில் நிறுத்தினாள்.

 

என்ன வாங்கலாம்..என்று யோசித்தவள்..” அம்மாக்கு ஒரு சேலை..ம்ம்..அப்பாக்கு ஒரு வாட்ச் வாங்கலாம் என்று மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டாள் நிலா.”

 

நிலா..அந்த ஷாப்பிங்க் மாலில் வண்டியை நிறுத்தியதில் இருந்து..அவள் உள்ளே சென்றது வரை..அவளை இரு கண்கள் கண்காணித்துக் கொண்டே இருந்தது.அதை அறியாத பேதைப் பெண்ணாய்..நிலா உள்ளே சென்று கொண்டிருந்தாள்.

 

ஹாய் தீபா..! என்றாள் நிலா .,எதிரில் வந்தவர்களைப் பார்த்து..

 

ஹாய் நிலா…என்றாள் தீபா..சுதா அவளை தெரியாதவராய்ப் பார்க்க,,தீபா தோழி என்று அறிமுகப்படுத்தினாள்.

 

நிலாவைப் பார்த்து புன்னகைத்தார் சுதா.

 

எப்படி இருக்கிங்க ஆண்ட்டி..? என்றாள் நிலா”.

 

நல்லா இருக்கோம்மா..ஷாப்பிங்கா என்றார் சுதா..

 

ஆமாம் ஆண்ட்டி..,,பெருசா எல்லாம் ஒன்னும் இல்லை.நாளைக்கு  அப்பா..,அம்மாக்கு கல்யாண நாள்..அதுதான் அவங்களுக்கு கிப்ட் வாங்கலாமென்று வந்தேன் என்றாள்…நிலா.”

 

சரிமா…அப்ப நாங்க கிளம்பறோம்..நீ பார்த்துப் போம்மா என்றார் சுதா.

 

ஓகே..அண்ட்டி…!ஓகே தீபா..! பாய்..,,என்றாவாறு அங்கிருந்து விரைந்தாள் நிலா.

 

சுதாவிற்கு நிலாவைப் பார்த்ததும் பிடித்துவிட்டது.அவள் சிரித்த முகமாய் தங்கள் முன் வந்தது சுதாவின் மனதில் நின்றது.

 

யாருக்கு யார் என்று யார் அறிவார்…!

 

தன் அம்மாவிற்கு அழகிய சேலை ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள் நிலா.அந்த சேலையை எடுக்கும் போதே தன் அம்மாவின் முகம்தான் நிலாவிற்கு நியாபகம் வந்தது.இந்த சேலை அம்மாவிற்கு பொருத்தமாய் இருக்கும் என்று மனதில் நினைத்தவள்…அதை வாங்கிக் கொண்டு..அப்பாவிற்கு வாட்ச் வாங்க வேண்டுமே..! என்று நினைத்தவளாய்…ஆண்கள் பகுதிக்குள் நுழைந்தாள்.

 

டேய்..! எவ்வளவு நேரம் தாண்டா எடுப்ப…? என்று கடுப்பாகிக் கேட்டான் சூர்யா.அவனைப் பார்த்து அசடு வழிந்த ஜீவா…ப்ளீஸ் ..மச்சான் ..கொஞ்ச நேரம்டா…என்றாவறு திரும்பி டி-ஷேர்ட் கலெக்க்ஷனில்…தேடத் துவங்கினான் ஜீவா.

டேய்…பொண்ணுங்க கூட ஷாப்பிங் போகத்தான் எல்லாரும் பயப்படுவாங்க…ஆனா இங்க எல்லாமே தலைகீழா நடக்குது என்று புலம்பிக் கொண்டிருந்தான் சூர்யா.

 

ஆனால் அதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாது…ஜீவா..தனது தேடுதல் வேட்டையைத் துவங்கி இருந்தான்.

 

பொறுத்துப் பார்த்த சூர்யா பொருமை இழந்தான்…ஜீவா,,..! உனக்கு டி-ஷேர்ட் தான எடுக்கனும் விலகு நான் செலக்ட் பன்றேன்..என்றவாறு அவனை விலக்கி சூர்யா தனது பார்வையை ஓட்டினான்.

 

தனது தந்தைக்கு வாட்ச் பார்த்துக் கொண்டே வந்த நிலாவும் சூர்யாவை கவனிக்கவில்லை..சூர்யாவும் நிலாவை கவனிக்கவில்லை.

 

ஜீவா..! இதைப் பாரு என்று தன் அருகில் இருந்த நிலாவை .., ஜீவா.. என்று நினைத்து தோளைத் தொட்டு திருப்ப..

 

அங்கு நின்றிருந்தது என்னவோ நிலாதான்.அங்கு ஜீவா இல்லாமல் சற்று நகர்ந்து இருந்தது யார் தவறு…?

 

நிலா..சூர்யாவை தீப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

என்ன சார்…நான் எங்க போனாலும் என் பின்னாடியே வறிங்க…? இப்ப என்னடான்ன தோளைப் பிடிக்கிறிங்க..என்று சண்டைக்குத் தயாரானாள் நிலா.

 

ஆனால் சூர்யா..தன் மீது தவறு என்பதால் அவளிடம் தன்மையாகவேப் பேசினான்..”இங்க பார்….சாரி ..இங்க பாருங்க..நான் உங்க தோளைத் தொட்டது என்னவோ உண்மைதான் …ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.நான் என் ப்ரண்ட் ஜீவான்னு நினைத்துதான் அப்படி செய்தேன்..வேறெந்த தவறான நோக்கமும் கிடையாது..என்றான் சூர்யா..”  

 

ஹிம்…எப்படா..எந்த பொண்ணுடா சிக்குவா..அவளை உரசிப் பார்ப்போம்ன்னு அலையராங்க..!!என்றாள் அவனின் வார்த்தைகளை..அவனுக்கே திருப்பிப் படித்தவளாய்.

 

அதற்குள்..அருகில் இருந்தவர்கள்  அனைவரும் சூர்யாவை ஒரு மாதிரியாகப் பார்க்க…அவனுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.

 

அவன் நிலாவைப் பார்த்து முறைக்கு..உனக்கு சளைத்தவள் நான் இல்லை என்ற ரீதியில் நிலாவும் திருப்பி முறைத்தாள்.

 

இப்ப எல்லாம் டீசண்டா இருக்கிறவங்களை எல்லாம் நம்பவே முடியலப்பா..என்று அருகில் ஒன்றிரண்டு பேர் சொல்லிவிட்டு செல்ல…சூர்யாவிற்கு கோபத்தில் முகம் நெருப்பாய்த் தகித்தது.அந்த நேரம் சரியாய் ஜீவா வந்தான்.

 

என்ன சூர்யா..? என்ன பிரச்சனை…என்று கேட்க..சூர்யா கோபத்தை அடக்கியவனாய்..இவ்வளவு நேரம் எங்க போயிருந்த…? என்றான்.

 

பாத்ரூம் போயிருந்தேண்டா…!!..எதுவும் பிரச்சனையா..?என்றான் ஜீவா…

 

அதெல்லாம் ஒன்னும் இல்லை வா..போகலாம் என்றாவறு..,நிலாவை ஒரு மார்க்கமாய்ப் பார்த்தவன்..”என்ன அசிங்கப் படுத்திட்ட இல்ல…உன்ன சும்மா விட மாட்டேண்டி..” என்றாவாறு சென்றான் சூர்யா.  ஜீவா எதுவும் புரியாதவனாய் அவனின் பின்னால் சென்றான்.

 

ஆமா..,,   இவன் பெரிய இவன்…இந்த மிரட்டலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…கருவாயன்…” என்று மனதிற்குள் அவனை வறுத்த நிலா…,, அந்த இடத்தை விட்டு வெளியேற…,,அங்கு வெளியே அவளையேப் பார்த்தவாரு நின்றிருந்தவனைப் பார்த்து அதிர்ச்சியாகினாள்.அவளது உடம்பு ஒரு நிமிடம் வெடவெடத்தது.அவன் அவளை நெருங்க…நிலாவிற்கு மூளை வேலை செய்ய மறுக்க..இதயம் தாறுமாறாய்த் துடித்தது.”

 

சற்று சுதாரித்தவள்..தன் கைகளில் இருந்த பைகளால் அவனை முகத்தில் அடித்து தள்ளி விட்டு ஓடத் துவங்கினாள். அவனும் விடாமல் அவளைத் துரத்த..நிலா புயலாய் ஓடினாள்.ஓடியவள் முன்னால் சென்று கொண்டிருந்த சூர்யாவின் மேல் மோதி பைகள் கீழே விழ..அவசரமாய் அதை எடுத்தவள்..சாரி சார்..சாரி என்றவாறு மறுபடியும் ஓடத் துவங்கினாள்.

 

தான் மோதியது சூர்யா மேல என்று அவள் அறியாதது அவளின் துரதிஷ்டமா..?

 

தன்னைத் தள்ளி..சாரி சொல்லிக் கொண்டு ஓடிய நிலாவையும்..,,அவளைப் பின்னால் இருந்து துரத்திய மற்றொருவனையும் கண்டு திகைத்து போய் நின்றிருந்தனர் சூர்யாவும் ஜீவாவும்.

 

நடப்பது என்னவோ..?

 

முகவரிகள் கிடைக்குமா..?

 

முகவரி 6:

 

நிலா..ஓடுவதைப் பார்த்த…ஜீவா..,,சூர்யாவிடம்.”டேய் என்னடா., அந்த பொண்ணு இந்த ஓட்டம் ஓடுது.பின்னாடியே வேற ஒருத்தன் துரத்திட்டு போறான்…!” என்றான் ஜீவா.

 

என்கிட்ட பேசிய மாதிரி இன்னும் எத்தனை பேர்கிட்ட வாயக் குடுத்து..,வாங்கிக் கட்டியிருக்காளோ…!

அதுல கடுப்பான எவனாவது…ஒருத்தன் தான் துரத்திட்டு போவானா…. இருக்கும்….என்றான் அசிரத்தையாய் சூர்யா.

 

சூர்யா ..! எனக்கு என்னமோ அப்படி தெரியலை…அவனைப் பார்த்தாலே..பக்கா பொருக்கி மாதிரித் தெரியுது.அந்த பொண்ணு கண்ணிலையும் அப்படி ஒரு பயம்…,,வா…,நாம் சீக்கிரம் போனா…அவளுக்கு எதாவது உதவி பண்ணலாம்..இல்லையா…” என்றான் ஜீவா.

 

போடா…நீயும்..உன் எண்ணமும்…..,,!! இப்ப நாம போய் காப்பாத்தப் போக..அவ என்ன சொல்லுவா ..தெரியுமா…? ஆளையும் அனுப்பிட்டு..என்ன காப்பாத்தற மாதிரி நடிக்கிறியா அப்படின்னு கேட்பா…!!  அப்படி கேட்கக் கூடிய ஆள் தான் அவ…! இது நமக்குத் தேவையா..? என்றான் சூர்யா.

 

இருந்தாலும் ஜீவாவிற்கு …,,சூர்யாவின் பதிலில் உடன்பாடு இல்லை.அவனுக்கு மனதில் சிறு நெருடல் இருந்து கொண்டே ..இருந்தது. அதற்கு காரணம்…நிலாவைத் துரத்திக் கொண்டு சென்றவனது முகத்தில் இருந்த ஆத்திரமும்.., கொலைவெறியும் தான்.

 

என்னதான் ..,ஜீவாவிடம் …வாய் மொழியாக பதில் சொன்னாலும்..,சூர்யாவிற்கும் ஜீவா சொல்வது சரி எனப் பட்டது.  எதுவும் பெரிய ஆபத்தில் சிக்கி இருப்பாளோ..! என்று   தன்னைத் தானேக் கேட்டுக் கொண்டான்.போய் அவளுக்கு உதவி செய் சூர்யா..! என்றது ஒரு மனம்.  வேண்டாம் சூர்யா..,அன்றைக்கும் அப்படித்தான்..,கல்லடி பட்டப்ப காப்பாத்தின..ஆனா உனக்கு  கிடைச்சது என்ன..? ஒரு நன்றி சொன்னாளா..கருவாப்பயன்ற பட்டம் வாங்கியது தான்  மிச்சம்…..அதனால் உன் வேலையை மட்டும் பார் என்றது மற்றொரு மனம்.   மனம் தன் போக்கில் சொன்னாலும்..அவனது மூளை…உடனே செல் என்று  கட்டளையிட்டது.”

 

சரி வா..ஜீவா..போய் பார்ப்போம்..! என்றவாறு அவனையும் இழுத்துக் கொண்டு  சென்றான் சூர்யா.வெளியில் சென்று இருவரும் தேட ..கண்ணுக்கெட்டிய தூரம் வரை…நிலாவைக் காணவில்லை.

 

என்னடா..காணாம்..? என்றான் சூர்யா.

 

அவனைக் கோபமாகப் பார்த்த ஜீவா…” உடனே போறதுதான் சூர்யா..ஆபத்துக்கு உதவறதுன்னு பேரு..,அதை விட்டுட்டு…அரைமணி நேரம் யோசிச்சு அதுக்கப்பறம் போறது இல்லை. பாவம் அந்த பொண்ணு.., என்ன ஆச்சோ.., ஏதாச்சோன்னு தெரியலை..என்று கடுப்புடன் வார்த்தைகளைத் துப்பினான் ஜீவா.

 

சூர்யா…தவறு செய்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருக்க.., அதைக் காண சகியாத ஜீவா., சரி விடுடா வா போகலாம்…“  என்றவாறு அழைத்து சென்றான்.

 

மனதின் ஒரு ஓரத்தில் நெருடலுடன் இருந்த சூர்யா..,,மனமின்றி அவனுடன் சென்றான்.

 

சரட்டென்று பிரேக் போட்டான் அருள். தன் காரின் முன்னால் வந்து ஒரு பெண் மோத…வேகமாய் பிரேக் போட்டவன்…கோபமாய் இறங்கினான். இறங்கியவன் அப்படியே திகைத்து நின்றான்.ஏனென்றால் அவன் முன் நின்றிருந்தது நிலா.

 

பதறி அவள் அருகில் சென்றவன்..”என்னங்க…உங்களுக்கு தற்கொலை பன்ற  அளவுக்கு என்ன பிரச்சனை..,அதுவும் என் காரில் விழுந்து சாகுற அளவுக்கு..” என்றான் சிரிக்காமல்.

 

அவன் பேசுவதைக் காது கொடுத்து கேட்காமல்..வேகமாய் அவன் காரில் சென்று அமர்ந்தாள் நிலா.அவள் செய்வதை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த அருள்..,,”.ஹலோ..!ஜெண்டில்மேன்..ம்ம்..வாங்க..  சீக்கிரம் வந்து வண்டிய எடுங்க…சீக்கிரம்..” என்ற அவளது வார்த்தையில் தன் உணர்வு பெற்றவனாய்..வேகமாய் சென்று காரை எடுத்தான் அருள்.

 

அவன் காரை எடுக்கவும்…நிலா…பின்புறம் சற்று சிறிதாய் தலையைத் திருப்பிப் பார்க்க..,,அங்கு.., நிலாவைத் துரத்திக் கொண்டு வந்தவன்..நிலாவைத் தவற விட்ட கோபத்தில் ..,நிலத்தை காலால் உதைத்துக் கொண்டிருந்தான்..,எத்தனை நாளைக்குடி நீ இப்படி தப்பிப்ப…!!என்று மனதில் நினைத்தவனாய்.

நிலா..அப்பொழுதுதான் நிம்மதி வரப் பெற்றவளாய்..பெருமூச்சு விட்டாள்.அவளது பெருமூச்சில் திரும்பிப் பார்த்த அருள்..”என்ன நிலா எதும் பிரச்சணையா..? ”  என்றான்.

 

ஒரு நிமிடம் யோசித்தவள்…,,அதெல்லாம் ஒன்னும் இல்ல..மிஸ்டர் ஜெண்டில்மேன் என்றாள் நிலா.

 

அருள்…” அப்பறம் ஏன் இப்படி ஓடிவந்திங்க..?” என்றான்.

 

அவள் அமைதியாய் இருக்கவும்…,,  சொல்ல விருப்பம் இல்லைன்னா…வேண்டாம் நிலா..!!! என்றான் அருள்.

 

சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை..இப்ப சொல்லக் கூடிய நிலையில் நான் இல்லை…அதான்..என்றாள் இழுவையாய்..”

 

இட்ஸ் ஓகே… என்றவன்சரி..,, உங்களை எங்க டிராப் பண்ணனும்.., வீட்லயே டிராப் பன்னவா..? என்றான் அருள்.

 

இல்லைங்க…நீங்க அந்த பஸ் டாப்ல இறக்கி விட்டுடுங்க..நான் போய்டுவேன்..உங்களுக்கு எதுக்கு சிரமம்..” என்றாள் நிலா.  

 

இதுல என்னங்க சிரமம்....நீங்க அட்ரஸ் சொல்லுங்க ..! என்று  அருள் கேட்க..அதற்கு மேலும் மறுக்க முடியாத நிலா..தன் வீட்டு முகவரியை சொன்னாள்.

அருளும் அவள் சொன்ன முகவரியில் அவளை டிராப் பண்ணியவன்…கிளம்ப ஆயத்தமாக…” என்ன கிளம்பறிங்க…! உள்ள வாங்க..!என்று அழைத்தாள்.”

 

இல்லங்க…இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்…,, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…என்றபடி கிளம்பினான் அருள்.

 

நைஸ் மேன்.. என்று மனதில் நினைத்தபடியே உள்ளே சென்றாள் நிலா.

 

அங்கு மாலாவோ….! கொஞ்சம் கோபத்திலும்…கொஞ்சம் பதட்டத்திலும் இருந்தார்.பிரபு அவரது பதட்டத்தைப் பார்த்து மனதிற்குள் கவலைப் பட்டார்.

 

அம்மா…! என்றபடி வந்த நிலாவைப் பார்த்த பின் தான் அவருக்கு போன உயிர் திரும்பி வந்தது.அவரது முகத்தைப் பார்த்தே அவரது பதட்டத்தைப் புரிந்து கொண்ட நிலா…”இன்று நடந்ததை அம்மாவிடம் சொல்லாமா..வேண்டாமா..என்று யோசித்தாள். இறுதியில் வேண்டாம் எண்று முடிவு எடுத்தாள்.ஏற்கனவே அம்மா..பதட்டமா இருக்காங்க  நிலா..,இப்ப போய் நடந்ததை சொன்ன…உன்ன வெளிய அனுப்பியது இன்றுதான் கடைசியா இருக்கும் .அதனால் அப்படியே மெயிண்டெய்ன்  பண்ணு..,, என்று  அவளது மனசாட்சி  அவளை வலியுறுத்தியது.

 

சாரிமா….லேட்டா வந்ததுக்கு….நாளைக்கு உங்களுக்கு கல்யாண நாள் இல்லையா..? அதான் ஷாப்பிங் பண்ண போயிருந்தேன்..என்றாள் பாதி உண்மையை மறைத்தவளாய்.

 

நிலா…! எங்கம்மா..காலைல ஸ்கூட்டில போன…,,இப்ப வண்டியக் காணோம்..? என்றார் பிரபு.

அப்பா..அது..வந்து…வண்டி பஞ்சர்பா… ஷாப்பிங் பண்ணிட்டு வந்து பார்த்தப்ப..பஞ்சரா இருந்தது..அதனால அங்கையே பக்கத்துல மெக்கானிக் ஷாப்ல  விட்டுட்டு வந்துட்டேன்..டாடி என்றாள்…பொய்யாய்.

 

அம்மா…வாங்க எனக்கு செம பசி…என்ன டிபன் ..என்றவாறு நழுவினாள் நிலா.

 

விடிந்தது முதல் தீபாவிற்கு ஏனோ…ஒரே படபடப்பாக இருந்தது. இன்று தன்னை பெண் பார்க்க வருவதுதான் அவளது படபடப்பிற்குக் காரணம்.ஏதோ ஒரு புது உணர்வு…சொல்ல முடியாமல் அவளது தொண்டைக் குழியில் சிக்கி நின்றது.அவள் நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருக்க…அங்கு வந்த அருள் அவளது முகத்தைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினான்.

 

அவளது அருகில் அமர்ந்தவன்…” குட்டிமா…எதுக்கு இப்ப முகத்தை இஞ்சி தின்னக் குரங்கு மாதிரி  வச்சுருக்க….இப்படியே போய்..மாப்பிள்ளை முன்னாடி நின்னா…அவ்வளவுதான்…வர மாப்பிள்ளை.. என்னடா…பொண்ணு பார்க்க வந்தா.., குரங்க காட்டுறாங்கன்னு சொல்லி வந்த வழியே ஓடிடுவார்…” என்றான் சிரியாமல்.

 

ஆனால் அதற்கு அவள் கோபப்படாமல் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.

 

தீபா..என்றான் அருள்.நிமிர்ந்தவளது கண்கள் கலங்கி இருந்தது.அதைக் கண்ட அருள் பதறினான். தீபா.., என்னாச்சு ஏண்டா ஒரு மாதிரி இருக்க..? என்றான்.

அண்ணா…!எனக்கு என்னவோ பயமா இருக்கு…என்றாள் குழந்தையாய்.

 

இதுல பயப்பட என்னடா இருக்கு…உன்னபொண்ணுதான் பார்க்க வராங்க…இப்ப உனக்கு உடனேவா கல்யாணம் பண்ண போறோம்..? அது சரி..நீ ஏன் பயப்படுற…உன்னப் பார்த்து மாப்பிள்ளைதான் பயப்படனும் என்று சீண்டினான் அருள்.”

 

இங்க என்ன பன்றிங்க…ரெண்டு பேரும்…என்றபடி வந்தார் சுதா.

 

என்ன தீபா..ரெடியாகலை..அருள்..நீ முதல்ல போ..! அவ ரெடியாகனும்..அப்பறம் அப்பாக்கு போன் பண்ணு..இன்னமும் காணோம்…! என்றார் குடும்பத் தலைவியாய்.

 

சரிம்மா..என்றபடி அருள் வெளியேற…தீபா…முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே…தயாராக ஆரம்பித்தாள்.

 

வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க….அருள் வெளியே விரைந்தான்.அம்மா அவங்க வந்துட்டாங்க என்ற கூவலுடன்.

 

வெளியில் சென்றவன் … முதலில் மகேஷ்வரியைப் பார்த்ததனால் பின்னால் இருந்த சூர்யாவையும்.., ஜீவாவையும் பார்த்து திகைத்தான்.இவனா….இவனுக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தமாச்சே..! என்று மனதி யோசித்தவன்,….யோசனையை மறைத்தவனாய்…அவர்களை வரவேற்றான்.

 

சூர்யாவும் …அருளைப் பார்த்து திகைக்க….ஜீவாவோ…எதற்கும் திகைக்கவில்லை.எப்பொழுதும் போல் இருந்தான்.

வாங்க..!  வாங்க..! என்று வந்த சுதாவும்…,,அங்கு வந்த மகேஷ்வரியைப் பார்த்து திகைத்தார்.அவருக்கு இடியே தலையில் விழுந்தது போல் இருந்தது.ஆனால் மகேஷ்வரியின் முகமோ..எதையும் பிரதிபலிக்கவில்லை..அமைதியாய் சாந்தமாய் இருந்தது.

 

சில நிமிடங்களில் தன்னை மீட்டுக்கொண்ட சுதா…அவர்களை வரவேற்று…அமரவைத்தார்.

 

சூர்யாவிற்கு சில வினாடிகளில் புரிந்து போனது..பெண் யாரென்று. ” ஆண்ட்டி நீங்களா..?” என்றான் சுதாவைப் பார்த்து.

 

உனக்கு இவங்களை முன்னமே தெரியுமாப்பா..? என்றார் மகேஷ்வரி.

 

தெரியும்மா…நேத்து கூட பார்த்தேன்..! என்றான் சூர்யா.

 

ஆனால் இதில் கலந்து கொள்ள முடியாமல் சுதாவின் மனம் ரயில் வண்டி வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.கடவுளே…இது என்ன சோதனை…என்று அவர் கண்கள் கலங்கியது. ஐயோ..! இந்த நேரத்தில் அவர் வந்துவிட்டால் என்னாவது..கடவுளே..! அவர் வரக்கூடாது .,.. இல்லாத தெய்வத்தை எல்லாம் வேண்டினார் சுதா.இதுதான் காலத்தின் கோலம் என்பதா..! இது சரியா வருமா..என்று அவர் மனம் பலவாறும்  சிந்தித்துக் கொண்டிருந்தது.

 

அம்மா..! என்ன அப்படியே  நின்னு இருக்கிங்க..? தீபாவ வர சொல்லுங்க..என்றான் அருள்.ஆனால் அவன் தப்பித் தவறியும் சூர்யாவுடன் பேசவில்லை. சூர்யாவும் அருளுடன் பேச முயற்சிக்கவில்லை.

பொண்ணோட அப்பா…வீட்ல இல்லையா..? என்றார் மகேஷ்வரி.

 

சற்று சங்கடமாய் நெளிந்த…அருள்..”அது வந்து ஆண்ட்டி அப்பா…ஒரு மீட்டிங்ல மாட்டிகிட்டார்..   நான் தான் போக வேண்டியது…,,ஆனா தீபா என்ன விடமாட்டேன்னு சொல்லிட்டா…அதுதான் அப்பா போக வேண்டிய கட்டாயம்…சீக்கிரம் வந்துடுறேன்னு சொன்னார்.ஆனா இன்னும் வரலை..இப்போ வந்துடுவார் ஆண்ட்டி..என்றான் அருள் விளக்கமாய்.

 

சரிப்பா…பொண்ண வர சொல்லுங்க ..என்றார் மகேஷ்வரி ஆர்வமாய்.

 

சுதா..மனதில் ஆயிரம் குழப்பங்களுடன் தீபாவை அழைத்து வந்தார்.சும்மாவே..தீபாவிற்கு கூச்ச சுபாவம் அதிகம்.இப்பொழுது கேட்க வேண்டுமா…! குனிந்த தலையை அவள் நிமிரவே இல்லை.பெண்ணிற்கு உரிய இலக்கணங்கள் பெற பெற்றவளாய்…அச்சம், மடம்,நாணம் ,பயிர்ப்பு அனைத்தும் அடங்கிய..சுடர் ஒளியாய் வந்தாள் தீபா.தீபாவைப் பார்த்த அருளுக்கு பெருமை பிடிபடவில்லை.

 

மகேஷ்வரி அம்மாவைக் கேட்க வேண்டுமா…அவருக்கு தீபாவைப் பார்த்த உடனே பிடித்துப் போனது. அவளிடம் இருந்த ஏதோ ஒன்று அவரைக் கவர்ந்தது. வாம்மா…! என்று தீபாவை அழைத்தவர் தன்னருகில் அமர்த்திக் கொண்டார். தீபாவும் சற்று சங்கோஜத்துடன் அவர் அருகில் அமர்ந்தாள்.

 

எனக்கு பொண்ண ரொம்ப பிடிச்சுருக்கு..என்றார் மகேஷ்வரி. உனக்கு பிடிச்சுருக்கா ஜீவா..என்றார் மகேஷ்வரி.

 

அதைக் கேட்ட சூர்யாவின் முகம் இறுக…ஜீவா…தனக்கு பிடித்து இருப்பதாய் தலையை ஆட்டினான். தீபா வந்ததில் இருந்து அவனது பார்வை வேறு எங்கும் திரும்பவில்லை. வெள்ளை கவுன் அணிந்த தேவதைகள் அவனை சுற்றி பாடிக் கொண்டிருந்தனர்.

 

சுதாவிடம் திரும்பிய மகேஷ்வரி.. ” மன்னிக்கனும்..உங்களுக்கு குழப்பமா இருக்கும்..  ! ஒரு பையன்னு சொல்லிட்டு இப்ப இரண்டு பையன்களோட வந்து இருக்கேன்னு…? ஜீவாவை நான் என் வயிற்றில் சுமக்கலையே தவிர…அவன் என் மகன் தான். மகன் மாதிரின்னு கூட சொல்ல மாட்டேன். அவனுக்கும் அந்த மாதிரி நினைப்பு வந்திடக் கூடாதுன்னு தான் அவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ண முடிவு பண்ணேன்.  பிஸ்னெஸ்லயும் ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ் தான். மத்தபடி ஜீவா பத்தி சொல்லனும்ன்ன…எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அருமையான.,, தங்கமான பையன்..”என்றார்.

 

அவரின் பேச்சில் ஜீவாவின் மனம் நெகிழ்ந்தது.அந்த நிமிடம் கடவுளுக்கு நன்றி சொன்னான்..தன்னை அனாதையாய் படைத்து.., இப்படி ஒரு தத்து தாயை தனக்கு கொடுத்ததற்கு.

 

அருளுக்கு இப்பொழுதுதான் உயிரே வந்தது.அவன் மாப்பிள்ளை போட்டோவை முன்னமே பார்த்திருக்கவில்லை.எங்கு சூர்யா தான் மாப்பிள்ளையோ..? இந்த கோபக்காரனுக்கு தன் தங்கையைக் கொடுக்க வேண்டுமா..? என்று யோசித்துக் கொண்டிருந்த அருளின் மனம் ..,,, மகேஷ்வரி அம்மாவின் வார்த்தைகளில் நிம்மதி அடைந்தது.

 

அருளுக்கும் ஜீவாவை பிடித்து இருந்தது. ஏற்கனவே அவன் பொறுமையையும் நிதானத்தையும் நேரில் பார்த்தவன் ஆயிற்றே..!

 

ஜீவாவை ஓரக் கண்ணால் பார்த்த தீபாவிற்கும்..ஏனோ அவனைப் பிடித்த மாதிரி இருந்தது. தீபாவின் சம்மதம் கேட்க திரும்பிய அருள்..அவள்..,பார்வையையும் வெட்கத்தையும் வைத்து விஷயத்தை  ஓரளவு தீர்மானித்தான்.

 

தன் தாயைத் திரும்பிப் பார்க்க…சுதாவின் முகமோ…பேயறைந்தது போல் இருந்தது. அவரது முகத்தைப் பார்த்து குழம்பிய அருள்…தன் தந்தையையும் காணாது கவலை கொண்டான்.

 

தீபா…ஜீவாவை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தாள்..!அவள் வெகு நேரமாக தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ஜீவா..,என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த..,அவனிடம் சிக்கிக்கொண்டவளாய்..அவசர அவசரமாக பார்வையைத் திருப்பினாள் தீபா. ஐயோ..! நான் பார்த்ததை பார்த்துட்டாரே..,!என்று மனதிற்குள் தவித்துப் போனாள்.

 

ஆனால் சூர்யாவின் முகம் இறுகியது…இறுகியதாகவே இருந்தது..!! அவனைப் பார்த்த ஜீவா கூட ஒரு நிமிடம் குழம்பினான். இப்ப இவன் எதுக்கு உம்முன்னு இருக்கான்..என்று மனதில் நினைத்தபடி.

 

அப்ப..நாங்க கிளம்பறோம்.எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சு இருக்கு..  நாங்க இன்னைக்கு ஒரு பார்மாலிட்டிக்காகத் தான் தீபாவ பார்க்க வந்தோம்.சொந்த பந்தங்களும் எங்களுக்கு அதிகம் கிடையாது. அதான் நாங்க மட்டும் வந்தோம்நீங்க கலந்து பேசிட்டு சொல்லுங்க..! என்றவாறு மகேஷ்வரி கிளம்ப எத்தனிக்க…

 

ஆண்ட்டி..,   தப்பா எடுத்துக்காதிங்க….!  அப்பா..டிராபிக்ல மாட்டியிருப்பார்ன்னு நினைக்கிறேன்.  கால் பண்ணா… லைன் போகவே மாட்டேங்குது. எங்க சொந்த பந்தங்களும் ஊர்ல தான் இருக்காங்க….,, எங்களுக்கும் ஜீவாவை ரொம்ப பிடிச்சு இருக்கு. அப்பா வந்த உடனே.. நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம் ஆண்ட்டி..என்றான் அருள்..பொறுப்பான அண்ணனாய். சுதாவும் அதுதான் என்பது போல் தலையை ஆட்டினார். தன் கணவர் வருவதற்குள் அவர்களை  அனுப்பிவிட வேண்டுமே என்ற ஆதங்கம் சுதாவிற்கு.

 

அருளை..,, இக்கட்டான சூழ் நிலையில் சூர்யா சந்தித்து இருந்தாலும்…, இன்று ஒரு தங்கையின் அண்ணனாய்.., அவன் பேசியது..,பொறுப்பாய் நடந்து கொண்டது இவை அனைத்தையும் பார்த்த சூர்யாவால் அவனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.வாய்விட்டு பாராட்டவும் முடியவில்லை.இருந்தாலும் மனதில் அவனை மெச்சிக் கொண்டான் சூர்யா.”

 

ஜீவா..தீபாவிடம் கண்களாலேயே விடை பெற்றான். அவனது செய்கையில் தீபாவின் தலையும் தானாய் அசைந்தது.  இவர்களின் கார் வெளியே செல்வதற்கும்..,முரளியின் கார் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.

 

முரளியைப் பார்த்த தீபாவின் முகம் கோபத்திற்கு மாறியது.அங்கு அனைவரும் அமைதியாக இருக்கவே…முரளி தன்னைத் தானே …திட்டிக் கொண்டார்.நேராய் தீபாவின் அருகில் சென்றவர்…” தீபு குட்டி சாரிடா..சாரி செல்லம். அப்பா..சீக்கிரம்  வரனும்ன்னு தான் நினைச்சேன்….பட் மீட்டிங்க் முடிய கொஞ்சம் லேட் ஆகிட்டதுடா….!” என்றார்  வருத்தமான குரலில்.

 

போங்கப்பா…பெத்த பொண்ண ..,பொண்ணு பார்க்க வர சொல்லிட்டு..பெத்த அப்பா நீங்க இல்லைன்னா..வந்தவங்க என்ன நினைப்பாங்க…,, பாவம் அண்ணா..சமாளிக்க ரொம்ப பாடு பட்டான் என்றாள் தீபா கோபத்துடன்.”

 

முரளி…” அப்ப செல்லக் குட்டிக்கு., அப்பா நான் வரலைன்னு கோபம் இல்லை…அண்ணா சமாளிக்க கஷ்ட்டப்பட்டான் அப்படிங்கறது தான் உன் கவலை இல்லையா…?” என்றார்.

 

அப்பா..,..! என்று பல்லைக் கடித்த தீபா…அருளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

என்னப்பா..!என்னாச்சு..? என்றான் அருள்…

அதை ஏன் கேட்கிற அருள்..,,  அந்த யு.எஸ்..கம்பெனிகாரங்களுக்கு புரிய வச்சு..,மீட்டிங்க முடிக்கும் முன்..அப்பப்ப…மண்டை காஞ்சுடுச்சு..என்றார். சரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன சொன்னாங்க..? என்றார் தீபாவின் தந்தையாய்.

 

அப்பா…நாம நினைத்த மாதிரி ஜீவா..அவங்க  சொந்த பையன் இல்லைப்பா…உண்மைய சொல்லனும்னா.. ஜீவா ஒரு அனாதை..என்று அவனைப் பற்றிய முழு விவரங்களையும்…,மகேஷ்வரி சொன்னதையும் கூறினான் அருள்.

 

இந்த காலத்திலையும் இப்படி ஒரு பெண்மணியா..? என்று வியந்தார் முரளி.

 

எனக்கும் அப்படித்தான்ப்பா..இருந்தது.ரொம்ப கிரேட் அவங்க..! அவங்களுக்கு நம்ம தீபாவை ரொம்ப பிடுச்சுடுச்சுப்பா..நம்ம தீபாக்கும்..என்று அவளைப் பார்த்தவன்..அவள் வெட்கத்தைப் பார்த்து சிரிக்க..முரளியும் விஷயத்தை ஊகித்துக்கொண்டார். 

 

நானும் பிஸ்னெஸ் வட்டாரத்துல..,,நல்லா விசாரிச்சுட்டேன் அருள். சூர்யா..,ஜீவா ரெண்டு பேருக்குமே ரொம்ப நல்ல பேர்…!! ஆனால் அந்த சூர்யான்ற பையனுக்கு  முன் கோபம் அதிகம்ன்னு கேள்விப்பட்டேன். ஆனா..ஜீவா அதற்கு நேர் மாறா..ரொம்ப தண்மையான பையன்னு சொன்னாங்க..விசாரிச்ச வரைக்கும் எனக்கும் திருப்திதான்.அப்பறம் என்ன..அருள்…ஒரு நல்ல நாள் பார்த்து நாமளும் அவங்க வீடுக்கு போய்ட்டு வருவோம்..என்றார்…முரளி மகிழ்ச்சியாய்.

 

அருளை தோளோடு அணைத்துக் கொண்ட முரளி..”ரொம்ப பெருமையா இருக்கு அருள்..,நான் இல்லைன்னாலும் சூழ்னிலையை ரொம்ப அழகா கையாண்டு இருக்க..,இனி நான் இல்லைன்னாலும் குடும்பத்தை நல்லா பார்த்துப்ப…” என்றார் பெருமையுடன்.

 

அப்பா…ப்ளீஸ்..! இப்ப எதுக்கு இந்த தேவை இல்லாத வார்த்தை எல்லாம்…என்றான் அருள்.

 

ஆனால் மூவரும்…,, அங்கு இருந்த மற்றொரு ஜீவனை மறந்து விட்டார்கள்.அவர் தான் சுதா.. அவருக்கு இதயம் பந்தயக் குதிரை போல் ஓடிக் கொண்டிருந்தது.

 

கடவுளே..! ஏன் இப்படி நடக்கிறது…இப்படி நடப்பது சரிதானா..இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஒரு சோதனையா..?என்று சுதா..மனதிற்குள் புழுங்கித் தவித்துக் கொண்டிருந்தார்.

 

யார் மனதில் உள்ளதை யார் அறிவார்…?

 

Advertisement